Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 25

“அது செத்துட்டேங்க… செத்திட்டேங்க இல்லை…” அத்தனை மிருதுவாக ஒலித்த குரலில் முதலில் புரியாது விழித்தார் சௌந்தர்யா.

 

மனைவியின் புரியாத பார்வையில் குறும்பு புன்னகையோடு”ஸ்பெல்லிங் மிஸ்டேக் செளந்த், அதான் கரெக்சன் பண்ணேன்…” என்றார் புன்னகை மாறாது.

 



Advertisement

கணவனை பொய்யாக முறைத்தவர் பதில் பேசாது அவரின் உள்ளங்கையில் தலைசாய்க்க, டிரிப்ஸ் ஏறிய கைகளால் மனைவியின் கேசத்தை அழுத்தி கோதிக் கொடுத்தவர்

 

“செளந்து…” மென்மையாக அழைத்தார்.

Advertisement

 

Advertisement

“என்னவாம்…”

 

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். உனக்கு பிரச்சனை இல்லன்னா உடனே அதுக்கான ஏற்பாட்டை பண்ணிடுவேன்…” என்றார். அவரின் குரலிலிருந்த தீவிரத்தில் வெடுக்கென எழுந்தவர்

Advertisement

 

“என்ன என்ன சொன்னீங்க…” கோபத்தில் சிவந்த கண்களை மேலும் விரித்து காட்டியப்படிக் கேட்டார்.

 

“இன்னொரு கல்யாணம்…” அவர் அதை முடிக்கக்கூட இல்லை ருத்ரக்காளியாய் நின்றார் சௌந்தர்யா.

 

“கட்டையில போற வயசுல உனக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடு. ஏன் என் ஒருத்தி கூட கல்யாணம் ஆனது பார்த்தாத உனக்கு. இன்னொருத்தி வேற வேணுமா. உண்மையை சொல்லுய்யா என்னை விட்டுட்டு போயி சைடுல ஏதாவது செட் பண்ணிட்டியா? எனக்கு ஆரம்பித்துல இருந்தே சந்தேகம் தான். இருந்தும் உன்னை நம்பினேன் பாரு என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும். இத்தனை வருஷமா டைவர்ஸ் பத்தியெல்லாம் யோசிச்சது இல்லை, நாளைக்கே டைவார்ஸ்க்கு ரெடி பண்றேன்…” எனக் கத்தி கொண்டிருந்தவரின் பேச்சு தியாகுவின் செயலால் அப்படியே நின்றது.

 

சௌந்தர்யாவின் கத்தல் அறைக்கு வெளியிலும் கேட்க வராண்டாவில் அமர்ந்திருந்த இளையவர்கள் மூவரும் அவசரமாக அறைக்குள் நுழைந்தனர்.

 

முதலில் கதவை திறந்து கொண்டு வந்தது என்னவோ காசி தான். உள்ளே நுழைந்ததும் கண்ட காட்சியில் “ஆத்தி…” என்று பதட்டமாக, அவசரமாக, மெல்லிய படப்படப்போடு பின்னால் திரும்ப,கலையின் மீது இடித்து நின்றான்.

 

“என்னாச்சுங்க மாமா…” என மெல்லிய குரலில் கேட்டுக் கதவை நன்றாக திறக்க முயன்றவாறே அறைக்குள் எட்டிப் பார்க்க, அவசரமாக அவன் கண்ணை ஒற்றைக் கையால் மூடியப்படி

 

“அப்பறம் வரலாம் வா டா…” என்று கலையை தள்ளிக் கொண்டு போனான் காசி.

 

“ம்ம், விடுயா…” பின்னங்கையால் தன் கன்னத்தையும், இதழையும் அழுத்தி துடைத்து கொண்டே அவரிடமிருந்து திமிறி வெளியில் வந்தவர்

 

“பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச கதையால்ல இருக்கு. இனிமே பக்கம் வா இருக்கு உனக்கு…” என மிரட்டி விட்டு அங்கிருந்து நகர போனவரிடம்

 

“சவுண்ட், இன்னும் கன்னத்துல பல் தடம் போகல…” கொஞ்சம் சத்தமாகவே கூறினார். சென்ற வேகத்தில் திரும்பி கணவனின் வாயில் இரண்டு அடி போட்டு “மருமகன் வெளியில தான் நிக்கிறார்…” என்று கண்களை உருட்டினார்.

