Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 22

அத்தியாயம் 22

(பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்)

 

கோபத்தில் என்ன செய்கிறோமென உணராதவனாய் மங்கையின் செம்பருத்தி இதழ்களை தன் இதழ்களுக்குள் அதக்கி கொண்டான்… நிமிடங்கள் பனித்துளியாய் கரைய முத்தம் முக்தியடைந்து மங்கையின் கன்னத்திற்கு இடம் பெயர்ந்தது.



Advertisement

அக்கணம் தன் முத்தத்திற்கு மௌனியாக அமர்ந்திருந்த ஆரியை பார்த்தான்.கண்கள் மட்டுமல்லாமல் செவி, கன்னம் அனைத்தும் சிவந்து, நுனி மூக்கும் அவனின் இதழின் ஈரத்தால் மிளிர்ந்த இதழ்களும் துடித்துக் கொண்டிருந்தது.

Advertisement

அவனின் ஓரப் பார்வையில் ரௌத்திரம் பொங்க அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் திரும்பிக் கொண்டாள்.

Advertisement

அவள் விழிகளில் தெரிந்த அருவருப்பும், கோபமும் இவனை முற்றும் முழுதாக நடப்பிற்கு கொண்டு வந்தது.கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே தன்னை நிலைப்படுத்தி கொண்டவன் திரும்ப, அவளோ காரிலிருந்து இறங்கி சென்றிருந்தாள்.

Advertisement

மங்கையின் பின்னாலையே செல்லென்று கூறிய மனதினை அடக்கியவன் காரை விட்டு இறங்கி நின்றான்.

காலை வெயிலை தன்னுள் சுமந்து கொண்டிருந்த தென்றல் அவனின் கேசதத்தை கலைத்து விளையாடியது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப அசைந்த கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனின் கன்னங்கள் இரண்டும் வின்வினென்று வலித்தது. வலித்த கன்னங்களை வருடிக் கொடுத்தவன் இதழ்கள் என்னவோ புன்னகையில் மலர்ந்து கிடந்தது.

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே

இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்…

எங்கோ தூரத்தில் கேட்கும் பாடல் கூட இவனுக்காக இசைப்பது போலிருந்தது. முதல் முதலாக ஓர் மெல்லிய உணர்வு அவனை ஆட்கொண்டது அவ்வுணர்விற்கு பெயர் தான் என்னவோ… கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே தூரத்தில் செல்லும் நாணலை இமைக்காமல் பாரத்தான்.

அவளின் நடையில் தயக்கமோ தடுமற்றாமோ துளியும் இல்லை… எப்போதும் போல நிமிர்ந்த நடையுடன் தான் சென்றாள். அவளின் நிமிர்ந்த நடையும், நிமிர்வும் அவனை சிலிர்க்க வைக்கும் தற்போதும் அதனை பார்த்து ரசித்தான், நிச்சயமாக ரசிகனாக இல்லை…

****

நேற்றைய நாள் எப்படி சென்றதென்று கலையிடம் கேட்டால் நிச்சியம் அவனிடம் பதில் இருக்காது.

அந்த நாள் முழுவதும் ஒரு வித மாயையில் சிக்கிக் கொண்டிருந்தது அவனது மனம். இன்று அந்த மாயை மட்டுமல்ல அவனது மெல்லிய உணர்வும் அவனைவிட்டு சற்றே விலகி நிற்கும் என்பதை அவன் அறிந்தால்?

“டேய் மச்சி எழு டா… ” சற்றே பதட்டமாக ஒலித்த காசியின் குரலில் தூக்கத்திலிருந்து விழித்தான்.

“என்னடா…”எனக் கேட்டபடி எழுந்தவன் குரலில் அத்தனை எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“என்ன நொன்ன டா… மேடத்தை என்ன பண்ணி வைச்சியோ தெரியல போலீஸ் கம்பிளைன்ட் குடுத்து இருக்காங்களாம். வீடு தேடி போலீஸ் வந்து இருக்கு…” என்றதும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.

