Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 15.

ஆசை ஆசையாய் காதலித்தவளை மறந்த தமிழ். 

 

தமிழுக்காக நிலா வாசலில் காத்திருக்க தமிழிடமிருந்து போன் வந்தது.

 



Advertisement

இனி,

 

‘ஏன்பா இவ்ளோ நேரம். எப்ப வருவ’ என நிலா கேட்க,

Advertisement

 

Advertisement

‘ஹலோ மேடம் நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். இந்த போன் ஸ்க்ரீன் சேவர்ல  உங்க நம்பர் இருந்துச்சு. அதான் உங்களுக்கு கூப்டறோம். இந்த போன் காருக்கு லாரில ஆக்சிடண்ட் ஆயிடுச்சு. தலைல அடிபட்டு ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல. பயப்படாதீங்க காப்பாத்தியாச்சு. பொறுமையா பதட்டப்படாம வாங்க ‘, என ஹாஸ்பிடல் பேரை சொல்லி விட்டு போனை கட் செய்ய,

 

நிலா ஒரு நிமிடம் உணர்ச்சி அற்றவளாகி பின் சுதாரித்து  தமிழ் அம்மா அப்பா விடம் சொல்லி அவர்களை கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வேகமாக சென்றாள்.

Advertisement

 

ஐசியு வில் இருந்த தமிழைப் பார்த்து விட்டு டாக்டரிடம் தமிழை பற்றி நிலாவும், தமிழ் பெற்றோரும்  விசாரிக்க,

 

‘உயிருக்கு ஆபத்தில்ல  காப்பாத்தியாச்சு. ஆனா தலைல பலமா அடிபட்டிருக்கனால  அவருக்கு நாலஞ்சு வருஷத்துல நடந்த எதுவும் ஞாபகத்தில இருக்காது’, என டாக்டர் சொல்ல,

 

‘என்ன டாக்டர் சொல்றீங்க.’ என மூவரும் அதிர்ச்சியில் கேட்க,

 

‘ஆமாங்க இப்பத்திக்கு இது தான் அவர் நிலைமை . வேற வழியில்ல. நீங்களா நடந்ததை சொல்லி ஞாபகம் வர வைக்க ட்ரை பண்ணுங்க.’, என்றார் டாக்டர்.

 

‘எப்ப இந்த பிரச்சனை இவருக்கு குணமாகும்’, என அழுது கொண்டே நிலா கேட்க,

 

‘சொல்ல முடியாது. நாளைக்கு வரலாம். ஒரு மாசத்துல.வரலாம். இல்ல வரமாலே கூட போகலாம்’, என டாக்டர் சொல்ல மூவரும் உடைந்து போயினர்,

 

‘ஆன்டி,  அங்கிள் அவரு உயிர் பிழச்சதே பெரிய சந்தோஷம். அதனால மத்ததை பத்தி அப்புறம் பாக்கலாம். தைரியமா இருங்க ‘ என நிலா சொல்ல,

 

‘ஆமா நிலா அத தான் நாங்களும் சொல்ல வந்தோம். தலைக்கு வந்தது தலைப்பா வோட போச்சுன்னு நினைச்சிட்டு  அடுத்து என்ன பண்றதுன்னு யோசிப்போம்.’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘சரி அங்கிள். நான் போய் கேஸ் பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வந்தறேன்’, என நிலா சொல்லி விட்டு சென்று போலீஸிடம் நடந்ததை கேட்டு விசாரித்து விட்டு பார்மாலிட்டீஸை முடித்து விட்டு வர அங்கிருந்த விநாயகரிடம் சென்று,

 

‘எங்க அப்பாவ எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி தமிழை பிரிக்காம திருப்பி குடுத்ததுக்கு உனக்கு நன்றி சொல்றதா,   இல்ல ஆசை ஆசையாய் காதலிச்ச என்னை யாருன்னு தெரியாத அளவுக்கு மறக்க வச்சிட்டியேன்னு உன் மேல கோப படுறதானு தெரியல.’, என  நிலா அழுது தீர்க்க தமிழ் அம்மா அங்கு வந்து சமாதானம் செய்தார்.