 

“அவரு எப்பவோ பார்த்திட்டு போயிட்டாரு…” என்றவர் மனைவியின் இதழைக் காட்டி “இங்க அழுத்தமாக முத்தம் குடுத்துட்டு அப்படியே கன்னத்துல கிஸ் பண்ணேன்ல அப்பவே பார்த்திட்டு போயிட்டாரு…” என்றதும் கண்களை அகல விரித்து உண்மையா என்பதை போல் கணவரிடம் கேட்டார். ஆமாம் என்பதை போல் தலையாட்டி சிரித்தார் தியாகு.

 

“இனி எப்படி அவர் மூஞ்சில முழிப்பேன்…” சுருட்டி வைத்திருந்த முந்தானையால் பாதி முகத்தை மூடி, அரைக் கண்களால் தன்னை பார்த்தபடி கூறிய மனைவியின் வெட்கத்தை ரசிக்கும் ரசிகனாய் மாறிப்போனார் தியாகு.

 

பிரிவிற்கு பின் வரும் காதலிற்கும், அன்பிற்கும் வயது வித்தியாசம் துளியும் இல்லை தான் போல…

 

அக்கணம் “டாட்…” என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் கலை.

 

உள்ளே நுழைந்தவன் கண்களில் தாய், தந்தையின் புன்னகை தான் முதலில் பட்டது. இருவரையும் ரசித்து பார்த்தபடி வந்தவன் “லோ பிரஸரால மயக்கம் வந்துருக்கு ம்மா, வேற பெருசா எதுவும் இல்லை நீங்க பயப்பட வேண்டாம்…” என்றபடி தியாகுவின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

 

தாயிற்கு தெரிந்த விஷயமே என்றாலும் தான் ஒருமுறை கூறவேண்டுமே என்று கூறினான். அவரின் பதிலுக்காக அவன் காத்திருக்க, அவரோ மகனைப் பார்க்காது முகம் திருப்பினான், அதில் முகம் சுருங்கி போனது இளையவனுக்கு.

 

மகனின் முகச் சுருக்கத்தை பார்த்தபடி “சௌந்தர்யா…” மனைவியை அழைத்தார். என்ன என்பது போல் கணவரைப் பார்த்தவர் மகன் புறம் திரும்பவே இல்லை.

 

“என்ன இது, இன்னுமா உன் கோபம் போகல, மருமக கோச்சிட்டு போனதும் அவ பின்னாடியே நம்ம பையனும் போயிட்டான் அதுல என்ன தப்பிருக்கு. நானா இருந்திருந்தாலும் இதை தான் பண்ணிருப்பேன், பையன் முகத்தைக் கூட பார்க்காம மூஞ்சியை த்திருப்பிட்டு இருக்கிறது நல்லா இல்லை…” என்றதும் சௌந்தர்யா நிதானமாக கணவரை திரும்பி பார்த்தார் என்றால் கலையோ தியாகுவின் மருமகள் என்ற சொல்லில் பட்டென படுக்கையை விட்டு எழுந்து நின்றிருந்தான்.

 

“என்ன தம்பி நின்னுட்ட, மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காரு…”மகனின் கைப்பிடித்து அமர சொல்ல, தந்தையை முறைத்து பார்த்து விட்டு தாயை அவஸ்தையாக பார்த்தான்.

 

கோவிலில் அசோக்கின் தாய் பேசியதை வைத்து ஆரியை தவறாக எண்ணி விடுவார்களோ என பயந்திருந்தவனுக்கு தியாகுவின் பேச்சு ஒரு வித நிம்மதியை கொடுத்தது என்றால் சௌந்தர்யாவின் மெளனமும், முக திருப்பலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. எங்கே அவள் வேண்டாமென்று கூறிவிடுவாரோ என்று பயந்தான்.

