Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – final 2

“ரொம்ப அதிகமா தான் அடிச்சுட்டேன்ல மாமா..”

தினகரன் கூறியதில் முன் பாதியை மட்டும் பிடித்தவளாய் தயங்கி கேட்டாள்.



Advertisement

“பின்ன.. அவன் கதறுன கதறலில்

ஸ்டேஷனே அதிர்ந்திடுச்சு.. உன்னை அழைச்சுட்டு போகவும் ‘ அய்யோ என் தங்கச்சி..’ ‘ அய்யோ என் தங்கச்சி..’னு புலம்பிட்டு இருந்த

உன் அக்கா கூட அந்த சத்தத்தில் பயந்து கம்முன்னு ஆகிட்டானா பார்த்துக்கோயேன்..”

Advertisement

Advertisement

“ஹலோ.. இந்த டிடெயில் அவ கேட்டாளா..?”

“இல்லைனாலும் சொல்லுறது என் கடமை ஆச்சே…!! ஏன் நீ பயப்படல..?”

Advertisement

“இல்லையே.. அவன் கத்த கத்த என் காதில் இன்ப தேன் வந்து தான் பாய்ஞ்சுது… அரெஸ்ட் பண்ணும்போது என்ன அலட்சியமா நடந்து போனான்.. ராஸ்கல்.. மினிமம் நாலு எலும்பாச்சும் நொறுங்கி போயிருக்கும்.. ரொம்ப அடிச்சுட்டோமோன்னு எல்லாம் யோசிக்காத.. நீ கொன்னு இருந்தால் கூட தப்பே இல்ல டி..”

என கொஞ்சமும் கோபம் குறையாமல் கமலினி பேச,

“ம்ம்ம்.. அந்த நேரம் எங்கிருந்து எனக்கு அவ்வளவு வேகம் வந்துச்சு தெரியல.. இப்ப கூட கையெல்லாம் வலிக்குது.. ஆனா மனசு என்னவோ ரொம்ப லேசான ஃபீல்.. அவனை பார்க்காமலே இருந்து இருந்தால் கூட இந்த அமைதி கிடைச்சு இருக்காது..”

என உணர்ந்து கூற ஆறுதலாய் அவள் முதுகை நீவி விட்டாள் கமலினி.

பேச்சை மாற்றும் பொருட்டு,

“பாரு.. அனு எவ்வளவு அழகா மாமா ன்னு கூப்பிடுறா.. ஒரு நாள் நீ என்னை அப்படி கூப்பிட்டு இருப்பியா..?”

என தினகரன் கமலினியை சீண்டினான் என்றால்,

“ம்ம்.. நீங்க எல்லாம் அங்கிள் ஏஜ் என்றதை சிம்பாலிக்கா சொல்றா.. அது புரியாம நீங்க தான் மெச்சிக்கணும்..”

என அவளும் சளைக்காமல் பதில் கொடுக்க,

“கொழுப்பு டி உனக்கு..” என கடிந்தாலும் அதில் சிரிப்பே பிரதானமாக இருந்தது.

இவர்கள் இருவரையும் தான் ஆச்சரியமாய் பார்த்து இருந்தாள் அனன்யா.

“இவங்க என்ன இவ்வளவு உரிமையா பேசிக்கிறாங்க…? இது எப்போ இருந்து..?”

என்ற முக்கிய கேள்வி அப்போது தான் அவளின் மூளையில் உதித்தது. இத்தனை நாட்கள் தன் பிரச்சனையில் மட்டுமே மூழ்கி இருந்தவளுக்கு இப்போது தான் மற்றவை எல்லாம் கண்ணில்பட தொடங்கியது.

இருவரையும் அவள் மாறி மாறி பார்க்கவும்,

“என்ன டி..? அப்படி பார்க்கிற..” என கமலினி கேட்டாள்.

“இல்ல.. நீங்க ரெண்டு பேரும் எப்போ இருந்து ராசி ஆனீங்க..? தீனா மாமா பேரை கேட்டாலே டென்ஷன் ஆகிறவ தானே நீ..”

