Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 14

அத்தியாயம் 14

ஆரிக்குக் காது கேட்கவில்லை, அவளுக்கு அப்பா, அம்மாயென எவரும் இல்லை. தனிமையில் தான் இருக்கிறாள் என்ற செய்தி அனைத்தும் பின்னுக்குச் சென்று தற்போது அந்த கல்யாணமான காட்டேறியுடன் காரில் சென்றது தான் முன்னால் வந்து நின்றது கலைக்கு.



Advertisement

ஏனோ உடலெல்லாம் பற்றி எரிந்தது. அந்த எரிச்சலே பெரும் எரிச்சலாக இருக்க இந்த எலி வேறு குறுக்கு மறுக்க ஓடிக் கொண்டிருந்தது… ஜீவா கேண்டினில் பேசியதற்கே மண்டையை பிளக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க பார்க்கிங் வரைக்கும் வந்து தான் கூறியது சரியென்னும் அளவிற்குப் பேச வாயை உடைக்கும் கோபம் கலைக்கு. ‘திரும்பி வாயிலேயே கொடு..’ என மனம் கூறினாலும் மதியோ மண்ட மூக்கியின் ருத்திர தாண்டவத்தை கண்முன்னே நிறுத்தியது.

சும்மாவே வார்த்தை வண்ணம் வண்ணமா தான் வரும். இதெல்லாம் தெரிஞ்சா கண்ணு மண்ணு தெரியாம பேசுவா…’ என நினைத்தவனின் இதழ்கள் தன்னாலேயே விரிந்தது… கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே முன்னால் நடந்தவனின் புன்னகை வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த ஆரியின் காரை பார்த்ததும் நின்றது. பழைய எரிச்சல் மீண்டும் தலை தூக்க

Advertisement

‘இவளுக்குன்னு ஒரு வெஹிக்ல், ட்ரைவருன்னு இருந்தும் அந்த கழுதை கூடப் போயிருக்கா. ஏன் தனித்தனியா போனா தான் என்னவாம்…’ என நினைத்தவனுக்கு வயிறும் வாயும் சேர்ந்து எரிந்தது… ‘சமோசா சரியில்லையோ…’என்று கூட மதி கிண்டல் செய்து பார்த்து விட்டது. ஏனோ மனதின் எரிச்சல் அணையாமல் இருக்க வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் தலைக்கவசத்தை மாட்டியபடி அமர்ந்திருந்தவனின் முன்னால் ஜீவா வந்து நின்றான்.

Advertisement

“என்ன டூட் நான் கேட்டது உண்மை தான் போலவே. கொஞ்ச முன்னாடி சட்டையைப் பிடிக்க வந்தீங்க… இப்ப என்னடான்னா நான் கேட்ட எதுக்கும் பதில் சொல்லாமல் அமைதியா இருக்கீங்க…” என்றதும் புருவம் சுருக்கி என்னவென பார்த்தான்.

Advertisement

தன் நினைவில் மூழ்கி இருந்தவன் ஜீவா பேசியதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. எப்படியும் நல்லவிதமாகப் பேசியிருக்க மாட்டான் என்று கலைக்குத் தெரியும் இருந்தும் பதில் பேசாது நின்றான்.

“நீங்க இப்படி அமைதியா இருக்கறத பார்த்தா நான் சொன்னது போல காதுமா உங்களையும் விலைக்கு வாங்கிட்டா போலவே… எத்தினைக்கு போனீங்க? எத்தனை தடவை போனீங்க? நான் ட்ரை பண்ணி பார்த்துட்டேன் மசியவே இல்லை…’ என்றவன் இதற்கு முன்னும் இதேதான் கேட்டிருப்பான் என்பது புரிந்தது. அந்த கணம் ஜீவாவும் எதிர்பாராத வகையில் வாயிலேயே தன் மோதிர விரலால் குத்தியிருந்தான். வெளியிலிருந்து பார்க்கும் எவருக்கும் கலை அடித்தான் என்பது போலெல்லாம் தெரியாது சாதாரணமாக நின்று பேசிக் கொண்டிருப்பது போல் தான் தெரியும்.

