Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 18.

தமிழின் காதலுக்காக ஏங்கும் நிலா.

 

காலையில் எழுந்து கிளம்பி தமிழும், நிலாவும் ஆபீஸ்கு சென்றனர்.

 



Advertisement

இனி,

 

‘நிலா எல்லாம் ரெடியா. போலாமா. ஆமா ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துட்டமா’, என தமிழ் கேட்க,

Advertisement

 

Advertisement

‘இந்த ரெண்டு ஃபைல்ஸ் தான. ‘, என அதை காட்டி கேட்க,

 

‘அதே தான். சரி வா கிளம்பலாம்’, என தமிழ் சொல்ல இருவரும் புது பர்ஃப்யூம் புராஜக்ட்க்கு தேவையான பொருட்களை  மொத்தமாக பர்சேஸ் பண்ண  ஆர்டர் போட அதை விற்கும் கம்பெனிகளுக்கு ஒவ்வொன்றாக செல்ல இருவரும் ஆபீசிலிருந்து கிளம்பினர்.

Advertisement

 

பல கம்பெனிகள் ஏறி இறங்கி சேம்பிள்ஸ் வாங்கி பார்த்து செலக்ட் செய்து பொருட்களை ஆர்டர் செய்து கொண்டிருந்தனர்.

 

கடைசியாக ஒரு பூந்தோட்டத்துக்கு சென்று மெய்ன் இங்கிரிடியண்டான வித்தியாசமான வாசம் கொண்ட அந்த பூக்களை ஓனரிடம் ஆர்டர் செய்ய சென்றனர்.

 

‘நிலா இந்த ப்ளேஸ் செம சூப்பரா இருக்கு இல்ல. பாக்கவே கலர்ஃபுல்லா இருக்கு’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா தமிழ் அதோட வாசம் கூட ரொம்ப அருமையா இருக்கு. கண்டிப்பா நம்ம பர்ஃப்யூமும் சூப்பரா வரும்’, என்றாள் நிலா.

 

‘வாங்க வாங்க ‘, என வரவேற்று ஓனர் அவர்களை உள்ளே அழைத்து செல்ல இருவரும் சென்றனர்.

 

‘அப்புறம் டீ, காபி , ஜீஸ் எது சாப்டறீங்க ‘, என தண்ணீரை கொடுத்து விட்டு கேட்க,

 

‘பரவால்லங்க எதுவும் வேண்டாம். ஆமா எப்டிங்க இவ்ளோ சிம்பிளா ஒரு கிராமத்துல இத வச்சிருக்கீங்க ‘, என தமிழ் ஆச்சர்யமாக கேட்க,

 

‘என் சொந்த ஊர் இது தான். தொழிலும் விவசாயம் தான். இடைல கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு போனேன். சம்பாதிச்சேன். இப்ப ஓரளவுக்கு செட்டிலாகிட்டேன். அதான் திரும்ப இங்கயே வந்து இத ஆரம்பிச்சு செஞ்சுகிட்டு இருக்கேன். நீங்க எப்படி இந்த தொழிலுக்கு வந்தீங்க’, என அந்த ஓனர் கேட்க,

 

‘எனக்கு பெரிய கதையெல்லாம் இல்ல . அப்பா வோட பிஸ்னஸ் இது. இந்த கம்பெனிய இவ்ளோ தூரம் கொண்டு வர அவரு ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. அத சின்ன வயசுல இருந்து நான் பாத்து வளந்தேன். அறிவு, தகுதி ரெண்டையும்  வளத்துக்க டிகிரி முடிச்சேன். அப்டியே பிஸ்னஸ்ல என்டர் ஆகிட்டேன்.’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன தான் உங்க அப்பா பிஸனஸ்னாலும் நீங்க வந்து புதுசா நிறைய சாதிச்சிருக்கீங்கன்னு நான் கேள்விப் பட்டேன். உங்கள் கூட பிஸ்னஸ் பண்றதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஆமா இவங்க ‘, என நிலாவை காட்டி அந்த ஓனர் கேட்க,

 

‘சாரி, இது என் வைஃப் நிலா’, என தமிழ் சொல்ல,

 

‘வணக்கம்மா. நீங்களும் கூடவே பிஸ்னஸ்ல அவருக்கு துணையா  இருப்பீங்க போல. ரொம்ப சந்தோஷம். அப்புறம் இது என்னோட ஃபார்ம் ஹவுஸ். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு ரெண்டு பேரும் காலேஜ் படிக்கறாங்க . நான் வாரத்துக்கு ஒரு தடவ இங்க வருவேன். நீங்க மறக்காம என் வீட்டுக்கு வரனும். அங்க என் மனைவி, பசங்க எல்லாரையும் இன்ட்ரடியூஸ் பண்ணி வக்கறேன்.’, என அந்த ஓனர் சொல்ல,

 

‘கண்டிப்பா ஒரு நாள் வறோங்க.’, என்றாள் நிலா.

