Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 7.3

நாட்கள் அத்தனை வேகத்தோடு நகர்ந்தது. அர்ஜுன் திவ்யா திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது.

திவ்யா சிரத்தை எடுத்து அஞ்சு பற்றிய தகவல்களை சிறிதேனும் அவனிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று முயன்று விழி அகற்றாது அவளை பார்க்க, அதனை அறியாமலே செய்யும் திருட்டை கச்சிதமாக செய்ய துவங்கினர் தந்தையும் மகளும்.

அதே சமயம் இலக்கியாவை சீண்டவும் அஞ்சு ஒரு நாளும் தயங்குவதில்லை. அர்ஜுனை பற்றி, அவன் திருமண விருப்பம், ஆசைகளை அழுத்தி அழுத்தி கூறி சூடேற்ற, உள்ளே நடுங்கினாலும் வெளியே அலட்சிய பாவனை தான்.

ஏதேனும் ஒருவரின் மனதில் ஒதுக்கப்பட்டவராக வாழ்வது மனிதன் இயல்பு தானே, தூசியாகவே தெரிந்தாள் அஞ்சு. இதில் எக்காரணம் கொண்டும் இலக்கியா தான் அர்ஜுன் திருமணம் செய்துளாள் என்ற செய்தியை மட்டும் வெளியே கசியவிடவில்லை.



Advertisement

அதையும் இலக்கியா பெரிதுபடுத்தவில்லை.

உற்றவனுக்கும், தனக்கும் அந்த உறவின் புனிதம் தெரிந்தால் புரிந்தால் போதும்.

“இலக்கியா பானு டாக்டர் கூப்பிட்டாங்க”

Advertisement

ஒரு செவிலியர் வந்து தகவல் கொடுத்து, இலக்கியா செய்து கொண்டிருக்கும் வேலையை வாங்கி தான் தொடர்வதற்காக ஆராய,

Advertisement

“இருக்கட்டும் அக்கா, நானே வந்து பண்ணிக்கிறேன். நீங்க ப்ரீயா விடுங்க. பெருசா வேலை இல்ல” என்றாள் புன்னகை மாறாமல்.

“சின்ன வேலை தான நான் பாத்துக்குறேன்” என்றவர் சிரிப்பு சிந்தும் அவள் முகம் ஆராய்ந்து, “என்ன இப்போல்லாம் பானு மேடம் உன்ன கடிக்கடி கூப்பிட்டு விடுறாங்க, அவங்கள பாக்குறப்போ எல்லாம் உன் முகம் அப்டி பிரகாசமா இருக்கு”

தன்னை சந்தேகமாய் பார்க்காவிடினும், கண்கள் சுருக்கி ஆராயும் அந்த செவிலியரின் பார்வை அவளை திகிலடைய செய்தது.

Advertisement

“அது… அது நான் போடுற காபி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதான் என்ன வர சொல்றாங்க. நான் வர்றேன்” விடுவிடுவென ஓடிவிட்டாள் மேல் தளத்திற்கு.

‘லஞ்ச் நேரத்துல காபியா?’ புரியாமல் தான் விழித்தாள் அந்த பெண்ணும்.

‘என்னைக்கு மாட்ட போறோம்னு தெரியலையே, அப்போ என்ன சொல்லி சமாளிக்க போற இலக்கியா? கேள்வி கேட்டே அழுக வச்சிடுவாங்க கண்டிப்பா, எல்லாத்துக்கும் இப்பயே ரெடியா தான் இருக்கனும்’

தனக்கு தானே புலம்பி மேல் தளத்தை சென்றடைய நினைத்த நேரம் அர்ஜுன் அறையின் கதவு திறக்க கைகளை கழுவி, வெண்ணிற மேல் அங்கியை அவிழ்த்து இளமஞ்சள் நிற சட்டையை முட்டி வரை மடித்து விட்டு வெளியே வந்தான்.

அவசரமாக வந்த அவள் கால்கள், அர்ஜுனை கண்டதும் வேகத்தை குறைத்தது. ஏதோ அசூசையாக முகத்தை வைத்திருந்த இலக்கியாவை பார்த்தவன், தன்னுடைய அரவம் கேட்டு வேகத்தை குறைத்தது கவனித்து மேலும் கீழும் கவனித்தான்.

