Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 10.1

“இப்டி எல்லாம் நீ நினைச்ச ஒடனே எதுவும் பண்ண முடியாது அர்ஜுன், அக்ரீமெண்ட் போட்ருக்கு, திடீர்னு கேன்சல் பண்ணுங்கனு சொன்னா என்ன நினைப்பு உனக்கு?” சீற்றமாய் பேரனை பார்வையாலே எரித்தார் ராமகிருஷ்ணன்.

“பண்ணனும் தாத்தா. அக்ரீமெண்ட் எல்லாம் ஈஸியா என்னால பிரேக் பண்ண முடியும். உங்களோட பெர்மிஷன்காக தான் வெயிட் பண்றேன்” என்றான் அர்ஜுன் பார்வையை அவன் தாத்தாவிடம் வைத்து.

வரதராஜன், “அர்ஜுன், ஹாஸ்பிடல் நார்ம்ஸ்க்கு ஆப்போசிட்டா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்க முடியாது. திடீர்னு போய் எங்க மெடிக்கல் சப்ளைக்கு ஏற்பாடு பண்ணுவ?”

“அதுக்கெல்லாம் கவலை படாதீங்க டாட். கூரைமேல் பணத்தை தூக்கிப்போட்டா ஏகப்பட்ட காக்கா வர தான் போகுது”



Advertisement

நாற்காலி தரையில் கீரிச்சிட்டு சுவற்றில் மோதி விழும் சத்தத்தில் அனைவரும் அந்த பக்கம் திரும்ப அர்ஜுன் நிதானமாக தன் முன்பிருந்த நீரினை எடுத்து அருந்தினான்.

“என்ன அர்ஜுன் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்க. இந்த அக்ரீமெண்ட் என்ன நானா உங்ககிட்ட வந்து நின்னேன், நீங்க கேட்டதால சைன் பண்ணது” ஆவேசமாக அவனை பார்த்து முறைத்தார் அஞ்சுஸ்ரீ தந்தை ரத்னம்.

“அதே நான் தான் இப்ப வேணாம்னு சொல்றேன்”

Advertisement

“சாலிட் ரீசன் வேணும் எனக்கு”

Advertisement

“உங்க டேப்லெட்ஸ் எனக்கு சாடிஸ்பைடா இல்ல” சிறு தோள் குலுக்கலுடன் நிறுத்திக்கொண்டவனை பார்க்க அவன் அன்னை தந்தைக்கு கூட கோவம் தான்.

“என்ன வரதராஜன் இது, இப்டி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாதவனை தான் அடுத்த ஹாஸ்பிடல் ஹெட்னு சொல்லிட்டு இருக்கீங்களா. ஹாஸ்பிடலை எங்கையோ போய் தான் நிறுத்த போறான்” அர்ஜுன் மேல் பார்வையை வைத்து எள்ளலாக நகையாடினர் ரத்னம் .

“போதும் ரத்னம், நீ இங்க பிஸ்னஸ் பேச தான் வந்திருக்க்க, அர்ஜுன் பத்தியோ அவன் டெசிஷன் பத்தி பேசவோ உனக்கு உரிமை இல்லை” பேரனை பேசவும் அவரை இடையிட்டு எச்சரித்தார் ராமகிருஷ்ணன்.

Advertisement

“பிஸ்னஸ் தெரியாதவர் பிஸ்னஸ் எப்படி பேசுவார் தாத்தா?”

“டேய் என்னடா எனக்கு பிஸ்னஸ் தெரியாது, நேத்து முளைச்ச காளான் நீ எனக்கு பிஸ்னஸ் பத்தி சொல்லி தர போறியா?” அர்ஜுனை நோக்கி அவர் வேகமாக வர ரத்னத்தின் ஆட்கள் அவனை பிடித்து தடுத்தனர்.

“தாத்தா ரீசன் நான் வைக்கிறேன், ஆனா அதுக்கு அப்றம் இவருக்கு லைசன்ஸ் இருக்காது பரவால்லையானு கேளுங்க” கூலாக தன்னுடைய கேள்வியை தாத்தாவிடம் வைத்தான் அர்ஜுன்.

“என் லைசன்ஸ் கேன்சல் பண்ணுவியா” கேலியாக சிரித்தவாறு, “ஒரு பெட்டிஷன் அசோசியேஷன்ல போட்டா போதும் இந்தியால எவனும் உனக்கு மெடிசின் சப்ளை பண்ண மாட்டான்”

இம்முறை சிரிப்பது அர்ஜுனின் முறையானது, ரத்னத்தை பார்த்து நாற்காலில் சாய்வாக அமர்ந்தவன், “யோவ் உன் லைசன்ஸையே அதே அசோஸியேஷனை வச்சு தான் கிழிக்க போறேன்னு சொல்றேன் நீ அதையே வச்சு என்ன மிரட்டுற?”

