Skip to content
Post Views: 5,717
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
மு.வ விளக்க உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.”
பெண்ணின் குழந்தை தனம் ஒருவிதம் என்றால் இயல்பிலேயே பொறுப்புணர்ச்சி நிறைந்த ஒருத்தியின் முதிர்ந்த அன்பு அலாதி சுகம் தான் என்பதை அதிரன் ஒவ்வொரு நாளும் உணர்ந்தான்.
மிக நேர்த்தியான ஒருத்தி வெளி உலகத்தில் யாரையும் தன்னை விட்டு இரண்டு அடி தள்ளி நிறுத்தும் ஒருத்தி தன்னோடு தனக்கான பொழுதுகளில் அவனை மொத்தமாய் சார்ந்திருப்பதை வெகுவாய் ரசித்தான்.
Advertisement
அதிலும் இப்போது பாடல்கள் எல்லாம் காதலைத் தாண்டிய அடுத்தக் கட்ட நிலையை எட்டியிருந்தன.
முதல் நாள் அப்படியான ஒரு பாடலை அவன் அனுப்பியிருக்க அதைப் பார்த்தவள் அடுத்த நொடி அவனுக்கு அழைத்திருந்தாள்.
“அதி, காலையிலேயே என்ன வேலை இது..”
Advertisement
“என்ன டி எனக்கு இதை தான் இன்னைக்கு அனுப்பத் தோணுச்சு..”
Advertisement
“உங்களை..”
“இதுக்கே வா?! நம்ம பெட் ரூம் ப்ளே லிஸ்ட் எல்லாம் இன்னும் பயங்கரமா இருக்கு திமிரழகி.”
“நீங்க இப்படியெல்லாம் பண்ணினால் நான்..”
Advertisement
“நீ என்ன பண்ணுவ?”, என்றவன் தூக்க கலக்கத்தில் இருந்த குரல் இன்னுமாய் படுத்தியெடுத்தது.
“சொல்லு என்ன பண்ணுவ?”
“ஒண்ணுமில்லை நான் வைக்குறேன்.”, என்றவள் அழைப்பைத் துண்டித்து மீண்டுமாய் அந்த வரிகளைத் தான் கேட்டிருந்தாள்.
“அட மேல் உதட்டை கீழ் உதட்டை ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி என்னென்னமோ ஆகும்
இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும் இடையில் உள்ள மோகம் முத்தத் தேனில் மூழ்க முன்னேறும்”
இரவு முழுவதுமான அலைப்பேசி பேச்சுகள் கிடையாது. குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் கிடையாது.
அலுவல் நேரத்தில் பார்ப்பதும் கிடைக்கும் நேரத்தில் இரு வார்த்தை பேசுவதற்குமே இருவருக்குமான நெருக்கம் என்பது வார்த்தைகளில் கூற முடியாத அளவு அதிகரித்திருந்தது.
அன்பைக் கொடுப்பதும் பெறுவதும் ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் கிடைக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவர்களாய் இருவரின் அன்பு பரிமாற்றம் இருந்ததே அதன் முக்கிய காரணம்.
திருமணத்திற்கான புடவை எடுக்க அன்று செல்வதாய் இருக்க மொத்த குடும்பமும் தேவா மற்றும் அவினாஷோடு சிறுமுகைக்கு கிளம்பியிருந்தது.
அதிரன் தேவா சாருகேஷ் அவினாஷ் மற்றும் காத்யாயினி ஒரு காரிலும் கயல்விழி காயத்ரி அவர்கள் கணவர்களோடு ஒரு காரிலுமாய் சென்றனர்.
அங்கு சென்று சொந்த பந்தங்களுக்கு வைத்துக் கொடுக்க வேண்டிய புடவை எண்ணிக்கையைக் கூறி அதை முதலில் எடுத்து வைத்திருந்தனர்.
அதன் பின் கயல்விழி காயத்ரி காத்யாயினி மூவருக்குமாய் புடவையை எடுத்திருக்க பொறுமையாய் தேவாவிற்குத் தேர்ந்தெடுக்கலாம் என்று அனைவருமாய் அமர்ந்த நேரம் தனது கைப்பேசியை எடுத்து ஒரு டிசைனை நெசவாளரிடம் காட்டினான் அதிரன்.
நிறம் பார்டர் உடல் முழுக்க எப்படியிருக்க வேண்டும் என அத்தனை விவரங்களும் அதில் இருக்க நெய்து நான்கு நாட்களில் தருவதாய் கூறினார்.
தேவாவே விழி விரித்து அமர்ந்திருக்க மற்றவர்களைப் பற்றி கூறவும் வேண்டுமா?
“உங்க அண்ணனை என்னவோனு நினைச்சேன். இப்படி பொசுக்குனு குடும்பஸ்தனுக்கு எல்லாம் ஆப்பு தயார் பண்ணிட்டாரே டி?”
“ம்ம் பார்த்து கத்துக்கோங்க. கல்யாணம் ஆகி இத்தனை வருசத்தில் ஒரு புடவை பார்த்து எடுத்துக் கொடுத்துருப்பீங்களா?”
