நீ எனக்கு தந்த காதல் – 31.
நிலாக்கு பாரதி தந்த சர்ப்ரைஸ்.
தமிழ் அம்மாவும், நிலாவும் தூங்கி கொண்டிருந்த தமிழ் அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
இனி,
தமிழ் தூக்கத்திலிருந்து கண் முழித்தான்.
Advertisement
Advertisement
‘தண்ணி’, என தமிழ் கேட்க நிலா எழுந்து சென்று தண்ணீரை டம்ளரில் ஊற்றி வந்து தமிழிடம் குடுத்தாள்.
‘இப்ப தலைவலி எப்டி டா இருக்கு’, என தமிழ் அம்மா கேட்க,
Advertisement
‘பரவால்ல ராஜி இப்ப வலிக்கல. ஆமா நேத்து எப்டி வீட்டுக்கு வந்தோம் நிலா.’ என தமிழ் கேட்க,
‘கார்ல தான் தமிழ். ஏன் கேக்கறீங்க ‘ என நிலா கேட்க,
‘இல்ல எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு.’, என தமிழ் சொல்ல,
‘சரி இரு நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ஆமா ராஜி பசிக்குது. நான் போய் பிரஷ் பண்ணிட்டு, முகம் கழுவிட்டு வந்தரேன்’, என தமிழ் எழ நிலா அவன் கையை பிடித்துக் கொள்ள அவளை பார்த்து கொண்டே பாத் ரூமுக்கு சென்றான்.
தமிழ் அம்மா சாப்பாடு எடுத்து வர கீழே சென்றார்.
நிலா அவனை நிற்க வைத்து விட்டு அவனது பிரஷை எடுத்து பேஸ்ட்டை வைத்து அவன் கையில் குடுக்க அவன் அதை வாங்கி பிரஷ் பண்ணி விட்டு வாய் கொப்பளித்து முகம் கழுவிய பிறகு,
‘நிலா நான் பாத்ரூம் போகனும்’, என தமிழ் சொல்ல,
‘ம் போங்க’, என சொல்லி நிலா அங்கேயே நிற்க,
‘நீ கொஞ்சம் வெளிய’, என தமிழ் இழுக்க,
‘சாரி, சாரி நான் போறேன். கதவ லாக் பண்ணாதீங்க. முடிச்சிட்டு கூப்டுங்க’, என நிலா சொல்லி வெளியே சென்றாள்.
சிறிது நேரம் கழித்து தமிழ் பாத்ரூமில் இருந்து வெளியே வர நிலா மீண்டும் அவன் கையை பிடித்துக் கொள்ள,
‘நிலா பயப்படாத ஐ அம் ஆல்ரைட்’, என தமிழ் சொல்ல,
‘பரவால்ல உங்க ஹெல்த் விசயத்துல இனிமே நீங்க சொல்றத கேக்கறதா இல்ல’, என நிலா சொல்லிக் கொண்டே தமிழை பெட்டுக்கு கூட்டி வர தமிழ் அம்மாவும் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார்.
‘ஆமா டாடி எங்க ‘, என தமிழ் கேட்க,
‘அவரு ஆபிஸ்க்கு போயிருக்காரு. உனக்கு சரியா ஆகற வரைக்கும் அவரே போய் பாத்துக்கறாறாம்.’, என தமிழ் அம்மா சொல்ல,
‘நிலா ஆபஸ்க்கு நீ போல.’, என தமிழ் கேட்க,
‘எதுக்கு அப்ப தான் நீ எங்கிட்ட எல்லா விசயத்துக்கும் அடம் பிடிச்சு என்ன ஏமாத்த முடியும்’, என தமிழ் அம்மா சொல்ல நிலா சிரித்தாள்.
‘ராஜி நீயுமா.’, என தமிழ் கேட்க தமிழ் அம்மா சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்டி.விட்டார்.
‘நிலா அதுக்கில்ல டாடி பாவம் தனியா கஷ்டப் படுவாறு’, என தமிழ் சொல்ல,
‘அங்கிள் எல்லாம் பாத்துக்குவாரு. டவுட்னா கூப்டறேன்னு சொன்னாரு. நீங்க முத உங்க சாப்டற வேலய பாருங்க ‘, என நிலா சொல்ல எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான் தமிழ்,
‘ஆன்டி குடுங்க நான் கொண்டு போய் வச்சிட்டு வந்தறேன்’, என சொல்லி எல்லாத்தையும் வாங்கி கொண்டு கீழே போனாள் நிலா.
நிலா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டு போய் கதவை திறக்க நிலா அம்மாவும், பாரதியும் வந்திருந்தனர்.
‘அம்மா வாம்மா’, என நிலா சொல்லிக் கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் வேகமாக மேலே தமிழை பார்க்க சென்றார் நிலா அம்மா.
