Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 11.2

‘என்ன?’ புருவம் உயர்த்தி அவன் பார்க்க, “என்ன வேணும்?” என பதில் கேள்வி கேட்டாள்.

“புரியல”

“என்கிட்ட இருந்து என்ன சார் வேணும்?” அர்ஜுனும் உணவுண்பதை நிறுத்தி ஆழ்ந்த மூச்சைவிட்டு, “என்ன டிவோர்ஸ் கேக்க போறேன்னு நினைச்சியா?” உண்மையில் அவள் நினைத்ததும் அது தான்.

“சத்தியமா அந்த எண்ணத்தோட தான் நான் சென்னை வந்ததே” வெறித்து பார்த்த அவளது பார்வையில் ஒரு நொடி தோன்றி மறைந்த வலியின் வேதனையை மருத்துவன் கண்டும்கொண்டான்.



Advertisement

“எப்டியோ நம்ம கல்யாண நியூஸ் கொஞ்சம் வெளிய போய்டுச்சு. டாக்டர் பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னவன் நர்ஸயா கல்யாணம் பண்ணிருக்கானு காது படவே பேசுறப்போ சுர்ருன்னு கோவம் உன் மேல தானே வரும்?

எனக்கும் வந்துச்சு. அதுக்குன்னு எல்லாத்தையும் தூக்கி போட்டு போக முடியல. என் பேமிலி தடுக்குறாங்க. சோ அந்த முடிவை இப்போ யோசிக்கிறது இல்ல.

எனக்கு மைண்ட் பிரியா இருக்கனும் அவ்ளோ தான். எதையும் யோசிக்காம சாப்பிடு, அப்றம் என்னால தான் நீ இளைச்சு போனனு அதுக்கும் என்ன தான் சொல்லுவாங்க”

Advertisement

எளிமையாக காரணத்தை கூறி அவன் உண்ண துவங்கினான். இலக்கியா உணவு வீணானாலும் பரவாயில்லை என அப்படியே எழுந்துவிட தோளை குலுக்கினான் அர்ஜுன்.

Advertisement

நால்வரும் உணவை முடித்து அப்படியே அருகே இருந்த ஈ.சி.ஆர் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

யாரும் கேட்கவில்லை, அர்ஜுன் அவனே அழைத்து வந்திருந்தான்.

ராதா, ராமகிருஷ்ணன் சில தூரம் இவர்களோடு வந்தவர்கள், “என்னடா எங்க கூடவே வந்துட்டு இருக்கீங்க? போ நான் என் பொண்டாட்டிகூட தனியா இருக்கனும்”

Advertisement

விரட்டாத குறையாக ராமகிருஷ்ணன் இவர்களை துரத்த, “நாம அந்த பக்கம் போகுற வர அவர் விட மாட்டார். வா” இலக்கியாவை அர்ஜுன் அவனே தனியாக அழைத்து சென்றுவிட்டான்.

இடைப்பட்ட நாள் என்பதால் ஆங்காங்கு தான் கூட்டம் இருந்தது.

இருள் அரக்கன் மக்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதில் தந்தையாக கருதிவிட்டான் போல, அது புல்லாங்குழலின் இசை என அவனுக்கு யார் உணர வைப்பது?

குளிர் காலம் துவங்கவில்லை, ஆனாலும் குளிர தான் செய்தது. இலக்கியா தன்னை மெல்ல தீண்டி சென்ற குளிர் காற்றடில் நனைந்தவளாய் கணவனோடு நடையிட்டாள்.

இருவருக்கும் இடையே தப்பாமல் மௌனமும் நிலவ, இரவின் இனிமை அவளை சிலிர்க்கவில்லை. அமைதி பழகி போனவளுக்கு கூட அர்ஜுனோடு நீடிக்கும் இந்த மௌனம் பிடிக்கவில்லை.

எண்ணிவிடலாம் அவனோடு திருமணத்திற்கு பிறகு பேசிய உரையாடல்களை. இருவருக்குமான மௌனத்தை கடலலைகள் சடுகுடு சத்தம் தான் நிரப்பியது.

