Skip to content
Post Views: 1,661
அனைவருக்கும் வணக்கம் நட்பூக்களே,
என்னடா இது, டைட்டில் இப்படி போட்ருக்கானு யோசிக்காதிங்க…
ஒரு கதையை நானும் வெற்றிகரமா முடிச்சிட்டேன்னு நினைக்கும் போது, நாமளும் பெருசா சாதிச்ச உணர்வு வருது… அதுக்காக மட்டும் தான் அப்படி வச்சேன்… ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க…
இந்த தளத்தில் எழுதுறேன்னு மல்லி மேம்க்கு மெசேஜ் அனுப்பும் போது, என்னை பத்தி ஒன்னும் கேக்காம, எனக்கு தமிழ் வருமான்னு கூட கேக்காம, வெல்கம் ரைட்டர்னு சொல்லி, என்னை ஊக்குவித்த அவங்களுக்கு நன்றியை தவிர, வேற என்ன பெரிய வார்த்தை இருக்கோ அதுஎல்லாம் அவங்களை சென்று சேரும். (அந்த மனசு தாங்க, அவங்களை பெரிய இடத்துல வச்சிருக்கு.)
Advertisement
புதுசா யாரும் எழுதுனா, நிறைய பேரு விரும்பி படிக்கமாட்டாங்க… இருந்தாலும் என்னோட முயற்சியை, நான் குடுத்துருக்கேன்… அதையும் மீறி, விருப்பங்கள், தங்களுடைய கருத்துக்கள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும், என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…
கதை எல்லாருக்கும் பிடிக்கும்னு நான் சொல்ல முடியாதில்லையா… எப்படி இருந்தாலும், எனக்கு எழுத்தாளர்ன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குன கதை…(கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்)…
இந்த கதை மூலம் உங்களை எல்லாம் சந்தித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி… கதை நான் தொடர்ந்து எழுதலாமான்னு சொல்லுங்க… எழுதணும்னு ஒரு ஆர்வம் இருக்கு… விரைவில் ஒரு புது கதையுடன் பார்க்கலாம் என்று நம்புகிறேன்…
Advertisement
கதைக்கு இன்னும் எழுத்துப்பிழை பார்க்கல… கூடிய விரைவில் அதை சரிசெய்து விடுகிறேன்… அதுவரைக்கும் மன்னிச்சிக்கோங்க…
Advertisement
வேற என்ன சொல்ல… லவ் யு ஆல் அன்பர்களே…
நன்றி…
error: Content is protected !!