நீ எனக்கு தந்த காதல் -20.
நிலாவை ரசிக்க தொடங்கிய தமிழ்.
நிலாவும் நந்தினியும் ஆபீசீல் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
Advertisement
இனி,
தமிழ் தன் அறையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து ஒரு வாய் எடுத்து வைக்க திடீரென சாப்பாட்டிலிருந்து எழுந்து எதையோ யோசித்தவனாய் கை கழுவி விட்டு டைனிங் ரூமுக்க போனான்.
Advertisement
Advertisement
அங்கு நிலாவின் சாப்பாட்டு கையில் அடிபட்டு இருந்ததால் நந்தினி அவளுக்கு ஊட்டி விட நிலா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழை நந்தினி பார்க்க, ‘தமிழ் சார் வாங்க சாப்டலாம்’, என கூப்பிட
Advertisement
‘இல்ல நிலா கைல அடிபட்ருந்துச்சு சாப்ட முடியாதே. அதான் பார்க்கலாம்னு வந்தேன்’, என தமிழ் இழுக்க,
‘ஓ நிலாக்கு ஊட்டி விடலாம்னு வந்தீங்களா. சாரி இப்பவும் ஒன்னுமில்ல வாங்க வந்து ஊட்டி விடுங்க. நான் போய் சாப்டறேன்.’, என நந்தினி கிண்டல் பண்ண,
‘நீ வேற ஏன். எனிவே ரொம்ப தேங்க்ஸ். ‘, என தமிழ் சொல்ல,
‘நீங்க சாப்டல’, என நிலா கேட்க,
‘சாப்ட போனேன் உன் ஞாபகம் வந்துச்சு. அதான் உன்ன பாக்கலாம்னு வந்தேன். சரி நீங்க ரெண்டு பேரும் சாப்டுங்க. நானும் போய் சாப்டறேன்’, என சொல்லி தமிழ் அங்கிருந்து போய் தன் ரூமில் உட்கார்ந்து சாப்பிட்டான்.
‘நிலா உன்மேல தமிழ் எவ்ளோ பாசமா இருக்காரு. நான் இல்லைன்னா உனக்கு அவரே ஊட்டி விட்ருப்பாரு. ச்சே ஒரு ரொமேன்ஸ் சீன் மிஸ் ஆயிடுச்சே’, என நந்தினி சொல்ல,
‘நிஜமாவா சொல்ற. அப்டினனா நான் அவருகிட்ட போய் நந்தினிக்கு ஊட்டவே தெரியல. எனக்கு பசிக்குது. அப்டின்னு சொல்லவா’, என நிலா சிரித்துக் கொண்டே கேட்க,
‘அடிப்பாவி எல்லா சாப்பாட்டையும் சாப்டுட்டு நீ ஏன் சொல்ல மாட்ட.’, என நந்தினி சொல்ல நிலா சிரித்தாள்.
ஆபீஸ் முடிந்து நிலாவும், தமிழும் காரில் கிளம்பி வீட்டுக்கு சென்றனர்.
வீட்டுக்குள் முடிந்த வரை தன் கையில் இருந்த கட்டை துப்பட்டாவை கொண்டு மறைத்த படி இருந்தாள் நிலா.
‘நிலா அந்த லேப்டாப் எடுத்துட்டு வாயேன்’, என தமிழ் நிலாக்கு அடிபட்டிருப்பதை மறந்து சொல்ல,
வேறு வழியில்லாமல் நிலா எடுத்து வர அதை தமிழ் தன் கையிலிருந்த போனை பார்த்துக் கொண்டே வாங்க, நிலாவின் அடிபட்ட கையில் அது பட நிலா வலி தாங்காமல் ஆ என்று கத்தினாள்.
‘சாரி சாரி. நான் மறந்துட்டேன். ரொம்ப வலிக்குதா நிலா’, என தமிழ் கேட்க,
‘நிலா என்னம்மா இவ்ளோ பெரிய கட்டு . எப்டி அடிபட்டுது.’, என தமிழ் அப்பா கேட்க,
‘நிலா என்னாச்சு. ஏன் கத்துன’, என கேட்டுக் கொண்டே தமிழ அம்மா பூப் பறிததுக் கொண்டிருந்தவர் உள்ளே வர,
நிலா சொல்ல வேண்டாம் என செய்கை காட்டியதை பார்க்காமல் தமிழ் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் பெற்றோரிடம் சொல்லி முடித்தான்.
