Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 7. 1

“என்னதான் நினைச்சிட்டு இருக்கான் இப்படியே செஞ்சிட்டு இருந்தா இவளை எப்படி நான் கரையேத்த,  எல்லாம் உங்கள சொல்லணும் ஒழுங்கா பொழைச்சிருந்தா இப்போ எனக்கு இந்த நிலைமை வருமா இவன்கிட்ட இப்படி கெஞ்சிட்டு இருக்குற தலையெழுத்து வருமா”.

 

 



Advertisement

“அவன் சம்பாதிக்கிறான் அவன் இஷ்டப்படித்தான் செய்வான் நீ சம்பாரிச்சு சேத்து வெச்சிருந்திருக்கணும் இல்லையா இருந்த குடும்ப  சொத்தையாவது ஒழுங்கா காப்பாத்தி வெக்க தெரிஞ்சிருக்கணும் எதுவுமே இல்லமா இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்ட” என்க.

 

Advertisement

 

Advertisement

உண்டு கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்துவிட்டான் மயில்லம்மாவும்  இபோழுதுதான் உணர்ந்தார் எதோ வேகத்தில் பேசிக்கொண்டே சென்றுவிட்டார்  ‘தெருவில் நிறுத்தி விட்டீர்கள்’ என்பது என்ன பேச்சு.

 

Advertisement

 

அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறான் இத்தனை கடன் வாங்கியபோதும் தாயின் நகை எதையும் அவன் எடுக்கவில்லை, இரண்டு கைகளிலும் தங்க வளவிகள் கழுத்தில் ஏழு பவன் தாலிக்கொடி விஷேத்தத்திற்கு போவதென்றால் அட்டிகை, நெக்லஸ் பெரிய சங்கிலி என்று உள்ளது இரண்டு வித காதனியும் வைத்திருக்கிறார்.

 

 

வாடகை வீடென்றாலும் நல்ல பெரியவீடாகவே பார்த்திருந்தான் நல்ல துணி மணி சாப்பாடு என்று அவர்களைக் கஷ்ட ஜீவனத்தில் ஒன்றும் வைத்திருக்கவில்லை தங்கைக்குக் கூட நகை சேர்த்து வைத்திருக்கிறான் அவன் சொல்வதெல்லாம் ஒன்றுதான் தன்னுடைய சக்திக்குத் தக்க திருமணம் செய்யலாம் என்பதே.

 

 

இப்பொழுதே இவ்வளவு கேட்பவர்கள் நாளை இன்னும் கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்,  நல்ல வேளையில் இருக்கும் வரனையே பார்க்கிறேன் நாளைக் கேஸ் ஜெயித்தால் வரும் சொத்தில் ஒரு பங்கு சித்ராவுக்கு சேர்ந்ததுதானே அப்பொழுது அதை அவளுக்குக் கொடுக்கலாம் ஏன் நல்ல வீடாகக்கூட வாங்கி கொடுக்கலாம் எனக்குச் சொத்தில் பங்கு குறைந்தாலும் பரவாயில்லை என்கிறான்.

 

 

ஆனால் அன்னான் மகனுக்கே மகளைக் கொடுக்க வேண்டும் அதுவும் அவர்கள் கேட்பது அனைத்தையும் கொடுத்துத் திருமணம் நடத்த வேண்டும் என்பது என்னமாதிரி நியாயம்,  காதலா என்றால் அதுவும் இல்லை இவளுக்கு அவனைப் பிடிக்கும் அவனுக்கு அப்படியொன்றும் இல்லை அவனுடைய தாய் யாரை கைக்காண்பிக்கிறாரோ அந்தப் பெண்ணைக் கட்டிக்கொள்வான்.

 

 

தன்னுடைய புதிய வீட்டில் சென்று அமர்ந்திருந்தவனை தேடி வந்தார் ராமநாதன், அவனிடம் என்ன பேச என்று அவர் யோசனையில் இருக்க “வாசன் வீட்டுக்குத் தகவல் சொல்லுங்க பொண்ணு பாக்க வரச்சொல்லி” என்றான்.

 

 

“என்னப்பா சொல்ற அப்போ நகை பணத்துக்கு  என்ன செய்ய அந்தப் பொண்ணு காமாட்சியை கட்டிக்கிறியா” என்றார் ஆர்வமாக அவரை நிமிர்ந்தும் பார்க்காதவன் விழிமூடி அங்கேயே படுத்துவிட்டான்.

