Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 5.1

அறையினுள் செல்லவே தயக்கமாக இருந்தது பானுவுக்கு. இன்னும் இரண்டு மணி நேரத்தில் திருமணம் என்னும் நிலையில் அவன் எழுந்துவிட்டானா என பார்த்து வர மருமகளை அனுப்பியிருந்தார் ராமகிருஷ்ணன்.

“மம்மி கதவை முறைச்சு முறைச்சு பாத்துட்டே இருந்தா கதவு தானா திறந்துடாது” தன்னுடைய அறையிலிருந்து சைக்கிளில் வந்த வருண் அதை வளைத்து அவர் முன்பு நிறுத்தினான்.

“வருண் ரெண்டு நாள் சைக்கிள் உன் ரூம் விட்டு வெளிய எடுத்துட்டு வராதன்னு சொன்னேன்ல”

அவனோ அவர் கையிலிருந்த காபீயை எடுத்து ஒரு சொட்டு பருக, மகன் கையில் அடித்தார், “டேய் இது உன் அண்ணனுக்கு வச்சிருந்தேன்” என்றார்.



Advertisement

“அட போங்க மம்மி, அர்ஜுன்க்கு டீ தான் புடிக்கும். காபி குடிக்கவே மாட்டான்” ருசிக்காத அந்த காபியை மீண்டும் அதே இடத்தில் வைத்தான்.

“மகனுக்கு எது பிடிக்கும்னு கூட தெரியல” முகத்திற்கு நேராகவே சொல்லியவன் அன்னையை சுற்றி மீண்டும் சைக்கிள் ஓட்டி வந்து, “தயவு செஞ்சு இனிமேல் கிட்சன் பக்கம் போகாதீங்க”

“உன்ன…” பானு மகனை அடிக்க வரும் முன்பு அவன் சைக்கிளில் பறந்திருந்தான்.

Advertisement

கையிலிருந்த ட்ரேவை அங்கிருந்த ஒரு மேஜையில் வைத்து மகனின் கதவை தட்டினார்.

Advertisement

சில நொடிகள் பொறுத்து மீண்டும் தட்ட அந்த பக்கம் ஏதோ அசையும் சத்தம் கேட்டு இரண்டு நிமிடங்கள் பொறுத்து பார்த்தவர் பொறுமையற்று தொடர்ந்து தட்ட வெடுக்கென கதவை திறந்து, “என்ன உங்களுக்கு வேணும்?” என்றான் கோவமாக.

“கத்தாத அர்ஜுன், நீ ரெடி ஆகுறியானு பாக்க தான் வந்தேன்” என்றார் பானு மிரட்சியை மறைத்து.

“டெய்லி நான் ஹாஸ்பிடல் போறப்போ இப்டி தான் எழுப்பி விட்டுட்டு இருப்பிங்களா இன்னைக்கு என்னமோ புதுசா பண்றீங்க?” இன்னும் குரலை உயர்த்தி அறைக்குள் சென்றிட அர்ஜுனை தொடர்ந்தார் அவன் அன்னை.

Advertisement

“மத்த நாளும் இன்னைக்கும் ஒன்னா அர்ஜுன்? குளிச்சிட்டு வந்து தாத்தாகிட்ட ஆசீர்வாதம் வாங்கி டிரஸ் வாங்கிக்கோ” – பானு

அன்னையை வெறியோடு பார்த்தவன், “ஏன் மாம், நீங்க என்னோட அம்மா தான? எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ண கூடாதுன்னு ஒரு ஸ்டெப் கூட எடுக்க மாட்டிக்கிறீங்க, உங்க வீட்டுகார் அதுக்கெல்லாம் மேல, எல்லா வேலையையும் அவர் விழுந்து விழுந்து பன்றார்” இன்னும் எரிச்சலுற்றான் காலை வீட்டினரை பார்த்ததை நினைவில் வைத்து.

