Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 27

பவனம் களைகட்டியது. திருமண வேலைகள் வெகு ஜோராய் நடக்க ஆரம்பித்தது. நடந்த நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சண்முகம் தன் மகளை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டார்.

“வேற வழி… அடிச்ச கல்யாண பத்திரிக்கைல பேர கூட மாத்தி பொண்ண மாத்தி எல்லாத்தையும் மாத்த வச்சிட்டாரு அந்தாளு. அதக் கூட ஒரு வகைல சேத்துக்கலாங்க. ஆனா எங்க பொண்ணு கல்யாணம்னு அவரோட சொந்தம்னு சொல்லிட்டு ஒரு கும்பல் வந்து உக்காந்திருக்கே. அத தா தாங்கிக்கவே முடியல..



Advertisement

ஊருல ஒரு கொடம் தண்ணி எடுக்க ஒரு மணி நேரம் நடப்போம்னு கத கதயா சொல்லுவானுங்க. ஆனா இங்க சமயக்கட்டுக்குள்ள எழுந்து நடந்து போய் தண்ணி கூட குடிக்க மாட்டானுங்களாம். கொண்டு வந்து மாட்டுக்குத் தண்ணி காட்டுற மாதிரி வாயல டம்ளர வைக்கணுமாம்.

எங்கத்தைய தா பாடா படுத்தி எடுக்குறானுங்க. இனி எந்த வீட்டுக்கும் மூத்த மருமகளா போய்டவே கூடாதுன்னு சபதம் எடுக்குற அளவுக்கு வேலை. பாவங்க எங்கத்த. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன்” இது சந்ருவின் புலம்பல்கள்.

Advertisement

Advertisement

அவன் சொன்னது போலவே தான் நடந்தது. சண்முகத்தின் சகோதர சகோதரியின் குடும்பம் மொத்தமும் வந்து நடு வீட்டில் அமர்ந்து கொண்டது. ‘அது இருந்தா நல்லா இருக்கும், இது இருந்தா நல்லா இருக்கும்’ என்று பேசி பேசியே வேலை ஏவினர்.

எப்படி இது சாத்தியம் ஆனது? வரலட்சுமி என்ன செய்து கொண்டிருக்கிறார். பார்த்திபன் எப்படி சம்மதித்தான் என்ற சந்தேகம் எழலாம். அது விஷாலினி என்ற சிறு பெண்ணின் கண்ணீரை முன் நிறுத்தி சண்முகம் இருவரிடமும் காரியத்தைச் சாதித்து விட்டார்.

Advertisement

“பார்த்திபன் இல்லன்னா நம்ம பொண்ணு நமக்கு கிடைக்க மாட்டா வரு. பாரும்மா எப்படி இருக்கான்னு. பார்த்திபனுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டதுல இருந்து சரியா சாப்பிடாம எப்படி வாடிட்டான்னு பாரு. சந்தோஷமா சுத்திட்டு இருந்த பொண்ணு மாமனுக்கு கல்யாணங்கையும் இப்படி ஆகிட்டா. இப்படியே விட்டா நம்ம விஷாக்குட்டியோட நிலைமையை யோசிச்சி பாரும்மா?” என நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி கொண்டு வந்து விட்டார் கல்யாணம் வரை.

வீட்டில் திருமண கலை வந்து விட்டது. நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கோல்டன் பத்திரிக்கைக் கூட வந்து விட்டது. தாத்தாவும் பாட்டியும் மஞ்சள் தடவ, மயூரியும் சந்ருவும் அனுப்ப வேண்டியவரின் பெயர் முகவரியை எழுதி கொண்டிருந்தனர்.

“எனக்கு நூறு இன்விடேஷன் வேணும்.” என்றான் பார்த்திபன்.

“அவ்ளோ எடுத்துட்டு போய் என்ன பண்ண போற? ஒன்னோ ரெண்டு தர்றேன். இவெங்கூடலாம் நட்பு வச்சிருக்குறவிங்க சகவாசம் வேண்டாம் நமக்கு. ” என்ற மாணிக்கத்தின் பேச்சைக் காதில் வாங்காது பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு அவன் சென்ற இடம் வின்சென்ட்டின் மருத்துவமனை. அவனை இன்வெய்ட் செய்ய அல்ல. அங்கு வேலை பார்க்கும் சில பெண்களுக்கு திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்க. குறிப்பாக சந்தியாவிற்கு.