 

அவர் ஆரியை ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் சரி இனி அவள் தான் வாழ்க்கையென்று முடிவெடுத்து விட்டான். இருந்தும் மனதின் ஒரு மூலையில் தாய் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருக்க தான் செய்தது.

 

கண்களில் ஒருவித பதட்டத்தோடு இருவரையும் மாறி மாறி பார்த்தான். மகனின் பரிதவிப்பை கண்டும் காணாமல் ” இதுல நம்ம மருமக எங்க வந்தா?…” என சௌந்தர்யா கூறியதும், கலை தாயை சந்தோச அதிர்ச்சியுடன் பார்த்தான்.

 

“ம்மா…” என அழைத்தவன் குரலில் அத்தனை துள்ளல்.

 

மகனின் குரலில் தெரிந்த துள்ளலையும் ஆர்ப்பாட்டத்தையும் பார்த்த சௌந்தர்யாவிற்கு மேலும் கோபத்தை இழுத்து பிடிக்க தெரியவில்லை.மகனை பார்த்து கைநீட்டி வா என்று அழைத்தார்.

 

அதற்கு மேல் தாமதிக்காமல் தாயின் அருகில் சென்று நின்றான். மகனின் உயரத்திற்கு ஏக்கி அவனின் கேசத்தை கோதிக் கொண்டே “இவனுக்கு ரொம்ப கோபம் வருதுங்க, இத்தனை வருசத்துல அன்னைக்கு தான் இவனோட கோபத்தையே பார்த்தேன்.

அந்த பொண்ணை அந்தளவுக்கு பிடிக்குமா தம்பி…”கணவரிடம் ஆரம்பித்து மகனிடம் கேள்வியாக முடித்தார்.

 

தாய் இந்தளவிற்கு மென்மையாக பேசுவாரா என்பது ஒரு புறம் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது கலைக்கு. “ம்மா…” என்றானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

 

“இது அவளுக்கு தெரியுமா? உன்னோட காதலை சொல்லிட்டியா? இல்லையா? சரின்னு சொன்னாளா? இன்னும் அவ பதில் சொல்லலன்னா கூட பரவாயில்லை, அவளுக்காக வெயிட் பண்ணலாம் தப்பில்லை, காத்திருந்து கரம் பிடிக்கிறதும் ஒரு கிக்கு இருக்கு…” என்றார் மென்மையாக…

 

‘க்கும், காத்திருந்து கரம் பிடிக்கிறதா? அவ அமைதியா இருந்ததுக்கே பொறுமையில்லாமல் கட்டிப் பிடிச்சுட்டான்…’ மனம் சரியான நேரத்தில் தலை நீட்டியது. மனதின் கேலியில் மாலையில் தன் அணைப்பிற்குள் அடங்கி நின்ற பெண்ணின் முகம் நினைவு வந்தது தொலைத்தது.

 

கீழ் இதழ்களை கடித்து கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவாறே வேறு புறம் திரும்பி இதழ் பிரியாது சிரித்தான். மகனின் இந்த மெளன வெட்கம் கூட அழகாக தெரிந்தது பெற்றவர்களுக்கு.

 

“ஏங்க, இவனுக்கு வெட்கமெல்லாம் வருதுங்க பாருங்களேன்…” மகனின் முகத்தை ஆசையாக பார்த்தபடி கணவரிடம் கூறினார் சௌந்தர்யா.

 

“ஏங்க ம்ம்மா நீங்க வேற…” என்றான் அதில் அத்தனை வெட்கம் ஒளிந்து இருந்தது. காதலியின் முன்பு ஆண்களின் வெட்கம் எத்தனை அழகோ அதை விட தாய், தந்தையின் முன் வெட்கப்படும் ஆண்களின் வெட்கம் பலமடங்கு அழகானது.

