Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான் – 22

அந்தியூரான் – 22
வண்டியில் எறியதில் இருந்து அப்படி ஒரு அழுகை குமாரி.அந்தியூரில் இருந்து மறு வீட்டுக்காகக் கோவை வந்திருந்தார்கள் போலும் புதுமண தம்பதிகள்.வந்து இரு நாட்கள் தான் இங்கு இருந்திருப்பார்கள்.அதற்குள் அந்தியூரில் இருந்து விரைவாக வரும் படி செய்தி கிட்ட.உடனே வண்டியை ஏற்பாடு செய்து விட்டு மனைவியைக் கூட்டி கொண்டு கிளம்பி விட்டான் அமுதன்.
“குமாரி!” இத்தனை நேரம் பாப்பா, தங்கம் என்று வித விதமாக அவளது அழுகையை நிறுத்த சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தவன்.இப்போது கொஞ்சம் அதட்டி அழைக்க .சிறு அதிர்வு கொண்டு கணவனைப் பார்த்தாள்.


Advertisement

“ஊருக்கு போறவரை அழுது வைப்பியா நீ? முகத்தைப் பாருடி குடை மிளகாய் மாதிரி இருக்கு ஏங்கி! ஏங்கி! அழுது என்னைப் பயம் காட்டி வைக்காத”

Advertisement

“மாமா எப்ப பாரு என்னைக் கொண்டே விசாக்கும், அப்பாக்கும் சண்டை. நான் வரும் போதே விசா என்கிட்ட முகம் கொடுத்து பேசல,அப்பாவும் சரியில்லை.அப்பத்தா கிட்ட சொன்னேன் அவங்க நீ உன் வேலையை பாருன்னு சொல்லிட்டாங்க “

Advertisement

“ப்ச்! சரி பேசிக்கலாம் நீ அழுதா எல்லாம் சரியா போயிடுமா?”

