Skip to content
Post Views: 5,624
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்
மு.வ விளக்க உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.”
அத்தனை ஆர்பாட்டங்களுக்கும் காரணமான திருமண நாளும் வந்துவிட்டிருந்தது.
அதிரனின் வீடு சொந்த பந்தங்களால் நிறைந்திருக்க பெண் வீட்டிற்கும் இங்கேயுமாய் ஆட்கள் போய் வந்த வண்ணமிருக்க ஒரு சடங்குகளையும் விடாமல் அவர்கள் முறைப்படி ஒவ்வொன்றும் செய்யப்பட்டது.
Advertisement
அதிரன் பெரும்பாலும் அலுவலக அறைக்குள் நுழைந்து வந்தவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வான்.
அவன் வெளியில் இல்லாமல் இருப்பதே நல்லது என்ற வகையில் காத்யாயினியும் அவன் போக்கில் விட்டு விட்டார்.
இங்கு தேவாவும் அவினாஷும் அவளுக்கான உடைகளை எல்லாம் எடுத்து வைத்து பிரிவை நினைத்து அழுது கரைந்து என அன்றைய தினம் கடந்திருந்தது.
Advertisement
நாளை மறுநாள் திருமணம் விடிந்தால் மதியத்திற்கு மேல் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் அதன் பின் பேசுவதோ குறுஞ்செய்தியோ வாய்ப்பே இல்லை எனும் நிலையில் பெற்றோரின் நினைவிலும் தம்பியின் மீதான கவலையிலும் அதிரனை வெகுவாய் தேடியது தேவாவிற்கு.
Advertisement
அவன் நிலை தெரியாது தொந்தரவு செய்ய வேண்டாம் என அவள் தன்னைக் கட்டுப்படுத்திய படி வேலைகளைக் கவனித்திருக்க அழைப்பு மணி சத்தத்தில் அவினாஷ் சென்று கதவைத் திறக்க அதிரனைப் பார்த்தவன் புன்னகை முகமாய் வரவேற்று அமர வைத்து தமக்கையை அழைத்தான்.
அவனை எதிர் பாராதவளாய் விழிகளுக்குள் அவனை நிறைத்த படி வந்து வரவேற்றாள் தேவா.
“இரண்டு பேரும் தயாராயிட்டீங்களா?”
Advertisement
“ஆமா மாமா எல்லாமே எடுத்து வைச்சாச்சு அக்காக்கு.”
“அவி..”
“ம்ம்?”
“உனக்கு இங்கே கிடைச்ச நல்ல ஆஃபரை விட்டுட்டு சென்னை வேலை தான் வேணும்னு கேட்டியாமே?”, என்றதில் தேவா தம்பியை அதிர்ச்சியாய் பார்க்க அவனோ ஒன்றும் கூறாமல் தலை கவிழ்ந்தான்.
“சொல்லு. ஏன் அந்த கம்பெனி வேண்டாம்.”
“அது.. மாமா..சும்மா.. சென்னை போலாமேனு..”
“இது ரொம்ப நல்ல கம்பெனி. உனக்கு கேம்பஸிலேயே இந்த கம்பெனி கிடைக்குறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். ஒழுங்கா அந்த வேலைக்கு போ.”
“என்னால இங்கே தனியா இருக்க முடியாது மாமா..”, என்றவன் தயங்கித் தயங்கி கூற அதிரனோ,
“இதை என்கிட்ட வந்து சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்டியா?”
“!!”
“சொல்லு.. கேட்டுருக்கலாம் தான?”
“சாரி மாமா..”
“இட்ஸ் ஓகே அவங்களோட ஆஃபர் லெட்டரை அக்செப்ட் பண்ணு.”
“அண்ட் இங்கேயிருக்குற உன் திங்க்ஸ் எல்லாமே எடுத்து வைச்சுக்கோ நம்ம அவுட் ஹவுஸில் தான் நீ தங்க போற..”
