Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 15

15.

மஞ்சம் – 15

அதற்குள் அமர், பரஞ்சோதி இருவரும் அண்ணனையும், பாட்டியையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டனர்.

“அமர் கதவை திற, நீ மட்டும் திறக்கல நடக்குறதே வேற.” என் தம்பியிடம் காட்டு கத்தல் கத்தியவன்,



Advertisement

“அம்மா அவளை விடுங்க. நீங்க மட்டும் இப்போ அவளை விடல. இதுக்கப்புறம் நான் உங்களுக்கு மகன் இல்லை.” என்றான்.

அந்த வார்த்தை அவரின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

அவளை வலிக்க, வலிக்க இழுத்து சென்று நடு ரோட்டில் தள்ளி விட்டார்.

Advertisement

நிவேதிதா தன் வயிற்றை பாதுகாத்தபடி தெருவில் விழுந்து கிடந்தாள்.

Advertisement

“உன் உடம்பில் சுத்தமான ரத்தம் தான் ஓடுதா டி? அப்படி ஓடி இருந்தா இந்த வீட்டில் இருந்து இருக்க மாட்ட. என் வீட்டு சோத்தை தின்னு இருக்க மாட்ட. எவன் பிள்ளையோ அதுவும் என் வாழ்க்கையை நாசம் செய்தவள் மகனுக்கு பிள்ளையை சுமந்து கிட்டு என் வீட்டுக்குள் வர எப்படி முடிஞ்சுது. கொஞ்சம் கூட உனக்கு உடம்பு கூசல?

அந்த நாய் சாப்பிட்ட எச்சில் நீ. இதில் உன் எச்சிலுக்கு என் பிள்ளை அப்பனா? இது என்ன டி உடம்பு? இதுக்கு நீ வேற தொழிலுக்கு போகலாம்.” என அவர் வாயில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை குத்தி கிழித்தது.

அதை விட அதிகமாக உள்ளிருந்து கதவை உடைக்க முயன்று கொண்டிருந்தவன் இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

Advertisement

அவனால் காதால் கேட்க முடியவில்லை.

அந்த கதவை எளிதில் உடைக்க முடியாது. முழுக்க முழுக்க தேக்கால் செய்யப்பட்ட பெரிய கதவு.

அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. வேறு வழி தெரியாமல் சமையல் அறைக்குள் ஓடி வந்து ஜன்னல் அருகே நின்றவன்,

“அம்மா ப்ளீஸ் அசிங்கமா பேசாத. அது என் குழந்தை. இந்த வீட்டு வாரிசு.” என தெருவே நடுங்கி போக கத்தினான்.

“உனக்கு என்ன தலை எழுத்தா அக்னி? அவன் பிள்ளையை உன் பிள்ளை னு சொல்ற? உன்னை நாங்க ரொம்ப நல்லவன் வளர்த்துட்டோம். அதான் இவ்வளவு பெருந்தன்மையாக ஏத்துகிற. சூடாமணி பாரு நம்ம அக்னியை எவ்ளோ நல்லவனா இருக்கோம் ன்னு. அப்படி பட்டவனுக்கு தகுதி இல்லாத நாய் இது.” என சந்திரன் இன்னும் அதிகமாக ஏத்தி விட்டார்.

நிவேதிதா வெறுத்து போய் நிற்க, அனைவரும் வாயடைத்து வேடிக்கை பார்த்தனர்.

“அம்மா நான்…” என அவன் ஆரம்பிக்கும் முன்னே,

“இதை விட உன்னை என்ன கேக்குறதுண்ணு எனக்கே தெரியல. உன் உடம்பில் சுத்தமான இரத்தம் தான் ஓடுதா? இல்லை கலந்து கட்டி ஓடுத்தா?” என்றதும் அவளுக்கு அவளை நினைத்தே அருவருப்பாக இருந்தது.

‘இனி நான் இங்கு இருக்க வேண்டுமா? என்ன மரியாதை இருக்கிறது? வேண்டாம். எதுவும் வேண்டாம்.எனக்கு யாரும் வேண்டாம்.’ என்றவள் அழக்கூட முடியாமல் நின்று இருந்தாள். உணர்வுகள் மறுத்து, உயிர் பிரியும் நிலை.

எதுவும் பேசவில்லை.. பேச கூட அவளிடம் பலம் இல்லை. சோர்ந்து போனாள்.

வாழ்க்கை அவளை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தால் அவள் எப்படி தைரியமாக எதிர்த்து நிற்பாள்?

அவள் நிலை கண்டு அக்னி துடித்தான். அந்த ஜன்னல் கம்பிகளை கூட வளைக்க முடியவில்லை.

