Skip to content
Post Views: 6,136
“மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்
மு.வ விளக்க உரை: இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.”
சில நொடிகள் அமைதியில் கரைய அதிரனின் பார்வை ரியர் மிரர் வழி மீண்டுமாய் அவளைத் தீண்டி நகர்ந்தது.
முதலாளி குடும்பம் தன்னை அழைத்துச் செல்கிறது என்பதற்கான எந்த மாறுதலும் அவளது உடல்மொழியில் இல்லை.
Advertisement
சூழ்நிலை அப்படி நான் கேட்கவில்லை நீங்கள் தானே உதவினீர்கள் என்பது போல் சாதாரணமாக இருந்தாள்.
தம்பி தன்னை நினைத்து பயந்திருப்பான் என்பது நினைவிற்கு வர ஒரு நொடி தயங்கியவள் பின் காத்யாயினியிடம்,
“ஒரு போன் பண்ணிக்கணும் மா. மொபைல் தர முடியுமா?”, என்றதில் சாருகேஷ் தன் கைப்பேசியை நீட்டியிருக்க ஒன்றும் கூறாமல் தம்பியின் எண்ணை டயல் செய்தாள்.
Advertisement
“ஹலோ…”
Advertisement
“அவி நான் தான்”
“அக்கா எங்கே போயிட்ட நீ ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். லைனும் போகலை. பயந்துட்டேன் தெரியுமா!”, என்றவனின் குரல் லேசாய் பிசிறியது.
நமக்கு நெருக்கமானவர்களை பாதியில் இழந்தவர்களின் மனநிலை அல்லவா இது. சிறு விஷயம் கூட ஏதேதோ சிந்தனைகளை ஏற்படுத்தி விடுமே!
Advertisement
“அவி.. ரிலாக்ஸ்..”, என்றதில் சற்றே தன்னைத் தேற்றிக் கொண்டான்.
“வந்த இடத்தில் வண்டி பஞ்சர் இப்போ வந்துட்டு இருக்கேன். நீ பயப்படாத சரியா.”
“சரிக்கா பார்த்து வா.”, என்றதும் அழைப்பைத் துண்டித்தவள் சாருகேஷிடம் நன்றி கூறி கைப்பேசியைக் கொடுத்திருந்தாள்.
“என்னாச்சு ரொம்ப பயந்துட்டானா?”
“ஆமா மா. என் விஷயத்தில் அவன் எப்பவும் ரொம்ப சென்சிட்டிவ்.”
“ரொம்ப நல்ல பையன். எங்கே படிக்குறான்.”
“உங்க காலேஜில் தான் மா. பைனல் இயர்.”
“ஓ கண்டிப்பா கேம்பஸில் செலெக்ட் ஆகிடுவான். உன் வளர்ப்பு எப்படினு அன்னைக்கு பார்த்தப்போவே புரிஞ்சுது.”, என்றதில் பெரும் திருப்தி தேவாவின் இடத்தில்.
வீட்டின் அருகில் வந்ததும் வழி கூறியவள் வீட்டு வாசலை அடைந்ததும் கீழேயிறங்க உள் வாசலின் படியிலேயே அவளுக்காக காத்திருந்த அவினாஷ் தேவாவின் அருகில் வந்து நின்றான்.
மற்றவர்களைப் பார்த்து லேசாய் புன்னகைத்தவன் காத்யாயினியைப் பார்த்ததும் பற்கள் தெரிய புன்னகைத்து கை வேறு அசைத்து வைக்க தேவா பிறர் அறியா வண்ணம் தம்பியின் முதுகில் தட்ட அது அதிரனின் கண்ணில் தெளிவாய் பட்டது.
“ஹே அவினாஷ் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் இருந்த தான நீ?”, என்ற சாருகேஷ் வெளியே இறங்க அவனை நினைவு கூர்ந்தவனாய்,
“அட ஆமாண்ணா எப்படியிருக்கீங்க?”