 

 

“பேசிப்பாரு கேக்கலைனா புடிச்சு உள்ள போடு” என்று மருதவேலு சொல்லியிருக்க அந்தப் பாக்கியத்தை காமாட்சிக்கு கொடுக்காமல் மீனாவே அதையும் செய்துவிட்டாள் மொத்த குடும்பத்தையும் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டாள்.

 

 

அவள் நினைத்தது ரகுவை மட்டும் மிரட்டுவார்கள் என்று,  குழந்தையை முத்துலட்சுமி பார்த்துக்கொள்வதாகச் சொல்லித் தன்னுடன் வைத்துக்கொள்ள  மீனா தாய் வீட்டில் தங்கினாள் அன்னம்மா இப்பொழுது அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் நடையாய் நடந்தார்

 

 

காமாட்சி கல்லூரியிலிருந்து புறப்படுவதற்கு முன் தாய்க்கு அழைத்துவிடுவாள் ரகு வீட்டில் இல்லை நீ வா என்று அன்னம்மா சொன்னால் மட்டுமே அத்தை வீடு செல்லுவாள் சிறிது நேரம் பிள்ளையை அவள் பார்த்துக்கொள்ளப் பெரியவர்கள் ஓய்வெடுப்பர் அதன்பிறகு தாயோடு வீடு வந்துவிடுவாள்.

 

 

அப்படியே இரண்டு வாரம் சென்றிருக்க அன்னம்மாவிடமிருந்து மாசிலாமணிக்கு அழைப்பு வந்தது “என்னங்க சீக்கிரம் வாங்க அண்ணியையும் ரகுவையும் போலீஸ் அழைச்சிட்டு போறாங்க பிள்ளையையும் தூக்கிட்டு போய்ட்டாங்க” என்று அழுதார்.

 

 

“என்னடி சொல்ற” என்றவர் அவசரமாகக் கடையிலிருந்து அக்காவின் வீட்டிற்கு வந்துசேர்ந்தார்,  அக்கம் பக்கம் வீட்டினர் அன்னம்மாவை சுற்றி நின்று ஆறுதல் படுத்த அழுது அழுது ஏதோ போல அமர்ந்திருந்தார் அன்னம்மா.

 

 

“என்ன என்னாச்சு” என்று மாசிலாமணி வண்டியை நிறுத்தி ஓடி வர “உங்க பெரிய பொண்ணு இன்னும் என்ன என்ன கூத்து கட்ட காத்திருக்காளோ, பொட்ட பிள்ளைக்கு இவ்ளோ ஏத்தம் ஆகாது” என்றார் அடுத்தவீட்டு பெண்மணி.

 

 

மனிதர் மனைவியைப் பார்க்க “மீனா கம்ளைண்ட் கொடுத்திருக்கலாம் அவ பிள்ளையைப் பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க புருஷன்  தங்கச்சியை கட்டிக்கப்போறேன்னு சொல்றாருன்னு” என்க மாசிலாமணி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

 

 

அதே நேரம் மாசிலாமணிக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து  அழைப்பு வந்தது இவர் “ஹலோ” என்க.

 

 

“மாசிலாமணிதானே” என்றார் ஒரு பெண்.

 

 

“ஆமாங்க” என்றிரவர் கூற.

 

 

“நான் மறைமலைநகர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபிள் பேசுறேன் உங்க பொண்ணு இங்க சாம்பிளைன்ட் குடுத்திருக்காங்க அவங்க புருஷன் அப்புறம்  மாமியார் பேர்ல அதோட இதுல உங்க சின்னப் பொண்ணும் சம்மந்தப்பட்டிருக்கு  போல அதனால அந்தப் பொண்ணையும்  அழைச்சுக்கிட்டு ஸ்டேஷன் வாங்க” என்று வைத்துவிட்டார்.

