Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-5 (2)

5(2)

சற்று நேரத்திலே குட்டி பேபி நிகிதா அழும் சத்தம் கேட்டது. இளந்திரையன் விழித்து வைஷ்ணவி அறைக்கதவை தட்டினான்.

வைஷ்ணவி கதவை திறந்தாள். பாப்பா விடாமல் அழ, வேலனும் வெளியே வந்தார்.



Advertisement

“என்னாச்சு? எதுக்கு இப்படி அழுறா?” இளந்திரையன் பாப்பாவை வைஷ்ணவியிடம் வாங்க வந்தான். அவன் சட்டையில்லாது முண்டாசு பனியனும் வேஷ்டியுடனும் இருப்பதை பார்த்து நின்றாள்.

Advertisement

“என்னம்மா?” வேலன் கேட்க, குழந்தையை பார்த்தாள்.

Advertisement

“பாப்பாவுக்கு சித்து அக்கா நினைவு வந்துருச்சு. அதான் அழுறா” என்று சைகையில் கூறி இளந்திரையனை பார்த்தாள்.

Advertisement

பால் ஏதாவது கொடுத்து பழகி இருக்கீங்களா? கேட்டான்.

இல்லை, தாய்ப்பாலும் தண்ணீரும் தான்..வேற எதுவும் இன்னும் கொடுத்து பழகலை.

“சித்தப்பூ, பால் இருக்குல்ல?” இளந்திரையன் கேட்க, “இருக்கு தீரா. ஆனால் பால் கொடுத்ததில்லைன்னு சொல்றா”.

“பழக்கணும் சித்தப்பூ” அவன் நகர, அவன் கையை பிடித்த வைஷ்ணவி, “நான் பால் காய்ச்சுகிறேன். பாப்பாவுக்கு கொடுத்து பழகணும் தான்”.

அவள் அவன் கையை பிடித்திருந்ததை பார்த்தான் இளந்திரையன்.

“பாப்பா உங்களிடம் அழாம இருப்பான்னு நினைக்கிறேன்” என்று வைஷ்ணவி அவளாகவே இளந்திரையனிடம் நிகிதாவை கொடுத்து அடுக்கலைக்குள் நுழைந்தாள். வேலன் அவள் பின்னே சென்றார்.

குழந்தையை வாங்கிய இளந்திரையன் தன் சிட்டுவை பார்த்துக் கொண்டே பாப்பாவை தோளில் போட்டு உலவினான்.

குழந்தையும் அழவில்லை. லேசாக எட்டி பார்த்து ஆச்சர்யமுடன் பார்த்து விட்டு வேலனிடம் கையை காட்டினாள். அவர் பாலை எடுத்துக் கொடுக்க அவள் தயார் செய்தாள்.

குழந்தைக்கு பாலை கொடுத்து விட்டு வைஷ்ணவி குழந்தையை தூக்கி அறைக்கு செல்ல முற்பட்டாள்.

அம்மாடி, கதவை திறந்தே வச்சுக்கோ. புள்ள அழுதா தீரனும் நானும் உதவிக்கு வந்திருவோம்.

அவள் தயங்கினாள்.

இளந்திரையன் அவளிடம் வந்து, “நீ தூங்கு. நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்” வாங்க வந்தான்.

நிகிதா விழித்து அழுது, குடித்த பாலை வாமிட் எடுத்து விட்டாள்.

“அம்மாடி, நீ வாஷ் பண்ணிட்டு வாம்மா”

அங்கிள்..நான் வந்து..பாப்பா அவள் மேலும் தயங்கினாள்.

“நீ போ. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் நிகிதாவிற்கு துடைத்து விட்டு வைஷ்ணவி வர காத்திருந்தான். இளவேலனை அவர் அறைக்கு அனுப்பி விட்டான்.