Advertisement

“எனக்கு பயமா இருக்கு மாமா?”
“என்ன பயம்?”
“ஹ்ம்ம்! என்றவள் சில நொடிகள் கடந்து தங்கச்சின்னு வந்தா நீங்க அப்பாவாகி போவீங்க.அப்போ சரி, இப்போ? நீங்க என்னைத் தான் திட்டுவீங்க” அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவளாது எண்ணத்தை நல்ல கணவனாகச் சரியாகப் படித்தவன்.குமாரியை ஆழ்ந்து பார்த்தனே ஒழிய எதுவும் பேசவில்லை.
“மாமா! நான் உங்களைக் கல்யாணம் பண்ணது விசாக்கு புடிக்கல”
“ப்ச்! பேச்சை விடு. என்ன? ஏதுன்னு? தெரியாம எதுவும் பேச முடியாது. நீயும் கண்டதை எண்ணி வார்த்தைய விடாத” என்றவன் சிறு இடைவேளை விட்டு.எனக்குத் தெரியும் தங்கச்சினா என்ன? பொண்டாட்டினா என்ன? அவங்களுக்கான இடம் என்னன்னு” என்றவனை ஓர், இரு நொடி இமைக்காமல் பார்த்தவள்.
அதன் பின் எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.இந்த புரிதல் தான் வியக்க வைத்தது.அது என்ன இருவருக்கும் அப்படி ஒரு ஓட்டுதல்.அதுவும் இந்தச் சில நாட்களில். பல ஆண்டுகள் வாழ்ந்தது போல ஒரு இயல்பான வழமை இருவருக்குள்ளும்.
மரகதம்,முத்து,காந்திமதி என்று பெரியவர்கள் இவர்களைக் கண்டு வியந்து தான் போனார்கள்.இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அந்தப் புள்ளியில் தான் இவர்களது புரிதலின் தொடக்கம் என்று பெரியவர்களுக்கு யார் எடுத்து சொல்வது.
அந்த ஒரு புள்ளி, கீழ் மட்டத்தில் இருந்து போராடி வந்த அமுதன்.அவனது பொறுப்பு,கடமை என்று ஓடிய ஓட்டம்.தங்கையின் வாழ்க்கை,மூன்று பெரியவர்களின் கடமை என்று அவன் தன்னைக் காண முடியாமல் ஓடினான்.
குமாரி அத்தனை வளங்கள் இருந்தும்,விசாவின் அன்பும், அக்கறையும் நிறைந்திருந்தும்.தனக்கான ஓர் தனித்துவமான அன்பை தேடி நின்றாள்.அதாவது அன்பிருந்தும் ஆறுதல் கொள்ள முடியா நிலை.அதனாலோ என்னமோ தன்னை கொண்டு தன்னவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
ஓடிய ஓட்டத்திற்கு மருந்தாகத் தன்னைத் தாங்கிய உறவை அமுதனும் தாங்கி நின்றான்.இதுவே அவர்களது புரிதலுக்கான அடித்தளம்.அதுவும் போக இந்த சில தினங்களாகக் குமாரியின் தேவைகளை நன்கு அறிந்து கொண்டான் அமுதன்.இந்த அரிவையின் தேவை மிக மிகக் குறுகிய ஒன்று? அது தனித்துவமான அக்கறை,
அன்பு கொண்டவனுடன் அவளுக்கே அவளுக்கான நேரம்.அதிலும் அவளைக் குழந்தையாகத் தாங்கி கொஞ்ச வேண்டும்.அதில் அத்தனை பூரிப்பு பெண்ணுக்கு.அவளை அறிந்து கொண்ட நொடி இவள் தேவதை தான் என்று நெஞ்சில் ஆழமாகக் குத்தி கொண்டான் அமுதன்.
ஒருவழியாக சிவராமன் வீட்டை அடைந்தவுடன் பதட்டமாக இறங்கிய குமாரி வேமாகப் படிகளில் ஓடி செல்ல,
“ஏய்! பார்த்து” என்றவன் வண்டிக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு. அவனும் கொஞ்சம் வேக எட்டுகள் வைத்து கூடத்திற்குள் நுழைந்தான்.கூடத்தில் தணிகா கையில் கட்டுடன் கண்ணை மூடி அமர்ந்திருக்க. அவன் அருகில் சிவராமன் அமர்ந்திருந்தார்.
கந்தன்,கணேசன்,பழனிசாமி,ரெங்கன்,முத்துராமன் என்று வீட்டின் மாப்பிள்ளைகள் மட்டும் இருந்தனர்.பெண்களை அழைத்து வர வேண்டாம் என்று சிவராமன் சொல்லிவிட்டார் போலும்.
சிவகாமி தணிகாசலத்தின் அறையை விடாமல் தட்டி கொண்டு இருந்தார், “விசாலாட்சி என் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு சொல்லிட்டேன்.இப்போ நீ கதவை திறக்க போறியா என்ன?” என்றும் இல்லாத கடுமையைச் சிவகாமி காட்டி நின்றாள்.
அதற்குள் குமாரி வந்தவள் சிவகாமியிடம் விரைந்து, “அப்பத்தா என்ன ஆச்சு?” சிவகாமி பதில் சொல்லும் முன் குமாரியின் குரலை கேட்டு கதவை திறந்து கொண்டு அத்தனை கோபமாக குமாரி முன் வந்து நின்றாள் விசாலாட்சி.
