Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 9

அத்தியாயம் – 9

 

அலுவலக வேலை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினாள் ரஞ்சிதா.



Advertisement

சோஃபாவில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டு இருக்கும் தன் தோழியைக் கண்டு ரசித்து இதழை விரித்தாள்.

பாவம் சிந்து. இந்த வயசுல எத்தனை எத்தனை கஷ்டத்தை எல்லாம் கடந்து வந்துட்டா.

தூங்கும்போது குழந்தை மாதிரி இருக்கா என்று அவள் அருகே சென்று அவளைத் தொட்டு கம்மிய குரலில் உசுப்பினாள்.

Advertisement

அவ்ளோ அதிர்ந்து விழித்தாள்.

Advertisement

ஹே…ஹே…பயப்படாத டி நான் தான் நான் தான் என்று அவள் அருகே அமர்ந்து தலையை மென்மையாய் வருடினாள்.

சற்றே பயந்து பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

எப்போ வந்த என்று வியர்த்த முகத்தை அழுந்தத் துடைத்தாள்.

Advertisement

இப்போ தான் டி.

நீ இன்னும் பழசை மறக்கலையா? சிந்து.

அந்தச் சம்பவம் நடந்து எத்தனை வருஷம் ஆச்சு?

இப்படி அதையே நினச்சு ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற.

மீண்டு வாச்சிந்து என்றாள் ரஞ்சிதா.

நான் மட்டும் என்னடி அதை எல்லாம் வேண்டும் என்றா நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னல் மறக்க முடியவில்லை.

ஒரு பொண்ணு வாழ்க்கையில் எதை இழக்க கூடாதோ அதை நான் இழந்து இருக்கிறேன்னே, பின் எப்படி என்னால் மற்ற பெண்களைப் போலே சகஜமாக இருக்க முடியும்.

அது நீ வேண்டும் என்றே செய்யவில்லையே.

அது ஒரு விபரீதம். அவ்ளோ தான் எல்லாம் காலம் மறக்கச் செய்யும். கவலைக்கொள்ளதே டி சிந்து.

சரி அதை விடு பழய விஷயங்களைப் பேசாதே என்று சொல்லி விட்டு நானே அதைச் செய்கிறேன் பார்.

சரி டி.வேலைக்கு விக்ரம் சார் வர வேண்டான்னு சொன்னதா சொன்ன.

அப்பறம் திடீருன்னு கிளம்பி போய்ட்ட?

என்ன விஷயம் என்றாள் ரஞ்சிதா.

அத ஏண்டி கேக்குற.

நீ உன் ஆபீஸ்ல ரிசப்சன்னிஸ்ட் வேலை காலியா இருக்கு. சார் கிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொன்னியா.

ஆமாம் அது தான் தெரிஞ்ச கதை ஆச்சே நெக்ஸ்ட் என்றாள்.

ஹ்ம்ம்…என் நம்பர்க்கு விக்ரம் சார் கால் பண்ணாரு.

யாரு விக்ரம் சாரா!??என்று அதிர்ந்து வாயைப் பிளந்தாள்.

ஐயே….. ஏன் இப்படி வாயைப் பிளக்குற?

ஹே….என்ன சொல்ற டி நீ. விக்ரம் சார் எவ்ளோ பெரிய ஆளு.

உனக்குக் கால் பண்ணராறா என்னால நம்பவே முடியல என்றாள் ரஞ்சி.

ஹ்ம்ம்…அவர் யாராக வேண்டும் என்றாலும் இருந்துட்டு போகட்டும், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை.

எனக்கு வேண்டியது மரியாதை. அப்பறம் தான் எல்லாம்.

ஹ்ம்ம்…அதுவும் சரி தான். எப்போதும் நம்ம சுய மரியாதையை விட்டுக் கொடுக்ககூடாது.

அப்பறம் என்ன விக்ரம் சார் கிட்ட வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டியா?

ஈ…. என்று அசடு வழிய சிரித்தாள்.

அய்யே…என்ன டி சிரிப்பு இது.

இல்ல ரஞ்சி. மொதல்ல வர மாட்டேன்னு தான் சொன்னே.

