Skip to content
Post Views: 947
படவேடு ரேணுகாம்பாள் ஆலயம். கமண்டல நதி ஓரம் அமைந்த கோவில்.
Advertisement
கணவனுக்காக மகனே தாயின் தலையை வெட்ட, அந்த ரேணுகாம்பாளின் தலை சுயம்புவாக இருக்கும் கோவில். சாந்தமான அம்மன். பசு வாகனம் உடையவள்.
மாறன் வீட்டினர் அனைவரும் பொங்கல் வைத்து வழிபட வந்திருந்தனர்.
Advertisement
Advertisement
புது பெண் என்பதால் ரதியை அவர்கள் அழைத்து, பொங்கல் வைக்க சொல்ல, ராமச்சந்திரன் வேண்டா வெறுப்பாக அவளை பார்த்தார்.
ரதியும் மாறனை பார்த்து விட்டு அவன் தலையை அசைத்ததும், அமர்ந்து பொங்கல் வைத்தாள்.
Advertisement
சுற்றி வரும் வேளையில்,
“ரதி.. இங்க வேண்டிட்டு பொங்கல் வச்சிட்டு போனதும் ரேணு மாசமானா.. ரம்பாக்கு அந்த தேவையே இல்ல.. நீ வேண்டிக்கம்மா. அடுத்த முறை உன் வயித்துல பிள்ளையோட வந்து பாக்கனும்..” காஞ்சனா சொல்ல, ரதி அவஸ்தையாய் உணர்ந்தாள்.
“அம்மா.. அதெல்லாம் அடுத்த முறை வேண்டிக்கலாம் மா..” மாறன் சொல்ல,
“ஏன் ஒரு பிள்ளையை பெத்து வளர்க்க கூட பணம் இல்லையாமா.. இல்ல துப்பு இல்லையா துரைக்கு..” ராமச்சந்திரன் நக்கலாக சொல்லியதும் மாறனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
அவனின் அம்மா கையில் இருந்த தொட்டிலை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு போய், மரத்தில் கட்டி வைத்தான்.
ரதி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அவசரமாக வந்து அவளின் கையை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய இழுத்துக் கொண்டு போய் சன்னதி முன் நிறுத்தினான். யாருக்கும் அதன் பின் பேசுவதற்கு வழியில்லாமல் போனது.
அதன் பின் தேவிகாபுரம் கோவிலுக்கு வந்தனர் அனைவரும்.
அன்று பெரியநாயகிக்கு அபிஷேகம் முடிந்திருக்க, இவர்கள் கொண்டு வந்த புடவையை சாற்றினார்கள். அம்சமாக நாயகி அத்தனை கம்பீரமாக வீற்றிருந்தாள்.
ரதி ஒரு ஓரமாய் நின்று அவளை வணங்கி,
“தாயே.. எனக்கு ஏன் இந்த வாழ்க்கையை கொடுத்தன்னு தெரியல.. நான் சரியான பாதையில் போறேனான்னு தெரியல.. இந்த குடும்பம் என்னை நல்லா பாத்துக்கறாங்க… ஆனா என் அப்பாவை நான் நல்லா பாத்துக்கனும்..எங்க மாமனாருக்கு நாங்க கொடுக்க வேண்டிய பணத்தை தரணும்.. எனக்கான ஒரு அங்கீகாரம் வேணும்..எனக்காக குடும்பத்தை விட்டு வெளிய வந்த மாறனுக்கு அவர் விரும்பிய எல்லாம் கிடைக்கனும்.. நீயே என்னோட இரு..” அவள் கண்களை மூடியபடி இரு கைகளையும் விரித்து நின்றிருக்க,
அவளின் கைகளில் மாலையோடு பழங்களும், அவளுக்கு பிடித்த ஜாதி மல்லி பூக்களையும் அர்ச்சகர் கொண்டு வந்து தந்தார்.