 

நிலா தன் அம்மாவுக்கும் தம்பிக்கும் போன் பண்ணி நடந்ததை சொல்ல இருவரும் கிளம்பி வந்தனர்.

 

கவின் எதேச்சேயாக தமிழுக்கு கிளம்பியாச்சான்னு கேக்க போன் செய்ய நடந்ததை நிலா சொல்ல கவினும் யாழினியும் உடனே ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி வந்து தமிழ் அப்பா, அம்மாக்கும் நிலாவுக்கும் ஆறுதல் சொல்லி அங்கேயே இருந்தனர்.

 

அடுத்த நாள் தமிழ் கண் முழிக்க அனைவரும் அரூகிலிருக்க டாக்டர் வந்து செக் செய்ய தமிழ் தன்  அம்மாவின் கைகளை பயத்தில் இறுகப் பிடித்துக் கொண்டான்.

 

‘தமிழ் இப்ப நீங்க பர்பெக்ட்லி ஆல்ரைட். ஆனா தலைல பலமா அடிபட்டதால உங்களுக்கு மூளைக்கு போற நரம்பு பாதிக்கப் பட்ருக்கு. அதனால கடந்த நாலஞ்சு வருஷத்துல நடந்த எதுவும் உங்களுக்கு ஞாபகம் இருக்காது. உங்களுக்கு அது ஞாபகத்துல வரலாம் இல்ல வராமலே கூட போகலாம். நீங்க செய்ய வேண்டியது நடந்ததை கேட்டு அத ஞாபகத்துல கொண்டு வர முயற்சி பண்ணுங்க. சில டைம் அதனால பயங்கறமா தலை வலிக்கும். அப்ப நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். கொஞ்ச கொஞ்சமா ட்ரை பண்ணுங்க. அப்புறம் நீங்க எல்லாரும் அவரு கூட இருந்து அவருக்கு ஞாபகம் வர ஹெல்ப் பண்ணுங்க. மத்தபடி உங்களுக்கு ஒன்னுமில்ல. நீங்க போகலாம்.’, என டாக்டர் சொல்ல,

 

‘ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்’, என நிலா சொல்லி விட்டு டாக்டருடன் சென்று டிஸ்ஜார்ஜ் சமரி வாங்கி விட்டு பில் பே பண்ண செல்ல கவினும் அவளுடன் சென்றான்.

 

அனைத்தும் முடித்து விட்டு  தமிழை வீட்டுக்கு கூட்டிச் சென்றனர்.

 

வீட்டுக்கு கூட்டிச் சென்றதும் நிலா ஆர்த்தி எடுக்க தமிழ் உள்ளே உட்கார்ந்ததும் கேட்ட முதல் கேள்வி,

 

‘ராஜி ஹாஸ்பிடலயே கேக்கனும்னு நினச்சேன். இவங்க யாரு’, என நிலாவை பார்த்து கேட்க,

 

நிலா அழுது கொண்டே, ‘ஆன்டி நான் எல்லாத்துக்கும் காபி போட்டுட்டு வந்தறேன்’ என சொல்லி விட்டு உள்ளே செல்ல யாழினி அவளை சமாதானப்படுத்த அவள் பின்னால் சென்றாள்.

 

‘ம் நீ காதலிச்சு கட்டிகிட்ட உன் பொண்டாட்டி டா’. என தமிழ் அம்மா சொல்ல,

 

‘நிஜமாவா . எனக்கு சுத்தமா ஞாபகமில்ல ராஜி.’, என தமிழ் சொல்ல,

 

‘ஒரு நிமிஷம் இரு’, என்று சொல்லி கவின் தன் போனை எடுத்து வந்து அதில் இருந்த தமிழ் நிலா திருமண வீடியோஸ், போட்டோஸை தமிழிடம் காட்ட,

 

அதை வாங்கி வேறு ஒருவரது திருமண போட்டோவை பார்ப்பது போல பார்த்தான் தமிழ்.