‘என்னடா பாரதி’, என நிலா கேட்க,
‘எல்லாம் இனிமே அப்டி தான். வா போலாம்’, என பாரதி சொல்லி விட்டு மேலே போக நிலாவும் பின்னாடியே சென்றாள்.
அவர்களை பார்த்ததும் தமிழும், அவனது அம்மாவும் வர சொல்லி உட்கார வைத்தனர்.
‘இப்ப பரவால்லயா அண்ணி தம்பிக்கு ‘, என நிலா அம்மா கேட்க தமிழ் அம்மா பதில் சொல்ல நிலாவும், பாரதியும் வந்து தமிழ் உட்கார்ந்தனர்.
‘வாங்க நிலாம்மா, வா பாரதி’, என தமிழ் சொல்ல,
‘உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நைட் தான் சொன்னான். வாடா பாரதி போய் பாத்துட்டு வரலாம்னு அப்பவே கூப்டேன். அம்மா இப்ப தான் அவங்க வீட்டுக்கே போயிருக்காங்க நம்ம போய் டிஸ்டர்ப் பண்ண வேணாம். நாளைக்கு போலாம்னு சொல்லிட்டான்.’, என நிலா அம்மா சொல்ல,
‘எனக்கு ஒன்னுமில்ல நிலாம்மா. நான் நல்லாதா இருக்கேன். நிலா தான் என்ன பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்றா’, என தமிழ் சொல்ல,
‘நிலா என்ன இது. தமிழ் தம்பி பாவம். அவருகிட்ட ரொம்ப ஸ்டிரிட்டா ஏன் நடந்துக்கற. பாசமா சொன்னாலே கேட்டுக்க போறாரு.’, என நிலா அம்மா சொல்ல,
‘நீங்க வேற அவன பத்தி உங்களுக்கு தெரியாது. பாசமா பேசுனா நம்மள ஏமாத்திருவான். நிலா பண்றது தான் கரெக்ட்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ராஜி ஏதோ அவங்க மட்டும் தான் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அது உனக்கு பொறுக்கலயா.’, என தமிழ் சொல்ல எல்லோரும் சிரிக்க,
‘மாமா கவலைப்படாதீங்க நான் உங்க கூட இருக்கேன்’, என பாரதி சொல்ல,
‘அப்டி சொல்லு மச்சான்’, என தமிழ் சொல்ல தமிழையும், பாரதியையும் நிலா முறைத்தாள்.
‘அப்புறம் மாமா நீங்க குடுத்த ஐடியாவுல கொஞ்சம் மாத்தி அந்த போட்டோவ ரெடி பண்ணிட்டேன்’, என பாரதி சொல்ல,
‘எந்த போட்டோடா’, என நிலா கேட்க,
‘இரு இரு காட்றேன்’ என சொல்லி பாரதி தன் போனை எடுத்து அந்த ஃப்ரேம் பண்ண போட்டாவை காட்ட அதை பார்த்த விட்டு நிலா அழத் தொடங்கினாள்.
‘ஏய் நிலா நீ தான உன் கல்யாண ஆல்பத்துல அப்பா இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்ட அதான் மாமா குடுத்த ஐடியாவ இதுல பண்ணிட்டேன். ஓகே தான. பாருங்க மாமா நிலாவ சரியான அழு மூஞ்சி’, என பாரதி வம்பிழுக்க,
தமிழும், தமிழ் அம்மாவும் அதை வாங்கி பார்த்தனர். அதில் ஒரிஜினல் போட்டாவில் தமிழ் அப்பா, அம்மா, தமிழ், நிலா, பாரதி, நிலா அம்மா என பேமிலியாக நின்றிருந்தனர். அதோடு நிலா அப்பா நின்ற மாதிரி இருந்த பழைய போட்டோவை எடுத்து நிலா அம்மா பக்கத்தில் வைத்து கிராபிக்ஸ் செய்து சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. ஃப்ரேமில் பார்ப்பதற்கு நிஜமாகவே நிலா அப்பா கூட நிற்பது போல் இருந்தது.
“பாரதி ரொம்ப சூப்பரா இருக்கு’, என தமிழும், தமிழ் அம்மாவும் சொல்ல,
‘மாமா எல்லாம் நீங்க குடுத்த ஐடியா தான்’, என பாரதி சொல்ல,
‘நிலாக்கு அவங்க அப்பா தான் உலகமே. அவரு இறந்ததுல இருந்து அவளால வெளிய வரவே முடியல. ரொம்ப கஷ்டப்பட்டா. இப்ப கூட திடீர்னு போன் பண்ணி அப்பா என் கனவுல வந்தாரு. என் கூட பேசுனாரு. என் கூடவே இருக்கேன்னு சொன்னாரு அப்டீன்னு சொல்லுவா. நானும் ஆமா நிலா நம்ம கூட தான் இருக்காருன்னு சொல்லுவேன். அவ கல்யாணத்துல அவங்க அப்பாவ நினச்சு நினச்சு அழுது கிட்டே தான் இருந்தா. பாரதி இந்த போட்டோவ காட்னதும் எனக்கே ஆச்சர்யமும், அழுகையுமா இருந்துச்சு. அப்பவே எனக்கு தெரியும் இத பாத்துட்டு நிலா அழுக போறான்னு’, என நிலா அம்மா சொல்ல நிலா வேகமாக வந்து அவளது அம்மாவை கட்டி பிடித்து அழ எல்லோரும் சேர்ந்து நிலாவை சமாதானப் படுத்தினர்.
