Skip to content
Post Views: 5,078
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
மு.வ விளக்க உரை: வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.”
ஒரு வார விடுமுறைக்குப் பின் இருவருமே அன்று வேலைக்குச் செல்வதாய் இருந்தது. காலை எட்டு மணிக்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தாள் தேவா.
அப்போது தான் உறக்கம் கலைந்தவன் கண்ணாடி முன் தயாராகிக் கொண்டிருந்தவளைப் பார்த்து தலைக்கடியில் கை வைத்த வண்ணம் மறு கையால் கையசைத்தான்.
Advertisement
“என்ன டி இவ்வளவு சீக்கிரம்?”
“ஏன் சொல்ல மாட்டீங்க. நல்ல வானரங்களை மேய்க்குற வேலையை எனக்குக் கொடுத்துட்டு.”, என்றவள் அதிரனின் புறம் திரும்ப அதற்காகவே காத்திருந்தவனாய் இரு கை விரித்து மனைவியை அழைத்தான்.
அவனுக்குச் சளைக்காதவளாய் அடுத்த நொடி அவனருகில் சென்று அமர்ந்து கொண்டவள் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்துக் கொண்டாள்.
Advertisement
“நாளான்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும் அஃபிஷியலா ஒரு ப்ரோக்ராம் வைச்சுடலாம்.”
Advertisement
“ம்ம் சரிங்க.”
“ஏன் டல் அடிக்குற ரஞ்சு?”
“என்னால இந்தப் பொறுப்பை சரியா பண்ண முடியுமா அதி?”, என்றவளின் முடிக்கற்றைகளைக் காதிற்குப் பின் ஒதுக்கி விட்டவனாய்,
Advertisement
“ரஞ்சனாவால முடியாதுனால் யாராலயுமே முடியாது. உனக்குப் பின்னாடி உன் புருஷன் இருக்கான்னு மறந்துட்டியா?”
“புருஷனால மட்டும் தான் இதெல்லாமே சாத்தியம்.”, என்றவள் கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
தேவா கல்லூரி வேலைகளில் பிசியாகி விட அதிரனுக்கு அலுவல்கள் எக்கச்சக்கமாய் இருந்தன.
தொழில் சங்க மீட்டிங் ஒன்று அன்று இருக்க தெரிந்தவர்கள் அனைவரும் அதிரனுக்கு வாழ்த்து கூறி பேசி விட்டுச் சென்றனர்.
சிருஷ்டியும் அவள் தந்தையின் தொழில் சார்பாய் வந்திருக்க அவளது தந்தை மரியாதை நிமித்தம் வந்து அதிரனிடம் பேசிச் சென்றார்.
மீட்டிங் முடிந்த நேரத்தில் அதிரன் தனது கார் அருகில் சென்றவன் சிருஷ்டியின் குரலில் நின்று அவளை ஏறிட்டான்.
“வாழ்த்துக்கள் மிஸ்டர் அதிரன்.”
“தேங்க் யூ..”
“எனக்குத் தேவையில்லாத விஷயம் தான் ஆனாலும் கேட்காம இருக்க முடியலை.”
“..”
“இவ்வளவு அரொகெண்ட்டான உங்களுக்கு எப்படி உங்க எம்ப்ளாயி செட் ஆனாங்க?”
“…”
“ஸ்டேட்டஸ் எல்லாம் கண்ணுக்குத் தெரியலையா?”
“உங்களைப் பொருத்த வரை கல்யாணம்னால் என்ன சிருஷ்டி?”
“படிக்குறோம் வேலைக்குப் போறோம் அது மாதிரி நெக்ஸ்ட் ஃபேஸ் ஆஃப் லைஃப் வேற என்ன?”
“ம்ம் ரைட். அதில் உங்களோட எதிர்பார்ப்பு?”
“சேஃப் அண்ட் செக்யூர்ட்டான ஒரு வாழ்க்கை.”
“அதாவது கடைசி வரைக்கும் கஷ்டப்படாம பாதுகாப்பா பணம் நிறைஞ்ச ஒரு வாழ்க்கை. இல்லையா?”
“என்ன தப்பு? பணம் முக்கியமில்லனு சினிமா டயலாக் எல்லாம் பேசிறாதீங்க ப்ளீஸ்.”, என்றவளின் முகத்தில் ஏளனமான ஒரு புன்னகை.
“ச்ச ச்ச அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். பணம் தான் இங்கே எல்லாமே. ஆனால் அது எப்போ நம்மகிட்ட இருக்கும் எப்போ போகும்னு நாம சொல்ல முடியாது.
ஒரு வேளை என்னைக்காவது அது என்னை விட்டு போனால் அப்போ நான் கஷ்டப்படணும் இல்லையா?”
“!!”
“அந்த மாதிரியான கஷ்டம் வந்தால் என்கூட எனக்குத் துணையா நீங்க சொல்ற ஸ்டேட்டஸ் இருக்குற பொண்ணு நிப்பாளானு தெரியாது.