“உன் தாத்தாவை மீறி இங்க யாராலயும் எதுவும் பண்ண முடியாதுனு உனக்கே தெரியும் அர்ஜுன். அக்சப்ட் பண்ணிட்டு லைப்ல மூவ் ஆன் ஆகு. உனக்கு தான் நல்லது சொல்லிட்டேன்”

“சும்மா அட்வைஸ் பண்ணிட்டே இருக்காதிங்க, தப்பே பண்ணாம நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்?” – அர்ஜுன்

“கல்யாணம் தண்டனை இல்லை அர்ஜுன். ஏதோ ஒரு வேகத்துல அந்த பொண்ணு நீ பேசுறத வச்சு அப்டி சொல்லிடுச்சு” – பானு

“கிழிச்சா… இந்த மாதிரி ஒரு ப்ராட கல்யாணம் பண்ற மாதிரி ஒரு தண்டனை எதுவும் இல்லை. என் படிப்பு எங்க அவ படிப்பு எங்க? அவளோட குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்னு கூட தெரியல. தகுதி தராதரம் பாக்க வேணாம்?” – அர்ஜுன்

“என் அப்பா ஒரு பிரைவேட் ஸ்கூல் டீச்சர் தான் அர்ஜுன். இந்த வீட்டுக்கு வந்து அதுக்கு தகுந்த மாதிரி நான் மாறல?” மகன் எண்ணம் சுத்தமாக அவருக்கு புடிக்கவில்லை.

“உங்களையும் அவளையும் கம்பேர் பண்ணாதீங்க மாம்” கத்தினான், “அவ ஒரு நர்ஸ். நீங்க டாக்டர். நம்ம குடும்பத்துல செட் ஆகிட்டீங்க” யார் வார்த்தையும் அவனை சிறிதும் மாற்றவில்லை.

“வேணம்னா நம்ம மனசு காரணமே இல்லாத ஒரு காரணத்தை கண்டு பிடிக்கும் அர்ஜுன். உன்ன மாத்திக்கிறத தவற உனக்கு வேற வழியே இல்லை. கெளம்பி வர்ற வழிய பாரு, ஐயர் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவார்”

அதற்கு மேலும் இங்கு நின்றால் பேச்சு வளர்ந்துகொண்டே செல்லுமென அவனை அவசரப்படுத்தி சென்றுவிட்டார்.

நீண்ட நேரம் அப்படியே அமர்த்திருந்தவன் கைபேசிக்கு தொடர்ந்து நோட்டிபிகேஷன் வரும் சத்தம் கேட்க எடுத்து பார்த்தான். இருவது குறுந்செய்திகளுக்கு மேல் அடுக்கி நின்றது.

அத்தனையும் அஞ்சுஸ்ரீ தான்.

அவள் வீட்டினருக்கு ராமகிருஷ்ணன் நேரில் சென்று அர்ஜுன் – அஞ்சுஸ்ரீ திருமணம் நடைபெறாதென கூற, முதலில் ஆத்திரப்பட்டவர்கள் அதற்கான காரணம் கேட்டு நின்றனர்.

ராமகிருஷ்ணன் பேரன் காதலிப்பதாக கூற அஞ்சுஸ்ரீ ஒரு ஆட்டமே ஆடிவிட்டாள் அவன் எவரையும் காதலிக்க வில்லை என. அதன் பிறகு அவர்களுக்கு இன்னும் வசதியாக போக போராட்டம் செய்து பார்த்தனர் நீதிமன்றம், சிறை, வழக்கு, நஷ்ட ஈடு என. எதற்கும் மசியாத ராமகிருஷ்ணன் திடமாக அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது மறுத்துவிட்டு வந்தார்.

அந்த நாள் இரவு அஞ்சுஸ்ரீ அர்ஜுனுக்கு அழைத்து அழுத அழுகையில் அவளோடு அதன் பிறகு பேச அவனுக்கு மனம் வெட்கியது. அவள் அழைப்புகளை தவிர்த்து வந்தான்.

தாத்தாவிடம் இந்த திருமணம் நடக்கவே நடக்காது, தான் அஞ்சு ஸ்ரீயை தான் திருமணம் செய்வேன் என வாதாடிய பொழுது “ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல் ஷேர் எதுவும் வேணாம்னா தாராளமா கல்யாணத்த நிறுத்துறேன்” என்றார் பெரியவர்.

தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுக்கும் அளவிற்கு அஞ்சுஸ்ரீ முக்கியமில்லாமல் போக, “என் கல்யாணத்தை ஊரையே கூட்டி பண்ணனும்னு ஆசைபட்டிங்க தான, அது நடக்க கூடாது. நம்ம சொந்தம் ஒருத்தர் வர கூடாது. நம்ம வீட்டுல நாம மட்டும் இருக்குறப்போ தான் கல்யாணம் நடக்கணும். எனக்கு எப்ப தோணுதோ அப்போ தான் இந்த கல்யாண விஷயமே வெளிய போகணும்”

அவன் திருமணத்தை பற்றி அவர்கள் வைத்திருந்த கனவுகளை அறிந்தவன் எங்கு தொட்டால் அவர்களுக்கு வலிக்குமோ அங்கு அடித்திருந்தான்.

