Skip to content
Post Views: 1,415
அத்தியாயம் 29
“சொல்லிடு ஆரா! நானே பேசிட்டு இருக்கேன்.. என்ன முடிவெடுக்கணும்? இன்னும் உனக்கு டைம் வேணுமா? எடுத்துக்கோ! ஆனா நீ தெளிவா சொந்த விருப்பதுல தான் என்கிட்ட வரணும்!” ஆராத்யா பேச்சை கேட்டு ரகு சொல்ல,
Advertisement
“சில விஷயங்கள் உங்ககிட்ட சொல்லணும்.. ஆனா அதுல முக்கியமான விஷயம்.. அதை எப்படி நீங்க எடுத்துப்பிங்கனு எனக்கு தெரியல..” என்றவள் சொல்ல தயங்க,
“ரகுவை நம்பினா நீ தாராளமா சொல்லலாம் ஆரா.. இல்ல உனக்கான ஸ்பேஸ் வேணும்னாலும்.. ஓகே.. ஐம் ஆல்வேஸ் வித் யூ!” என்று சொல்ல,
Advertisement
Advertisement
“ஸ்ருதியை எனக்கு ஸ்கூல் டைம்ல இருந்தே தெரியும்.. அவ என்னை இப்ப புரிஞ்சிகிட்டது பெரிய விஷயம் இல்ல.. ஆனா எல்லாரும் அப்படி நினைக்க மாட்டாங்க இல்ல?” என்று ஆராத்யா பேச ஆரம்பிக்க, அவள் சொல்ல வருவதை சொல்லி முடிக்க அமைதியாய் பார்த்திருந்தான் ரகு.
“நான் சொன்னது நிஜம்.. எனக்கு உங்களை உங்க பேமிலியைனு எல்லாரையுமே ரொம்ப பிடிக்கும்.. ஆனா பக்கத்துல வச்சு பார்க்க எனக்கு இப்பவும் பயம் தான்.. நீங்க எவ்வளவு என்னை நம்புறீங்க? அதுக்கு நான் நிஜமா இருக்கணுமே!” ஆராத்யா சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க, இன்னும் கூர்ந்து பார்த்தபடி தான் இருந்தான் அவன்.
Advertisement
“யார் என்ன பேசினா என்னனு ஈசியா சொல்லிட்டு போய்டலாம்.. ஆனா அப்படி வாழறது எப்படி சரியாகும்? கூடவே இருந்த தானே ஏன் என்கிட்ட சொல்லலைனு நாளைக்கு கார்த்திகா என்னை கேட்பா.. அப்புறம் விஷயம் தெரிய வரும் போது ஆபீஸ்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொல்லி அவங்களே ஒரு முடிவுக்கு வந்து நம்ம ஜட்ஜ் பண்ணுவாங்க!”
“என்ன சொல்ல வர ஆரா?”
“உங்களுக்கு புரியலையா ராம்? நான் யாரு உங்களுக்கு? உங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற ஒரு பொண்ணு.. நான் உங்க மனைவியா வந்தா நீங்க எவ்வளவு பேச்சுக்களை கேட்கணும்.. நானும் அதை ஃபேஸ் பண்ணணுமே!”
“சோ?” என்றவன் அவள் அழைப்பை உள்வாங்கவில்லையோ!
“என்னோட பாக்கியம், சந்தோசம்னு முடிவு பண்ணி தான் ஸ்ருதியை உங்க வீட்ல பேச சொன்னேன்.. இப்பவும் எப்பவும் உங்க குடும்பத்துல ஒருத்தியா நான் எப்பவும் இருப்பேன்.. ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்ன கசப்பு.. அதை எப்படி நான் மாத்திக்கனு எனக்கு தெரியல.. நிச்சயம் என்னை பேசுவாங்க தானே? ஒண்ணுமே இல்லாத ஒருத்திக்கு இப்படி ஒரு வாழ்வானு?” என்று முடிக்க, அவள் சொல்ல வந்த அர்த்தமே அப்பொழுது தான் புரிந்தது ரகுவிற்கு.