“அம்மனுக்கு சாத்தின புடவை இருந்தா ஒன்னு குடுங்க ஐயரே.. புதுப்பொண்ணுக்கு தரனும்..” காஞ்சனா சொல்ல,
“நீங்க சொல்லவே வேணாம். உங்களை பாத்ததும் எடுத்துட்டு வர சொல்லிட்டேன். நீங்க பிரகாரம் சுத்திட்டு வாங்க.”
அனைவரும் சுற்றி விட்டு வர, மாம்பழ நிறத்தில் அடர் பச்சை வண்ண பட்டுப்புடவை தாம்பாளத்தில் வைத்து அவளிடம் தரப்பட்டது.
பெரிய நாயகியை தரிசித்த கையோடு, மலைக்கோவிலுக்கும் சென்று விட்டு திரும்ப,
“இந்தாம்மா.. கதலி..” என்று படியில் ஒரு வயதான பெண்மணி அவளிடம் நீட்ட,
“பழம்லாம் இருக்கும்மா.. அப்புறமா வாங்கிக்கறோம்” என்று கற்பகம் சொல்ல, அந்த பெண்மணி அதை காதிலே போட்டுக் கொள்ளாமல்
“ம்மா நல்ல கதலி பழம்மா.. எந்த உரமும் போடாம வளர்த்த மரங்கமா.. அடிச்ச காத்துல நிறைய மரம் சாஞ்சிடுச்சு.. அதான் மா இங்க கொண்டு வந்து விக்கிறோம்..இல்லன்னா இதோட மதிப்பே வேற..” என்று இரண்டு டசன் பழங்களை அவர்களிடம் கொடுத்தார்.
ரதி அவரிடம் எதுவும் பேரம் பேசாமல் அப்படியே வாங்கிக் கொண்டாள். மாறன் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுக்க அவர் வாயார வாழ்த்தினார்.
அதே நேரத்தில் மலைக் கோவிலில் மணி ஒலிக்க, கீழே இறங்கி வந்தனர்.
வீட்டிற்கு வந்ததும், கோவிலில் தந்த புடவையை விரித்து தன்மேல் வைத்து பார்த்தாள் ரதி. அவளுக்கு அம்சமாய் பொருந்தியிருந்தது. மெல்ல அவள் விரல்கள் அந்த புடவையை தடவின. அந்த சேலை மிக மென்மையாய் இருந்தது. அத்தோடு கோர்த்து வாங்கியிருந்த விதமும் வேறு விதமாய் இருக்க, ஆசையாய் தடவிப் பார்த்து விட்டு அலமாரியில் வைத்தாள்.
மாறன் தோட்டத்தில் அமர்ந்து இருந்தான். அவனது முகம் வாட்டமாக இருக்கவே,
“என்ன அமைதியா வந்து உட்காந்துட்டீங்க..?”
“இல்ல ரதி.. அப்பா சில சமயம் யோசிக்காம என்னென்னமோ பேசிடறார். இன்னிக்கு கோவில்ல அத்தனை பேருக்கு முன்னாடி..”
அவனது உதடுகள் துடித்தன.
“உங்கப்பாவை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதுதானே..விடுங்க.”
மாறன் அவளையே பார்த்தான்.
“உனக்கு நான் கோவில்ல தொட்டில் கட்டினதுல்ல கோபம் இல்லையா..?”
“ம்ம்.. கோவம் இல்ல. அவர் அப்படி சொன்னதுக்கு தான் நீங்க கோபத்துல பண்ணீங்கன்னு தெரியும்”
“ஓ.. அப்ப அங்க தொட்டில் கட்டினதால உடனே..”
“உடனே..”
“இல்லமா.. நீ ..”
“ஓ.. உங்களுக்கு அப்படியெல்லாம் தோணுதா..நாம வெறும் ஃப்ரெண்ட்ஸ் தான்.”
“ஆமா ஆமா..நிச்சயமா..” என்று தலையை ஆட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பாவனை செய்தான்.
அவனை பார்த்து சிரித்துக் கொண்டே ஒரு நோட்டில் பட்டு புடவை சரிகைக்கான டிசைன்களை வரைய ஆரம்பித்தாள்.