அர்ஜுனின் அந்த நிதான பேச்சில் உள்ளே பொறிதட்டினாலும் ஒரு அசட்டு நம்பிக்கை ரத்னத்திற்கு.

“முடிஞ்சா பண்ணுடா” என்றார் இளக்காரமாக.

“அர்ஜுன் காம் டவுன்” மகனின் கண்களில் சிவப்பேற உடனே அவனை அடக்க முயன்றார் பானு.

அதில் இன்னும் சீண்டப்பெற்றவனாக ஆவேசமாக எழுந்தவன், மேஜையில் கை ஊன்றி, “இந்த ஹாஸ்பிடல்ல ட்ரக்ஸ் மாத்துற குடவுன் மாதிரி யூஸ் பண்ணிட்டு இருக்கான் இந்த ஆள். இந்த ஒரு ரீசன் போதுமா இல்ல வேற எதுவும் எதிர்பாக்குறிங்களா?”

தன் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்து அவன் கேட்க அவர்களுக்கோ பேரதிர்ச்சி.

என்ன பேசுவதென புரியாமல் அர்ஜுனை பார்க்க, அதனை தனக்கு சாதகமாக்க முயன்ற ரத்தம், “முதல பொண்ண எடுக்காம ஏமாத்துனீங்க, அப்றம் கான்ட்ராக்ட்டை கேன்சல் பண்ண பேசுனீங்க, இப்போ இந்த பழி. ரொம்ப நல்லா இருக்கு ராமகிருஷ்ணன் சார். உங்கள நம்பி வந்ததுக்கு உங்களால என்ன பண்ண முடியுமோ அதை உங்க பேரனை வச்சு அழகா பண்றீங்க”

“ரொம்ப கேவலமா நடிக்காத ய்யா. என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு” என கூறவும் அவர் முகத்தினில் அப்பட்டமான பயம்.

கொத்தாக ஆதாரத்தை அத்தனை பேரின் முன்பும் எடுத்து போட்டான். அதனை பார்த்த ஒவ்வொருவரின் முகமும் கோவத்தை காட்ட செய்வதறியாமல் பதறியது ரத்னத்தின் உள்ளம்.

அதை உதறியவன், “போலீஸ் கேஸ்னு போக தெரியாதுன்னு இல்ல, வெளிய தெரிஞ்சா ஹாஸ்பிடல் பேர் மொத்தமா போய்டும்னு தான் அமைதியா இருக்கேன்.

இதுக்கு மேலயும் இவன் தான் மெடிசின் சப்ளை பண்ணனும், அக்ரீமெண்ட், கான்டராக்ட், நார்ம்ஸ்னு சப்பைக்கட்டு கட்டிட்டு இருந்திங்க அமைதியா ஹாஸ்பிடல்க்கும் எனக்கும் சம்மந்தம் இல்லனு விட்டு வெளிய போய் நானே கம்ப்ளைன் பண்ணி ஓரமா நின்னு வேடிக்கை பாப்பேன்”

அங்கிருந்த மொத்த கூட்டத்திற்கும் அமைதியாக குரல் உயர்த்தாமல் எச்சரிக்கை கொடுத்தவன் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட அவ்விடமே பேரமைதியில் மிதந்தது.

“மாமா, ஈவினிங் லாயர் வர சொல்லி கேன்சல் பண்ணிடலாமா?” சுந்தரஜன் ராமக்ரிஷ்ணனிடம் கேட்க, வேண்டாம் என்றவர்,

“இப்போவே வர சொல்லுங்க மாப்பிள்ளை” என கூற அடுத்தடுத்து வேலைகள் புயல் வேகத்தில் நடந்தது.

ஒரு பக்கம் ரத்னம் மருத்துவமனை விட்டு வெளியேறியிருக்க அவரது ஆட்கள் மருந்தகத்தை சுத்தம் செய்யும் முன்பே அர்ஜுனின் ஏற்பாட்டில் வேறொரு நிறுவனம் தங்களது மருந்துகளை எல்லாம் எடுத்து வந்து காத்திருந்தது.

பொருட்கள் இறங்குவதை காற்சட்டையில் கைகள் நுழைத்து பார்வையிட்டு நின்ற அர்ஜுனை பார்த்த சுந்தராஜனும், வரதராஜனும் ஆச்சிர்யத்தோடு, “இத எப்ப ஏற்பாடு பண்ண?” என கேட்டனர்.

“ரெண்டு நாள் ஆச்சு” என இதழ்கடையோராம் சிரிப்பு வர பதில் கொடுத்த அர்ஜுன் தோளில் சுந்தராஜன் அடிக்க, இப்பொழுது மீண்டும் ரோபோ மூடிற்கு சென்றிருந்தான் அர்ஜுன்.

