Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 21.3

அவள் சம்மதம் வரும் முன்பு அத்து மீறிய அவன் கைகள், அது கிட்டிய பிறகு அதே உந்துதலோடு அவளில் நெருங்க முடியவில்லை.

“நர்ஸம்மா…” கையை மாலையாக்கி அவன் கழுத்தில் போட்டு, “டாக்டரே…” மெல்லிய குரலில் அவள் அழைக்க, மனைவியை பூவை போல் மென்மையாக அள்ளி மஞ்சத்தில் சேர்த்தான்.

அவனது பார்வை அவள் அணிந்திருந்த அவன் சட்டையிலிருந்து அவள் விழிகளுக்கு மாறியது.

“என்னோட வாசனை வேணுமா, நான் வேணுமா?”



Advertisement

சட்டையின் காலரை இறுக்கமாக பற்றியவள் சிரிப்பை அடக்க உதட்டை கடித்து சில நொடிகள் பார்வையை காரணமே இல்லாமல் வேறு பக்கம் திருப்பி அவனை சோதிக்க நினைத்தாள்.

ஆனால் இன்று அவனுக்கு பொறுமை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. புஷ்அப்ஸ் செய்வது போல அவளுக்கு நேர் வந்து காத்திருந்தான்.

அதுவும் அந்த கண்களில் வந்து குடிகொண்டிருக்கும் நாணம் காதலை அழகான தவிப்பாய் எடுத்துக்காட்ட ஆசையாக அவளுக்காய் காத்திருந்தான்.

Advertisement

“ரெண்டும் வேணும்” இந்த பதிலை அர்ஜுன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

Advertisement

மென்னகையோடு கைகள் இரண்டிலும் சற்று தளர்வு கொடுக்க, தன் மேல் பொத்தென விழுவான் என இலக்கியா எதிர்பார்த்திருக்க அவனோ சில இன்ச் இடைவேளை விட்டு அவளை விஷமமாக பார்த்து சிரித்தான்.

“பயந்துட்டியா?”

அவளை தலை அசைக்க, “நான் வந்துட்டேன். என் ஸ்மெல் வேணும்னா அதுக்கு ப்ராஸஸ் கொஞ்சம் அதிகம், பரவல்லயா?”

Advertisement

முகம் குப்பென சூடேறி சிவக்க வெட்கத்தோடு மெல்ல பெண்ணவள் தலை அசைக்க, அவளை ஆட்கொள்ள முதலில் மனைவியின் முகத்தை முத்தத்தால் குளிப்பாட்டி இதழில் இளைப்பாறினான்.

அவனின் அதிரடி வேட்டையை புள்ளிமான் எதிர்பார்க்க அர்ஜுன் முன்னேறாமல், சில நொடிகள் முன்பு பார்த்த காதலோடு கூடிய ஆசை மறைந்து வருத்தம் மேவி நின்றது.

“என்னாச்சு?”

“இப்போவே இதை கேக்கணும் தோணுது இலக்கியா. அப்றம் கேட்டா பெண் பித்தத்துல கேக்குறேனு நீ நினைச்சிட்டு கூடாது. படிக்கிறியாடி? உன் விருப்பம் போல டாக்டர் ஆகு. சென்னை, டெல்லி, அமெரிக்கா, லண்டன் எங்க வேணாலும் போ. இந்த தடவை பணம் உனக்கு தடையா இருக்க கூடாது”

அவள் ஆரம்ப நாட்களில் இதனை நினைத்து வருந்தியதை போல அதே துக்கம் அவன் கண்களில் அவளுக்காக.

“ஓ… நான் டாக்டர் ஆகணுமா?”

உனக்கு இன்னும் உன் ஆசை குறையவில்லையா என அவள் அர்ஜுனை சீண்ட, அவன் சூடேறவில்லை. அவளை விட்டு தள்ளி அமர்ந்து பார்த்தான்.

“உன்ன இம்ப்ரெஸ் பண்ணனும்னு கேக்கல இலக்கியா. ரொம்ப நாளா யோசிச்சேன் தான். உனக்கு எங்க தோணுதோ அங்க போ, வீடு, நான், மாமா இப்டி யாரையும் யோசிக்காத. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்” அர்ஜுனை ஆழ்ந்து பார்த்தவளுக்கு இப்பொழுது நிஜமாகவே கோவம் வந்தது.

“அஞ்சு வருஷம் நான் இல்லாம சந்தோசமா இருக்க போறீங்க அப்டி தான?”

