Skip to content
Post Views: 3,956
கால் வலி கொஞ்சம் குறைந்திருந்தது மருதவேலுவுக்கு ஆனால் நடப்பது சிரமமே காமாட்சி பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள் கணவனைக் கவனித்துக்கொள்ள.
Advertisement
அவனும் சொல்லிப் பார்த்துவிட்டான் “நீங்கப் போங்க ராணியம்மா ஒன்னும் பிரச்னையில்லை நான் பாத்துக்குறேன்” என்று அவள் கேட்டால் தானே உணவைக் கூட ஊட்டித்தான் விட்டாள், மனைவியின் அருகாமைக்கு ஏங்குபவனுக்கு கசக்குமா என்ன அத்தனை நிறைவு அவனுக்கு.
Advertisement
Advertisement
அதற்குமேல் விடுமுறை கிடைக்காது ஆகையால் அடுத்தநாள் வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள் கணவனை அவளேதான் கைத்தாங்கலாகப் பாத்ரூம் அழைத்துச்செல்வாள் குளிக்கவைப்பாள், முடியாதபோதும் விரும்பித் தன் பாரத்தை தோளில் தாங்கி நடப்பவளை அத்தனை காதலோடு பார்த்திருப்பான் மருதவேலு.
Advertisement
இன்று வேலைக்குச் செல்லவேண்டுமே ஆகையால் காலையிலே எழுந்து அணைத்து வேலைகளும் முடித்துவிட்டாள் காலை உணவு மதியம் சாப்பாடு இடையில் அவனுக்குக் குடிக்க டீ, சாப்பிட வேண்டிய மருந்துகள் தண்ணீர் பாட்டில் அனைத்தும் அவன் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்தாள்.
அனைத்தையும் முடித்து அவனைக் குளிக்க அழைத்துச்சென்றாள் அதற்க்கு மட்டும் அவன் மறுப்பு சொல்வதில்லை கணவனை அந்த நொடிகள் முழுதும் ரசித்துக்கொண்டே இருப்பாளே, வீட்டிற்கு வந்த அடுத்த நாளே தாடியை ட்ரிம் செய்துவிட்டு விட்டாள்.
அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தவளை பார்த்துக்கொண்டிருந்தவன் “ராணிம்மா” என்றழைக்க திரும்பிப் பார்த்தாள் “இங்கவங்க” என்றான்.
அவனை நெருங்கியவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன் “என்ன ஏன் இவ்ளோ டென்ஷன்” என்க.
“இல்ல… தனியா எப்படி… எனக்குப் போகவே மனசில்லை ஆனா லீவ் தரமாட்டாங்க” என்றாள் வாட்டமாக.
“அதுக்கென்ன எனக்கு இங்க ஒன்னும் பிரச்சினையில்ல கூப்பிட்ட உடனே அப்பா வருவார் அவரைக் கூடக் கூப்பிட வேண்டாம் என் கைக்குப் பக்கத்திலே எல்லாமே இருக்கு அப்புறம் என்ன” என்றவன் அவள் கன்னம் வருடி “ஒரு உண்மை சொல்லட்டுமா… மயிலம்மா கூட என்னை இப்படி பாத்திருக்க மாட்டாங்க நீங்க என் வாழ்க்கையோட வரம் மனசு அவ்ளோ நிறைவா இருக்கு எந்தக் கலக்கமும் இல்லாம போயிட்டு வாங்க நான் இங்க பத்திரமா இருப்பேன்” என்றவன்.
“ஆனா ஒரு கண்டிஷன்” என்க.
விழியில் நீரோடு அவனைப் பார்த்தாள் காமாட்சி “என்னை விட்டுட்டு நீங்க இருக்கப்போற எட்டு மணிநேரத்துக்கு எட்டு முத்தம் வேணும் குடுத்துட்டு…” என்றவன் முடிக்கும் முன் அவன் இதழ்களை அவன் மனையாள் சிறைசெய்தாள்.
அத்தனை முத்தங்களும் அணைப்பும் அறிவுரையும் என்று கிளம்பிச்சென்றாள், முதல் நாள் தான் சித்ராவின் வளைகாப்பு நடந்திருந்தது வளைகாப்பை அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்தினான் மருதவேலு.