சும்மாவே பெற்றவர்களின் கண்களுக்கு ஏகலைவன் அழகானாய் தெரிவான்.தற்போது சொல்லவா வேண்டும் பேரழகானாய் தெரிந்தான். தாய், தந்தையின் பார்வையில் சிவந்தவனாய் “நான் ப்பாப்பாவையும், மாமவையும் அனுப்பி வைக்கிறேன் மா…” என்றவன் நில்லாது அங்கிருந்து நகர்ந்திருந்தான். முகம் முழுக்க விசாகித்து வெளியில் செல்லும் மகனை புன்னகையோடு பார்த்து நின்றனர் பெற்றவர்கள்.

 

மகன் வெளியில் சென்றதும் கணவரை முறைத்தார் சௌந்தர்யா ‘என்ன வண்டி என் பக்கம் திரும்புது…’ என நினைத்தவர் “என்னமா…” எனக் கேட்டார்.

 

“இன்னும் முப்பது வருசம் போனாலும் நீங்க என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க…” எனக் கோபமாக கேட்டார்.

 

‘இத்தனை நேரம் நல்லா தானே இருந்தா…’ என நினைத்தபடியே “நான் என்னடி பண்ணேன்…” என பாவமாக கேட்டார்.

 

“நான் எதுக்காக கோபப்பட்டுட்டு இருக்கேன்னு கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? இத்தனை வருஷ வாழ்க்கை வேஸ்ட் தான் போல…” உள்ளே சென்ற குரலில் கூறினார்.

 

“ஹேய் என்னடி, நான் என்ன பண்ணேன்…” பாவமாக கேட்டார்.

 

” என்ன பண்ணல, என்ன பண்ணலைன்னு கேட்கிறேன். முதல்ல உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு என்கிட்ட தானே சொல்லிருக்கணும். ஆனா நீ உன் மவன் கிட்ட தான் முதல்ல சொல்லிருக்க, என்னை விட இவன் பெருசா போயிட்டான்ல உங்களுக்கு…” என்றார் சற்றே பொறாமை வழிந்தக் குரலில்.

 

“அப்படியெல்லாம் இல்லை மா, உனக்கு பின்னாடி தான் இவனுங்க எல்லாம். நீ இல்லாமையா இவனுங்க வந்துட்டானுங்க, அந்த நேரத்துல இதெல்லாம் சொல்லிட்டு இருந்தா நீ பயந்துருவேன் தான் சொல்லல, அவனையும் சொல்ல விடல, என் பேச்சை மீறி அவன் உன்கிட்ட சொல்லும் போது நீ நம்பலை. எனக்கு இதுவும் சரின்னு தான் தோணுச்சு. இப்பவே முட்டி வலி, முதுகு வலின்னு சொல்லிட்டு இருக்க, இதை சொல்லி நெஞ்சு வலின்னு வந்தா அதையும் நான் தானே பார்த்துக்கணும்…” என்றதும் பல்லைக் கடித்தபடி கணவரை பார்த்தார் சௌந்தர்யா.

 

மனைவியின் பார்வையில்

“என்ன டா?ஏதாவது சொல்லனுமா?…” என்று வேறு கேட்க கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டவர் “உங்களை…” என்று அவரை நெருங்கி விட ” மாமா…” என்ற காசியின் குரலில் அப்படியே நின்று விட்டார்.

 

“வாங்க வாங்க மாப்பிள்ளை…” அவசரமாக குரல் கொடுத்தார். மனைவியிடமிருந்து தப்பித்த உணர்வு அவரின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.

 

உள்ளே நுழைந்த காசியையும், மகளையும் முகம் பார்க்க முடியாது நின்றார் சௌந்தர்யா. “அத்தை உங்க பேத்தியை பாருங்க, உங்களை தான் தேடறா…” என்றவன் மாமனாரிடம் அவரது உடல்நிலையை பற்றி விசாரித்தான்.

 

அவனது இயல்பான பேச்சில் இதுவரையிருந்த சங்கடம் சற்றே விலக, மகளிடமிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்.