“ஊரையே கூட்டி வச்சு தான் கல்யாணம் பண்ணுவேன்னு நீங்க நின்னா அதுக்கு அப்றம் அர்ஜுன்னு ஒருத்தன நீங்க வாழ்க்கைல எப்பவும் பாக்க முடியாது. உங்க சொத்து சுகம் எதுவும் வேணாம்னு போய்கிட்டே இருப்பேன்”

கர்ஜித்து சென்ற பேரனை பார்த்து ராதா பயந்தாலும், பேரன் இதுவரை வந்ததே பெரிதென நிம்மதியுற்று திருமண வேலைகளை துவங்கினர் ராமகிருஷ்ணன். இப்பொழுது கூட அஞ்சுவிடமிருந்து வந்த செய்திகளை பார்த்து கோவம் தலைக்கேற அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்த கைபேசியை எடுத்தவன் அதை அணைத்து வைத்து தன் அறையோடு இணைந்திருந்த மற்றொரு சிறிய அறையில் அரை மணி நேரம் கடும் உடற்பயிற்சி செய்துவிட்டு குளிக்க சென்றான்.

தண்ணீருக்கு அடியில் தலை காட்டி எத்தனை நேரம் நின்றாலும் கோவமென்னும் நெருப்பு சிறிதும் மட்டுப்படாமல் இருந்தது. சிந்தனையில் பல எண்ணங்கள் வேகமாக ஓடிக்கொண்டே நச்சரித்தது.

தன்னை திருமணம் செய்வதற்காக தான் அத்தனை நாடகம் நடத்தி அழுதாளா? அதுவும் சரியாக அவன் வீட்டினர், முதலீட்டாளர்கள் இருந்த சமயம்.

தனக்கு நிச்சயம் ஆன நாள் தொட்டு அவள் முகம் பார்த்து கவனித்து வந்தவனுக்கு அவள் அமைதி கூட ஏதோ திட்டமாக தான் தோன்றியது.

இலக்கியாவை பற்றியே அர்ஜுன் பல கோணங்களில் தவறாக மட்டுமே யோசித்தாலும் அவனால் அஞ்சுவை எந்த நேரத்திலும் சந்தேக பார்வையோடு யோசித்து கூட பார்க்க முடியவில்லை. நம்பிக்கையை மட்டுமே வைத்திருந்தான் அவள் மீது.

நீண்ட நேரம் தண்ணீரில் நின்றதனால் கைகள் ஜில்லிட இடையில் துண்டோடு குளியலறையிலிருந்து வெளி வர மணியை பார்த்தான். இன்னும் கால் மணி நேரம் மட்டுமே இருந்தது அவன் திருமணத்திற்கு. விருப்பமே இல்லாமல் தலையை துவட்டி கண்ணாடி முன்னாள் நிற்க கீழே வீட்டினரின் பரபரப்பு சத்தம் மெல்ல மேலும் கேட்டது.

அந்த நேரம் அவன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தனர் பிரியங்கா, ப்ரியதர்ஷன் மற்றும் வருண். உடன் பிரியங்காவின் மகன் வேதவ் ‘சித்தப்பா’ என சந்தோஷத்தில் அவன் கால்களை கட்டிக்கொள்ள, இறுக்கம் சற்று தளர்ந்து குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டான்.

சில நேரம் அவனிடம் கேள்விகளை கேட்டு பிறகு கீழே பாட்டியின் குரல் தன்னை அழைக்கவும் அவனிடமிருந்து நழுவி ஓடினான்.

அடுத்த சில நொடிகளில், “வாங்க வாங்க, வா ம்மா இலக்கியா… உனக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு”

கீழே கேட்ட அவன் பாட்டியின் சத்தத்தில் எங்கிருந்து தான் அத்தனை கோவம் வந்ததோ கண்களில் தென்பட்ட சில்வர் செயின் வைத்த கைக்கடிகாரம் கொண்டு பலத்தோடு அவன் அறையில் ஆள் உயர கண்ணாடியை நோக்கி முழு வேகத்தில் வீச, அது பலத்த சத்தம் ஏற்படுத்தி சுக்கு நூறாக நொறுங்கி போனது.