இலக்கியாவின் நீண்ட துப்பட்டா ஒரு பக்கம் செல்ல, அதனை பிடிக்கும் நோக்கோடு பறந்தது அவளது நீண்ட கூந்தலும். நல்லவேளை அர்ஜுன் அவளது மற்றொரு பக்கம் வந்தான்.

அலை வந்து காலை நனைத்து மண்ணோடு சேர்த்து இழுத்து செல்ல, ஒரு நொடி இருவரும் நின்றுவிட்டனர்.

இருவரது காற்சட்டையையும் மண்ணும் தண்ணீரும் கட்டி அணைத்திருக்க, குனிந்த அர்ஜுன் மண்ணை உதறி காற்சட்டையை மடித்து விட்டு இரண்டு கற்களை எடுக்க, அதில் ஒன்று சப்பியும் வந்திருந்தது.

முதலில் ஒரு கல்லை தூக்கி இருந்தவன் அடுத்த கல்லை அதாவது சிப்பியை அவன் அதே போல் தூக்கி எரிய பார்க்க, “ஒரு நிமிஷம்…” அவள் தடுத்த வேகத்தில் எரியாமல் அவளை திரும்பி பார்த்தான் என்ன என்று.

“அதை தாங்க” கையை நீட்டி கேட்க, அவளது கையில் வைத்தான்.

“இது கல் இல்ல சிப்பி”

“கடற்கரையிலே சிப்பி நார்மல் தான்” என்றான் அவன்.

இலக்கியாவோ தலையை ஆட்டி, “இல்ல இது நார்மல் சிப்பி இல்ல. பாருங்க ப்ளூ கலர்ல ட்ரான்ஸ்பரென்ட்டா ஷெல் இருக்கு” விறல் வைத்து அதில் படிந்திருந்த மண்ணை அகற்ற பார்த்தாள்.

“இரு” மனைவியிடமிருந்து அதை வாங்கியவன் இரண்டடி எடுத்து வைத்து அடுத்து வந்த கடல் அலையில் அதனை அலம்பி அதனை பார்வையிட்டே இலக்கியாவிடம் கொடுத்தான்.

அவள் கூறியது போல சாதாரண வெள்ளை நிறமோ பழுப்பு நிறமோ இல்லை. நீல நிறத்தில் சிப்பி ஓடு இரவிலும் மினுமினுத்தது.

அப்பொழுது தான் அர்ஜுன் அவளை உற்று கவனித்தான். மெல்லிய புன்னகை கீற்று அவளில் உதயமாகியிருக்க அந்த மினுமினுப்பு அவள் முகத்தில் பிரதிபலித்தது.

“இங்க அடிக்கடி வருவியா?”

தலை அசைத்தாள், “அப்பாக்கு இங்க வர புடிக்கும். அதுக்காகவே வருவோம்” என்றாள்.

“நான் இங்க அதிகமா வந்தது இல்ல” உண்மையாய் கூறினான், “நேரம் கிடைச்சது இல்ல சொல்லப்போனா”

இலக்கியா, “ஏன் கடல் புடிக்காதா?”

“இல்ல, தண்ணி எல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஆனா சால்ட் வாட்டர்…”

முகத்தை அசூசையாக மாற்றினான், “குளிக்கிற ஆசைல சின்ன வயசுல குதிச்சு கண் எரிச்சல். அப்போல இருந்து இந்த பக்கமே வரல”

“எல்லா தண்ணியும் ஒரே மாதிரி இருந்துடாதே. அதோட இயல்பு, குணம் இது தான்னு புரிஞ்சிட்டு குதிச்சிருந்தா இது மேல இருக்க மோகம் என்னைக்கும் மாறியிருக்காது” மனிதர்களின் குணத்தையும் இணைத்தே இலக்கியா பேசுவது அவனுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.

“அது எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சிருந்தும் குதிச்சிருக்கணும் சொல்றியா?”

