நீ எனக்கு தந்த காதல் – 13.
தமிழிடம் மீண்டும் வந்து சேர்ந்த நிலா.
தமிழ் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து தூங்கினான்.
Advertisement
இனி,
நிலாவிடம் பேசிக் கொண்டிருந்த தமிழ் அம்மா, ‘ஒரு நிமிஷம் நிலா. இதோ வந்தறேன் ‘ என தமிழின் ரூமுக்குள் மெதுவாக சென்று ஒரு கார்டையும் ஒரு சின்ன ஜூவல் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
Advertisement
Advertisement
‘நிலா உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது. இந்தா இத பிடி. இது உன் பர்த்டேக்கு உனக்கு குடுக்க தமிழ் வாங்குனது. ஆனா ஏன் குடுக்கலைன்னு எனக்கு தெரியல. அவன் கிட்ட கேட்டா இத குடுக்க இன்னும் டைம் வரலைன்னு சொல்றான். அப்டி உங்களுக்குள்ள ஏதும் மனஸ்தாபமா இருந்தா அவன் உன் மேல வச்சிருக்கிற காதல புரிஞ்சுக்க இது உதவும்னு தான் நான் இத உங்கிட்ட குடுக்கறேன்.’ என அதை நிலாவிடம் கொடுத்தார் தமிழ் அம்மா.
‘ராஜி’ என தமிழ் அப்பா கூப்பிட, ‘இதோ வந்தறேன்’ என்று நிலாவிடம் சொல்லி விட்டு தமிழ் அம்மா அங்கிருந்து சென்றார்.
Advertisement
நிலா அந்த கார்டை பிரித்து அதில் தமிழ் ‘ நீ ஈசியா போதைல ஐ லவ் யூ னு சொல்லிட்ட. ஆனா இத உங்கிட்ட சொல்றதுக்குள்ள எனக்கு எவ்ளோ டென்சனா இருக்கு தெரியுமாடி என் பொண்டாட்டி. ஐ லவ் யூ டி நிலா. எப்பவும் எங்கூடவே நீ இருக்கனும் . அதான் என் ஒரே ஆசை’ என எழுதி தன் பெயரைப் போட்டிருந்ததை பார்த்து விட்டு அந்த ஜூவல் பாக்சையும் திறந்து அதில் இருந்த ரிங்கையும் பார்த்து அழுது கொண்டே தமிழ் அருகில் சென்று,
‘உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் என்னோட ஆசை நிறைவேறதுக்காக அதை உங்களுக்குள்ளேயே வச்சிகிட்டு எப்டி உங்களால முடிஞ்சது.’ என நிலா தமிழிடம் சொல்லி அழ தமிழ் முழித்துக் கொள்ள கண்ணை துடைத்துக் கொண்டாள்.
‘நிலா தண்ணி வேனும்’ ,என தமிழ் கேட்க, நிலா எடுத்துக் கொடுத்தாள்.
‘சரி நீங்க இப்ப ஓகே தான ‘ என நிலா கேட்க,
‘ம் பரவால்ல ‘ என்றான் தமிழ்.
‘சரி அப்ப நான் கிளம்பட்டுமா. ரெண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காரு டாக்டர். மாத்திரைய மறக்காம போடுங்க. ஆன்டிக்கு தொந்தரவு குடுக்காதீங்க’ என நிலா சொல்ல,
‘ ம் அவ்ளோ அக்கறை இருந்தா கூடவே இருந்து பாத்துக்க வேண்டியதான’ என தமிழ் தனக்குள் நினைத்துக் கொண்டு ‘ம் சரி’ என்றவாறு தலையை அசைத்தான்.