வைஷ்ணவி அறையை விட்டு வெளியே வரும் போது, அவள் பார்த்து பயந்த தீரன் கொஞ்சும் குரலில் நிகிதாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

குழந்தை பொக்கை வாயை காட்டி சிரித்தவாறு அஹ்..அஹ்..மழலைக்கே உரிய சத்தமிட்டுக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நின்று இருவரையும் ரசித்து பார்த்தாள். பின் இருவரிடமும் வந்தாள்.

சிட்டு, பாப்பாவுக்கு வேற ஆடை மாற்றணும்.

“எடுத்துட்டு வாரேன்” அவள் அறையை பார்த்தாள்.

ம்ம்! அவன் கண்ணசைத்தான்.

ஆடை ஒன்றை எடுத்து வந்து பாப்பாவிற்கு அணிவித்து, “சார் நாளைக்கு உங்களுக்கு வேலை இருக்கும். ரொம்ப நேரமாகிடுச்சு. நீங்க ஓய்வெடுங்க” பாப்பாவை அவளுடன் துக்கி செல்வதாக வாயசைத்தாள்.

நீ ஓய்வெடு. நாளையிலிருந்து நீயே பார்த்துக்கோ..

“அறைக்கா போகப் போறீங்க?” நிகிதாவை அவனுடன் தனியே அனுப்ப யோசித்தாள்.

“இங்க தான்” என்று பஞ்சு சோபாவில் அமர்ந்தான். “பாப்பா எப்படி இதுல்ல தூங்குவா? நீங்களும் தூங்கணும்”.

குழந்தையை அவனது தோளில் போட்டு தலையணையை சோபாவில் அவன் படுக்க ஏதுவாக போட்டு அமர்ந்தான்.

“நீ போ. நாங்க தூங்குவோம்” அவன் சொல்ல, பாப்பா அவளிடம் கையை நீட்டியது.

“நான் பார்த்துக்கிறேன்” அவள் குழந்தையை வாங்க, அவனை பார்த்து கையை அவனிடம் நீட்டியது..

இளந்திரையன் சிரித்தான்.

“என்ன இது புது விளையாட்டு?” அதனிடம் பேசிக் கொண்டே அவளிடமிருந்து நிகிதாவை வாங்கி அவளறைக்கு சென்று கண்ணாலே அவளை அழைத்தான்.

ஊ..ஊ..ஊ…சத்தமிட்டுக் கொண்டே இருந்தாள் பாப்பா.

இவ தூங்குற மாதிரி இல்லை. நீங்க ஓய்வெடுங்க சார். வேலைக்கு போகணும்ல்ல சார்?

அதெல்லாம் பிரச்சனையில்லை. பாப்பா தூங்கிய பின் நான் வெளியே போறேன். நீயும் படுத்துக்கோ..

இல்ல சார், இருக்கட்டும்.

அவள் தயக்கம் புரிந்து, “நீ படுத்துக்கோ. நான் அங்க இருக்கேன்” தள்ளி அவளை பார்க்காதவாறு பாப்பாவை தன்னுடன் அணைத்தவாறு கையிலே வைத்திருந்தான். அவனை பார்த்து விட்டு படுத்த வைஷ்ணவி களைப்பில் படுத்தவுடன் உறங்கி விட்டாள்.

பாப்பாவும் சற்று நேரத்தில் உறங்கி விட, நிகிதாவை மரத்தொட்டிலில் போட்டு விட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்து, “குட் நைட் சிட்டு” என்று அவளருகே வந்து சொல்லி விலகி இருந்த போர்வையை அவளுக்கு போர்த்தி அவன் உறங்க சென்று விட்டான்.

“விடியலின் பின்னும் இளந்திரையன் எழவில்லை” செழியன் இளவேலனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

நிகிதா சத்தம் வைஷ்ணவி அறையில் கேட்க, “பாப்பா தூங்கலைடா. அதான் தீரனும் தேவிம்மாவும் பார்த்துக்கிட்டாங்க”.

