நீ எனக்கு தந்த காதல் – 21.
தமிழின் உறவு நிலாவோடு நெருக்கமாகிறது.
காலையில் இருவரும் எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பச் செல்கின்றனர்.
Advertisement
இனி,
நிலா குளிக்க துணிகளை எடுத்துக் கொண்டு செல்ல,
Advertisement
Advertisement
‘ஏய் நிலா எங்க குளிக்க போறியா. அறிவிருக்கா காயத்துல தண்ணி பட்ருச்சுன்னா. இரு நான் வரேன்’, என தமிழ் சொல்ல,
‘நீங்களா எதுக்கு ஒன்னும் வேனா பரவால்ல நானே குளிச்சுக்கறேன்’, என பதற்றமாக நிலா சொல்ல,
Advertisement
‘இரு நிலா ஒரு நிமிஷம்’, என சொல்லி தமிழ் ப்ளாஸ்டிக் பை எடுத்து வந்து காயத்தில் கட்டி விட்டான்.
‘இப்ப போ’, என தமிழ் சொல்ல,
‘ச்சே இதுக்கு தான் நான் வரேன்னு சொன்னானா. நம்ம அதுக்குள்ள என்னன்னவோ நினச்சுட்டோம். நிலா ஆனாலும் உனக்கு ரொம்ப தான் பேராசை’, என நிலா தனக்குள் சொல்லிக் கொண்டு குளிக்க போனாள்.
‘ஆமா நிலா எதுக்கு நானே குளிச்சுக்கறேன்னு பதட்டமா சொன்னா. ஒன்னும் புரியல’, என தமிழ் தனக்குள் பேசிக் கொண்டு தன் பொருட்களை ஆபிஸ் பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் கிளம்பி போய் சாப்பிட உட்கார, ‘ராஜி குடு நிலாக்கு நான் ஊட்டறேன்’, என தமிழ் சொல்ல,
‘இல்ல தமிழ் இப்ப வலி பரவால்ல. ஆன்டி ஸ்பூன் குடுங்க நானே சாப்டுக்கறேன்’, என நிலா.சொல்ல,
‘நிஜமா தான. இல்ல உன்னை நம்ப முடியாது. இப்ப மட்டும் நான் ஊட்டறேன். ‘, என தமிழ் சாப்பாடு ஊட்ட வேறு வழி இல்லாமல் நிலாவும் சாப்பிட்டாள்.
பிறகு தமிழும் சாப்பிட்டு விட்டு இருவரும் ஆபிஸ்க்கு கிளம்பினர்.
ஆபிஸில் அடுத்த புது ப்ராஜக்ட்க்காக அனைவரும் சீரியசாக வேலைப் பார்த்தனர்.
‘சார் இந்த ப்ரசன்டேசன் படி எல்லா இங்கிரிடியன்ஸும் வந்து சேந்துருச்சு. ‘, என நந்தினி போன் பண்ணி தமிழிடம் சொல்ல,
‘ஓகே நந்தினி. எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிட்டு, எல்லாத்துலயும் சேம்பிள் எடுத்து லேப்க்கு டெஸ்ட் பண்ண அனுப்பிடுங்க’, என தமிழ் சொல்ல,
‘ஓகே சார். நானும் நிலாவும் அத தான் பண்ணிகிட்டு இருக்கோம்’, என நந்தனி சொல்ல,
‘அப்ப சரி. லேப் ரிசல்ட் வந்ததும் ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான். நீங்க கண்டிநியு பண்ணுங்க ‘, என சொல்லி தமிழ் போனை வைத்தான்.
தீவிரமாக வேலை பார்த்து விட்டு நிலாவும் நந்தினியும் சாப்பிட சென்றனர்.