“நல்லா இருக்கேன். ஏன் டா பாதியிலேயே டீம் விட்டு போயிட்ட?”
“நிலைமை அப்படி ண்ணா..”, என்றவன் முறுவலித்தான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அதிரனின் பக்கம் சென்ற தேவா,
“மேடம் உள்ளே வர முடியுமானு தெரியலை அதனால தான் உங்களையும் இன்வைட் பண்ணலை தப்பா நினைச்சுக்காதீங்க சார்.”
“நோ இஷுஸ். வசந்த்கிட்ட சொல்லி யாரையாவது வைச்சு நாளைக்கு உங்க வண்டியை சரி பண்ணித் தர சொல்லுங்க.”
“ஓகே சார். தேங்க் யூ ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்.”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைக்க காத்யாயினியிடம் வந்தவள்,
“ரொம்ப டயர்டா இருப்பீங்க. இன்னொரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க மா.”, என்றதற்கு புன்னகைத்து சரி என தலையசைத்தவர் அவினாஷிடமும் விடைபெற்று கிளம்பத் தயாரானார்.
அவினாஷும் சாருகேஷும் கைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றனர்.
இத்தனையும் நடந்த நேரத்தில் நந்தினியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அதிரன் காரை கிளப்பிய பின் தாயிடம்,” ஏற்கனவே தெரியுமா மா?”
“அன்னைக்கு மாசாணி அம்மன் கோவிலில் பார்த்தேன் அதி..”
“ஓ!”
“அவ இங்கே வேலை பார்க்குறதை சொல்லவே இல்ல நீ?”
“வாட்ஸ் அ பிக் டீல் மா.”, என்றவன் அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டான்.
மறுநாள் தங்கைகளின் நாத்தனார் திருமணத்திற்கு குடும்பமாய் சென்றிருந்தனர்.
அதிரனும் மச்சான்களுக்காக காலை முகூர்த்த நேரத்திற்கு வந்திருந்தான்.
அத்தனை பேரும் அவனுக்கு வணக்கம் வைத்து நலம் விசாரித்து என்றிருக்க நம் நாயகனோ Introvert என்பதற்கு அகராதியில் அவன் பெயர் தான் பொருளாய் இருக்கும் என்ற அளவிற்கு வாயிலிருந்து வார்த்தைகளை வர வைக்க முடியாதவன்.
சற்று நேரத்தில் எல்லாம் உள்ளுக்குள் கடுப்பாக ஆரம்பித்திருந்தான்.
பத்தாததற்கு மணமகனின் தந்தை ஒருவரை அறிமுகப் படுத்த அவரோ பக்கத்திலேயே உட்காந்து கதை பேச ஆரம்பித்திருந்தார்.
“அதிரன் சார். மீட் மை டாட்டர் சிருஷ்டி.”, என்ற நேரம் பின் வரிசையில் இருந்து எழுந்து வந்து யுவதி ஒருத்தி அவனுக்கு கை நீட்ட மரியாதை நிமித்தம் கை குலுக்கி புன்னகைத்தான்.
“ஹாய் அதிரன் உங்களைப் பத்தி நிறைய கேள்வி பட்டுருக்கேன்.”
“ஓ நைஸ் டு மீட் யூ.”
“நான் யூ எஸ்ஸில் இருந்து இங்கே வந்து ஒன் இயர் ஆகுது. அப்பாவோட பிஸினஸை நான் தான் பார்த்துக்குறேன் இப்போ.”
“வெரி நைஸ். ஆல் த பெஸ்ட் டு யூ.”
“தேங்க்ஸ். இது என்னோட நம்பர். உங்க கார்ட் கிடைக்குமா?”, என்றதற்கு ஒன்றும் கூறாமல் தனது பிசினஸ் கார்ட்டை எடுத்து நீட்டியிருந்தான்.
