நீ எனக்கு தந்த காதல் -12.
தமிழ் நிலாக்கு இடையே காதல் மலற காரணமான கவினின் காதல் திருமணத்தில் முடிந்த நாள்.
தமிழின் ஆபீஸ்க்கு பத்திரிக்கை வைக்க கவினும் யாழினியும் செல்கின்றனர்.
Advertisement
இனி,
ஆபீஸ்க்கு சென்று வெளியே நின்று கொண்டு தமிழுக்கு போன் செய்ய தமிழ் வந்து கவினையும் யாழினியையும் உள்ளே அழைத்து சென்று கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க குடுத்தான்.
Advertisement
Advertisement
கவின், யாழினி இருவரும் சேர்ந்து பத்திரிக்கையை எடுத்துக் குடுக்க அதை வாங்கி படித்துக் கொண்டிருந்தான்.
‘பத்திரிக்கை மாடல் கொஞ்சம் பழசா இருக்கு ஆனா சூப்பரா இருக்கு.’ என தமிழ் சொல்ல,
Advertisement
‘ம் சார் உங்க கல்யாணத்துக்கு எப்டி பத்திரிக்கை வக்கறீங்கன்னு பாக்கறோம்’ என கவின் கிண்டல் செய்ய,
‘நீ வேற கல்யாணமே நடக்குமான்னு தெரியல. இதுல பத்திரிக்கை மாடல் வேற’ என தமிழ் சலித்து கொள்ள,
‘டேய் ஏன்டா அப்டி சொல்ற. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா நடத்திடலாம். கவலப்படாத’ என யாழினி சொல்ல,
‘சரி அத விடுங்க. அப்புறம் ஹனிமூன் ப்ளான் என்ன ‘, என தமிழ் கேட்க,
‘இன்னும் மேடம் முடிவு பண்ணல’ என கவின் சொல்ல,
‘அப்ப இதுல எது ஓகேன்னு செலக்ட் பண்ணுங்க. அது தான் உங்க மேரேஜ் கிஃப்ட்’ என போனை குடுத்தான் தமிழ்.
‘டேய் செம ரொமேன்டிக் கிஃப்ட். கவலப்படாத நாங்களும் உனக்கு இதே மாதிரி கிஃப்ட் தான் தருவோம். ஓகேவா’ என கவின் சொல்லி விட்டு வேகமாய் அதை வாங்கி யாழினியிடம் காட்டி கேட்டுக் கொண்டிருந்தான்.
இருவரும் செலக்ட் பண்ண அதே இடத்தை தேதியை கேட்டு புக் செய்து அவர்களுக்கு அனுப்பினான் தமிழ்.
‘சரி வா நிலாக்கு பத்திரிக்கை குடுக்க போலாம்’ என யாழினி கூப்டது தான் தாமதம் வேகமாக கிளம்பினான் தமிழ்.
‘அவ்ளோ வெரி மாப்ளைக்கு’ என கவின் கிண்டல் செய்ய,
அதை எதுவும் காதில் வாங்காமல் ‘நான் ரெடி போலாமா’ என தமிழ் கேட்க கவினும் யாழினியும் சிரித்துக் கொண்டு அவனுடன் கிளம்பினார்கள்.
நிலாவின் ஹோட்டலுக்கு மூவரும் சென்று சேர்ந்தனர். அங்கு அவளும் அவளது அம்மாவும் இருந்தனர்.
தமிழ் முன்னாடி செல்ல கவினும் யாழினியும் பின்னாடி சென்றனர்.