“ண்ணா விரைப்பாவே திரியுறவங்களை நம்பவே கூடாதுனு சொல்றது சரியா தான் இருக்கு.”
“ம்ம் இந்த விஷயத்தில் நானே உங்க கட்சி தான் மாமா எங்க அண்ணனா இது!!”, என்ற கயல்விழி தேவாவைப் பார்த்து தலையாட்டி புன்னகைத்தாள்.
“முகூர்த்தப் புடவை சொல்லியாச்சு. மத்ததெல்லாம் நீங்க பார்த்து எடுங்க.”, என்ற அதிரனின் குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் புடவையில் கவனம் செலுத்தினர்.
கயலும் காயத்ரியும் ஒவ்வொரு புடவையாய் வைத்துக் காட்ட எதிலுமே அதிரனின் முகத்தில் திருப்தி இருந்ததாய் தோன்றவில்லை தேவாவிற்கு.
இறுதியாய் ஒரு ஆறேழு பட்டுப் புடவைகள் அவனுக்கு பிடித்தது என்று அவன் பார்வையில் கண்டுகொண்ட திருப்தியில் தேர்ந்தெடுத்து முடித்திருந்தாள் தேவா.
“ம்மா லேடிஸ்க்கே ஒரு நாளை முடிச்சு விட்டீங்க. எங்களுக்கு நாங்க எப்போ எடுத்துக்குறது?”
“போலாம் டா இப்போ நேரா போயிட்டு எடுத்துட்டே வீட்டுக்கு போலாம்.”, என்ற படி அனைவருமாய் வெளியே நகர அதிரன் பின் தங்கி தேவாவையும் நிறுத்தினான்.
“அந்த கருப்பு புடவையை தனியா பேக் பண்ணி கொடுங்க..”
“அது எதுக்கு நிறையவே எடுத்தாச்சுங்க..”, என்றதில் அவன் பார்வை கூறும் செய்தி அவளுக்குப் புரியாமல் போனது.
“இதை எப்போ உனக்கு கட்டிக்கத் தோணுதோ அப்போ கட்டிக்கோ.”, என்றவன் வேறேதும் கூறாமல் அவளோடு வெளியே சென்றிருந்தான்.
“எதுக்குங்க இது..”
“ப்ளக் என்னோட ஃபேவெரட் கலர் அதான்.”
“அதுக்காக பட்டில் இவ்வளவு விலை கொடுத்து எடுக்கணுமா?”
“ரொம்ப கஷ்டம்..”, என்றவன் அத்தோடு பேச்சை முடித்து காரில் ஏறியிருந்தான். தேவாவின் எண்ணம் மொத்தமும் அதைப் பற்றியே இருக்க காரில் அமைதியாய் யோசித்த படி இருந்தவளைப் பார்த்து எழுந்த சிரிப்பை கட்டுப் படுத்துவது சிரமமாய் இருந்தது அதிரனுக்கு.
ஆண்கள் அனைவருக்குமான உடைகளைத் தேர்ந்தெடுத்து முடித்து வீட்டிற்கு வர இரவை எட்டியிருந்தது.
பத்திரிக்கைகள் கொடுக்ககும் வேலை ஒரு புறம் தொடங்கியிருக்க தேவா இப்போது மருத்துவ கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்ததால் அதிரனும் அவளும் சந்திக்கும் பொழுதுகள் வெகுவாய் குறைந்து போனது.
தேவா அதிரனை மிகவும் தேடினாலும் அவனை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாது தன் வேலைகளைக் கவனித்திருக்க ஒரு வாரத்திற்குப் பின் அதிரனே அவளுக்கு அழைத்திருந்தான்.
“அதி..”, என்றவளின் குரல் அன்றைய அத்தனை சோர்வுகளையும் போக்கியிருந்தது.
“மிஸ் பண்ணியா டி நீ?”
“ரொம்ப..”
“பார்த்தா அப்படி தெரியல. ஒரு கால் இல்ல மெசெஜ் இல்ல..”
“மார்னிங் மெசெஜ் அனுப்பிட்டு தான இருக்கோம்.”, என்றவளின் குரலில் லேசான சிரிப்பு.
“ஆங் சொல்லு உனக்கு டான்ஸ் ஆட வருமா?”
“வாட்?”
“சொல்லு டி தெரியுமா தெரியாதா?”
“ஓரளவுக்கு..”
“தட்ஸ் க்ரேட்.. ஓகே பாய்..”
“ஹே.. ஏன் கேட்டீங்கனு சொல்லிட்டு போங்க..”
“வேற எதுக்கு நாம டான்ஸ் ஆடுறதுக்கு தான்.”
“விளையாடாதீங்க..”
“ப்ளே லிஸ்ட் முழுசா ரெடி. ஒரு பாட்டு கேட்கும் போது தான் உன்கிட்ட இதை கேட்கவே இல்லையேனு நியாபகம் வந்தது.”
“அதி ரிசெப்ஷன்ல நான் எல்லாம் ஆடுறதா இல்ல..”