“இதெல்லாம் உனக்கு தேவையா? இவ வரலன்னா உனக்கு கல்யாணமே நடக்காதா. ” என வின்செண்ட் கடிந்து கொண்டான்.

” அந்த பொண்ணு பாவம் வின்சா. நேத்து தா அவளுக்கு வேல போச்சாம். குடும்பத்துல வேற கஷ்டமாம். குடிகார அப்பன வச்சிட்டு என்ன பண்ணப் போறோம்னு ஒரே அழுகாச்சி ஷீனு. கவலைல இருக்கு. இந்த மாதிரி நேரத்துல நாம தா ஆறுதலா இருக்கணும். உனக்கு நாங்க இருக்கோம்னு காட்டணும். ” என்க, தலையில் அடித்துக் கொண்டான் வின்சென்ட்.

“அதுக்கு தா கடைல வேல வாங்கி குடுத்தியா? ராம் மாமா எப்படி அவள வேலைக்கி எடுத்தாரு.”

“அவருக்கு சந்தியாவ தெரியாது. சண்முகம் மாமா தா உதவி பண்ணாரு. ” எனச் சொல்லி சிரிக்க, இவனை என பல்லைக் கடித்தான் வின்சென்ட்.

“வின்சா… பூஜா… கார் நிப்பாடு.. ” எனக் கத்தியவன் வின்சென்ட் காரை நிறுத்தும் முன் இறங்கி ஓடிச் சென்றான். ஒரு கடையில் இருந்து பூஜா வருவது தெரிந்ததால், பூஜா… பூஜா… என்று அழைத்தபடி சென்று பத்திரிக்கையை நீட்டினான்.

“எனக்கு தெரியும் இது இப்படி தா நடக்கும்னு. எனி வே ஆல் தி பெஸ்ட்.” என்றவள் பத்திரிக்கையை வாங்கி கொண்டாள்.

” ஆக்சலி நான் உங்க வீட்டுக்கு தா வந்தேன். ஆனா ஆன்டி நல்ல மூடுல இல்ல போல. அதா திரும்பி போய்டேன். டான்ஸ் க்ளாஸ்க்கு போகல போல. ஏன்?”

“பாரதி கூட கொஞ்ச நாள் இருக்கலாம்னு. க்ளாஸ்க்கு போல. “

“அரங்கேற்றம் இருக்குன்னு சொன்ன?”

“பாத்துக்கலாம் பார்த்தி. நீங்க அரங்கேற்றத்துக்கு அவசியம் வரணும்.”

“கண்டிப்பா… நீயும் கல்யாணத்துக்கு…”

“கண்டிப்பா பார்த்திபன்.” என்றவளின் கையில் இருந்த கேரி பேக்குகளைப் பார்த்தவன்,

“ஷாப்பிங்கா? “

“ஆமா. ஆன்டி ஊருக்கு கிளம்புறாங்கள்ள. அதா நானும் பாரதியும் அங்க அடுக்கிற குளிருக்கு ஏத்த மாதிரியான டிரெஸ்ஸ வாங்கலாம்னு வந்தோம். “

“என்ன மைம்மா வந்திருக்காளா? ” எனத் தலையைத் தூக்கி ஆவலுடன் பார்வையை சுழல விட, பாரதி ஒரு குடை விற்கும் பெண்ணிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

“பூஜா நான் உங்கள வீட்டுல ட்ராப் பண்றேன். நீ கார்ல வெய்ட் பண்ணு. நாம லன்ச் சேந்து சாப்பிட்டிட்டு போலாம்.”

“ஆனா…” என தயங்கியவளிடம்,

“நான் போய் மைம்மாவ கூட்டீட்டு வர்றேன்.” என்றவன் பூஜாவின் பதிலை எதிர்பாராது பாரதியை நோக்கி நடந்தான்.

“ஹாய் வின்சென்ட்… வாட் ஆஃப்… ” எனப் புன்னகைத்தபடி காரில் ஏறி அமர, அவளின் கையில் இருந்த பத்திரிக்கையை பார்த்தவன்,

” உனக்கு கஷ்டமா இல்லையா பூஜா? ” என்றான் சிறு சங்கடத்துடன்.