தூரத்தில் அமர்ந்திருந்த மாறனுக்கு அவளின் நிர்மலமான முகத்தை அப்படியே கைகளில் தாங்கி அவளின் கண்களுக்குள் அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
“காத்திருப்பேனோடி.. இதுபார் கன்னத்து முத்தமொன்று” என்று வாய்க்குள் பாடி, வார்த்தை வராமல் மெதுவாக ராகம் இசைத்தான்.
ரதி மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள். எங்கோ கேட்ட பாடலென்று அவளுக்கு தோன்றியது. மீண்டும் மீண்டும் அந்த ராகத்தில் மனதுக்குள் பாடி பார்த்தாள்.
நாலைந்து முறை முயற்சிக்கு பின் அந்த வரி பிடிபட்டது.
மூக்கின் நுனி சிவந்தது அவளுக்கு. உள்ளுக்குள் ஏதோ வித விதமான பறவைகள் அலைந்து திரிந்து படபடத்தன.
இது என்ன புது அவஸ்தை என்று அவளுக்குள் தடுமாறினாள். காதலின் ஹார்மோன்கள் கண்டபடியும் விளையாடும்.. கட்டிப்பிடி என்றும் விளையாடும் என்று அவளுக்கு தெரியும்போது மாறன் மேல் அவளுக்கு அளவுகடந்த காதல் வந்திருக்கும்.
மாதவனும் ரம்பாவும் மாலை வீடு திரும்பினர். மாதவனின் முகம் உர்ரென்று இருந்தது.
ரம்பா வந்தவுடன் ராமச்சந்திரன் வாயெல்லாம் பல்லாக இளித்தார்.
“என்னம்மா.. அப்பா வரலையா? நீங்களே வந்திட்டீங்களா.. எதுல வந்தீங்க..”
“கார்ல தான் பெரிய மாமா..”
“ஓ அப்பா டிரைவர் போட்டு அனுப்பினாரா..?”
“இல்ல மாமா.. அப்பா கார் புதுசா வாங்கியிருந்தார்.. அதுலயே வந்துட்டோம்.. எங்களுக்கே தந்துட்டார் அதை..” சொல்லிவிட்டு அவள் மாடிக்கு சென்றாள்.
அவசரமாக வெளியில் வந்து பார்த்தார் ராமச்சந்திரன்.
வெளியில் அவர்களின் பார்க்கிங்கையே அடைத்துக் கொண்டு புதுவகை கியா கார்னிவெல் நின்றிருந்தது.
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதை செலவு செய்ய ராமச்சந்திரனுக்கு மனம் வராது.
இரண்டு சிறிய வகை கார்கள் தான் அவர் வீட்டின் வெளியில் நிற்கும்.
இப்போது பெரிய காரை பார்த்தவுடன் அவருக்கு மகிழ்ச்சியில் மனம் நிறைந்து முகம் பளபளத்தது.
“என்னடா மாமனார் வீடு எப்படி இருந்துச்சு. நல்லா கவனிச்சாங்களா?” கற்பகம் கேட்க,
“அவன் மாமனார் என்ன பிச்சைக்காரரா.. அவர் பரம்பரை பணக்காரர். எம்புள்ளைய தங்கத்தட்டுல வச்சு தாங்கியிருப்பார்.” ராமச்சந்திரன் சொல்ல,
காரின் சாவியை சோஃபாவில் விசிறி எறிந்து விட்டு மாடிக்கு சென்றான் மாதவன்.
“என்னை அசிங்கப்படுத்னும்னே நீயும் உன்அப்பாவும் நினைச்சிட்டு இருக்கீங்களாடி..”
“ஏன் இப்ப சாரை என்ன குறைவா கவனிச்சிட்டாங்களாம்..”