அனைத்து செவிலியர்களை போலவே அவளும் வெண்மை புடவை அணிந்து நீண்ட சிகையை கொண்டையிட்டிருந்தாள், வீட்டில் அவளில் பளிச்சிடும் அவன் கட்டிய தங்க தாலி மற்றும் நெற்றி வகிட்டில் இருந்த குங்கும் கூட இல்லை.

சிறு கீற்றாய் நெற்றி குங்குமம் தவிர எந்த விதமான நிறமும் அவள் உடலில் இல்லை.

ஏனென்றே கேட்காமல் அவன் மனம் அவர்கள் திருமண தினத்தை போல வண்ணமயமாக ஜொலிக்கும் இலக்கியாவை தேடியது. அதிகம் அவளை பளிச்சென நிறத்தில் உடை அணிந்து பார்த்ததே இல்லை, வீட்டில் கூட மங்கி போன நிறத்தில் தான் அவள் உடைகள் இருக்கும்.

‘அவ எப்படி சாரீ வியர் பண்ணிருந்தா எனக்கென்ன?’ தன் எண்ணங்களுக்கு தானே பதிலளித்து அவளை தாண்டி நடந்தவன் மின்தூக்கியை இயக்கி உள்ளே செல்ல,

வழக்கம் மாறாது இலக்கியா படிகளை நோக்கி நடக்க, மின்தூக்கியினுள் நின்றிருந்த அர்ஜுன் மூட ஆயத்தமான கதவையும் கை நீட்டி தடுத்து அவளையே பார்த்தான்.

என்ன ஓடுகிறது அவன் இதயத்தினுள்? பிடிக்கவில்லை, விருப்பமில்லை, ஒத்துவராது என காரணங்களை அடுக்கி அவளை நிற்க முடியாது திக்குமுக்காட முயல்கிறான், மறுபக்கம் அவளை அவன் விருப்பத்தின்படி, அவள் நிலையையும் கவனித்து இழுக்க, திணறி தான் போகிறது இலக்கியாவின் மனம்.

‘என்ன இவன்’ என சோர்ந்து போவதும் அதிகம் நடக்கின்றது. இன்னும் வேகம் குறைய, தனக்காக அவன் நிக்கிறான் என்பதை தெரிந்து வேகமாக முன்னேற முடியவில்லை.

கோவிலில் நடத்தும் வேண்டுதல் போல் மெல்ல அடி எடுத்து வைத்தவள் அவன் பார்வையின் வீரியம் தாளாது இதயம் தடதடக்க அவனை ஒருவழியாக பார்த்துவிட்டாள்.

“நான் படில வர்றேன்” ஒருவாறு வார்த்தையையும் உருவாக்கி பேசினாள். இன்னும் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்றவன் பான்ட் பாக்கெட்டில் கை விட்டு உறுதியாக நிற்க, வாய் திறந்து இலக்கியா பேசும் முன்பு,

“வா” என்றான் முடிவை மாற்றாமல்.

‘இவனோடு தனியே அத்தனை நெருக்கத்தில் நிற்பதா? பத்து நொடிகளே ஆனாலும் நான் மாட்டேன். தன்னுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் இளைப்பாறும் அவனது கர்வத்திற்கு தீனியாக என்னுடைய உடல்மொழி இருக்கவே கூடாது’ என்கின்ற பிடிவாதம் அவளிடம் தாண்டவமாடியது.

“ஒரு ப்ளோர் தானே சார்” எவரேனும் வந்திடுவார்களோ என்கிற பயம் வேறு அவளை சூழ்ந்துகொண்டது. இதே தலத்தில் இருக்கும் ஒரு அறையில் தான் செவிலியர்கள் உணவருந்த வருவதுண்டு.

அதில் ராமகிருஷ்ணனின் குடும்பத்திற்காக மட்டுமே உருவாகியிருந்த அந்த மின்தூக்கியில் இவள் செல்வதை, அதுவும் அர்ஜுனோடு செல்வதை கவனித்தால் என்னாவது? அவளை போல் அதிக நேரமில்லை அவனுக்கு,

“ஏய் உள்ள வாடி” சினம் இல்லாவிடினும் குரலில் சினத்தை கூட்டியிருந்தான்.

பெருமூச்சோடு அவன் அருகே வந்து நின்றவள் வந்ததும் கதவினை மூடும் பொத்தானை அழுத்தினான் அர்ஜுன்.