“அதெல்லாம் வேண்டாம் மாமா..”, என்று பட்டென மறுத்தவனை விழி நிமிர்த்திப் பார்த்தான் அதிரன்.
“உன் அக்கா தான் அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க போறா? அங்கே வர்றதுக்கு உனக்கு என்ன பிரச்சனை?”
“சொல்லு ரஞ்சனா..”, என்றவன் சிலையாய் நின்று நடப்பதைக் கவனித்திருந்தவளை பேச்சில் இழுத்திருந்தான்.
“அவி மாமா சொன்னா கேளேன். ஏன் எதாவது சொல்லிட்டே இருக்க?”
“அக்கா உனக்கு கஷ்டம் வேண்டாம்.”, என்றதில் இருக்கையில் இருந்து எழுந்த அதிரன்,
“உன் வயசு சில விஷயங்களை ஏத்துக்க கஷ்டப்படுறது எனக்கு புரியுது. உனக்கு யாரும் எந்த உதவியும் பண்ணலை.
நீ யாருக்கும் கஷ்டத்தையும் கொடுக்கலை.
இங்கே தனியா இருக்குறதை அங்கே வந்து இருந்துக்கோ.
உன்னை நீயே பார்த்துக்கோ. உனக்கு கல்யாணம் ஆனப்பறம் திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்துரு. இவ்வளவு தான் விஷயம். புரியுதா?”
“…”
அவினாஷிற்குத் தான் வராமல் அதிரன் தன்னை விடப் போவதில்லை என்பது புரிய வருவதாய் கூறித் தலையசைத்தான்.
அவினாஷிற்கு சற்று தனிமை தேவைப்பட அவன் போக்கில் வெளியில் சென்றிருந்தான்.
அப்போதும் தேவா எங்கோ வெறித்த படி ஏதோ நினைவில் இருக்க அவளருகில் வந்து லேசாய் கன்னம் தட்டினான் அதிரன்.
கனவிலிருந்து விழித்தவளாய் அவனைப் பார்த்தவள் அவனை இறுக அணைத்திருந்தாள்.
இப்போது அதிரனின் இரு கரங்களுமே அவளை தன்னோடு இன்னுமாய் சேர்த்து இறுக்கியிருந்தன.
“அதி..”
“எதுவும் பேசாத. ஜஸ்ட் ஃபீல் மை ப்ரசென்ஸ்..”,என்றவன் முழுதாய் அவளைத் தன்னோடு சேர்த்திருந்தான்.
“கட்டுப்பாடெல்லாம் முடிஞ்சு போச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முத்தம் கூட தரலைனால் நான் என்ன ஆளு?”, என்றதில் கடினப்பட்டு அவனிடமிருந்து தன்னைப் பிரித்தவள் விழி விரித்து அவனைப் பார்த்திருக்க அந்தக் கண்களைப் பார்த்த வண்ணம் அவள் இதழோடு தன் இதழ் சேர்த்திருந்தான் அதிரன்.
மென்மை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாதவனாய், ஏதோ அவளுக்காக ஜென்ம ஜென்மமாய் ஏங்கிக் கிடந்தவன் போன்றதான அவனின் முத்தத்திற்கு அவளும் அவனுக்கு இணையாய் ஏங்கிக் கிடந்தவள் போன்று தன்னை மொத்தமாய் ஒப்படைத்திருந்தாள்.
முத்தம் முடிவதற்கான வழி தெரியாமல் போக அதிரனின் கைப்பேசி ஒலித்ததில் தான் இருவரும் நினைவிற்கு வந்திருந்தனர்.
தேவா விழிகள் மூடிய படி அவனின் நெற்றி முட்டியிருக்க அவளது கழுத்து மச்சத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து பெண்ணவளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான்.
“இப்போ பேசு..”
“மூச்சே விட முடில. எங்கே பேசுறது.”
“வெரி சாரி நினைச்சாலும் சாப்ட்டா ஹேண்டில் பண்ண வர மாட்டேங்குது.”
“அதி.. நீங்க..”
“ரொம்ப அயோக்கியனா இருக்கேன். ஐ நோ..”
