Skip to content
Post Views: 5,743
“அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
மு.வ விளக்க உரை: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.”
“பரவால்லையே மருமக கெட்டிக்காரி தான்!”
“அவளுக்கு தேவை எல்லாம் அன்பு காட்டுறதுக்கு ஒரு ஆள். மத்த படி நம்ம பணம் இமேஜ் இதெல்லாம் பத்தி அவ யோசிக்குற மாதிரி கூடத் தெரியலை மா.”
Advertisement
“…”
“அதோட அவ தம்பி அவளுக்கும் மேல..”, என்றவன் அவினாஷின் உரையாடலைக் கூற காத்யாயினிக்கு மனம் இளகி விட்டிருந்தது.
“சின்ன வயசிலேயே பெரிய பெரிய பொறுப்புகளைச் சுமக்குறவங்க இப்படியெல்லாம் யோசிக்க தான் செய்வாங்க. என்னவோ அதி நீ பேசுறதை எல்லாமே கேட்டு மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
Advertisement
கல்யாண பேச்சை எடுத்தப்போ நீ ஸ்டேடஸ் பார்த்து தான் பொண்ணை முடிவு பண்ணுவனு நினைச்சேன்.
Advertisement
அதுவுமில்லாம தேவா உள்ளே வந்தது மொத்தமாவே எதிர் பாராம நடந்தது தான..
நாம பார்க்குற பொண்ணுங்க எல்லாமே பணக்கார குடும்பமா இருக்கும் போது அவங்க பழக்க வழக்கங்களும் அதுக்கு ஏத்த மாதிரி தான இருக்கும்.
அதை நாம தப்பு சொல்ல முடியாது. ஆனால் அது நமக்கு ஒத்துப் போகுமானு தெரியாதே!
Advertisement
உங்க அப்பா என்னை கல்யாணம் பண்ணும் போது சாதாரண மாச சம்பளம் வாங்கின ஒருத்தரோட பொண்ணு தான் நான். இங்கேயும் இந்தளவு சொத்தெல்லாம் கிடையாது.
நானும் அப்பாவுமா சேர்ந்து ஒவ்வொரு விஷயத்தையா பெருசாக்கும் போது கிடைக்குற திருப்தியும் சந்தோஷமும் வார்த்தையால சொல்ல முடியாது.
தேவாவும் அப்படியான ஒரு துணையா உன்னோட நல்லது கெட்டதில் இருப்பானு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு அதி.”
“கண்டிப்பா மா..”, என்றவனின் கன்னம் வருடியவராய் மகனிடம் நிச்சயதார்த்த வேலைகளைப் பற்றி பேசிவிட்டு சென்றார்.
அங்கு தேவாவிற்கோ இப்போதும் அவனின் கரங்களுக்குள் இருப்பதைப் போன்ற பிரம்மை. அந்த சில நொடி ஸ்பாரிசமும் அவனது வாசத்தை அவள் மேல் செலுத்தியிருந்தது.
வாசனைத் திரவியத்தை விட அவனின் நறுமணம் அவளை மொத்தமாய் மயக்குவதாய்.
எங்கிருந்தோ வந்தான் தன்னை பிடித்திருக்கிறது என்றான். திருமணம் செய்து கொள்ளலாம் என்றான்.
இப்போது தன் குடும்பத்தில் ஒருத்தனாகவே மாறி விட்டதைப் போன்று தோன்றுகிறது.
அதிலும் இத்தனை வருடத்தில் நானெல்லாம் எவ்வளவு மனோ திடம் உடையவள் தெரியுமா?
என்னால் என்னை நன்றாகவே பார்த்துக் கொள்ள முடியும் என்றெல்லாம் நினைத்திருந்தவளை ஒரு நொடி அவனது விழிகளை நேரடியாக பார்க்க முடியாத அளவிற்கு மாயம் செய்துள்ளான்.
பார்வையே இப்படியெனில் பேச்சோ வருவேனாவென்கிறது. இத்தனைக்கும் அவன் அவனாக தான் இருக்கிறான்.
அவளை ஈர்ப்பதற்கான சிறு முயற்சி கூட இல்லை.