 

 

அன்னம்மா என்ன என்பதாகக் கணவனைப் பார்க்க அவர் விஷயத்தைச் சொன்னவுடனே  “அந்தப் புள்ளைக்கு நிச்சயம் செஞ்சவனை ஏமாத்தி கட்டிக்கிட்டதும் இல்லாம இப்போ அந்தப் பொண்ணையும் இந்தப் பிரச்சனைல இழுத்து விட்டுட்டாளே கல்யாணம் ஆகாத சின்னப் பொண்ணு போலீஸ் ஸ்டேஷன்லாம் போயிட்டு வந்தா நல்லா இருக்குமா அதுவும் அக்கா புருஷன் இவ மேல ஆசை படுறான்னு ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்தா நல்ல குடும்பத்துல இருந்து சம்பந்தம் வருமா” என்றார் இன்னொருவர்.

 

 

மாசிலாமணிக்கு வியர்க்கத் தொடங்கியது அவரைக் கண்ட அன்னம்மா பதற,  முதலாளி பதட்டமாகச் செல்வதை பார்த்து அவர் பின்னேயே வந்திருந்த சிவா “ஏங்க எந்த நேரத்துல என்ன பேசணும்னு இல்ல” என்றவன்.

 

 

“முதலாளி நீங்க அம்மாவைக் கூட்டிட்டு முன்னாடி போங்க நான் ஆச்சியை கூட்டிட்டு வரேன் நீங்க ஒரு தடவ போன் போட்டுச் சொல்லிடுங்க” என்றவன் வண்டியை எடுத்துக்கொண்டு காமாட்சியின் கல்லூரி நோக்கிச் சென்றான்.

 

 

இவர்கள் ஸ்டேஷன் சென்றபோது முத்துலட்சுமி மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு  சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தார்,  ரகு ஒரு ஓரமாக நின்றிருக்க மீனா பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.

 

 

“என்ன வேணும்” என்றார் ஒரு பெண் காவலாளி, மீனாவை கைகாட்டினார் மாசிலாமணி.

 

 

“ஓஹ் அந்தக் கேசா” என்றவர் “வாங்க” என்று சப் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்றார்,  ரகு இவர்களை முறைத்து பார்த்தான்  முத்துலெட்சுமியிடம் அசைவே இல்லை மீனா இவர்களைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பினாள்.

 

 

இவர்கள் தயக்கத்தோடு அவரின் அருகில் செல்ல இவர்களைக் கூர்மையாகப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் “உங்க பொண்ணுதானே அது மூணு மாசம் தான் ஆகுது பிள்ளை பிறந்து பச்சை பிள்ளையை அம்மாகிட்டயிருந்து மாமியார் தூக்கிட்டு போயிருக்காங்க கொஞ்சம் கூட அதைப் பத்தி கவலைப்படாம இருக்கீங்க”.

 

 

“உங்க அக்கா மகனுக்குத் தானே மகளைக் கட்டிக்கொடுத்தீங்க உங்க அக்கான்னா கேள்வி கேக்க மாட்டீங்களா,  பொண்ணு பேரனைவிட அப்படியென்ன உங்களுக்கு அவங்க ஒசத்தி” என்றவர்.

 

 

“இதுல உங்க மருமகனுக்கு பொண்டாட்டி ஒருத்தி போதலயா மச்சினிச்சியும் வேணுமா அந்தப் பொண்ணுக்கும் இதெல்லாம் தப்புன்னு தெரியலையா படிக்குற பொண்ணுதானே” என்க கணவனும் மனைவியும் அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தனர்.

 

 

‘அங்கு நடந்ததென்ன இங்கு இவள் சொல்லி வைத்திருப்பதென்ன’ என்று இதற்கே  இப்படி பேசுகிறார்களே இவள் செய்த கேவலமான விஷயம் தெரிந்தால் என்ன சொல்வார்கள் என்று அவர்கள் யோசிக்கும்போதே.

 

 

“இந்தக் குடிகார பய உங்க பெரிய பொண்ணுகிட்டேயே தப்பா  நடந்துக்கிட்டதாலதான் இவனுக்குப் பொண்ணை கட்டி வெச்சீங்களா அப்போவே இவனையெல்லாம் உள்ள வெச்சு லாடம் கட்டியிருக்கணும்,  அதை விட்டுட்டு அவனுக்கே அந்தப் பொண்ணை கட்டி வெச்சிருக்கீங்க எப்போதான் திருந்துவீங்களோ” என்றார்.