“பரவால்ல நான் சமாளிச்சுக்குறேன்.”, என்றவள் மெலிதாய் புன்னகைக்க நெற்றியிலும் கன்னத்திலும் இதழ் பதித்து நகர்ந்து கொண்டான் அதிரன்.
“நாளைக்கு பாட்டு உன் டர்ன்..”
“எனனால முடியாது. அதுவும் நீங்க செலெக்ட் பண்றதெல்லாம்.. ம்ஹும்..”
“சொன்னால் சொன்னது தான். நாளைக்கு மட்டும் என்னை Receiveing sideல் வை.”, என்றவன் கண்சிமிட்டி அவளிடம் விடை பெற்றுக் கிளம்பியிருந்தான்.
அதிரன் கிளம்புவதைப் பார்த்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான் அவினாஷ்.
தம்பிக்காக காத்திருந்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் கைகளைக் கட்டியபடி அவன் பேசுவதற்காக காத்திருந்தாள்.
“சாரிக்கா.. உன்கிட்ட சொல்லாதது என் தப்பு தான்.”
“என்னை விட்டுட்டு போற அளவுக்கு பெரிய மனுசன் ஆயிட்ட இல்ல அவி.”
“உன்னைத் தாண்டி எனக்கு உலகமே தெரியாது க்கா..”, என்றவன் அவளைக் கட்டிக் கொண்டு அழ அவனது மனநிலை உணர்ந்தவளாய் மேலும் அவனை காயப்படுத்தாமல் அமைதியாய் அவனது முதுகை வருடிக் கொடுத்தாள்.
“நான் இருக்குற வரை நீ எங்கே போறதைப் பத்தியும் யோசிக்காத அவி.
அவங்க சொன்ன மாதிரி அங்கேயே வந்துரு. உனக்குப் பிடிக்காத மாதிரி அங்கே எதுவும் நடந்தா நானே உன்னை அதுக்கு மேல காட்டாயப் படுத்த மாட்டேன். சரியா?”
“ம்ம்..”, என்றவன் அரை மனதாய் சம்மதித்து அவனுக்கான பொருட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தான்.
காலை பொழுது விடிந்து கண் விழித்தவள் கைப்பேசியும் கையுமாய் வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.
அவனுக்காக அவன் கேட்டது போல் ஒரு பாடலுக்கு எங்கு செல்வாள்!
அதிலும் இப்போதெல்லாம் அவன் அனுப்பும் பாடல்கள் பள்ளிப் பருவத்தில் இதெல்லாம் நீ கேட்கக் கூடாது என்று பயமுறுத்தி வைக்கப் பட்ட பாடல்கள்.
காதலும் உரிமையும் கொட்டிக் கிடக்கும் வரிகள் இப்போது அது போன்ற பாடலை அனுப்பவதற்கே அவளுக்கு வெட்கமாய் இருந்தது.
இருந்தும் அவனுக்காக செய்ய நினைத்தவள் ஒரு வழியாய் வீடியோவைத் தேடி எடுத்து அவனுக்கு அனுப்பி விட்டு கைப்பேசியை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு ஓடியிருந்தாள்.
அதிரனோ தனக்கு வந்த வீடியோவைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
அவன் சாதாரணமாக எதாவது அனுப்புவாள் என்று நினைத்திருக்க இதைப் பார்த்தவனுக்கு இன்னும் பித்து கொள்ளும் நிலை தான்.
“பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை
நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில்
மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்”
பதினொரு மணியளவிலேயே காயத்ரியும் கயல்விழியும் சில சொந்த பந்தங்களோடு வந்து தேவாவை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தேவாவே எப்படி அதிரனிடம் சிக்காமல் தப்பிப்பது என்று நினைத்துக் கொண்டிருக்க ப்ரீ வெட்டிங் போட்டோ என்று கூறி மண்டபத்தின் தோட்டப் பகுதியில் ஏற்கனவே அதிரன் அவளுக்காக காத்திருந்தான்.