தேவிம்மாவா? செழியன் கேட்க, “ஆமா செழியா அவங்களோட முழுபெயரை அக்கா சொல்லவில்லை. அவங்களோட முழுப்பெயர் வைஷ்ணவி தேவி, மற்ற பிள்ளைகளுக்கும் அப்படி தான். அக்சரா தேவி..கடக்குட்டிக்கு பிரிய தேவின்னு வச்சிருப்பான்னு நினைச்சேன். ஆனால் சுப்ரியான்னு தான் வச்சிருக்கா. சுப்ரியா தேவியாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்” இளவேலன் சொன்னார்.

சித்தப்பூ, நேம் சூட் ஆகல. தேவி சுப்ரியாவாக தான் இருக்கும்.

“எப்படியோ இருந்துட்டு போகுது. அக்கா இத்தனை நாள் உயிரோட இருந்தும் என்னால பார்க்க முடியல. மத்தவங்களையாவது பாதுகாப்பா பார்த்துக்கணும்” அவர் வருத்தமுடன் கூறினார்.

நமக்கு தான் அவங்க இருப்பது தெரிஞ்சு போச்சுல்ல. யாருக்கும் ஏதும் ஆகாமல் பார்த்துக்கலாம்.

ம்ம்..

வைஷ்ணவி பாப்பாவுடன் வெளியே வந்தாள். அக்சராவும் மாறனும் இளவேலன் அருகே வந்தனர். அவன் வந்து அமர்வதற்குள் அக்சரா அவரிடம் வந்து அமர்ந்து கொண்டாள்.

சுந்தரம், “எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வா” இளவேலன் சத்தமிட்டார்.

“அய்யா, நம்ம தீரன் இன்னும் வரவில்லை” சுந்தரம் அவரிடம் கேட்க, அவன் வருவான். நீ இருக்கிறவங்களுக்கு முதல்ல கலந்து கொடு.

“அண்ணா இன்னுமா கீழ வரலை?” மாறன் கேட்டான்.

இளந்திரையன் வேஷ்டியின் ஒரு முனையை பிடித்துக் கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தான். அவன் நண்பன் குரு பிரசாத்தும் வந்தான்.

“அக்கா காஃபி” சத்தமிட்டு கொட்டாவியை கையில் மறைத்து கேட்டுக் கொண்டே சுப்ரியாவும் வந்தாள்.

“குட்டிம்மாவுக்கு செம்ம தூக்கம் போல?” குரு கேட்க, இளந்திரையன் அவனை முறைத்தான்.

எல்லாரும் என்னை குட்டிம்மான்னு கூப்பிடுறீங்க? நான் குட்டிப் பொண்ணு இல்லை. அடுத்த வருடம் நான் கல்லூரி சேர்ந்திடுவேன்.

ஹா..ஹம்…குரு கேலியுடன் இழுக்க, “சார் இவர் யாரு? என்னை குட்டிம்மான்னு கூப்பிட?” இளந்திரையனிடம் சுப்ரியா கேட்டாள்.

“அப்ப அவன் மட்டும் கூப்பிடலாமா? உனக்கு அவன் யாரு?” எதிர் கேள்வியை குரு தொடுத்தான்.

சார், என்னை பள்ளியில் சேர்த்திருக்கார். அவர் எனக்கு ஸ்பான்சர்..

“எந்த ஊர்ல ஸ்பான்சர் குட்டிம்மான்னு கூப்பிடுவாங்க?” குரு மேலும் கேட்க, “அண்ணா அவளை விடுங்க” அக்சரா இருவரின் பேச்சை முடிக்க குருவை “அண்ணா” என்றே அழைத்து விட்டாள்.

சரிம்மா, நான் பேச்சை நிறுத்துறேன். குட்டிம்மா என்னை அண்ணன்னு அழைக்கணும்.

“எதுக்கு? நான் அங்கிள்ன்னு அழைக்கவா?” சிரித்துக் கொண்டே சுப்ரியா கேட்டாள்.

அங்கிளா? எங்க ஊர்ல்ல அங்கிள்ன்னா மாமா. “எங்க மாமா சொல்லு செல்லக்குட்டி?” அவளது தோளில் கை போட்டான் குரு.