கலையின் பாசையில் சொல்லப்போனால் இது சாதாரண அடி தான். ஆனால் அடி வாங்கியவனுக்கு அல்லவா அதன் வலி தெரியும் சாதாரணமாக அடித்ததிற்கே உதடு கிழிந்து இரத்தம் வந்தது…

“எங்க மறுபடியும் ஒருதடவை சொல்லுங்க…” ரகமாய் இழுத்துக் கேட்க முறைத்தான் ஜீவா.

“ஆபிஷின்னு பார்க்கிறேன். இல்லைன்னா தொலை உரிச்சு தொங்கப் போட்டு இருப்பேன் ராஸ்கல். எப்படியும் வெளியே மாட்டுவ தானே அப்ப இருக்குடி உனக்கு…” என்றதும் வாயில் வழிந்த குருதியைப் புறங்கையால் துடித்தபடி “இதுக்கு நீ அனுபவிப்ப…” என்றான் விசமமாக. ஓங்கி தலையிலேயே ஒன்று போட்டு “போடா…” எனக் கைகாட்டக் கலையை முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறி இருந்தான் ஜீவா.

ஜீவாவை அடித்ததாலோ என்னவோ உள்ளத்தின் எரிச்சல் சற்றே மட்டுப்பட்டிருக்க தலைக்கவசத்தைக் கழட்டி பைக்கில் வைத்தவன் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

என்னதான் கவனம் முழுவதும் வேலையில் இருந்தாலும் மனம் என்னவோ அவளைச் சுற்றியே வளம் வந்தது… கணினியையும், கைக்கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தபடியே நெட்டித் தள்ளினான்.

இதோ கிட்டத்தட்ட இரவே ஆகியிருந்தது இன்னும் அவள் வீட்டிற்குச் சென்றாளா? செல்லவில்லையா? என்ற எந்த கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை அலைபேசியைப் பார்த்தான். மீண்டும் அதனை பாக்கெட்டில் போட்டு அங்குமிங்கும் நடந்தான். ‘இப்படி உனக்குள் அடித்துக் கொள்வதற்கு நீ அவளுக்குக் கால் பண்ணியே பேசிடலாம்…’ என்றது ஓர் மனம் அதுவே சரியென அவளின் எண்ணிற்கு அழைக்கப் போக… வேண்டாமென நினைத்தவன்

புலனத்தில் குறுஞ்செய்தியை அனுப்பினான் “ஹாய்…” என்று.

உடனே எல்லாம் பதில் வரவில்லை கிட்டதட்ட இருபது நிமிடங்கள் கழித்தே அவனின் குறுஞ்செய்தியைப் பார்த்தாள். அந்த இருபது நிமிடங்களும் வயிற்றிலிருந்த எரிச்சல் உணர்வு நெஞ்சிற்குத் தாவியிருந்தது… அந்த எரிச்சல் முழுவதும் அவன் வார்த்தைகளில் வடித்து “எங்க இருக்கீங்க நீங்க…” எனக் குரல் வழி செய்தியாக அனுப்பியிருந்தான். குரல் வழி செய்தியைப் பார்த்துவிட்டாள் என்பதைப் போல் நில நிற கோடுகள் காட்டியது.. என்ன அவளிடம் பதில் தான் வரவில்லை

“பதில் சொல்லுங்க எங்க இருக்கீங்க.. இன்னும் அந்த கல்யாணமான காட்டேறி கூடத் தான் இருக்கீங்களா?…” அடுத்த குரல் வழி செய்தி. அதற்கும் மங்கையிடம் பதில் இல்லை இவனின் எரிச்சல்

கோப பந்தாய் உருமாய் அங்கும் இங்கும் அலைமோதியது.

“ஆரியா உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்… பதில் சொல்லுங்க…” என்றதும் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் அவளின் நிலை கண்முன்னே பல்லைக் காட்டி சிரித்தது.

நெற்றியில் அறைந்து கொண்டவன் “அவன் கேட்ட அனைத்து கேள்விகளையும் தட்டச்சு செய்து கேட்டான்…” உடனே

“ஆபீஸ்ல ஏதாவது பிராப்ளமா?…” என்ற கேள்வி அவளிடமிருந்து வந்தது…

“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீங்க என்ன பதில் சொல்லிட்டு இருக்கீங்க ஆரியா… இன்னும் அவனோடதா இருக்கீங்களா? நீங்க அந்த அசோக்கை லவ் பண்றீங்களா? அவனுக்கும் உங்களுக்கும் ஆல்ரெடி நிச்சயம் ஆயிருந்துருச்சா? அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க? அப்ப அவனுக்கு உங்களோட என்ன வேலை?…” என்ற கேள்வியைச் சரமாரியாகக் கேட்டான்.