“ஓகே அதிரன் சீக்கிரம் நாம மீட் பண்ணலாம்.”, என்றவள் புன்னகைத்து நகர அந்த பெண்ணின் தந்தையும் அவளோடு நகர்ந்திருந்தார்.
“டாடி ஐ திங்க் ஐ லைக் ஹிம்..”
“குட் சாய்ஸ் பட் அவங்க எதிர்பார்ப்பு எப்படினு தெரியலையே மா. நான் அவங்க அம்மாவோட பேசிப் பாக்குறேன்.”
“வேண்டாம் டாடி நான் அவரோட பழகிப் பாக்குறேன். ஒத்து வந்தால் முடிவு பண்ணலாம்.”, என்றதில் சம்மதமாய் தலையசைத்தார்.
தங்கைகள் இருவரும் மேடையிலிருந்து இதை அனைத்தையும் கவனித்த வண்ணம் நேரம் கிடைத்த போது தாயின் அருகில் வந்தனர்.
“ம்மா அந்த பொண்ணுக்கு அண்ணாவை கேட்டால் வேண்டாம்னு சொல்லிடுங்க..”
“எந்த பொண்ணு டி காயூ?”
“அதான் அண்ணாவோட மொக்கை போட்டுட்டு இருந்தாளே அவ தான். குடும்பமே பெருமை பீத்திக்குற ரகம்.
அதிலேயும் அவ இருக்கா பாரு. கெஸ்டா எங்க வீட்டுக்கு வந்தா அந்த ஒரு மணி நேரமே தாங்காது.
இதில் வாழ்க்கை முழுசுக்கும் எல்லாம் வேலைக்கே ஆகாது.”, என்றதில் காத்யாயினி புன்னகைத்தார்.
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லனு தோணுது. இந்த கல்யாணம் முடிஞ்ச பிறகு நானே உங்களைக் கூப்பிட்டு பேச நினைச்சேன். உங்க அண்ணாக்கு ஒரு பொண்ணு மேல இஷ்டம்னு நினைக்குறேன்.”
“வாட்?!”, என்ற கயல்விழி கிட்டதட்ட கத்தியிருக்க சுற்றம் உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டவளாய்,
“என்னம்மா இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?”
“என்னோட யூகம் தான் கயல். பட் பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு கல்யாண பேச்சு வேண்டாம்னு சொல்லிருக்கான்.
சரி சரி இதெல்லாம் நாம அப்பறம் பேசுவோம். நீங்க போய் வேலையைப் பாருங்க”, என்று மகள்களை அனுப்பி வைத்திருந்தார்.
திருமணத்தில் அமர்ந்திருந்தவன் வசந்தின் அழைப்பு வர அதை ஏற்று என்னவென கேட்க வசந்த் கூறிய செய்தியில் ஆத்திரமாய் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
முந்தைய தினம் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு டிரைவரை போகச் சொல்ல செல்லும் வழியெங்கும் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அங்கு அவன் சென்ற நேரம் அவனது அலுவலக அறை வாசலில் வசந்த் அமர்ந்திருக்க அவனிடம் எதையோ கேட்ட படியே தனது அறைக் கதவைத் திறக்க அங்கு கைகளை மார்பின் நடுவில் கட்டிய படி ஓரமாய் நின்றிருந்தாள் தேவா.
அவளைப் பார்த்தவன் வசந்தை திரும்பி பார்த்த பார்வையில் எச்சில் கூட்டி விழுங்கினான்.
“சார்..”
“என்ன மாதிரி ஆட்களை வேலையில் வைச்சுருக்கோம் வசந்த். த்ர்ட் ரேட் பொறுக்கிங்க மாதிரி பிகேவ் பண்ணிருக்காங்க!”, என்றவன் தேவாவின் புறம் திரும்பி,
“ஆர் யூ ஓகே?”, என்றதில் ஆம் என்பதாய் ஒரு தலையசைப்பு அவளிடத்தில்.