ஆனால் அவன்பால் அவளை அதிகம் ஈர்த்தது அவள் திரும்பத் திரும்ப தன் நம்பிக்கையின்மையையும் ஆழ் மனதின் பயங்களையும் வெளிப்படையாய் அல்லது மறைமுகமாய் கூறி உறுதிப்படுத்திக் கொள்ள விளைந்தாலும் சட்டென எரிச்சல் அடையாது அவளுக்கேற்றாற் போல நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஆறுதல் படுத்தும் குணம் தான்.
வரவேற்பறை நாற்காலியில் ஏதேதோ யோசனையில் அமர்ந்திருந்தவளின் காலடியில் அமர்ந்து மடியில் தலை சாய்த்துக் கொண்டான் அவினாஷ்.
சட்டென உணர்வு பெற்றவளாய் தனது கரம் கொண்டு அவனது தலையை வருடிய வண்ணம் தேவா தம்பியிடம்,
“என்ன அவி..”
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கா. மாமா ரொம்ப நல்ல மாதிரி இருக்கார் இல்ல?”
“ம்ம்..”
“உனக்கு சந்தோஷம் தான? எதை நினைச்சும் கவலைப் படாத என்ன..”
“நீயிருக்கும் போது எனக்கு என்ன டா கவலை. நான் நல்லா தான் இருக்கேன்.”
“மாமா பக்கத்தில் இருக்கும் போது உன் முகம் அவ்வளவு அழகா இருந்தது கா..”, என்றவன் தேவாவின் இருபுற கன்னத்தையும் பிடித்து ஆட்டிச் சிரித்தான்.
தனதறைக்கு வந்த அதிரன் பால்கனியில் நின்று நிலவை தான் வெறித்திருந்தான்.
அவனைப் பொறுத்தவரை பெண்கள் பற்றிய எண்ணங்கள் என்பதே வேறாய் இருந்தது இத்தனை நாட்களில்.
திருமணத்தை தள்ளி வைத்ததற்கு அதுவும் ஒரு காரணம். அளவில்லாமல் பேசுவார்கள் சிறு பிள்ளைத் தனமான செயல்கள் இருக்கும்.
குழந்தை தனம் என்ற பெயரில் தன் மூளையைத் தின்று விடுவார்கள்.
எப்போதும் எதற்கெடுத்தாலும் தன்னை நொய்த்துக் கொண்டே இருப்பார்கள் என்பதெல்லாம் தான் தன் மனைவி என்ற பொறுப்பில் வர போகிவறவளின் குணங்கள் என்று நினைத்திருந்தான்.
ஆனால் தேவா அவனுக்கு நிகரான ஒருத்தியாய் அதே நேரம் அவன் பின்புலத்தையும் பெயர் பதவியையும் விட அவனை அதிகமாய் எதிர்பார்க்கும் ஒருத்தி என்று புரிந்தது.
அவனறியாமல் அவளிடம் பேச்சும் நெருக்கமும் தானாகவே இயல்பாக வருவதெல்லாம் பெரும் ஆச்சரியம்.
அதிலும் உணவகத்தில் அவன் கண் பார்த்து பேசத் தயங்கிய அவளின் பதட்டம், அவன் விழி திருப்பிய நொடி அதிரனை அத்தனை அன்பாய் மொத்தமாய் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டதெல்லாம் கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டிருந்தானே!
அனைத்திற்கும் மேல் வீட்டு வாசலில் சுற்றம் மறந்து தனது கை வளைவில் நின்றவளின் விழிகளில் ஒரு துளி கள்ளமில்லையே!
அந்த கண்களின் ஏக்கமும் ஆசையும் அவனை தேவாவின் பால் மொத்தமாய் இழுத்திருந்தது.
அதிரனின் மறுநாளின் விடியல் தேவாவின் காலை வணக்கம் குறுஞ்செய்தியில் தான் விடிந்தது.
கட்டிலில் அமர்ந்த வண்ணம் இரு நொடிகள் அதையே பார்த்திருந்தவன் ஒரு பதிலும் அனுப்பாது எழுந்து வேலைகளைக் கவனிக்கச் சென்றிருந்தான்.