“ஆனாலும் நான் உங்களை எல்லாம் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். எனக்கு புரியுது.. அந்த சிடுவேஷன்ல என்ன முடிவெடுக்க முடியும்னு எனக்கு தெரியல.. எனக்கும் என் அம்மா இருந்திருந்தா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க இவ்வளவு நாள் ஆகி இருக்காது ராம்!” என்று அவள் முடிக்கும் பொழுது அவள் அழைப்பு அவனில் ஊடுருவ, விழிகள் மின்னியது ரகுவிற்கு.
“சில விஷயங்களை கடந்து தான் ஆகணும்னு எனக்கு புரியுது.. ஆனா சில நேரம் கஷ்டமாகிடுது..” என்று கூறி சோர்வாய் ஒரு புன்னகையை அவள் கொடுக்க, அவள் மடியினில் இருந்த கைகளைப் பற்றிட ரகுவின் மனம் பரபரக்க, கைகளை அழுத்தமாய் கட்டிக் கொண்டான் தன் நெஞ்சோடு.
“ஆராத்யாக்கும் ஆசை விருப்பம்னு இருக்கும்.. அவளுக்கும் மனசு இருக்குன்னு எல்லாரும் நினைக்க மாட்டாங்க தானே?” என்று கேட்டவள் சிறு பிள்ளையாய் அவன் முகம் பார்க்க,
அதற்கு புன்னகையை கொடுத்தவன், “பேசுறவங்க எல்லாம் ரெண்டு நிமிஷம் நின்னு அடுத்தவங்க வாழ்க்கையை கேலி பேசி சிரிச்சுட்டு தன்னோட வாழ்க்கையை பார்க்க போய்டுவாங்க.. நீ அங்கேயே நின்னு அவங்களை மட்டும் பார்த்துட்டு இருந்தா உன் வாழ்க்கையை நீ எப்ப வாழ?” என்ற ரகு,
“அடுத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்குறது சரி தான்.. ஆனா அந்த மதிப்பு அவங்க பேச்சுக்கு தகுதி உள்ளதா இருக்கனும்.. உனக்கு நான் சில விஷயங்களை சொல்லி மட்டும் உன்னோட இந்த வருத்தத்தை விரட்ட முடியாது.. அந்த டைம் நாம ஃபேஸ் பண்ணும் போது உனக்கே புரியும்..” என்று சிறு புன்னகை கொடுத்தவன்,
“என்னால புரிஞ்சிக்க முடியுது ஆரா.. ஒரு அஸ்சுரன்ஸ் மட்டும் உனக்கு நான் தர்றேன்.. ஆரா வேற ரகு வேற இல்லை.. இதை நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு.. உனக்கு தெரிய வைக்க தான் லேட் பண்ணிட்டேன்.. அது என்னோட மிஸ்டேக் தான்.. ஆனா நீ ஏன் இந்த வாழ்க்கைகுள்ள வந்தோம்னு நினைக்குற மாதிரி நான் நடந்துகிட்டா அது என் காதலுக்கு நான் பண்ற துரோகமாகிடும்.. இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்ல.. வாழ்ந்து தான் நாம புரிஞ்சிக்கனும்!” என்றவன் பேச்சில் இவள் தன்னை மறந்திருக்க,
“எனக்காக மார்னிங் நீ ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்தின இல்ல.. அது தான் நிஜம்.. நாம நமக்கு உண்மையா இருந்தா போதும்.. அடுத்தவங்க வாழ்க்கையை கேலி பேசுறவங்க தன் வாழ்க்கைல இருக்குற ஓட்டையை கண்டுக்க மாட்டாங்க.. அவங்களுக்கு என்னைக்கும் நீ இடம் குடுக்க கூடாது.. உன்னோட நான் இருக்கேன் ஆரா.. ரகுக்கு நீ கூட இருந்தா மட்டும் போதுமாம்.. ம்ம்ம்?” என்று கேட்டு புருவம் உயர்த்தி அவன் மெல்லிய புன்னகை கொடுக்க, அவன் காதலில் கட்டுண்டு நின்றிருந்தது ஆராத்யாவின் மனம்.
“இந்த போஸ் எனக்கு எப்பவும் உன்கிட்ட ரொம்ப பிடிக்கும்!” பேசிக் கொண்டிருந்தவன் எப்பொழுது மொபைலை எடுத்தான் என அவள் பார்க்கும் முன் தலை சாய்த்து விழி விரித்து அவனை திணற வைக்கும் புன்சிரிப்புடன் பார்த்தவளை அப்படியே சேமித்துக் கொண்டான் மனதிலும் கைபேசியிலும்.