“என்ன…” அதிர்ச்சியாய் கேட்டான்.

“ஆமாம் டா…” என பதட்டம் மாறாத குரலில் கூறினான்.

“சரி போ… வரேன்…” என்றவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி நடந்தான்.

குளியலறைக்குள் நுழைந்தவன் பைப்பை திறந்து விட்டபடி ஆரிக்கு அழைத்தான். அழைப்பு சென்றதே தவிர அவள் அழைப்பை ஏற்காது போகவும் புலனத்தில் ஒலிவடிவில் குறுஞ்செய்தியை அனுப்பினான்.

அதற்கும் அவளிடம் பதிலில்லை என்றதும் “ம்ப்ச்…” கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே ஒலிவடிவில் அனுப்பிய செய்தியை மீண்டும் எழுத்து வடிவில் அனுப்பினான்.

“இப்ப நான் என்ன பண்ணேன்னு போலீஸ் வரைக்கும் போயிருக்க நீ…” எனக் கேட்டான். இவன் அனுப்பிய செய்தி பார்த்தும் அவளிடம் பதில் இல்லை…

“பதில் சொல்லு டி…” கோப இமோஜியை அனுப்பினான். சிறிது நேரம் கழித்து அவளிடமிருந்து பதில் வந்தது..

“நேத்து நீ பண்ணதுக்கு உனக்கு நல்லப்பாடத்தை கத்து தர வேண்டாமா?…” என்று ஒலி வடிவில் அனுப்பினாள். மங்கையின் குரலில் இருந்த நக்கலில் பல்லைக் கடித்தவன்

“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்…” என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்கும் இமோஜியை அனுப்பினான்.

அதற்கு இருபது நொடி ஒலிவடிவ குறுஞ்செய்தி இருந்தது பெருமூச்சுடன் அதனை ஒலிக்க விட்டான். “என்ன பண்ணயா? நேத்து நீ பண்ணதுக்கு பேர் என்ன தெரியுமா? அப்யூஸ்,வன்முறை, பலாத்காரம்…” என்ற வார்த்தைகளை கேட்டதும் விழிகளை விரித்தான் “எதே…” என்பதை போல்

“அண்ட் எனக்கு நீ செக்ஸ் டார்ச்சர் குடுத்தன்னு தான் கம்பளைன்ட் பண்ணிருக்கேன்…” என்றாள். அவளின் பேச்சில் மெல்ல மெல்ல கோபம் கூடியது இவனுக்கு…

“ஓ நான் உங்களுக்கு முத்தம் குடுத்தது செக்ஸ் டார்ச்சர் மாதிரி தோணுச்சா?…” என்று தக்காளி சாஸ் உற்றிய இமோஜியை பல அனுப்பினான்.

“பின்ன இல்லையா?…” எழுத்து வடிவில் குறுஞ்செய்தி வந்திருந்தது. இதற்கு மேல் பேசினால் இன்னும் இன்னுமின்னும் கோபம் வருமோ என நினைத்தவன் நீண்ட நெடிய பெருமூச்சுடன்

“இப்ப என்னன்றீங்க…” எனக் கேட்டான்.

“என் அனுமதி இல்லாம என்னை கிஸ் பண்ணதுக்கு உனக்கு தண்டனை கிடைக்க வேணும்?…” என்றவளின்

பேச்சில் உண்டான எரிச்சலை கட்டுப்படுத்த கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன்

“இதுக்கெல்லாம் நான் பயப்படுவேன்னு நினைச்சீங்களா?…” எனக் கேட்டான்.

“ஏன் பயம் இல்லையா? வேணும்னா நாலு தட்டு தட்ட சொல்லவா…”

“ஐயோ அப்படியெல்லாம் சொல்லிடாதீங்க மேடம்.. எனக்கு பயந்து பயந்து வருது…” எனக் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அலைபேசியை பாக்கெட்டில் போட்டவன் வெளியில் சென்றான்.