“ஊர் முழுக்க கூட்டி வச்சு உங்கப்பா அன்னிக்கு கல்யாணத்துல நடந்ததை பெருமையா வேற சொல்லிக் கறார். ஊர்ல இருக்கறவங்களாம் நான் என்னமோ பொம்பளை பொறுக்கி மாதிரி நினைக்க மாட்டாங்களா”
“அய்யோ.. அப்படி நினைச்சிருக்க மாட்டாங்க. கௌரவமா ப்ளே பாய்னு நினைச்சிருப்பாங்க. ஏன்னா எங்கப்பாக்கு நீங்க மருமகன் இல்ல?”
“என்னடி பெரிய இவரா உங்கப்பா.. அதுவுமில்லாம அடியாளுங்க மாதிரி இருக்கறவனுங்களுக்கு இங்கிலீஷ்லாம் புரியுமா.. என்ன?”
“ஓ..அப்ப சாரை ப்ளேபாய்னு கூப்பிடனும்னு வேற நினைப்பு இருக்கா..இதுவரைக்கும் நீங்க உத்தம புத்திரனா இல்ல.. ஆனா இனிமே ஏகபத்தினி விரதம் இருக்க கத்துக்கோங்க அதான் உங்களுக்கு நல்லது..”
“ஓ உங்கப்பா மிரட்டினது பத்தாதுன்னு நீ வேற மிரட்டிறியா..”
“எது.. எங்கப்பா மிரட்டினாரா?”
“ஆமா.. ரதி பக்கமோ இல்ல வேற எந்த பொண்ணு பக்கமோ முழி திரும்ப கூடாதுன்னு சொல்லி அனுப்பிச்சாரே அது என்னவாம்..?”
“அது அன்பா சொல்லியிருப்பார்.. எங்கப்பா மிரட்டினா எப்படியிருக்கும்னு தெரியாது உங்களுக்கு.. அதுக்கு சான்ஸ் குடுத்துடாதீங்க..” என்று அவனை பார்த்து ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கை செய்தவளை பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டான் மாதவன்.
அன்றிரவு பட்டு உற்பத்தியாளர் சங்க கூட்டம் இருந்ததால் மருதனும், ராமச்சந்திரனும் சென்று விட்டார்கள்.
மாதவன் வழக்கம் போல் ஊர் சுற்ற கிளம்ப, ரம்பா கீழே இறங்கி வந்தாள்.
“அத்தைஸ்.. என்னை கண்டுக்க மாட்டேங்கறீங்க? ஏன் என்னை பிடிக்கலையா உங்களுக்கு?” அவள் கேட்டதும் காஞ்சனாவிற்கும், கற்பகத்திற்கும் திக்கென்றது.
“ஏம்மா அப்படி சொல்ற. எங்க வீட்டு வாரிசை சுமந்துட்டு இருக்க. உன்னை எப்படி பிடிக்காம போகும்..அதுவுமில்லாம ஊர்ல இருந்து வந்து கொஞ்ச நேரம் தான ஆச்சு..”
“ஓ உங்க வீட்டு வாரிசை சுமக்கறதால தான் என்னை ஏத்துக்கிட்டீங்களா..?”
“ரம்பா..ஏன் இப்படி பேசற. நீ இந்த வீட்டு மருமகளா வந்தப்புறம் உன்னை பிடிக்கலன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. அதுவும் அத்தைங்களை பத்தி உனக்கு இன்னும் தெரியல..” ரேணு சொல்ல,
“ம்ம்.. சும்மாதான் கேட்டேன். என் ரூம் பக்கமே யாரும் வரமாட்டேங்கறீங்க. என்னை கீழ கூப்பிடவும் மாட்டேங்கறீங்க. என்னாலலாம் தனியா இருக்க முடியாது தெரிஞ்சுக்கோங்க. என்கூட யார்னா ஒருத்தர் இருந்துட்டே இருக்கனும்..புரியுதா..” என்றாள். அனைவரும் தலையை ஆட்டிக் கொண்டனர்.
“ஆமா, இந்த ரதியும் மாறனும் எங்க ஆளையே காணோம்?”
நடந்ததை ரேணு சொல்ல,
“ஓ.. எதுக்கு அவங்க போகனும்.? தப்பு பண்ண உங்க பிள்ளை வீட்ல இருக்கறப்ப..”