“நான் எதை பத்தி பேசுறேன், நீ என்ன பண்ற? பேச்சை மாத்தாம பதில் சொல்லுடி”

“நான் டாக்டர்னு சொன்னா தான் உங்களுக்கு கௌரவம்னா கண்டிப்பா படிக்கிறேன். அதுல எனக்கு கோவமோ வருத்தமோ கொஞ்சமும் இருக்காது, உங்களுக்கே உங்களுக்காக பண்ணுவேன்”

“எனக்காக நான் பேசணும்னா நம்ம கல்யாணம் முடிஞ்ச கையோட உனக்கு சீட் வாங்கி வந்துருப்பேன்”

இலக்கியா, “அப்போ இது என்னோட விருப்பம் தான?” ஆம் என தலை அசைத்தான் அர்ஜுன்.

“ஆரம்பத்துல வருத்தம் தான். ஆனா இப்போ இல்ல. சொல்லப்போனா என் வேலை படிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோசம் தான் குடுக்கும். இப்போ கொஞ்ச நாள் அந்த முடிவுல இன்னும் உறுதியா நிக்கிறேன்”

“என்னாலயா?”

“நல்ல விதத்துல, ஆமா. காதலுக்கு அழகு, பணம் மட்டுமில்ல படிப்பு கூட தடையா இருக்குமான்னு பல நாள் வருத்தப்பட்ருக்கேன். அது இல்லனு காலம் உங்கள என்கிட்ட குடுத்துருக்கு பாருங்களேன் அந்த நிம்மதி எனக்கு என்னைக்கும் வேணும்.

டாக்டர் ஆகி வந்து என் கனவை நான் நிறைவேத்தினாலும், ஏதாவது ஒரு சமயம் நீங்க காட்டுற அன்புக்கு அந்த டாக்டர் பட்டம் தான் காரணம்னு நான் யோசிச்சிட கூடாது”

“நான் அப்டிலாம் யோசிக்க மாட்டேன்டி”

“மாட்டீங்க தான். எனக்கு என்னோட அர்ஜுன் சார், நர்ஸ் இலக்கியாவை மட்டுமே பாத்து மயங்குனவரா இருக்கனும்.

எல்லாத்துக்கும் மேல, என் அப்பாக்கு நான் குடுத்த மிக பெரிய கெளரவம் இந்த நர்ஸ் பட்டம் தான். அவருக்கு அதுல ஒரு அலாதியான நிறைவு. அதை எப்பவும் நான் மாத்த விரும்பல.

அர்ஜுனோட இலக்கியா எப்படி வேணாலும் மாறலாம். ஆனா மணிகண்டன் பொண்ணு நர்ஸ்னு இருக்க பேர் எப்பவும் மாற விட மாட்டேன். புரிஞ்சிப்பீங்களா?”

மனைவியை கண் எடுக்காமல் பார்த்தவன் இரண்டு நொடிகளில் அவளில் மொத்தமும் படர்ந்து பித்தன் ஆனான்.

வண்ணக்கொடியில் வண்டாடும் மலராய் மலர்ந்து கிடந்த அவள் இதழை கண்களின் வார்த்தை அல்லாமல் ஆசையின் வார்த்தை மூலம் உணர்த்தினான்.

கோடி மலர்களை விட்டு அவளிடம் வந்து அவன் மயங்கி போனதன் ரகசியத்தை அழுத்தமாய் அர்ஜுன் விளக்கினான்.

அவன் சட்டை இருவர் மேலிருந்தும் விலகி, அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டாய் ரீங்காரமிட்டது அவர்கள் முத்தத்தில்.

இதழ் விலகி அவள் அங்கம் பார்த்தவனுக்கு முத்தம் வாங்கியவளை விட அதிகம் மூச்சு வாங்கியது.

குறும்புக்காரன் நேர் வழியே செல்லாமல் இல்லாத சேட்டையை அவள் மேனியில் நிகழ்த்த பொன்னாய் மின்னியது பெண் மேனி.

ஆசையாய் அழுத்தமாய் அவளில் தன்னை கொடுத்து உள்ளங்களை மட்டுமல்லாது உடலையும் ஒன்றாக்கி இணைத்தான். எல்லை மீறும் அவர்கள் அன்பிற்கு ஆசை என்னும் செல்வம் சொர்கத்தை காட்டிய நேரம் அது.

“இந்த அழகையா இவ்ளோ நாள் மறைச்சு வச்சிருந்த?”

மனம் மட்டுமல்ல மங்கை மொத்தமே அழகாய் தெரிந்தது காதல் திறையாலா இல்லை உண்மையிலே அவள் அழகா அவன் மட்டுமே அறிந்தது.