ஹாலில் அமர்ந்திருந்த காக்கி சட்டையை பார்த்தவன் கண்கள் சுருங்கி விரிந்தது. ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவன் காக்கி சட்டைக்கு முன்னால் சென்று நின்றான்.

அக்கணம் கலையின் இறுகிய முகம் இயல்பு நிலைக்கு மாற, அவன் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது… “ஆதி ண்ணா, நீயா? எப்படி டா இருக்க…’ என சோபாவில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.

ஆரம்பத்திலயே கலையின் இறுகிய முகத்தை கண்டுகொண்டவனோ “என்னடா போலீஸ்,கம்பிளைன்ட்ன்னு சொன்னது பயந்துட்ட போல?…” எனக் கேட்டான் தியாகுவின் அண்ணன் மகனான ஆதிகேசவன்.

ஆதியின் கேள்வியில் அவனை செல்லமாக முறைத்தவன் “பயமா? எனக்கா? நெவர்…” விளம்பர மாடலைப் போல் கூறினான்.

“நம்பிட்டேன்…”என்பதை போல் ஆதி வாய்விட்டு சிரித்தான். இருவரின் இயல்பான பேச்சை கேட்டதும் தான் காசிக்கு மூச்சே வந்தது.

“எங்க டா இந்த பக்கம்…அதுவும் இப்படியொரு இன்றோ, கொஞ்சம் கூட நீ தான் வந்துருப்பன்னு யோசிக்கல…” கொஞ்ச நேரத்தில் இருவரும் பதற வைத்து விட்டார்களே என நினைத்து நெற்றியை தட்டி சிரித்தான் கலை.

” நீ சிரிக்கறத பார்த்தா காசிநாதன் வந்து சொன்னதும் உன் ஆராவுக்கே கால் பண்ணி கேட்டுட்டு வர போலவே…” குறும்பு சிரிப்போடு புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான் ஆதி. முதலில் இல்லையென வேகமாக தலையாட்டி பின் ஆமென மெல்ல தலையாட்டினான்.

“அடப்பாவி,..” என்றவன் வாய்மேல் கைவைத்து சிரித்து கொண்டே “கம்பளைன்ட்ன்னு சொன்னா பதறியடிச்சு வெளிய வருவன்னு தான் அப்படி சொன்னேன். ஆனா நீ அவங்ககிட்ட கால் பண்ணியே கேட்டுட்டியா? சும்மாவா விட்டாங்க…” என்றதும் தற்போதைய அவளின் பேச்சு நினைவில் வந்து தொலைத்தது.

“மண்டமூக்கி…” மெல்லிய முனகல் அவனிடமிருந்து.

“என்னடா…” எனக் கேட்ட ஆதியிடம் ஒன்னுமில்லை என தலையாட்டிவன் “உனக்கு ஆராவை எப்படி தெரியும்…” எனக் கேட்டான் மெல்ல.

“நேத்து கோவிலுக்கு ஒரு வேலையா வந்தேன் ஏகவா, கிளம்பிற சமயம் தான் உன்னை பார்த்தேன்.ஆரான்னு கூப்பிட்டுட்டே அந்த பொண்ணு பின்னாடியே போன. உங்ககிட்ட வரதுக்குள்ள இரண்டு பேரும் கிளம்பிட்டீங்க

அண்ட் டூடேய் ஒரு கேஸ் விஷயமா வந்தேன். நீயும் இப்ப இங்க தான் ஸ்டே பண்ணிருக்கேன்னு சித்தப்பா சொன்னாத நியாபகம். சோ அவர்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வந்தேன்…” என்றவன் தங்களுக்கு எதிரில் நின்ற காசியை பார்த்தபடி

“நிஜமாகவே இவர் வந்து நீங்க யாருன்னு கேட்கற வரைக்கும் எனக்கு இப்படியொரு பிளேன் தோணவே இல்லை டா…” என்றான் குறும்புக் குரலில். தன் அண்ணனை பொய்யாக முறைத்துப் பார்த்தவன் காசியிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தான்.

