Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 18(2)

 அதுக்கு ஏன் முகம் அப்படி போகுது மேடம்..”

என்றபடி அவள் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான். பிரபு டெலிவரி கொடுக்க சென்றிருக்க ராகவியும் விடுப்பில் இருந்ததால் கடையில் அவள் மட்டுமே தான் இருந்தாள்.

“ப்ச்.. போங்க பா.. மனசே சரியில்ல.. இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல..”



Advertisement

சுணக்கமாய் சொல்லி தலையை கவிழ்த்துக் கொண்டவளிடம்,

Advertisement

“நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தால் அடுத்து நடக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை யார் பேசுவா..”

Advertisement

என்று பீடிக்கையுடன் கூற,

“என்ன நடக்கணும்..?” என நிமிர்ந்து அமர்ந்து அவள் சீரியஸாக பாரக்க,

Advertisement

“வேறென்ன நம்ம கல்யாணம் தான்..”

என அவன் சொல்லவும் முறைத்தவள் கையில் கிடைத்த அட்டையை அவன்மேல் வீச,

“ஏ கமலி..”

என சிரித்தபடி சட்டென்று அதனை கேட்ச் பிடித்து விட்டான்.

“என்ன தப்பா சொல்லிட்டேன்.. ஏன் உனக்கு அந்த ஆசை இல்லையா..?”

“எப்ப என்ன பேசுறதுன்னு இல்லையா தீனா.. கல்யாணம் பத்தி யோசிக்கிற நிலமையிலா இருக்கோம்..”

“அதுக்குன்னு எத்தனை நாள் சோக பிடில் வாசிச்சுட்டே இருக்க போற..?”

“தீனா..” என அவள் விழிகளை உருட்டி பார்க்கவும்,

“அன்னைக்கு நானும் உங்க அப்பாவும் என்ன பேசினோம்ன்னு சொல்ல தான் வந்தேன்.. வேண்டாம்னா போ..”

என தோளை குலுக்கி சொல்ல அப்பவும் அப்படியே தான் அமர்ந்து இருந்தாள்.

‘ இது வேலைக்கு ஆகாது..’ என நினைத்தவன்,

“ம்ஹும்.. உங்க அப்பா ஓகே சொல்லிட்டார் என்றதை கேட்க உனக்கு கொடுத்து வைக்கல…”

என தனக்குள்ளே முணுமுணுப்பது போல் சொல்லிக் கொண்டு நகர்ந்தவனை,

“ஹே இருங்க..” என்று அவசரமாய் கையை பிடித்து தடுத்தவள்,

“நிஜமாவா..?? எப்போ…” என வாய் பிளந்து ஆச்சரியமாய் கேட்க அவள் பாவனையில் குறும் புன்னகை குபீர் சிரிப்பாய் மாறியது.

“பொய் சொன்னீங்களா..?”

என்று அவள் பல்லை கடித்தாலும் அவனின் சிரிப்பு அத்தனை அழகாய் இருந்து தொலைக்க அவளுக்கும் புன்னகை எட்டிப் பார்த்தது.

“பொய் இல்ல.. ஃப்யூச்சர் பிரெடிக்ஷன்..!! ஓகே சொல்லாம எங்க போயிட போறார்.. அன்னைக்கு நான் பேசினபோதே மனுஷன் லைட்டா யோசிக்கிற மாதிரி தான் இருந்தது.. நான் நினைச்ச அளவு எல்லாம் உங்க அப்பா மோசம் இல்ல.. நல்லவர் தான்..”

“பார்றா.. இந்த ஞானம் எப்படி வந்ததாம்..”

” பெத்த பிள்ளையை வசதியாவும் செல்லமாவும் வளர்க்கிறது மட்டும் பெருமை இல்ல.. ஏதோ ஒரு கட்டத்தில் அது துவண்டு விழும்போது தாங்கி நிற்கிற மனசு தான் உண்மையான அன்பு..!! அந்த வகையில் உன் அப்பா ரொம்ப அன்பான மனுஷன் தான்..!!”