வைஷ்ணவி அதிர்ந்து குருவை பார்த்தாள்.

இளந்திரையன் அவன் கையை திருகி, “என்ன பழக்கம்டா. பேசும் போது கை போடுற?”

என்னோட குட்டி தங்கச்சி மேல கைய போட்டா. உனக்கு எதுக்கு கோபம் வருது..

“போடாத” இளந்திரையன் அவன் கையை விட்டான்.

மாறனோ சினமுடன், “அண்ணா இதுக்கு தான் இவங்க நம்ம வீட்ல தங்க வேண்டாம்ன்னு சொன்னேன்”.

“சரி, நாங்க இப்பவே கிளம்புகிறோம்” சுப்ரியா சொல்ல, “இல்ல சுபா..நாம இங்க தான் இருக்கணும்” வைஷ்ணவி மாறனை பார்த்துக் கொண்டே பேசினாள்.

அக்கா, அவன் ஓவரா பேசுறான்.

“மாறா, குட்டிம்மாகிட்ட மன்னிப்பு கேளு” இளந்திரையன் சொல்ல, சுந்தரம் கொண்டு வந்து கொண்டிருந்த காபி ட்ரேயை சினமுடன் தட்டி விட்டான் மாறன். அது பாப்பா மீது கொட்டும் முன் வைஷ்ணவி நகர்ந்தாள். எல்லாம் அவள் மீது சூடாக கொட்டியது..

எல்லாரும் பதற, தீரன் அவனை அடிக்க கையை ஓங்கினான்.

வைஷ்ணவி அவள் வலியையும் பொருட்படுத்தாது “அடிச்சிறாதீங்க” சத்தமிட்டாள். கையை ஓங்கியவாறே இளந்திரையன் அவளை பார்த்தான்.

“சித்தப்பூ” தீரன் சத்தமிட, அவர் குழந்தையை அவளிடமிருந்து வாங்கினார். குழந்தை அழுதது.

மாறனிடமிருந்து விரைந்து வைஷ்ணவியிடம் வந்த இளந்திரையன், அவள் கையை பிடித்து அவளறை குளியலறைக்கு சென்று தண்ணீரை பிடித்து அவள் மீது மொத்தமாக ஊற்றினான். அவள் முகத்தை துடைத்து அவனை பார்த்தாள்.

இளந்திரையனின் கண்ணில் அவளுக்கான வலி தெரிந்தது வைஷ்ணவிக்கு. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கணுக்காலின் முன் பொஃபென புடைத்திருப்பதை பார்த்து, இளந்திரையன் அமர்ந்து அவள் பாதத்தை அவன் தொடையில் வைத்து ஊதினான். எல்லாரும் வாயை பிளந்து பார்த்தனர்.

தண்ணீரை அதில் ஊற்றிக் கொண்டே வைஷ்ணவியை பார்த்தான். அவள் கீழுதட்டை மடித்து புருவம் சுருக்கி வலியை பொறுத்தவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சித்தப்பூ” அவன் அழைக்க, சுயம் வந்து அவனை பார்த்தாள். எல்லாரும் இவர்களையே பார்ப்பதை பார்த்து, அவன் தொடையிலிருந்து காலை எடுத்தாள்.

ஷ்..என்று அவன் சத்தமிட, வேலன் களிம்பு ஒன்றை எடுத்து வந்தார். அவளுக்கு வலிக்காதவாறு அவளையும் காயத்தையும் பார்த்து பார்த்து மென்மையுடன் அவளுக்கு மருந்திட்டான். பின் அவளை தூக்கி படுக்கையில் அமர வைத்து, குழந்தையை பார்த்தான்.

நிகிதா வாயை மூடவேயில்லை. அழுது கொண்டே இருந்தாள். அவளை செழியனிடமிருந்து வாங்கி மடமடவென வெளியேறினான்.