***

அன்று வீட்டிற்கு வந்த சுந்தராஜன் மருமகனை பற்றி ஒருபாடு புகழ்ந்து தள்ளிவிட்டார். அவரோடு பானுவும் இணைத்துக்கொள்ள கேட்கும் கேட்காதது போல் இருந்துக்கொள்வாள் இலக்கியா.

“நல்லவேளை அந்த பொண்ணுகூட நம்ம அர்ஜுன் கல்யாணம் நடக்கல” என்றார் நிம்மதியோடு பானு.

“எனக்கும் அந்த பொண்ண அவ்வளவா புடிக்கல தான் ம்மா” பரிமளா அமைதியாக அமர்ந்திருந்த அன்னையிடம் கூறினார்.

“இப்ப எல்லாரும் ஒன்னு ஒன்னு சொல்லுங்க, நான் தான் ஆரம்பத்துலயே இதுல பெருசா விருப்பம் காட்டல” ராதா சலிப்பாக வீட்டினரை பார்த்தார்.

“நாங்க என்ன ம்மா பண்றது, அவன் வாழ்க்கையை பத்தி யோசிக்காம பிஸ்னஸ் பத்தி தானே யோசிச்சான்”

அன்னை அருகே வந்து அமர்ந்த வரதராஜன் சுருங்கிய கண்களோடு, “ஒரு டீ கிடைக்குமா ம்மா?”

மகன் கேட்கவும் சிரிப்போடு எழுந்தவரை நிறுத்தி, “மசாலா டீ ஓகேவா மாமா?” இலக்கியா கேட்க, “டபுள் ஓகே” என சத்தமாக கூச்சலிட்டது மொத்த குடும்பமும்.

மென்னகையோடு சமையலறை சென்ற பெண்ணை தொடர்ந்து சென்றது பிரியங்கா, தர்ஷன் மற்றும் வருண் கூட்டணி.

“நான் போட்டுடுவேன் க்கா. நீங்க ரெஸ்ட் எடுங்க இப்ப தானே வந்திங்க” அன்று அர்ஜுனை பார்த்து வந்த பிறகு ஏனோ அவளால் மருத்துவமனை செல்ல முடியவில்லை.

அவன் மேல் நம்பிக்கை தான். ஆறு நாட்கள் ஆகியது அவனை பார்த்து. கண்கள் தேடினாலும் எதையும் வீட்டினரிடம் காட்டவில்லை. அவனே வரட்டும் என்கிற எண்ணம் தான்.

இன்று சனிக்கிழமை என்பதால் சற்று வேகமாகவே வந்தனர் வீட்டினர். மாலை நேரத்தில் வழக்கமாக இல்லாமல் இன்று தேநீரை தேடி வரதராஜன் வர வீட்டினர் அனைவரும் பிடித்துக்கொண்டனர்.

“இல்ல இலக்கியா நாங்க டீ போட கத்துக்குறோம்” என்ற பிரியங்கா தனக்கு பின்னாலே வந்த ஆண்களிடம், “நீங்க என்னடா பண்றீங்க இங்க?” மிரட்டலோடு கேட்டாள்.

“எல்லாருக்கும் இலக்கியா மாதிரி பொண்ணு அமையாத்துல. அதான் நாங்களே சமையல் கத்துக்க வந்துட்டோம்”

வருண் கூறுவதை கேட்டு புன்னகைத்த பெண் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஊற்றி அதன் மேல் ஒரு வடிகட்டியில் டீ தூளை வைத்தாள்.

“மசாலா டீக்கு மொத டிகாஷன் ரெடி பண்ணனும். அதுக்கு தான் இந்த ஸ்டேப்”

கர்மசிரத்தையுடன் இலக்கியா அவர்களுக்கு வகுப்பெடுக்க அவள் கையை பிடித்த பிரியங்கா, “அதெல்லாம் எனக்கு இன்னொரு நாள் சொல்லி தா. இப்போ அதை விட முக்கியமான விஷயம்”

சுவாரஸ்யம் கூடியது அவள் கண்ணில், “அர்ஜுனை நீ எவ்ளோ நாளா லவ் பண்ற?” கயல்விழியாளின் கண்கள் பெரிதாக விரிந்துக்கொண்டது. இது அவள் லிஸ்டிலே இல்லையே.

“ப்ரியா சொல்லிட்டா உங்க லவ் பத்தி. எங்களுக்கு மொத்த டீடைல்ஸ் வேணும்” சங்கடமாக இருந்தது. காதலை கேட்கவேண்டியவனை தவிர இந்நேரம் அனைவருக்கும் தெரிந்திருக்குமே என்று.