“என்ன நடந்தது?”, என்றவன் பல்லைக் கடித்துக் கொண்டு வசந்திடம் திரும்பினான்.
“சார் தேவா நைட் கால் பண்ணி சொன்னாங்க. சோ நான் மார்னிங்கே ஆள் வைச்சு பைக்கை ரெடி பண்ணிட்டு அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணேன்.
எனக்கு ஒரு பங்ஷன் இருந்ததுனால அவங்களே வந்து எடுத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க.
இங்கே வந்தப்போ பார்க்கிங் ஏரியாவில் ஆட்கள் யாரும் இல்லையாம்.
வண்டியை எடுத்துட்டு வெளியே போனப்போ இரண்டு பேர் வாசல்லேயே வழி மறிச்சுருக்காங்க.
அன்னைக்கு டேட்டா கொடுக்கலைனு உங்ககிட்ட கொண்டு வந்த இன்சிடென்டை பத்தி சொல்லி அவங்களை ரொம்ப மோசமா பேசிருக்காங்க.
ஒரு கட்டத்தில் பேச்சு முத்திப் போக அவன் தேவாவை அடிச்சுருக்கான்.”, என்ற போது தான் அவளது முகத்தை ஒழுங்காக கவனிக்க இடப்பக்க கன்னம் லேசாய் சிவந்திருந்தது தெரிந்தது.
“அதுக்குள்ளே நல்ல வேளையா செக்யூரிட்டி வந்ததில் அவனுங்க இரண்டு பேரும் எஸ்கேப் ஆயிட்டாங்க சார். அவர் தான் எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாரு.”
“அவனை இங்கே வர சொல்லிட்டியா?”
“பக்கத்து ரூமில தான்..”
“இங்கே வர சொல்லு..”, என்றவன் சொற்களைக் கடித்து துப்பியதில் வசந்த் சென்றிருக்க தேவாவிற்கு சிறிதான நடுக்கம் அவனது தோரணையில்.
“சார் நான் எல்லாம் எதுவும் பண்ணல..”, என்று தெனாவெட்டாய் வந்து நின்றவன் அதிரனின் முக பாவத்தில் வாயை மூடிக் கொண்டான்.
“தேவ ரஞ்சனா..”, என்றவனின் அழைப்பில் அவனருகில் வந்து நின்றவள் அதிரனை விட்டு பார்வையை நகர்த்தவில்லை.
“உங்க கன்னத்தில் இருக்குற அதே வீக்கம் இவனுக்கு இப்போ வரணும்.”, என்றதில் விழி விரித்திருந்தாள்.
அதிரன் அதிகமாய் பேசியே பார்த்திராதவள் அவனின் இப்படியான குணத்தை சுத்தமாய் எதிர் பார்த்திருக்கவில்லை என்பது அவளது பார்வையிலேயே தெரிந்தது.
“டூ இட் நவ் ரஞ்சனா..”, என்றவன் அழுத்திக் கூறியதில் அவன் புறம் திரும்பியவள் மொத்த கோவத்தையும் தேக்கி கன்னத்தில் ஒரு அறை விட்டிருந்தாள்.
அதிரன் தனது கரங்களை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்த வண்ணம் தேவ ரஞ்சனாவை ஆத்திரமாய் பார்த்திருந்தவனிடம்,
“இதோட தடம் மறைஞ்சாலும் உன் மனசில் இது என்னைக்கும் நியாபகம் இருக்கும். இல்ல?
உன்னை டெர்மினேட் எல்லாம் பண்ணல. தாராளமா ஆபீஸ் வா. இனியும் நீ இவங்களுக்கு தான் ரிப்போர்ட் பண்ணனும். நவ் கெட் லாஸ்ட்.”, என்றதில் வசந்த் அவனை வெளியே தள்ளிச் சென்றிருந்தான்.
error: Content is protected !!