என்று தினகரன் மனதார சொல்ல அவள் முகத்திலும் நிறைவாக ஓர் புன்னகை..!!

“எங்க அப்பா எல்லா வகையிலும் அன்பானவர் தான் மிஸ்டர் தீனா..”

” ஹப்பா.. கமலினி பேக் டூ ஃபார்ம்..”

என சிரித்தவன்,

“இன்னும் ரெண்டு நாளில் கரிகாலனை கோர்ட்டில் ஆஜர் பண்ண போறாங்க கமலி.. அப்புறம் சென்ரலுக்கு மாத்திடுவாங்க.. இன்ஸ்பெக்டர் அனுவை வர சொல்லி இருக்காங்க கமலி நாளைக்கு நாம போகணும்..”

என்று சொல்ல கமலியின் முகம் மாறியது.

“ஏன் தீனா.. அனு அவசியம் வரணுமா..?”

மீண்டும் மீண்டும் இதனை பேசி அனன்யாவை கஷ்டப்படுத்த வேண்டுமா என்றிருந்தது. ஏற்கெனவே அவள் அரை உயிராக தான் இருக்கிறாள்.

“உன் தயக்கம் புரியுது பா.. பட் பிரச்சனை எதுவும் இல்லை.. வக்கீல் சாரும் நம்மோட தான் வருவாங்க.. நீ அழைச்சுட்டு வா.. அனன்யா இந்த கேஸ்ஸில் இன்வால்வ் ஆகிறது இதான் கடைசியாக இருக்கும்..”

என அவன் சொல்லவும் சரியென ஒத்துக் கொண்டாள்.

வீட்டில் வந்து கூறியபோது அனைவருக்கும் அதே யோசனை தான். ஆனால் அறையில் இருந்து கேட்டிருந்த அனன்யாவோ தாமாக,

“நான் வரேன்.. நாம போகலாம்..” என்று சொல்ல ஆச்சரியமாய் அவளை பார்த்தனர்.

“அனு.. சரியா வருமா டா..? தைரியமா பேசுவியா..”

என சுந்தரமூர்த்தி சொல்ல,

“என்னோட நிலமைக்கு நான் இனியும் தைரியமா இல்லைனா.. என்னால வீட்டை விட்டுக் கூட போக முடியாது ப்பா.. நான் போகணும்”

என்று உறுதியாக சொல்ல அவள் கூற்றில் உள்ள உண்மை புரிந்து அவர்களும் மேலே தடை சொல்லவில்லை..

“சரி போயிட்டு வருவோம்.. எப்போ வர சொன்னாங்க கமலி..”

“நாளைக்கே தான் ப்பா..”

என்றவள் சற்று தயங்கி,

“நானே கூட்டிட்டு போயிட்டு வந்திடவா..” என கேட்க அவளை ஆராய்ச்சியாக பார்த்தவர்,

“தீனாவும் வரானா கமலி..?”

என்று கேட்க கமலினி திருதிருவென விழித்தாள். இப்ப வரை தினகரன் குறித்து நேரடியாய் இருவருக்கும் பேச்சு வரவே இல்லை.

“அவருக்கு தெரிஞ்ச வக்கில் தான் ப்பா..”

என்று அவள் தடுமாற,

“போயிட்டு வந்ததும் அவனை வீட்டுக்கு வர சொல்லு… பேசணும்..” என முகத்தில் எந்த சலனமும் இல்லாமலே கூறவும் எதற்கு என அவளுக்கு புரியவில்லை. இப்போது அதை யோசிக்க நேரம் இல்லை என்பதால் அதனை விடுத்து தங்கையோடு கிளம்பினாள்.

காவல் நிலைய வளாகத்தின் அடியெடுத்து வைத்ததில் இருந்து அனன்யா மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

அவளுக்கு இரு பக்கமும் அரனாய் கமலினியும் தினகரனும் வந்தாலும் உள்ளே எழும் நடுக்கம் குறையவே இல்லை.