மயிலம்மா கேட்ட தொகை முழுவதையும் கொடுக்க முடியாது என்று திடமாகக் கூறிவிட்டான் “இங்க பாரு வேலு மாப்பிளைக்கு வேலை இல்லன்னு மதிக்காம நாம குறைவா செய்றதா அவங்க நினைப்பாங்க அதனால வளைகாப்பை கொஞ்சம் விமர்சியா செய்யணும்” என்ற தாயை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்தவன்.
“அவ்வளவுக்கு எனக்கு வசதி இல்லம்மா பத்து நாளா படுக்கைல கிடக்குறேன் வண்டி ஓட்ட எப்படியும் இன்னும் ஒரு மாசம் ஆகும் வீடு மாத்தினது ஹாஸ்பிடல் செலவுன்னு எவ்ளோ செலவுன்னு ஏதாவது தெரியுமா உங்களுக்கு”.
“வண்டி எல்லாமே வெளில இருந்து ட்ரைவர் வெச்ச்சு ஓட்டறோம் சம்பளம் போக நம்ம கைல என்ன நிக்கும் செலவை யோசிச்சு எனக்குத் தலை வலிக்குது அதுல நீங்கச் சொல்ற மாதிரிலாம் என்னால செய்ய முடியாது” என்றான்.
“அதான் உன் பொண்டாட்டி வேலைக்குப் போறாளே நல்ல சம்பளம் தானே புருஷனுக்கும் புகுந்த வீட்டுக்கும் செய்யமாட்டாளா என் பிள்ளை அவளுக்குச் சம்பாரிச்சு கொட்டணும் அவனுக்கு ஒரு தேவைன்னா அவ செய்யமாட்டாளா” என்றார்.
“எதுக்குமா செய்யணும் அப்படி செய்யவேண்டிய அவசியம் என்ன செய்யறதுக்கு மட்டும் அண்ணன் அண்ணி எல்லாரும் வேணும் மத்த எல்லாத்துக்கும் நாங்க மூணாம் மனுஷங்க, எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஏதாவது சண்டையா மனக்குறையா எதுக்காகப் போகமாட்டேன்னு சொன்னவள பிடிவாதமா வெளில அனுப்பினேன் யார் காரணம்”.
“சரி வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு அழுதுகிட்டே போனாளென்னு உங்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சி உருத்தினுச்சா, உங்க பொண்ணு வாழ்க்கைக்கு அப்படி ஓடி ஓடி உருகினீங்க நான் யாருமா உங்களுக்கு ஆசை பட்டுக் கட்டினேன் ஒரு மாசம் கூட என்னைய நிம்மதியா வாழ விடல நீங்க, என்னை முழுசா நம்பி வந்தா அந்த நம்பிக்கையை முப்பது நாள் கூட என்னால காப்பாத்த முடியல”.
“அவங்க வேலைக்குப் போறது அவங்க இஷ்டம் இத்தனை வர்ஷம் அவங்க அப்பா கஷ்டப்பட்டு படிக்கவெச்சு செலவு செஞ்சாரு அவங்களும் கஷ்டப்பட்டு படிச்சு வேலை தேடி சேர்ந்திருக்காங்க அவங்க வேலைக்குப் போவாங்க அவங்களுக்கா போதும்னு தோன்ற வரைக்கும் போவாங்க என் பொண்டாட்டி சம்பளம் என்ன செய்ரோம் அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை நீங்க என் வருமானத்தை மட்டும் வெச்சு யோசிங்க போதும்”.
“என்கிட்டே காசு இல்லை சின்னதா ஒரு மண்டபம் புடிச்சு சிக்கனமா செய்யலாம் சக்திக்கு மீறியே கல்யாணம் செஞ்சாச்சு கடன் வாங்க நான் தயாரில்லை, வேலையெல்லாம் என் பிரெண்ட்ஸ் பாத்துப்பாங்க உங்களுக்கு அந்தச் சிரமமும் இல்ல என்னால இவ்ளோதான் முடியும் சரின்னா சொல்லுங்க வேலையை ஆரம்பிக்கலாம் இல்லன்னா விட்டுடுங்க” என்றுவிட்டான் முடிவாக.
வேறு வழி சம்மதித்துவிட்டார் மயிலம்மா இவர்களுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவனே பார்த்துக்கொண்டான் நண்பர்களை வைத்து, அவனின் மாமனாரும் மாமியாரும் அப்படி கைகொடுத்தனர் சொல்லாமலே பார்த்துப் பார்த்துத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துகொடுத்தனர்.