“என்ன கஷ்டம்? எதுக்கு கஷ்டப்படணும்.. “

“அது… உனக்கும் பார்த்திபனுக்கும்.. ” என இழுக்க,

” வின்சென்ட் பேச தயங்குறீங்களா!! ஆச்சர்யமா இருக்கு.. டாக்டர் பேச தயங்குறத பாக்க..” எனக் கேலி செய்தவள்,

” யார் யார் கூட வாழணும்னு கடவுள் எழுதி வச்ச ஒன்னு. அத யாராலயும் மாத்த முடியாது. எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஏன்னா எனக்கு பார்த்திபன் பக்கத்துல லவ் ஹார்மோன் ஸ்டக் பண்ணிட்டு வேல செய்ய மாட்டேங்கிது. அது வேல செய்ற ஒருத்தெங்கூட தா லைஃப்ப ஸ்டாட் பண்ணணும்.”

“ஓ.. லவ் ஹார்மோன்… அது உங்கிட்ட முதல்ல இருக்கான்னு செக் பண்ணு. அப்றமா அது வேல செய்தா இல்லயான்னு பாக்கலாம்.” என விரிந்த தன் உதடுகளை இழுத்து பிடித்து கொண்டு முணுமுணுக்க,

“என்ன சொன்னிங்க டாக்டரே? சரியா கேக்கல. ” எனத் தன் புருவத்தை வில் என வளைத்து கேட்க,

“நத்திங்..” எனச் சன்னமாக சொல்லியனுக்குள் மங்கையின் அருகாமை மனத்தை வருடியிருக்க வேண்டும்.

” டாக்டர் மெடிக்கல டெம்ல பேசுற மாதிரி இருக்கு…” என அவனை முறைத்த பூஜாவை ரசித்தான் வின்சென்ட்.

‘இதுக ரெண்டும் புது ரூட் போடுதுக போலயே.. சரி வாங்க நாம பார்த்திபன் லீலை பாக்கலாம்.’

” இவ்ளோ காசெல்லாம் இதுக்கு தர முடியாது. வேணும்னா பத்து ரூபா அதிகமா தாரேன். அதுவே ஜாஸ்தி தா.. ” என இருநூறு ரூபாய் குடையை பேரம் பேசி நூறு ரூபாய்க்கு கேட்டாள் பாரதி.

ஒரு வழியாக உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… என இருவரும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் போது, இடது பக்க தோளைச் சுரண்டி விட்டு வல பக்கம் போய் நின்று கொண்டான் பார்த்திபன்.

யார் அழைத்து எனப் பார்க்க அவள் இடப்பக்கம் திரும்ப, அவளின் கையில் இருந்த குடையை அபகரித்தவன் அதை விரித்து மடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

“நல்லா தான வேல செய்து. இதுக்கு எதுக்கு நீ அந்தம்மாட்ட பேரம் பேசுற.. ” என்றவன் அந்த குடைக்கு அவர் கேட்ட விலையை விட அதிகமாகவே கொடுத்தான்.

‘கர்ணன் பரம்பரை போலும்..’ என நினைத்து குடை விற்றவருக்கு சந்தோஷம். தன் அழகு வாயை திறந்து சிரித்தார் அவர். அதை கண்டு ரசித்தபடி பார்த்திபன் நிற்க,

“யோவ் பார்த்திபா… உனக்கு வெளயாட வேற ஆளே கிடைக்கலயா. எப்ப பாரு என்டையே வம்பு வளத்துக்கின்னு திரியுற. என்னாத்துக்குய்யா காச குடுத்த. இன்னாய்யா வேணும் உனக்கு. “

“லன்ச்…”

“ஹா…”

“அது நீ நான் பூஜா வின்சான்னு நாலு பேரும் லன்ச் முடிச்சிட்டு போனா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். பூஜா கார்ல இருக்கா பாரு.. ” எனக் கை காட்ட, பதிலுக்கு பூஜாவும் கை காட்டினாள்.