பட் என் ரஞ்சனா எந்த நிலைமையிலேயும் எனக்காக நிப்பா. ஃப்ரீ அட்வைஸ் தான் பிடிக்கலைனால் மறந்துருங்க.”
“..”
“உங்க பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும் போது யாரோட இருந்தா எந்தப் பிரச்சனையையும் சமாளிச்சுரலாம்னு ஒரு தைரியம் வருதோ அவங்களை சூஸ் பண்ணுங்க. லைஃப் வில் பி மோர் ப்யூட்டிஃபுல்.”, என்றவன் மெலிதான புன்னகையோடு காரைக் கிளப்பிச் சென்றிருந்தான்.
ஓரளவிற்கு கல்லூரியின் பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்தையும் புரிந்து கொண்டாள் தேவா.
தாளாளரோடு பேசிய வண்ணம் ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு பிரிவிற்குச் சென்ற நேரம் சாருகேஷ் ஒரு பெண்ணோடு அமர்ந்திருப்பது தெரிந்தது.
பெண்ணைக் கவனித்தவள் எதையோ யோசித்தப் படி தனது வேலையைக் கவனிக்க சற்று வேலை குறைந்த பின் மதிய உணவு இடைவேளையில் சாருகேஷிற்கு அழைத்தாள்.
“சொல்லுங்க அண்ணி..”
“என் ரூம்க்கு ஒரு நிமிஷம் வாயேன்.”
“ஓகே அண்ணி வரேன்.”
“ஹாய் அண்ணி..”
“கேஷா யாரு அந்த பொண்ணு?”
“எந்தப் பொண்ணு?”
“என்கிட்டேயே உன் நடிப்பை காட்டாத டா சொல்லு.”
“ஐஷு. என் ப்ரெண்ட் அண்ணி..”
“ப்ரெண்டா? நிஜமாவா?”
“என்னைப் போய் சந்தேகப் படுறீங்ளே?”
“உன்னைத் தான் முதல்ல சந்தேகப் படணுமே. சீரியஸா கேட்குறேன். சொல்லு..”
“அது வந்து அண்ணி.. நாங்க லவ் பண்றோம்..”
“!!!”
“அண்ணி ப்ளீஸ் அண்ணாகிட்ட சொல்லிராதீங்க..”
“கேஷா? உண்மையாவே நீ இதில் சீரியஸா தான் இருக்கியா?”
“என்ன அண்ணி இப்படி கேட்குறீங்க?”
“என்னை தப்பா நினைக்காத.. நினைச்சாலும் பரவால்ல. பட் ஜஸ்ட் செக் இது இரண்டு பக்கமும் உறுதியா இருக்குற ரிலேஷன்ஷிப்பா எனக்குத் தோணலை.”
“அண்ணி!!”
“என்கிட்ட இதுக்கு மேல எதுவும் கேட்காத. ஜஸ்ட் உன்னை சுத்தி என்ன நடக்குதுங்கிறதை நல்லா கவனி. தென் டிஸைட்.”, என்றவள் அத்தோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
பெரும் குழப்பத்தோடு அறை வாசலை அடைந்தவன் தேவாவின் குரலில் நின்று அவள் புறம் திரும்ப,
“எந்த நிலைமையிலேயும் உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்ங்கிறதை மறந்துறாத. அண்ட் ஐ மீன் இட்.”, என்றதில் அண்ணியின் அருகில் வந்தவன் கரம் பற்றி தோளில் தலை சாய்ந்து நிமிர்ந்தான்.
“உங்க எல்லாரையும் விட வாழ்க்கையில் எதுவும் முக்கியம் இல்ல அண்ணி.”, என்றவனின் தலைமுடி கலைத்து அனுப்பி வைத்தாள் தேவா.
மாலை அதிரனுக்கு முன்பாகவே வீட்டிற்கு தேவா வந்திருக்க அவனுக்கான பாடலோடு தயாராய் இருக்க உடை கூட மாற்றாதவன் அப்படியே பாடலோடும் மனைவியோடும் ஒன்றி விட்டிருந்தான்.
வெளி உலகிற்கு இன்ட்ரோவெர்ட்டான இருவரின் உலகம் என்பது மிக அற்புதமான ஒன்றாய் இருந்தது.
இப்போதெல்லாம் அதிரனை விட தேவாவிற்கு மிகப் பிடித்த ஒன்று அவர்கள் இருவருமாய் நடனம் ஆடுவது.
மூச்சு வாங்க மெத்தையில் விழுந்தவளின் பக்கவாட்டில் அவள் புறமாய் திரும்பிப் படுத்திருந்தவனின் முகத்தில் மென் புன்னகை.
“ஹவ் வாஸ் யுவர் டே?”
“இந்த செகெண்ட் ரொம்ப ரொம்ப நல்லா ஆக்கிடுச்சு மொத்த நாளையும்.”
“பொண்டாட்டியை மிஸ் பண்ணீங்களா?”
“ச்ச சச்ச அதெல்லாம் இல்லையே..”, என்றவனை தேவா அடிக்க அந்த கரத்தைப் பற்றிக் கொண்டவனாய் மார்போடு அழுத்திக் கொண்டான்.
