Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-7 (1)

7(1)

“தீரா, என்னடா? நீயும் ஒத்துக்கிட்ட?”  குரு இளந்திரையனிடம் கேட்டான்.



Advertisement

நான் என்னடா செய்றது? மாறனுக்கு எதுவும் புரிய மாட்டேங்குது.

சரி சரி கோபத்தை அவனிடம் மட்டும் காட்டாத. அகில்..?

Advertisement

Advertisement

கண்டிப்பாக அகில் கண்ணில் சிட்டு மாட்டக் கூடாது. தேனு குட்டிம்மாவுக்கும் பாதுகாப்பு போடுங்க. நம்ம சக்தி குரூப்ல்ல சொல்லி வை. அகில் என்று சொல்லாமல் சொல்லு.

“ஏன்டா, நேரடியா பார்க்கலாமே!”

Advertisement

அதான் பார்த்து சவால் விட்டு வந்துட்டேனே! கண்டிப்பாக பொண்ணுங்க வெளிய வரும் நேரத்துக்காக காத்துட்டு இருப்பான். அதுமட்டுமல்ல சீக்கிரமே எல்லாரையும் கண்டுபிடிக்கணும். எனக்கு மனசே சரியில்லை. குட்டிம்மாவை கடத்தியது எவன்னு பார்க்க சொல்லு..

விசயம் வெளிய வரக் கூடாது. மற்ற மாவட்டத்திலும் நமக்கு வேண்டியவர்களை வைத்து நம்ம குடும்பத்தை விசாரி. எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு நல்லது..

மச்சான், தேனீல்ல நம்ம வைசு அப்பாவை போல யாரோ புகைப்படம் கிடைச்சதா சொன்னாங்க.

விசாரி. அவங்க கிடைக்கணும். அவங்க பாதுகாப்புக்கு கண்காணிக்க ஆளை போடு..

“சரிடா மச்சான். நீ வருத்தப்படாத!” தீரனை சமாதானப்படுத்தி குரு அவனுடன் வெளியே வந்தான்.

பாப்பாவை சுந்தரத்தின் பொண்ணு வித்யாவை பார்த்துக்க சொல்லி நகர்ந்தான் இளந்திரையன். அவள் ஆச்சர்யமுடன் அவனை பார்த்துக் கொண்டே குழந்தையுடன் அவள் அப்பாவிடம் சென்றாள்.

அன்றைய இரவு திருவிழா கோகலமாக ஆரம்பித்தது. மதுரை வீரனை ஜோடித்து கையில் அரிவாளுடன் கம்பீரமாக இருக்க வைத்திருந்தனர். அருகே அவரது மனைவிகள் பொம்மியம்மனுடனும் வெள்ளையம்மனுடன் காட்சியளித்தார்.

மதுரை வீரனின் ஆடை போல இளந்திரையன் ஆடையுடன் கழுத்தில் மாலையும் கையில் அரிவாளும் தலையில் தலைப்பாவுடனும் அலங்கரித்திருந்தனர். அவன் வீரனுக்கே உரிய கம்பீரத்துடன் குதிரையில் ஏறினான்.

வைஷ்ணவி தேவியை பாதுகாக்கும் காவலன் மதுரை வீரன் என்பதால் அம்மனுக்கு காவலாக வீதிவுலா வருவது வழக்கம்.

மதுரைவீரனுக்கு படையலிட்டு ஆராத்தி காட்டி பூசாரி மதுரை வீரனாக குதிரையில் எல்லார் முன்னும் காட்சியளிக்கும் இளந்திரையன் பக்கம் திரும்பினார். அவன் கம்பீரமுடன் இருந்தாலும் அவன் மனம் பதைத்துக் கொண்டிருந்தது. அவனால் இந்த உலா முடியும் வரை எங்கும் நகர முடியாது. அம்மனுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

மதுரைவீரனையும் வைஷ்ணவி அம்மாளையும் தீவிர பக்தியுடன் எண்ணியவாறு, என்னோட சிட்டுவுக்கும் பொண்ணுங்களுக்கும் ஏதும் ஆகக் கூடாது என்று பிராத்தித்தான்.