“அர்ஜுன்” அறையினுள் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்துவிட கீழே இருந்தவர்களுக்கு கூட அவன் செய்கை தெளிவாக தெரிந்தது.

ஆனால் எவரும் அதிகம் பாதிக்கப்படாதது போல் காட்டிக்கொள்ள அப்பொழுது தான் வந்த இலக்கியாவின் தந்தைக்கும் இலக்கியாவிற்கும் தான் அர்ஜுனின் செயல் அதிகம் வருத்தம் கொடுத்தது.

அறையினுள் நொறுங்கி கிடந்த துகள்களை அதிர்ச்சியோடு பார்த்த பிரியங்கா, “என்ன அர்ஜுன் இது? பாட்டி பாத்தா ரொம்ப வருத்தப்படுவாங்கடா” என்றாள்.

“இதெல்லாம் தப்பு அர்ஜுன், அவங்க என்ன நினைப்பாங்க” என ப்ரியதர்ஷனும் கேட்க,

“டேய் இவ்ளோ கஷ்டப்பட்டு நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம். உன் வேஷ்டி சட்டை என்கிட்ட குடு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் வருண் பொய் கோவமாக.

“சந்தடி சாக்குல சைக்கிள் ஓட்டலாம், பிலைட் ஓட்ட பாக்குறியேடா” சிரித்தான் தர்ஷன்.

“கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்டா…” இருவரையும் அதட்டி அர்ஜுனை பார்த்தாள் பிரியா.

“இங்க பாரு அர்ஜுன், சும்மா கோவத்தை மட்டுமே காட்டிட்டு இருக்காத. இது தான் உன் வாழ்க்கைனு ஆகிடுச்சு இன்னும் இத ஏத்துக்காம இருக்குறது ரொம்ப பெரிய தப்பு” என்றாள் பொறுமையாக.

“சும்மா எனக்கே வந்து எல்லாரும் அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க… நாடகக்காரி அவ” என்றான் பொங்கிய எரிச்சலோடு.

“அந்த பொண்ண பத்தி நல்லா விசாரிச்சிட்டேன் அர்ஜுன், ஷி இஸ் கோல்ட். ஒரு தப்பான பேச்சு வரல” அறையினுள் நுழைந்த பிரியங்காவின் கணவன் கார்த்திகேயன் கூறினான்.

“அவ கோல்ட்டா? சிரிப்பு வரல? நாங்க லவ் பண்ணோம்னு சொல்றாடா. இதுலையே அவளோட தரம் என்னனு தெரிய வேணாம்? இதுல நான் அவளை லவ் பன்றேனாம். நைஸ் ஜோக்ல? வந்துட்டான் அவளுக்கு செர்டிபிகேட் குடுக்க” – அர்ஜுன்

“சரி நீ எதுக்கு அந்த பொண்ணுகூட அவ்ளோ நெருக்கமா நின்ன? அத சொல்ல மாட்டிக்கிற?” – வருண்

“அது உன்னோட பிஸ்னஸ் இல்ல” என்றான் அர்ஜுன் வெடுக்கென.

“இப்டி உண்மைய நீ மறைச்சா அது சரி, அந்த பொண்ணு மறைச்சா அது தப்பா?” – தர்ஷன்

“நான் மறைக்க காரணம் இவ இல்ல, அவ ஒரு கேவலமான விசியம் பேச வந்தா அதுக்கு திட்டிட்டு இருந்தேன், அத பாத்து என்னமோ நான் அவ கூட குடும்பமே நடத்துன மாதிரி இந்த கல்யாணம் அவசியமா? ஸ்ரீக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ஒன் வீக்கா ஷி இஸ் ரிங்கிங் மீ. பேச முடியல அவகிட்ட” – அர்ஜுன்

“அவளுக்காக ஏன்டா நீ இவ்ளோ யோசிக்கிற? கல்யாணம் நடக்காதுனு அவ அப்பாகிட்ட தாத்தா பேச போனப்போ அவர் என்ன என்ன தெரியுமா பேசுனார்? கூட போன எனக்கு அந்த ஆள அடிச்சு வாய கிழிக்கிற அளவு கோவம் வந்துச்சு. அடக்கி வச்சிட்டாங்க. அந்த குடும்பம் நடுல நீ சிக்கல்னு சந்தோசப்படு” – கார்த்திகேயன்

“அவ வேணம்னா சரி, இவ எதுக்காக? மிஞ்சி மிஞ்சி போனா பத்து பேர்க்கு விஷயம் தெரியுமா? ஒரு வாரம் விட்டா அப்டி ஒன்னு நடந்துச்சானே தெரியாம போய்டும்.