அவளின் ஒவ்வொரு அசைவும் அர்ஜுனுக்கு தித்திப்பை கூட்ட தேடலின் தேடல் முடியாமல் நீண்டது.

அவள் முகம் சுருங்கிய பொழுது கைகள் அவள் கன்னத்தை அணைப்பதும், இதழ் மலர்ந்த பொழுது வெட்கத்தால் மேலும் அவளை மலர செய்வதும் அவன் காதல் மொழி.

பிரித்தறிய முடியா பேரின்பம் காதல் அகங்காரமாக இருவர் கண்களிலும் சூட்டிவிட்டது. சோர்வில் இலக்கியா போர்வையினுள்ளே சுருண்டுபோக, அவளின் முகத்தை கண் எடுக்காமல் ரசித்து பார்த்தான் கணவன்.

சிறு சிறு தொடுகையை அவன் விரல்கள் அவள் முகத்தினில் விழுந்த பூனை முடிகளை ஓரம் அனுப்பினான். அது வெறும் சாக்கு தான் அவளை தீண்ட.

கூசும் எறும்பாய் ஊர்ந்த கணவன் விரல்களில் சிணுங்கினாள் பெண், “சிணுங்காதடி”

“ஹ்ம்ம்… ரொம்ப டயர்டா இருக்குங்க” மீண்டும் சிணுங்கினாள்.

“சரி ரைட்டு… இப்டியே பண்ணா பாவம் பாக்க மாட்டேன் அடுத்த ரவுண்டு தான்”

ஆசை வற்றாமல் அர்ஜுன் பார்வை வீச, “ஒரு ஒன் ஹவர் மட்டும் குடுங்களேன்”

அர்ஜுனுக்கு முகம் எல்லாம் புன்னகையானது, “ரொம்ப சந்தோசம்டி பொண்டாட்டி. நான் நாளைக்கு பாத்துக்கலாம் நினைச்சேன். நீ என்ன விட ஸ்பீடா இருக்க. பெர்பாமன்ஸ் அப்டியா?”

அவன் மார்பிலே தொடர்ச்சியாக அடி விழ, அடுத்த கூடலுக்கு அதுவே வழியாக மாறியது.

அவன் ஆசைக்கு அவளிடம் மறுப்பு இல்லாமல் போக, திரும்பி செல்லவும் பெரிய மனத்துடையவன் அல்லவே அர்ஜுன்.

தாராளமாக மனைவியை மீண்டும் ஆட்சி புரியத்துவங்கி முடியா வாழ்க்கை பாதையில் பெண்ணவளையும் இழுத்து சென்றான்.

சிணுங்கல், கொஞ்சல், கெஞ்சலுக்கு பெயர் போன பள்ளியறை அதில் வரவேற்புக்கு தான் இடம் பார்ப்பதாக சொல்லி வந்த வார்த்தைகள் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் அமைதியாக கிடந்தது.

அலறியே இருந்தாலும் அர்ஜுனின் கைபேசி போல அதையும் அந்த ஜோடி புறாக்கள் புறக்கணித்திருப்பார்கள் தான்.

அடுத்த நாள் மருத்துவமனை செல்ல தயாராகிய மனைவியிடம் வம்பு செய்தே அவளை கிளம்ப விடாமல் செய்துவிட்டான் அர்ஜுன். அவனிடம் பட்ட பாடு அவள் சொல்லி எவரும் நம்ப போவதில்லை.

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முள் கூட குறைய வராதவன் மனைவியோடு ஐந்து நிமிடங்கள் பிறகே வர அங்கு பெரும் அதிர்வலை தான். முற்றும் முதல் காரணமாய் இலக்கியாவின் கைகள் அர்ஜுனோடு பின்னி பிணைத்திருப்பது மட்டுமே ஆனது.

“இந்த பொண்ணு எப்பவும் இவ்ளோ அழகா, இல்ல இந்த டிரஸ்ல இப்படியா?” பலரின் மன கேள்வி அதுவாக தான் இருந்தது.

வெள்ளை சீருடை புடவையிலே பார்த்து, இந்த ஆரஞ் வண்ண பட்டுபுடவையில் மிளிர்ந்தவளை வியந்து தான் பார்த்தனர் மருத்துவமனையில்.

புடவையோடு முகத்திலிருந்த பூரிப்பும் காரணம் என ராதாவுக்கும் அர்ஜூனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. மொத்த பார்வையும் தன் மேல் இருக்க சற்று நெளிந்தே அர்ஜுனோடு நடந்தாள்.