இளந்திரையன் சொன்ன சக்தி என்பவனின் குழுவினருடன் குருவும் செழியனும் நின்று கொண்டிருந்தனர். இளவேலனுடன் மாறனும் குதிரையில் தேவியை சேவிக்க வைஷ்ணவி தேவி கோவிலுக்கு உலா செல்லும் இளந்திரையனுடன் சென்று கொண்டிருந்தனர்.

மதுரையை சுற்றியிருந்த அனைத்து ஊரினரும் குழுமி இருக்க, மேள தாளங்கள் முழங்க இளந்திரையன் போல சிலர் மதுரை வீரன் வேடமிட்டு அவன் செல்ல தயாராக இருக்கும் குதிரையின் முன் கையில் ஆயுதத்துடன் நடனமாடினார்கள்.   

         “மதுர எல்லைக்குள்ள கிழக்கு சீமையில

          இரு கண்ணில் பொறி தெறிக்க

          தேகமெங்கும் அனல் பறக்க

          கரிகால சோழன் வரான் பாரு….ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

           பிறப்பில் சிங்கமய்யா

           அவர் மனசு தங்கமய்யா

           கருங்குதிர திமிறி வர

           வேட்டை நாய்கள் துணையும் வர

           மதுரவீரன்  வாரா பாரு….

           எங்க மதுரவீரன் வாரான் பாரு…

       வர்றான் வர்றான் வர்றான் வர்றான் மதுரவீர எதுல வாரான்

                

                      ஏய்…. 

       கண்ணுரண்டும் கூத்தாட விண்ணும் மண்ணும் குழுக்கிட்டு

            வெட்டருவா தூக்கிகிட்டு அய்ய வாரான்டா

        வெள்ளத்துண்டு வேட்டி கட்டி வெள்ளிமணி சலங்ககட்டி

            காட்டு வழி சிங்கம் போல வீரன் வாரான்டா…

                   

           மதுர எல்லைக்குள்ள கிழக்கு சீமையில…..  (2)

அனல் பறக்க பாடலுடன் நடனமாடி வந்தனர். இளந்திரையனை இந்த வீதத்தில் மூன்று பெண்களும் பார்த்ததில்லையே! அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் வைஷ்ணவி, அக்சரா, சுப்ரியா.

அப்படியே மதுரவீரனாக மாறி விட்டிருந்த இளந்திரையன் முகம் முழுவதும் அந்த வீரனின் தோற்றமாக, அப்பாடலுக்கு ஏற்றவாறு இருந்தது.

அக்சராவை தனியே இழுத்த சுப்ரியா, “அக்கா, மாமாவா இது? அப்படியே அய்யனார் மாதிரி இருக்காரு. என்ன இந்த தாடி தான் இடிக்குது”.

“வாய மூடி. இப்ப அவரு சாமி. அங்க பாரு” வைஷ்ணவியை காட்டினாள்.

வைசுக்காவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சோ! பாரேன். கண்ணிமைகள் அசையவேயில்லை..

அவ அதிர்ச்சியில இருக்காடி. நல்லா இருக்கிறவல்ல..

“ஏய் அக்காவ ஏதாவது சொன்ன?” விரலை உயர்த்தினாள் சுப்ரியா.

“வா, அவளை பார்க்கலாம்” இருவரும் அவளிடம் சென்றனர்.

வைஷ்ணவி அருகே தான் செழியன், குரு..சக்தி குழுவினர்கள் இருந்தனர். எதிர்ப்பக்கம் பார்த்து நின்று கொண்டிருந்தனர்.

“குரு அண்ணா, நம்ம தீரன் அண்ணாவிடம் ஏதோ மிஸ் ஆகுது” சக்தி கேட்டான்.