 

****

தாயின் பேச்சில் அவள் மீதிருந்த எரிச்சலும், கோபமும் சற்றே விலகி நிற்க, தன் கையணைப்புக்குள் நின்ற பெண்ணின் முகம் விழிகளை நிறைத்தது. உடனே அவளுக்கு அழைத்தான். எப்போதும் போல அவளின் அழைப்பு சென்றதே தவிர அழைப்பு ஏற்கப்படாது போகவும்

 

மாலை என் வேதனை

கூட்டுதடி…

காதல் தன் வேலையை

காட்டுதடி…

என்னை வாட்டும் வேலை ஏனடி…

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும்

ராகத்திலே

வேகுதே என் மனம்

மோகத்திலே…ஏ…

 

என்ற பாடல் வரிகளை அவளின் புலனதிற்கு அனுப்பி வைத்தான். அவள் பார்த்துவிட்டால் என்பதற்கான அறிகுறியாக ப்ளூ டிக் காட்டியது. உடனே அழைத்தான்.

 

தற்பொழுது எதிர்ப் புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும் இதயம் படபடவென துடிக்க ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவன் அவளிடம் பேசாது அழைப்பை துண்டித்தான்.

 

“ராட்சசி, படுத்துறா…” முனகியபடி ஒவ்வொரு விரலாக சொடுக்கெடுத்தவன்

 

” என்னை என்னமோ பண்றீங்க நீங்க, எனக்கு மூச்சு முட்டுது…” என்ற குறுஞ்செய்தியை புலனத்தில் அனுப்பியவன் மீண்டும்

 

“எனக்கு உங்களை பார்க்கணும் இப்பவே…” என அனுப்பினான். அவள் இவனது குறுஞ்செய்தியை பார்த்து விட்டால் என்பதற்கான அறிகுறியாக ப்ளூ டிக்காயிருந்தது. உடனே அவளது அலைபேசிக்கு வீடியோ காலில் அழைத்தான்.

 

“ஏங்க,கால் அட்டென்ட் பண்ணுங்க…” என்றதற்கும் அவளிடம் பதிலில்லை.

 

“என்ன ரொம்ப படுத்தற டி, நியாயமா பார்த்தா நீ பேசனதுக்கு நான் தான் கோபமா இருக்கணும், ஆனா நீ கோபமா இருக்கிறது நியாயமே இல்லை…” என்றபடி நாலைந்து கோப இமோஜியை அனுப்பி விட்டு கண்மூடி அமர்ந்து கொண்டான்.கண்களுக்குள் விழுந்தது இன்றைய மாலையின் நினைவுகள்.

 

***

 

முறுவலிக்கப் பழகிய இதழே,

நீ எனக்காக சிரிக்கும் நாள் வருமோ?

 

துருதுருத்த அஞ்சன விழிகளே,

நீ எனக்கான காதல் வீசும் நாள் வருமோ?

 

அடிகள் பல காணுதலால்,

நீ தோள்சாய எனைதேடும் நாள் வருமோ?

 

பணிவு கண்ட பாவையில்,

என்மீது கனிவு கொள்ளும் நாள் வருமோ?

 

புவி ஆழ வந்தவளே,

நீ என் மனதாளும் நாள் வருமோ?

 

நிறம் தந்த வானவில்லே,

நீ என் வானம் சேரும் நாள் வருமோ?

 

அதே கவிதை, வார்த்தைகள் மட்டும் இவனுக்கு ஏற்றது போல் மாற்றியபடி கூறிட,அதனை விழிகள் விரிய பார்த்தாள் பெண். அவனது அன்றைய கவிதை வரிகள் நினைவு வராமல் இல்ல. ஒவ்வொரு வரிகளின் முடிவிலும் அவனது இறுக்கம் கூடிக் கொண்டே போக, அவளது இமைக்காமல் இமைக்க மறந்திருந்தது. அது அவன் கவிதையை கூறி முடிக்கும் வரை தொடர்ந்தது. அதே கணம் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி மேலும் குறைந்திருந்தது.

 

அவ்விடைவெளியே சரியாக உபயோகிக்க நினைத்த தென்றலும் இருவருக்கும் இடையில் உலா வர, அதில் தான் நினைவிலிருந்து வெளியில் வந்தது ஆரியா தான். சில நிமிடங்களாக அவனது கைகளில் சிறைப்பாவையாக இருப்பதை உணர்ந்தவள் ஓங்கி அவனது காலில் மிதித்தாள்.