“நல்லா இருக்கு!” மொபைலைப் பார்த்தபடி அவன் சொல்ல, புகைப்படத்தை சொல்கிறான் என அவள் புன்னகைக்க,
“ராம் சார்னு நிறைய கேட்ருக்கேன்.. ராம்னு யாரும் கூப்பிட்டு கேட்டதில்ல..” என்று சொல்ல, திணறியவள் கூச்சத்தையும் ரசித்தவன்,
“போட்டோவும் நைஸ்!” என்றவன் கைகள் அவள் முகத்தை திரையில் தொட வர, விழி விரித்தவளை ஓரக் கண்ணால் பார்த்து உதடு மடித்து சிரித்தான்.
‘உஃப்! என்ன பண்ற டா நீ!’ தனக்குள் கேட்டு மொபைலை கீழே வைக்க, சிறு மௌனம் இருவருக்குள்ளும்.
“மேரேஜ் எப்ப வச்சுக்கலாம் ஆரா! உனக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா?” ரகு கேட்க,
“என்ன?” என்று பார்த்தவளுக்கு இதற்கு என்னை பதில் சொல்லிவிட என்று தெரியவில்லை. கூடவே எழுந்த முகத்தின் செம்மையை மறைக்கவும் முடியவில்லை. அதில் சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தது என்னவோ ரகுவே தான்.
“நான் சொல்லவா?” அவன் கேட்க, வெறும் தலையசைப்பு அவளிடம்.
“நாளைக்கு ஃபன்க்ஷன்ல கன்ஃபார்ம் பண்ணிப்பாங்க.. அடுத்த முஹூர்த்தம் கூட எனக்கு ஓகே தான்.. ஆனா தர்ஷ் பேபி இருக்காங்களே! அவங்களையும் பாக்கணும்.. மாமா இப்ப தான் லீவ் முடிஞ்சி ஜோயின் பண்ணிருக்காங்க.. சோ இன்னும் ரெண்டு மாசம் முடிஞ்சுச்சுன்னா மேரேஜ் முடியவும் அக்காவை மாமா அழைச்சுட்டு போற மாதிரி பிளான் பண்ணிக்கலாம்.. நமக்கும் கொஞ்சம் பிரீ டைம் கிடைக்கும்!” என்றதற்கு பதில் சொல்லாமல் அவள் பார்க்க,
“நியூ ப்ராஜெக்ட் முடிஞ்சிடுமே! ரிசல்ட் வந்துச்சுனா இன்னும் பிரீயா நாம….” என்றவன் பேச்சு சாதாரணம் தான் என்றாலும் அவன் புன்னகையும் முக பாவமும் அது அப்படி அல்ல என்று எடுத்து கொடுக்க,
“நான் கிளம்பறேன்.. இதெல்லாம் எல்லாருமா பேசிக்கட்டும்!” என்று ஆராத்யா எழுந்து கொள்ள,
“ஓகே ஓகே ரிலாக்ஸ்!” என்றவன் புன்னகையுடன் தன்னை நிதானித்துக் கொண்டு அவளையும் அமர கூறினான்.
“நான் இவ்வளவு நாளும் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் உங்க எல்லாரையும் இல்ல?” ஆராத்யா அமர்ந்தபடி அவளுக்கு தோன்றியதை கேட்க,
“நீ ஹர்ட் பண்ணி நம்ம பேமிலில ஹர்ட் ஆனாங்கனு நீ நினைக்குறியா? தர்ஷ் உன்னை குழந்தையா தான் பாக்குறா.. அவகிட்ட போய் நீ இதை சொல்லேன்.. அங்குட்டு போய் விளையாடுன்னு சொல்லிடுவா!” என்று சிரித்தான் ரகு.