“நான் வரல… நீங்க மூணு பேருமா போய்ட்டு வாங்க.” என்றவள் ஆட்டோவிற்காக கை நீட்ட, நீட்டிய கரத்தை படித்திழுத்தவன்,

“எதுக்கு என்னை அவாட் பண்ற மைம்மா. நான் கால் பண்ணா எடுக்குறது இல்ல. நேர்ல வந்தா வேல இருக்குன்னு இதோ இதே மாதிரி ஒலிம்பிக் ஓட்டம் ஓடுற. என்னாச்சி உனக்கு. நான் உ ஃப்ரெண்டு பூஜாவ வேண்டாம்ன்னு சொல்ல. அவ தா நமக்குள்ள கல்யாணம் செட்டாகாது. ஃப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம்னு சொன்னா. எனக்கும் அது சரின்னு பட்டது. இதுல நீ என்னை அவாய்ட் பண்றது ஏன்னு தா புரியல. ” என நேரடியாக கேட்டான்.

‘அவனுக்கு எப்படி புரியவைப்பது. நீ என்னிடம் அதிக உரிமை எடுத்து பழகுகிறாய். அது உனக்கு தெரியவில்லை. அந்த உரிமை பார்க்கும் மற்றவர்களின் கண்களுக்கு தவறாக தெரிகிறது என்று. ‘ எனத் தடுமாறியவளுக்குள்ளும் காதல் என்று உணர்வு வராமல் இருந்திருந்தால் பிறர் என்ன பேசினாலும் கவலை கொள்ளாது பார்த்திபனுடன் பழகி இருப்பாள். எவெ என்ன நினைச்சா எனக்கென்னா என்பது போல்..

ஆனால் காதல் வந்திருந்ததே. அவனின் அருகாமையில் உணரும் பெண்மையின் சிலிர்ப்பை அடக்க முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறாள். எத்தனை முயன்றும் அந்த தோல்வி அவளுக்கு பெருமையாக இருந்தது. கோபத்தையோ ஆத்திரத்தையோ தந்தது இல்லை. இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும் ஆடவனின் அருகாமையைத் தள்ளி வைக்க நினைத்தாள்.

“ம்ச்… உனக்கு இப்ப கல்யாணம் ஆகப்போது பார்த்தி. உன்னோட அக்கறைய நீ காட்ட வேண்டியது உ மனைவிட்ட. ஏங்கிட்ட இல்ல. போ… போய் அவள கூட்டிட்டு லன்ச்சுக்கு போ… டின்னருக்கு போ… எங்கனாலும் போ..” எனச் சொல்லி நடக்க,

” மைம்மா… கல்யாணம் ஆகப் போதுன்னா உன்ன லன்சுக்கு இன்வைட் பண்ண கூடாதா? அது தெய்வக்குத்தமா என்ன! “

“ஆமா… அப்படித்தா.. “

“யாரு போட்ட ரூல் இது? கண்டிப்பா இத ஃபாலோ பண்ணணுமா என்ன?. ” எனக் கேட்டபடி உடன் வர, பாரதி அவனை முறைத்தாள்.

“நீ இப்படி எடக்கு மொடக்க கேட்டுட்டே இருந்தா என்ன பதில் சொல்றது. ம்… இனி எங்கூட பேச பழகன்னு வராத. உங்க சித்தி என்னடான்னா உனக்கு எப்படி பார்த்திபன் பழக்கம்னு கேக்குது. உங்கக்கா நேகா என்னடான்னா ஏதோ பாக்க கூடாதது பாத்திட்ட மாதிரி மூஞ்சிய திருப்புது. உங்கத்த அதுக்கும் மேல. உனக்கும் எனக்கும் இடைல என்னன்னு கூப்பிட்டு வச்சி கேக்குது.”

“என்னென்னு.. ” என்றவனுக்கு பாரதியின் புலம்பல் மொழிகள் குதூகலத்தைத் தந்தது. தன்னை முறைத்து பார்த்தபடி நின்ற அவளின் அருகில் சில சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நின்றவன்,

“சொல்லு மைம்மா. நம்ம ரெண்டு பேருக்கும் இடைல என்ன.. ” எனப் புருவம் உயர்த்தி அவன் கேட்ட தோரணையை ரசிக்க சொல்லி மனமும் உடலும் கெஞ்ச, உறைந்து போய் நின்றாள் பெண்.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!