 

“ஆஆ… ராட்சஸி, கொலைகாரி…” என்றவன் அவளது பிடியை தளர்த்தி தனது பாத விரலை பார்த்தான். அவன் பிடியை தளர்த்தியதும் பட்டென அவனை விட்டு விலகி நின்றவள் ஆடவனை முறைத்தபடி நின்றாள்.

 

கன்றி சிவந்திருந்த பாதத்தை தேய்த்தபடி “எதாவது கோபமா இருந்தா வாயில சொல்லுங்க,..” என்றான். புருவத்தை உயர்த்தி அவனை அழுத்தமாக பார்த்தாள். அவளது பார்வையில்

“என்னங்க…” எனக் கேட்டான்

“உனக்கு, என்மேல இருக்கிறது வெறும் லஸ்ட் த்தான்னு இன்னுமா புரியல…” என்றதும் பல்லைக் கடித்தவன்

“லஸ்ட்டா? காதலான்னு புரியாத அளவுக்கு நான் இன்னும் சின்ன பையன் இல்லைங்க…” என்றான்.

அவனை அழுத்தமாக பார்த்தபடி

“இதுக்கு பேர் காதலுன்னு சொன்னதும் அதை உடனே நம்ப நான் இன்னும் சின்ன புள்ளை இல்லை ஏகலைவன்…” என்றாள்.

 

முகம் இறுக “பார்க்குற, பேசற பொண்ணுங்க கிட்ட எல்லாம் தோணுனா தாங்க அதுக்கு பேர் லஸ்ட், உங்ககிட்ட மட்டுமே வர ஃபீல்லுக்கு வேற பேருங்க…” என்றான். அவனது பேச்சில் நக்கலாக உதட்டை வளைத்து சிரித்தவள் ‘அப்டியா…’ என்பதை போல் பார்த்தாள்.

 

“ஏன் உங்களுக்கு என்மேல அதுபோல ஃபீல் வரலையா? வரலன்னு மட்டும் சொல்லாதீங்க…”என்றவன் மெல்ல அவளை நெருங்கி நின்று அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தபடி ” இந்த கண்ணுல நான் பார்த்திருக்கேன்…” என்றான்.

 

அவன் அப்படி கூறியதும் பட்பட்டென துடித்த இதயத்தை மானசீகமாக திட்டிக் கொண்டே எரிச்சலுடன் ஆடவனை பார்த்தவள் “நீ பண்ண வேலைக்கு அப்பவே கை,காலை ஓடச்சு அடுப்புல வைச்சிருக்கணும். அதெல்லாம் பண்ணாம இந்தளவுக்கு பொறுமையா போக காரணம் நீ அன்னைக்கு பண்ண விஷயத்துக்காக மட்டும் தான். இல்லைன்னா நீ என் முன்னாடி இந்தளவுக்கு பேசிட்டு இருக்க முடியாது…” என்றாள்.

 

ஏதோ சிறியவனை மிரட்டுவது போல் மிரட்டியவளை கண்டு கடுப்பானவன்

“அப்ப மட்டுமில்லை, இப்பவும் என்னை ஒன்னும் பண்ண முடியாது மேடம்…” என்றான்.

 

“என்னால முடியும்…” என்றாள் அழுத்தமாக

“ட்ரை பண்ணி பாருங்க…” சவால் விட்டபடி வந்தவனுக்கு வரும் வழியிலேயே மேகலையிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று காதில் வைத்தவனுக்கு தியாகுவின் நிலை சொல்லப்பட காசியை அழைத்துக் கொண்டு கோபி வந்துவிட்டான். அதற்கு பின் நடந்தவைகள் அனைத்தும் நாம் அறிந்தவையே.

 

*****

 

அதாவது🚶🚶🚶சொல்றதுக்கு ஒன்னுமில்லை… இந்த புள்ளையும் லவ்வை சொல்லாது, அவனும் அவ பேசறதுக்கு பொறுமையா போக மாட்டான். நானும் சீக்கிரம் கதையை முடிக்க மாட்டேன்😬😬😬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!