“நான் இவரை பார்த்ததே இல்லை டா… என் கல்யாணத்துக்கு கூட உங்க பெரியப்பாவும், பெரியம்மாவும் மட்டும் தானே வந்தாங்க இவரு வரல தானே…” என்றதும் ஆமென தலையாட்டினான் கலை..

“அதான் எனக்கு தெரியல… இப்ப கூட இவர் வேற ஏதாவது சொல்லிருந்தா நம்பி இருக்க மாட்டேன். ஆனா இவரு ஆரியா கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்கன்னு சொல்லும் போது நிஜமாவே பயந்திட்டேன்…” என்றான் காசி.

“கேஸ் ஃபைல் பண்ற அளவுக்கு உன் மேடத்தை அப்படி என்னடா பண்ணேன் நான்…” கடுப்பாக கேட்டான்.

“இல்லை டா, அது நேத்து அசோக் அம்மாவை கை நீட்டி அடிச்சிட்டியா அதுல ஏதாவது கோபம் வந்து உன் மேல கேஸ் குடுத்துட்டாங்க போலன்னு நினைச்சேன்…” என்றான் மெல்லிய குரலில். பல்லைக் கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தவன் கண்களில் அத்தனை கோபம்.. ஆதி மட்டும் இல்லையென்றால் நிச்சியம் காசியின் கன்னம் பழுத்து இருக்கும். முகம் இறுக காசியை அழுத்தமாக பார்த்தான்.

நண்பனின் பார்வையில் என்ன உணர்ந்தானோ காசியும் ஆதியிடம் திரும்பி “நீங்க காஃபி குடுப்பீங்க தானே,..” எனக் கேட்டான்.

“ம்…” என ஆதி தலையாட்ட, தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் காசி.

காசி அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும்

“என் தம்பிக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராதே. அடிக்கிற அளவுக்கு கோபம் வந்திருக்குன்னா  என்னமோ இருக்கு, என்னடா லவ்வா?…” எனக் குறும்பு சிரிப்போடு கேட்டான்.

“ச்சே ச்சே…அப்படியெல்லாம் இல்லை டா அண்ணனே…” என்றவன் குனிந்து கீழ் இதழ்களை அழுத்திக் கடித்து கொண்டான்.

“வாய் தான் அப்படி சொல்லுது போலயே…” எனக் கேட்க குனிந்து இருந்தவன் நிமிர்ந்து  தோள் குலுக்கி சிரித்தான்.  அவனின் சிரிப்பிலும் கண்கள் சொல்லும் செய்தியிலும் ஆதிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“அடேய் விழுந்துட்டியா…” ஆர்ப்பாட்டமாக கேட்டவன் தம்பியை தோளோடு அணைத்து பிடித்தான்.

ம்ம் என்றும் சொல்லவில்லை ஹிஹிம் என்றும் சொல்லவில்லை ஆனால் முகம் முழுக்க விசாகித்து கிடந்தது.

நிமிடங்கள் மெளனமாக நகர அந்த மெளனமான நேரத்தை கலையே களைத்தான்  “அதெல்லாம் விடு,  ரஞ்சி அண்ணி பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?…” எனக் கேட்டான்.

ரஞ்சி என்றதும் ஆடவன் முகம் பொலிவிழந்து போக “அது விஷயமா தான் டா கோவிலுக்கு வந்தேன். நேத்து அவளை மருதமலை கோவில்ல பார்த்ததா சொன்னாங்க அதான் வந்தேன். பட் அவ இல்லை…” என்றான் சோகம் இழையோடும் குரலில். அண்ணனின் தோளில் கைபோட்டு கொண்டவன்

“சரியாகிடும் டா,..” என ஆறுதல் சொல்ல ம்ம் என்றதோடு அமைதியாகிவிட்டான்.