அலுவலகத்தில் நுழைந்த போதே வழக்கத்தை விட ஓரிரு கண்கள் தேவாவை வட்டமிட்டுச் செல்வதை உணர்ந்தவள் முந்தைய தினம் அதிரனோடு வெளியில் சென்றதன் விளைவு என்பது புரிந்து கண்டும் காணாமல் இருந்து கொண்டாள்.
மதிய உணவு நேரத்தில் எப்போதும் போல் பெண்கள் கூட்டணியோடு அமர்ந்து தனது உணவை உண்ண ஆரம்பித்திருக்க மெது மெதுவாய் பேச்சு தேவாவின் புறம் திரும்பியது.
“அப்பறம் தேவா இன்னைக்கு ஆபீஸோட ஹாட் நியூஸே நீ தான்.”
“நானா ஏன்?”
“இதான வேணாம்ங்கிறது.. தெரிஞ்சும் தெரியாத மாதிரியே பேசுறியே..”
“ம்ம் அப்போ இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லைனு அர்த்தம்.”, என்றவள் இயல்பாய் புன்னகைத்தாள்.
“அடிப்பாவி அதிரன் சார் காரில் ஏறின முதல் பொண்ணு நீயா தான் இருப்பனு காலையிலிருந்து பேசி மாளலை தெரியுமா?”
“அப்படியா? கடைசி பொண்ணும் நானா தான் இருப்பேன். போய் வேலையைப் பாருங்க..”, என்றதில் கேட்டதை சரியாய் புரிந்து கொள்ள முயற்சித்து வாயில் கை வைத்திருந்தது பெண்கள் அணி.
மதியத்திற்கு மேல் அலுவலகத்திற்கு வந்தவனிடம் சில கோப்புகளை ஒப்படைக்க உள்ளே வந்தவள் மெலிதாய் புன்னகைத்து கோப்புகளை அவன் முன் வைத்தாள்.
“மெசெஜில் தான் விஷ் எல்லாம் வருமா? நேரில் ஒண்ணும் இல்ல?”
“மெசெஜுக்கு பதில் வரலையே அதனால எதுவும் கிடையாது.”, என்றவள் புன்னகைக்க அதிரன் அவளிடம்,
“மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலேயே?”, என்றதற்கும் அமைதியான புன்னகை தான் பதிலாய் இருந்தது.
“அம்மா தேதி பார்த்துட்டதா சொன்னாங்க. பதினைஞ்சு நாளில் நிச்சயதார்த்தம் இரண்டு மாசத்தில் கல்யாணம்.”
“!!!”
“நாளைக்கு நிச்சயதார்த்த புடவை வாங்க போலாம்னு சொன்னாங்க. மார்னிங் நீ ஆபீஸ் வர வேண்டாம். கடைக்கு போயிட்டு மதியத்துக்கு மேல என்னோடவே ஆபீஸ் வந்துரு.”
“ம்ம் சரிங்க. அண்ட் ஒரு விஷயம்..”
“என்ன?”, என்றதில் உணவு நேர உரையாடலைப் பற்றிக் கூற கோப்புகளைப் படித்திருந்தவன் சட்டென அவளை நிமிர்ந்து பார்த்ததில் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
“தேவையில்லாத பேச்சை வளர விட வேண்டாமேனு தான்..”
“நிச்சயதார்த்ததுக்கே எப்படியும் எல்லாருக்கும் தெரிஞ்சுரும். சோ ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல.”
“ம்ம்..”, என்றவள் கோப்புகளை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராக அவளது வளையலின் இடைவெளியில் தனது விரல் விட்டு பிடித்த படி தேவாவைப் பார்த்தவன்,
“யூ ஆர் டூயிங் சம்திங் ஆன் மீ.. என்னனு எனக்குத் தெரியலை. ஆனால் அது என்னவாயிருந்தாலும் ஐ லைக் இட்.”, என்றதில் முகம் சிவக்க நின்றவள்,
“உண்மை தான் நீங்களும் அதையே தான் எனக்கு பண்றீங்க. இதெல்லாம் இன்னும் எப்படி ஹேண்டில் பண்றதுனு எனக்குத் தெரியலை.”