“செட் ஆப் இடியட்… திஸ் இஸ் லிமிட்…” எனக் குரல் வழி செய்தியை அனுப்பியிருந்தவள் அவளின் குரலிலிருந்த உஸ்னம் கலையை நன்றாகவே தாக்கி இருந்தது. இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் தன் பேச்சிலேயே நின்றான்.

“அந்த அசோக் கூடவா இருக்கீங்க…” என மீண்டும் கேட்டான்.

“இங்க பாருங்க மிஸ்டர் ஏகலைவன் ஆபிஸ் வேலையைப் பத்தி பேசவே ஆறு மணிக்கு மேல உங்களுக்கு ரைட்ஸ் இல்லை…என் பெர்சனல் லைஃப்பை பத்தி பேச உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா?…” குரல் வழி செய்தியில் அனுப்பி இருந்தாள். அந்த குரலிலேயே அவளின் கோபம் அதன் எல்லையைக் கடந்திருந்தது புரிந்தது அவனுக்கு.

“சாரி…நான் உங்களை அசிங்கப் படுத்த வேணுன்னு மோட்டிவ்ல பேசலை…” என டைப் செய்தவன் சாரி என்ற வார்த்தையை மட்டும் அனுப்பி இருந்தான்.

அவன் எதற்காக இத்தனை எரிச்சல் கொள்கிறான் என்று அவனுக்கே புரியாத நிலை… ஜீவாவிடம் கோபப்பட்டது சாதாரணம் தான் அந்த இடத்தில் யாராக இருந்தாலும் அடித்து இருப்பான் தான். ஆனால் அந்த காட்டேறியுடன் அவள் சென்றது இவனுக்கு ஏன் கோபம் வர வேண்டும் அதுவும் இத்தனை எரிச்சல்.

நிச்சியமாக அலுவலகத்தில் அவள் நடந்து கொள்ளும் முறையும் பேச்சும் அவளுடைய உண்மை குணம் இல்லையென்று அறிவான். அதே போல் அலுவலகத்தில் அந்த அசோக்குடனான தவறான பேச்சும் உண்மை இல்லையென்றும் கலைக்குத் தெரியும் அதை அவன் மனம் என்றும் ஏற்றுக் கொள்ளாது.

இருந்தும் அவலுகத்தில் அவள் பேச்சு பொருளாகுவது போல் ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆற்றாமை.

அதனால் எழுந்த கோபத்திலேயே அவளிடம் அப்படிப் பேசி விட்டான். உண்மையாகவே கலைக்குத் தெரியவில்லை… பார்த்து வெறும் மூன்று மாதங்களேயான இவளிடம் ஏன் இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறோமென்று.

இதுநாள் வரை ஆரியை பார்த்து ஜெல்லியது வேறு கதை ஆனால் இன்று உரிமையாக அவளிடம் பேசியது இவனுக்கே ஒருபோகலாகி விடப் பட்டெனச் சாரி என்று குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு தொலைப்பேசியைப் படுக்கையில் எறிந்து விட்டான்.

 முன்பிருந்த எரிச்சல் முழுவதுமாக வடியவில்லை என்றாலும் முன்பைவிட தற்போது பரவாயில்லை என்பதைப் போல் இருந்தது. தலையை அழுத்திப் பிடித்துப் படுக்கையில் அமர்ந்து கொண்டவன் மனம் அமைதியை வேண்டித் தவிக்க அலைப்பேசியை பாக்கெட்டில் எடுத்து போட்டவன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியேறிவிட்டான்.

இரவு நேர குளுமையும், தென்றலும் கலையின் மனதைச் சற்றே வருடி விட்டது. மனதின் எரிச்சல் மட்டுப்பட்டதும் பசி எடுக்க வழக்கமாகச் செல்லும் தோசைக் கடைக்குச் சென்றான். தினமும் செல்லவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையாவது தோசைக் கடைக்குச் சென்றுவிடுவான் இன்றும் அந்த பக்கம் தான் சென்றான்.