“இந்த நெளிப்பெல்லாம் நைட் வச்சுக்கலாம் இலக்கியா. தைரியமா நட. இது உன் ஹாஸ்பிடல்” கணவனின் ஊக்குவிப்பில் முன்பிருந்த சங்கடம் கொஞ்சமே கொஞ்சம் மறைந்து தான் போனது.

வைராக்கியமாக இன்று தான் தாலியை மருத்துவமனை அணிந்து வந்தாள். அணியும் பொழுதே ஒரு நிம்மதி அவளுள் பிறப்பெடுக்காமல் இல்லை.

அதனோடு சிறிய வைர கழுத்தணி ஒன்று மட்டுமே அவளது ஆபரண எண்ணிக்கை. பேரனையும் பேத்தியையும் பார்த்து பார்த்து ராதா மற்றும் ராமகிருஷ்ணன் கண்கள் ஜொலித்தது.

மருத்துவமனை என்பதால் கூட்டம் வைத்து அறிவிக்க முடியாத நிலை. ஆதலால் உணவு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதிகமானோர் கூடியிருந்த நேரம் மனைவியோடு வந்து செய்தியை உடைத்திருந்தான்.

“ஹலோ எவ்ரிஒன், இந்த சிம்பிள் லஞ்ச் எங்களோட…” இலக்கியாவையும் தன்னையும் சுட்டிக்காட்டி, “முதல் வருஷ கல்யாண நாளுக்கான ஒரு சின்ன லஞ்ச் பார்ட்டி. வயிறார சாப்பிட்டு, மனசார வாழ்த்துங்க”

அவ்வளவே உரை என முடித்துக்கொள்ள கிசுகிசுப்போடே அன்றைய மதிய உணவு அமர்களமானது.

எளிமையான உணவு என கூறி இடியப்பம், சப்பாத்தி, பிரியாணி, வெள்ளை சாதம், சிக்கன், மட்டன், மீன், இறால், முட்டை என அசைவத்தில் அத்தனையையும் இறக்கியிருந்தான்.

அவர்களை வாழ்த்தியவர்களை விட, உணவை வைத்து பாராட்டி சென்றது தான் அதிகமானது.

வீட்டின் அனைவரும் உணவை முடித்து சிறிது ஓய்வெடுக்க அவர்கள் வழக்கமாக கூடும் அறைக்கு சென்றனர்.

“அர்ஜுன், இலக்கியா எங்க?”

ராமகிருஷ்ணன் வந்து கேட்க, “வேற எங்க இருப்பான், ஏதாவது கேஸ் பைலை பாத்துட்டு இருப்பான்” தாத்தாவுக்கு பதில் கூறியபடியே அர்ஜுன் அறையின் கேமராவை அங்கிருந்த திரையில் தர்ஷன் ஒளிபரப்ப,

“டேய் மொதையாவது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாம இருந்தாங்க, இப்போ…. யோசிடா” அவன் கையை பிடித்து நினைவூட்டினான் வருண்.

தர்ஷனுக்கு குறும்பு மேலோங்க நண்பனையும் மீறி அர்ஜுன் அறையின் கேமராவை தேடி போட அதில் சிக்னல் வரவில்லை. முக்கிய இடங்களின் காணொளி மட்டுமே இங்கு தொடர்பில் வைத்திருப்பது.

அதில் அனைத்திலும் தர்ஷன் தேடி பார்க்க எதிலும் அர்ஜுன் அறையின் காணொளி வரவில்லை.

“இன்னுமா உனக்கு புரியல? கேமராவை அர்ஜுன் கட் பண்ணிட்டான்” என்றார் வரதராஜன் அடக்கப்பட்ட சிரிப்போடு.

“பாத்தியாடா இந்த ப்ராடு டாக்டர, ஹாஸ்பிடல்ல ஒரு இடம் விடாம கேமரா வைக்கணும்னு சொல்லிட்டு அவன் ரூம்ல எடுத்துட்டான்”

“கல்யாணம் பண்ணிக்கோங்கடா உங்களுக்கே தெரியும்” போகிற போக்கில் கூறி சென்ற பாட்டியை வியப்போடு பார்த்தான் வருண்.

“சின்ன பசங்கனு நிரூபிக்கிறானுங்க பாரு. விளையாட்டு குணம் கொஞ்சமும் மாறல” அர்ஜுனின் பேச்சை மறைக்க இவர்களை பிடித்து ஆள் ஆளுக்கு வெளியே சென்றுவிட்டனர்.

தர்ஷன் கூறியதை செய்திருந்தால் அர்ஜுனின் மன்மத லீலைகள் அவன் வீட்டினருக்கே தெரிந்திருக்கும்.

