Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 19.

நிலாவின் வசம் கொஞ்சம் கொஞ்சமாய் சாயத் தொடங்கும் தமிழ். 

 

இருவரும் வீடு வந்து சேர நிலா காரில் தூங்கிக் கொண்டிருக்க தமிழ் மெதுவாக அவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.

 



Advertisement

இனி,

 

‘நிலாக்கு என்னாச்சு டா’, என தமிழ் அம்மா, அப்பா கேட்க,

Advertisement

 

Advertisement

‘ஸ் வந்து சொல்றேன்’, என தமிழ் சைகை காட்டி விட்டு ரூமுக்கு சென்று நிலாவை படுக்க வைத்து விட்டு தன் கையை எடுக்க முயல நிலா அவன் கையை பிடித்து தூக்கத்தில் இழுக்க அவன் அவள் மேல் விழ அவள் உதட்டின் மேல் அவன் உதடு பட்டது. சிறிது நேரம் அப்படியே உறைந்து போன தமிழ் பின் சுதாரித்துக் கொண்டு, ‘இவ கிட்ட ஏதோ இருக்கு. கொஞ்சம் ஜாக்ரதையா தான் இருக்கனும். இல்ல நம்ம கற்புக்கு உத்தரவாதம் இல்ல டா தமிழு’, என தனக்குள் சொல்லிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

 

‘இப்ப சொல்லு நிலாக்கு என்னாச்சு’, என தமிழ் அம்மா கேட்க,

Advertisement

 

‘ஒன்னுமில்ல ராஜி பீரியட்ஸ் ஸ்டொமக் பெய்ன். பாவம் ரொம்ப வலில கஷ்டபட்டா. இப்ப தான் தூங்குனா அதான் எழுப்ப வேணாம்னு தூக்கிட்டு வந்தேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி போன காரியம் என்ன ஆச்சு தமிழ்’, என தமிழ் அப்பா கேட்க தமிழ் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தான்.

 

தமிழ் அம்மா இருவருக்கும் ஈவ்னிங் ஸ்னேக்ஸும் , டீயும் கொண்டு வர அதை சாப்பிட்டுக் கொண்டே  பேசினர்.

 

‘அப்பா அப்புறம் கடைசியா அந்த ஃப்ளவர் கார்டனுக்கு போனோம். அந்த ஓனர் நல்லா எங்க கூட பேசுனாரு. அப்புறம் அந்த இடமும் செமயா இருந்துச்சு.  ஒரு நிமிஷம் அங்க நாங்க போட்டோ புடிச்சோம். ராஜி நீயும் வா’, என சொல்லி தமிழ் தன் போனை எடுத்து அவர்களிடம் வரிசையாக காட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த தமிழ் கீழே விழாமல் நிலா பிடித்த போது ஏதேச்சயாக பிடித்த போட்டோ வர,

 

‘டேய் தமிழ் பாத்த எல்லா போட்டோவை விட இது தான் சூப்பரா இருக்கு’, என தமிழ் அப்பா சொல்ல தமிழ் அம்மா சிரிக்க,

 

‘வெளில யாரோ கூப்டறாங்க நான் போய் பாத்துட்டு வரேன்’, என சொல்லி தமிழ் நைசாக நழுவி செல்ல தமிழ் அப்பா அந்த போட்டோவை தன் மொபைல்க்கு ஷேர் செய்து விட்டு மீது போட்டோக்களை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

நன்றாக தூங்கி எழுந்து கீழே வந்த நிலா அங்கு உட்கார்ந்து ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த தமிழிடம் , ‘தமிழ் எப்போ நம்ம வந்தோம். நான் எப்டி மேல போய் பெட்ல படுத்தேன். எதுவுமே சுத்தமா ஞாபகமில்ல ‘, என கேட்க,

 

‘கஷ்டப்பட்டு தூக்கிட்டு போனது நானு. இவங்களே போய் படுத்தாங்களாம். பத்தாதுக்கு என்னை இழுத்து கிஸ் பண்ணிட்டு எதுவும் ஞாபகத்துல இல்லையாம் மேடத்துக்கு’  என தனக்குள் நினைத்துக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து இருக்க,

 

‘நிலா எந்திருச்சிட்டியா . இப்ப பரவால்லயா ம்மா’, என தமிழ் அப்பா கேட்க,

 

‘ம் இப்ப ஓகே அங்கிள். நல்லா தூங்கிட்டனா டைம் போனதே தெரியல. நான் போய் ஆன்டிக்கு ஹெல்ப் பண்றேன்’, என நிலா சொல்லி உள்ளே சென்றாள்.