“ஆமாண்ணா, அவரோட கண்ணில் இதுவரை பார்க்காத ஒன்று தெரியுது” மற்றவன் சொல்ல, “அதெல்லாம் ஒன்றுமில்லையே!” செழியன் பட்டென கூறி விட்டான்.

“செழியா” சக்தி அழைக்க, அவன் குருவிடம் கண்ணை காட்டினான்.

“என்னடா அவரிடம் கண்ணை காட்டுற?”

உதவின்னு பொண்ணுங்க வந்தாலும் அண்ணா வீட்டிற்குள் அனுமதிக்கவே மாட்டார். ஆனால் இப்ப மூன்று பொண்ணுங்களை ஒரு வாரம் தங்க வச்சிருக்காரு. குழந்தையை வேற புதுசா வீட்டுக்குள்ள விட்ருக்கார். அந்த பொண்ணுங்களை கொலை செய்ய இந்த விழாவில் ஆட்கள் வருவாங்கன்னு எங்களை மட்டுமல்லாமல் நம்ம ஊர்க்கார பசங்களிடம் சொல்லி வச்சிருக்கார்.

“அப்படி யாரு அந்த பொண்ணுங்க? அவருக்கு அந்த பொண்ணுங்க அவ்வளவு முக்கியமா?” சக்தி கேட்டான்.

மேலிருந்து படாரென யாரோ குதிக்க, சக்தி ஆள் ஒருவன் கீழே விழுந்தான்.

“அட ராட்சசி, என்ன புதுசா ஆகாயத்துல்ல இருந்து குதிக்கிற?” சக்தி கேட்டான்.

“தீரா, என்னோட படித்த தோழிகளை தான் அவர் வீட்ல பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். நான் உதவி கேட்டேன். எனக்காக தான் செய்கிறார். கண்டவளை எப்படி உள்ளே விடுவார் என் ஆசை மாமா?” ரூபினி கேட்க, சக்தி சத்தமாக சிரித்தான்.

சினமான செழியன் அவள் கழுத்தை பிடித்து, “வெட்டிக் கதையெல்லாம் இனி பேசிட்டு இருந்த நானில்லை அண்ணாவே உன்னை குழி தோண்டி புதைச்சிடுவார்”.

“விடுடா. அதுவா பைத்தியம் பிடிச்சி சுத்திட்டு இருக்கு. இதை கொன்னு உன்னோட வாழ்க்கையை பாழாக்க போறீயா?” குரு செழியனை தடுத்தான்.

“உங்களுக்காக விடுறேன். மறுபடியும் அண்ணா பெயரை வச்சி ஏதாவது பேசின அங்கேயே சாவடிச்சிருவேன்” பயங்கரமாக மிரட்டினான்.

ரூபினி அவனிடமிருந்து விலகி, தொண்டையை சரி செய்து, “செழியா உன்னோட அண்ணிகிட்ட இப்படி தான் நடந்துப்பாயா? உன் அண்ணா வருத்தப்பட மாட்டாரா?” முகத்தை பாவமாக வைத்து கேட்டாள்.

“யாருக்கா இவ? இப்படி பேசுறா?” சுப்ரியா அதிர்ந்து அக்சராவிடம் கேட்டாள்.

எனக்கு என்ன தெரியும்?

“இருக்கா. இவள ஒரு கை பார்த்துட்டு வாரேன்” சுப்ரியா சொல்ல, அவளை தடுத்து வைஷ்ணவியை காட்டி நிற்க வைத்தாள்.

மாமாவா? அண்ணியா? மனம் நெருடியது வைஷ்ணவிக்கு. அவள் தீரனை பார்த்தாள்.

இங்க பாரு ரூபி. நீ அடிவாங்காம போக மாட்டன்னு நினைக்கிறேன். அண்ணா மனசுல நீ இல்லை. எந்த பொண்ணும் வர முடியாது..

