Skip to content
Post Views: 4,059
கல்யாண பரபரப்பில் இருந்தது மருதவேலுவின் குடும்பம் இன்னும் நான்கு நாட்களில் கல்யாணம் காமாட்சியை அழைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அவனுக்கு அதோடு கொஞ்சம் தயக்கமும்.
Advertisement
முதல் விஷயம் அவள் வரமாட்டாள் என்று அவனுக்கே தெரியும் இரண்டாவது தாய் தந்தையிடம் கேள்வி வரும் அவள் வீட்டிலும் அனுமதிக்க மாட்டார்கள் திருமண சம்மந்தத்தை முறித்தது அவன், இப்பொழுது எப்படி அனுப்புவார்கள் என்றாலும் அவளுக்குப் பத்திரிகை வைக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.
Advertisement
Advertisement
அன்று மாலை அவளுக்காக அவள் பாட்டியின் ஊரில் காத்திருந்தான் அந்தப் பக்கம் பெரிதாக வாகனங்கள் போகாது இவள் சென்ற நேரம் அவள் மட்டுமே இருந்தாள், பைக்கில் தான் வந்திருந்தான் தூரத்திலே பார்த்துவிட்டாள் ஆச்சர்யம்தான்… அவன் அருகில் சென்று வண்டியை நிறுத்தியவள் “எப்படி இருக்கீங்க” என்றாள்.
Advertisement
“ஹ்ம்ம் நல்லா இருக்கேன்” என்றவன் “நீ” என்க.
“நல்லா இருக்கேன் என்ன இங்க நிக்குறீங்க” என்றாள்.
“வர்ற வெள்ளிக்கிழமை தங்கச்சி கல்யாணம் உனக்குப் பத்திரிகை கொடுக்கலாம்னு…” என்றவன் அவள் பெயர் எழுதிய பத்திரிக்கையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“ஓஹ் சூப்பர்” என்றவள் அதை வாங்கி பிரித்துப் பார்த்தாள் “அழகா இருக்கு” என்றவள் “சும்மாதானே குடுக்குறீங்க நான் வரமாட்டேன் வர முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும்” என்றாள் பத்திரிகையில் கவனம் வைத்து.
“கட்டாயப்படுத்த மாட்டேன்” என்றான்.
சிரித்துக்கொண்டவள் “கிபிட் குடுத்தா உங்க தங்கச்சிக்கு குடுப்பீங்களா” என்றாள்.
“எதுக்கு அதெல்லாம் உனக்குத் தேவையில்லாம செலவு” என்றான்.
“இதுல என்ன செலவு என்னால வர முடியாது அதுக்காகச் செய்யக் கூடாதுன்னு இல்லையே நான் வாங்கி வைப்பேன் நீங்கதான் குடுக்கணும்” என்றாள்.
“கொடுக்கலாமே” என்றவன் “ஆனா யார் குடுத்தாங்கன்னு சொல்லணும்” என்றான் அவளையே பார்த்துக்கொண்டு, அவளிடம் தடுமாற்றம்.
“உங்களுக்குத் தெரிஞ்சவங்கன்னு சொல்லுங்க” என்றாள் மெல்லிய குரலில்
அவன் இதழ்களில் புன்னகை “அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு” என்றவன் “சரி நான் கிளம்புறேன் வேலை நிறைய கிடக்கு” என்று வண்டியை எடுக்க.
“எப்போ வருவீங்க” என்றாள் அவசரமாக.
சட்டென்று அவளை அவன் திரும்பிப் பார்க்க நாக்கை கடித்தவள் “இல்ல கிப்ட் குடுக்கணும் உங்ககிட்டத்தானே குடுக்கணும்” என்றாள்.
“ஆமா… என்கிட்டே தான் குடுக்கணும்” என்றவன் “வாங்கிட்டு சொல்லு நான் வரேன்” என்றான்.
“உங்க நம்பர் என்கிட்டே இல்ல” என்க முகத்தைத் திருப்பிக்கொண்டவன் சிரிப்பை அடக்கிக்கொண்டான் அதுக்குதானே நீயே சொல்லுன்னு சொன்னேன் என்று எண்ணிக்கொண்டவன் “நோட் பண்ணிக்கோ” என்று தன் அலைபேசி எண்னை அவளிடம் கூறினான் அதை அவளின் அலைபேசியில் அவள் பதிந்துகொண்டதும் ஒரு தலைஅசைபோடு விடை பெற்றான்.
