Skip to content
Post Views: 3,243
“இவ என்னோட அருமையை உணர்ந்து இதைச் சொல்றாளா இல்லை தெரியாம சொல்றாளா?”, என்று குழம்பினான். “சரி இந்த வாரம் போயிட்டு வரலாம்”, என்றான்.
“ம்ம்”, என்றாள்.
Advertisement
காலேஜ் வந்ததும் “இறங்கிக்கோ, சாயங்காலம் நான் கூப்பிட வரேன்”, என்றான்.
“பேசாம நான் பழைய படி ஹாஸ்டல்க்கே போய்றவா?”, என்று அவள் கேட்க அவன் முகம் கூம்பிப் போனது.
Advertisement
Advertisement
“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு தெரியும் கொடி. ஆனா என்னையும் பிடிக்கலை அப்படித் தானே?”
“நான் எங்க அப்படிச் சொன்னேன்?”
Advertisement
“என் கூட என் வீட்ல இருக்க பிடிக்காம தானே ஹாஸ்டல் போணும்னு சொல்ற?”
“அப்படி இல்லை. நீங்க தினமும் என்னை கொண்டு வந்து கூட்டிட்டு போறது கஷ்டமா இருக்கும்னு தான் சொன்னேன். நீங்க இல்லைன்னா மாமா அலையுறாங்க. உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்னு நினைச்சு தான் சொன்னேன்”
“இது ஒரு கஷ்டமா? உனக்கு என்னால இதை கூட செய்ய முடியாதா? அப்பாவும் சந்தோஷமா தான் செய்றாங்க. இனி ஹாஸ்டல் அது இதுன்னு பேசாதே”
“சரி நீங்களே கொண்டு வந்து கூட்டிட்டு போங்க. நான் வரேன்”
“கொடி”
“ம்ம், இடை நேரத்துல காலேஜ் விட்டு எங்கயும் போகாத சரியா?”
எதற்கு என்று தெரியாமல் போனாலும் “சரி”, என்று சொல்லி விட்டு காலேஜ் உள்ளே நடக்க போனாள்.
“கொடி”, என்று அழைத்தான். என்ன என்பது போல திரும்பி பார்த்தாள்.
“என்னை உனக்கு பிடிக்கும் தானே?”, என்று ஆர்வமாக கேட்டான். அவன் அப்படிக் கேட்டதும் அவளுடைய உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
“என்ன டி சிரிக்கிற? பதில் சொல்லு. பிடிக்குமா பிடிக்கலையா?”
“படிக்க முடியாம போயிருமோன்னு நினைச்சு தான் கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னேன். ஆனா இப்ப படிக்கிறதுனால இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு”
“ஏய் நான் என்னைக் கேட்டேன் டி”
“இதுக்கு பதில், என் கப்போர்ட்ல ஒரு நோட் இருக்கும். அதுல போய் பாருங்க தெரியும்”
“ஏய் நான் இப்ப ஸ்டேஷன் போகணும். வீட்டுக்கு போக டைம் இல்லை. என்னன்னு சொல்லு”
“அப்ப சாயங்காலம் பாருங்க”
“அது வரைக்கும் எப்படி பொறுமையா இருக்க?”
“அது உங்க கவலை. நான் போறேன் பை”, என்று சொல்லி விட்டு கல்லூரிக்குள் சென்று விட்டாள்.
அவளுடைய புன்னகையே அவள் மனதை சொன்னாலும் அந்த நோட்டில் என்ன இருக்கும் என்றும் எப்போதடா சாயங்காலம் வரும் என்று எண்ணிக் கொண்டே ஸ்டேஷன் சென்றவன் அங்கிருந்த வேலையில் அதை மறந்தே போனான்.
புன்னகையுடன் கிளாசுக்குள் வந்தவளை பிடித்துக் கொண்டாள் அவள் தோழி ரேவதி.
“என்ன டி போலீஸ்கார் பொண்டாட்டி? இன்னைக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு?”
“அவர் ஒரு கேள்வி கேட்டார். அதான் சிரிச்சிட்டு வந்தேன்’
“அப்படி என்ன கேள்வியாம்?”
“அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டார்?”
“அடப்பாவி கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாள்ல அவர் இன்னைக்கு தான் இந்த கேள்வியையே கேக்குறாரா? விளங்கிப் போச்சு போ”
“ஏன் டி?”
“ஒண்ணும் இல்லை தாயி. ஒண்ணுமே இல்லை. நீ இன்னும் வளரணும்?”
“ஏன்? நான் இப்ப வளந்து தானே இருக்கேன்? குள்ளமா இருக்கேனா? அவருக்கு பொருத்தமா இல்லையா?”, என்று கலக்கமாக கேட்டாள் பூங்கொடி.
தலையில் அடித்துக் கொண்ட ரேவதி அவள் நினைத்ததைச் சொல்ல பூங்கொடி முகம் சிவந்தது. பாடம் நடத்த ஆசிரியர் வர அவர்கள் பேச்சு தடை பட்டது.
அன்று இரண்டாவது பீரியடில் அவளை பியூன் வந்து அழைத்தான். அவளை யாரோ ஒரு பெண் பார்க்க வந்திருப்பதாக சொன்னான்.
கொஞ்சம் திக்கென்று இருந்தாலும் காலேஜ் ஆபீஸ் ரூமுக்கு தானே என்று தன்னைத்தானே தைரியப் படுத்திக் கொண்டு சென்றாள். அங்கே நிறை மாத கர்ப்பிணியான ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் அருகே மூன்று வயது குழந்தையும் இருந்தது.
சத்தியமாக அவர்கள் யார் என்று பூங்கொடிக்கு தெரியவே இல்லை. “அண்ணா இவங்களா என்னைப் பாக்க வந்தது?”, என்று பியூனிடம் கேட்டாள்.
“ஆமா மா, உன் பேர் தான் சொன்னாங்க. இந்த காலேஜ்லே உனக்கு மட்டும் தான் பூங்கொடின்னு பேர் இருக்கு”, என்று அவன் சொல்லிச் செல்ல பூங்கொடி அந்த பெண்ணை நெருங்கினாள்.
“யார் நீங்க? எதுக்கு என்னைப் பாக்க வந்தீங்க?”, என்று கேட்டாள் பூங்கொடி.
“நீ தான் அந்த போலீஸ்காரன் பொண்டாட்டியா தாயி?”
“ஆமா”
“என்னை நீ தான் தாயி காப்பாத்தணும். என்னையும் என் பிள்ளைகளையும் அனாதையா நிக்க வச்சிறாத தாயி”, என்று சொல்லி அந்த பெரிய வயிற்றுடன் அந்த பெண் பூங்கொடியின் காலில் விழ திகைத்து போனாள்.
“ஐயோ என்ன பண்ணுறீங்க? ஏன் என்னோட கால்ல விழுறீங்க? எந்திரிங்க பிளீஸ்”, என்று பதறிய படி அவளை எழுப்பி விட்டாள்.
அந்த பெண் அழுத படி இருக்க “என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க மா”, என்றாள்.
“என் புருஷனை உங்க வீட்டுக்காரர் பிடிச்சு வச்சிருக்கார். அவரை விடச் சொல்லுங்க மா. எனக்குன்னு யாருமே இல்லை. வயித்துல இருக்குற பிள்ளை இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு. அவர் இல்லாம நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க”
“உங்க வீட்டுக்காரர் என்ன தப்பு பண்ணினார்?”, என்று போலீஸ்காரன் மனைவியாக விசாரித்தாள்.