சரியாக கதவு மூடும் நேரம் விறுவிறுவென ஓடி வந்த அஞ்சுஸ்ரீ மூச்சிரைக்க உள்ளே நுழைய, தானாக வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டாள் இலக்கியா. வந்தவளோ வேகத்தில் அர்ஜுனோடு ஒட்டி நின்று ஆழமாக மூச்சுவிட, அவள் மேனி மெல்ல மெல்ல அர்ஜுன் மேல் முழுதாக சாய்ந்தது,

“நான் கூப்பிட்டது கேக்கலையா அர்ஜுன் உங்களுக்கு? எவ்வளவு வேகமா ஓடி வந்தேன் தெரியுமா?” நெற்றியை அவன் தோளில் சாய்த்து கைகளை அவன் புஜத்தோடு அழுத்தமாக பிணைத்திருந்தாள்.

அர்ஜுனுக்கு அவளது செய்கை பெரிதாக தோன்றவில்லை, ஏதோ ஒரு படபடப்பு என நினைத்துவிட்டான். பக்கமாக திரும்பி இருவரையும் பார்த்த இலக்கியாவிற்கு முகத்தை திருப்பி வைக்கும் அளவு கோவம்.

இதுவரை இல்லாத உரிமை அனைத்தையும் திரட்டி அர்ஜுனை அவள் கோவமாக முறைத்து, அஞ்சுவின் கை படிந்திருந்த அவனது புஜத்தையும் பார்த்து முறைத்தவள் விழிகளை திருப்பிக்கொண்டாள்.

எதார்த்தமாக தன் முன்னே பார்வையை பதித்த அர்ஜுனுக்கு அவளது உரிமையான முறைப்பு உடனே இதழ் கடையோரம் மெல்லிய சிரிப்பை கொடுக்க மீசையினுள் அதனை மறைத்து அவளை பார்த்தான்.

சில நொடிகளுக்கு முன்பு இவளா தன்னோடு வர தயங்கியது? பயமும் பதட்டமும் போட்டிபோட நின்றவள் இப்பொழுது எந்த தைரியத்தில் உரிமையாய் முறைக்கிறாள் என நினைக்க நினைக்க அர்ஜுன் மனதினில் ஒரு புயலே ஆடி ஓய்ந்தது அந்த பத்து வினாடிகளில்.

“அர்ஜுன்…” அஞ்சு மீண்டும் அழைக்க, மின்தூக்கி திறந்தது நான்காவது தளத்திற்கு வழிவிட்டு.

இலக்கியா வேகமாக உள்ளே சென்றிட, அஞ்சுவை தள்ளி நிறுத்தி, “நீ வர்றத நான் கவனிக்கல. உள்ள போ நான் வர்றேன்”

அவளை அழகாக தவிர்த்து அங்கேயே நின்றவன் சில நொடிகளில் உள்ளே போக அங்கு இலக்கியாவை சுற்றி அவன் அன்னையும், சகோதரர்களும்.

“ம்மா சாப்பிடலாமா?” பார்வையை மனைவியிடம் வைத்து அன்னையிடம் கேள்வி எழுப்பினான்.

“உனக்காக தான் அர்ஜுன் வெயிட் பண்றோம்” பானு எழுந்து அனைவரையும் உணவு மேஜைக்கு அழைக்க, அனைவரும் அமர்ந்து உண்ண, வீட்டின் மருமகளாக தானே நின்று அனைவருக்கும் பரிமாறினாள்.

“போதும் இலக்கியமா நீ ஒக்காரு” அவளை பிடித்து தனக்கு அருகிலே அமர்த்திக்கொள்ள, இலக்கியாவிற்கு அருகில் வருணும், நேர் எதிரே தர்ஷனும் இருந்தனர்.

“என்னங்க இலக்கியா இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க?” பேச்சை எடுத்தான் வருண்.

வயதில் இருவரும் அவளை விட அதிகமிருக்க, ஏற்கனவே அவர்கள் மேல் இருந்த மரியாதையில் தன்னை அண்ணி என அழைக்க வந்த வருணிடம் பெயரை கூறியே அழைக்குமாறு இலக்கியா வேண்டியதற்காக போ வா என அழைப்பதை மட்டும் மரியாதையாக மாற்றியிருந்தனர்.

“அப்டி இல்ல சார், எப்பவும் பாக்குற வேலை தானே” என்றாள்.