“நீங்க ஹர்ட் ஆனீங்க தானே? அன்னைக்கு கூட ரொம்ப கோவமாவும் பீல் பண்ணியும் பேசினீங்களே போன்ல?” ஆராத்யா கேட்க, அதை அவன் மறுக்காமல் டேபிளில் இருந்த மொபைலை எடுத்து கையால் சுற்றியதே அவனின் மனதை கூற,
“உங்களை அவாய்ட் பண்ணதே உங்ககிட்ட இருந்து தூரமா போகணும்னு தான்.. ஆனா என்னால முடியலை. நானும் நிம்மதியா இல்லாம உங்களையும் நிம்மதியா இருக்க விடாம பண்ணிட்டேன்ல?” என்றவள்,
“எனக்கு வேணும் தான் ஆனா எப்பவும் வேணும்.. கைக்கு கிடைச்சப்புறம் தொலைச்சிட்டா?” என்றவள் அதற்கேற்ப கைகளையை அசைத்து கண்களில் பயம் தெரிய கேட்க,
“ஏன் ஆரா இப்படி இருக்க?” என்றவனுக்கு அவன் கவலை.
தன்னை தொலைத்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவளின் விழியில் தெரியும் பயமும் அதை அவள் வெளிப்படுதிய விதமும் என அவளை அணைத்து சமாதானம் கூற தான் மனம் துடித்தது.
இடமும் சூழ்நிலையும் என அவன் அமைதி காக்க, கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“இப்பவும் நீங்க ஹர்ட் ஆகுற மாதிரி தானே பேசுறேன்.. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல.. ஆனா நான் முடிவு பண்ணி கன்ஃபார்ம் பண்ணி தான் ஸ்ருதி உங்க வீட்டுல பேசினது.. அதனால நானா எல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன்.. நீங்களும் பேச்சுக்கு கூட போனு சொல்லிட கூடாது! அன்னைக்கு சொன்னிங்களே போடினு அந்த மாதிரி!” என்றவள் உதடு குவித்து கோபமாய் பார்ப்பதாய் நினைத்து பார்த்து வைக்க,
“நீ என்கிட்ட கோபப்படுறீயா ஆரா?” என உதடு மடித்து சிரிப்பை அடக்கி அவன் கேட்டபின் தான் அவன் பார்வையின் வேறுபாட்டை இவள் கண்டதே!
“பரவால்ல! கிண்டல் பண்ணி சிரிச்சுக்கோங்க.. ஆனா ப்ரோமிஸ் பண்ணுங்க!” என்று சொல்ல,
“ப்ரோமிஸ் தானே பண்ணிட்டா போச்சு.. கை நீட்டு!” என்று கேட்க, அதில் அங்கும் இங்கும் விழித்தவள்,
“பரவால்ல நான் உங்களை நம்புறேன்.. ப்ரோமிஸ்னு மட்டும் சொல்லுங்க போதும்!” என்று கைகளை தனக்குள் இறுக்கிக் கொள்ள, மனம் திறந்து அட்டகாசமாய் ஒரு புன்னகை ரகுவிடம்.
தன்னை மறந்து ரசித்துப் பார்த்த ஆராத்யா முகத்திலும் அந்த புன்னகை விரிய, தலை சாய்த்து இமை விரித்து அவனைப் பார்த்தவளை அவளைப் போலவே பார்த்தவன்,
“போனு சொல்ல மாட்டேன்.. போகவும் விட மாட்டேன்.. போதுமா?” என்றவன்,
“கிளம்பலாம்.. இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா என்னை நீ நானா இருக்க விட மாட்ட..!” என்று கூறி அவளுடனே எழுந்து கொண்டான்.
********************
இரவு பத்தரை மணிக்கு அழைப்பு வரவும், “ஹெலோ சொல்லுங்க சார்! உங்ககிட்ட என் நம்பர் எல்லாம் இருக்குதா சார்?” என்று அலுவலக வேலையில் இருந்து கொண்டே நந்தா கிண்டலாய் கேட்க,
“மாமா! ரொம்ப பண்றீங்க!” என்றான் ரகு.
“யாரு நானா டா? ஒரு அப்பாவிக்கு அப்பப்ப போன் பண்ணி, மாமா ஆராகிட்ட சொல்லவா? மாமா ஆராகிட்ட பேசவா? மாமா ஆரா இப்படி சொல்லிட்டா.. மாமா ஆராவை திட்டிட்டேன்.. மாமா மாமா மாமானு நைட் ஷிப்ட்ல இருக்கும் போது வேலையை பார்க்க விடாம, டே டைம்ல தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு அது எப்படி டா ஓகே ஆனதும் மட்டும் நாங்க எல்லாம் மறந்து போயிடுறோம்.. என்னவோ போ டா மாதவா.. நல்லா இருந்தா சரி தான்!” என்று கிண்டலாய் மட்டும் நந்தா தொடர்ந்தான்.