‘உங்கள உள்ள வாங்க வச்சுக்கறேன்’, என நிலா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
‘தமிழ காப்பாத்திட்டேனு நினச்சு சந்தோஷப் படறதா இல்ல காப்பாத்த போய் உனக்கு இப்டி அடிபட்ருச்சுன்னு நினச்சு வருத்தப் படறதான்னு எனக்கு தெரியல. ரொம்ப ஆழமா அடிபட்ருக்கா. டாக்டர் என்ன சொன்னாங்க நிலா ‘, என தமிழ் அம்மா கேட்க,
‘ஆன்டி அப்டி ஒன்னும் பெரிய அடி இல்ல. ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொன்னாங்க. நீங்க கவலப்படாதீங்க.’, என நிலா சொல்ல,
‘இல்ல ராஜி, நிலா பொய் சொல்றா. கத்தி கொஞ்சம் ஆழமா தான் கிழிச்சிருச்சு. ரத்தம் எவ்ளோ போச்சு தெரியுமா. நீ வேனா அவ கைய பாரு’, என தமிழ் நிலாவின் கையை பிடித்துக் காட்ட நிலா வலி தாங்காமல் ஸ் என்றாள்,
‘சரி நான் பாத்துக்கறேன். நீ மொத கை எடு. போய் பர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்துட்டு வா’, என தமிழ் அம்மா கூற, தமிழ் எடுத்து வந்தான்.
தமிழ் அம்மா அதை வாங்கி கட்டை பிரித்து விட்டு பார்க்க, ‘ஆமா இவ்ளோ ஆழமா இருக்கு. நிறைய ரத்தம் போயிருக்கும். ரொம்ப வலிக்குதா நிலா. நான் மெதுவா துடச்சு விட்டு மருந்து போட்டு கட்டி விடறேன்’, என சொல்லி காயத்தை துடைக்க,
‘ராஜி பார்த்து நிலாக்கு வலிக்குது’, என தமிழ் சொல்ல,
‘நீ மொத இங்க இருந்து கிளம்பு. நான் பாத்துக்கறேன்’, என தமிழ் அம்மா அவனை அங்கிருந்து துரத்தி விட்டார்.
நிலா தனக்கு கட்டு போட்டுக் கொண்டிருந்த தமிழ் அம்மாவை பார்த்து அழ,
‘நிலா ரொம்ப வலிக்குதா’, என தமிழ் அம்மா கேட்க,
‘இல்ல ஆன்டி. நீங்க என்னை இப்டி பாத்துறத நினச்சு சந்தோஷத்துல வர கண்ணீர்’, என நிலா சொல்ல,
‘நிலா நீ எங்கள எப்டி உன் அம்மா, அப்பா மாதிரி பாத்துக்கறயோ அது மாதிரி நாங்களும் உன்ன மருமகளா இல்ல எங்க மகளா தான் பாக்குறோம்.’, என சொல்லி தமிழ் அம்மா அவளுக்கு கட்டுப் போட்டு விட்டார்.
‘தமிழ் ஆமா போலீஸ் கம்ப்ளைனட் குடுத்தியா’, என தமிழ் அப்பா கேட்க,
‘ம் குடுத்துட்டேன் டாடி. ஆனா அவங்கள பாத்தா வட நாட்டுக் காரங்க மாதிரி இருந்துச்சு. ஸ்டேஷன்ல நிறைய பேர் போட்டோ காட்னாங்க. ஆனா அதுல அவங்க யாரும் இல்ல. சரி எதாவது தெரிஞ்சா கூப்டறேன்னு சொன்னாங்க.’ , என தமிழ் சொல்ல,
‘அடுத்த தடவ பாங்க்ல போய் பணம் எடுக்கறதா இருந்தா முன்னாடியே மேனேஜர் கிட்ட சொல்லிடு. ஆன்லைன் மூலமா டிரான்ஸ்பர் பண்ணிருவாரு’, என தமிழ் அப்பா சொல்ல,
‘ம் நானும் அதை தான் யோசிச்சேன் டேடி’, என தமிழ் சொல்ல இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
‘தமிழ், நீயும் உங்க அப்பாவும் வாங்க சாப்டலாம்’, என தமிழ் அம்மா கூப்பிட இருவரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர்.
தமிழ் அம்மா அனைவருக்கும் சாப்பாடு போட்டு விட்டு நிலாவுக்கு ஊட்டப் போக,
‘ராஜி நீ சாப்டு. நான் என் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டுக்கறேன்’, என தமிழ சொல்ல,
‘டேய் பாத்துடா. மெதுவா கொஞ்சம் கொஞ்சமா குடு’, என தமிழ் அம்மா சொல்ல,
‘எல்லாம் நான் பாத்துக்கறேன்’, என சொல்லி தமிழ் நிலாவுக்கு அழகாக ஊட்டி விட,
அப்போது நிலாவுக்கு நந்தினி , ‘ச்சே ரொமேன்ஸ் சீன் மிஸ் ஆயிடுச்சு’ ன்னு சொன்னது ஞாபகம் வர, ‘இது ரொமேன்ஸ் சீன் இல்ல நந்தினி எமோசனல் லவ் சீன்’, என தனக்குத் தானே நினைத்துக் கொண்டு தமிழ் தனக்கு ஊட்டி விடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
‘தமிழ் போதும் வயிறு நிறைஞ்சிருச்சு. நீங்க சாப்டுங்க ‘, என நிலா சொல்ல,
‘இன்னும் கொஞ்சம். இது மட்டும் எனக்காக’, என தமிழ் ஊட்ட அதை வாங்கிக் கொண்டாள் நிலா. நிலா சாப்பிட்டு முடித்ததும் தமிழ் தன் கையை கழுவி விட்டு அவள் வாயை துடைத்து விட தமிழ் அப்பாவும் அம்மாவும் நடப்பதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் சாப்பிட்டனர்.