அர்ஜுன் தப்பித்தானா இல்லை அவனது உண்மை முகம் வீட்டினருக்கு தெரியாமல் போனதா தெரியவில்லை.

“போதுங்க” அவள் கெஞ்சல் வார்த்தைகள் யாவும் அர்ஜுன் செவிகளை எட்டவே இல்லை. பெருமூச்சோடு அர்ஜுன் கையை பிடித்து நிறுத்தி தண்ணீரை அருந்தினாள்.

“பேசாத, இதுக்காகவா இப்டி ஹாஸ்பிடலுக்கே தெரியாம இழுத்துட்டு வந்தேன்”

“அதுக்குன்னு இப்டி மூச்சே விட முடியாத அளவு சாப்பாட வாயில திணிக்கிறது தப்புங்க”

“அது ஆசைடி பொண்டாட்டி. கதவை திறந்து வச்சு கொடுக்கணும்னு தான் ஆசை. ஆனா இப்டி”

மேஜையில் அமர்ந்திருந்த மனைவியை நோக்கி இருக்கையிலிருந்து எழுந்தவன் அவள் உதட்டில் பட்டென முத்தம் வைத்து மீண்டும் அமர்ந்தான், “நினைக்கிறப்போ எல்லாம் யோசிக்காம குடுக்க முடியாதே”

சிவந்த அவள் முகத்தை பார்த்து அர்ஜுன் கண்ணடிக்க தண்ணீரை எடுத்து குடித்தாள். உணவை பார்த்து மனைவிக்கு ஊட்டிவிட ஆசை கொண்டவன் அவளை இழுத்து தன்னுடைய அறைக்கு வந்துவிட்டான்.

கேட்டால், “நீ விருந்து வச்சப்போ நீ தானே ஊட்டி விட்ட, இப்போ என் டர்ன்” என்றான், மறுக்க முடியவில்லை.

அவனுக்கு சரியாக ஊட்ட கூட தெரியவில்லை, அதிகம் அவளது புடவையில் சிந்தினாலும் மற்றவரை விட இலக்கியாவுக்கு உணவின் ருசி அபாரமாக இருந்தது.

இதோ தன்னுடைய பசி மறந்து அவள் வயிறு நிறைய உண்ண வைத்து இன்னும் ஊட்டிவிட தயாராக நின்றான்.

“ஒன்னு கேக்கணும் நினைச்சேன், எதுக்கு இந்த திடீர் விருந்து? வீட்டுல சொல்றப்போ உங்க முகமே சரியில்ல. எதுவும் பிரச்சனையா?”

சிறு யோசனைக்கு பிறகு, “முன்னாடி எல்லாம் லீவ் ஹெட் நர்ஸ்கிட்ட சொல்லுவ, இப்போ எல்லாம் எதுக்கு என் மூலியமா வருது, அதுவும் அடிக்கடி லீவ் போடுறதா பேச ஆரமிச்சிட்டாங்க.

அவங்க என்னோடவே உன்ன வச்சு பேசுனது கூட எனக்கு தப்பா இருக்கு. உன் கேரக்டர் என்னால கூட தப்பாகிட்ட கூடாது இலக்கியா. அதான் சரி பண்றேன்”

என்றவனை கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள் அவன் மனைவி. அர்ஜுனோ உணவை சிரிப்போடு எடுத்து கொடுக்க போக,

“முடியவே முடியாது போங்க”

“எக் வைட் மட்டும் சாப்பிடு”

“ஐயோ வேணாம்ங்க, ப்ளீஸ். பாதி பிளேட் எனக்கே ஊட்டி விட்டீங்க. பாருங்க வயிறு புல்”

“அதை நைட் பாத்துக்குறேன் இலக்கியா ம்மா, இப்ப ஆ சொல்லு” அவனது காதல் விளையாட்டில் இவள் தான் திக்குமுக்காடி போனாள்.

அவளை வெறுக்க மிகப்பெரிய காரணத்தை தேடியவன், அவளை நேசிக்க மிக சிறிய காரியத்தை தேடி இப்பொழுது அளவே இல்லாமல் அவளில் வீழ்ந்து போனான்.

காரணமே கிடைக்காவிடினும் நேசித்திருப்பான் என்பது அங்கு வேறு கதை. சரித்திரத்தில் இடம் பிடிக்க அவள் காதலெனும் பற்றுக்கோலை பிடித்து அடி எடுத்து வைக்க நிச்சயம் வெற்றி இலக்கியாவின் அர்ஜுனுக்கு தான்.

 

முற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!