Skip to content
Post Views: 2,349
அந்த நேரம் அங்கு நான்கு வயதே இருக்கும் சிறு குழந்தையோடு வந்த ஆண் பெண் இருவரும் அந்த நெடியவனை நெருங்கினர்.
அதில் இருந்த ஆண் அவனின் கரத்தை பற்றி, “ரொம்ப தேங்க்ஸ் சார்.
கொஞ்சம் அசால்ட்டா இருந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சு..” என்றதும் அந்த ஆணின் கன்னத்தில் யோசிக்கும் நேரத்தில் அறைந்தவன்,
“என்னது.. அசால்ட்டா இருந்தையா..? கொன்னுடுவேன்.
Advertisement
புள்ளைய பெத்துட்டா போதுமா..? ஒழுங்கா பாத்துக்க வேணாம்.
நீ பாட்டுக்கு தொலைஞ்சு போச்சுன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டு போயிடுவ.
போலீஸ் நாங்க ராத்திரி பகலா அலஞ்சுட்டு இருப்போம், அதுக்குள்ள அந்த குழந்தைக்கு எதாவது ஆகிடுச்சுன்னா, நீ.. போலீஸ் மெத்தனமா இருந்ததால எங்க பிள்ளைய பரிகொடுத்துட்டோமுன்னு ரிப்போர்ட்டர்ஸ்க்கு ஒப்பாறி வச்சு பேட்டி கொடுப்ப..
Advertisement
அவனுங்க டீ ஆர் பீ ஏத்த அதையே போட்டு.. போலீஸ்காரங்கள வேவலமா பேசுவாங்க.
Advertisement
பெத்த அப்பன் நீயே அத சரியா பார்த்துக்காம போனா.. அப்புறம் எப்படி..?
குழந்தை வீட்டை விட்டு வெளிய போனா, எங்க போகுது.. என்ன செய்யுதுன்னு பார்க்கனும்.
நம்ம பழகறவங்க நல்லவங்களாவே இருந்தாலும் சந்தேகத்தோடவே வாழற மாதிரி இப்போ ஆகிடுச்சு சமுதாய நிலைமை.
Advertisement
இதுல இவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல ஜாலியா புள்ளைய விட்டுட்டு புருஷனும் பொண்டாட்டியும் பராக் பார்த்துட்டு இருந்தா, தூக்கிட்டு போகாம என்ன செய்வான்..?
நல்ல வேளை அவன் மேல ஏற்பட்ட சந்தேகத்தால நான் அவனோட நடவடிக்கைய நோட் பண்ணிட்டு இருந்தேன்.
அவன் பிள்ளைய தொட்ட நேரத்துல சரியா கணிச்சு அவன பிடிச்சாச்சு.
இதே நான் இங்கே இல்லாம அவன் பிள்ளைய தூக்கிட்டு போயிருந்தா.. அந்த குழந்தை நிலைமை என்னவாகி இருக்கும்..?
இனிமே உங்க குழந்தைய பெத்த நீங்க முதல்ல சரியா பார்த்துக்கோங்க.
அதையும் மீறி நடக்கறதுக்கு நாங்க இருக்கோம்.
ரெண்டு பக்கமும் ஜாக்கிரதையா இருந்தா மட்டும் தான் குழந்தை கடத்தல குறைக்க முடியும்..” என்று வெற்றிவேல் செழியன் பேசி முடிக்கும் நேரம்,
“ஊய்…! ஊய்..!” என்ற விசில் சத்தம் பலமாக கேட்க,
‘எவன்டா அது..?’ என கடுப்போடு திரும்பியவன், ‘நிச்சயமாக அது ஒரு பெண்ணாக இருக்கும்..’ என எதிர்பார்க்கவில்லை என்பது, அவனின் பார்வையிலேயே தெரிய.. வாயில் தன் இரு விரலை வைத்து விசிலை ஊதி முடித்தவள் தனது கைகளை பலமாக தட்டியபடி,
“சபாஷ் பாஸ்.. செம போங்க. கல்வெட்டுலையே பொருச்சு வைக்கற மாதிரி செம ஸ்பீச் கொடுத்தீங்க..” என சிரிப்போடு சொல்ல,
அவளின் பாராட்டான செயல் கூட.. அவளின் விளையாட்டான பேச்சு பாவனையால் நக்கலாக சொன்னதாக அவனுக்கு தோன்ற, அவளை முறைத்த படி அவ்விடம் விட்டு விலகி சென்றான் வெற்றிவேல்.