 

‘வா நிலா வலி இப்ப பரவால்லயா. இரு டீ போடறேன்’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ம் பரவால்ல ஆன்டி. குடுங்க ஆன்டி நானே டீ போடறேன்’, என நிலா.சொல்ல,

 

‘பரவால்ல உட்காரு. இந்த மாதிரி நேரத்துல அதிகமா வெளிய சுத்தாத. அவன் அப்படி தான் வேலைன்னு போய்ட்டா அவனயும் பாத்துக்க மாட்டான். அடுத்தவங்க நிலைமையையும் தெரிஞ்சுக்க மாட்டான். ‘, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ச்சே ச்சே அப்டி எல்லாம் இல்ல ஆன்டி. டூ டேஸ் முன்னாடியே ஆகிட்டேன். அதான் எனக்கும் ஐடியா இல்ல. ஆனா அவருக்கு தெரிஞ்சதும் என்னை நல்லா பாத்துக்கிட்டாரூ. ஆனா பாவம் என்ன பண்ணனும்னு தெரியல அவருக்கு கொஞ்சம் பயந்துட்டாரு.’, என நிலா சொல்ல,

 

‘அவனுக்கு இதெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைல அதான். ஆனா உன்ன நல்லா கவனுச்சிக்கிட்டானு கார்ல இருந்து தூங்குற உன்ன எழுப்பாம தூக்கிட்டு வரும் போதே  எங்களுக்கு தெரிஞ்சிச்சு’, என தமிழ் அம்மா சொல்ல டீ குடித்துக் கொண்டிருந்த நிலாக்கு அதைக் கேட்டு புறையேற,

 

‘பாத்து நிலா’, என தமிழ் அம்மா சொல்ல நிலா டீயை குடித்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

 

‘அதான் நாம கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லல. நாமளும் எதுவும் தெரியாத மாதிரியே இருத்துக்க வேண்டியது  தான்’, என நிலா தனக்குள் சொல்லிக் கொண்டிருக்க அவளது போன் அடித்தது.

 

‘நிலா நிலா’, என தமிழ் கூப்பிட நிலா வராததால் அவள் போனை எடுக்க அதில் காலேஜ் ப்ரெண்ட் தருண் என காலர் ஐடி வர அதை கொண்டு போய் நிலாவிடம் குடுத்தான்.

 

‘தேங்க்ஸ் தமிழ்’, என சொல்லி விட்டு நிலா போனை அட்டன்ட் பண்ணி பேசினாள்.

 

‘ஹாய் தருண். எப்டி இருக்கப்பா. வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க . பேசி ரொம்ப நாளாச்சு. என்ன ஏதும் குட் நியூஸா. மேரேஜ்’, என நிலா கேட்க,

 

‘ஹாய் நிலா. ரொம்ப நல்லா இருக்கோம். வேலைல கொஞ்சம் பிஸி அதான் கூப்பிட முடியல. நீ கூப்பிட வேண்டியது தான. அப்புறம் ரொம்ப சாரி உன் மேரேஜ்க்கு அன்னிக்கு என்னால ரொம்ப நேரம் இருக்க முடியல. எப்டி போகுது மேரேஜ் லைஃப்’, என தருண் கேட்க,

 

‘ம் நல்லா போகுது. நான் உன் மேரேஜ் பத்தி கேட்டேன்’, என நிலா கேட்க,

 

‘ம் வீட்ல பாத்துகிட்டு இருக்காங்க நிலா. நான் இப்ப எதுக்கு கூப்டேன்னா என் சிஸ்டர்க்கு மேரேஜ் வச்சிருக்கோம் நேர்ல வர முடியல. மறக்காம வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்துரு. பத்திரிக்கை வாட்ஸப்ல மெசேஜ் பண்ணி இருக்கேன்’, என தருண் சொல்ல,

 

‘சரி ஓகே நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்ட்டு இருக்கில்ல’ என நிலாவும் தருணும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர்.

 

‘தமிழ் என் ப்ரென்டோட சிஸ்டருக்கு அடுத்த வாரம் மேரேஜ். நீங்களும் வறீங்களா’, என நிலா கேட்க,

 

‘அடுத்த வாரம் தான நிலா போய்க்கலாம்’, என்றான் தமிழ்.

 

அடுத்த நாள் இருவரும் பேங்குக்கு பணம் எடுக்க சென்று பணத்தை எடுத்து விட்டு வெளியே காருக்கு வர திடீரென திருடர்கள் கையில் கத்தியுடன் வந்து மிரட்டினர்.

 

‘தமிழ் பாத்து’, என நிலா கத்த,

 

‘நிலா பயப்படாத நான் பாத்துக்கறேன்’, என சொல்லி தமிழ் அவர்களை அடித்து விலாசினான். அதில் அடிவாங்கிய ஒருவன் கத்தியை அவன் பின்னால் குத்த வர நிலா வந்து அந்த கத்தியை பிடித்துக் கொண்டு தமிழ் என்று கத்த திருடர்கள் அங்கிருந்து ஓடினர்.

 

தமிழ் வேகமாய் வந்து நிலாவை பிடித்து உட்கார வைத்து அவள் கைக்கு கட்டு போட்டு விட்டு, ‘நான் தான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல. இப்ப பாரு . மனசுல ஜான்சி ராணினு நினப்பு’, என பதட்டத்துடன் அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டி போனான் தமிழ்.