 

‘சரி நம்ம பிஸ்னஸ்க்கு வருவோம். நான் முதல்ல பேசுன மாதிரி எத்தனை வருஷம் , எவ்ளோ ரேட் எல்லாம் போட்டு பான்டு பேப்பர் ரெடி பண்ணீட்டீங்களா’, என அந்த ஓனர் கேட்க,

 

‘ரெடியா இருக்கு. நீங்க படிச்சு பாத்துட்டு சைன் பண்ண வேண்டியது தான். ‘, என நிலா வடம் இருந்து பைலை வாங்கி பேப்பர்ஸை எடுத்து அவரிடம் தமிழ் கொடுக்க  அதை நன்றாக படித்து விட்டு, ‘

 

ஓகே எல்லாம் கரெக்டா இருக்கு’, என சொல்லி அந்த ஓனர் சைன் பண்ணித்தர அதை வாங்கி இரண்டு ஒரிஜனலிலும் தானும் கையெழுத்து போட்டு விட்டு அவருக்கு ஒரு ஒரிஜினல் காப்பியைக் கொடுத்து விட்டு தனக்கு ஒன்றை வைத்துக் கொண்டான் தமிழ்.

 

‘சார் இந்த பூந்தோட்டத்த கொஞ்ச நேரம் சுத்தி பாக்கலாமா’, என நிலா அந்த ஓனரிடம் கேட்க,

‘தாராளமா போய் பாருங்க.’, என அவர் சொல்ல இருவரும் சென்றனர்.

 

‘நிலா இத பாக்கும் போது எனக்கும் இது மாதிரி ஒரு ஃபார்ம் ஹவுஸும், ப்ளவர் கார்டனும்  ரெடி பண்ணனும்னு தோனுது. ரொம்ப அமைதியா அழகா இருக்கு’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா தமிழ் இத தான் நானும் சொல்ல வந்தேன். கவலையே படாதீங்க சீக்கிரமா இதே மாதிரி நாம ரெடி பண்றோம்’, என நிலா சொல்ல,

 

‘சரி வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பூக்கு நடுவுல நின்னு போட்டோ புடிக்கலாம்’, என தமிழ் சொல்ல இருவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் போட்டோ எடுக்கும் போது,

 

‘பூவுக்கு இடைல நீ நிக்கறப்ப அது அழகு கொஞ்சம் கம்மியா தெரியுது நிலா’, என தமிழ் தனக்குள் சொல்லிக் கொள்ள,

 

‘இத்தனை அழகான பூ இருந்தும் கண்ணு அதுக்கு இடைல இருக்குற உன்ன மட்டும் தான் பாக்குது’, என நிலாவும் தனக்குள் சொல்லிக் கொள்ள கடைசியில் இருவரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு நடக்க தமிழ் அந்த குறுகிய நடைபாதையில் தடுமாறி கீழே விழப் போக நிலா வேகமாய் தமிழை கீழே விழாமல் பிடித்துக் கொள்ள தமிழின் விரல் கேமராவில் பட்டு அதையும் அழகாக போட்டோ பிடித்தது.

 

‘தேங்க்ஸ் நிலா. அப்புறம் இங்க பாறேன் இந்த போட்டோவ. படத்துல வர ரொமேன்டிங் கப்புல்ஸ் மாதிரி இல்ல ‘, என தமிழ் கேட்க,

 

‘எடுத்த போட்டோலயே இது தான் சூப்பரா இருக்கு’, என்றாள் நிலா.

 

‘சரி நாங்க அப்ப கிளம்பறோம். நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரனும்’, என நிலாவும் தமிழும் சொல்ல அவரும் சரி என்று சொல்லி அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

 

காரில் தமிழ் பேசிக் கொண்டே வர நிலா, ‘ஏங்க ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இல்லைன்னா மெடிக்கல் ஷாப்ல கொஞ்சம்  நிறுத்தறீங்களா’, என கேட்க,

 

‘ஏன் என்னாச்சு நிலா’, என தமிழ் கேட்க,

 

‘ப்ளீஸ் தமிழ்’, என தன் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு நிலா சொல்ல ,

 

‘ஓகே ஓகே’, என்று சொல்லி வேகமாக அருகில் இருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தமிழ் நிறுத்தினான்.

 

‘ஒரு நிமிஷம் இதோ வந்தறேன்’, என சொல்லி தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கடைக்குள் நிலா செல்ல தமிழ் வெளியே வெய்ட் பண்ணிக் கொண்டிருந்தான்.

 

உள்ளே போனதும் நிலா ஸ்டே ஃப்ரீ பேடை வாங்கிக் கொண்டு ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கு என கடையில் கேட்டு அங்கு சென்று விட்டு காருக்கு வந்தாள் நிலா.