நந்தினி நிலாக்கு ஊட்ட வர, ‘எனக்கு இப்ப கை பரவால்லப்பா. நானே சாப்டுக்கறேன்’, என நிலா சொல்ல,
‘அதெல்லாம் இன்னும் சரியாகி இருக்காது. நீ சும்மா சொல்லாத. பேசாம சாப்பிடு’, என நந்தினி ஊட்ட வேறு வழி இல்லாமல் அதை வாங்கி கொண்டு,
‘நீயும் தமிழ் மாதிரியே சொல்ற. அவரும் அப்டி தான் காலைல இப்டி நான் சொன்னதுக்கு கேக்காம ஊட்டி விட்டாரு’, என நிலா சொல்ல,
‘பார்ரா அப்ப அந்த ரொமேன்ஸ் சீன் நடந்திருச்சா. ச்சே மிஸ் பண்ணிட்டனே’, என நந்தினி கிண்டல் செய்ய,
‘நீ வேற நேத்து நைட் தமிழ் ஊட்டி விடும் போது நீ சொன்னியே ரொமேன்ஸ் சீன்னு அதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு’, என நிலா சொல்ல,
‘ம் நைட்டும்மா, அப்புறம் என்ன நடந்துச்சு.’ என நந்தினி கேட்க,
‘ம் அடிவாங்க போற. உங்கூட சேர்ந்து சேர்ந்து நானும் உன்ன மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். காலைல குளிக்க போகும் போது தமிழ் காயத்துல தண்ணி படக்கூடாது ஒரு நிமிஷம் இரு போயிறாத நான் வரேன் அப்டீன்னு சொன்னாரு’, என நிலா சொல்ல,
‘செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அப்புறம் என்ன அவரே வந்து குளிச்சு விட்டாரா’, என நந்தினி ஆர்வமாக கேட்க,
‘இப்டி தான் நானும் உன்ன மாதிரி நினச்சேன். ஆனா தமிழ் ஒரு ப்ளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்து கைல இருக்கற காயம் நினையாம கட்டி விட்டாரு’, என நிலா சொல்ல,
‘அடச்சே இப்டி புஸ்ன்னு போயிருச்சே. தமிழ் சார் மத்த விசயத்துல எல்லாம் டாப்பா இருக்காரு. லவ், ரொமேன்ஸ்னா பாஸ் கூட ஆக மாட்டேங்கறாரு. பேசாம அவருக்கு நாமளே குருவா இருந்து எல்லாத்தையும் சொல்லி குடுக்க வேண்டியது தான். ‘, என நந்தினி சொல்ல,
‘அம்மா தாயே உன் கூட சேர்ந்து நான் கெட்டது போதும் . அவருக்கு எதுவும் நீ சொல்லித்தர வேணாம். இந்த தமிழ் தான் எனக்கு புடிச்சிருக்கு’, என நிலா சொல்ல,
‘அப்டியா பாத்தா அப்டி தெரியலயே. எனக்கு என்னவோ தமிழ் எப்ப கட்டி புடிச்சு முத்தம் தருவாருன்னு ரொம்ப ஆசையா வெய்ட் பண்ற மாதிரி இருக்கே’, என நந்தினி சொல்ல,
‘ம் நடந்தா நல்லா தான் இருக்கும். சரி எனக்கு போதும் நீ சாப்டு’, என நிலா சொல்ல,
‘இந்தா லாஸ்ட் உருண்டை’, என நந்தினி தர நிலா வாங்கி சாப்பிட பிறகு நந்தினியும் சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் வேலையைப் பார்க்க செல்ல,
‘ஒரு நிமிஷம் நந்தினி நீ முன்னாடி போ. நான் தமிழ் சாப்டாரான்னு பாத்துட்டு வரேன்’, என நிலா சொல்லி விட்டு செல்ல நந்தினி வேலையை பார்க்க சென்றாள்.
தமிழ் ரூமுக்கு சென்று நிலா பார்க்க அங்கு அவன் சாப்பிடாமல் சீரியசாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க,
‘நீங்க இன்னும் சாப்டலயா.’, என நிலா கேட்க,
‘ம் வா நிலா. கொஞ்சம் தான் இருக்கு முடிச்சிட்டு வந்தறேன்’, என தமிழ் சொல்ல,
‘சரி நான் எடுத்து வக்கறேன். நீங்க முடிச்சிட்டு சீக்கரமா சாப்ட வாங்க ‘, என சொல்லி நிலா சென்று தமிழ் சாப்பிட எடுத்து வைத்து விட்டு உட்கார்ந்திருக்க அறை மணி நேரம் கழித்து வேலையை முடித்து விட்டு வந்தான் தமிழ்.