தர்ஷன், “இல்லையே, பேசாம ஒரு மாசம் என் டிபார்ட்மென்ட், அடுத்த மாசம் இவன் டிபார்ட்மென்ட்னு மாத்தி மாத்தி டியூட்டி வந்துடுங்க. வேலையே குடுக்க மாட்டோம் நாங்க”

அவன் பேசியதில் இலக்கியாவிற்கு சிரிப்பு வந்திட, வாய் திறவாது சிரித்தவள் முகம் சிவப்பேறி, அஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்த அர்ஜுனுக்கு சொல்ல முடியாத அவஸ்தையை கொடுத்தது.

என்ன சிரிப்பு இது? கண்கள் சுருங்க கன்னம் சிவப்பேறி மெல்லிய சிரிப்பு சத்தம் கூட வரவில்லை. ஆனாலும் வசீகரிக்கின்றதே.

தலையை மீண்டும் மீண்டும் கோதி தன்னை சமன் செய்தவன் பார்வையை அவளிடமிருந்து அகற்றவே பெரும்பாடாகி போனது. தன்னிடம் உயிரை கொடுத்து பேசும் அஞ்சுவின் வார்த்தை ஒன்று கூட காதில் விழவில்லை.

“ம்ம் நான் ஏன்டா என் மருமகளை உங்ககூட அனுப்ப போறேன், நான் என் டிபார்ட்மென்ட் கூட்டிட்டு போய்டுவேன்” என்றார் பானுவும். அதனை கேட்ட அஞ்சுவுக்கு கோவம் பிசுபிசுவென தலைக்கு ஏறியது.

“அவ உங்க மருமகனு தெரியாத வரைக்கும் நல்லா தான் ஆண்ட்டி இருக்கும். தெரிஞ்சதுக்கு அப்றம் இந்த ஹாஸ்பிடல் அர்ஜுனை பாக்குற விதம் தான் மாறும். உங்களுக்கு அப்பவும் எந்த பிரச்னையும் இருக்காது தான்”

மெல்ல மெல்ல தெளிந்து வந்த நீரோடையை ஒரே கல்லில் மீண்டும் கலங்கடித்திருந்தது அஞ்சுஸ்ரீயின் வார்த்தை.

ரசித்து ரசித்து அவள் பறிமாறி உணவை உண்டவனது நாவானது, நிதர்சனத்திற்கு திரும்பி கசப்பை உணர்த்தியது.

சுற்றம் மட்டுமே அந்த நொடி அவனது வாழ்க்கையை தீர்மானித்திருக்க மனதில் பரவிய இதமான சாரல் இருந்த தடயம் தெரியாமல் போனது. அதற்கு மேல் அர்ஜுன் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் ஊசியாக தொண்டையினுள் இறங்கியது.

பாதி கூட உண்ணவில்லை, சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன் எழுந்து சென்றுவிட்டான்.

பேச வேண்டிய அர்ஜுன் அவளுக்கு பதில் கொடுக்கட்டுமென நினைத்த அர்ஜுன் வீட்டினர் அமைதியாக இருக்க, அவன் அமைதி எத்தனை இலக்கியாவை பாதித்ததென மொத்தமாய் வீழ்ந்த அவள் முகத்தை வைத்தே கண்டுகொண்டனர்.

சிரிப்பில் சிவந்திருந்த முகம் அவமானத்தில் சிவந்திருந்தது.

“ஸ்டேட்டஸ் தான் முக்கியம்னா நாங்க உங்க குடும்பத்துக்கே பொண்ணு கேட்டு வந்துருக்க மாட்டோம் அஞ்சுஸ்ரீ. அர்ஜுன் இப்போ இலக்கியாவோட பொறுப்பு. அதே மாதிரி இலக்கியா அர்ஜுன் பொறுப்பு.

கூடையோ குறையவோ அவங்க அவங்க வாழ்க்கையை பாத்துக்குவாங்க. இதுக்கு நடுல பெத்தவங்க நாங்களே வராதப்போ மூணாவது மனுசி நீ வர்றது நல்லா இல்ல”

பக்குவமாக அவளது நிலையை அவ்விடத்தில் எடுத்துக்கூறிய வரதராஜன் எழுந்து செல்ல, அவமானத்தில் அடுத்த நொடியே அஞ்சு ஸ்ரீயும் எழுந்து வெளியேறிவிட்டாள்.