அவள் செய்த காரியத்தில் அக்னி உயிரை இழந்து நின்றான்.

தெருவே நிவேதிதா நினைத்து பரிதாபட கண்ணீர் வடிக்க, நிவேதிதா எதுவும் பேசாமல் தன் கழுத்தில் இருந்த அக்னி கட்டிய தாலியை, மஞ்சள் மனம் கூட மறையாத, காயாத தாலியை கழட்டி அப்படியே அவள் காலடியில் போட்டு vitt திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

அவள் நடையில் உயிர்ப்பில்லை. நம்பிக்கை இல்லை. தைரியம் இல்லை.

வாழ்வை இழந்து, நம்பிக்கை இழந்து, இனி வாழவே வேண்டாம் என்பது போல் அந்த இருளில் சென்றாள்.

“போகாத டி. சொன்னா கேளு டி. பிளீஸ் என்னை விட்டு போகாத டி.” என ஜன்னல் கம்பிகளை பிடித்து கதறினான்.

அவளோ திரும்பி கூட பார்க்கவில்லை.
ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் செய்த கொடுமைகளுக்கு அவர்களுக்கு சாபம் கூட விடவில்லை.

கற்சிலை போல், மாயாவின் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடந்தாள்.

“பட்டு போகாத டி. அவளை யாராவது தடுங்க.” என கதரியவனின் வார்த்தைகளை கேட்கும் தொலைவு அவள் கடந்து விட்டாள்.

அவளை வெளியேற்றும் சந்திரன் முகத்தில் கொடூர நிம்மதி.

‘நான் நினைத்த வேலையை இன்னைக்கே முடிச்சிட்டேன். அப்படியே என் மகளை அக்னிக்கு கட்டி கொடுத்துட்டா இனி எல்லாமே நான் நினைத்தது மாதிரி தான் நடக்கும்.’ என பெருமைப்பட்டுக் கொண்டார்.

எல்சூடாமணி வெற்றி மமதையில் இருந்தார்.
‘என் மகன் என் பேச்சை மீறவே மாட்டான். அவனுக்கும் பரம்ஜோதிக்கும் உடனே கல்யாணம் நடக்கும். நடத்திக் காட்டுவேன் நான்.’ என தவறான மாதகணக்கில் தன் இளைய மகனை பார்த்தார்.

அமரனுக்கு அதற்கு மேல் சந்தோஷம். ‘அப்பாடா இனி என் அண்ணன் வாழ்க்கை தப்பித்தது.’ என நிம்மதி மூச்சு விட்டான்.

இவர்கள் அனைவரின் காணவும் ஆசையும் வெறும் கானல் நீர் தானே? உள்ளுக்குள் எரிமலையாக வெடிக்க காத்திருப்பான் என்ன செய்யப் போகிறானோ?

“சூடாமணி நீ இப்போ தான் என் தங்கச்சியின் நிருபீச்சி இருக்க. இப்படியே இதே வேகத்துடன் கோபத்துடன் அவங்க கல்யாணத்தையும் முடிச்சிட்டு.”

“அண்ணா நாளைக்கே நான் நடத்தி காட்டுறேன். எனக்கு துரோகம் பண்ண அவங்க முகத்தில் கரியை பூசி காட்டுறேன்.” என சவால் விட்டார்.

“அத்தை கதவை திறக்கவா?” பரஞ்சோதி ஆர்வமாக கேட்டாள்.

“இரு இப்போ உடனே திறக்க வேண்டாம். இப்போ தான் என் மகன் சத்தம் அடங்கி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்.” என்றவர் அப்படியே வாசலில் அமர்ந்து கொண்டார்.

அதற்குள் சூடாமணி நடந்து கொண்ட விதம் நிவேதிதா வை வீட்டை விட்டு வெளியேற்றியது என் அனைத்தும் வைதேகி, தென்பாண்டி இருவருக்கும் தெரிந்து விட,

“ஐயோ என் பொண்ணு வாழ்க்கை இரண்டாவது முறையும் நாசமா போச்சே. இப்படி ஆகிடுச்சே.” என கதறிக் கொண்டு ஓடி வந்தார்.

தென்பாண்டி நெஞ்சை பிடித்துக் கொண்டு தங்கச்சியோடு ஓடி வர, அவர்கள் வரும் வழி நெடுகிலும் நிவேதிதா வை தேடிக் கொண்டு தான் வந்தனர். ஆனால் அவளை காணவில்லை.

“அண்ணா பிள்ளையை காணும்.”

“வா போகலாம். ஒருவேளை அங்கேயே இருக்குமோ?” என சூடாமணி வீட்டை நோக்கி ஓடினர்.