 

‘ஆமா எல்லா போட்டோஸ்லயும் நான் ஏன் இவ்ளோ ஹேப்பியா இருக்கேன்’, என தமிழ் கேட்க

 

‘அதுவா நீ கஷ்டப்பட்டு காதலிச்ச பொண்ணயே கல்யாணம் பண்ணி கிட்டதனால அவ்ளோ சந்தோஷம் உனக்கு’ , என கவின் சொல்ல,

 

‘நிஜமாவா நான் லவ் பண்ணேன்னு என்னால நம்பவே முடியல. ஏனா அவ்ளோ சீக்கிரம் நான் யார் கூடவும் அட்டேச் ஆக மாட்டேன் .  அப்புறம் எப்டி இவங்கள’, என தமிழ் இழுக்க,

 

‘அது ஒரு பெரிய கத. ‘ என கவின் ஆரம்பித்து தமிழிடம் சொல்லிக் கொண்டிருந்தான்,

 

‘நிலா நீ ஒன்னும் கவலப்படாத. தமிழுக்கு சீக்கிரம் குணமாயிடும் . நீ இப்டி யோசிச்சு பாரு. உனக்கு தமிழ மறுபடியும் லவ் பண்ண,  அவனை லவ் பண்ண வைக்க உனக்கு ரெண்டாவது சான்ஸ் கிடச்சிருக்குனு நினச்சுக்கோ’, என யாழினி சமாதானப்படுத்த இருவரும் காபி போட்டு எடுத்துக் கொண்டு வர கவின் தமிழின் காதல் கதைய அவனுக்கே சுருக்கமாக ரீவைண்ட் செய்து முடித்தான்.

 

‘தமிழ் தம்பி நான் தான் நிலாவோட அம்மா. இது அவ தம்பி. நீங்க எங்களுக்கு எவ்ளோ உதவி பண்ணி இருக்கீங்க தெரியுமா’, என நிலா அம்மா எமோசனலாக அவர் பங்குக்கு நடந்ததை சொன்னார்.

 

‘தமிழ் சார் உங்கள எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா. எங்க அக்கா உங்கள லவ் பண்றேன்னு சொல்லும் போது நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேனு உங்களுக்கு தெரியாது. நீங்க எங்கிட்ட ப்ரெண்டு மாதிரி தான் பழகுவீங்க. அது கூட உங்களுக்கு ஞாபகமில்லையா’, என நிலா தம்பி அழுது கொண்டே கேட்க,

 

‘சாரி நீங்க சொல்றது எல்லாம் வெறும் இன்பர்மேசனா தான் இருக்கு. என்னால நிஜமா ஃபீல் பண்ண முடியல. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க’  என தமிழ் கேட்க,

 

‘ஆமா அவரு இப்பத்திக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். மத்ததை அப்புறம் பாத்துக்கலாம். டேய் நீ அம்மாவ கூட்டிட்டு ஹோட்டலுக்கு கிளம்பு. ‘, என நிலா சொல்ல அவள் தம்பியும் அம்மாவை கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

‘சரி தமிழ் நாங்களும் கிளம்பறோம். யாழினி ‘, என கவின் கூப்பிட ,

 

‘யாழினிய அவ வீட்ல ட்ராப் பண்ணிரு கவீன்’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா நீ என்ன கத கேட்ட. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு உனக்கு முன்னாடியே. அதுக்கு காரணமே நீயும் நிலாவும் தான். ‘, என கவின் சொல்ல,

 

‘சாரிடா நீ சொன்னத சரியா கேக்கல. திரும்ப இன்னொரு முறை சொல்றியா. ஆமா நீ யாழினிய அவளுக்கு கூட சொல்லாம லவ் பண்ணது ஞாபகத்துல இருக்கு. அப்புறம் எப்டி அவளுக்கு சொல்லி கல்யாணம் பண்ணிகிட்ட’, என தமிழ் கேட்க,