“நிஜமா சாரி மாமா.. ஸ்ருதி பேமிலியோட பேசிட்டு போகவும் அண்ணி மயங்கி, ஹாஸ்பிடல் போய், அங்க அவங்க ஒரு குட் நியூஸ் சொல்லினு இன்னைக்கெல்லாம் நேரம் போதவே இல்லை மாமா..”
“பார்றா! இப்ப கூட ஆளோட தனியா பேட்ச் அப் ஆனதை சொல்லாம கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுற.. அகி கூட உடனே எனக்கு கால் பண்ணி சொன்னாங்க.. நீ இருக்கியே!”
“மாமா! போதும் மாமா.. நீங்க இல்லைனா இன்னைக்கு மாதிரி ஒரு நாள் எனக்கு கிடைச்சிருக்குமா? உங்க பிளான் தான் லாஸ்ட் ஆராவை சம்மதம் சொல்ல வச்சிருக்கு.. அதான் உங்க மனைவி நிமிஷத்துக்கு நிமிஷம் அப்டேட் பண்ணி இருப்பாங்களே! பாப்பாவை பாத்துக்குறாளோ இல்லையோ மத்த வேலை எல்லாம் நல்லா பாக்குறா அவ!” என்று புன்னகையுடன் ரகு சொல்ல, விரிந்த புன்னகை நந்தாவிடமும்.
“ஜோக்ஸ் அபார்ட்! ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி ஃபார் யூ மேன்! ஆராத்யா உன்னை புரிஞ்சிக்கணும்னு நினச்ச.. இப்ப புரிஞ்சதோட முழு மனசோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கு.. இனி காலத்துக்கும் ஆராத்யா உன் பொறுப்பு.. நிஜமாவே அது ஒரு பெரிய பொறுப்பு தான்!” என்று நந்தா சொல்ல அதை பொறுப்பாய் கேட்டுக் கொண்டான் ரகு.
“இனிமேல் தான் நிறைய நீ கத்துக்க போற! வாழ்க்கை நிறைய கத்து குடுக்கும்.. நல்லது கெட்டது எல்லாமே! எல்லா சிடுவேஷன்லையும் நீ ஆராத்யா கூட அவ நினைக்குறதுக்கு முன்னாடி நிக்கணும்..”
“ஏன் சொல்றேன்னு புரிஞ்சிப்பனு நினைக்குறேன்.. ஒரு சின்ன வருத்தம்னாலும் பொண்ணுங்க ஒன்னு அம்மாவை தேடுவாங்க இல்ல ஹஸ்பண்ட்டை தேடுவாங்க.. ஆரா அவங்க அம்மாவை தேடி ஏங்க நீ காரணமா இருக்க கூடாது.. காட் இட்?”
“ரொம்ப தேங்க்ஸ் மாமா! சில விஷயங்கள் நீங்க சொல்லும் போது தான் என்னால புரிஞ்சிக்க முடியுது..” என்றவர்கள் பேச்சுக்கள் தொடர, கீழே திருமண நாள் பற்றிய விவாதம் தர்ஷினி, கல்பனா, மகேஸ்வரிக்குள்.
“அது சாரி வராது தர்ஷி! உன்னை கூட்டிட்டு போன பின்னாடி தான் கல்யாணம் வைக்கணும்” என்றார் மகேஸ்வரி மகளிடம்.
“ம்மா! ஏன் அப்படி?” தர்ஷினி கேட்க,
“தர்ஷி! முறையா செய்யணுமில்ல உனக்கும்.. ரொம்ப இல்ல உன்னை அழைச்சிட்டு போய் ஒரு ஒரு வாரத்துலன்னு மேரேஜ் வச்சா நந்தா அண்ணா லீவ்க்கும் சரிபடும்.. உனக்கும் சட்டுன்னு கிளம்பி போன பீல் வராது.. ஃபன்க்ஷன் பிஸில உனக்கு பேபியை ஹண்ட்ல் பண்றது கஷ்டமா தெரியாது..” என்றாள் கல்பனா.