‘சரி நீங்க சாப்டுங்க நான் ஹால்ல டிவி பாக்கறேன்’, என சொல்லி நிலா அங்கிருந்து செல்ல, தமிழ் சாப்பிட ஆரம்பித்தான்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின் சேர்ந்து சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு தூங்க சென்றனர்.
நிலா மாத்திரையைப் போட்டு விட்டு படுக்க தமிழ் ரூமுக்கு வர, ‘ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்’, என நிலா கூப்பிட தமிழும் வர அவனை வேகமாக ரெண்டு அடி அடிக்க,
‘ஏய் நிலா வலிக்குது. இப்ப எதுக்கு அடிக்கிற ‘, என தமிழ் கேட்க,
‘ம் வீட்ல உண்மைய சொல்லாதன்னு சொன்னா கேக்காம எல்லாத்தையும் சொன்னீஙகல்ல அதுக்கு தான்’, என நிலா சொல்ல,
‘ஓ அதுக்கா. லூசு கவலப்படாத அவங்க ஒன்னும் பயப்பட மாட்டாங்க. அப்புறம் எதுக்காகவும் நான் அவங்க கிட்ட இது வரைக்கும் பொய் சொன்னதில்ல. அதான்.’, என தமிழ் சொல்ல,
‘சாரிப்பா. அவங்க பயந்துக்கு வாங்கன்னு நினச்சு தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்.’, என நிலா சொல்ல,
‘அதுக்கு எதுக்கு சாரி. சரி அதெல்லாம் இருக்கட்டும். வலி எப்டி இருக்கு’, என அவள் கையை மெதுவாக பிடித்து தமிழ் கேட்க,
‘ம் முன்னைக்கு இப்ப பரவால்ல.’, என நிலா சொல்ல,
‘சரி தூங்கு. எதாவது வேனும்னா கூப்டு நான் ஹெல்ப் பண்றேன்’, என்று சொல்லி விட்டு அருகில் படுத்துக் கொள்ள நிலா தூங்கினாள்.
நிலா தூங்குவதை பார்த்துக் கொண்டே, ‘ ம் உனக்கு உங்க அம்மா அப்பா கரெக்டா தான் பேரு வச்சிருக்காங்கடி நிலான்னு. இவ்ளோ அழகா பிரகாசமா முழு நிலா மாதிரி இருக்கு உன் முகம். உன் நெத்தி பிறை நிலா மாதிரி இருக்கு. உன் கண்ணு அழகா சின்னதா கூர்மையா காந்தம் மாதிரி என்னை உன் பக்கம் ஈர்க்குது. உன் மூக்கு பாலம் மாதிரி அழகா ஏறி இறங்குது. உன் உதட்டை எப்ப பாத்தாலும் தூக்கத்துல என்னை இழுத்து நீ குடுத்து முத்தம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. உன் கூட இருக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வேற யாரும் உன் இடத்துல இருந்திருந்தா இந்நேரத்துக்கு என்னைய ஞாபகம் இல்லாத உன் கூட எப்டி வாழறதுன்னு விட்டுட்டு போயிருப்பாங்க. இத்தனைக்கும் ஞாபகம் வருமா வராதான்னே தெரியல. ஆனா ஒன்னு முன்னாடி எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்னு தெரியாது. ஆனா இப்ப எவ்ளோ பிடிக்கும்னு அளக்க முடியாது.’, என தனக்குள் நிலாவை ரசித்த படி தூங்கி போனான் தமிழ்.
நிலாவை ரசித்த படியே தூங்கியதால் தமிழின் கனவிலும் நிலாவே வர அவளிடம் பேசுவது போல் பேசிக் கொண்டே அருகிலிருந்த நிலாவை கட்டிப் பிடித்த படி தூங்கனான் தமிழ்.
காலையில் முதலில் நிலா கண் விழிக்க தமிழ் தன்னை கட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்து அவளும் அவனை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டு,
‘தினமும் இது மாதிரியே நமக்கு விடியனும்னு ஆசையா இருக்கு’, என நிலா தனக்குள் நினைத்துக் கொள்ள தமிழ் முழிக்க நிலா தன் கையை எடுத்துக் கொண்டு தூங்குவது போல் நடித்தாள்.
தமிழ் முழித்து தான் நிலாவை கட்டி பிடித்து படுத்திருப்பதை பார்த்து, ‘தமிழ் திரும்பவும் ஞாபகம் வச்சுக்கோ இவ கிட்ட ஜாக்ரதயா இல்ல உன் கற்பு பறி போயிடும்’, என தனக்குள் சொல்லிக் கொண்டு மெதுவாக நிலா மேல் இருந்து தன் கையை எடுத்து விட்டு வேகமாக எழுந்து வாஷ் ரூமுக்குள் செல்ல, அவன் போனதும் நிலா சிரித்தாள்.
தமிழ் நிலாவின் காதல் காலத்திடமிருந்து மீளுமா?
இல்லை அதில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிக்குமா?
தொடரும்…