“என்ன திமிரழகி எஸ்கேப் ஆக நினைச்ச போல?”
“இல்லையே அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.”
“திருட்டு முழி காட்டி கொடுத்துடுச்சு டி.”, என்றவனின் கண்கள் சிரிப்பில் நிறைந்திருந்தது.
“நீங்க கேட்டீங்க நான் அனுப்பினேன் அவ்வளவு தான்..”
“நான் பாட்டு தான் கேட்டேன். ரொமேன்டிக்கா அனுப்ப சொன்னேனா என்ன?”
“…”
“என்ன டி கேடி பதில் சொல்லு..”
“ரொம்ப கேலி பேசினால் நான் போறேன் போங்க.”, என்றவள் போட்டாகிராபர் சொன்னதைக் கேட்டு இன்னுமாய் அவனோடு ஒன்றிய படி மார்பில் கை வைத்து நின்றாள்.
“இந்த கழுத்தெலும்பும் மச்சமும் மனுஷனைப் பாடாபடுத்துது..”
“சுத்தியிருக்குற எல்லாரும் உங்களை நல்லவன்னு அப்பாவியா நம்பிட்டு இருக்காங்க..”
“ரொம்ப நல்லவன் டி நான். இல்லையா அப்போ?”
“ம்ஹும்..”
“கெட்டவன் என்ன பண்ணுவான் தெரியுமா?”
“ஹேய் சுப்..”
“என்னையே மிரட்டுற நீ?”
“பொண்டாட்டிக்கு பயப்படாத புருஷன் உலகத்திலே யாருமே இல்ல.”
“ம்ம் நீங்க சொன்னா சரிதானுங்கம்மினி..”, என்ற நேரம் போட்டோ எடுத்து முடித்திருக்க அதிரனிடமிருந்து தப்பித்தவளாய் காத்யாயினியைத் தேடிச் சென்றிருந்தாள் தேவா.
அவருக்கான அறையில் இருப்பதாய் சாருகேஷ் கூற கதவில் கை வைத்த நேரம் உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன.
“காதுக்கா இதெல்லாம் நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன். அன்னைக்கு அண்ணன்கிட்ட அதிரன் அப்படி பேசிப்புட்டானாமே!
அவன் தான் ஏதோ புது கிறுக்கில் மயங்கிப் போய் ஏதோ பேசினா நீயாவது எடுத்துச் சொல்லிருக்க வேணாம்.
அண்ணன் கேட்டதில் என்னத் தப்பிருக்கு இப்படி ஒரு பொண்ணை உன் மருமகளா ஆக்குறதை நினைச்சு எங்களுக்கெல்லாம் மனசே ஆறலை. என்னவோ போக்கா..”, என்ற நேரம் தேவா கதவைத் திறந்து உள்ளே சென்றிருந்தாள்.
“தேவா வா டா..”, என்ற காத்யாயினியின் பாதம் பணிந்து எழுந்தவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு காத்யாயினியிடம்,
“உங்களை ரெஸ்ட் தானம்மா எடுக்க சொன்னாங்க.ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக்குறீங்க.
இன்னும் நாளைக்கு இதை விட வேலை அதிகமா இருக்கும். நீங்க ரெஸ்ட் எடுங்க.”, என்றவள் அவரின் உதவியாளரைப் பார்க்க அவர் கட்டிலை தயார் செய்ய வந்ததில் அனைவருமாய் வெளியே சென்றிருந்தனர்.
“தேவா..”
“நம்ம மேல உண்மையாவே பாசம் வைச்சுருக்குறவங்க தேவையில்லாததை பேசி எதையும் குத்திக் கிளற மாட்டாங்க மா.
நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சுருங்க. ஆனாலும் இப்போ இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன். ரெஸ்ட் எடுங்க.”, என்றவள் புன்னகைக்க காத்யாயினி தன் மகனுக்கு ஏற்றவள் தான் இவள் என்ற எண்ணத்தில் சிரித்தார்
error: Content is protected !!