முன் பேச்சுக்கள் எதுவுமின்றி “இப்போ சந்தோசமாடி உனக்கு? சந்தோசமா? நான் உனக்கு என்ன பண்ணுனேன் என்னை வாழவே விட மாட்டேங்குற? எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்.தலைப்படா அடிச்சுக் கிட்டேன் இந்த கல்யாணம் வேணான்னு கேட்டியா? இப்போ பாரு நான் தாண்டி அல்லாடி நிக்கிறேன் “
விசலாட்சியின் பேச்சில் ஆண்கள் அனைவரும் பதறிக் கொண்டு வந்தனர். இருக்கும் வேகத்தில் குமாரியை அடித்தாலும் அடித்து விடுவாள் போலும்.
“சொல்லுடி” என்று அதட்ட முதல் முறை விசாவின் பேச்சில் அத்தனை கடுமையை கண்டாள் குமாரி.மேலும் அவளை கோபமாக விசாலட்சி நெருங்கும் முன் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் அமுதன்.
விசாலாட்சியின் தோள் மீது கை வைத்துக் கொஞ்சமாக அவளை நகர்த்தி, “என்ன பிரச்சனை முதல அதை சொல்லு விசா?”
குமாரியை காக்கும் பொருட்டு அவளுக்கு முன் நிற்கும் அண்ணனை “ஓ! இப்போ இவ உன் பொண்டாட்டி அதுனால நீ வரியா? அது என்ன அவளுக்கே எல்லாரும் நிக்கிறீங்க. அப்போ எனக்கு யாரு இருக்கா? நான் யாரு?” என்று கத்தியவளை
“ப்ச்! விசா இது என்ன பேச்சு? அவளுக்கு சொன்னது தான் உனக்கும்.ஒரு அண்ணாவா தகப்பனா உனக்கு எப்போதும் நான் இருப்பேன். அதே போல அவளுக்குப் புருஷனா அவளுக்குத் துணை இருப்பேன்.இப்போ உனக்கு என்ன அதை சொல்லு?”
“என்னத்த சொல்ல அவருக்கு உன்னைக் கண்டாலே ஆகாது. எனக்காக நீ பேசுனதை கேள்வி கேட்டதை எல்லாம் இந்த மனுஷன் உள்ளுக்குள்ள வந்துட்டு உன்னைப் பொருமி கிட்டே இருப்பாரு.நான் அத்தை மாமா கிட்ட கூடச் சொன்னேன். அவருக்கு எங்க அண்ணனை ஆகாது இந்தக் கல்யாணம் வேண்டாம்னு அவங்களுக்கு அவங்க பேத்தி தான் முக்கியம் அவ சந்தோஷம் முக்கியம்
அவங்களும் என் பேச்சை கேட்கல.கல்யாணம் பேச்சு தொடங்குனதுல இருந்து இவர் சரியில்லை இரண்டு நாள் முன்னாடி உன்னை அப்படிப் பேசி வைக்கிறார்.உங்க அண்ணன் என் பொண்ணைப் பழி வாங்க தான் கல்யாணம் பண்ணிருக்கான். அது, இதுனு பேச்சு.ஒரு பொட்டு என்னைத் தூங்க விடல. அவர் பொண்ணைக் கொண்டு அத்தனை யோசிக்கிறார் அண்ணா..
நான் என்ன இவர வேணுன்னு கல்யாணம் பண்ணுனேனா.பெரியவங்க பார்த்து வச்சு தானே கல்யாணம் பண்ணுனேன்.எனக்குன்னு சில தனி பட்ட விஷியங்கள் இருக்கு தானே. ரொம்ப சொல்ல முடியாது சிலது சொல்றேன் கேட்கோ.
வாய திறந்தா செல்வி தான் என்னை அந்தப் பெயர் சொல்லி தான் அடிக்கடி கூப்பிடுவாரு.நானும் அவர் வலியை எண்ணி எனக்கு வலிக்காத மாதிரி கண்டுக்க மாட்டேன்,ஆனா அதுக்கும் அளவு இருக்கு தானே.நானும் மனுசி தானே பிள்ளை,பேத்தின்னு தான் யோசிக்கிறது என்னைக் கொண்டே இங்க யாருக்கும் யோசனையே இல்லை.
இப்போ எனக்கு போக்கிடமும் இல்லை.ஏன்னா உனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு.நான் எங்க போறது செத்து தான் போகனும்”
“ஏய்!”
“அம்மாடி!”
“விசா!” என்று அத்தனை குரல்கள் அவளுக்காக அதிர்ச்சியாக ஒலித்தது. தணிகா மனைவியை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தான்.
குமாரிக்கு ரொம்பவே பயமாக இருந்தது அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.அடக்கியும் முடியாமல் கதற சலித்த அமுதன் வலதுபுறம் தங்கையை, தாங்கி இடது புறம் தனது மனைவியைத் தாங்கி நின்றான்.
இரு பெண்களின் அழுகையும் ஓய்ந்த பாடில்லை.பொறுமையாக இரு பெண்களின் முதுகையும் நீவி கொடுத்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் அமுதனுக்கு பொறுமை காற்றில் பறக்க,”நிறுத்துங்கடி இரண்டு பேரும் என்று அதட்ட இரு பெண்களும் தேம்பி கொண்டே அழுகையை குறைத்தனர்.