“சரியா சொன்ன நீ! ஆனா நீ இனி ரொம்ப வேலை எல்லாம் பார்க்க கூடாது.. இந்த வாயாடுற வேலையோட நிறுத்திக்கோ.. நான் பத்துக்குவேன் எல்லாம்!” என்றவர்,
“அகி தூங்க போய் ஒரு மணி நேரம் ஆச்சு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க நீ? காலையிலயும் ஆளுக்கு முன்ன எந்திருச்சு வர்றது.. இனி அப்படி எல்லாம் இருக்க கூடாது..” ஏன மருமகளுக்கு வகுப்பெடுக்க,
“குடுத்துவச்சவங்க அண்ணி நீங்க!” என்ற கல்பனாவை,
“உங்க அம்மாவை தான பெருமையா சொல்ற நீ?” என்று தர்ஷினியிடம் கூறிய கல்பனா,
“இதுக்கு மேல நான் இங்க இருந்தா எனக்கு தான் ஆபத்து!” என்று கூறி அறைக்கு சென்றாள்.
அவளுக்காகவே காத்திருந்த அகிலன் கல்பனாவை கைகளில் தூக்கிக் கொண்டவன்,
“எவ்வளவு பெரிய கனம்… அப்படியே இலகுவான மாதிரி இருக்கு.. மனசு அப்பப்ப பாரமா போகும் கல்பனா.. எனக்கே அவ்வளவுனா நீ எவ்வளவு தவிச்சிருப்ப..” என்று அகிலன் கல்பனாவின் நெற்றி முட்ட,
“அதுக்கான வாய்ப்பு எனக்கு இந்த குடும்பத்துல யாரும் குடுக்கலையே! எப்பவாச்சும் யாரையாச்சும் பார்க்கும் போது மனசு கொஞ்சமா ஏங்கும்.. மத்தபடி என்னை யார் தான் பீல் பண்ண விட்டிங்க?” என்று பதிலுக்கு கணவனை கேட்க,
“நமக்கான நாள்.. ரொம்பவே சந்தோசமான நாள்..” என்றவன் மெதுவாய் அவளை இறக்கி விட, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்.
நந்தாவிடம் பேசி முடிக்கும் பொழுது மணி பதினொன்று ஆகி இருக்க, படுக்கையில் இருந்தவன் எழுந்து பால்கனி புறம் செல்ல, ஊஞ்சலில் அமர்ந்து புத்தகத்தில் கவனமாய் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.
ரொம்ப முக்கியம்!” என்றவன் ஆராத்யாவிற்கு அழைத்துவிட்டு அவளைப் பார்த்தபடி நிற்க, வெறுமெனே புத்தகத்தை மட்டும் புரட்டிக் கொண்டு வேறு சிந்தனையில் இருந்த ஆராத்யா அலைபேசி சத்தத்தில் கலைந்தாள்.
இதோ அலைபேசியில் தான் சேமித்து வைத்த ராம் என்ற பெயர் ஒளியும் ஒலியும் எழுப்ப, வியந்து பார்த்தவள் பார்வை நேராய் அவன் வீட்டின் பக்கம்.
இன்று தான் அவனை அங்கே காண்கிறாள். பால்கனி கதவை திறந்து வந்து ஓரமாய் சாய்ந்து நின்றிருந்தவன் அவளைப் பார்த்து நின்றிருக்க, பார்த்ததும் கண்களை விரித்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” எடுத்ததும் ரகு கேட்க,
“நீங்க என்ன பண்றீங்க இந்நேரம்?” என்றாள் விளக்கொளியில் அவன் உருவம் நன்றாய் பார்த்து.
“பதில் கேள்விலாம் வருதே! நைஸ்!” என்றவன் சிரித்துக் கொள்ள,
“தூங்கலையா?” என்று மற்றொரு கேள்வி அவளிடம்.
“தூங்கணும்.. தூக்கம் வர்ல..” என்றவன்,
“உன்னால தான்.. ஆனா உனக்கு எதுவுமில்ல.. புக் படிச்சுட்டு இருக்க!” என்றவன் மெல்லிய முறைப்பை அவளால் குரலில் உணர முடிய,
“என்ன?” என்றாள் அவன் முதல் பாதியில் வியந்து.