‘ஆன்டி அங்கிள் அப்ப நான் கிளம்பறேன்’ என்று தமிழ் பெற்றோரிடம் சொல்லி விட்டு தமிழ் அம்மா விடம் சென்று அவர்கள் அந்த கிஃப்டை தன்னிடம் தந்ததை தமிழிடம் சொல்ல வேண்டாம் என சொல்லி விட்டு கிளம்ப,
‘ரொம்ப தேங்க்ஸ் நிலா’ என தமிழ் அப்பா சொல்ல,
‘எதுக்கு அங்கிள் தேங்க்ஸ் எல்லாம். நான் உங்க பொண்ணு மாதிரி எப்ப வேனா என்ன உதவி வேனா நீங்க எங்கிட்ட கேக்கலாம்’ என சொல்லி விட்டு அங்கிருந்து நிலா கிளம்பினாள்.
நாட்கள் சென்றன.
நிலா தம்பி படித்து முடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்து பார்த்துக் கொண்டான். தமிழுக்கு கொடுக்க வேண்டிய கடனை கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடித்தனர். ஹோட்டலை பெரிய அளவுக்கு மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வந்தனர்.
திடீரென நந்தினிக்கு நிலா போன் செய்தாள்.
‘என்ன நிலா திடீர்னு கூப்டற. ஏதும் பிரச்சனையா’ என நந்தினி கேட்க,
‘அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்கு உன்னால ஒரு வேலை நடக்கனுமே’ என நிலா சொல்ல,
‘உனக்கு பண்ணாம. சொல்லு என்ன வேனும்’ என்றாள் நந்தினி.
‘எனக்கு எப்டியாவது தமிழ் சாரோட பர்த்டே டேட் வேனுமே’ என நிலா கேட்க ,
‘ஆமா அது எதுக்கு. ஓ அவருக்கு சர்ப்ரைஸ் பண்ணவா’ என நந்தினி கேட்க,
‘ஆமா அதுக்கு தான்’ என்றாள் நிலா.
‘என்ன சர்ப்ரைஸ்னு சொன்னா தான் நான் சொல்லுவேன்’ என நந்தினி சொல்ல,
‘ப்ளீஸ் நந்தினி. விளையாடாத’ என நிலா கெஞ்ச,
‘சரி உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அது எதுக்கு எனக்கு. ஒரு நிமிஷம் இரு’ என நந்தினி சொல்லி விட்டு எம்ப்ளாயர்ஸ் டேட்டாவை எடுத்து பார்த்து நிலாவுக்கு சொன்னாள்.
‘இன்னும் மூனு வாரம் இருக்கா. சரி ரொம்ப தேங்க்ஸ். எனக்கு இந்த மாசம்னு தெரியும் ஆனா என்னைக்குன்னு தெரியாது.’ என நிலா சொல்ல,
‘சரி ஓகே . ஐம் ஆல்சோ வெயிட்டிங் ஃபார் த சஸ்பென்ஸ். நீ எப்டி இருக்க ‘ என நந்தினி கேட்க இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர்.
நிலாவுக்கு இது வரை இருந்த நாட்களை விட இந்த மூன்று வாரம் ரொம்ப மெதுவாக செல்வது போல் தோன்றியது. எந்நேரமும் தமிழ் நினைவாகவே இருந்தது அவளுக்கு.
தமிழும் அப்படி தான் நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அடிக்கடி நிலாவிடம் பேசுவதற்காகவே அவளது அம்மாவுக்கும் தம்பிக்கும் போன் செய்வான். அவர்களிடம் பேசி விட்டு நிலாவிடம் குடுக்க சொல்லி பேசுவான்.
நிலா தன் அம்மா விடம் தான் தமிழை விரும்புவதாகவும் தமிழும் தன்னை விரும்புகிறார் என்றும் சொல்லி விட நிலா அம்மா முதலில் அந்தஸ்தை பார்த்து தயங்கினாலும் பிறகு தமிழின் குணத்தை பற்றி தெரிந்ததால் சம்மதித்தார். நிலா தன் தம்பியிடமும் சொல்ல, ‘ சூப்பர் நிலா. தமிழ் சார எனக்கும் ரொம்ப பிடிக்கும். ‘ என்றான் நிலா தம்பி.