“அதை மாமாட்ட தான் கேட்கனும் ரம்பா..” ரேணு பெருமூச்சுடன் சொல்ல,
“அத்தைஸ் நீங்க மாதவனை தப்பு தப்பா வளர்த்து இருக்கீங்க. ஆனா நான் அவரை இனி அப்படியெல்லாம் இருக்க விட மாட்டேன்.”
“அதான் மா வேணும். நீ பொறுப்பா அவனை திருத்திடு. எங்களுக்கு அது போதும்.” காஞ்சனா சொல்லிவிட்டு,
“அதென்ன ரம்பான்னு உனக்கு பேர் வச்சிருக்காங்க.. இந்த நடிகையை பாத்து வச்சாங்களா.?”
“அது ஒரு பெரிய கதை அத்த..எங்கம்மாக்கு நாலு குழந்தைங்க வயித்துல வந்தும் நிக்கலயாம். அப்ப யாரோ எங்கப்பாவ உனக்குலாம் குழந்தை பொறந்தா பெரிய ரம்பா ஊர்வசி மாறியா இருக்க போவுது.. உன்னை மாதிரி கருப்பா தான் பொறக்க போகுதுன்னு சொன்னாங்களாம். அப்பா யார் யார்ட்டையா என்னென்னமோ பெருசா ட்ரீட்மெண்டலாம் எடுத்தப்புறம் நான் பொறந்தேனாம். என்னை கையில் வாங்கினப்ப நான் அழகா இருந்ததால, அவரை கிண்டல் பண்ணவங்களை கூப்பிட்டு ரம்பா தேவின்னு பேர் வச்சாராம்..அன்னியில இருந்து என்னை ஒரு இளவரசியா தான் பாத்துக்கறாங்க”
“ஓ… இவ்வளோ நடந்ததால தான் உனக்கு அப்படி ஆனதும் பதறிட்டு ஓடி வந்தாங்களா.. நான்கூட அவங்களாம் பேசினது பாத்து…” ரேணு இழுக்க,
“பணத்திமிர்னு நினைச்சீங்க இல்ல.. அப்படில்லாம் இல்ல.. நான் எங்க அப்பாக்கு மட்டும் லிட்டில் ப்ரின்சஸ் இல்ல எங்க மொத்த குடும்பத்துக்கும் தான்.”
“ம்ம்.. இவ்ளோ பெரிய வீட்டில் வளர்ந்தவ எப்படி மாதவன் கிட்ட மாட்டி இப்ப இந்த நிலைமைல இருக்க..?” ரேணு கேட்டதும் காஞ்சனாவிற்கும், கற்பகத்திற்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“மாதவன் என்கிட்ட ரொம்ப லவ்வோட தான் பழகனாரு அக்கா. என்கிட்ட ஒன் இயர் நல்லா பேசினாரு. எல்லாத்தையும் சொன்னாரு. நானும் இவ்வளோ அழகான ஒருத்தர், அன்பான ஒருத்தர் நம்ம பின்னாடி இப்படி சுத்தறாரேன்னு லவ் அக்செப்ட் பண்ணேன். கடைசியில் என்னை கழட்டி விட பாத்ததும் தான் கோவம் வந்துருச்சு.”
“ஆனா நல்லகாலம் கல்யாணத்தன்னிக்கு கடைசி நேரத்துல வந்து நின்னுட்ட..”
“எஸ். அதனால் ரெண்டு பேரோட வாழ்க்கை சேவ் ஆச்சு. ஆமா ரதி வீடு எங்க?”
“இங்கதான் பக்கத்துல இருக்காங்க. வா போகலாம்..” ரேணு சொல்ல, சிறு குழந்தை போல் அவள் கையை இறுக்கி கோர்த்துக் கொண்டு நடந்தாள். கற்பகமும், காஞ்சனாவும் கூட சென்றனர்.