“அதனால தான் குட்மார்னிங் மெசேஜ் எல்லாம் வருதா?”
“ரொம்ப பர்சனலா ஃபீல் பண்ணீங்களா?”, என்றவள் அவனது பழுப்பு விழிகளையேப் பார்த்திருக்க அமைதியாய் ஆம் என்ற பதிலை அந்தக் பழுப்பு விழிகள் அவளுக்கு கூறியது.
“இனி.. தினமும் மெசெஜ் பண்றேன்.”, என்றதில் அவளைப் பார்த்தவனின் பார்வை பெண்ணவளின் உயிரைத் தொடுவதாய்.
“நான் இன்னும் பதில் சொல்லலையே?”
“உங்க கண்ணு ஆமானு சொல்லிடுச்சு.”
“அப்படியா அது மட்டும் தான் சொல்லுதா? இல்ல வேற எதாவதும்?”, என்றக் கேள்விக்கு பதில் கூறத் தெரியாதவளாய் வெளியே செல்ல எத்தனித்த நேரம் அதிரனின் கைப்பேசி ஒலியெழுப்ப அதில் கவனம் செலுத்தியவன் முகம் இறுக இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.
“வருஷத்துக்கு ஒரு தடவை இல்ல இரண்டு தடவை இதுவே வேலையா போச்சு இவங்களுக்கு.
அதென்ன எப்போ பார்த்தாலும் லோட் ஏத்துற நேரத்துக்கு எதாவது பிரச்சனை பண்றது. சரி நா வரேன் வை..”
“முக்கியமான வேலை. நான் வரேன் ரஞ்சனா.”, என்றவனின் வலக்கரத்தைப் பற்றி இரு கரங்களாலும் லேசாய் அழுத்திக் கொடுத்தவள் நகர்ந்து அவன் செல்வதற்கு வழி விட மெலிதான புன்னகையோடு கிளம்பியிருந்தான்.
அதன் பின் அதிரனிடம் இருந்து எந்தவித அழைப்போ குறுஞ்செய்தியோ வராமல் போக இரவெல்லாம் ஒரு வித பதட்டம் தேவாவை சூழ்ந்து கொண்டது.
பெற்றோரின் இறப்பிற்கு பின் அவளுக்கும் அவினாஷிற்கும் இது மாற்ற முடியாத ஒன்றாய் மாறிவிட்டது.
சாதாரணமான நேரங்கள் கூட ‘என்னவோ ஏதோ’ என தேவையற்ற அத்தனை சிந்தனைகள் அவர்களைப் போட்டு அலை கழிக்கும்.
காலையிலும் சோர்வாய் எழுந்தவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வேலையைக் கவனிக்க காத்யாயினியின் எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
“ஹலோ ம்மா சொல்லுங்க..”
“இன்னும் அம்மா தானா? அத்தை இல்லையா?”
“எப்பவுமே அம்மா தான்.”, என்றதில் காத்யாயினி சிரித்தார்.
“அதி சொல்லிருப்பானே மா. இன்னைக்கு துணி எடுக்கப் போகணும்னு.”
“ஆமா மா சொன்னாங்க..”
“நீ தயாரா இரு நாங்க ஒரு ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துருவோம்.”
“சரி ம்மா..”, என்றவளுக்கு அதிரனைப் பார்க்க போகிறோம் என்பதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டது.
கூறியது போல் சரியான நேரத்திற்கு கார் வந்திருக்க தேவா வாசலுக்குச் சென்று அவர்களை உள்ளே அழைப்பதற்காகச் சென்றாள்.
ட்ரைவரோடு காத்யாயினி கயல்விழி மற்றும் காயத்ரி தான் இருந்தனர்.
மூவரையும் உள்ளே அழைக்க எவ்வித பந்தாவும் இன்றி ஓட்டுநரின் உதவியோடு காத்யாயினியையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
காரில் அதிரன் இல்லை என்றதுமே வாடிப் போன தேவாவின் முகத்தைக் குறித்துக் கொண்டவராய் காத்யாயினி அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார்.
error: Content is protected !!