தமிழின் பிறந்தநாளுக்கு முதல் நாள் இரவு நிலா அவனுக்கு போன் பண்ணி , ‘ சார் உங்க ஆபீஸ்ல பி.ஏ. வேல இன்னும் காலியா இருக்கா’ என கேட்க,
‘ஆமா நிலா காலியாத்தான் இருக்கு. ஏன் கேக்கறீங்க ‘ என தமிழ் கேட்க,
‘இல்ல தெரிஞ்ச ஒருத்தவங்களுக்கு கேக்கலாமேன்னு’ என நிலா கூற,
‘அறிவிருக்காடி உனக்கு. வேற யாரையும் போடறதா இருந்தா முன்னவே போட்ருக்க மாட்டானா. உன் இடத்துல என்னால வேற யாரையும் வச்சு பாக்க முடியாது. உனக்கு எப்ப தான் நான் பட்ற அவஸ்தை புரியுமோ’ என தமிழ் மனதுக்குள் புலம்பிக் கொண்டு ‘இல்ல நிலா எனக்கு பி.ஏ. தேவபடல அதான் யாரையும் போடறதா இல்ல ‘ என சொன்னான்.
‘அப்டியா அந்த ஆள் நானா இருந்தாலும் வேணாமா’ என நிலா கேட்க,
‘என்னது நீங்களா. நீங்கன்னா எனக்கு ஓகே. எப்ப வர்றீங்க ‘ என சந்தோஷமாய் தமிழ் கேட்க,
‘இப்ப தான் உங்களுக்கு பி.ஏ யாரும் தேவை இல்லைன்னு சொன்னீங்க.’ என நிலா கேட்க,
‘அது வேற யாரும் வேணாம். நீங்களா இருந்தா ஓகே. எப்ப வறீங்க. ஹோட்டல்’ என தமிழ் இழுக்க.
‘தம்பியும் அம்மாவும் பாத்துக்கு வாங்க. அப்புறம் நாளைக்கே வரலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க ‘ என நிலா கேட்க,
‘ம் தாராளமா. நாளைல இருந்தே வந்துருங்க’ என அவளிடம் சொல்லி விட்டு தனக்குள், ‘இதுக்கு தான் இவ்ளோ நாளா வெய்ட் பண்றேன்’ என சந்தோஷமாக சொல்லிக் கொண்டான்.
‘அப்ப சரி நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம் சார்’ என சொல்லி நிலா போனை வைக்க தமிழ் எப்போது விடியும் என்று பார்த்து படுத்திருந்தான்.
காலையில் நேரமே எழுந்து கிளம்பி கீழே வர, ‘ஹேப்பி பர்த்டே டா. இந்தா உன் கிஃப்ட்’ என தமிழ் அம்மா அப்பா குடுத்த ட்ரஸை பிரித்து கூட பார்க்காமல் வாங்கி கொண்டு ‘ ஓகே தேங்க்ஸ் டாடி , தேங்க்ஸ் ராஜி. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க’ என இருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு வேகமாக கிளம்ப,
‘டேய் சாப்டுட்டு போடா’ என தமிழ் அம்மா கூற அதை காதில் வாங்காமல் கிளம்பினான் தமிழ்.
கவினிடமிருந்து போன் வர தமிழ் ஹெட் செட்டில் அட்டெண்ட் பண்ணி பேசினான்.
‘மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே டா’ என கவினும், யாழினியும் கோரசாக வாழ்த்த,
‘ரொம்ப தேங்க்ஸ் ரெண்டு பேருக்கும்’ என தமிழ் சொல்ல,
‘சரி பார்ட்டி எங்க எப்பனு சொல்லு. பர்த்டே பேபிக்கு இன்னிக்கு எங்க ட்ரீட். ‘ என கவின் சொல்ல,
‘டேய் அதெல்லாம் எதுக்குடா’ என்று தமிழ் கேட்க,
‘டேய் அத நீ ஏன் சொல்ற. ஒழுங்கா டைம், ப்ளேஸ் அனுப்பு.’ என யாழினி சொல்ல,
‘சரிம்மா தாயே அனுப்பறேன். ‘ என சிரித்துக் கொண்டே தமிழ் சொல்ல,
ஆமா சார் என்ன இன்னிக்கு ஹேப்பியா பேசற மாதிரி இருக்கு’ என கவின் கேட்க,
‘அதுவா நிலா நேத்து போன் பண்ணா’ என ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறினான் தமிழ்.