ரதி முதன் முதலில் ரம்பாவிடம் பேசுவதால், அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. முன் வாசல் தோட்டத்திலேயே இருக்கும் கல்லின் மேல் அனைவரும் அமர்ந்து கதை பேசினார்கள்.
“ரதி நீங்க ரொம்ப அழகு..” என்றாள் ரம்பா.
“நீங்களும் தான் பேருக்கு ஏத்த மாதிரி அழகு”
“அப்போ நான் இல்லையா. எங்கப்பா ஊர்வசின்னு பேர் வைக்காம விட்டுட்டாரே.” ரேணு ஆரம்பிக்க,
“அக்கா நீங்களும் அழகு தான்.. ரெண்டு குழந்தைங்க பெத்த மாதிரியே இல்ல..” என்று ரம்பா சொன்னதும், ரேணுவுக்கு சிறு வெட்கம் வந்தது.
ஊர்கதைகள் எல்லாம் பேச, அங்கு சற்று சிரிப்பு சத்தம் அதிகமாகவே வந்தது. மாறனுக்கு அவனின் அம்மாக்களை பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் ரதி முகத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து அவளுமே அவர்களில் ஒருவராய் ஆகியிருந்தாள்.
“இப்போ மட்டும் அத்தைங்க கூட அவ்ளோ அரட்டை அடிக்கறீங்க. மாமா முன்னாடி மட்டும் டிபிக்கல் மருமகளா இருக்கீங்க?” ரம்பா கேட்க,
“ஓ அவ்ளோ நோட் பண்ணிருக்கியா.. அது வந்து மாமாக்கு நாமளாம் இவ்ளோ சந்தோஷமா அரட்டை அடிச்சு சிரிச்சு பேசறது பிடிக்காது.அதான் அப்பப்ப மாமியார் மருமக சண்டை மாதிரி போட்டுப்போம். அவர் ஆள் இல்லன்னா நாங்க ஆளே வேற மாதிரி..” என்று காலரை தூக்கி விடுவது போல் செய்தாள் ரேணு..
“ஏன்.. அவர் சிரிச்சு பேசறாரு.. நாம மட்டும் சிரிச்சா என்னவாம்..?”
“அது அப்படித்தான். சரி விடு.. கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட எய்ம் என்ன..ஆனா நீ வேலைக்கு போனும்னு அவசியமே இல்ல.. இருந்தாலும் மனசுல எதாச்சும் இருக்கும் இல்ல..” ரம்பாவிடம் ரேணு கேட்க,
“ம்ம். அப்படி சொல்ல முடியாது. எனக்கு விவசாய நிலம், பெரிய ஆர்கானிக் பிஸ்னஸ் அதெல்லாம் ஆசை. அதான் இங்க படிக்கவே வந்தேன். இன்னும் பத்து வருஷம் கழிச்சு விவசாயம் பண்றவங்க தான் பணக்காரங்களா இருக்கனும்னு ஆசை.. அதான் அப்பாட்ட எனக்குன்னு ஒரு இருபது ஏக்கர் நிலம் மட்டும் குடுங்க போதும். சொத்தெல்லாம் சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி பசங்களுக்கு குடுத்துட்டு மீதியை அனாதை ஆசிரமத்துக்கு குடுத்துருங்கனனு சொல்லியிருக்கேன். நான் என் பிள்ளைங்களுக்கு அந்த இருபது ஏக்கரை தரமா கொடுத்தா அவங்க நாப்பது ஏக்கரா அவங்க பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்துப்பாங்க. நம்ம பிள்ளைங்களுக்கு இருபது ஏக்கர் போதாதா..? எதுக்கு நூறு தலைமுறைக்கு சொத்து சேர்க்கனும்..?”
“அட பெரிய கம்யூனிஸ்ட் போலயே.. ஆனா இதை மாமா எதிர்க்க சொல்லிராத.. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வந்திடும்..” என்று சொல்லி ரேணு சிரிக்க, கற்பகமும் காஞ்சனாவும் அவளை முறைத்தார்கள்.
“ரதி நீ சொல்லவே இல்ல..”