 

‘நீங்க இங்கயே இருங்க. நான் பாத்துட்டு வரேன்’, என நிலா சொல்ல,

 

‘எனக்குன்னா தான் பயம். மத்தவங்களுக்குன்னா ஒன்னும் பயமில்ல. வா போலாம்’, என தமிழ் நிலாவை கூட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.

 

உள்ளே நிலாவின் காயத்துக்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டு டிடி இன்ஜக்ஷன் போட அதை பார்க்காமல் பயத்தில் கண்ணை மூடிக் கொண்டான் தமிழ்.

 

‘இங்க யாரோ எனக்கு பயமில்லைன்னு சொன்னாங்க ‘, என நிலா வம்பிழுக்க தமிழ் அவளை முறைத்தான்,

 

நிலாக்கு ட்ரீட்மெணட் முடிந்து காரில் ஆபீஸ்க்கு சென்றனர்.

 

‘தமிழ் எங்கூட பேச மாட்டீங்களா. இன்னும் எம்மேல கோபமா இருக்கீங்களா’, என நிலா பாவமாய் கேட்க,

 

‘அறிவிருக்கா கைல பட்ட கத்தி வேற எங்கயாவது பட்ருந்தா என்னாயிருக்கும். ‘, என தமிழ் அழுது கொண்டே கத்த,

 

‘உங்கள குத்த வரும் போது எப்படி என்னால பாத்துகிட்டு இருக்க முடியும். இப்ப அதுக்கு ஏன் நீங்க இவ்ளோ எமோசனலாகுறீங்க தமிழ். எனக்கு தான் ஒன்னும் இல்லையே.’, என நிலா கட்டி அணைத்து சமாதானப் படுத்த,

 

‘அடிபட்டது உனக்கு ஆனா வலிக்கறது என்னவோ எனக்கு.  ஏன்  என்னை இப்டி கஷ்டப்படுத்தற’, என தமிழ் சொல்ல,

 

‘பார்ரா என்னை அவ்ளோ புடிக்குமா சாருக்கு’, என நிலா கேட்க,

 

”ம் பண்றது பண்ணிட்டு கேள்வியா கேக்குற’, என தமிழ் அடிக்க கை ஓங்க,

 

‘ஆ கை வலிக்குது’, என நிலா  நடிக்க இருவரும் சிரித்தனர்.

 

‘சரி ஆன்டி, அங்கிள் கேட்டா சும்மா பழம் வெட்டும் போது அடிபட்ருச்சுன்னு சொல்லிக்கலாம். இல்லைன்னா அவங்க ரொம்ப வருத்தப் படுவாங்க ‘, என நிலா சொல்ல சரி என்று சொல்லி காரை எடுத்து ஆபீஸ்க்கு சென்றான்.

 

ஆபீஸில் நிலாவை அடிக்கடி வந்து அவளுக்கு தெரியாமல் பார்த்து செல்ல அதை பார்த்த நந்தினி நிலாவிடம் வந்து,

 

‘நிலா உன் மேல தமிழ் எவ்ளோ பாசம் வச்சிருக்காரு தெரியுமா’, என கேட்க,

 

‘எனக்கு தெரியாது. உனக்கு தெரிஞ்சா சொல்லு’, என நிலா கிண்டலாக கேட்க,

 

‘சரி சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. நீ வந்து ஒரு ரெண்டு மணி நேரம் இருக்குமா. அதுக்குள்ள உன்ன வந்து பதினைஞ்சு தடவ பாத்துட்டு போயிட்டாரு நீ எப்டி இருக்கன்னு.’, என நந்தினி சொல்ல,

 

‘அப்ப நீ உன் வேலய பாக்காம இத தான் பாத்துகிட்டு இருந்த. அப்டி தான. என் புருஷன் என் மேல இருக்க பாசத்துல,  அக்கறைல என்னை வந்து பாக்கறாரு. அதுல உனக்கு ஏன் பொறாமை’, என நிலா கேட்க,

 

‘இதுக்கு தான் புருஷன் பொண்டாட்டிக்கு இடைல போகக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போல. எப்படியோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரி’, என சொல்லி விட்டு நந்தினி அங்கிருந்து செல்ல நிலா தனக்குள்,

 

‘எனக்கு அறிவிருக்கான்னு கேட்டீயே முத உனக்கு இருக்காடா. உன்னை காப்பாத்திட்டேன்னு நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன்னு உனக்கு தெரியாது. ஆனா என் கைல அடிபட்டு ரத்தம் வந்தப்ப உன் கண்ணுல நீ என் மேல வச்சிருக்கிற அன்ப பாத்தேன். மனசு தாங்காம எனக்காக நீ அழுதப்ப என் மேல உனக்கு இருக்குற காதல நான் புரிஞ்சு கிட்டேன்.  உனக்கு தான் அது புரியல. நீ தான் முட்டாள்’, என தமிழை நினைத்து சிரித்துக் கொண்டே தன் வேலையை பார்த்தாள்.

 

நிலாவின் மேல் தனக்கிருப்பது காதல் என எப்போது புரிந்துக் கொள்வான் தமிழ்.

 

தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!