‘வாங்க தம்பி. நிலா இங்க வந்து யார் வந்திருக்காங்க பாரு’ என நிலா அம்மா அவர்களை உட்கார வைத்து விட்டு என்ன சாப்டறீங்க என கேட்க,
‘கண்டிப்பா சாப்டறோம். உங்க ஹோட்டல எது எது ஸ்பெஷலோ அது எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் சேம்பிள் எடுத்துட்டு வறீங்களா’ என கவின் கேட்க நிலா அம்மாக்கு மட்டுமல்ல தமிழுக்கும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க நிலா அம்மா அனைத்தையும் கொண்டு வர தமிழ், கவின், யாழினி மூவரும் ருசி பார்த்தனர்,
உள்ளே இருந்து வந்த நிலா தமிழை பார்த்ததும் தன்னை அறியாமலே முகம் முழுக்க புன்னகையுடன் வரவேற்க தமிழின் முகத்திலும் தவ்சன்ட் வாட்ஸ் பல்பு எறிய இருவரும் ஒருவரை ஒருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க,
‘நீங்க தான் நிலாவா. நான் கவின், இது யாழினி தமிழோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் . எங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்துருக்கோம்.’ , என சொல்லி கவினும் யாழினியும் பத்திரிக்கை எடுத்து நிலா அம்மா கையில் குடுக்க,
‘நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும்’ என யாழினி சொன்னாள்.
‘சரி கண்டிப்பா வந்தறோம். அம்மா நிலா நீங்க பேசிட்டு இருங்க வந்தறேன்’ என சொல்லி நிலா அம்மா உள்ளே சென்று வேலையை பார்க்க தொடங்கினார்.
‘உங்க கூட போன்ல பேசிருக்கேன். இப்ப தான் உங்க ரெண்டு பேரயும் நேர்ல பாக்குறேன். தமிழ் சார் உங்க ரெண்டு பேர பத்தியும் சொல்லும் போது உங்களை நேர்ல பாக்கணம்னு தோனும்’ என நிலா சொல்ல,
‘ஏன் எங்கள பத்தி தப்பா எதுவும் சொல்லுவானா’ என கவின் கேட்க,
‘ச்சே ச்சே நீங்க ரெண்டு பேரும் அவருக்கு கிடைச்ச வெரிகுட் ப்ரெண்ட்ஸ்னு சொல்லுவாரு எப்பவும்’ என நிலா சொல்ல,
‘அப்டியாடா சொன்ன நம்ப முடியலயே’ என்றாள் யாழினி.
இவர்கள் பேசுவது எதுவும் தமிழ் காதில் விழவேயில்லை. தமிழ் நிலாவை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்க்க இதை பார்த்த கவின் அவன் தோளில் தட்டி அவன் காதில் ‘மச்சான் பாத்தது போதும். ரொம்ப வழியுது’ என சொல்ல தமிழ் சுய நினைவுக்கு வந்தான்.
‘அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம். உங்க ஹோட்டல எல்லா ஐடமும் சூப்பரா இருக்குனு தமிழ் சொல்லி இருக்கான். அது உண்மை தான்னு நாங்களும் சாப்டு தெரிஞ்சிக்கிட்டோம். பரவால்ல ஹோட்டல நல்லா நீட்டா, மாடர்னா, க்ளாசியா மெயின்டெய்ன் பண்றீங்க. ‘ என கவின் சொல்ல,
‘ரொம்ப தேங்க்ஸ். இது எல்லாம் தமிழ் சாரால தான் என்னால செய்ய முடிஞ்சுது.’ என நிலா சொல்ல,
‘ அதெல்லாம் ஒன்னுமில்ல நிலா இது முழுக்க முழுக்க உங்க குடும்பத்தோட உழைப்பால தான். நான் சப்போர்ட் மட்டும் தான் பண்ணேன்’ என தமிழ் சொல்ல,
‘எது எப்டியோ கடைய சீக்கிரமா டெவலப் பண்ணிருங்க ப்ளீஸ்’ என கவினும் யாழினியும் தமிழையும் நிலாவையும் பார்த்து கோரசாக சொன்னார்கள்.
‘அப்புறம் இன்னொரு விசயம். இந்தாங்க எங்க ரிசப்ஷன் அண்ட் மேரேஜ் ஃபுட் லிஸ்ட். நீங்க தான் அருமையா பண்ணிக் குடுக்கனும்’ என கவின் சொல்ல இது நிலாக்கு மட்டுமல்ல தமிழுக்கும் ஆச்சரியமாக இருந்தது,
‘ டேய் எங்கிட்ட கூட சொல்லல’ என தமிழ் கேட்க,
‘ம் நீ மட்டும் என்ன எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லிட்டா செய்ற’ என்று யாழினி கேட்க தமிழ் அவளை முறைத்தான்.