அதில் ஒரு பெருமூச்சைக் கொண்டு வந்தவன்,
“ம்ம்ஹும்! நீ தூங்கலையா?” என்று கேட்க,
“தூங்கணும்.. அஜய் விளையாடிட்டு இருந்தான்.. இப்ப தான் தூங்கினான்.. நாளைக்கு ஊருக்கு போய்டுவாங்களே!” என்று கூற,
“ம்ம்ம்!” என்ற சத்தம் மட்டும் அவனிடம். சில நொடிகள் மௌனம் தொடர, பார்வை இருவருக்கும் இருவருக்குள்ளும்.
“ஆரா!” என்றவன் ஆழ்ந்த குரல் அழைப்பில் இவள் இதயம் தடதடக்க அமைதி காக்க,
“ஓகே! போய் தூங்கு.. டைம் ஆச்சே..” என்றான்.
“நீங்க?” என்றாள் அடுத்த நொடியே.
“நானும் தான் டா..” என்றவனின் கனிந்த அழைப்பில் என்னவோ செய்தது ஆராத்யாவினுள்.
“ஓகே! நாளைக்கும் ஆபீஸ் லீவ்ல நீ?” ரகு தொடர,
“ம்ம்ஹும்! வந்துடுவேன்..” என்றாள் சட்டென்று.
“ஹேய்!”
“நிஜமா தான்.. எனக்கு இப்பவே மூச்சு முட்டுது.. நாளைக்கு நீங்க வந்துட்டு கிளம்பினதும் நான் ஆபீஸ் போய்டுவேன்.. தர்ஷியை நாளைக்கு என்னால சமாளிக்கவே முடியாது!” என்றவள் பயந்த குரலில் ரகு சிரிக்க,
“சும்மாவே பேசுவாங்க.. அய்யயோ! நோ வே!” என்றவள்,
“அஜய் வேற கிளம்புறானே! நாளைக்கு அவங்களும் பர்ச்சேஸ் போறாங்க.. வீட்டுல இருந்தா கஷ்டம்.. அதுவும் தனியா இருந்தா..”
“ஓகே! அப்ப நாம சேர்ந்தே போலாம்!” என்றவன் கள்ளப் புன்னகை தெரியவில்லை என்றாலும் அவன் சொல்லியதிலேயே அதிர்ந்தவள்,
“நோ நோ நோ!” என்று உடனே கூற, பக்கென்று சிரித்துவிட்டான் ரகு.
“சிரிக்காதீங்க! இன்னைக்கு ஆபீஸ்லேர்ந்து நான் சொல்லிக்காம தான் உங்களை தேடி ஹாஸ்பிடல் ஓடி வந்தேன்.. கார்த்திலேர்ந்து பிரண்ட்ஸ் எல்லாரும் அத்தனை போன்.. நாளைக்கு அவங்களை எப்படி சமாளிக்க போறேனோ.. இதுல உங்களோட வந்தேன்…” என்றவள் பேச்சு தர்ஷினியிடம் வருவது போல சாதாரணமாய் வர,
“வந்தா? என்ன பண்ணிடுவாங்களாம்?” என்றான்.
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்! அதெல்லாம் வேண்டாம்.. நான் நாளைக்கு போய் நானே ஃபர்ஸ்ட் பிரண்ட்ஸ்க்கு சொல்லி புரிய வைக்குறேன்..”
“என்னனு?” என்றான் புன்னகையை அதக்கி.
“அதான்! உங்களுக்கும் எனக்கும்… நாளைக்கு ஃபன்க்ஷன் நடக்குமே.. அதை சொல்லணும் இல்ல?” என்று அவனிடம் கூறவே முகம் சிவக்க, இருவரின் உருவங்கள் மட்டும் கண் அறிந்தாலும் அவரவர் உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது பேச்சினில்.
“அதெல்லாம் அனோன்ஸ் பண்ணிக்கலாம்..” என்று இன்னும் அவளிடம் விளையாட,
“அனோன்ஸ்ஸா?” என்று விழி விரித்தவள்,
“என்ன புது ப்ராஜெக்ட்டா சொல்ல போறீங்க அனோன்ஸ் பண்ண.. அப்படியே தர்ஷி மாதிரி பண்றிங்க..” என்றாள் சிணுங்கலாய். அதில் இவனுக்கு உள்ளம் தாருமாறாய் தடுமாற,
“ஒன்னு பண்ணுங்க.. நாளைக்கு நீங்க லீவ்.. நான் போறேன்.. சரியா.. நீங்க வந்தா என்னால பேச முடியாது!” என அவனுக்கே பேச்சு விளைவில் ஆராத்யா உத்தரவிட, நாளை அவள் அருகில் தானும் ஏன அவள் நண்பர்களின் முன் நின்றால் என்ன என ரகுவின் மனம் நினைக்க,
“புரிஞ்சதா?” என்றாள் சத்தமாய்.