ஹ்ம்ம்…சரி.. பின்னே என்ன?

பட் அவர் ஒரு டீலிங் போட்டாரு? அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.

என்ன அது என்றாள் ரஞ்சி சந்தேகத்துடன்.

பேசுன பணத்தை விட நாலு மடங்கு பணம் தரேன்னு விக்ரம் சொன்னாரு.

அதுக்கு…

அதனால…என்று நெளிந்தாள்.

ஏய்.. சொல்லி தொலை டி என்றாள் ரஞ்சி.

வேலைக்கு வரதா சம்மதிச்சிட்டேன் ரஞ்சி என்றாள் சிந்து.

அடி பாவி கெளரவம்…கெளரவமுன்னு இப்படி எல்லாரோட கெளரவத்தையும் குழித் தோண்டி புதச்சிட்டியே என்று நகைச்சுவையுடன் கூறி அவளை கிண்டல் செய்தாள் ரஞ்சிதா.

இருவரும்…ஒருவருக்கு ஒருவர் அடித்து பேசி சிரித்து விளையாடினார்.

பின்.. நீ அங்கேயே வேலைக்கு போ சிந்து.

நம்மக்கு இப்போ வேண்டியது பணம் மட்டும் தான்.

நீ ஒன்னும் குறுக்கு வழியில் சம்பாதிக்கல கஷ்டப்பட்டுத் தான் சம்பாரிக்க போற,

சோ நீ கவலைப்படாத உன் எல்லா பிரச்சனைகளும் கூடிய விரைவில் தீரும் என்றாள் ரஞ்சி…

சரி வாடி சாப்பிடலாம் என்றாள் சிந்து.

ஹ்ம்ம்…ஆமாம் டி எனக்கு கூட ரொம்ப பசிக்குது என்றாள் ரஞ்சி.

இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

அதற்கு பின்னும் பேசி பேசி நேரம் கடந்தது.

சரி வாச்சிந்து தூங்கலாம் நேரம் இப்போதே நள்ளிரவு பனிரெண்டயும் கடந்து விட்டது என்று விட்டு ரஞ்சிதா படுக்கையில் சரிந்தாள்.பாவம் வேலை செய்த அழுப்பில் உறங்கியும் போனாள்.

ஆனால் சிந்துவிற்குத் தான் உறக்கம் வரவில்லை.

அறையை விட்டு எழுந்தவள் ஜன்னலின் பக்கம் சென்று அமர்ந்தாள்.

காயும் நிலவை வெறிக்கப் பார்த்தாள்.

சுசிலா அம்மாக்கு என்ன ஆச்சு?

ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க?

இவ்ளோ பணம், பேர், புகழ் அந்தஸ்த்து எல்லாம் இருந்தும் ஏன் இந்த நிலை.

அப்படி என்ன தான் நடந்து இருக்கும் சுசிலா அம்மாவின் வாழ்வில்.

விக்ரம் சார் கண்ணில் இன்று நான் படாமல் தப்பித்து விட்டேன். ஆனால் இப்படி எத்தனை நாளுக்குத்தான் என்னால் ஓடி ஒழிய முடியும்.

இப்போது இருக்கும் நிலைமைக்கு இந்த வேலை எனக்கு மிகவும் முக்கியம்.

ஒரு வேளை விக்ரம் என்னை பார்த்து விட்டாள் நிச்சயம் என்னைப் பணியில் இருந்து நீக்கி விடுவார் என்றபடி பலவற்றை ஆலோசனை செய்துக் கொண்டு அந்த இரவை கழித்து இருந்தாள்.

பூந்தென்றல் இதமாக அவளை வருடிச் சென்றது.

ஏதோ ஒரு தனி வித உணர்வு அவளை தாக்கியது.

விக்கரம் திடீர் என்று தூக்கம் கலைந்து எழுந்தான்.

அதற்கு பின் அவனுக்கும் உறக்கம் வரவில்லை.

மீண்டும் அவன் நினைவில் அவள் குரல்…

விக்ரம் இந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரி அந்த வாயாடிப் பெண் தான் என்று தெரிந்தால் அவன் அவளை இதே போல் நேசிப்பனா?

