Skip to content
Post Views: 5,912
“இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.”
“வசந்த்!!”, என்ற அதிரனின் அழைப்பில் பதட்டமாய் உள்ளே வந்தவன் தேவா முதலாளியின் மடியில் இருப்பதைப் பார்த்து பதறிவிட்டான்.
“சார்?!!”
Advertisement
“டாக்டருக்கு கால் பண்ணு. க்விக்..”, என்றவன் அவளை கையில் தூக்க வசந்த் மருத்துவருக்கு அழைத்த படியே கதவைத் திறந்து விட்டான்.
தனதறையில் இருந்த சோபாவில் அவளைப் படுக்க வைத்தவன் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாமல் தனதிருக்கையில் அமர்ந்து விட்டிருந்தான்.
தன்னையும் மீறி அவளை சமாதானப்படுத்தியதை அவனால் இன்னுமும் நம்ப முடியவில்லை. அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்ற எண்ணத்தில் தான் அவன் அருகில் சென்றதே.
Advertisement
தேவா எழுந்து கொண்ட பின் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று சிந்தித்த வண்ணம் அவளையே பார்த்திருந்தான்.
Advertisement
பெண் மருத்துவர் உள்ளே நுழைந்து அவர் பரிசோதனையை முடிக்கும் வரை தேவாவை விட்டு விழி நகர்த்தவில்லை அவன்.
வசந்த் அவ்வப்போது திருட்டுத் தனமாய் முதலாளியைத் தான் பார்த்திருந்தான்.
அதிரன் இப்படியெல்லாம் யாரையும் கவனித்ததாய் அவன் பார்த்ததேயில்லை.
Advertisement
ஒரு வேளை அதுவாக இருக்குமோ என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் மருத்துவர் அதிரனிடம் பேசத் தொடங்கினார்.
“நத்திங் டு வொர்ரி அதிரன். சரியா தூங்குறதில்லனு நினைக்குறேன். ஓவர் ரெஸ்ட்லெஸ்ஸா இருந்துருக்காங்க.
டேப்லெட்ஸ் கொடுக்குறேன். பட் அவங்களுக்கு தேவை ஓய்வும் அமைதியும் தான்.”
“தேங்க் யூ டாக்டர்.”, என்றவன் வசந்திற்கு கண்காட்ட அவருக்கான ஃபீஸ் பணத்தைக் கொடுத்து அவரோடு வெளியேறியிருந்தான்.
மீண்டுமாய் வசந்த் வந்த போது தான் பார்த்துக் கொள்வதாய் கூறி அவனை அனுப்பியவன் தனது வேலைகளைக் கவனிக்க அரை மணி நேரம் கழித்து கண் விழித்தாள் தேவ ரஞ்சனா.
அவளின் சிறு அசைவிலேயே கண்டு கொண்டவன் ஒன்றும் அறியாதவனாய் தனது வேலையைக் கவனித்திருக்க நடந்ததெல்லாம் நினைவு வந்ததில் வேகமாய் எழுந்து அமர்ந்திருந்தாள்.
அதிரன் எவ்வித பதட்டமும் இன்றி அவளைப் பார்த்த வண்ணம்,
“ஃபீலிங் பெட்டர்?”, என்றதில் அவனை எதிர்கொள்ள முடியாதவளாய் ஆம் என்பதாய் தலையசைத்தாள்.
“லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு போங்க. நல்ல ரெஸ்ட் தான் வேணும்னு டாக்டர் சொன்னாங்க. அண்ட் இது உங்களுக்கான மெடிசின்ஸ்”, என்றவன் மேசையில் இருந்த கவரை அவள் புறம் தள்ளி வைத்தான்.
“…”
“நீங்க இவ்வளவு யோசிக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல ரஞ்சனா. கோ அண்ட் டேக் குட் ரெஸ்ட்.”, என்றதில் அமைதியாய் வெளியேறியிருந்தாள்.
தேவாவிற்கு அதிரனின் அணைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
இப்போதும் அந்த ஸ்பரிசமும் குரலும் அவளை சிலிர்க்க வைத்தது.
யோசனையோடு வெளியே வந்தவள் வசந்தின் அறையை கடந்த நேரம் அவன் வெளியே வந்திருந்தான்.
“இப்போ ஓகே வா தேவா நீங்க?”
“ஆங்… ம்ம்..”
“சரி வாங்க நான் உங்களை வீட்டில் ட்ராப் பண்ணிடுறேன்.”
“இல்ல அது..”
“இந்த நிலைமையில் நீங்க வண்டியெல்லாம் ஓட்ட வேண்டாம். வாங்க..”, என்றவனிடம் மறுத்துப் பேச தெம்பில்லாதவளாய் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.