‘இதான் உங்க ஊர்ல கொஞ்ச நேரமா’, என நிலா முறைத்துக் கொண்டே கேட்க,
‘சாரி சாரி. செய்ய செய்ய வந்து கிட்டே இருக்கு. இப்ப தான் முடிஞ்சுது. சரி நீ சாப்டியா’, என தமிழ் கேட்க,
‘ம் நானும் நந்தினியும் சாப்பிட்டு தான் வந்து உங்கள பாக்க வந்தேன்.’, என நிலா சொல்ல,
‘சரி எனக்கு கொஞ்சம் கம்பெனி குடேன் ப்ளீஸ்.’ , என தமிழ் நிலாவுக்கு ஊட்ட,
‘சரி இது போதும். ஏற்கனவே வேண்டா வேண்டாம்னு சொல்ல நந்தினி கேக்காம ஊட்டி வயிறு ஃபுல்லா இருக்கு. ‘, என நிலா அதை வாங்கிக் கொண்டு சொல்ல தமிழ் சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்,
வேலை முடிந்து இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
‘தமிழ் ஒரு ஜூவல்லரி சாப்ல நிறுத்துங்க. நாளைக்கு ஈவ்னிங் என் ப்ரெண்ட் சிஸ்டர் மேரேஜ் ரிசப்ஷன். அவங்களுக்கு கிஃப்ட் வாங்கனும்.’, என நிலா சொல்ல,
‘யாரு அன்னைக்கு போன் பண்ணாங்களே அந்த ஃபங்ஷனா’, என தமிழ் கேட்க,
‘அதே தான். நீங்களும் தான வறீங்க. நம்ம கல்யாணத்துல என் காலேஜ் ப்ரெண்ட்ஸ இன்ட்ரடியூஸ் பண்ண முடியல. இப்ப எல்லாம் வருவாங்க. ப்ளீஸ்’, என நிலா குழந்தை போல் கெஞ்ச,
‘ஓகே ஓகே ரெண்டு பேரும் போலாம்’, என சொல்லி விட்டு ஜூவல்லரி கடை முன் தமிழ் காரை நிறுத்த இருவரும் உள்ளே சென்றனர்.
‘வாங்க சார் வாங்க மேடம் என்ன பாக்கறீங்க. செயின், ரிங், வளையல்’, என கடை ஆள் கேட்க தமிழ் நிலாவை பார்க்க,
‘வெள்ளி குங்கும சிமில் எடுங்க’, என நிலா சொல்ல கடை ஆள் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்ட தமிழ் அப்படியே கடையை சுத்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘தமிழ் இது ஓகே வா’, என நிலா காட்டிக் கேட்க,
‘ம் ஓகே. உனக்கு புடிச்சா சரி’, என தமிழ் சொல்ல,
‘சரி இத அழகா கிஃப்ட் பேக் பண்ணிருங்க. அப்புறம் இத தனியா குடுத்துருங்க’, என நிலா சொல்லி விட்டு கேஷ் பே பண்ண போக,
‘நிலா இந்தா கார்ட் ‘, என தமிழ் குடுக்க,
‘இல்ல தமிழ் என் காசுல கிஃப்ட் பண்ணனும்னு ஆசை. நான் அமவுண்ட் வச்சிருக்கேன்’, என நிலா சொல்லி தன் ஹேன்ட் பாக்கில் இருந்து தன் கார்டை எடுத்து குடுத்து விட்டு ஜுவல் பேக்கை வாங்கிக் கொள்ள இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
‘நிலா ஏன் குங்கும சிமில் வாங்குன. மேட்சிங் வாட்ஜ், ரிங் அது மாதிரி எதாவது வாங்கி இருக்கலாம்ல’ என தமிழ் கேட்க,
‘தமிழ் புதுசா கல்யாணம் ஆகறப் பொண்ணுக்கு குங்கும சிமில் வாங்கிக் குடுத்தா எப்பவும் சுமங்கலியா இருக்க நாம வாழ்த்தறதா அர்த்தம்.’, என நிலா சொல்ல,
‘ஓ இதுக்கு இவ்ளோ மீனிங் இருக்கா. சூப்பர் நிலா’, என தமிழ் சொல்ல இருவரும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
நிலாவும் தமிழும் சென்று பிரஸப் ஆகி வர தமிழ் அம்மா எல்லாருக்கும் காபி போட்டு எடுத்து வந்தார்.