அதோடு அவள் அன்று பொய்யுரைத்தது என அனைத்தும் கேள்விப்பட்டு வந்தவர்களிடம் இயல்பாக அவளால் பேசி சிரிக்க கூட முடியவில்லை. “இல்ல க்கா… அன்னைக்கு ஹாஸ்பிடல்ல நான் அப்டி சொன்னதுக்கு ரீசன்”

“வேணாம் இலக்கியா நீ எதையும் சொல்ல வேணாம். பாஸ்ட் இஸ் பாஸ்ட். நீ சொன்னது பொய்யாவே இருந்தாலும் வீட்டுக்கு நல்லது நடந்துருக்கு. சோ நாங்க எல்லாரும் ஹாப்பி தான்” என்றான் வருண்.

“ஆமா, தேவையில்லாம கில்டியா பீல் பண்ணாம எப்பவும் போல இரு” அவள் தலையில் கை வைத்து மெல்ல ஆட்டி கூறினான் தர்ஷனும் சிரிப்போடு.

“ஆமா பணம் எங்க மோட்டிவ்வே இல்ல. என் வீட்டுகாரர் கூட அதிகம் வசதி இல்ல தான். ஆனா குணத்தை பாத்து தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க.

அது எவ்ளோ சரியான முடிவுன்னு இப்போ வர எனக்கு சந்தோசமா தான் இருக்கும். அர்ஜுன் அதை புரிஞ்சிக்க லேட் பண்ணலாம் பட் கண்டிப்பா புரிஞ்சிப்பான்” மெல்லிய புன்னகை தான் அதற்கும் அவளிடம்.

“சிரிச்சு சிரிச்சே மழுப்ப வேணாம். உன் லவ் ஸ்டோரிக்கு தான் இந்த குட்டி மாநாடே” தர்ஷன் நினைவூட்ட, எப்படி சொல்வதென அவளுக்கு பெரிய தயக்கம்.

“உண்மைய சொன்னா நீங்க எல்லாரும் என்ன திட்டுவீங்க. எனக்கு எப்போ லவ் வந்துச்சு இதுனால லவ் வந்துச்சுனு சத்தியமா தெரியல” என்றாள் தர்மசங்கடமாக.

நிதர்சனமும் அது தான். இந்த பித்திருக்கு காதல் என எந்த நிலையில் பெயர் வந்ததென கூட தெரியவில்லை.

தர்ஷன், “சரி அர்ஜுன் இதுனால உன் ஹார்ட்டை டச் பண்ணான்?”

இலக்கியா, “ரொம்ப க்ரேஸியா இருக்கும் சார்”

பிரியா, “லவ்னாலே க்ரேஸி தான். நீ சொல்லு கேக்க நாங்க ரெடி” என்றாள் கேலியாக ஆண்கள் இருவரையும் பார்த்து.

“அது க்கா.. என்கிட்ட, கூட ஒர்க் பண்ற எல்லாரும் ரொம்ப புகழுவங்க அவரை. அதாவது அவரோட அவுட்டர் லுக் பத்தி. ஆனா எனக்கு என்னைக்கும் அப்டி தெரிஞ்சது இல்ல. நான் வேலைய மட்டும் பாத்துட்டு கெளம்பிடுவேன்.

ஒரு நாள் என்னோட அபார்ட்மெண்ட்ல இருக்குற ஒரு குழந்தைல மாடில இருந்து ஸ்லிப் ஆகிடுச்சு. நம்ம ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டு வந்தேன். போலீஸ் கேஸ் பண்ணா தான் பாக்க முடியும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க.

குழந்தைக்கு பிளட் ரொம்ப லாஸ் ஆக ஆரமிச்சிடுச்சு. அப்போ அங்க வந்த அவங்க தான் குழந்தையோட கண்டிஷன் பாத்து வேகமா டிரீட்மென்ட் பண்ணது.

சீனியர் டாக்டர்ஸ் கூட வேணாம்னு வார்ன் பண்ணாங்க, இவர் ரொம்ப அடமெண்டா இருந்தார். அதுக்கான விளைவை கொஞ்ச நேரத்துல பாத்தேன்.

போலீஸ் கூட பெருசா சண்டையே பண்ணாரு. அப்பறம் தான் எனக்குள்ள ஏதோ சேஞ் ஆச்சு நினைக்கிறன்.

அவ்ளோ நாள் என்னோட சில காலேஜ் மேட்ஸ் கூட கேப்பாங்க உங்க ஹாஸ்பிடல்ல இருக்க டாக்டர் ஒரு தப்பான பார்வை கூட பாத்தது இல்லையானு.

எல்லாரும் அப்டி இல்ல, ஆனா கண்டிப்பா நிறையா பேர் அப்டி இருக்காங்க, ஈவன் வயசானவங்க கூட. அதையும் யோசிச்சு பாத்தா இவர் ரொம்ப கண்ணியமானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!