அன்று முழுவதும் யோசித்தாள் என்ன பரிசு வாங்குவது என்று ஒரு வழியாகப் பட்டுப் புடவை என்று முடிவு செய்து கொண்டாள் மறுநாள் மாலையே பிரபலமான துணி கடைக்குச் சென்று நல்ல விலையில் ஒரு புடவையை எடுத்துக்கொண்டாள் அதை அந்தப் பாக்ஸோடு அபப்டியே வண்ண காகிதத்தால் சுற்றி எடுத்துக்கொண்டாள்.
பெயர் எழுதவில்லை அவனே முடிவு செய்து கொள்ளட்டும் என்று அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள் போகும் வழியெங்கும் யோசனையே அவனுக்கு அழைத்துப் பேசுவதா இல்லை குறுஞ்செய்தி அனுப்புவதா என்று, அழைத்துப் பேசுவதுதான் மரியாதை என்று தீர்மானித்து இரவு எட்டு மணிக்கு அழைத்தாள்.
“ஹலோ” என்றவள் கூற.
“சொல்லுங்க ராணியம்மா” என்றான் அவன்.
“நான் ராணி இல்ல காமாட்சி பேசுறேன்” என்றாள்.
சிரித்துக்கொண்டவன் “தெரியுமே அதான் நானும் சொன்னேன் ராணியம்மான்னு” என்றான்.
“என் பேர் ராணி இல்லையே” என்றாள்.
“எனக்கு அப்படித்தான் வருது என்றான்” என்றான் அவளிடம் மவுனம் அவனும் ஒன்றும் பேசவில்லை.
“நாளைக்கு வந்து வாங்கிக்கிறீங்களா கிப்ட்டை” என்றாள்.
“சாய்ந்திரம் வரட்டுமா” என்க.
“ஹ்ம்ம்” என்றாள்.
“சரி” என்றவன் வைத்துவிட்டான் அவளுக்குத்தான் அவனின் ராணியம்மா அழைப்பு என்னவோ செய்தது, மறுநாள் சொன்னதுபோலவே வந்து வாங்கிக்கொண்டான்.
“நீ கல்யாணத்துக்கே வரல எதுக்கு கிப்ட்… வாங்கவே என்னவோ போல இருக்கு” என்றான்.
“நீங்க எனக்கு எதுக்கு கார்டு குடுத்தீங்க” என்றாள்.
“கொடுக்கணும்னு தோணுச்சு” என்றான்.
“எனக்கும் கிப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு நான் கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு உங்களுக்கே தெரியும் வந்தா தேவையில்லாம பேச்சு வரும் எல்லாருக்கும் சங்கடம்” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றான் அவனுக்கும் தெரியுமே என்றாலும் என்னவோ அதை வாங்கிக்கொள்ள அத்தனை சங்கடமாக இருந்தது.
“டைம் இல்ல கிளம்புறேன்” என்றவன் உடனே சென்றும் விட்டான், அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் நல்ல படியாக முடிந்திருந்தது அந்தப் பரிசு அவனிடம்தான் இருந்தது அவள் பெயர் எழுதாமல் கொடுத்திருப்பதை வீட்டிற்கு வந்துதான் கவனித்தான்.
என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் பரிசின் மேல் என்ன பெயர் எழுத என்ற யோசனையே, அனைவரும் மேடையேறி பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருக்க இவனும் தங்கையின் பக்கம் சென்று அவள் கையில் அந்தப் பெட்டியைக் கொடுத்தான்.
“நீ என்னன்னா குடுக்குற” என்றாள் அவள்.
“இல்ல எனக்குத் தெரிஞ்சவங்க குடுத்தாங்க அவங்களால வரமுடியல” என்க “ஓஹ்” என்றவள் அதை வாங்கி பின்னில் நின்ற உறவு பெண்ணிடம் கொடுத்துவிட்டாள்.
மூன்றாம் நாள் சித்ராவும் வாசனும் மறுவீடு வந்த போதுதான் பரிசுகள் பிரிக்கப்பட்டது “இது யாருடி பேரே எழுதாம கொடுத்திருக்காங்க” என்றார் மயில்லம்மா.
“ஆமா” என்ற ராமலிங்கம் திருப்பித் திருப்பிப் பார்க்க எங்குமே பெயர் எழுதப்படவில்லை.
“புடவைபோல” என்றார் மயிலம்மா.