முதன்முறையாக கரிகாலனை நேரில் சந்திக்க போகிறாள். அவனோடு பழக ஆரம்பித்த நாட்களில் இருந்து இந்த சந்திப்பை எத்தனையோ விதமாய் கற்பனை செய்து மகிழ்ந்து இருக்கிறாள். இப்போது நினைக்க கண்களில் மழுக்கென கண்ணீர் நிற்க கண்களை சிமிட்டி அதனை வேகமாய் மறைத்தாள்.

‘மாட்டேன்..அவனுக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்த மாட்டேன்.. அதற்கு கொஞ்சமும் அருகதை இல்லாதவன் அவன்..!! இந்த கரிகாலனை நான் காதலிக்கலையே..  நான் காதலித்த கரிகாலன் ஒரு கற்பனை மனுஷன்..!! அந்த கனவும் கலைந்து போயிடுச்சு..!  நிஜத்தில் இருக்கும் இந்த  அயோக்கியனுக்கும் எனக்கும் எந்த சம்மநதமும் இல்லயே.. நான் ஏன் பயப்படனும்.. மாட்டேன்..’

என யோசித்த அறிவு நிமிர்வை கொடுத்தது.

இவர்கள் வரவை ஏற்கெனவே சொல்லி இருந்தது போல் எதுவும் கேட்காமல் கான்ஸ்டபுள் இன்ஸ்பெக்டர் அறையினுள் அனுப்பி வைத்தார்.

‘நீங்க பயப்பட வேண்டாம் அனன்யா.. இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்ல டைப்..!! உன்னை அவரே வர சொன்னதும் ஒரு காரணமாக தான்..’

என்று ஆனந்தராமன் சொல்ல தினகரனும் புன்னகையோடு ஆமோத்து தலையசைக்க கமலினி யோசனையாக பார்த்தாள்.

‘அப்படி என்றால் இன்ஸ்பெக்டர் கூப்பிட்ட காரணம் இவர்களுக்கு முன்னமே தெரியும் போலவே..’

சிந்தனையோடு அவர்களை தொடர்ந்து உள்ளே செல்ல,

“வணக்கம் சார்..” என்ற ஆனந்தராமனின் விளிப்பில் நிமிர்ந்து நோக்கினார் இன்ஸ்பெக்டர் அழகிரி.

நடுத்தர வயதினர் என்றாலும் கட்டுக்கோப்பான உடல்வாகில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவர்,

“வாங்க…” என்று மிடுக்காய் புன்னகை புரிந்து அவர் முன்னே அமர சொல்ல அனன்யாவும் ஆனந்தராமனும் அமர்ந்த நிலையில் அவர்கள் பின்னே நின்று இருந்தனர் கமலியும் தினகரனும்..

எந்த சுற்று பேச்சும் இல்லாமல் நேரடியாய்,

“ஸோ.. நீங்க தான் அனன்யா இல்லையா..”

என்று கேட்க,

“ஆமா சர்..” என்றாள் மென் குரலில்..

“என்ன படிக்கிறீங்க அனன்யா…”

“பிஸிஏ – தேர்ட் இயர் சர்..”

“வெரி குட்.. இப்போ காலேஜ் போயிட்டு தானே இருக்கீங்க..?”

“இல்ல சர்..”

“ஏன்..”

என்ற அழகிரியின் கேள்விக்கு அனன்யாவிடம் பதில் இல்லை. அவரின் பதில் வேண்டிய அழுத்தமான பார்வையில் இருக்கையில் சங்கடமாய் நெளிந்தவள் திரும்பி உதவிக்காக

பார்க்க,

“அவ எல்லாரையும் ஃபேஸ் பண்ண தயங்குறா சர்.. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு தான் நாங்களும் கட்டாயப்படுத்தல..”

என கமலினி பதிலளித்தாள்.