“இந்த டச் இல்லாம எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”, என்றதில் தேவா தனது பிடியை இன்னுமுமாய் இறுக்கினாள்.
“எனக்கு யாரும் என்னைத் தொட்டு பேசினால் பிடிக்காது ரஞ்சு.”
“ம்ம் கவனிச்சுருக்கேன்.”
“எப்பவுமே அப்படி தான் ப்ரெண்ட்ஸ் கூட தேவையில்லாம தோளில் கைப் போட்டு பேச விட மாட்டேன். ஏன்னால் என்னைப் பொறுத்த வரை தொடுதல் ரொம்ப ரொம்ப பர்சனல்.”
“..”
“ஆனால் இப்போ இந்த ஒருத்தியோட ஸ்பரிசத்துக்கு ரொம்ப ஏங்கி போறேன்.
அது எந்த வகையிலேயும் தாம்பத்தியத்தை பத்தினது இல்ல. நாம ஒருத்தங்களால விரும்பப் படுறோம்.
இல்ல நான் உன்னை எந்தளவு விரும்புறேன்னு வார்த்தையா என்னால சொல்ல முடியாத நேரத்தில் எல்லாம் இந்த தொடுதல் அதை உணர்த்திடும்னு தோணுது.
உன்னோட கைக்குள்ளே பத்திரமா இருக்குறதா ஃபீல் பண்றேன். மிஸ்ட் யூ மை கேர்ள்.”, என்றவனின் காதலில் எப்போதும் போல் கரைந்து தான் போனாள் தேவா.
புதுமணத் தம்பதிகளுக்கே உரிய பொற்காலமாக கழிந்தது அதிரனுக்கும் தேவாவிற்கும்.
காலை முதல் மாலை வரை தலை சுற்ற வைக்கும் வேலைகளின் சோர்வு மொத்தத்தையும் ஒருரவரின் அருகாமை மற்றவருக்குப் போக்குவதாய் இருந்தது.
தினமும் மாலை அதிரன் வரும் வரையிலும் காத்யாயினியோடும் அவினாஷோடும் பொழுது கழியும் தேவாவிற்கு.
“தேவா இப்போ எல்லாம் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன்னால தான்னு நினைக்குறேன்.
அதி வாழ்க்கை பொறுப்பான ஒருத்தி கையில் இருக்குங்கிற நிம்மதி தான் காரணம்.”
“அப்போ இனி பசங்க, அவங்களோட பசங்க எல்லோரடவும் ரொம்ப நாள் சந்தோஷமா வாழணும்னு நினைப்பீங்க தான?”
“!!!”
“உங்க புள்ளை சொன்னாரு மாமா போனதுக்கு அப்பறம் உங்களுக்கு பெருசா எந்த பிடித்தமும் இல்லையாம்.”
“உண்மை தான். இப்போ நான் இருக்குற நிலைமைக்கு முக்கிய காரணம் நான் தான். எந்த வித ஒத்துழைப்பும் என் பக்கம் இருந்து வராம டாக்டர்ஸும் என்ன தான் பண்ணுவாங்க”
“எந்த வயசிலேயும் பசங்களுக்குப் பெத்தவங்க வேணும் தான ம்மா?”
“!!”
“இதோ இப்போ நானும் அவியும் எவ்வளவு கஷ்டப்படுறோம். அதிலேயும் அம்மா மடிங்கிறது அறுபது வயசுலேயும் சுகம் தான.
இரண்டு பொண்ணுங்களும் அம்மா வீட்டுக்கு வர்றதுக்கும் அண்ணன் வீட்டுக்கு வர்றதுக்கும் கண்டிப்பா வித்தியாசம் இருக்கும்ல?”
“எல்லாமே எனக்கும் தெரியுது தேவா. ஆனால் அவரோட வாழ்ந்த வாழ்க்கை தான் முன்னுக்கு நிக்குது.”
“அந்த அழகான நினைவுகளை நீங்க தெம்பா சந்தோஷமா இருந்தா இன்னுமின்னும் அசை போட்டுட்டே இருக்கலாம் தான ம்மா?”
“..”
“இப்போ உடம்பை நினைச்சு கவலைப் படுறதுக்கு பதிலா உடம்பை நல்லா பார்த்துகிட்டு எல்லா நேரமும் மாமாவுக்கும் உங்களுக்குமான சந்தோஷ நினைவுகளை இன்னுமொரு தடவை மனசளவில் வாழ்ந்து பார்க்கலாமே!”
“…”
“இவ்வளவு தூரம் சொல்றதுக்கு என் சுயநலமும் ஒரு காரணம். உங்க பசங்களை விட எனக்கு நீங்க ரொம்ப அதிகமா தேவைப் படுறீங்க.
என் பசங்களுக்கு இந்த பாட்டியோட அன்பு மொத்தமா கிடைக்கணும்னு நினைக்குறேன்.”, என்றவளை வாஞ்சையாய் வருடியவர் கன்னம் வழித்து முத்தம் வைத்துக் கொண்டார்.
error: Content is protected !!