“எனக்கு பெருசா எதுவும் ஆசை இல்ல.. இருக்க கடனை அடைச்சிட்டு கைத்தறியை உலகம் முழுக்க கொண்டு போகனும்னு தான் ஆசை..”
“ம்ம்.. நீங்க வீவர்ஸ் இல்ல.. ஒரு நாள் எனக்கும் கத்து கொடுங்க..”ரம்பா சொல்ல ரதி தலையை ஆட்டினாள்.
“அக்கா உங்க கல்யாணம் லவ்வா, அரேஞ்ச்டா..இல்ல கலாட்டா கல்யாணமா எங்களை மாதிரி” ரம்பா கேட்க,
“அது லவ்னு சொல்ல முடியாது. அரேஞ்ச்ட்னும் சொல்ல முடியாது. அப்பாவும் மாமாவும் இதை நாங்க சின்ன பிள்ளைங்களா இருக்கப்பவே முடிவு பண்ணிட்டாங்க. எனக்கு தாவணி போடற வயசிலேயும், அவருக்கு மீசை முளைக்கற வயசிலேயும் எங்களுக்குள்ள காதலும் வந்துருச்சு.”
“ஓ அதான் மாம்ஸ் உங்களை சுத்தி சுத்தி வராரா..” ரம்பா கண்ணடிக்க,
“நீ சரியான கேடி தான். எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்க அதுக்குள்ள” ரேணு சொன்னதும்..
“எக்ஸாக்ட்லி..ஆமா ஒரு கல்யாணம் எதை வச்சு முடிவு பண்றாங்க அக்கா..?”
“ஏன்.. எதை வச்சுன்னா..”
“இல்ல பெரியவங்க சம்மதம் போதுமா.. இல்ல பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கனுமா..”
“மனசு தான் காரணம். அது ஒத்து வந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்னு நினைக்கிறேன்”
“ஆனா ஒருத்தவங்க கேரக்டர், குணம் அது முக்கியம் இல்லையா.. அதானே கடைசி வரைக்கும் நம்ம கூட வருது.. என்னை பொருத்த வரைக்கும் குணம் இருந்தா லவ் தன்னால வரும்..ரதி நீங்க சொல்லுங்க” ரம்பா அவளின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்க,
“பணம் தான் ரம்பா. அது தான் திருமணத்தை நிச்சயிக்குது.. நிறைய பணம் இருந்தா நாம யாரை வேணா காதலிக்கலாம். பணத்தை வச்சே அதை நிறைவேத்திக்கலாம்.. குணம் கூட ஒருத்தரை அன்பால் மாத்திக்கலாம். ஆனா பணம் இல்லன்னா நம்மளோட விருப்பம் எதுனே கேட்க கூட யாரும் இருக்க மாட்டாங்க..”
அவளின் சோக விழிகள் மாறனை வதைத்தது. அறைக்குள் இருந்தவன் வெளியில் வர,
“ஹாய் மாறன்.. நீங்க வீட்ல தான் இருந்தீங்களா.. ஃபர்ஸ்ட் உங்களுக்கு கங்கிராட்ஸ் சொல்லனும்… ரதியோட வாழ்க்கையோட என் வாழ்க்கையையும் காப்பாத்திட்டீங்க.” என்று அவனின் கைகளை பிடித்து குலுக்கினாள்.
ரதியை தோளோடு அணைத்துக் கொண்டவள்,
“ரதி பணம் இருக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா வாழறாங்களா என்ன.. சந்தோஷமா வாழ்ந்தா பணம் பெரிய விஷயமில்லை..” என்று அவளை கட்டிப்பிடித்து கொண்டாள்.
வீட்டுக்கு வந்தவுடன் யாருமில்லை என்றதும் மாடிக்கு வந்தவன், பால்கனியில் இருந்து ஆச்சர்யத்துடன் ரம்பாவையும், ரதியையும் பார்த்தான் மாதவன்.
அதை ரம்பாவும் கவனித்தாள்.
error: Content is protected !!