‘ரொம்ப தேங்க்ஸ்ங்க. கண்டிப்பா சூப்பராக நீட்டா பண்ணி குடுத்தறேன். கவலையே படாதீங்க. அதுவும் தமிழ் சாருக்கு ப்ரெண்ட்ஸ்னா எனக்கும் ப்ரெண்ட்ஸ் தான். சிறப்பா பண்ணிரலாம்’ என நிலா சொல்ல,
கவின் யாழினி இருவரும் தமிழைப் பார்க்க தமிழ் திரும்பிக் கொண்டான்.
‘நிலா இந்தாங்க பேமண்ட்’ என கவின் செக்கை குடுக்க,
ஒரு நிமிஷம், ‘அம்மா இங்க வாங்க.’ என நிலா கூப்பிட அவளது அம்மா வந்தார்.
‘அம்மா இத உன் கையால வாங்கி சாமி படத்து கிட்ட வச்சிட்டு திருநீறு தட்டு எடுத்துட்டு வந்து ஆசீர்வாதம் பண்ணுமா’ என நிலா சொல்ல,
அதே போல அவங்க அம்மா சாமி கிட்ட காச வச்சிட்டு திருநீறு எடுத்து வந்து இருவரையும் ஆசீர்வாதம் செய்ய இருவரும் காலில் விழுந்து அதை பெற்றுக் கொள்ள தமிழும் நிலா அம்மாவின் காலில் விழ கவின் யாழினி இருவரும் சிரிக்க நிலா அம்மா ஆசீர்வாதம் செய்து விட்டு என் ஆசீரீவாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு தம்பி என்றார்.
‘சரி அப்ப நாங்க கிளம்புறோம்’ என சொல்லி கவினும் யாழினியும் முன்னாடி செல்ல தமிழ் செல்ல மனம் இல்லாமல் மெதுவாக சென்று காரை எடுக்க நிலா அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு சென்றாள்.
காரில் செல்லும் வழியில் கவினும் யாழினியும் தமிழை கிண்டல் செய்து கொண்டே சென்றனர்.
திருமண நாளும் வந்தது.
கவினும் யாழினியும் திருமணம் முடிந்து சந்தோஷமாக போட்டோவுக்கு போஸ் குடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ் மாப்பிள்ளை தோழனாகவும் மணப்பெண் தோழனாகவும் மாறி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தான் தமிழ், கவின், யாழினி பெற்றோர்கள் வந்த அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
யாழினி தமிழை கூப்பிட்டு, ‘ ஏன்டா இப்டி அலையுற . இங்க பாரு எப்டி வேத்துருக்குன்னு. போய் ரெஸ்டெடு’ என சொல்ல,
‘ஏய் யாழினி நீ வேற அவன் நமக்காக செய்றான் நினைச்சியா. அதெல்லாம் ஒன்னுமில்ல. எல்லாம் நிலாக்காக. அப்ப தான அவள போய் அடிக்கடி பாக்கலாம்’ என கவின் சொல்ல,
‘தேங்க்ஸ் டா கவின். இது வரைக்கும் எனக்கு தோனவே இல்ல. செம ஐடியா. இப்பவே ஃபாலோ டண்றேன்’ என சொல்லி தமிழ் போக யாழினி கவினை பார்த்து முறைத்தாள்.
தமிழ் தன் அம்மா அப்பா மற்றும் கவின் யாழினி அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு சென்று நிலா அம்மா விடம் அறிமுகம் செய்ய, ‘ கல்யாணம் பூரா உங்க சாப்பாட்ட பத்தி தான் பேச்சு. சும்மா சொல்ல கூடாது சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு’ என கவின், யாழினி அப்பா அம்மா சொல்ல,
‘ரொம்ப நன்றிங்க ‘ என்றார் நிலா அம்மா.
‘ஆமா சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு நம்ம நிலா மாதிரியே’ என தமிழ் அப்பா சொல்ல,
‘அவ மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்’ என்றார் தமிழ் அம்மா.
இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க தமிழும் நிலாவும் ஒருவருக்கு ஒருவர் பார்வையிலேயே பேசிக் கொண்டனர்.