“எரிச்சல் தாண்டி அதுல என்ன நெகடிவ் இருக்கு? கடல் தண்ணில அதிகம் குளிக்கிறதால உடம்புக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும், இதோட குளுமை கேன்சர், ஹார்ட் டிசீஸ் வராது, நம்ம தோல்க்கு நல்லது, தைராய்டு க்ளாண்ட்ஸ் சீரா இருக்கும், ஜாயிண்ட் பெயின் வராது, பிளட்ல இருக்க ஆக்சிஜென் லெவல் அதிகமாகும், ஸ்ட்ரெஸ் குறையும்.

அயோடின் லெவல் கூடும் இப்டி இன்னும் நிறைய நிறைய இருக்கு. கண்ணா மூடிட்டு இறங்கிருந்தா இத்தனை வருஷத்தை வீணாகிருக்க மாட்டீங்க” அவளது நீண்ட கடலின் நன்மைகளை கேட்ட அர்ஜுனுக்கு மூச்சு வாங்கியது.

“எனக்கு ஏன் நீ என்னை வச்சே பேசுற மாதிரி இருக்கு?”

“நீங்க சொன்னதுக்கு நான் பதில் சொன்னேன்”

“இல்ல, அது இல்ல. நம்மள பத்தி, நம்ம லைப் பத்தி சொல்ற மாதிரி இருக்கு”

பெண்ணவளின் கால்கள் மீண்டும் நடக்க துவங்கியது, “கில்டியா பீல் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டிங்களோ?”

அவளோடு இவனும் இணைந்து நடந்தவன் அவள் கையை பிடித்து நிறுத்தினான், “நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு கில்டியா வேற பீல் பண்ணனும்?”

பக்கவாதமாக அவனை திரும்பி முறைத்தவள், “நியாயமா தானா கில்ட் வந்துருக்கணும் உங்களுக்கு. பிடிக்கிதோ பிடிக்கலையோ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு தான?

என்னமோ நான் உங்க பொறுப்பே இல்லாத மாதிரி தாத்தா வீட்டுல விட்டுட்டு ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டீங்க? சரி சொல்ல வேணாம், நான் தான் உலகத்துலயே பெரிய கிரிமினல் ஆச்சே. அட்லீஸ்ட் உங்க வீட்டுலையாச்சும் என்ன விட்ருக்கலாமே”

“அதுவும் என் வீடு தான்”

“இல்ல, எப்போ அந்த வீட்டை விட்டு வெளிய வந்திங்களோ அப்போவே உங்க வீடு மட்டும் தான் உங்க வீடு”

அர்ஜுன், “சரி இப்போ என்ன, அங்க உன்ன யாரும் எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க. எதுக்கு இவ்ளோ சீன்?”

இலக்கியா, “ஓ என்னோட ஆதங்கம் உங்களுக்கு சீன் போடுற மாதிரி இருக்கா? எவ்ளோ நல்லா பாத்துகுட்டாலும் புருஷன் வீடு தான் பொண்ணுங்களுக்கு காம்பர்டபிள் ப்ளேஸ்.

ஏன் உங்க அத்தை பக்கத்துலயே வீடு இருந்தும் உங்க வீட்டுக்கு வராம அவங்க வீட்டுலையே இருக்காங்க? யார் எங்க இருக்கனுமோ அங்க இருந்தா தான் மரியாதை”

“இப்போ உன்ன யாரும் தடுத்து வைக்கலயே. அவ்ளோ கஷ்டமா இருந்தா கெளம்பி என் வீட்டுக்கு போயிருக்கலாம்”

“எப்படி அவ்ளோ உரிமையா நான் உங்க வீட்டுக்கு போக முடியும்?” அவன் வீடு என்பதை அழுத்தி கூறினாள், “வீட்டு ஓனர் பெர்மிஷன் வேணும்ல” அவளது குத்தல் பேச்சு அர்ஜுனுக்கு எரிச்சலை உருவாக்கியது, அவள் கூறுவதன் உண்மையை உணர்ந்து.

அவளிடம் அனுமதி கேட்காமல் அவனாகவே முடிவு செய்து ராமகிருஷ்ணன் இல்லம் அனுப்பி வைத்ததையும் இலக்கியாவின் உள் அர்த்தம் கொண்ட வார்த்தைகள் உணர்த்தியது.