‘சரி வாங்க எல்லோரும் போய் சாப்டலாம்’, என தமிழ் அம்மா சொல்ல எல்லோரும் கீழே இறங்க தமிழும் எழ,
‘நீங்க எங்க எழுந்திருக்கறீங்க. அவங்க சாப்டுட்டு வருவாங்க நாம இங்கயே இருக்கலாம்’, என நிலா சொல்ல,
‘நிலா படுத்தே இருக்கறது ஒரு மாதிரி இருக்கு. ப்ளீஸ் நாமளும் போகலாம். அதான் எப்டியும் நீ கூடவே தான இருக்க ‘, என தமிழ் கெஞ்ச,
‘சரி மெதுவா எந்திரிங்க’, என சொல்லி நிலா தூக்கி விட்டு தமிழை பிடித்துக் கொண்டு கீழே இறக்கி கூட்டி வந்து டைனிங் டேபிளில் ஒரு சேரில் உட்கார வைக்க,
‘நிலா நீயும் சாப்டு.’ என தமிழ் அம்மா தட்டு எடுத்து குடுக்க அவளும் உட்கார,
‘தம்பி சாப்டல’ என நிலா அம்மா கேட்க,
‘அவன் இப்ப தான் சாப்ட்டான்’, என தமிழ் அம்மா சொல்ல அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
‘நிலா நிறையா சாப்டு. அப்ப தான் மாமாவ நல்லா பாத்துக்க முடியும்’, என பாரதி சொல்ல,
‘நீ வேற டா. உங்க அக்கா சொல்றதை எல்லாம் கேக்க நான் தான் நிறையா சாப்டனும்’, என தமிழ் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
‘தமிழ் தம்பிக்கு முத சுத்தி போடுங்க. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல ‘, என நிலா அம்மா சொல்ல,
‘ராஜி பாத்தியா நேத்து நிலாக்கு கண்ணு பட்ரும்னு அவளுக்கு சுத்துன. ஆனா எனக்கு கண்ணு பட்ருச்சு. ‘, என தமிழ் சொல்ல,
‘ஆமா டா தமிழு உனக்கு நிலா மாதிரி அழகா, அறிவா பொண்டாட்டி கிடச்சிருக்கான்னு கண்ணு வச்சுட்டாங்க போல. கண்டிப்பா இன்னிக்கு உனக்கு சுத்தி போட்டறேன்’, என தமிழ் அம்மா சொல்ல எல்லாரும் சிரிக்க,
‘ஆமா இப்ப எதுக்கு சிரிக்கறீங்க. ராஜி சொன்னது உண்மை தான’, என தமிழ் சொல்ல,
‘ஆமா ஆமா’, என சொல்லி எல்லோரும் மீண்டும் சிரித்தனர்.
‘சரி அப்ப நாங்க கிளம்பறோம். நிலா தம்பிய நல்லா பாத்துக்க. அண்ணி அண்ணாவ கேட்டதா சொல்லுங்க ‘, என நிலா அம்மா சொல்ல,
‘மாமா எங்க நிலா கிட்ட இருந்து தப்பிக்கவாவது, சீக்கிரம் குணமாயிருங்க.’, என பாரதி சொல்ல,
‘ம் சரி டா.’, என தமிழ் சிரித்துக் கொண்டே சொல்ல,
‘பாரதி பாத்துப் போ . வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு’, என நிலா சொல்ல நிலா அம்மாவும், பாரதியும் அங்கிருந்து கிளம்பினர்.
‘நிலா எனக்கு ஒரு காபி வேனும். ராஜி வா நம்ம ரெண்டு பேரும் படம் பாக்கலாம்’, என தமிழ் சொல்ல,
‘இது தான் உங்க ஊர்ல நல்லா ரெஸ்ட் எடுக்கறதா’, என நிலா கேட்க,
தமிழ் அவனது அம்மா மடியில் படுத்துக் கொண்டு, ‘இப்ப ரெஸ்ட் எடுக்கற மாதிரி தெரியுதா’, என கேட்க,
நிலா முறைத்து விட்டு அவனுக்கு காபி போட போனாள்.
தொடரும்…