எப்போதும் அங்குச் சென்றால் அதிரடி தோசை, டிக்டாக் தோசை ஆர்டர் செய்வான் ஒன்று இதெல்லாம் சாப்பிட மனமே வரவில்லை. நார்மல் பொடி தோசையும் பூண்டு சட்னியும், புதினாசட்னியும் வாங்கிக் கொண்டான்.

தோசையைப் பிய்த்து வாயில் வைத்தபடி நின்றவனுக்கு மங்கையவளின் கோப பேச்சு தான் கண் முன்னே வந்தது கூடவே அலுவலகத்தில் ஜீவா பேசிய பேச்சும் நினைவுக்கு வந்தது. ‘அவனால் தான் இன்று இந்த மண்ட மூக்கியிடம் அதீத உரிமை எடுத்துக் கொண்டோம்…’என நினைத்தவனுக்குப் பற்களை நறுநறுவென கடிக்க மட்டுமே முடிந்தது. ‘ஒரு நாள் சிக்காமவையா போயிடுவான்…’ என நினைத்தபடியே கை கழுவியவன் தோசைக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்ப ஆரியின் காரை கண்டான். அவள் காரில் இல்லை வேலு மட்டுமே வாகனத்தை ஓட்டி சென்றார். “ஓ மேடம் சைட் பாக்காத நேரத்தில இந்தண்ணா சைட்டை வீசிட் பண்ணிட்டு வருவார் போல…” என நினைத்தபடியே பைக்கை எடுத்தவன் நிச்சியம் நாளை அவளின் எதிர் வினையைப் பற்றி துளியும் எண்ணிருக்க மாட்டான்.

அடுத்த நாள் காலையிலேயே எவ்வித அறிவிப்பும் இன்றி ஆர்க்கிடெக் டீமை மீட்டிங் வரவழைத்து இருந்தாள். அவர்களுடன் கலையும் அமர்ந்திருந்தான்.

“மிஸ்டர் ஏகலைவன்…அவங்க கேட்ட மெட்ரியல்ஸ் தானே வாங்கி கொடுத்திங்க…” என்ற கேள்விக்கு

“ஆமாம் மேடம்…” என்றவன் ஆர்க்கி டீமை தான் பார்த்தான். நேற்று இவர்களா அத்தனை புரளி பேசியது எண்ணும் அளவிற்கு பம்பியபடி அமர்ந்திருந்தனர். அதுவும் அந்த ஜீவா மாஸ்க் போட்டு அமர்ந்திருந்தாலும் அவனின் தொண்டைக் குழி பயத்தில் ஏறியிறங்கிய விதமே கலைக்குச் சிரிப்பைக் கொடுத்தது.

இதழ்கள் கடித்து அதனை அடக்கியபடியே அமர்ந்திருந்தவனின் கண்கள் தன் எதிரில் முகத்தில் எவ்வித கோபத்தையும் காட்டாமல் நின்றிருந்தவளைப் பார்த்தான்.

நேற்று இவன் பேசிய பேச்சிற்கு நிச்சியம் மண்டமூக்கிடமிருந்து பொங்கலும், புளியோதரையும் கிடைக்கும் என நினைத்தபடியே அமர்ந்திருந்தான்.

“வெல்… ஆர்கி டீம் ஹெட் ஜீவா சார் சொல்லுங்க… நேத்து நீங்கக் கேட்ட டைல்ஸ் தான் வாங்கி கொடுத்து இருக்கோம். அதை நீங்க யூஸ் பண்ணாம வேற நியூ மெட்ரியல்ஸ் வாங்கி யூஸ் பண்ணச் சொல்லி இருக்கீங்க… இப்ப முன்னாடி வாங்கின டைல்ஸ் எல்லாம் என்ன பண்றதா இருக்கீங்க ஜீவா சார். அந்த குவாலிட்டி டைல்ஸ் எல்லாத்தையும் உங்க புராஜக்டுக்கு யூஸ் பண்ணிக்கலாம் நினைக்கிறீங்களா?…” என்றதும் விழிகள் இரண்டும் தெறித்து விழும் அளவிற்கு விரிந்தது ஜீவாவுக்கு.

***

உங்களோட அன்புக்கு எத்தனை நன்றி சொல்ல.❤️❤️❤️❤️லவ் யூ டியர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!