“அவர் ஒரு தப்பும் செய்யலை மா. என் வீட்டுக்காரர் கொய்யா பழம் விக்குறவர் மா. அவர் பேர் ராமர். அவரைப் போய் எதுக்கு உன் புருஷன் அரஸ்ட் பண்ணனும்? என் புருஷன் தங்கமானவர் மா”
“இல்லைங்க. என் வீட்டுக்காரர் நேர்மையானவர். காரணம் இல்லாம எதுவுமே செய்ய மாட்டார். கண்டிப்பா தப்பு உங்க புருஷன் பக்கம் தான் இருக்கணும்”
“இந்த பிள்ளை மேல சத்தியமா சொல்றேன் மா. என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர். ஒரு நாள் உன் வீட்டுக்காரர் கொய்யா பழம் கேட்டாராம். என் வீட்டுக்கார் விலை அதிகமா சொன்னாருன்னு சொல்லி ரோட்டோரம் கடை வச்சிருக்குற கேஸ்ல பிடிச்சு வச்சிருக்கார்”
“அந்த கேஸ்ல விசாரிச்சிட்டு உடனே விட்டுருவாங்க மா. ரோட்டோரம் கடை வைக்கிறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை”
“இல்லை தாயி… ஏதோ கஞ்சா கேஸ் அவர் மேல போட்டு உள்ள தள்ளப் போறதா மிரட்டுறாராம். எனக்கு யாரையும் தெரியாது. நான் எப்படி என் புருசனைக் காப்பாத்துவேன். எனக்கு நீ தான் மா உதவனும்”
“சரி உங்க போன் நம்பர் கொடுத்துட்டு போங்க. நான் அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன்”, என்று சொன்னதும் “உங்களை நம்பி தான் தாயி போறேன்”, என்று சொல்லி ஒரு துண்டுச் சீட்டில் நம்பர் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றாள்.
அன்று மாலை மணிமாறன் அவளை அழைக்க வரும் போது அவன் சந்தோஷமாக வர அவளோ முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள்.
“காலையில் நல்லா தானே பேசினா”, என்று குழம்பியவன் “என்ன ஆச்சு கொடி?’, என்று கேட்டான்.
“வீட்ல போய் பேசலாம்”, என்று சொன்னவள் கண்களை மூடிக் கொண்டாள்.
வீட்டுக்கு சென்றதும் ஹாலில் வைத்தே “உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்”, என்றாள்.
“என்ன சொல்லு”, என்று அவன் சொல்லும் போதே தேவகியும் கதிரவனும் அங்கே வந்தனர்.
“ஒரு கொய்யாப் பழம் விக்குறவனை அரஸ்ட் பண்ணிருக்கீங்களா?”
“ஆமா உனக்கு எப்படி அது தெரியும்? யாரும் வந்து உன்னைப் பாத்தாங்களா?”, என்று குழப்பமாக கேட்டான்.
“எனக்கு எப்படியோ தெரியும்? நீங்க சொல்லுங்க. அரஸ்ட் பண்ணிருக்கீங்களா இல்லயா?”
“பண்ணிருக்கேன். இப்ப அதுக்கு என்ன?”, என்று தெனாவெட்டாக கேட்டான்.
“அதுக்கு என்னவா? அவர் மேலே கஞ்சா கேஸ் போடப் போறீங்களா? அவன் பொண்டாட்டி பிள்ளையோட வந்து அழுகுது”
“இது வேற விஷயம் கொடி. இது உனக்கு சொன்னாலும் புரியாது. ஒரு வாரம் போகட்டும். நானே விளக்கமா எல்லாம் சொல்றேன்”
“நீங்க ஒரு அப்பாவி மேல பொய்க் கேஸ் போடுற கதையை நான் விளக்கமா கேக்கணுமா?”, என்று அவள் எகிற கேட்டுக் கொண்டிருந்த கதிரவன் “இங்க பாரு மா மருமகளே. என் மகன் ஒரு காரியம் செஞ்சா அதுல ஒரு காரணம் இருக்கும். நீ அவனோட வேலை விஷயத்தை எல்லாம் உன் மனசுல ஏத்திக்காத”, என்றார். ஏனென்றால் ஒரு போலீசான அவருக்கு எல்லாம் தெரியுமே?
“இவங்க வேலை விஷயம் எனக்கு தேவை இல்லை தான் மாமா. ஆனா என் புருஷன் நேர்மையா இருக்கணும்னு நான் எதிர் பாக்க கூடாதா?”, என்று கேட்டாள்.
error: Content is protected !!