அவன் அங்கிருந்த எஸ்கலேட்டரை நோக்கி செல்ல, அவனின் பின்னாலேயே சென்றவள், “பாஸ், உங்க பேர் வெற்றிவேல் செழியனா..?” என கேட்க,
நின்று, ‘உனக்கெப்படி தெரியும்..?’ என்பது போல பார்த்தவனின் பார்வையில் பொருளை உணர்ந்தவள்,
“அது.. அந்த கிட்னாப்பர.. அடிக்கும் போது சொன்னீங்களே.. பன்ச் டைலாக்.. அதுல நீங்க அந்த பேர் தான் சொன்னீங்க..” என அசட்டு சிரிப்போடு சொல்ல, பதில் பேசாது மீண்டும் நடையை தொடர்ந்தவனிடம்,
“பாஸ், நீங்க போலீஸ்ஸா..?” என மீண்டும் அவனை தொடர்ந்த படி கனிகா கேட்க,
கடுப்பாகி போன வெற்றிவேல் செழியன், “ஹலோ.. யார் நீ..? இப்போ எதுக்கு என்ன இன்டர்வியூ பண்ணறவ மாதிரி இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கே..?” என்றபடி முறைக்க,
“அதுவா பாஸ், நீங்க அடிக்கும் போது பார்த்தேன் செம பாஸ்.
அங்கே நீங்க சொன்னதால உங்க பேர் தெரிஞ்சிடுச்சு. அப்படியே மத்த டீட்டெயில்ஸ் சொன்னீங்கன்னா…!”
“சொன்னா..?”
“வேற எதுக்கு பாஸ் உங்க டிட்டெய்ல்ஸ் கேட்பாங்க. எல்லாம் உங்கள சைட் அடிக்க தான்.
பார்க்க நல்லா ஆறு அடியில ஹீரோ மாதிரி இருக்கீங்க.
சைட் அடிக்க ஏத்த பீஸ் தான் நீங்க.
அப்புறம் ஒத்து வந்தா லவ், அப்புறம் கல்யாணமுன்னு ரூட் புடுச்சு போயிட்டே இருக்கலாம் பாருங்க..” என்றவளை பார்த்தவன்,
‘இவ என்ன லூசா..?’ என யோசிக்க,
“என்ன பாஸ்.. இவ லூசான்னு யோசிக்கற மாதிரி இருக்கு..?
நிஜமா பாஸ்.. எனக்கு இந்த மாதிரி ஃபைட் சீன், பன்ச் டைலாக் எல்லாமே ரொம்ப பிடிக்கும்.
இப்ப கூட பாருங்களேன்.. நா ஃபைட் நிறைய வர்ற மூவிக்கு தான் வந்திருக்கேன்..” என வாய் மூடாமல் பேசியவளை,
“போடீ.. அராத்து.. லடாயீ..” என்றபடி விலகி சென்றவனிடம், நின்ற இடத்திலிருந்தே,
“ஹலோ பாஸ்.. உங்கள எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு சொல்லிட்டு போங்க..” என கத்த,
“நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் வா. நல்லா.. சொல்லி தர்றேன்..” என்றபடி முறைப்போடு சென்றவனை பார்த்தவளின் மனமோ,
‘இவர இதுக்கு முன்னாடியே பார்த்து பழகின மாதிரியே ஃபீல் ஆகுதே.. எப்படி…?
இதுக்கும் முன்னாடி எப்பவாவது இவரை மீட் பண்ணியிருக்கமா..?’ என யோசிக்க ஆரம்பித்திருந்தது.
இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் எட்ட இருந்து பார்த்த அவளின் தோழிக்கோ பயத்தில் நாக்கு வரண்டு போனது தான் மிச்சம்.