அதை வாங்கிய சித்ரா யோசனையோடு பார்த்துக்கொண்டே “இது அண்ணா குடுத்ததும்மா அதுக்கு தெரிஞ்ச யாரோ கல்யாணத்துக்கு வர முடியலன்னு அண்ணாகிட்ட குடுத்தாங்கலாம்” என்றாள்.
“அதுக்கு பேர் எழுதாமலா குடுப்பாங்க” என்றார் மயில்லம்மா.
வெளியில் செல்லத் தயாராகிவந்தவன் ஒருநொடி நின்று அவர்களைப் பார்த்துவிட்டு வண்டி சாவியை எடுத்தான் “வேலு யாரு இத கொடுத்தது பேர் தெரியனும்ல அப்போதானே நாம நாளைக்கு திருப்பிச் செய்ய முடியும்” என்றார் மயில்லம்மா.
“அத நான் பாத்துக்குறேன்” என்றான் அவன்.
“யாருன்னு சொல்லுடா” என்றார் அவர்.
ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தவன் “அவங்களுக்கு எல்லாம் நானே செஞ்சிப்பேன் நீங்கக் கவலைப்படாதீங்க” என்றுவிட்டு சென்றுவிட.
“என்னங்க இது” என்ற மயில்லம்மா “அது யாருங்க நமக்குத் தெரியாத தெரியக்கூடாத ஒருத்தர்” என்றார் யோசனையாக.
“சும்மா அவனை நோண்டாத அவனுக்கா தோணும்போது சொல்லுவான்” என்ற ராமலிங்கம் அடுத்த பரிசை எடுத்துப் பிரிக்கத் தொடங்கிவிட்டார்.
‘யாராக இருக்கும்! ஏன் சொன்னால் தான் என்ன அப்படி யாராக இருக்கும்’ என்ற எண்ணம் மனதை குடைந்துகொண்டே இருந்தது மயிலம்மாவை.
நான்கு மாதமும் கடந்திருந்ததது எப்பொழுதேனும் அவளைப் பார்ப்பான் சித்ரா வாசன் திருமண வாழ்க்கை சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது சின்ன சின்ன மாமியார் மருமகள் பூசல்கள் மட்டுமே மகள் எப்படி வாழ்கிறாள் என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துக்கொண்டிருந்தார் மயில்லம்மா.
“தம்பியைத் தூக்கிட்டு வாங்கப்பா அடுத்த தடவை” என்று காமாட்சி கேட்டிருக்க அந்த வாரம் ஞாயிறு மாசிலாமணி அன்னம்மா மற்றும் முத்துலெட்சுமியும் வந்திருந்தார்கள் பிள்ளையோடு மகளுக்குச் சமைத்து எடுத்து வந்திருந்தார் அன்னம்மா.
இங்கு அன்னம்மாவின் தாய் தந்தை மட்டுமே வசிக்கிறார்கள் அன்னம்மாவிற்கு ஒரு தங்கை மட்டுமே அவரும் கடலூர் பக்கம் கணவன் பிள்ளையோடு வசிக்கிறார் சிறிய ஒரு கடை வைத்திருக்கிறார் அன்னம்மாவின் தந்தை ஒரு வீட்டின் வாடகையும் வர அவர்களுக்கு அதுவே தாராளம்.
இளம் வயதிலே கல்யாணம் செய்து கொண்டதோடு பெண் பிள்ளைகளையும் இளம் வயதிலே திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள் ஆகையால் பெரிதாக வயதாகிவிடவில்லை ஓடியாடி வேலை செய்வார்கள், வந்ததுமே ஆசையாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டாள் தலை நிற்கத் தொடங்கிவிட்டது உருண்டை விழிகளை உருட்டிச் சுற்றிலும் வேடிக்கைதான்.
“எப்படி இருக்க முத்து” என்றார் அன்னம்மாவின் தாய்.
“இருக்கேன் அத்த இவனை எப்படியாவது கரை சேத்திடனும் இப்போ வைராக்கியம் அதிகமா ஆயிருக்கு இவன் அப்பனை சரியா வளர்க்கல போல இவனைச் சரியா வளத்திடனும்” என்றவர் விழிகள் பேரனைத் தழுகியது.
மீனா வீட்டை விட்டு வெளியிலே போவதில்லை, ரகு அந்தப் பக்கமே எட்டி பார்ப்பதில்லை விட்டது தொல்லை என்று தள்ளி நிற்கிறான் மாசிலாமணி காமாட்சியிடம் கூறியிருந்தார் ரகு தொல்லை செய்தால் உடனே தன்னிடம் கூற வேண்டும் என்று.