வரும் வழியெங்கும் அதிரனின் அந்த மென்குரல் காதோரத்தில் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரம்மை. அதைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று நினைத்தாலும் மனம் மீண்டும் மீண்டும் அங்கு தான் சுழன்றது.
வசந்திற்கு நன்றி கூறி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவள் எதைப் பற்றியும் யோசிக்க மனமின்றி அப்படியே கட்டிலில் விழுந்திருந்தாள்.
வரும்போதே வசந்த் அவளை மாத்திரைகளைப் போட வைத்திருக்க களைப்பும் மருந்தின் வீரியமும் அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்துச் சென்றிருந்தது.
மாலை அவினாஷ் வந்து அழைப்பு மணியை அடித்த போது தான் தூக்கம் கலைந்தே எழுந்திருந்தாள்.
காலையில் இருந்த மனநிலைக்கு இப்போது வெகுவாய் பழைய தேவாவாய் மீண்டிருந்தாள்.
“அக்கா என்னாச்சு? சீக்கிரமே வந்துட்டியா?”
“தலைவலி அவி. அதான். இப்பவும் டயர்டா தான் இருக்கு நான் படுத்துக்குறேன்.”, என்றவளுக்கு தனிமை மட்டுமே தேவைப்பட்டது.
அதிரன்! அதிரன்! அதிரன் மட்டுமே மூளையை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தான்.
இதைப் பற்றி நாளை அவனிடம் நிச்சயம் பேசி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டவளாய் அன்றைய தினத்தை நெட்டித் தள்ளியிருந்தாள்.
மறுநாள் காலையில் வேலைக்கு வந்த தேவா அதிரனின் வரவிற்காக காத்திருந்தாள்.
அவளது பொறுமையை முழுவதுமாய் சோதித்து விட்டு பின் மதியத்தில் தான் அலுவலகம் வந்திருந்தான்.
அவன் வந்ததை அறிந்தவள் நேராக அவனது அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய அவனோடு இன்னொரு இளைஞனும் இருந்ததில் சற்றே நிதானித்தாள்.
“யெஸ் மிஸ் தேவ ரஞ்சனா?”, என்ற அதிரனின் குரலில் இப்போது ஏன் இங்கு வந்தாய் என்ற கேள்வி சற்று காட்டத்தோடு இருப்பது அவளுக்குப் புரிய வந்த விஷயத்தை மறந்து பதட்டமாகி விட்டிருந்தாள்.
“ஹாய் மிஸ். என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்குறீங்க?”, என்றவன் சினிமாக்களில் வரும் சாக்லேட் பாய் தான் நிச்சயமாய்.
“சாரி சார் நத்திங் அர்ஜெண்ட். நான் அப்பறம் வரேன்.”, என்றவள் நகர்ந்திருக்க வினித் நண்பனைப் பார்த்து கண் சிமிட்டினான்.
“வாழ்ற போலேயே?”
“வாயை மூடிட்டு கிளம்புறியா நீ..”
“என்ன டா ஆசிரமம் எதுவும் ஆரம்பிக்க போறியா என்ன? செம பொண்ணு மச்சி.. பேசாம ப்ரபோஸ் பண்ணிடுறேன்.”
“எத்தானாவது ப்ரபோசல் இது?”
“அதுக்கெல்லாம் வருத்தப்பட்டா முடியுமா? நமக்குனு ஒண்ணு கிடைக்குற வரை விடாமுயற்சி பண்ணி தானே ஆகணும்.
அகெயின் யூஎஸ் போற வரை தினமும் உன் ஆபீஸ் வரலாம்னு இருக்கேன்.”, என்றதில் நண்பனை முறைத்தவன் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
வினித் அதிரனின் கல்லூரி கால நண்பன் எத்தனை மாத இடைவெளிக்கு பின் பேசினாலும் இயல்பான புரிதலோடு இருக்கும் படியான நட்பு இவர்களுடையது.
நல்லவன் தான் ஆனால் கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் போல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் தன் விளையாட்டுத் தனத்தால் தன்னை நிலை நிறுத்திக் கொள்பவன்.
அதிரன் அதனாலேயே காலையிலிருந்து இங்கு வராமல் அவனோடு தொழிற்சாலை கஃபே என்று சுற்றிக் கொண்டிருக்க இப்போது வர வேண்டிய நிலையாகிப் போனது.
ஒரு வழியாய் ஒரு மணி நேரத்திற்குப் பின் வினித் கிளம்பியிருக்க தேவ ரஞ்சனாவின் அறை எண்ணிற்கு அழைத்து அவளை வருமாறு கூறினான்.