சித்ரா தாய் வீடு வந்துவிட்டாள், பிள்ளையைச் சுமக்கிறாள் என்பதால் ஏதேனும் ஒரு வகை உணவைத் தினமும் காலைச் சமையலோடு சேர்த்து செய்து அலுவலகம் செல்லும் நேரம் கீழே மாமனாரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவாள் காமாட்சி உள்ளே சென்று உறவாடவும் மாட்டாள் என்றால் முற்றாகத் தள்ளி நிறுத்தவும் இல்லை.
அன்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்திருந்தனர் தம்பதியர் “ரொம்ப தூரமான சவாரி இப்போ உடனே எடுக்க வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும் கால் வீக்கம் எப்படி அதெல்லாம் பாத்துட்டு முடிவு செய்யலாம் சிட்டிக்குள்ள கொஞ்ச நாள் ஓட்டுங்க” என்றிருந்தார் அவர்.
இப்பொழுது வலியெல்லாம் இல்லை அவனுக்குச் சாதாரணமாகத் தான் தெரிந்தது உடனேயே வண்டியை எடுத்துவிட வேண்டும் என்ற பரபரப்பு அதற்க்கு அவன் மனைவியும் சம்மதிக்க வேண்டுமே மருத்துவரிடம் அத்தனை கேள்விகள்.
வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றி அவள் உணவை எடுக்கப் போக அவளின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று படுக்கையறை கதவை அடைத்துவிட்டான் “அச்சோ என்ன செய்றீங்க விடுங்க சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றாள் அவள்.
“எனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றவன் மனைவியோடு கட்டிலில் சரிந்தான்.
“அச்சோ பாத்து கால்” என்றாள் அவள் பதறி.
“ராணிம்மா ப்ளீஸ் ஒருமாசம் என்னோட பேசாம பாக்காம இருந்தீங்க அதுக்கு அப்புறம் ஒரு மாசம் படுத்தே கிடேந்தேன் என்னைய பாத்தா பாவமா இல்லையா இதுக்கு மேல எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் ராணியம்மா” என்றவன் கைகள் வார்த்தைகளுக்கு முன்பே அவள் மேனியில் தன் தேடலைத் தொடங்கியிருந்தது.
அந்தக் குரலின் தவிப்பும் ஏக்கமும் அவளைத் தடை போட விட்டுவிடுமா என்ன அவள் மட்டும் கணவனைத் தேடவில்லையா அணைப்பும் முத்தமும் மட்டுமே என்ற நிலை இப்பொழுது போதாமல் போனது அன்றைய நாளில் உணவையே மறந்து தான் போயினர் இருவரும், கெஞ்சலும் கொஞ்சலும் தேடலும் கூடலுமாய் நாட்கள் அழகாக மிதந்தது.
சித்ராவுக்கு பெண்பிள்ளை பிறந்திருந்தாள் மகளுக்குக் குழந்தை பிறந்ததுமே மயிலம்மா தொடங்கிவிட்டார் மருமகள் இன்னும் நல்ல செய்தி சொல்லவில்லையென்று கலக்கமாகப் பார்த்த மனைவியைத் தோளோடு அனைத்துக்கொண்டவன்.
“உங்களை எப்படி எனக்குன்னு சரியான நேரத்துல கொண்டு வந்து சேர்த்தாரோ அந்தச் சாமி அதே மாதிரி நம்ம பிள்ளையையும் கூட்டிட்டு வருவார் இதெல்லாம் கண்டுக்க கூடாது” என்றுவிட்டான்.
அவனுக்கு அடுத்த கடமையாகத் தாய் மாமன் பொறுப்பு வந்து சேர்ந்துவிட்டதே இது செய்ய வேண்டும் அது செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் போல ஒரு பட்டியலைத் தயார் செய்தார் அவன் தாய்.
அதில் அவசியம் என்று தோன்றியதை மட்டும் செய்து தங்கையையும் அவள் மகளையும் அனுப்பிவைத்தான் மருதவேலு, இன்னும் வாசனுக்கு வேலை கிடைக்கவில்லை முதலில் அவனுடைய செர்டிபிகேட் வாங்க வேண்டுமே அவனுக்கு அங்கே செல்லவே என்னவோ தடுமாற்றம் ஆகையால் இழுத்தடித்தான்.
முடிந்தவரை தாய் தந்தையையும் சென்று பார்த்துக்கொள்வாள் காமாட்சி வயதானவர்கள் தனிமையில் தானே இருக்கிறார்கள் குட்டி பையனுக்கும் செல்லும்போதெல்லாம் ஏதேனும் வாங்கிக்கொண்டே செல்வாள், உடுப்புகள் விளையாட்டுப் பொருட்கள் தின்பண்டங்கள் என்று.