“அங்க வர்றதுக்கு எதுக்கு நீ என்கிட்டே பெர்மிஷன் கேக்கணும்?”

“இப்ப தான சார் உங்க வீடுன்னு சொன்னிங்க, நானா போனா அப்றம் மூடி இருக்க வீட்டுக்குள்ள வந்த பரிமாண வளர்ச்சி உள்ள நாய்னு பேச்சு வந்துட கூடாதுல”

கோவப்படாமல் அவள் சிறு கேலி சிரிப்போடு கூறுவதிலே இவனால் கோவத்தை கூட காட்ட முடியவில்லை.

“இப்ப என்ன உன் வீடுன்னு சொல்ல சொல்றியா?” அவன் கேள்வியில் நின்று அவனை உன்னிப்பாக பார்த்தவள், “ம்ம்ஹ்ம்” தலை அசைத்து மறுப்பை தெரிவித்தாள், ‘நம்ம வீடு’ மனத்தினுள்ளே அவனுக்கு விடை கொடுத்து ராதாவோடு இணைந்துக்கொண்டாள்.

சில நிமிட உலாத்தலுக்கு பிறகு வீட்டிற்கு கிளம்பினர். உள்ளே வந்ததுமே ராமகிருஷ்ணன் அசதியாக இருப்பதாக கூறிவிட ராதாவிற்கு சுடு தண்ணீர் எடுத்து வருவதாக சமையலறை சென்றிருந்தாள்.

அவ்வளவு பெரிய வீட்டில் இரண்டே இரண்டு அறை தான் இருந்தது. ஒன்று அர்ஜுனின் அறை, மற்றொன்று அவன் அலுவலக அறையாக பயன்படுத்துவது.

ஒரு பக்கம் வேலை சார்ந்த பல பொருட்கள் வைத்திருப்பான், அதன் இறுதியில் இருக்கும் கதவை திறந்தால் இருந்தது அந்த அறை, சிறிய அளவிலான அறை தான்.

ஆனால் இரண்டு பேர் தாராளமாக படுக்கும் வசதி அதில் இருந்தது. அதனை இலக்கியா பார்த்ததே இன்று தான்.

அர்ஜுன் எதற்கும் தடை விதித்ததில்லை, அதே சமயம் அனுமதியும் கொடுக்காததால் இவள் அங்கு சென்றதே இல்லை.

அந்த அறையை ராதா, ராமகிருஷ்ணன் தம்பதி பயன்படுத்திக்கொள்ள, பேரனை உள்ளே அழைத்திருந்தார் ராதா.

“எதுக்குடா மருமகளை ஹால்ல படுக்க வச்சிருக்க?” உள்ளே இவன் வந்தது அமர கூட இல்லை, அதற்குள் தாத்தாவிடமிருந்து கேள்வி அம்பு வந்து விழுந்தது.

“நான் சொன்னா அப்டியே உங்க மருமக கேக்குற மாதிரி தான்” சலித்துக்கொண்டான் இவனும்.

“ஒழுங்கா மேல கூட்டிட்டு போ. எழுந்திரு” அழைத்த வேகத்தில் அனுப்பி வைத்தனர்.

அர்ஜுன் வெளியே வர இலக்கியா தண்ணீர் கொடுத்து. உறங்குவதற்கு வந்தவளை படுக்க விடாமல் அவள் பயன்படுத்தும் தலையணையையும் போர்வையும் எடுத்து மேலே நடந்தான்.

“என்ன பண்றீங்க? அதை குடுங்க” இலக்கியா கீழிருந்து கேட்க பாதி படி ஏறிய அர்ஜுன் நிற்காமல், “சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காதாடி உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு மேல வா”

“வர முடியாதுங்க, நான் அப்டியே படுத்துக்குவேன், உங்க தாத்தா பாட்டி எல்லாம் வரவும் புதுசா என்ன அக்கறை?”

“இப்ப நீ வர்றியா இல்ல பாட்டியை கூப்பிடவா?” நின்று அர்ஜுன் அழைக்க,

‘எல்லாம் இவர் இஷ்டம் தான்’ முணுமுணுத்தவாறே அவன் பின்னே வந்தாள் இலக்கியா.