“சொல்லுங்க என்ன விஷயம்?”
“அது..”, என்றவள் விழி மூடித் திறந்த வண்ணம் அவனது கண்களைப் பார்க்கத் தவிர்த்தவளாய்,
“நேத்து நடந்தது எதார்த்தமா ஒரு உதவி செய்யுற மனபான்மையில் நடந்த விஷயமாவே இருந்தாலும் இனி இப்படி நடக்காம இருந்தால் நல்லது சார்.”
“..”
“உங்க உதவியை நான் தப்பா எடுத்துகிட்டதா கோபபடாதீங்க. எனக்கு மனசில் இதை வைச்சுட்டு சாதாரணமா இருக்க முடியாது அதனால தான் சொல்லிட்டேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.
அண்ட் சாரி ஃபார் மை வேர்ட்ஸ்.”, என்றவள் எழுந்து வாசலை நோக்கிச் செல்ல அதிரனின் குரலில் அப்படியே நின்றாள்.
“நான் உன்னை போகவே சொல்லலையே?”
“…”
“இங்கே வந்து உட்கார் ஒரு நிமிஷம்.”
“…”
“உன்கிட்ட தான் சொல்றேன் ரஞ்சனா இங்கே வா.”, என்ற அழுத்தத்தில் அவள் தானாக சென்று அமர்ந்தாள்.
“என்னைப் பார்த்தா உதவி பண்றதுக்காக எல்லாரையும் கட்டிப் பிடிச்சு நிக்குற மாதிரி தெரியுதா உனக்கு?”, என்றதில் விழுக்கென நிமிர்ந்தவள் அவன் கண்களை நேருக்கு நேராய் சந்திக்க அதில் இருந்த தீவிரம் அவன் விளையாடவில்லை என்பதை உணர்த்தியது.
“உன்னை தான் கேட்குறேன். சே யெஸ் ஆர் நோ?”
“ந்ந்..நோ..”
“அப்பறம் நீ பாட்டுக்கு பேசிட்டு போயிட்டே இருக்க?”
“!!”
“நீ தான் நிதானம் இல்லாம இருந்தியே தவிர நான் இல்ல. என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்ணினேன்.”
“!!”
“அந்த நேரத்தில் என் பக்கத்தில் இருந்தது நீ. அதனால மட்டும் தான் அப்படி பண்ணினேன்.”
“”!!!!”
“எனக்குத் தெரியும் யூ ஹேவ் நோ ஐடியா அபௌட் திஸ். பட் நான் தெளிவா தான் இருக்கேன்.”
“..”
“மேரேஜ் ப்ரபோசலை ஒரு தடவை ரீகன்ஸிடர் பண்ணு.”
“இல்ல.. அதெல்லாம் ஒத்து வராது.”
“ஏன்?!”
“நான்.. எனக்கு..”
“அவினாஷ்காக தான் ரைட்?”, என்றதில் கண்கள் கண்ணீரைத் தேக்க தயாராய் இருந்தது பெண்ணவளுக்கு.
“எனக்கும் கூட பிறந்தவங்க இருக்காங்க. அவங்களுக்கான எல்லா பொறுப்பும் வாழ்க்கை மொத்தத்துக்கும் எனக்கு இருக்கு. அதே தான் உனக்கும். இதை என்னால ரொம்ப நல்லாவே புரிஞ்சுக்க முடியும்.”
“!!!!”
“எனிதிங்க் எல்ஸ்?”
“சார்.. இது இதெல்லாம்..”, என்றவளுக்கு பெரும் தடுமாற்றம். அவனை கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் அது அதிரனுக்கு அத்தனை பிடித்தது.
“ரஞ்சனா..”, என்றவனின் குரல் அவள் இயல்பை குலைப்பதாய்.
“இது அரேண்ஞ்ச்ட் மேரேஜா ஆரம்பிச்ச விஷயம் தான். ஆனால் இப்போ அதை விட எனக்கு உன்னைப் பிடிச்சுருக்குறது மட்டும் தான் இந்த கல்யாண பேச்சுக்கு ஒரே காரணம்.”
“..”
“அவசரமில்ல பொறுமையா யோசிச்சு முடிவை சொல்லு. அண்ட் ஐ அம் ஆல்வேஸ் ஹியர் டு ஹெல்ப் யூ.”, என்றவனுக்குப் பெயருக்குத் தலையசைத்து, விட்டால் போதுமென ஓடியிருந்தாள் தேவ ரஞ்சனா.
error: Content is protected !!