சுப்ரியாவும் அக்சராவும் வைஷ்ணவியிடம் வந்து காயத்தை பார்த்து வருந்தினர். மாறன் குற்றவுணர்ச்சியில் அமர்ந்த இடத்திலிருந்து எழவேயில்லை. அவன் கவனம் முழுவதும் வைஷ்ணவி அறைப்பக்கம் சென்றது.

தீரன் குழந்தையுடன் வருவதை பார்த்து, “தீரா, என்னடா குழந்தை? அதுக்குள்ளவா? எப்புட்றா?” அவன் பின்னே கேட்டுக் கொண்டே வந்தான் அவன் உயிர்த்தோழன் குருபிரசாத்.

“குரு வாயை மூடு. பாப்பா அழுதுட்டே இருக்கா. நீ வேற தொனத்தொனன்னு பேசுற?” சினந்தான். மாறன் வேகமாக எழுந்து இளந்திரையனை பார்த்தான்.

அவன் மாறனை கண்டு முறைப்புடன், குரு நீ கிளம்பு. நான் வர நேரமாகும். வேலையை கவனி. ஈவ்னிங் பூஜைக்கு தேவையான பொருட்களை பூசாரி அய்யா வீட்ல வைக்க சொல்லு. நான் வந்து மீதியை பார்க்கிறேன். நீ சொல்லீட்டு நம்ம தொழிலாலைகளை கவனி..

ம்ம்..இந்த குழந்தைடா..வைசுவிதா?

இல்லை. பக்கத்து வீட்டு அக்காவுடையதாம். போதுமா? கிளம்பு..

குரு கிளம்பினான். எல்லாரும் வைஷ்ணவி அறையிலிருந்து வெளியே வந்தனர். அவளும் சுப்ரியாவும் மட்டும் அறையில் இருந்தனர். மாறன் தயக்கமுடன் செல்ல, “எங்கடா போற?” இளவேலன் சீற்றமுடன் சத்தமிட்டார்.

“சித்தப்பூ, நான் தெரியாமல் தான் செய்தேன்” பாவமாக மாறன் கூறினான்.

தெரியாமலா? பல்லை கடித்தார்.

“சித்தப்பூ” செழியன் அழைத்து, “போ மாறா. வைசுகிட்ட மன்னிப்பு கேட்டு வந்திரு. ஆனால் அவள் யாரும் உன்னை ஏதும் சொல்லக் கூடாதுன்னு சொன்னா. பார்த்து பேசு. அவங்க நிலை தெரிந்தும் நீ இப்படி நடந்து கொள்வது எனக்கும் பிடிக்கலை” சொல்லி அவன் அகன்றான். அக்சரா அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.

“அக்கா, ரொம்ப வலிக்குதா? என்னால தான?” சுப்ரியா வைஷ்ணவியின் காலை வருத்தமுடன் பார்த்தாள்.

“பரவாயில்லை சுபா. எனக்கு இதெல்லாம் பழகியது தான? நீ மாறனோட சும்மா சும்மா சண்டை போடாத”.

அக்கா, அவன் தான் என்னை வம்புக்கு இழுக்கிறான். நாம இங்கிருந்து போயிடலாம் அக்கா..

இல்ல சுபா, இங்க பாதுகாப்பா இருக்கோம். முதல்ல நாம மட்டும் தான். இப்ப பாப்பாவும் இருக்கா. தனியே செல்லலாம். ஆனால் நம்ம உயிருக்கே உத்திரவாதம் இல்லையே! சைகையில் சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

கதவை தட்டினான் மாறன். இருவரும் அவனை பார்த்தனர். சுப்ரியா வைஷ்ணவியிடம் நெருக்கமாக அமர்ந்து கொண்டாள்.

“சுபா” அவளை வைஷ்ணவி நகர்த்த, அக்கா..இவன்..

“இப்ப தான சொன்னேன்?” அவள் பார்வையில் சுப்ரியா நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

மாறன் வைஷ்ணவியிடம் வந்து, “நான் வேண்டுமென்றே செய்யவில்லை” கண்கலங்கினான்.