அறையினுள் நுழைந்ததும் அர்ஜுன் கதவினை பூட்டி அப்படியே கீழே தலையணை, போர்வையை வைத்திருந்தான். உள்ளே வந்த இலக்கியா கண் சிமிட்டாது அவனின் அறையை பார்த்தாள்.

அவள் தவறில்லை, அந்த அறையின் பிரமாண்டம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாடியின் உயரத்தை இந்த ஒரு அறை கொண்டிருந்தது. அறையின் நடுநாயகமாக பெரிய மரகட்டில். படுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து வளைந்து செல்லும் படிக்கட்டு, கீழிருந்து பார்த்தால் அர்ஜுன் வேலைக்கு எதுவாக சில மர அலமாரிகள், மேஜைகள்.

படுக்கைக்கு நேர் எதிரே தொலைக்காட்சி, அதற்கு எதிரே அமர்வதற்கு சோபா. ஒரு பக்கம் கண்ணாடி கூண்டினுள் அடிபட்டது போல் வரிசையாக உடற்பயிற்சி உபகரணங்கள்.

மேலே சென்ற படிக்கட்டு இரண்டாக பிரிந்து ஒன்று அவனது உடைகளின் அனுவகுப்பை கண்ணாடியின் வழியே காட்ட, அதன் ஓரத்தில் அமைந்திருந்தது குளியலறை. மற்றொரு படிக்கட்டு பால்கனிக்கு வழி வகுத்தது.

அனைத்தையும் பார்த்து ஆராய்ந்து முடிக்கவே இலக்கியாவுக்கு ஐந்து நிமிடங்கள் முழுதாய் தேவைப்பட்டது.

எதற்காக இவன் இவ்வறையை விட்டு வரவே இல்லை என்பது இப்பொழுது புரிந்தது. அனைத்தும் இங்கேயே கிடைக்கும் வகையில் நேர்த்தியான ஆடம்பரமான வடிவமைப்பு அது.

“பாத்து முடிச்சிட்டா லைட் ஆப் பண்ணிட்டு படுக்குறியா?” கைகள் இரண்டையும் தலைக்கு அடியில் வைத்து இவளை அர்ஜுன் பார்க்க, “இது தனி வீடா?” அவள் கேட்ட கள்ளமில்லா கேள்வியில் அர்ஜுனுக்கு அரும்பிய புன்னகையை அவன் மறைக்கவும் இல்லை.

“இல்ல ரூம் தான். இந்த அபார்ட்மெண்ட்ல இருக்குற ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமா இருக்கும். ஆல்மோஸ்ட் எல்லாரும் வி.வி.ஐ.பிஸ் தான். இந்த கான்ஸ்டரக்ஷன் ஆரமிக்கிறப்போவே எனக்கு இப்டி தான் வேணும்னு நான் கேட்டுட்டேன். அந்த பக்கமா…”

வலது பக்கத்தினை காட்டினான், “இங்க ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கு. மேல ஒன்னு இருக்கு வித் வாக்கின் கிளோஸட். எது வேணுமோ யூஸ் பண்ணிக்கோ”

அவனது உறக்கத்திற்கான நேரம் நெருங்க வம்படியாக போர்வையை இழுத்து பிடித்து கண்ணை மூடினான்.

அவள் குளியலறை சென்றது, சில நேரம் பிறகு வந்தது வரை கவனித்தவன் வேகமாக கண்ணை திறந்து, “இங்கையும் சோபால தான் படுப்பேன்னு நிக்காத, இங்கயே படு” தனக்கு இடது புறத்தை சுட்டிக்காட்டினான்.

தெரிவை அவள் அப்படியே செய்தாள். உடல் அசதியில் படுத்ததும் உறக்கம் வந்துவிடுமென நினைக்க இருவரையும் உறக்கம் அண்டவில்லை. அர்ஜுனும் இலக்கியாவை பார்த்தான், அவளது மெல்லிய உடல் அசைவு உறங்க முற்படுகிறாள் என தெரிந்தது.

“நீ சென்னை தானா?”

“ஆ?” கழுத்தை திருப்பி இவனை பார்த்தாள்.