“வெயிட்.. வாட்?”
“என்ன அதுக்கு தான கேட்குறீங்க.”
“மக்கு..”
“ஹேய்…”
“இது நமக்கான ப்ளேலிஸ்ட் நமக்காக மட்டும்.. என்னைப் பார்த்தா ஊரையே கூப்பிட்டு வைச்சு எல்லார் முன்னாடியும் டான்ஸ் ஆடுறவன் மாதிரி இருக்கா உனக்கு?”
“ஓ! சாரி மிஸ்டர் இன்ட்ரோவெர்ட் மறந்துட்டேன்.”, என்றவள் கலகலத்துச் சிரிக்க அதிரனோ,
“இந்த இன்ட்ரோவெர்ட் அவனுக்குப் பிடிச்ச பொண்ணோட அவனுக்கு பிடிச்ச மாதிரி வாழுறதுக்கு மொத்தமா தயாரா ஆகிட்டான். கெட் ரெடி மை கேர்ள்.”, என்று அழைப்பைத் துண்டித்திருக்க தேவாவிற்கு எப்போதும் போல் முகம் மொத்தமும் வெம்மை பரவிக் கிடந்தது.
அன்று கயல்விழியும் காயத்ரியும் தேவாவோடு வெளியே செல்ல திட்டமிட்டு மூவருமாய் சினிமா ஹோட்டல் என சுற்றி வந்தனர்.
“படம் நல்லாயிருந்தது இல்ல அண்ணி.. இப்போ இந்த மாதிரி லவ் படங்கள் ரொம்ப கம்மி ஆகிடுச்சு..”
“ஆமா காயூ. நான் இப்படி படத்துக்கு போறதெல்லாம் ரொம்ப ரேர். அவியை அவன் ப்ரெண்டோட போயிட்டு வானு அனுப்பி விட்டுருவேன்.”
“சரி எங்களுக்கு உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க.”, என்ற கயல் கண்சிமிட்டினாள்.
“அண்ணி..”
“சும்மா சொல்லுங்க நாங்க யாருக்கும் சொல்ல மாட்டோம்.”
“நான் சொல்றதெல்லாம் கேட்டா உங்களுக்கு கிரிஞ்ச்சா இருக்கும். அதனால ஒரே வரியில் சொல்லிடுறேன்.”
“?!”
“நாங்க இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எந்தளவு அடிக்டட்ங்கிறது ரொம்ப ரொம்ப ப்ரைவேட்”, என்றதில் பெண்கள் இருவரும் விழி விரித்தனர்.
“வாவ் அண்ணி!! எங்க அதி அண்ணாவா உங்களை இப்படி சொல்ல வைக்குறது!!”
“நீங்க பார்க்குறவர் இல்ல எனக்கான அதிரன்..”, என்றவளின் முகம் அவ்வளவு பூரிப்பாய் இருந்தது.
“ஒரு வகையில் இது எதிர் பார்த்தது தான். அம்மாவை இப்படி கவனிச்சுக்குற பையன் பொண்டாட்டியைக் கவனிக்காமயா?”
“அப்படியில்ல அண்ணி எப்பவும் ஒரு ஆம்பளை அவங்க அம்மாவை நடத்துற மாதிரி பொண்டாட்டியை நடத்த முடியாது நடத்தவும் கூடாது.
அவங்க அப்பா அம்மாவை நடத்தின மாதிரி நடத்தனும் இல்ல அவன் மகளை அவ புருஷன் எப்படி நடத்தணும்னு நினைக்குறானோ அப்படி நடத்தணும்.”
“!!!”
“அதை விட அவனைப் பார்த்து எந்த விஷயத்துக்கும் அவன் பொண்டாட்டி பயப்படாத மாதிரி நடத்தணும்.
இதை சொன்னால் சண்டை வரும். இதை சொன்னால் கோபப்படுவாரு.
இந்தப் பேச்சு பேசினால் என்னை சந்தேகப் படுவாருனு எந்த தயக்கமும் இல்லாம என்னால என் புருஷன்கிட்ட போய் நிக்க முடியணும்.
உலகமே நமக்கு எதிரா இருக்குற நிலைமையில் கூட நம்ம பக்க நியாயம் தெரிஞ்சு நான் இருக்கேன் மா பார்த்துக்கலாம்னு சொல்லணும். உங்க அண்ணா அப்படிபட்டவர் தான்.”, என்றவள் புன்னகைத்தாள்.
“நீங்க பேசுறதெல்லாம் சாருகேஷ் கேட்டான்னால் உங்களை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடிடுவான்.”
“ஏன் அண்ணி..”
“அவன் அண்ணனுக்கு பொண்டாட்டியா வர்றவங்க அவரோட ஹோம்னு பீல் பண்ண வைக்கணும்னு சொல்லுவான். நீங்க நிஜமாவே அண்ணாவோட ஹோம் தான் அண்ணி.”, என்றவர்கள் தேவாவின் கன்னம் கிள்ளிச் சிரித்தனர்.
error: Content is protected !!