“ஏன் முடியாது? அவர் காதலிச்சவ தான் செத்து போயிட்டால்ல? அவருக்கு இரண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துல்ல இருக்குல்ல. அவ வேணும்ன்னா அவர் மனசுல இருந்துக்கட்டும். நான் இரண்டாவது பொண்டாட்டியா வாழ்ந்துக்கிறேன்” அவள் சொல்ல, அவள் கன்னம் பழுத்தது.

வைஷ்ணவியை தேடி வந்தனர் சத்யாவும் அவன் அம்மா ராதிகாவும். ராதிகா தான் ரூபினியை அறைந்து விட்டார்.

“ஏய், யாரு நீ? நான் யாரு தெரியுமா?” அவள் பேசத் தொடங்க, “புடவை உடுத்தினால் நீ பொண்ணாகிடுவீயா? ச்சீ..அவன் மனதில் வேறொருத்தி இருக்கான்னு தெரிந்தும் இரண்டாவது பொண்டாட்டியா அவனோட வாழ்வேன்னு சொல்ற? அசிங்கமா இல்லை” திட்டினார்.

“அதை கேட்க நீ யாரு?” அவள் கேட்க, சத்யா சினமுடன் “அவங்க உன்னை மாதிரி பிராப்பர்ட்டிக்கு ஆசைப்படுவங்க இல்லை. காதலுக்காக தன் வாழ்க்கையையே தொலைச்சவங்க”

“உன்னோட அப்பன் எவன்னு உனக்கு தெரியாது நீ பேசுறீயா?” ரூபினி கேட்டு விட பெண்கள் அதிர்ந்தனர்.

சத்யா கோபத்தில் அவளை அறைந்து விட்டு, “என்னோட அம்மா என்னை என் அப்பன் இல்லாமல் தான் வளர்த்தாங்க. உன் அப்பன் போல ஊர் மேய விடல” சீறினான்.

ஏய்ய்! அவள் கையை உயர்த்த, அவன் சீற்றமுடன் “கையை இறக்கு” கத்தினான். அருகிலிருந்த அனைவரும் அவர்களை பார்த்தனர். எல்லார் முன்னும் முதலாவதாய் அசிங்கமாக உணர்ந்தாள் ரூபினி.

மோகன் சத்யாவை அவளிடமிருந்து இழுத்து நகர்த்தினான்.

“குருவிற்கும் அக்சராவிற்கும் இளவேலனின் மகன் தான் சத்யா என்று தெரியும் தான?” அவனை பாவமாக குரு பார்க்க, கீழே நின்று கொண்டிருந்த அக்சரா வேகமாக மரத்தடி மேடையில் ஏறி சத்யா கையை பிடித்து தனியே இழுத்து சென்றாள்.

குரு, மோகன், ராதிகா அவர்களுடன் செல்ல, செழியன் அக்சரா சத்யா கையை பிடித்து செல்வதை திகைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“அக்கா” சுப்ரியா அழைக்க, புடவை முந்தானையால் மறைத்திருந்த வைஷ்ணவியின் கண்களை கண்டான் சக்தி. 

மகேஷ் பாண்டியன் அவன் அண்ணனுடன் வந்திருந்தான்.

சுப்ரியாவை பார்த்து, “ஹே குட்டிப்பொண்ணு. நீ தான தீரன் அண்ணா வீட்ல இருந்த?” சக்தி கேட்க, தன்னுடைய தொப்பியை வைத்து சுப்ரியா அவள் முகத்தை மறைத்துக் கொண்டு அக்சரா பின் ஓடினாள் சுப்ரியா.

குதிரையில் மதுரவீரனாக சென்று கொண்டிருந்த இளந்திரையன் கண்ணில் சத்யா கையை அக்சரா பிடித்து செல்வதையும் அவள் பின் சுப்ரியா செல்வதையும் பார்த்தான். அவன் மனம் வைஷ்ணவியை எண்ணியது. ஆனால் அவனால் இப்பொழுது ஏதும் செய்ய முடியாது..

அந்த பக்கம் வந்த மகேஷ் பாண்டியன் மீது சுப்ரியா மோதி நின்றாள்.