“விசா! இப்போ கொஞ்சம் போயி படு நம்பக் கொஞ்சம் நேரம் கழிச்சுப் பேசலாம்”என்றதும் அமைதியாக எழுந்து சென்று விட்டாள்.இத்தனை வருடங்கள் அழுத்திய பாரத்தையெல்லாம் கொட்டி விட்டு தளர்ந்து நின்றாள் போலும்.
விசாலாட்சி அண்ணன் சொன்னதும் அமைதியாக அறைக்குள் சென்று விட்டாள்.அடுத்து என்ன? என்பது போல் மற்றவர்கள் பார்க்க.
“மாமா சிவராமனை அழைத்தவன் சாய்ங்காலம் பேசிக்கலாம்” என்றதும் அவர் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினார்.
கந்தன்,”மாப்பிள்ளை எழுந்திரி கொஞ்சம் வா என் அறையில படுத்துக்கலாம்” என்றவன் தணிகாவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று விட்டான்.அவனுக்குப் பின்னே அனைத்து ஆண்களும் சென்று விட்டனர்.
எஞ்சி நின்ற சிவராமன், சிவகாமியை பார்க்க முதல் முறை என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணில் நீருடன் தவித்துக் கொண்டு இருந்தாள் சிவகாமி.
“சிவா நீயும் கொஞ்சம் ஓய்வெடு பார்த்துக்கலாம்” என்றதும் பேசக் கூட வலு இல்லாமல் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் சிவகாமி.
அங்கு அறைக்குள் நுழைந்தது தான் தாமதம் குமாரி ஒரே புலம்பல்..
“விசா எப்படி பேசுனா பார்த்தீங்களா? இத்தனை நாள் என்னைப் பிடிக்காம தான் இருந்துச்சு போல.என்னால அவளும் அழுகுறா அப்பாக்கும் முடியல நானும் எங்க அம்மாவை கூடவே போயிருக்கலாம்” என்றவளை இறுக்கி அனைத்துக் கொண்டான் அமுதன்.
“ஆத்தாளுக்கும், மகளுக்கும் மூளை இப்புடி தான் குறுக்கு தனமா யோசிக்க வைக்கும் போல” கடிந்து கொண்டவனை தலையை உயர்த்திப் பாவம் போலப் பார்த்தவளை.
“என்னடி? அதட்டல் போல் கடிந்து கொண்டான்”
“விசா பேசுனது சரியா? அப்போ எனக்கு அவ அம்மா இல்லையா?” என்றவளது உணர்வை உள்வாங்கிக் கொண்டவன்.
“அவளும் ரொம்பப் பொறுமையா இருந்துட்டா குமாரி.அதான் சேர்த்து வச்சு வெட்டுச்சுட்டா விடு.இதுக்கெல்லாம் காரணம் திரு.தணிகாசலம்” கணவனைச் செல்லமாக முறைக்க.
“என்னடி முறைக்கிற உண்மை அது தான். பேச வேண்டியது உங்க இரண்டு பேர்கிட்ட இல்லை விடு நான் பார்த்துக்குறேன்”
“என்ன இருந்தாலும் விசா ரொம்ப பேசிட்டா மாமா”
“ஊப்!… பெருமூச்சை விட்டவன் பொண்ணுங்களாடி நீங்க ஆளுக்கு தக்கன எதையோ யோசிச்சு பேசிட்டு இருக்குறவங்க உயிரை வாங்கிட்டு இருக்கீங்க.ஒரு விஷயம் சொல்றேன் கேட்கோ.இங்க பாரு அவ இங்க முதல் முறை சண்டை போட்டு திரும்ப வாழ வந்ததுக்குக் காரணமே நீ தான்.அந்த நேரத்துல எனக்குக் கூடக் கோபம்” என்றதும் முகத்தைச் சுருக்கி கொண்டது அரிவை.
“அதான் என்னைப் பிடிக்கல யாருக்கும்”
“ச்ச! அப்போ இந்த தேவதைய பத்தி தெரியாதே.இப்போ தானே தெரியுது இது பொக்கிஷம்ன்னு, சமத்துன்னு அழகின்னு, பட்டுன்னு” என்றவன் மனைவியை அணைக்க
அவனுள் ஒடுங்கி கொண்டவள் “சும்மா சொல்லாதீங்க மாமா”
“நான் சும்மா சொல்ற ஆளாடி” என்றதும்
“இல்ல” பட்டெனப் பதில் கொடுத்தவளை புன்னகையுடன் பார்த்தவன்.
“கொஞ்சம் நேரம் படு பேசிக்கலாம்” என்றதும் அமுதனை பார்த்துக் கொண்டே படுத்து கொண்டாள்.
அவனுக்கும் களைப்பாக இருக்க உணவை மறந்து மனைவியுடன் படுத்து உறங்கி விட்டான்.அவன் மட்டும் இல்லை பகல் நேரமென்று பாராது அவ்வீட்டின் மக்கள் அனைவரும் மன சோர்வு வாட்ட படுத்துறங்கி விட்டனர்.
அனைவரது மனமும் உறங்கி இருந்தாலும் மனமெல்லாம் மாலை வேளையை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!