அன்று அவன் வந்து சென்றதையும் தந்தையிடம் கூறியிருந்தாள் ரகுவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யவில்லை கொஞ்சம் நிதானித்தான், அன்று போலீஸ் மிரட்டியதிலிருந்து உள்ளுக்குள் கொஞ்சம் பயம்தான் அதனாலேயே காமாட்சியை அதிகம் சீண்டுவதில்லை.
பேசிப் பேசி எப்படியாவது அவள் மனதை கரைக்க நினைத்தான் அதற்காக அவளின் அலைபேசிக்கு அழைத்துப் பார்க்க அவன் எண்னையே பிளாக் செய்திருந்தாள், வேறு எண்ணிலிருந்து அழைப்பு விடுத்தால் அவன் சொல்லும் ஹலோவிலே துண்டித்துவிடுவாள்.
புடவை கொடுக்க வந்த அன்று “மறுபடியும் வந்து தொல்லை கொடுத்தீங்கன்னா நானே போலீஸ் கிட்ட போய்டுவேன்” என்று மிரட்டியிருந்தாள் அவளைக் கட்டாயப்படுத்தி செய்யவைக்க முடியாது என்பது அவனுக்கும் புரிந்தது என்ன செய்ய என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
அன்னம்மாவிற்கு இப்பொழுதுதான் மனது சமன்பட்டது வருடம் ஒன்றை கடந்துவிட்டது மகள் இப்படி மனம் விட்டுச் சிரித்து பார்த்தே, ஏதோ அவள் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருப்பதாகப் பட்டது அவருக்கு.
“மூத்தவளை பத்தி அடுத்து என்ன யோசனை” என்றனர் அன்னம்மாவின் பெற்றோர்.
“என்ன யோசனைனா என்ன சொல்ல அவளை என்ன செய்யண்ணே தெரியலம்மா, இப்போ கூட நாங்க இங்க வரோம்னு மகளைப் பாக்காம இருக்க முடியலையோ சோத்த கட்டிக்கிட்டு கிளம்பிடீங்க அவ அங்க என்ன சோறு கிடைக்காமலா இருக்கா அப்படின்னு பேசுறா, இந்தப் பச்ச பிள்ளை முகத்தைக் கூடப் பாக்காம எப்படித்தான் அவளால சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க முடியுதோ அவ பொண்ணான்னே எனக்குச் சந்தேகமா இருக்கு” என்றார் அன்னம்மா விழிகளைத் துடைத்துக்கொண்டு.
“இங்க பாருங்க மாப்ள நாங்க சொல்றோம்னு தப்பா நினைக்காதீங்க அவளை அப்படியே விட்டா சரியாவராது, என்ன அவசர கோலாம்னே தெரியாம ஒரு வாழ்க்கை ஒரு பிள்ளை அவளை வீட்டிலே வெச்சுகிட்டு சின்னவளுக்கு ஒரு நல்லதை செய்ய முடியாது”.
“அவ மனசுல இன்னும் வஞ்சம் கூடும் நம்ம நிம்மதியை குலைக்கவே ஏதாவது செய்வா மொதல்ல அவளை அனுப்பிவிடுங்க” என்றனர்.
“கல்யாணமா?” என்றார் மாசிலாமணி சந்தேகமாக.
“ஆமா கல்யாணம்தான்” என்க.
“அவ குணம் தெரிஞ்சே இப்படி பேசினா எப்படிப்பா அவ ஒத்துக்க மாட்டா எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டா” என்றார் அன்னம்மா.
“பேசுற விதத்துல பேசினா ஓத்துக்கிட்டு போறா அடுத்த வாரம் நாங்க அங்க வரோம் நாங்க பேசிக்குறோம் இனிமேலும் இவ தாளத்துக்குத் துள்ளிட்டு இருக்க முடியாது, நாளைக்கே ஆச்சிக்கு கல்யாணம் செய்ரோம் பொண்ணையும் மாப்பிள்ளையும் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு வாய் சோறு நிம்மதியா உங்களால குடுத்துட்டு முடியுமா”.