மருதவேலுவும் பிள்ளைக்குக் கணக்கு பார்க்காமல் செய்வான் ஞாயிறு அங்கே செல்வதானால் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தம்பதிகள் இருவரும் வெளியில் சுற்றிவிட்டு மாலைதான் வருவர் தந்தை இல்லை தாயும் இல்லை வயதான அந்த மூன்று ஜீவன்களால் அவனை வெளியில் கொண்டுசெல்லவோ விளையாடவைக்கவோ முடியவில்லை.
ஆகையால் வெளியூர் சவாரி இல்லையென்றால் மனைவியை அலுவலகத்தில் விட்டுவிட்டு அப்படியே பிள்ளையைப் பைக்கில் வைத்துக் கொஞ்ச நேரம் ஊர் சுற்றி அந்தப் பிஞ்சு விரல்கள் கை நீட்டிக் கேட்பதை வாங்கிக்கொடுத்து என்று முடிந்தவரை அவனைத் தாங்கிக்கொண்டான் சித்தப்பன்.
“நாங்கள் வளர்த்துக்கொள்ளட்டுமா” என்று இருவரும் கேட்டும்கூட முத்துலட்சுமி மறுத்துவிட்டார் “மிச்சம் இருக்கும் வாழ்க்கைக்கு இவன்தான் பற்றுக்கோள் எனக்கு ஏதாவது ஆயிட்டா அவனுக்கு யார் இருக்கா வயசான மூணு ஜீவனுக்கும் அவன் ஒருத்தன்தான் பிடிப்பா இருக்கான் நாங்க உசுரோட இருக்குற வரைக்கும் எங்ககூடவே இருக்கட்டும் அப்புறம் நீங்கதான் அவன் பொறுப்பை எடுக்கணும்” என்றுவிட்டார்.
தனக்கு பிறகு தன்னுடைய அனைத்தும் பேரனுக்கு என்றும் எழுதிக்கொண்டார், மாசிலாமணியும் தன் சொத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை காமாட்சிக்கும் மீனாவின் பங்கை இரண்டாகப் பிரித்து ஒன்றை பேரனுக்கும் ஒன்றை மீனாவுக்கு என்று எழுதினார்.
பெரிய மகள் வந்து பிரச்சனையைக் கூட்டினாள் தான் மாசிலாமணி முடிவாகச் சொல்லிவிட்டார் “அவன்தான் என் வீட்டின் மூத்த பேரன் அவனுக்குச் சேரவேண்டியதை குடுத்தே தீருவேன் உனக்கு வேணும்னா உன் பங்கை வாங்கிட்டு போ இல்ல அதையும் அவனுக்கே எழுதி வெச்சிடுவேன்” என்றுவிட்டார்.
அன்னம்மாவிற்கு மனதில் பெரும் வருத்தமே தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையைப் பார்த்துக்கொள்ளமாட்டேன் என்று சண்டை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவள் இப்பொழுது கணவனின் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பார்க்கிறாள் அதையும் அவள் அன்பாகச் செய்யவில்லை கணவனின் மீது கொண்ட பயம் செய்ய வைக்கிறது.
இப்பொழுது வாயெல்லாம் தாயிடம் மட்டும்தான் அங்கு வாலை சுருட்டிக்கொண்டுதான் இருக்கிறாள் சொத்து பிரிப்பதை பற்றி மூத்த மருமகனிடமும் பேசிவிட்டார் மாசிலாமணி.
“உங்க முதல் கல்யாணத்துல பிறந்த பிள்ளைகளை நீங்க விட்டுடல ஆனா மீனாவோட பிள்ளையை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடீங்க, அதுக்கு சம்மதிச்சுதான் கல்யாணம் நடந்தது நாங்க இல்லனு சொல்லல அதுக்காக என் பேரனை நான் அப்படியே விட முடியாது மீனாவோட பங்குல பாதி பேரனுக்கு மீதி மீனாவோட பேர்லதான் போடுவேன் அதைப் பின்னாடி புருஷனும் பொண்டாட்டியும் பேசி என்னனு முடிவு செஞ்சுக்கோங்க” என்றுவிட்டார்.