‘ஓ அதானா ரீசன். சரி இந்த பர்த்டே சூப்பரா இருக்க எங்கள் வாழ்த்துக்கள்’ என இருவரும் வாழ்த்த,
‘சரி ரொம்ப தேங்க்ஸ். போனை வைக்கறீங்களா’ என சொல்லி போனை கட் செய்தான்.
ஆபீஸ்கு வந்ததும் நந்தினியிடம் சென்று நிலா வந்துட்டாளா சாரி வந்துட்டாங்களா’ என தமிழ் கேட்க,
நந்தினி சிரித்துக் கொண்டே, ‘ம் வந்துட்டா சார். இப்ப தான் எங்கிட்ட நடந்ததை சொல்லிட்டு அவ சீட்டுக்கு போறா’ என கூற,
‘ஓகே தேங்க்ஸ்’ என சொல்லி தமிழ் ரூமுக்கு சென்றான்.
நந்தினி நிலாக்கு போன் பண்ணி தமிழ் வந்த விசயத்தை சொல்ல நிலா வேகமாக தமிழ் ரூமுக்குள் அனுமதி பெற்று உள்ளே சென்றாள் நிலா.
‘வாங்க நிலா. ரொம்ப தேங்க்ஸ் நீங்க திரும்ப வந்ததுக்கு’ என தமிழ் சொல்ல,
‘சரி அதெல்லாம் இருக்கட்டும். கொஞ்சம் எந்திரிங்க’ என நிலா சொல்ல தமிழ் எழுந்திருக்க அவனது கண்ணை கட்டி விட்டு அவனது லவ் ப்ரபோஸல் கார்டை கையில் கொடுத்து, ‘ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே மிஸ்டர் தமிழ். இப்ப கண்ணை திறந்து அத ஓப்பன் பண்ணி பாருங்க ‘ என நிலா சொல்ல,
அவன் ரெடி பண்ணி வைத்திருந்த கார்டை பார்த்ததும், ‘இது எப்டி உங்கிட்ட ‘ என தமிழ் கேட்க,
‘அது சஸ்பென்ஸ். ம் பிரிங்க’ என்றாள் நிலா.
தமிழ் அதை பிரிக்க அதில் அவன் எழுதியதுக்கு கீழே, ‘ஐ லவ் யூ டூ டா புருஷா. கண்டிப்பா உங்கூடவே இருந்து உன் ஆசைய நிறைவேத்தறேன்’, என எழுதி கீழே நிலான்னு கையெழுத்து போட்டிருந்தது. அதை பார்த்ததும் தமிழ் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
நிலா வேகமாக ஓடி வந்து அவன் கண்ணீரை துடைத்து விட்டு அவனை இறுக கட்டி பிடித்து, ‘இன்னிககு பர்த்டே பேபி அழக் கூடாது’ என காதலுடன் சமாதானப் படுத்தினாள்.