 

‘அப்பா சாமி ஆள விடு. ஃப்ரியா இருக்கும் போது வந்து சொல்றேன்.பாய்’ என கவின் கிளம்ப,

 

அங்கு வந்த யாழினி, ‘நிலா தமிழையும் ஆன்டி அங்கிளையும் பத்திரமா பாத்துக்க. ஆன்டி , அங்கிள் கவலைப்படாதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நாங்க அடிக்கடி வறோம். தமிழ் உடம்பு பாத்துக்க.  பாய்’, என சொல்லி யாழினி கிளம்ப கவினும் யாழினியும் அங்கிருந்து கிளம்பினர்.

 

தமிழ் தன் அறைக்கு செல்ல,  தமிழ் அம்மாவும் நிலாவும் சமையலறையில் பேசிக் கொள்ள, தமிழ் அப்பா காலாற நடந்து வர வெளியே சென்றார்.

 

தமிழுக்கு நேரா நேரத்திற்கு உணவும், மருந்தும் நிலா குடுக்க தமிழும் சிறிய தயக்கத்துடன் அதை வாங்கி கொண்டான்.

 

இரவு எல்லா வேலைகளையும் முடித்து விட்டு நிலா வர,

 

‘ஏங்க சாரி உங்க பேரு என்ன ‘, என தமிழ் கேட்க,

 

‘நிலா’, என்று நிலா சொல்ல,

 

‘ம் நிலா. உங்கள நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்றாங்க. ஆனா அது எதுவும் எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. ட்ரை பண்ண ‘, என தமிழ் கேட்க,

 

‘கவலபடாதீங்க  நான் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன். நானும் உங்கள லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்ன உங்களுக்கு எதுவும் ஞாபகத்துல இல்ல, எனக்கு அதுமட்டும் தான் ஞாபகம் இருக்கு. உங்க மெமரிய ரெக்கவர் பண்ண நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். இப்பைல இருந்து நீங்களும  நானும் ப்ரெண்ட்ஸ். ஓகே வா’, என நிலா கேட்க,

 

‘ரொம்ப தேங்க்ஸ்ங்க. என் நிலைமைய புரிஞ்சுக்கிட்டதுக்கு. அப்புறம் நான் அவ்ளோ சீக்கிரமா யார் கிட்டயும் பழக மாட்டேன். ஆனா உங்க கூட ஈசியா என்னால கனெக்ட் ஆக முடியுது ஏன்னு தெரியல. இன்னொரு வாட்டி உங்களுக்கு தேங்க்ஸ் மை ப்ரெண்ட்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி குட் நைட். நல்லா தூங்குங்க எதாவது வேனும்னா கீழே தான் நான் படுத்திருக்கேன் கூப்டுங்க . சரியா ‘, என்று நிலா சொல்ல தமிழும் தலையாட்ட இருவரும் தூங்கினர்.

 

அடுத்த நாள் காலையில் தமிழ் உடம்பை துடைத்து விட தண்ணீரும், துணியும் எடுத்துக் கொண்டு வர அதைப் பார்த்த தமிழ் கூச்சப்பட்டு  நகர்ந்து கொண்டு, ‘நிலா இத  ராஜிய பண்ண சொல்றீங்களா’, என கேட்க,

 

‘ஆன்டி கீழே இருக்காங்க. இப்ப என்ன உங்களுக்கு. கூச்சமா இருந்தா என்ன நர்ஸ்னு நினச்சிக்குங்க. ம் வேனா வேனா உங்களுக்கு தான் டாக்டர், நர்ஸ், ஹாஸ்பிடல் எல்லாம் பயமாச்சே. ப்ரெண்டா உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு நினச்சுக்குங்க. ‘, என சொல்லி விட்டு நிலா துடைத்து விட பதில் எதுவும் சொல்ல முடியாமல் தமிழ் அமைதியாய் இருந்தான்.

 

தமிழ் மீண்டும் நிலாவை காதலிப்பானா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!