“இலக்கியா நீங்க ஒன்னும் நினைக்க வேணாம். அர்ஜுன் கொஞ்ச நாள் ஆனா நார்மல் ஆகிடுவான்” ஆறுதலாக அவளை பார்த்து கூறினான் வருண்.

அவனுக்கு இணையாக தர்ஷனும், “இந்த பொண்ணு பேச்செல்லாம் மனசுக்கு கொண்டு போகாதீங்க இலக்கியா, மனசுல வஞ்சத்தை மட்டுமே வச்சிருக்க பொண்ணுக்கு நல்லது கெட்டது எல்லாமே பேர் புகழ்னு தான் தெரியும்”

அனைத்திற்கும் குனிந்த வாக்கிலே தலையை தலையை ஆட்டியவள் எவர் முன்பும் எழவே இல்லை. அனைவரும் அவளுக்காக பொறுத்திருந்து பார்க்க, அவளுக்கு தேவை தனிமை என்பதை உணர்ந்து மெதுவாக கலைந்தனர்.

அனைவரும் வெளியேறியவுடன் கதவு மூடும் சத்தத்தில் உணவு மேஜையில் தலையை வைத்தவள் கண்ணீர் சரளமாக வெளியேறி உடலையே குலுங்க வைத்தது.

‘தான் செய்தது தவறோ? திருமணம் மட்டுமே அதற்கு ஒரே வழியாக இருக்க வாய்ப்பில்லையே, அவன் வீட்டில் அழுத்தி கூறியிருக்கலாம், அவனிடம் நேரடியாக செல்லாமல் நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் பெரியவர்களிடம் சென்றிருக்கலாம்,

அதையே விட்ருந்தாலும் இந்த திருமணத்தையாவது அடம் பிடித்து தடுத்திருக்கலாம். இறுதியில் எல்லாமே என்னுடைய முட்டாள் தனமான முடிவினால் வந்த வினை தானா?’

யோசித்து யோசித்து உடலும் மனமும் சோர்ந்து போனது. இறுதி வரை அவனும் தன்னை புரிந்துகொள்ள போவதில்லை, என்னால் அவனுடைய வாழ்க்கையும் சீராகப்போவதில்லை என்பது மட்டும் அன்று அவள் கணித்த விடயம்.

இப்பொழுது விட்டால் கூட அஞ்சு ஸ்ரீ அர்ஜுனை என்ன பாடுபட்டவது திருமணம் செய்துகொள்வாள், ஆக தன்னுடைய வாழ்க்கை அவ்வளவு தான் என்றான பிறகு இந்த மருத்துவமனை, இந்த குடும்பத்திற்காகவே செய்ய நினைத்த காரியத்தை முடித்துவிட வேண்டும் என்ற தூண்டுதல் மட்டும் அதிகரித்தது பெண்ணவளுள்.

இலக்கியாவிடம் பேசவே வெளியே காத்திருந்த அர்ஜுன், வீட்டினர் அனைவரும் வெளியேறிய நொடி உள்ளே வர, இலக்கியாவின் குலுங்கிய உடலை பார்த்து ஆத்திரம் கரைபுரண்டோடியது. இதே கண்ணீரை காட்டி தானே அன்று திருமணத்தை நடத்தினாள் என்று.

“இப்டி நடிச்சு நடிச்சு தான் இங்க வந்து நிறுத்திருக்க நீ” சீற்றமான குரலில் சட்டென எழுந்தவள் அவனை விழி விரித்து பார்க்க,

“என்னமோ உன் புருஷனை முறைக்கிற மாதிரி அவ்வளவு உரிமையா லிப்ட்ல முறைக்கிற, என் வீட்டுல இருக்குறவங்களுக்கு வேணா நீ மருமகளா இருக்கலாம். ஆனா என்னைக்கும் நமக்கு நடுல இந்த ப்ரோபஸ்னல் பாண்ட் தாண்டி ஒரு கொடு கூட மேல ஏறி போக மாட்டோம். நியாபகம் வச்சுக்கோ. யூ ஆர் ஜஸ்ட் மை எம்ப்லாயீ. நத்திங் மோர் நத்திங் லெஸ். (You are just my employee. Nothing more nothing less.) Got it?”

விரல்களை நீட்டி எச்சரித்து முறைத்தவன் வெளியேறிவிட அவன் சென்ற பாதையை விட்டு அவள் விழி அகலவில்லை.

How is the chap pa?? Comment plzz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!