ஹே, பார்த்து என்னாச்சு? அவன் கேட்க, “நட்திங்” அவள் நகர சென்றாள்.

அவள் கையை மகி பிடித்து நிறுத்தி, “நீ தான் தீரன் அண்ணா வீட்ல இருந்தீயா?” கேட்டான்.

“ஆமா” அவள் செல்வதிலே இருந்தாள்.

“இரு” அவன் அவனது மற்றொரு கையை அவள் கை மீது வைக்க, இளவேலனும் மாறனும் இருவரையும் பார்த்தனர்.

மாறன் முகம் இரத்தபசையற்று சினம் கொள்ள தொடங்கியது. அவன் ஓர் அடி எடுத்து வைக்க, மாறன் கையை அழுத்தி பிடித்தார் இளவேலன். மாறன் பெருமூச்சுடன் தன் அண்ணனை பார்த்துக் கொண்டே அவன் பின் சென்றான்.

ரூபினி அங்கிருந்து அகன்ற பின் தான் செழியனுக்கு உரைத்தது வைசுவும் அங்கே தான் இருப்பாள் என்று. அவன் கண்கள் அலைபாய்ந்தது. வைஷ்ணவி அவனுக்கு பின்னே தான் சோர்வுடன் அமர்ந்திருந்தாள்.

“சக்தி முன் அவளருகே செல்ல முடியாதே!” அவனை பார்த்தான். அவன் சிந்தனையுடன் அக்சரா சென்ற திசையை பார்த்தான்.

செழியா, இந்த போலீஸ்காரரின் அம்மாவை எங்கோ பார்த்தது போல இருக்குடா..

தெரியல. நீ அவங்களோட போ. உதவி தேவைப்படலாம் அவனை அனுப்ப முயன்றான்.

சக்தி ஜில்லாகேடியாக இருப்பான் போல..

இரு பொண்ணுங்களையும் அண்ணாவோட பார்த்திருக்கேன். யாருடா இவங்க அக்கா. பார்க்கவே முடியலை. பொத்தி பொத்தி வச்சிருக்கார் அண்ணா.  குழந்தை இருக்குன்னு சொல்றாங்க. ஒன்றுமே புரியலடா. போட்டு வாங்க எண்ணினான். செழியனும் லேஸ் பட்டவன் இல்லையே!

அவ என்னோட ஜூனியர் தான். அதை விடு. இப்ப அவங்க பாதுகாப்பு தான் முக்கியம்..

ம்ம்! அவன் நகர, செழியனை தனியே விடாமல் அவன் ஆட்களை நிறுத்தி சென்றான் சக்தி.

“அய்யோ! வைசு இருக்கான்னு தெரியாம இந்த ரூபினி பைத்தியம் வேற கண்ணாபின்னான்னு பேசிட்டா. வைசுவை எப்படி சம்மதிக்க வைக்கிறது?” அவன் சிந்தனையுடன் அவளிடம் வந்தான்.

“சீனியர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவன் ஏதோ எங்க குடும்பத்து நபர் தான்னு அம்மா சொன்னாங்க. ஆனால் அவங்க சொன்னது சரியா தெரியல.. உங்க வீட்ல பசங்களாக இருந்தாலும் எங்களிடம் தவறான பார்வையை கூட செலுத்தவில்லை” வாயசைத்து கண்ணீருடன் கூறினாள்.

அண்ணா நிழலில் இருந்தால் யாருக்கும் பாதுகாப்பு தான்..

வந்து..அவள் தயங்கி அவனை பார்த்து, “அந்த பொண்ணு தீரன் சாருக்கு இரண்டு தாரம்ன்னு சொன்னா. அது உண்மையா?”

ம்ம்! அண்ணா பிறந்த போதே பார்த்துட்டாங்க. அண்ணாவுக்கு மதுரவீரனின் ஜாதகம் அப்படியே பொருந்தி இருக்கு. இதுக்கு முன் எங்க தாத்தா தான் மதுரவீரனா ஊருக்கு பாதுகாப்பா இருந்ததா சொன்னாங்க. பாட்டி இரண்டாம் தாரம். முதல் தாரம் குழந்தையில்லாமலே இறந்துட்டாங்க.