“இங்க வா” கையசைத்து அவனை அழைத்து அவளருகே அமர வைத்தாள். சுப்ரியா அவனை முறைத்தாள்.

“சாரி” மாறன் தலைகுனிந்தான்.

“உன்னோட அண்ணா எப்போதும் உனக்கு அண்ணா தான். அவரை உன்னிடமிருந்து எங்களால மட்டுமல்ல உன்னோட அம்மா வந்தால் கூட பிரிக்க முடியாது” சைகையை வைஷ்ணவி காட்ட அவனுக்கு புரியவில்லை. சுப்ரியா விவரித்தாள்.

மாறன் வேகமாக வைஷ்ணவியை நிமிர்ந்து பார்த்தான்.

நிஜமாக தான். உன்னோட அண்ணா கல்யாணம் செய்து கொண்டாலும் உனக்கான இடம் அவர் மனதிலிருந்து எப்போதும் நீங்காது. நீயாக எதுவும் எண்ணி நீயும் காயப்பட்டு அவரையும் காயப்படுத்தாத.

“என்னை மன்னிச்சிருங்க” வைஷ்ணவி கையை பிடித்து மாறன் சுப்ரியாவை பார்த்தான். அவள் முகத்தை திருப்பினாள்.

மன்னிப்பா எதுக்கு? அதெல்லாம் தேவையேயில்லை. எப்படியும் கொஞ்ச நாள் தான். எங்க பிரச்சனை முடிந்ததுன்னா நாங்க இங்கிருந்து கிளம்பப் போறோம். அப்புறம் உன் அண்ணா உன்னிடம் மட்டும் பாசமா இருந்துப்பார்..

“நீங்க எங்க போவீங்க?” மாறன் கேட்டான்.

தெரியல. இப்ப எங்களோட பாதுகாப்பிற்காக தான் உன் அண்ணாவும் எங்களை இங்க தங்க வச்சிருக்கார். அதனால அவரையும் தப்பா நினைக்காத…

“நீங்க போக வேண்டாம்” மாறன் சொல்ல, புன்னகைத்த வைஷ்ணவி “அதெப்படி நாங்க இங்க இருப்போம்? கொஞ்ச நாள் தான்” மீண்டும் கூறினாள். பாப்பாவை கொடுக்க வந்த இளந்திரையன் காதில் இவை தெளிவாக விழுந்தது. அவன் மனம் அமைதியற்று தவித்தது.

மாறனோ பேச முடியாமல் இருவரையும் பார்த்தான்.

இளந்திரையன் மனம் கனத்து போனது. “இவ்வளவு சொல்லியும் இவள் வீட்டை விட்டும் எங்களை விட்டும் போகணும்ன்னு சொல்றாளே!” எண்ணியபடி அறைக்குள் வந்தான்.

மாறன் எழுந்து “சாரிண்ணா, நான் தெரியாமல் தான் கொட்டி விட்டுட்டேன்” அவன் சொல்ல, இளந்திரையன் எவ்வித பதிலும் கூறாது உறங்கும் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வைஷ்ணவியின் காலையும் ஆடையையும் பார்த்தான்.

“ஆடையை மாத்திட்டு எதுவும் பேசுங்க” முகத்தை உர்ரென வைத்து பேசி வெளியேறினான்.

மாறா, உன்னோட அண்ணா மூஞ்சி ஏன் இப்படி போகுது?

அவருக்கு வேலை இருக்கும். எப்பொழுதும் இந்த நேரம் கோவிலில் இருப்பார்.

நாங்களும் கோவிலுக்கு போகணும்.

உங்களை மட்டும் வெளியே அழைச்சிட்டு போகக் கூடாதுன்னு அண்ணா எல்லாருக்கும் ஆர்டர் போட்டிருக்கான். என்னால இதுல உதவ முடியாது..

ஓ! அமைதியானாள். சுப்ரியாவை பார்த்து விட்டு வைஷ்ணவியிடம் கூறி வெளியேறினான் மாறன்.