“இவ மட்டும் அந்த வீட்டில அதிகாரம் செஞ்சுகிட்டு இருந்தா போதுமா நாளைக்கு சின்னவளும் வந்து போக இருக்கவேண்டாமா இப்போ இங்க இருக்குற மாதிரி நாளைக்கு புருஷன் வீட்டில மட்டுமே இரு இங்க வரவேண்டாம்னு சொல்லுவீங்களா, நம்ம காலதுக்கப்றம் மூத்தவளுக்கு என்ன பாதுகாப்பு அதையும் யோசிக்கணுமா வேண்டாமா இப்போவே சரி செஞ்சிடனும் இல்லனா இது இப்படியே நீண்டுகிட்டே போகும் நாங்க வந்து பேசுறோம் இதுக்கு ஒரு முடிவு தெரியனுமே” என்றனர்.
முத்துலட்சுமி தம்பியைப் பார்த்து “அவங்க சொல்றதுதான் சரி மணி அவ என்னமோ செஞ்சிருக்கட்டும் ஆனா நாம விட்டுற முடியாதே வயசும் இப்போதா இருபத்தி ரெண்டு ஆகுது காலம் இன்னும் கெடக்கு பாத்து நல்லத செய்வோம் அதைக் காப்பாத்திக்கறது அவ சாமர்த்தியம்” என்றார்.
காமாட்சி இதில் எதிலுமே பங்கு கொள்ளவில்லை அவள் குழந்தையோடு அபப்டியே வெளியே சுற்ற சென்றுவிட்டாள்
இந்த நான்கு மாதமாக ஞாயிறுகளில் கோவிலில் வந்து காத்திருக்க தொடங்கியிருந்தான் என்றேனும் அவளும் அவன் வரும் நேரம் வரக்கூடும் என்று அன்றும் வந்து காத்திருந்தான் அவளைக் காணவில்லை சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.
“வேலு தங்கச்சி கல்யாணம் நல்லாடியா முடிஞ்சிடுச்சு இனிமே உனக்குப் பாக்கணும் இப்போதான் கடன் எதுவும் இல்லையே பாக்கட்டுமா” என்றார் மயில்லம்மா.
“வேண்டாம்” என்றான் அவன்.
“ஏண்டா அதான் சித்ராவை கட்டிக்குடுத்தாச்சே இனிமே உன் பொண்டாட்டி போட்டுவர நகை எதையும் உன் தங்கச்சிக்கு குடுக்க வேண்டியதில்லை உன் பொண்டாட்டியே போட்டுக்கலாம்” என்றார் நொடிப்பாக.
“மயிலு” என்றார் ராமலிங்கம் அதட்டலாக.
“உங்க நகை எல்லாத்தயும் நீங்கதானே போட்டிருக்கீங்க, அதே மாதிரி என் பொண்டாட்டி நகையை அவதான போட்டுக்கணும்” என்றவன் “இவ்ளோ பேசுறீங்களே நாளைக்கே ஏதாவது தேவைன்னு கேட்டா உங்க மக அவ நகையைக் கழட்டி தருவாளா” என்க.
“அது எபப்டிடா அவ இன்னொரு வீட்டுக்கு வாழப் போயிருக்கா” என்றார் உடனே.
உங்களையெல்லாம் திருத்த முடியாது என்று தலையில் அடித்துக்கொண்டவன் “என்னோட கல்யாண விஷயம் நான் பாத்துக்குறேன்” என்றான்.
“அப்படி எல்லாத்தயும் நீயே எப்படி முடிவு செய்வ அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்” என்க.
“அதுதான் எனக்கும் தெரியல” என்றவன் அறைக்குள் சென்று கதவடைத்தான், மயில்லம்மா அதிர்ச்சியாகி நிற்கச் சத்தம் இல்லாமல் கிளம்பிவிட்டார் ராமலிங்கம் அடுத்து அவர் தலைதானே உருளும்.
அடுத்த ஞாயிறு தாத்தா பாட்டி இருவரும் காலையிலே பேரமனூர் சென்றுவிட்டனர் மீனாவிடம் பேச, காமாட்சி குளித்துத் தயாராகி கோவிலுக்குச் சென்றாள் அவள் சன்னிதானம் சென்றபோது அங்குக் கண்மூடி வேண்டிக்கொண்டு நின்றிருந்தான் மருதவேலு.