வெற்றிவேல் செழியன் அங்கிருந்து சென்ற நொடி அவனின் பெயரையும், போலீஸ் என்பதையும் கொண்டு கூகுள் ஆண்டவரின் துணையோடு.. அவனின் மற்ற தகவல்களை சேகரிக்கும், தனது தோழியை பார்க்க பார்க்க வயிற்றுக்குள் புல்டவுசர் ஓடியது போன்று அவளுக்கு படபடக்க,
“ஏய் கனி.. என்னடீ ஏழரைய கூட்டிட்டு இருக்க..?
அவரை பார்த்தாலே டெரரா தெரியுது.
நீ இப்படி லூசுத்தனமா கேட்டும் அவர் அடிக்காம கம்முன்னு போனதே பெருசு.
இதுல மறுபடியும் அவர நேர்ல போய் பார்க்கற மாதிரியும், நீ சொன்னத செய்யற மாதிரியும் இருக்கு.. இப்போ நீ பண்ணற ஆராய்ச்சியெல்லாம்..” என்றதும்,
“மாதிரி இல்லடீ.. உண்மையாவே அவரு தான் எனக்குன்னு மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.
சோ, அவரோட ஃபுல் டீட்டெயில் கலெக்ட் பண்ணிட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்கறேன்..” என்றவளின் பேச்சில் அதிர்ந்த ஷர்மிளா,
“அடியேய் என்னடீ.. அந்த புள்ள புடிக்கறவன் சொல்ற மாதிரி ஸ்கெட்ச்சு.. தூக்கறதுன்னு பயம் காட்டற..?
நா வரல இந்த ஆட்டத்துக்கு. படமாவது இன்னொன்னாவது.. இன்னொரு நாள் வந்து படத்தை பார்க்கலாம். முதல்ல வா வீட்டுக்கு போகலாம்..” என பீதியில் அலறவே துவங்கிவிட்டாள்.
அவளின் பயத்தை கருத்தில் கொள்ளாமல், “நீ சொல்லறதும் கரெக்ட்.
எனக்கு என்னோட ரியல் ஹீரோவ பார்த்ததும், அந்த ஸ்கிரீன்ல வர்ற ஹீரோவ பார்க்க தோணல..” என்ற படியே வெளியேறி கனவிலேயே வீட்டிற்கு சென்றாள் கனிகா அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டபடி.
மாலிலிருந்து வெளியே வந்ததும் தனது வாகனத்தில் ஏறிய வெற்றிவேலின் மனமோ, ‘ஆமா.. உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு..?
யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு அது பாட்டுக்கு என்ன என்னமோ பேசுது.
இதே வேற யாராச்சும் இப்படி பேசியிருந்தா.. இப்போ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகற மாதிரி, ‘ரைய்யின்னு…!’ ஒண்ணு விட்டுருப்ப தானே..?
ஆனா அந்த பொண்ணுகிட்ட, நாளைக்கு வா.. தர்றேன்னு சொல்லிட்டு வர்றே..!
ஒருவேளை, அந்த பொண்ணை மறுபடியும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமுன்னு தான் வரச்சொன்னையா..?’ என கேட்க,
‘அதானே..! ஏன் நான் எதுவும் பண்ணாம கம்முன்னு வந்தேன்.. அந்த பொண்ண அடிக்காம..?
அந்த பொண்ணு ஃபேஸ் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே..? யாரா இருக்கும்..?’ என தனது நியாபக அடுக்கை அலச துவங்கிவன் தனது எண்ணம் போகும் போக்கை கண்டு,
‘வெற்றி தேவையில்லாத வேலை பார்க்காதே. பீ ஸ்ட்ராங் அண்ட் ஸ்டெடி..’ என சொல்லி,
அவளின் நினைவை ஒதுக்கி தனது பணியை பார்த்தவனுக்கு, ‘அவளின் நினைவு மறக்க முடியாத ஒன்று..’ என்பதும்,
அவள் சொல்ல போகும் பொய் அவனை தடுமாற வைக்க போவதும் அப்போது தெரியவில்லை.
error: Content is protected !!