அன்று முழுவதும் இளந்திரையனுக்கு வேலை சரியாக நடக்கவேயில்லை. மூடு அப்செட்டில் மாலையே வீட்டிற்கு வந்து விட்டான்.

அண்ணா, வேகமா வந்துட்ட?

“போகணும்” என்று கண்களால் வைஷ்ணவியை தேடினான்.

சுப்ரியா வெளியே ஓடி வந்தாள். அக்சராவும் செழியனும் அவளை விரட்டி வந்தனர்.

“செழியா” இளந்திரையன் அழைக்க மூவரும் நின்று விட்டனர்.

அண்ணா..

என்ன?

அண்ணா, சுபா..பாப்பாவை அழ வச்சிட்டா. அதான் பாப்பாவை வைத்து அவளை அடிக்க நாங்க விரட்டுகிறோம்.

இளந்திரையனின் பார்வை வைஷ்ணவி அறைக்கு சென்றது.

“வைசுவுக்கு இப்ப ஓரளவு சரியாகிடுச்சி அண்ணா. வா…பாரு” அழைத்தான் செழியன்.

இல்லடா, நான் ரெஸ்ட் எடுக்க வந்தேன். ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். கோவிலில் விழா நடக்கும். நீயும் மாறனும் வந்திருங்க..

“சார்..நாங்க..நாங்களும் வாரோமே! ப்ளீஸ்” சுப்ரியா கேட்டாள்.

குட்டிம்மா, இப்ப வேண்டாம்டா. வேலை நேரத்தில் உங்களை என்னால் கவனிக்க முடியாது.

“ஆமா சுபா, சாருக்கு நிறைய வேலை இருக்கும். அவரே நம்மை அழைப்பார் அப்பொழுது நாம கோவிலுக்கு செல்வோம்” அக்சரா கூறினாள். இளந்திரையன் அக்சராவை பார்த்து விட்டு அவனறைக்கு சென்று விட்டான்.

சற்று நேரத்தில் அக்சரா தனியே வீட்டின் பின் சென்ற செழியனை பின் தொடர்ந்து சென்றாள்.

“இவ என்ன பண்றா?” சுப்ரியா அக்சராவிற்கு தெரியாமல் அவளை பின் தொடர்ந்தாள்.

செழியன் கை பிடித்து யாருமில்லா இடம் சென்ற அக்சரா, “எனக்கு ஒரு உதவி வேணும்?”

உதவியா? உனக்கா? நான் என்ன செய்யணும்?

தீரன் மாமாவையும் அக்காவையும் லவ் பண்ண வைக்க உதவணும்.

“அண்ணாவுக்கு வைசுவை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும் தான?”

நான் அக்காவை சொன்னேன். அவங்க தனியே நேரம் செலவழித்தால் நல்லா இருக்கும்.

“மாமான்னு சொல்றா? அக்காவை இந்த வீட்லயா? தீரன் சாருடனா? அவருக்கு என்னோட அக்காவை பிடிச்சிருக்கா?” அதிர்ந்து கவனித்தாள் சுப்ரியா.

“சரி, என்ன செய்யலாம். சொல்லு?” செழியன் அக்சராவிடம் கேட்டான்.

இன்றிரவு பாப்பாவை அக்கா தூங்க வைக்கவும் நீங்க அக்காவை இதே இடத்துக்கு ஏதாவது சொல்லி அழைச்சிட்டு வாங்க. நான் தீரன் மாமாவை இங்கே வர வைக்கிறேன்..

“வொர்க் அவுட் ஆகுமா?” செழியன் கேட்க, “எனக்கென்ன தெரியும்? நம்பிக்கை அதான எல்லாம்”

“ஹப்பா, என்ன டயலாக்..?” கேலியுடன் செழியன் கேட்க, அவன் மார்பில் அடித்து “போ மாமா” என்றாள் அக்சரா குழைந்தவாறு.

“இவரும் மாமாவா? என்ன நடக்குது?” சுப்ரியா வேகமாக அவளறைக்கு ஓடினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!