நல்லபடியாக கவின் யாழினி திருமணம் முடிய ஒரு பெரிய பிரச்சனை முடிந்தது என தமிழ், கவின், யாழினி மூவரும் பெருமூச்சு விட்டனர்.
நாட்கள் சென்றன.
நிலா தம்பி ஹோட்டல் மேனேஜ்மெனட் படித்தான். காலேஜ் லீவில் ஹோட்டலுக்கு வந்து நிலாவுடனும் அம்மாவுடனும் சேர்ந்து பார்த்து பழகிக் கொண்டான். அவனும் தமிழும் அவனுக்கு ஆப்ரேஷன் பண்ண போது பார்க்க வந்ததிலிருந்து நன்றாக பழகிக் கொண்டனர். படிப்பிலும் சரி பிஸ்னஸிலும் சரி ஏதாவது சந்தேகம் வந்தால் என்னிடம் கேள் என தமிழ் நிலா தம்பியிடம் சொல்ல அவனும் அப்டிதான் செய்தான் தமிழும் திலாவின் தம்பியும் ஒருவர் மீது ஒருவர் பாசமாகவும் இருந்தனர்.
ஒரு நாள் நல்ல மழையில் நனைந்து கொண்டு வீட்டுக்கு வந்தான் தமிழ்.
‘ஏன்டா மழை நின்றதும வரக் கூடாதா’ என சொல்லிக் கொண்டே தமிழ் அம்மா அவனுக்கு தலையை துவட்டி விட,
‘இல்ல ராஜி வெய்ட் பண்ணேன். ஆனா நிக்கற மாதிரி தெரியல . கார் வேற பஞ்சர். கார வொர்க் சாப்ல விட்டுட்டு ஆட்டோ புடிச்சு வந்தேன். அதான் ஃபுல்லா நனைஞ்சுட்டேன்’ என தமிழ் சொல்லிக் கொண்டே தும்ப, அவனது அம்மா அவன் நெற்றியை தொட்டு பார்த்து விட்டு,
‘டேய் உடம்பு சுடுதுடா. வா ஹாஸ்பிடல் போலாம்’ என கூப்பிட,
‘ஹாஸ்பிடல்னா எனக்கு பயம்னு உனக்கு தெரியும்ல ராஜி. அப்புறம் ஏன் கூப்டற. எல்லாம் மாத்திரை போட்டா சரியாகிடும்’ என தமிழ் சொல்லி விட்டு தன் ரூமுக்கு செல்ல,
‘ஏங்க நீங்களாவது சொல்லுங்க. அவனுக்கு காச்சல் அடிக்குது’ என தமிழ் அம்மா அவனது அப்பாவிடம் சொல்ல,
‘அவன பத்தி தான் உனக்கு தெரியும்மில்ல. மாத்திரை போடட்டும் சரியாகலைன்னா காலைல பேசிக்கலாம்’ என சொல்லி அங்கிருந்து சென்றார் தமிழ் அப்பா.
தமிழ் அம்மாவோ மனது கேட்காமல் தூங்காமல் அவனருகில் உட்கார்ந்து அவனை பார்த்துக் கொண்டார்.
மாத்திரை சாப்பிட்டதும் கொஞ்சம் காச்சல் சரியாக தமிழ் அம்மாவும் அங்கேயே தூங்கினார்.
ஆனால் காலையில் எழுந்து தமிழ் அம்மா தொட்டு பார்க்க மீண்டும் காச்சல் கொதிக்க, , ‘டேய் தமிழ் திரும்ப காச்சல் கொதிக்குது ஒழுங்கா ஹாஸ்பிடல் போலாம்டா’ என சொல்ல,
‘ராஜி ப்ளீஸ் நான் எங்கயும் வரல. எல்லாம் அதுவே தானா சரியாயிரும்’ என தமிழ் சொல்ல,
தமிழ் அம்மா அவனது அப்பாவிடம் சென்று, ‘ஏங்க தமிழ் சொன்னா கேக்க மாட்டேங்குறான். காச்சல் கொதிக்குது’ என சொல்ல,
‘இரு இத எப்டி சரி பண்றேன்னு பாரு. நாம சொன்னா கேக்க மாட்டான். சொல்றவங்க சொன்னா தான் கேப்பான்’ என தமிழ் அப்பா சொல்லி போன் எடுக்க,
‘ஆமாங்க அதுவும் கரெக்ட் தான். போன தடவ உடம்பு சரியில்லாம போனப்ப கூட நிலா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனதும் பேசாம போய்ட்டான்ல.’ என தமிழ் அம்மாவும் கூற நிலாவுக்கு போன் செய்தனர்.