“பொறந்து வளந்தது சென்னை தானா?”

இலக்கியா, “ஆமா” மீண்டும் திரும்பி படுத்துவிட்டாள்.

“வேலை எல்லாம் எப்படி போகுது?” எழுந்தே அமர்ந்துவிட்டாள் இந்த கேள்வியில்.

இவனின் நடவடிக்கையே விசித்திரமாக இருந்தது, வளைய வந்து பேச மாட்டான் அவளுக்கு தெரிஞ்ச அர்ஜுன். எதையும் கண்டும் காணாமல் போகும் ரகம்.

தெரிவை அவள் அப்படியே செய்தாள். உடல் அசதியில் படுத்ததும் உறக்கம் வந்துவிடுமென நினைக்க இருவரையும் உறக்கம் அண்டவில்லை. அர்ஜுனும் இலக்கியாவை பார்த்தான், அவளது மெல்லிய உடல் அசைவு உறங்க முற்படுகிறாள் என தெரிந்தது.

“எதையாவது பாத்து பயந்துட்டீங்களா?”

“ஏன் கேக்குற” சம்மந்தமே இல்லாமல் கேட்கும் அவளது கேள்வியில் புருவம் உயர்த்தி கேட்டான்.

“இப்டி கேள்வி எல்லாம் கேக்க மாட்டிங்களே, அதுவும் என்கிட்ட”

“எனக்கு தூக்கம் வரல, நீயும் தூங்காம இருந்த அதுனால பேசுனேன். புடிக்கலைனா போ”

அவளுக்கு முதுகு கட்டி படுத்தான் கோவத்தை காட்டி. இலக்கியா பார்வை அவனில் படிந்திருக்க, அவனாக பேசுவதை ஆசை கொண்ட மனம் இழக்க விரும்பவில்லை.

“ஒர்க் ஜாஸ்தி தான். அதிகம் நைட் ஷிப்ட்ஸ் போயிடுறேன் இப்போ எல்லாம்”

அவன் தாத்தா வீட்டிலிருப்பது அவளுக்கு எந்த அளவிற்கு சங்கடத்தை கொடுத்திருக்கும் என்பது அவளது பணி நேர தேர்வை வைத்து தெரிந்துகொண்டான் அர்ஜுன்.

“இனி மாத்திக்கலாம்ல?”

சிறிதாய் தலை அசைத்தாள்.

பெரிதான பேச்சு வார்த்தையை வளர்க்கும் கேள்விகள் இல்லை ஆனாலும் இருவருக்கும் இடையில் இருந்த அந்த கனமான கோடு சிறிது இளக்கம் கொடுத்திருந்தது.

“எதுக்கு லீவு எடுத்திருந்த?” கனமான அமைதி அவளிடம், தயங்கி தன்னுடைய விரல்களையே பார்த்திருக்க,

“நமக்குள்ள சாதாரண மனுஷங்களுக்கு நடக்குற பேச்சு கூட சரியா இல்ல. நார்மலா இந்த நிலைமை மாறணும்னு தான் நான் நினைக்கணும், ஆனா எனக்கு அப்டி தோணல” என்றான் இயலாமையோடு.

அவனும் அவளோடு சகஜமாக பேசி பழக தான் பார்க்கிறான். ஆனால் முடியவில்லை.

“ரொம்ப ஸ்ட்ரெஸ்புள்ளா இருக்கு”

அவன் கூறியதற்கு பதில் கொடுக்காமல் அவனின் முந்தைய கேள்விக்கு தாவியிருந்தாள்.

“மனசுல நினைக்கிறத சொல்ல கூட யாருமே இல்ல. சூசைடல் தாட்ஸ் வருது. ஏதாவது சைகார்டிஸ்ட் ரெகமண்ட் பண்றிங்களா?”

தன்னை பார்த்து கேட்ட மனைவியின் கண்களில் வழிந்த அந்த ஒரு சொட்டு கண்ணீர் அவனை வதைத்ததா இல்லை அவளது வார்த்தை வதைத்ததா என அறியாத நிலையில் தள்ளாடினான் இலக்கியாவின் மருத்துவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!