என வியப்பை மறைக்காமல்  கேட்டுவிட அவள் சொன்ன பாவனையில் இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“இனி ஆக மாட்டா..!! ஏன்னா என் பேரு அவ பேரோட தான் இனி வாழ்க்கை முழுசும் வர போகுது..”

என குறும்பாய் கூறிய தினகரன் புருவங்களை அசைத்து,

“என்ன கமலி.. அப்படி தானே..”

என்று அவளை பார்க்க புன்னகையை இதழின் ஓரம் சுருக்கி அடக்கியவள்,

“சரி தான்… முன்ன பார்த்து நடங்க போங்க..” என அவன் தோளை திருப்பி முன்னால் தள்ள அனன்யா முகத்திலும் புன்னகை பூத்தது.

சில நாட்களுக்கு பின் தங்கை முகத்தில் சிரிப்பை கண்டு மகிழ்ந்த கமலி அதனை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் ரெஸ்டாரெண்ட் உள்ளே நுழைந்ததும் அவள் கையை பற்றிக் கொண்டு,

“அங்க பார்.. உனக்காக யாரோ காத்திருக்காங்க…”

என்று சொல்ல அவள் காட்டிய டேபிளில்  அபூ, சங்கவி, வைஷ்ணவி மூவரும் அமர்ந்து இருந்தனர்.

அனன்யா பார்க்கவே காத்திருந்தது போல்,

“ஹாய் டார்லிங்…” என்று மூவரும் கோரஸ் போட சந்தோஷத்தில் தன்னை மறந்து அவர்களிடம் ஓடி வந்தவளை மூவரும் அரவணைத்து குரூப் ஹக்கில் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

நடந்த பிரச்சனைகளால் சித்ராவும் பாக்கியமும் தங்கள் பிள்ளைகளை சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கே அழைத்து வருவதில்லை. அனன்யா வீட்டிலே அடைந்து கிடந்ததால் தன் உயிர் தோழிகளை இத்தனை நாட்கள் பார்க்க வாய்ப்பே இல்லாமல் போக கமலினி தான் அவர்களை இங்கே வர வைத்து இருந்தாள். கமலினி எதிர்பார்த்தது போலவே அதில் அனன்யாவிற்கு பெரும் மகிழ்ச்சி..!!

” நீங்க யாருமே ஏன் வீட்டுக்கு வரல..? எங்க இனிமே என்கிட்ட பேசவே மாட்டீங்க நினைச்சேன்..”

அனன்யா லேசாக கலங்கிய கண்களோடு சொல்ல,

“அப்படி எல்லாம் விட்டுடுவோம்ன்னு கனவு காணாத..!! ஏதோ எங்க வீட்ல எல்லாம் கொஞ்சம் மண்டை கணத்தில் சுத்துறதால எந்த ஆக்ஷன் எடுக்க முடியாத சிச்வேஷன்ல இருக்கோம்.. கொஞ்ச நாள் போகட்டும்.. மறுபடியும் பழையபடி ஃபன் பண்றோம்..”

என உற்சாகமாய் அபூ சொல்ல,

“ஆனா உன்னை அவ்வளவு ஈஸியா மன்னிச்சுட முடியாது அனு.. கூடவே தானே நாங்களும் சுத்துறோம்.. எங்க கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்டேல..”

என சங்கவியோ கோபித்துக் கொள்ள,

” நீ  சூசைட் அடெம்ட்

பண்ணினேன்னு தெரிஞ்சதும் எவ்வளவு ஷாகிங்கா இருந்துச்சு தெரியுமா..?”

என வைஷ்ணவி வருத்தப்பட,

“சாரி… நான் சொல்லி இருக்கணும் தான்.. ஆனா நீங்க என்ன நினைப்பீங்கன்னு பயமா இருந்துச்சு..”

என்றாள் குற்றவுணர்வில்..!!