இப்ப மட்டும் நான் அவளை கல்யாணம் பன்னேனு வை, ஆமா நான் தான் அவளை ஏமாத்துனேனு நானே அழுத்தி சொன்ன மாதிரி ஆகிடும்” – அர்ஜுன்

“உன்ன இங்க யாரும் வற்புறுத்தி கல்யாணம் பண்ண வைக்கல அர்ஜுன்” – பிரியா

“ஆமா, அதான் தாத்தா உனக்கு ஒரு ஆப்ஷன் குடுத்தாங்கள்ல?” – தர்ஷன்

“எவளுகாண்டியோ நான் ஏன்டா என்னோட உரிமையை விட்டு குடுக்கணும்? இது நான் அட்டன் பண்ற ஒரு பார்ட்டி. அவ்ளோ தான். இந்த கல்யாணம் என்ன எந்த விதத்துலையும் பாதிக்காது, பாக்க தானே போறீங்க” – அர்ஜுன்

“சரி தான் ப்பா, நாங்களும் பாக்க தானே போறோம்” வாசலில் பேரனை பார்த்து சிரிப்போடு நின்ற ராமகிருஷ்ணனுக்கு அருகில் ராதா அறை முழுதும் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை வருத்தத்தோடு பார்த்தார்.

முதலில் அறையினுள் நுழைந்த ராமகிருஷ்ணன் மனைவியிடமிருந்து அவனுடைய உடையை வாங்கி அர்ஜுன் கையில் கொடுக்க அவரை முறைத்தவன் அவரிடம் ஆசீர்வாதம் பெற்ற பிறகே உடையை வாங்கினான்.

“வேஷ்டி எல்லாம் கட்ட மாட்டேன். இந்த வைட் ஷர்ட் போட்டு பாண்ட் தான் போடுவேன்” கறாராக கூறினான்.

பேரனை பற்றி தெரிந்து தானே அவன் பாட்டி ராதா வேஷ்டி சட்டையோடு இந்த உடையையும் தேர்தெடுத்திருந்தார். அவர் காலில் விழுந்தும் ஆசீர்வாதம் பெற்றவன் அவர்கள் அறையிலிருந்து வெளியேற காத்திருக்க,

“இவ்ளோ பேசுறவன் இவர்கிட்ட பேச வேண்டியது தான?” சகோதரனை தாளித்து வருண் மற்றவர்களோடு வெளியில் செல்ல,

“வருண் இங்க வா” என அழைத்தான் அர்ஜுன்.

“இல்லடா அண்ணா நான் அப்றம் வர்றேன்” ஓடிவிட்டான் அவன்.

அதற்குள் சிதறிக்கிடந்த கண்ணாடிகளை எடுத்துக்கொண்டிருந்த ராதாவின் கண்கள் கலங்கியிருக்க அவர் கை பற்றி தடுத்தான்.

அவரோ அவன் கையை தட்டிவிட்டு, வேலையை தொடர்ந்தார், “வீட்டுல கண்ணாடி ஒடைஞ்சாலே நல்லது இல்ல அர்ஜுன். இதுல நல்ல நாள் அதுவுமா” அவர் எடுத்த துகளை வலுக்கட்டாயமாக வாங்கியவன் அவரை வேலை பார்க்கவே விடவில்லை.

“நான் வருண் ரூம்ல ச்சேஞ் பண்ணிக்கிறேன். இங்க கிளீன் பண்ண சொல்லிடுங்க” என்றான்.

சரி என்றவர் அவன் கன்னம் வருடி, “உனக்கு நல்லது மட்டுமே நாங்க பண்ணுவோம் அர்ஜுன்” அவர் மனதை நோகடிக்காமல் தலை ஆட்டிவிட்டு வருண் அறை நோக்கி சென்றிட அவன் அமைதியே அவரை வாட்டியது.

“பயப்புடாத ராதா ம்மா, என் பேரன் பத்தி எனக்கு தெரியும். அவன் இந்த வாழ்க்கையை சந்தோசமா கொண்டாடுவான் ஒரு நாள்” என்றார்.

கணவன் சொல்வது போல் நடந்தால் முதலில் மகிழ்வது அவர் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!