நிலா ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருக்க தமிழ் அப்பா விடம் இருந்து போன் வந்தது.
‘சொல்லுங்க அங்கிள். இவ்ளோ காலைல போன் பண்ணிருக்கீங்க ஏதும் பிரச்சனையா’ என நிலா கேட்க,
‘ஆமாம்மா நிலா தமிழ் நேத்து நைட் கார் டையர் பஞ்சர் ஆயிருச்சுன்னு கார செட்ல விட்டுட்டு ஆட்டோல மழைல நினைஞ்சிட்டு வீட்டுக்கு வந்தான். நைட்டே காச்சல் இருந்துச்சு. மாத்திரை போட்டான் கொஞ்சம் பரவால்லயா இருந்தது. ஆனா காலைல எழுந்து பாத்தா திரும்ப காச்சல் கொதிக்குது. அவன பத்தி தான் உனக்கு தெரியுமே ஹாஸ்பிடல்னா அவனுக்கு பயம் அதனால வர மாட்டேங்குறான். போன தடவ உடம்பு சரியில்லாம போனப்ப நீ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனதும் உன்கூட வந்தான். அதுமாதிரி இப்ப நீ கூட்டிட்டு போனா வருவான்னு நினைக்கறேன். கொஞ்சம் வர்றியாம்மா’ என தமிழ் அம்மா கேட்க,
‘சரி ஆன்டி கவலைப்படாதீங்க இதோ கிளம்பி வரேன். ஆனா போன தடவ பாதி மயக்கத்துல இருந்தாரு. அதனால பெருசா தெரியல. பாக்கலாம் வேற வழியில்ல ஹாஸ்பிடலுக்கு எப்டியாவது கூட்டிட்டு போய் தான ஆகனும். நான் ஆட்டோல வந்தறேன்’ என சொல்லி விட்டு,
‘அம்மா தமிழ் சாருக்கு நேத்து மழைல நெனஞ்சதால உடம்பு சரியில்லையாம். நான் போயிட்டு வந்தறேன். நீ ஹோட்டலுக்கு போயிரு’ என நிலா சொல்ல,
‘சரி நிலா. முதல்ல நீ தமிழ் தம்பிய போய் சீக்கிரமா பாரு. நான் போய்க்கறேன்’ என்றார் நிலா அம்மா.
நிலா வேகமாக ஒரு ஆட்டோலை பிடித்து தமிழ் வீட்டுக்கு வந்து, ‘அண்ணா அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க வந்தறேன்’ என சொல்லி உள்ளே செல்ல,
‘வாம்மா நிலா’ என தமிழ் அம்மா தமிழிடம் கூட்டிச் செல்ல,
நிலா படுத்திருந்த தமிழின் நெற்றியை தொட்டு பார்க்க தமிழ் கண் விழித்து வேகமாக எழுந்து,
‘நிலா வாங்க. இந்த நேரத்துல நீங்க இங்க எப்டி’ என அவளை பார்த்த சந்தோஷத்தில் ஆச்சரியமாக கேட்டான் தமிழ்.
‘ம் என்னய வர வச்சிட்டு எங்க இங்கைன்னா கேக்கறீங்க. உடம்பு இப்டி கொதிக்குது. அப்ப கூட ஹாஸ்பிடல் வர மாட்டேனு அடம் பிடிக்கறீங்க. பாவம் அங்கிளும் ஆன்டியும் பயந்துட்டாங்க. ஏன் இப்டி பண்றீங்க. கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு’ என நிலா அதட்ட,
‘நிலா எனக்கு ஹாஸ்பிடல்னா பயம் நான் வரல. ப்ளீஸ் என்ன விட்ருங்களேன்’ என பாவமாய் தமிழ் கெஞ்ச,
‘சின்ன பையன் மாதிரி அடம் புடிக்காதீங்க சார். அதான் நான் கூட வரேன்ல. பயப்படாதீங்க’ என தமிழை நிலா பெட்டில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல தமிழ் வேறு வழியில்லாமல் அவள் கையை பயந்தபடி இறுக்கி பிடித்துக் கொண்டு சென்றான்.