‘நிலா உனக்கு தெரியாது. நீ உன்னோட காதல சொன்ன ஆனா அப்ப போதைல இருந்த. நானும் அப்பவே உனக்கு என் காதல சொன்னேன். அப்ப நீ மயக்கத்துல இருந்த. சரி திரும்ப உன் பர்த்டே அன்னிக்கு என் லவ்வ சொல்லலாம்னு ப்ளான் பண்ணேன். அப்பன்னு பாத்து நீ நந்தினி கிட்ட உன் ஆசைய சொன்னத கேட்டேன். ஒரு நிமிஷம் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்புறமா சரி உன் ஆசைக்கு துணையா இருக்கனும்னு நினைச்சு என் காதல சொல்லாம மறச்சிட்டேன். உங்கிட்ட இப்ப கூட எப்படி என் காதல சொல்றதுன்னு பயம். இத்தனை நாள் நீ எப்டியும் வந்துருவ ன்னு நம்பிக்கையா காத்துகிட்டு இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகல.’ என தமிழ் தேம்பி தேம்பி அழுது கொண்டே சொல்ல நிலாவும் அழுதாள்,
‘சாரிப்பா உன்னை எவ்ளோ கஷ்டப் படுத்திருக்கேன் . இனிமே உன்னை விட்டு எங்கயும் எப்பவும் போக மாட்டேன். ப்ராமிஸ்’ என நிலா சொல்ல,
‘இப்ப நீ ஏன் அழுகிற . நான் இருக்க வரைக்கும் நீ எப்பவும் எதுக்காகவும் அழக்கூடாது.’ என தன் கண்ணையும் துடைத்துக் கொண்டு நிலாவின் கண்களையும் துடைத்து விட்டான் தமிழ்.
தன் கையில் அவனுக்காக தான் வாங்கிய ரிங்கை வைத்துக் கொண்டு அவன் முன்னால் ஒரு காலில் மண்டி போட்டு, ‘ வில் யூ மேரி மீ’ என நிலா கேட்க,
தமிழ் சிரித்துக் கொண்டே கையை நீட்ட நிலா அதை போட்டு விட்டு, தமிழ் தனக்காக வாங்கிய ரிங்கை அவனிடம் கொடுக்க அதை வாங்கி தமிழ் நிலாக்கு போட்டு விட்டான்.
‘கடைசில நான் ப்ளான் போட்டேன் நீ எக்சிக்யூட் பண்ணிட்ட சூப்பர் நிலா’ என தமிழ் சொல்ல,
‘இதுக்கு ஆன்டிக்கு தான் நீங்க தேங்க்ஸ் சொல்லனும் ‘ என நிலா சொல்ல,
‘நீ கார்ட நீட்டும் போதே எனக்கு தெரிஞ்சிருச்சு ராஜி தான் உன்கிட்ட குடுத்துருப்பானு. இந்த விசயத்த சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா’ என சொல்லி தமிழ் வீட்டுக்கு போன் செய்து,
‘ராஜி எப்பவும் கேப்பியே எப்படா கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்னு. இப்ப சொல்றேன் சீக்கிரமா என் கல்யாணத்துக்கு ரெடி பண்ணு. இதுக்கு மேல என்னால வெய்ட் பண்ண முடியாது’ என சொல்ல,
‘சரிடா முதல்ல என் மருமகள கூட்டிட்டு வீட்டுக்கு வா’ என தமிழ் அம்மா சொல்லி விட்டு அவனது அப்பாவிடம் அந்த சந்தோஷமான விசயத்தை சொல்ல போனார்.
நிலாவும் தன் அம்மா விடம் நடந்ததை சொல்ல அவரும் சந்தோஷமாக இருவரையும் வாழ்த்தினார்.
தமிழ் கவின் யாழினிக்கு போன் செய்து நடந்ததை சொல்ல, ‘செம டா. எப்டியோ என்னால ஆரம்பிச்சது நான் குடுத்த ஐடியாவாலயே முடிஞ்சிருச்சு.’ என்று கவின் சொல்ல,
‘அப்பாடா இப்ப தான்டா நிம்மதியா இருக்கு . சீக்கிரம் கல்யாணத்த பண்ணு’ என்றாள் யாழினி.
தமிழ், நிலாவின் காதல் கதை முடிந்து. கல்யாண கதை தொடர்கிறது.
அனைவரும் தமிழ் நிலாவின் திருமணத்திற்கு வந்து வாழ்த்த அழைக்கிறோம்.
தொடரும்…