“கொஞ்ச நாள் போனால் மட்டும் அந்த தயக்கம் போயிடும்ன்னு நினைக்கிறீங்களா..? அதுக்கு போகாமலே இருந்திட முடியுமா..?

ஸீ.. ஒரு பிரப்ளம நேரடியாக ஃபேஸ் பண்ணினால் தான் அதுக்கு தீர்வு கிடைக்கும்.. தள்ளி போட போட பெருசு தான் ஆகும்.. படிப்பை விட்டுடாதீங்க அனன்யா..”

” உண்மையில் உங்களை பாராட்ட தான் வேணும்.. உங்களை விட வயசில் பெரிய பொண்ணுங்க கூட இந்த விஷயத்தில் கம்பளைன்ட் கொடுக்க முன் வரல.. ஆனால் நீங்க துணிச்சலாக முன் வந்து மத்த பெண்களுக்கும் நியாயம் கிடைக்க உதவி செஞ்சு இருக்கீங்க..

தப்பு எல்லாரும் தான் பண்றாங்க அனன்யா.. அதில் இருந்து எப்படி சுதாரிச்சு சரியான பாதையில் திரும்புறாங்க என்றது தான் முக்கியம்.. அந்த வகையில் நீங்க ஒரு நல்ல முன் உதாரணம் தான் ..”

அழகிரி வகிக்கும் பொறுப்புக்கும் வயதுக்கும் ஏற்றார் போல் அந்த சிறு பெண்ணின் மீது அக்கறை கொண்டு அறிவுரை சொல்ல அனன்யா உள்ளும் நம்பிக்கை வேர் விட்டது.

“என்ன பதிலே இல்ல..”

“தேங்க்ஸ் சார்.. கண்டிப்பா நான் காலேஜ் மறுபடியும் போறேன்..”

“குட்.. சரி நான் ஏன் உங்களை வர சொன்னேன் தெரியுமா..?”

அவளின் குழப்பமான பார்வையில்,

“என்ன ராமன் சொல்லலையா..”

என வக்கிலை கேட்க,

“நீங்க சொன்னால் தான் சரியா இருக்கும் சர் அதான்..” என்றார் மெல்லிய புன்னகையோடு.. ஆக கமலினி யூகம் சரி தான்.. இவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்து உள்ளது. கமலினி தினகரன் முகத்தை ஏறிட ‘எல்லாம் நன்மைக்கே’ என்பதாய் கண்ணசைத்தான்.

“ஒரு போலீஸா.. என்னோட கடமை குற்றம் செஞ்சவங்களை இனங்கண்டு அவங்களை பிடிச்சு நிதிமன்றத்தில் ஒப்படைக்கிறது தான்.. அதை தாண்டி அவனுக்கு கிடைக்க போகும் தண்டனையையோ விடுதலையையோ நான் கைக்கட்டி பார்த்து தான் நிற்கணும்.. ஒரு நேர்மையான போலீஸா இதனை புரிஞ்சு தான் இந்த காக்கி சட்டையை போட்டு இருக்கோம்..

ஆனால் எல்லா நேரமும் இந்த சட்டத்தின் கீழ அமைதியாகவே நின்றுவிட முடியாது.. எவ்வளவு நேர்மையானவனா இருந்தாலும் சில இடங்களில் என்னோட மனசாட்சி சொல்றதை தான் செய்ய தோணும்.. அதற்காக என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யுற நிலமை வந்தாலும் சரி..! அதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும்ன்னா அதை செய்ய நான் தயங்கவே மாட்டேன்.. இப்ப நான் செய்ய போறதும் என் மனசாட்சிக்காக தான்..”

என்றவர் தான் இருக்கையில் இருந்து எழுந்து,

“நீங்க மட்டும் என் கூட வாங்க அனன்யா..”

என்று சொல்லி கதவை தாண்டி செல்ல தயங்கமாய் கமலியை பார்த்துக் கொண்டே அவரை தொடர்ந்து சென்றாள் அனன்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!