 

‘ம் போலாம் தமிழ்’, என நிலா சொல்ல,

 

‘என்னாச்சு நிலா’, என பதட்டத்துடன் தமிழ் கேட்க,

 

‘அது வந்து’, என சொல்லி நிலா தன் ஹேன்ட் பாக்கை திறந்து காட்ட அதை பார்த்து நிலா பீரியட்ஸ் ஆகி இருப்பதை புரிந்து கொண்டான் தமிழ்,

 

‘ரொம்ப பெயினா இருக்கா. பெய்ன் கில்லர் வாங்கவா நிலா’, என தமிழ் கேட்க,

 

‘இதுக்கெல்லாம் பெய்ன் கில்லர் யூஸ் பண்ண கூடாதுப்பா. நான் அட்ஜஸ் பண்ணிக்கிறேன். தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்’, என நிலா சொல்ல,

 

‘இன்னும் த்ரி டூ ஃபோர் ஹவர்ஸ் ஆகுமே. அதுவரைக்கும் ஓகே வா’, என தமிழ் கேட்க,

 

‘வேற வழியில்ல பாத்துக்கலாம் பா’, என நிலா சொல்ல தமிழ் காரை எடுத்தான்.

 

கொஞ்ச தூரம் போனதுமே நிலா டயர்டில் தூங்கிப் போக தமிழ் அடிக்கடி அவளை பார்த்த படி காரை ஓட்டினான்.

 

தமிழ் பாதி வழியில் டீ குடிக்க காரை நிறுத்தினான். அவனுக்கு ஒரு டீ சொல்லி விட்டு தன் போனை எடுத்து இந்த மாதிரி சமயத்தில் என்ன குடிக்கலாம் என சேர்ச் பண்ண  அதில் இதமாக டீ, காபி, சூப் என எது வேண்டுமானாலும் குடிக்கலாம் என்று வர அவளுக்கும் ஒரு டீ சேர்த்து சொல்ல டீ ரெடி ஆனதும் அவனது டீயை குடித்து விட்டு நிலாவுக்கு இன்னொரு டம்ளர் சேர்த்து வாங்கி அதை இரண்டு தடவை ஆத்தி விட்டு தொட்டு பார்த்து பின் காருக்கு சென்று நிலாவை எழுப்பி குடிக்கக் கொடுத்தான்.

 

‘நிலா சூடு ஓகே வா. இல்ல இன்னும் ஆத்தவா. கூகுள கேட்டா இதமா எது வேனா இந்த டைம்ல .குடிக்கலான்னு இருந்துச்சு. அதான் வாங்குனேன்’, என தமிழ் சொல்ல,

 

‘இதுவே ஓகே தான் பா.’, என சொல்லி விட்டு தமிழைப்  பார்ததுக் கொண்டே அந்த டீயை நிலா குடிக்க ,

 

‘வேற எதாவது வேனுமா நிலா சாப்ட’, என தமிழ் கேட்க,

 

‘இல்லப்பா வீட்டுக்கு போயிடலாம்’,என சொல்லி டீ டம்ளரை நிலா தர தமிழ் அதை வாங்கி கடையில் குடுத்து விட்டு பில் பே பண்ணி விட்டு வந்து காரில் ஏறி,

 

‘நிலா ஒரு நிமிஷம்’, என சொல்லி அவளது சீட்டை கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி சாய்த்து விட்டு, ‘ம் இப்ப நல்லா சாஞ்சுக்கோ’, என சொல்லி விட்டு காரை எடுத்தான்.

 

நிலா வலியில் தூங்க முடியாமல் வயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டு சாய்ந்த படி வர அதை பார்த்த தமிழ்.

 

‘நிலா பெய்ன் ஜாஸ்தியா இருந்தா சொல்லு ஹாஸ்பிடல் போலாம். எனக்கு உன்னை இப்டி பாக்க கஷ்டமா இருக்கு’, என தமிழ் கேட்க,

 

‘தமிழ் இது எப்பவும் வரது தான். பயப்படாதீங்க. ஹாஸ்பிடல்லாம் ஒன்னும் போக தேவை இல்ல. கொஞ்ச நேரத்துல அதுவே குறைஞ்சிரும்’  என நிலா சொல்ல,

 

‘சரி நீ ரொம்ப வலிச்சா என்னை அழுத்தி புடிச்சிக்கோ’, என சொல்லி தமிழ் அவளது கையை எடுத்து தன் தொடையில் வைத்துக் கொண்டு அவள் தலையை தடவிக் குடுக்க,

 

‘தமிழ் நீ இப்டி எல்லாம் பாசமா பாத்துக்கறதா இருந்தா இன்னும் எத்தன வலியை வேணாலும் நான் தாங்கிக்க ரெடி. இன்னும் எத்தன தடவ உனக்கு எல்லாம் மறந்து போனாலும் சரி உன்னை எங்கிட்ட இருந்தும் என்னை உங்கிட்ட இருந்தும் எதுவும் பிரிக்க முடியாது. முன் ஜென்மத்துல எனக்கு நம்பிக்கை இல்ல உன்ன பாக்குற வரைக்கும். உன்ன பாத்ததுக்கு பிறகு விட்ட குறை தொட்ட குறை ன்னு சொல்லுவாங்கல்ல அதுமாதிரி உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு தோனுச்சு. போன ஜென்மம் இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழேழு ஜென்மத்துலயும் உன் கூட சேர்ந்து வாழ ஆசையா இருக்குப்பா’, என நிலா தனக்குள் நினைத்த படி தமிழை பார்த்தவாறு சாய்ந்து கொண்டே தூங்கி போனாள்.

 

நிலாவின் ஆசை நிறைவேறுமா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!