“சூடாமணி எல்லாரும் நம்மள பாக்குறாங்க. வாங்க நம்ம உள்ள போகலாம். இந்நேரம் அவள் ஆத்தா வீட்டில் ஒப்பாரி வச்சு ஓய்ந்து தூங்கி இருப்பா.” என அவளை கிண்டல் செய்ய, மற்றவர்கள் கை தட்டி சிரித்தனர்.

ஒரு கர்ப்பிணி பெண்ணை அடித்து அவமானப்படுத்திய, அசிங்கப்படுத்தி வெளியே துரத்துவது சந்தோஷமாக சிரித்துக் ஆர்ப்பரிக்கும் இவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? என்றே அனைவரையும் யோசிக்க வைத்தது.

ஜோதி குதூகலிக்கும் மனதோடு கதவை திறக்க அதற்காகவே காத்திருந்தது போல புயலாக பாய்ந்து கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தவன், அவன் வந்த வேகத்தில் பரஞ்சோதி தடுமாறி கீழே விழுந்தாள்.

“அண்ணா….” என அமர் குறுக்கே வந்து தடுகக், அவனை தம்பியாக அவன் மனம் அப்போது ஏற்கவில்லை.

உடைந்த மனதில் உறவுகளை. உடைந்து நொறுங்கி போனது.

“பளார்!” என காது கிழிந்து போவது போல் அறைந்தவன் அவள் அவிழ்த்து எறிந்த தாலியை தான் முதலில் ஓடி எடுத்தான்.

அந்த தாலியை அழுத்தி பிடித்தவன், சுருட்டி கைக்குள் வைக்க, வைதேகி, தென்பாண்டி இருவரும் ஓடி வந்து அவன் முன்பு நின்றனர்.

அவர்களை கண்டதும் அக்னி அதிர்ந்தான்.

“அக்னி நிவேதா எங்க? உன்னை நம்பி தானே அனுப்பினோம். அதுவும் நீ சொன்னேன் தானே?” என தென்பாண்டி கண்ணீருடன் கேட்க,

அவனோ அவரிடம் பேச பிடிக்காமல் அவர்களை வெறித்து நின்றான்.

‘நிவி கிளம்பின நேரத்துக்கு எப்போகோ வீட்டுக்கு போய் இருக்க வேண்டுமே? ஆனால் இவர்கள் இருவரும் இங்கு வந்து கேட்கிறார்கள்?’

“நிவி அங்க வரலையா?” வைதேகி பார்த்து கேட்டான்.

“இல்லையே! வந்திருந்தால் நான் எதுக்கு தேடி வர போறேன். என் பிள்ளையை கொடுத்துட்டு அக்னி. நானே பாத்துக்கிறேன். தப்பு பண்ணிட்டேன்.” என மடங்கி அங்கேயே அவன் காலில் விழுந்தார் கதறியபடி.

இரண்டு முறை அல்லவா தவறு செய்திருக்கிறார்.

அக்னி விலகி நின்று கொண்டவனுக்கு நெஞ்சம் நடுங்கியது.

அதற்குள் சூடாமணி அவர்கள் அருகில் வந்தவன், “இப்போ தான் உன் பொண்ணுக்கு சொன்னேன். அடுத்து நீயா? கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா? கேடு கேட்ட ஜென்மம். வாழவே தகுதி இல்லாத ஆளுங்க நீங்க. அம்மாவும் மகளும் என் பையனை மயக்குறதுளையே இருக்கீங்களா?” என வார்த்தைகள் மீண்டும் வீச,

இம்முறை தென்பாண்டி கைகள் பளிச்சென்று கைரேகை பதியும் படி அடித்திருந்தார்.

“நாக்கா, நல்ல பாம்பு விஷமா? ஒரு சின்ன பெண்ணை அசிங்க அசிங்கமா பேசி வெளுதே துரத்தி விட்டு இருக்க. முதல்ல நீ எல்லாம் ஒரு பொம்பளையா?” என அவர் கத்த,

அதற்குள் அக்னி அவன் புல்லட்டை எடுத்தான்.

சூடாமணி மகனை துடிக்க அவன் தோளை தொட விருட்டென்று தகாததை தள்ளி விடுவது போல் தள்ளி விட்டு மனைவியை தேடி கிளம்பினான்.

சூடாமணி கீழே விழுந்தது கிடந்தவர் கண்கள் கலங்கியது பெரிய மகன் கொடுத்த அவமானத்தில்.

அக்னி தெரு தெருவாக தேடினான். அவள் கிடைக்க வில்லை.

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!