பெற்றவன்தான் பிள்ளையைத் தூக்கி வீசிச் சென்றான் என்றால் இவனும் அப்படித்தானே இருக்கிறன் ஒருமுறை கூட அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரிக்கவோ அவனுக்கு ஏதேனும் வாங்கித்தரவோ இல்லை ஆனால் அவனின் பிள்ளைகளை அவனின் இரண்டாம் மனைவி சொந்த பிள்ளைகளாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் மனம் வெறுத்துதான் போனது அவருக்கு.
ரகு தாயை பார்க்க வந்திருந்தான் “டெல்லியில வேலை கிடைச்சிருக்கு நீங்க வரீங்களா” என்றான்.
மகனை அப்படியே பார்த்து நின்றார் முத்துலட்சுமி “என்னம்மா உங்க பையனவிட இவன் முக்கியமா அதுதான் அவனுக்கு அருமையான தாத்தா பாட்டி போதாக்குறைக்கு இப்போ சித்தப்பாவும் இருக்கானே பாத்துப்பாங்க” என்றவன் மறந்தும் காமாட்சியின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.
இப்பொழுது அவள் அவனுக்கு வேண்டாதவள் போயும் போயும் அந்த ரௌடி பயலை கட்டிக்கிட்டா போய்த் தொலையட்டும் என்பதுதான் இப்போதைய எண்ணம் இந்த ஞானோதயம் முன்பே வந்திருக்கலாம் விதி வலியது.
“பேசி முடிச்சுட்டன்ன கிளம்பு வேலை இருக்கு” என்றார் முத்துலட்சுமி.
பல்லைக் கடித்தான் மகன் “இப்போ போனா திரும்பி இங்க வரவேமாட்டேன் அங்கேயே நல்ல சேட்டு பொண்ணா பாத்து கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழ்வேன்” என்றான்.
“எவளையாவது கட்டி எப்படியோ போ சும்மா சும்மா இங்கேவந்து என் உயிரை எடுக்காத” என்றவர் கதவை அடித்துச் சாற்றினார் கிளம்பிவிட்டான் டெல்லி நோக்கி உங்கள்ளு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் என்று வீம்பாக.
லிங்கேஸ்வரனின் பிறந்தநாளை சிறிய அளவில் வீட்டின் மொட்டை மடியில் வைத்துச் சிறப்பான விருந்தோடு நடத்தினார் மாசிலாமணி, ஒருபவனில் தங்கச்சங்கிலியும் புதுத்துணியும் குட்டி காரும் கொண்டு வந்திருந்தனர் காமாட்சியும் மருதவேலுவும்.
ராமலிங்கம் மயிலம்மா அனைவரும் வந்திருந்தனர் “அவன் ஆத்தாளுக்கே அக்கறை இல்ல இவளைப் பாத்தியா என்னமோ இவ பெத்த மாதிரி தூக்கிகிட்டு சுத்துறதை இவனும் கூடச் சேந்து ஆடுறான்” என்றார் மகனையும்.
அவர் பேசுவதை எல்லாம் இப்பொழுது தூசியாகத் தட்டிவிட்டுவிடுவாள் காமாட்சி சிலர் எல்லாம் எப்பொழுதும் திருந்தமாட்டார்கள், மூத்த மருமகனுக்கும் அழைத்திருந்தார் மாசிலாமணி பேரனின் பிறந்தநாள் என்று.
அவன் “எனக்கு லீவ் இல்ல மீனா வரதா இருந்தா அனுப்புறேன்” என்றுவிட்டான்.
“அதோட அப்பன் வந்தானா நான் மாட்டும் ஏன் வரணும்” என்றாள் அவள் ரொம்ப சந்தோசம் நீயும் அவனும் வராம இருக்குறதே எங்களுக்கு நிம்மதி என்று எண்ணிக்கொண்டனர் இவர்கள்.
நாட்கள் அமைதியாகவே கடந்தது இரண்டு மாதங்களும் கடந்திருக்க அன்று இரவு சவாரி முடிந்து வந்த கணவனை வாசலில் வைத்தே இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் அவன் மனையாள்.
“என்ன ராணியம்மா வரவேற்பு பலமா இருக்கு” என்று அவளின் இடையோடு கைகோர்த்துக்கொண்டவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க.
நீண்ட அவன் பிடரி முடியை அழுத்தமாகப் பற்றி அவனை இன்னும் தன்னோடு சேர்த்தனைத்தவளின் “நீங்க அப்பாவாகப் போறீங்க” என்ற வார்த்தைகள் தேனாய் அவன் செவிகளை நிறைத்து உள்ளிறங்கியது.
error: Content is protected !!