என்னவோ ஒரு பரவசம் மனதில் அமைதியாக அவளும் சென்று அவன் எதிரே நின்றுகொண்டாள் கண்களைத் திறந்தவன் கண்டது அவன் ராணியை தான் மெல்லிய புன்னகை அவனிடம் அர்ச்சனை செய்த பொருட்ட்களை அவனிடம் நீட்டினார் பூசாரி அவருக்குக் காணிக்கை கொடுத்துவிட்டு அவன் நடக்கத்தொடங்க அவன் பின்னையே மெல்ல நடந்துகொண்டிருந்ததாள் காமாட்சி.
சுற்றி வந்து எப்பொழுதும் அமரும் இடத்தில் அவன் அமர்ந்துகொள்ள அவன் அருகில் வந்தவள் “கோவிலுக்கு அடிக்கடி வருவீங்களா” என்றவளை பார்த்து மெலிதாகச் சிரித்தான் உன்னைத்தேடி வந்துகொண்டுதான் இருக்கிறேன் என்றது என்றது அந்தப் புன்னகை அவளுக்குத் தான் புரியவில்லை.
“அர்ச்சனை வேற என்ன விஷேஷம்” என்க இதழில் உறைந்த புன்னகையோடே “இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்” என்றான்.
“வாவ் ஹாப்பி பர்த்டே” என்று அவள் கை நீட்ட அந்தத் தளிர் விரல்களையே பார்த்திருந்தவன் குரலைச் செருமிக்கொண்டு அவள் கரங்களைப் பற்றி “நன்றி” என்றான், அந்தக் குட்டிக்கை அவன் வலிய கரங்களில் பாந்தமாக அடங்கி இருந்தது மனமே இல்லாமல் அவள் கரத்தை விடுவித்தவன்.
“புடவை ரொம்ப அழகா இருந்துச்சு சித்ராக்கும் பிடிச்சிருந்தது” என்றான்.
“ஓஹ்…” என்று கூறி புன்னகைத்தவள் “நான் அதுல பேரே எழுதல யார் குடுத்ததுன்னு கேக்கலையா” என்றாள் மெல்ல.
“நானும் பேர் எழுதல” என்றவன் அவள் விழிகளைப் பார்த்துக்கொண்டே “என்ன பேர் எழுதணும்னு நீதான் சொல்லணும்” என்றான், மெலிதாகப் படபடக்கத் தொடங்கியது காமாட்சியின் மனம் நடுங்கும் விரல்களைக் கோர்த்துக்கொண்டு தலையை அவள் தாழ்த்தி அமர்ந்திருக்க.
“என்னோட குடும்பம் பத்தி நான் உனக்குப் புதுசா சொல்ல ஒண்ணுமில்ல உனக்கே தெரியும் சொத்துன்னு ஒன்னும் இல்ல, ஒரு தங்கச்சி அவளையும் நல்லபடியா கட்டி கொடுத்தாச்சு அப்புறம் அப்பா அம்மா நான்தான் பாத்துக்கணும் சொந்தமா வீடு கூட இல்ல இப்போதைக்கு”.
“உழைக்கத் தெம்பிருக்கு உடம்பிலயும் மனசிலயும் வலுவிருக்கு ஆடம்பரமான வாழ்க்கையை குடுக்கமுடியாட்டியும் அல்லல் இல்லாத வாழ்க்கையை குடுக்க முடியும், சண்டை சச்சரவே வராதுன்னு சொல்ல முடியாது ஆனா நம்பி வரவளை எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டேன்”.
“என்கிட்டே இருக்குற எல்லாத்துலயும் எல்லாரும் பங்கு கேக்கலாம் வாழ்க்கைல பற்றாக்குறையும் இருக்கலாம் ஆனா ஒன்னு மட்டும் உனக்கே உனக்காகன்னு வெச்சிருக்கேன்… என் காதல் அது முழுசும் உனக்கு மட்டுமே கொடுக்கணும்னு ஆசை எனக்கு” என்றவனை அவள் விழி விரித்துப் பார்க்க.
“என்னய கட்டிக்கிறியா” என்றவன் அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே தன் கரத்தை அவளின் முன் நீட்டினான்.
விழிகளை இறுக மூடிக்கொண்டாள் காமாட்சி அப்பா என்ன உணர்விது உடல் சிலிர்த்து அடங்கியது இதழ்கள் விரிய துடித்தது விழிகள் நீரை சொரிந்தது கீழ்ழுதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டவள் மெல்ல விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள் அவள் வளைகரம் அவன் கரத்தின் மீது பதிய அழுத்தமாக அதைப் பற்றினான் மருதவேலு.
error: Content is protected !!