“முன்னமே சொல்லி இருந்தால் நாலு திட்டு திட்டி இருந்தாலும் நாங்களே ப்ளான் பண்ணி அவனை கட் பண்ணி விட்டு இருப்போம்.. சரி நடந்தது நடந்துடுச்சு.. இன்னைக்கு என்ன ஆச்சு அதை சொல்லு.. அவனை பார்த்ததும் பயந்துட்டியா..?”

“பயந்தேனா..? நான் அவனை பயந்து அலற வச்சேன்..” என்றவள் நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாய் விவரிக்க என   நால்வர் அணி தங்கள் உலகில் மூழ்கிவிட்டனர்.

இவர்கள் பாச பிணைப்பை பார்த்தபடி பின்னோடு வந்த கமலினி,

“இப்படியே அவ பழைய படி ஆகிட்டா போதும் தீனா.. எங்களுக்கு வேற எதுவும் வேண்டாம்..”

தங்கை மேல் பதிந்த பார்வையோடு உணர்ச்சிகள் ததும்ப கூற,

“அந்த நாள் ரொம்ப தூரம் இல்ல கமலி.. கவலை படாத..” என அவளை தோளோடு லேசாக அணைத்து ஆறுதலாய் கூறினான் தீனா.

*******

நாட்கள் யாருக்கும் காத்திராமல் விரைந்தோட யாவற்றையும் மாற்றும் மந்திரம் கொண்ட காலம்

வாழ்வில் மட்டும் அல்ல மனிதர்கள் மனதிலும் பல மாற்றங்களை விதைத்து சென்று இருந்தது.

ஆம்..!! இந்த இரண்டு வருடங்களில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..!!! வலிகளும் அவமானங்களும் இலைகளாய் உதிர்ந்து வசந்த காலம் மெல்ல மெல்ல பூத்து செழித்துக் கொண்டிருந்தது.

ஈகில் விஷன் தொழிற்சாலையின் அலுவலக அறையில் பட்டு சேலையில் பாந்தமாய் தயாராகி கடந்த அரைமணி நேரமாக கடும் எரிச்சலோடு அமர்ந்து இருந்தாள் கமலினி.

கண்கள் கணவனாக பட்டவனை கூறு போட அதற்கு கெஞ்சலாய் பதில் பார்வை கொடுத்துக் கொண்டே தன் ஃபோன் காலை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

மேலும் பத்து நிமிடம் சென்ற நிலையில் தீனா அழைப்பை துண்டிக்க,

“உங்களை என்ன செய்யறதுன்னு எனக்கு சத்தியமா தெரியல..”

என கமலினி ஆரம்பிக்கும்போதே,

“சாரி டி.. இந்த பெங்களூர் ஆர்டர் இன்னைக்கு அனுப்ப சொல்லுவாங்கன்னு நினைக்கல..”

என்று தினகரன் குறுக்கிட்டான்.

“அதுக்குன்னு.. அங்க ஒருத்தன் நீங்க வந்தா தான் மோதிரம் போடுவேன்னு உட்கார்ந்து இருக்கானாம்.. அவனை நினைச்சீங்களா..? நானாவது போயிருப்பேன்.. டூ மினிட்ஸ் வேலை தான்னு சொல்லி வண்டியை ஃபேக்டரில விட்டு ஒரு மணி நேரமா உட்கார வைச்சு இருக்கீங்க.. என் அண்ணனுக்கு இப்படி ஒரு ப்ரெண்ட்..”

“என்னடி..? வேணும்னா செய்யுறேன்.. எல்லாம் ஒர்க்கர்ஸ் பாத்துப்பாங்கன்னு அசால்ட்டா விடுற அளவு நம்ம பிஸ்னென்ஸ் போகல.. அதுவும் இந்த ஆர்டர் ரொம்ப முக்கியம்.. பெங்களூர்ல நல்ல ஃபேமஸ்ஸான கம்பெனி.. க்ளிக் ஆச்சுன்னா நம்ம ப்ராண்ட் இன்னமும் பிரபலமாகும்.. அவனுங்க இழுக்குற இழுப்பு கொஞ்சம் விட்டு தான் போகணும்.. புரிஞ்சுக்கோ கமலி..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!