 

 

அன்னம்மா வாயில் கை வைத்துவிட்டார் ‘அடிப்பாவி கதையை அப்படியே மாற்றிவிட்டாளே!!  உண்மையைச் சொல்லத்தான் முடியுமா சொன்னால் இவர் நம்பத்தான் செய்வாரா’ என்று மலைத்துப்போனார்.

 

 

கிட்டத்தட்ட ஒரு வருடமாக அனைவருக்கும் விளக்கம் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போய்விட்டனர்,  மகள் செய்த காரியத்தை இபோழுது இங்குச் சொல்ல முடியுமா அவளை மட்டுமா கேவலமாகப் பேசுவார்கள் தங்களை பற்றித் தங்கள் வளர்ப்பை பற்றி  என்னவெல்லாம் பேசக்கூடும் இவள் புத்தி  ஏன் இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது என்று மருகிக்கொண்டிருக்க உள்ளே நுழைந்தாள் காமாட்சி.

 

 

மகளைப் பார்த்த மாசிலாமணி “மேடம் என் பொண்ணுமேல எந்தத் தப்பும் இல்ல ஏற்கனவே நிறைய கஷ்டப்படுறா அவளை விட்டிருங்க மேம், கல்யாணம் ஆகாத பொண்ணு மேம்”  என்று கை எடுத்துக் கும்பிட்டார்.

 

 

“நான் என்னங்க செய்றது உங்க மாப்ள இந்தப்பொண்ணைத்தானே ரெண்டாம் தாரமா கட்டணும்னு நினைக்குறாரு அப்போ நாங்க விசாரிச்சுதான் ஆகணும்” என்றார்.

 

 

காமாட்சியின் விழிகள் நிறைந்து வழிய தந்தையின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்,  மருதவேலுவின் கார் அந்தப் போலிஸ் ஸ்டேஷனின் உள்ளே வந்து நின்றது.

 

 

அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் “வேலு கொஞ்சம் வெய்ட் பண்ணு பைல்ஸ் எடுத்துட்டு வரேன்” என்க.

 

 

“சரிங்க மேடம்” என்றவன் வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்தான்.

 

 

அந்தப் பக்கமாக வந்த வேறொரு காவலர் “என்ன வேலு மேடம் வந்துட்டாங்களா” என்க.

 

 

“ஹ்ம்ம் இப்போதான்க்கா உள்ள போயிருக்காங்க ஏதோ மீட்டிங் இருக்காமே அதான் பைல்ஸ் எடுக்கணும் வெய்ட் பண்ணு” சொன்னாங்க என்றான்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்… அப்புறம் நல்ல தரிசனமா” என்றார் அவர்.

 

 

“அப்படிதான் சொன்னாங்க” என்று சிரித்தான்.

 

 

“அதுசரி” என்றவர் உள்ளே சென்றார்.

 

 

அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தணி செல்வார் எப்பொழுதுமே இவனைத்தான் அழைப்பார் அவரின் மகன் மாற்றுத்திறனாளியாக இருக்க அவனைச் சரியாகக் கவனிக்கவும் தூக்கி செல்லவும் மருதவேலுவை மட்டுமே அவர் நம்புவர்.

 

 

மற்றவர்கள் தன் மகனைக் கீழாகப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றியிருக்க நான்கு வருடமாக இவனே செல்வது.

 

 

“வேலு” என்ற அழைப்பில் அவன் எட்டி பார்க்க “மேடம் கூப்பிடுறாங்க கொஞ்சம் பொருள் எல்லாம் எடுக்கணுமாம்” என்க,  இவன் உள்ளே சென்றான்.

 

 

உள்ளே நுழைந்தவன் விழிகளில் முதலில் விழுந்தது அந்த நீண்ட பின்னல் தான் யோசனையோடு முன்னே நடந்து பார்க்க விழியில் நீரோடு தந்தையின் கையைப் பற்றி நின்றிருந்தாள் காமாட்சி.

 

 

‘இவ என்ன செய்றா’ இங்க என்று யோசித்தவன் ஒரு முறை விழிகளைச் சுழற்றினான் காமாட்சியின் வீட்டினர் யாரையும் அவனுக்குத் தெரியாது என்றாலும் குழந்தையோடு அமர்ந்திருந்த முத்துலெட்சுமியையும் அவர் அருகில் நின்றிருந்த ரகுவையும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!