அண்ணாவுக்கு மதுரவீரனோட எல்லாம் ஒத்துப் போகும் சிலதை தவிர…

காதல்..

சிறுவயதில் காதலித்த பொண்ணுக்காக எந்த பொண்ணிடமானாலும் ஓர் அடி விலகி தான் இருந்தார்.

மதுரவீரன் தாழ்த்தப்பட்ட குலத்தினர்ன்னு சொல்றாங்க. அருந்ததியர் குலம்ன்னு சொல்றாங்க. நாங்க என்னன்னு சரியா தெரியல. ஆனால் அண்ணா எங்க குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு தான். அவர் குணமும் அண்ணாவின் செயல்களும் அப்படியே மதுரவீரனின் செயலை போல இருக்குன்னு  சொல்வாங்க. அதனால தான் ஊர்பெரியவங்க எல்லாரும் அண்ணாவை மதுரவீரனுக்கு இணையா பாக்குறாங்க.

எங்க அண்ணா எங்களை பாதுகாக்க முதலில் ஆரம்பித்து யாருக்கு எதுவேணாலும் வந்து நின்னாங்க. இரவு எல்லார் வீட்டுக்கதவும் மூடிய பின் தான் வீட்டுக்கே வருவாங்க. அதுவே அவருக்கு தனிமரியாதையை தேடித் தந்தது. அவர் அவருக்காக ஏதும் செய்ததில்லை. ஆனால் நாங்க அவருக்காக ஒன்று மட்டும் செய்யணும். அதற்கான நேரம் வந்துருச்சு. அதை நிறைவேற்ற அந்த மதுரவீரன் தான் எங்களுக்கு துணை நிக்கணும்.

“என்ன செய்யப் போறீங்க?” கையசைத்து அவள் கேட்க, செழியன் புன்னகையுடன் “இப்ப என்னால சொல்ல முடியாது. அப்புறம் பார்க்கலாம்” என்றான்.

“நான் ஷரா, சுபாவை பார்த்துட்டு வாரேன்” வைஷ்ணவி எழ, வைசு..

உங்க யார் பாதுகாப்பும் இல்லாமல் நாங்க இல்லை.

புரியுது. அதுக்காக பின்னாடியே வந்தா நல்லா இருக்காது. அதான் தீரன் சார் எங்களுக்கு பாதுகாப்பா ஆள் வச்சிருக்காங்கல்ல? உதட்டசைவில் சொல்லி விட்டு, “பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுறீங்கல்ல சீனியர்” சொல்லி நகர்ந்தாள்.

எங்க போற? உனக்கு தீரன் அண்ணாவை தெரியும்ன்னா உனக்கு மதுரவீரன் கதையும் தெரியணும். இப்ப மதுரவீரனின் கதையை சொல்லப் போறாங்க. கேட்கலையா? மகேஷ் பாண்டியன் சுப்ரியாவிடம் கேட்டான்.

கதையா?

ஆமா, மதுரவீரன் மனிதனாக பிறந்து சூழ்ச்சியால் இறந்து கடவுளானவர். அவர் வீரத்துக்கு முன் யாரும் நிற்க முடியாது. அது போல தான் தீரன் அண்ணாவும்..

நீ யாரு? அவரை பற்றி இப்படி புகழாரம் பாடுற?

“ஹ..இந்த ஊரிலிருக்கும் குடும்பங்கள் அழிய காரணமான சுவுந்தரபாண்டியன் குடும்பத்து வாரிசு” கலையரசன் அவர்கள் முன் வந்து, “உன்னை வரக் கூடாதுன்னு சொல்லியும் வந்திருக்க?” மகியின் சட்டையை பிடித்தான்.