‘அங்கிள் ஆன்டி நீங்க கவலைப்படாதீங்க . நான் கூட்டிட்டு போயிட்டு வறேன்’ என ஆட்டோவில் தமிழை ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டு நிலா சொல்ல,
‘சரிம்மா போயிட்டு கூப்டு’ என்றார் தமிழ் அப்பா.
ஹாஸ்பிடலுக்கு சென்று டோக்கன் போட ‘ஏங்க எவ்ளோ நேரமாகும். நைட்ல இருந்து பீவர் நிக்கல. அதான்’ என நிலா கேட்க,
‘மேடம் மூனாவது டோக்கன் நீங்க. எல்லாருமே பீவர்னு தான் வந்துருக்காங்க. ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும்’ என நர்ஸ் சொன்னார்.
‘ஏங்க நிலா எனக்கு பயமா இருக்கு . வாங்க வீட்டுக்கு போயிடலாம் ப்ளீஸ்’ என தமிழ் கெஞ்ச,
‘போலாம் டாக்டர பாத்துட்டு கண்டிப்பா போலாம்’ என்றாள் நிலா,
ஒவ்வொருவராக போக தமிழ் டோக்கன் நம்பர் வர நிலா தமிழை கூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.
நடந்ததை நிலா சொல்ல டாக்டர் கேட்டு விட்டு தமிழை செக் பண்ணினார்.
‘மழைல நினஞ்சது சேரல அதனால தான் ஃபீவர் வந்திருக்கு. டெம்பரேச்சர் ஜாஸ்தியா இருக்கு. இன்ஜெக்ஷன் எழுதறேன். போட்டுட்டு கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க அப்புறம் டெஸ்ட் பண்ணிட்டு போகலாம்’ என டாக்டர் சொல்ல அங்கிருந்து ரூமுக்கு கூட்டி சென்றார் நர்ஸ்.
நர்ஸ் இன்ஜெக்சன் போட வர தமிழ் பயப்படுவது பார்த்த நிலா அவன் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்ள தமிழ் அவள் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நர்ஸ் இன்ஜெக்ஷன் போட ஆ என்று கத்தினான் தமிழ்.
இன்ஜெக்ஷன் போட்ட இடத்தில் நிலா தேய்த்து விட்டாள்.
சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்து செக் பண்ணி விட்டு , ‘இப்போ பரவால்ல. ஃபீவர் குறைஞ்சிருக்கு. நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க லிக்விட் ஃபுட் குடுங்க மறக்காம ரெண்டு நாள் இந்த மாத்திரையும் குடுங்க. இப்ப நீங்க போகலாம்’ என சொல்ல,
நிலா போய் டாக்டர் பீஸ் கட்டி விட்டு மாத்திரையும் வாங்கிக் கொண்டு வந்து தமிழை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு சென்றாள்.
தமிழ் சோர்வில் நிலா தோளில் சாய்ந்து தூங்க வீடு வந்ததும் நிலா எழுப்பி மெதுவாக கூட்டிச் சென்று அவனது ரூமில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்து நடந்ததையும் டாக்டர் சொன்னதையும் தமிழ் பெற்றோரிடம் சொன்னாள்.
‘ரொம்ப தேங்க்ஸ் நிலா. நீ மட்டும் இல்லைனா இவன எங்களால சமாளிக்க முடியாது. ரொம்ப உடம்பு சரியில்லாம போய் மயக்கம் போட்டா தான் அவனுக்கே தெரியாம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவோம். நல்ல வேல நீ வந்துட்ட ‘ என தமிழ் அப்பா சொல்ல,
‘கவலபடாதீங்க ஆன்டி சரியாகிடும்’ என கவலையுடன் இருந்த தமிழ் அம்மா விடம் சொன்னாள் நிலா.
தொடரும்…