” உனக்கு சொல்லனும்னு இல்லை டா இருந்தாலும் சொல்றேன் உன் சித்தப்பா,சித்தி மாதிரி மட்டும் இருந்துடாதீங்க.. முடிஞ்சளவுக்கு அவங்க கிட்ட பேசி புரிய வை…” என்றான்.

“ம்ம், அவ எங்க இருக்கான்னு கூட தெரியல டா, உண்மையா நிலா இருக்கிற வரைக்கும் நாங்க இரண்டு பேரும் சேருவோம்னு நம்பிக்கை இருந்துச்சு, எப்ப குட்டி  எங்களை விட்டு போனாளோ அப்பவே அந்த நம்பிக்கை போயிடுச்சு. இப்ப என் நிலா பாப்பாவும் என்கிட்ட இல்லை என் ரஞ்சியும் என்கிட்ட இல்லை…” என்றான் குரல் உடைய, அவனை தோளோடு அணைத்து

“நல்லதே நடக்கும் டா அண்ணனே…  நீ ஸ்ட்ராங்கா இரு…” என ஆறுதல் கூறினான் ஏகலைவன்.

கண்களை இறுக மூடித் திறந்து சரியென்று தலையாட்டினான் ஆதி.  ஆதியின் அமைதியில் அவனின் மனநிலை புரிய, அடுத்த பேச்சிற்கு தாவினான் ஏகலைவன்.

“இப்ப நிலாவை பத்தி சொல்லும் போது தான் எனக்குமே ஞாபகம் வருது டா… நம்ம வீட்டு பக்கத்து வீட்டு பையனும் இப்படி தான் டா பாதி வழியில இறங்கிட்டான். நான் தான் அவனை ஸ்கூல்ல கொண்டு போயி விட்டேன்… அவனுங்களுக்கு இவன் இறங்கி போனது தெரியல டா ஆதி, எவ்வளவு கேர்லஸ் பாரேன். வந்துச்சு பாரு கோபம் யாரு என்னனு எல்லாம் பார்க்கவே இல்லை எல்லாரையும் ஏறு ஏறுண்ணு ஏறி விட்டுட்டேன்.

அப்பறம் இந்த பொண்ணுகிட்டயும் கொஞ்சம் சொல்லிட்டு வந்தேன். இப்படி வர வழியில எல்லாம் இறங்க கூடாதுன்னு சொல்லுங்கன்னு, ஏன்னா ஸ்கூல்ல பார்த்துகோங்கன்னு சொல்றதை விட பேரண்ட்ஸ் கிட்ட சொல்றது சரின்னு பட்டுச்சு…” என்றான் உள் கன்னத்தை கடித்தபடி…

“உண்மை டா ஏகவா, ஸ்கூல் மேனேஜ்மெண்ட்டை  சொல்றதை விட, அந்த பேரன்ஸ்  கிட்ட சொல்லலாம்.ஸ்கூலுக்கு போகும் போதும் சரி, வரும் போது சரி, வர வழியில யாரை பார்த்தாலும் ஸ்கூல் பஸ்சை விட்டு இறங்க கூடாதுன்னு பிள்ளைங்க கிட்ட கடுமையாகவே சொல்லி வைக்கணும் டா …” என்றான் ஆதியும். அண்ணனின் பேச்சிற்கு ஆமோதிப்பது போல் தலையாட்டினான் ஏகலைவன்.

அந்த சமயம் காப்பியுடன் வந்த காசியும் இவர்களின் பேச்சில்  இணைந்து கொண்டான்.

*****

(யார் இந்த ஆதி? .. பயப்பட வேண்டாம்…இவன் என்னோட அடுத்த கதைக்கான ஹீரோ தான் 😁😁 எப்பவும் என்னோட ஒரு கதை முடியும் தருவாயில்

இன்னொரு கதையோட ஹீரோவை இன்றோ குடுத்துருவேன்… (என் பழைய கதைகள் படிச்ச ஆட்களுக்கு அது தெரியும்) சோ இப்பவும் அவனை பத்தி ஒரு சின்ன அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!