நிலா காபி குடித்துக் கொண்டே தான் வாங்கிய கிஃப்டை போட்டோ பிடித்ததை எடுத்து தமிழ் பெற்றோருக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.
‘நிலா அருமையான கல்யாணப் பரிசு. மங்களகரமா இருக்கு. ‘, என தமிழ் அம்மா சொல்ல,
‘எவ்ளோம்மா நிலா ஆச்சு’, என தமிழ் அப்பா கேட்க,
‘ஐயாயிரம் ரூபாய் அங்கிள். பீஸ் ரேட் தான். அம்பது கிராமுக்கு கொஞ்சம் கம்மி’, என நிலா சொல்ல,
‘ரொம்ப நல்லா இருக்கு. எப்பம்மா ஃபங்ஷன்’ என தமிழ் அப்பா கேட்க,
‘நாளைக்கு ஈவ்னிங் ரிசப்ஷன் அங்கிள். கல்யாண மண்டபம் லொகேஷன் அனுப்பி இருக்கான் என் ப்ரெண்ட். இங்கிருந்து நாப்பது கி.மீ. அங்கிள்’, என நிலா சொல்ல,
‘தமிழ் நீ போறதான. ஏனா வர லேட்டாகும் போல’, என தமிழ் அம்மா கேட்க,
‘ம் ராஜி. நிலா வேற என்ன வர சொல்லி கெஞ்சி கேட்டாளா. அதான் போறேன்’, என தமிழ் நிலாவை பார்த்து கிண்டல் செய்ய,
‘ஆமா ஆன்டி. அப்டியே தமிழுக்கு என் காலேஜ் ப்ரெண்ட்ஸ இன்ட்ரடியூஸ் பண்ணி வைச்ச மாதிரி இருக்கும்னு நான் தான் அவர வர சொல்லி கேட்டேன்’, என நிலா சொல்ல,
‘நீ வேற இவன் எப்பவும் இப்டி தான். சரி பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வாடா’, என தமிழ் அம்மா சொல்ல,
‘அத நிலா கிட்ட சொல்லு. ஏன்னா நான் மட்டும் அங்க தனியா தான் இருப்பேன்னு நினைக்கறேன். மேடம் அவங்க ப்ரெண்ட்ஸ பாத்ததும் என்ன மறந்துருவாங்க.’, என தமிழ் சொல்ல,
‘ஏன் தமிழ் அப்டி சொல்றீங்க. நீங்களும் என் ப்ரெண்ட்ஸ் கூட பேசுங்க. அவங்க நல்லா ஈசியா பழகுவாங்க. அது இல்லாம கல்யாணம் ஆன ப்ரண்ட்ஸ் பேமிலி யோட வருவாங்க. கல்யாணம் ஆகாதவங்க பேச்சுலரா வருவாங்க. நீங்க அங்க வந்தா கண்டிப்பா நல்லா அவங்களோட மிங்கிள் ஆயிருவீங்க’, என நிலா சொல்ல,
‘ஓகே ஏன் டென்சன் ஆகுற. நான் சும்மா உங்கூட விளையாண்டேன். நாளைக்கு ரெண்டு பேரும் போலாம் ஓகே வா’, என தமிழ் சொல்ல,
‘டேய் எப்ப பாரு அவ கூட வம்பிழுத்துக் கிட்டே இரு’, என சொல்லி விட்டு தமிழ் அம்மா டிவியில் நாடகம் பார்க்க செல்ல, தமிழ் அப்பா , ‘சரி நான் வாக்கிங் போய்ட்டு வரேன்’, என சொல்லி செல்ல, தமிழும் நிலாவும் ஆபிஸ் வேலையை பார்த்தனர்.
தமிழ் நிலா தனியாக செல்லும் இந்த பயணம் இவர்களிடையே ஏதேனும் மாற்றம் தருமா?
தொடரும்….