சுப்ரியா அதிர்ச்சியுடன், “எங்க குடும்பம் அழிய காரணமாக இருந்தவரின் குடும்பமா இவன்” எண்ணினாள்.

கலையரசனும் அவன் நண்பர்களும் சுப்ரியாவிடம், “நீ இவனோட பேசக் கூடாது”.

சுப்ரியா மகேஷ் பாண்டியனை ஆழ்ந்து பார்த்தாள். அவன் கண்ணில் எந்த விரோதமும் தெரியவில்லை.

“கொலைகாரன் மகன் கொலைகாரனாக மாட்டான். கையை எடு” சுப்ரியா கலையரசனின் கையை தட்டி விட்டாள்.

“ஏய்..” அவன் சுப்ரியாவை அடிக்க கையை ஓங்கி அவள் முன் வந்தான். அவளின் அழகான கண்சிமிட்டலில் கை அந்தரத்திலே நின்றது கலையரசனுக்கு.

“அடிடா கலை” அவன் நண்பர்கள் ஊக்க, சுப்ரியாவை அவன் கண்கள் ரசிக்கத் தொடங்கியது. அவன் பார்வை பிடிக்காமல் அவள் மகியின் கையை பிடித்து வேறிடத்திற்கு அழைத்து சென்றாள்.

“மச்சீ, என்னடா விட்டுட்ட?” கலையரசன் நண்பன் ஒருவன் கேட்க, “அவள அடிக்க முடியல. அவ என்னை தொட்டது போல ஏறுதுடா” அவன் கிலுகிலுப்புடன் சொல்ல, “ஏய்..ஏய்..கலை அப்புறம்..” நண்பர்களை அவனை கலாய்த்தனர்.

“லவ்வாடா?” ஒருவன் கேட்க, “அதெல்லாம் நம்ம கலைக்கு வராதுடா. பிடிச்சா முடிக்கிறது தானடா நம்ம வழக்கம்” மற்றவன் கூறினான்.

“ஏலேய், அந்த பொண்ணு தீரன் அண்ணா வீட்ல ஒரு வாரம் தங்கி இருந்த பொண்ணு. நம்ம மாறனுக்கும் தெரிந்த பொண்ணு. பார்த்துடா” அவனை வைத்து செய்ய வேண்டிய எல்லாம் கெட்டு விடாமல்..

நகத்தை கடித்து துப்பிய கலையரசன், அவனை நம் வழிக்கு மாற்றி இவளை நம்மிடம் வர வைக்கணும்.

கலை.. தீரன் அண்ணாவுக்கு தெரிந்தால்..

என்னடா..தீரன்..தீரன்னு…இவ அக்காவும் நல்லா தான இருக்கா. அந்த தீரனுக்கெல்லாம் விசயம் செல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டி கவர் செய்திடலாம்…

மச்சி, அப்ப வித்யா..

“பள்ளி தொடங்கட்டும் பார்க்கலாம்” என்று அனைவரும் நகர்ந்தனர்.

மகியும் சுப்ரியாவும் செல்ல, ராதிகாவும் அக்சராவும் வந்தனர். அவர்கள் பின் மற்றவர்களும் வந்தனர்.

“அக்கா, என்னாச்சு?”

ஒன்றுமில்லை. யார் இவன்? வந்ததும் ப்ரெண்டு பிடிச்சிட்டியா? வைசு அக்காவிடம் ஏதும் சொல்லாத. ஏற்கனவே நம்ம மேல கோபத்துல்ல இருக்கா.

“சரி வா, இப்ப மதுரவீரன் கதை சொல்வாங்களாம்” என்று மகியை அவள் அறிமுகப்படுத்தினாள்.

ஹேய் வந்தா வந்த வேலைய மட்டும் பாரு. இவனோட பேசாத. ஏதாவது பிரச்சனைன்னா அண்ணா எங்க மேல கோபப்படுவாங்க.. சக்தி மகியை திட்டினான்.

சுப்ரியாவிடம் கையசைத்து அவன் நகர்ந்தான். அவள் சக்தியை முறைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!