“மிரட்டுறியா ஆரா?” என்றவன் கேலி குரலில் அவளும் தன்னை மீட்டுக் கொண்டு முகத்தை சுருக்கி நெற்றியில் தட்டிக் கொள்ள,
“அழகு போ!” என்றான்.
“என்ன?”
‘என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கன்னு சொல்லவா?’ என முணுமுணுத்து தன் தலையில் தன்னை நினைத்தே தட்டிக் கொண்டவன்,
“இதே ஃப்ளோ மைண்டைன் பண்ணு.. நாளைக்கு பார்க்கலாம்..” என்றவன்,
“குட் நைட் ஆரா!” என்று சொல்லி தலையாட்ட, அவளிடமும் அதனின் பிரதிபலிப்பு.
அடுத்த நாள் ரகுவின் வீட்டில் பரபரப்பாய் வேலைகள் நடந்தேற, ஆராத்யா வீட்டிலும் ஸ்ருதி கணவன் அனைத்தையும் தயார் செய்திருந்தான் முந்தைய நாளே!.
“பேசி முடிக்கறதுக்கு நீ எதுக்கு? நீ எல்லாம் ஒன்னும் வர வேண்டாம்!” தர்ஷினி ரகுவிடம் விளையாடி கொண்டிருக்க,
“ஆமா ஆமா! என்ன நீங்க பார்க்காத பொண்ணா? இனி நீங்க கல்யாணத்துக்கு பார்த்தா போதும்.. ஆரா இனி ஆபீஸ் கூட வர மாட்டா!” என ஒத்து ஊதினாள் கல்பனா.
“என்ன டா ட்ரெஸ் இது? வேஷ்டி சட்டை மாத்திக்கோயேன்!” என ரகுவைப் பார்த்தபடி வந்த மகேஸ்வரி சொல்ல, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலியாய் பார்த்தான் ரகு சகோதரியை.
“ம்மா! அவன் எதுக்குன்னு நாங்க கேட்டுட்டு இருக்கோம்.. என்னவோ கல்யாணம்ன்ற மாதிரி நீங்க வேஷ்டி மாத்திக்க சொல்றிங்க!”
“அவனுக்கு பொண்ணு பார்க்க நீ பட்டு புடவை, நகை நட்டுன்னு மாட்டிட்டு கிளம்பலாம்.. அவன் வர கூடாதா? பேசாம கிளம்பு.. இல்ல பாப்பா கூட வீட்டுல இரு!” என்ற மகேஸ்வரியிடம்,
“சரியா சொன்னிங்க த்த.. எப்ப பாரு விளையாட்டு இந்த தர்ஷிக்கு!” என உடனே கட்சி மாறி இருந்தாள் கல்பனா.
“உனக்கு தான் டி ஆஸ்கர் அவார்ட் குடுக்கணும்.. என்னமா நடிக்குற?” என்று அகிலன் கல்பனா பின் வந்து நிற்க,
“இடத்துக்கு தகுந்தாப்புல இருந்துக்கணும்.. இல்லனா அலைச்சல் எதுக்கு உனக்குன்னு அத்தை என்னை வீட்டுல விட்டுட்டு கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க!” என அப்படியே நல்ல பிள்ளையாய் மாறி இருந்தாள் கல்பனா.
“பொழச்சுப்பிங்க அண்ணி நீங்க!” என்று பேசி சிரித்து என இவர்கள் கிளம்பி எதிர்வீட்டை வந்து சேர,
ஆராத்யா எவ்வளவு தடுத்தும் கேளாமல் ஸ்ருதி ஆராத்யாவிற்கு நகைகளை பரிசாய் கொடுத்து அதை அணிவித்து அலங்கரித்தும் வைத்திருந்தாள்.
error: Content is protected !!