அவள் மீது இருக்கும் வெறுப்பில் இனி அந்த குரலையே வெறுத்து ஒதுக்குவானா?

சிந்துவை விக்ரம் வெறுப்பதால் அவள் குரல் நினைவில் இல்லை.

ஒரு முறை கூட இந்த குரலை அவள் குரலோடு ஒப்பிட்டு இருந்து இருக்கலாம்.

அவன் தேடி கொண்டு இருப்பது அவன் அருகில் இருந்தும் அவனால் கண்டுக்கொள்ள முடியவில்லை.

ரஞ்சிதா தான் இந்த குரலுக்கு சொந்தக்காரி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான்.

அங்கும் அதே நிலா தென்றல் அவன்.

இங்கும் அதே நிலா தென்றல் இவள்.

இருவருக்கும் ஒரே போல் அந்த இரவு உறங்காமல் கடந்தது.

அடுத்த நாள் காலை

வழக்கம் போல்…சாலை போக்கு வரத்து நெரிசல்..

என்ன ஆச்சு?” ஆதவ்.

என்ன கூட்டம்.

ஒன்னும் இல்ல சார் சின்ன அச்சிட்டென்ட் போலே இருக்கு.

ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம்ச் சாட்டி கொள்கிறார்களேத் தவிர

இருவரும் விட்டு கொடுப்பதாய்த் தெரியவில்லை என்றான் ஆதவ்.

காற்றில் கலந்து அவன் செவியை தொட்டது அந்த மெல்லிசை.

ஆம் அவள் குரல்.அவளின் அதே குரல்.

விக்ரமின் கண்கள் விரிந்தன.

காரை விட்டு விரைந்து இறங்கினான் ரஞ்சிதா இங்க இருக்காங்களா?

அந்த கூட்டத்தில் இருந்து தான் ஒலிக்கிறது அந்த குரல்.

கூட்டத்தை நோக்கி வேக எட்டுக்கள் எடுத்து வைத்தான்.

மக்கள் மறைத்து இருக்க அந்த அளவுக்கு விக்ரமால் பார்க்க முடியவில்லை.

ஆனால் அந்த குரல் மட்டும் நன்கு காதில் ஒலித்தது.

எதிரே ஸ்கூட்டியில் நின்று இருந்தாள்.

அவன் இதழ் அவளை கண்டு மெல்ல புன்னகைப் புரிந்தது.

சிகப்பு நிறச் சுடிதாரில் தேவதையாய் தெரிந்தாள் ரஞ்சிதா.

அவன் மனதில் அவள் முகம் நன்கு பதிந்தது.

அருகில் நிற்கும் சிந்துவை அவன் கண்டு இருக்க வாய்ப்பில்லை.

வேறு வழி இன்றி சிந்துவின் பேச்சில் தோற்றவன், மன்னிப்பு கேட்டு விட்டு தன் வண்டியை எடுத்து சென்றான்.

சிந்து ஏதேர்ச்சியாக திரும்ப, கூட்டத்தில் நிற்கும் விக்ரமை கண்டுவிட்டாள்.

ஐயோ இவர் எங்கே இங்க?

ஒரு வேளை நான் சண்டை போடுவதைப் பார்த்து இருப்பாரோ.

ஏற்கனவே அவரை போதுமான அளவு அவமானப்படுத்தி இருக்கிறேன்.

இப்படி நான் சண்டை போடுவதை பார்த்தால் நிச்சயம் என்னை இன்னும் அதிகமாக வெறுப்பார் அவர் கண்ணில் படாமல் ஒளிந்துக்கொள்வோம் என்று அவன் கண்ணில் படாமல் ரஞ்சிதாவின் பின் தன்னை மறைத்துக்கொண்டாள் சிந்து.

ரஞ்சிதாவின் முகத்தையும், சிந்துவின் குரலையும் நேசிக்கிறான் விக்ரம்.

இது எங்கு கொண்டு போய் முடிக்குமோ?

 

தென்றல் மீண்டும் வீசும்….*

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!