நீ எனக்கு தந்த காதல் – 30.
தமிழை கவனித்து கொள்ளும் நிலா.
தமிழ் நிலாவின் தோளில் சாய்ந்து தூங்க நிலா காரை மெதுவாக ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
Advertisement
இனி,
நிலா காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து தமிழை கை தாங்கலாக காரிலிருந்து இறக்கி உள்ளே கூட்டி செல்ல,
Advertisement
Advertisement
‘நிலா என்னாச்சு ஏன் தமிழ் இப்டி இருக்கான்’, என தமிழ் அப்பா கேட்ட படி வந்து தமிழை இன்னொரு புறம் பிடிக்க அந்த சத்தம் கேட்டு உள்ளே இருந்து தமிழ் அம்மா வந்து,
‘தமிழுக்கு என்னாச்சு நிலா. ஏன் மயக்கத்துல இருக்கான்’, என பதட்டமாய் கேட்க,
Advertisement
நிலா நடந்த எல்லா வற்றையும் தமிழ் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே தமிழை மேலே கூட்டிச் சென்று பெட்டில் படுக்க வைத்தாள்.
‘நிலா எனக்கு போன் பண்ணி இருக்கலாம்ல. நான் வந்து பாத்துட்டு கூட்டிட்டு வந்திருப்பேன்ல.’, என தமிழ் அப்பா கேட்க,
‘அதுக்கில்ல அங்கிள் உங்க ரெண்டு பேரையும் பாத்தா ரொம்ப அடம் பிடிப்பாருன்னு தான் நானே கூட்டிட்டு போய்ட்டு வந்தேன்’, என நிலா சொல்ல,
‘வேற என்ன நிலா டாக்டர் சொன்னாரு’, என தமிழ் அம்மா கேட்க,
‘ஆன்டி பயப்படறதுக்கு ஒன்னுமில்ல. பழசு ஞாபகம் வரதுக்கான சிம்ப்டம்ஸா இருக்கலாம். என்ன ஒன்னு இனிமே தலைவலி ஆரம்பிக்கும் போதே டேப்ளட் போடுங்க இல்லைன்னா இப்டி தான் மயக்கத்துல வந்து நிக்கும். நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும். அப்புறம் இப்ப நல்லா தூங்கறதுக்கு இன்ஜக்ஷன் போட்ருக்காரு. நாளைக்கு மதியம் தான் முழிப்பு வருமாம். அந்த இன்ஜக்ஷன் ஓட சைட் எஃபக்ட் ரெண்டு நாளைக்கு மயக்கமா இருக்க மாதிரியே இருக்குமாம். அதனால அவர தனியா விடாம கூடவே இருந்து பாத்துக்க சொன்னாரு’, என நிலா சொல்ல,
‘நிலா இவனுக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது’, என சொல்லி தமிழ் அம்மா அழ,
‘ராஜி நீயே இப்டி அழுதா நிலாவ, தமிழ யாரு சமாதானப் படுத்தறது. இப்ப என்ன அவனுக்கு சின்ன மயக்கம் அவ்ளோ தான. நாளைக்கு பாரு அவன் பண்ற அடத்துக்கு மயக்கத்துலயே இருந்து இருக்கலாம்னு நீயே சொல்லுவ’, என தமிழ் அப்பா சொல்ல,
தமிழ் அம்மா தன் கண்ணை துடைத்துக் கொண்டு தமிழ் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘நிலா நான் தமிழ பாத்துக்கறேன் நீ போய் சாப்பிடு’ என சொல்ல,
‘இல்ல ஆன்டி பசிக்கல . நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா’, என நிலா கேட்க,
‘நிலா நாங்க சாப்டோம். பசிக்கலைன்னா பரவால்ல நீ போய் கொஞ்சமா போட்டு சாப்டுட்டு வா’, என தமிழ் அப்பா சொல்ல,
‘ஆமா நிலா பாவம் நீயும் இவன் கூட ஓரியாண்டு டயர்டா இருப்ப. போய் மூஞ்சி, கை, கால் கழுவிட்டு சாப்ட்டு லா’, என தமிழ் அம்மாவும் சொல்ல நிலா வேறு வழியின்றி கீழே போய் பிரஃஷப் ஆகி விட்டு பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தமிழுக்கு ஒரு பெரிய டம்ளரில் பாலை சூடு பண்ணி எடுத்துக் கொண்டு மேலே போனாள்.
‘ஆன்டி இந்தாங்க இத தமிழுக்கு குடுங்க’, என சொல்லி நிலா குடுக்க தமிழ் அம்மா அதை வாங்கிக் கொள்ள நிலா மெதுவாக தமிழை தூக்கி உட்கார வைக்க தமிழ் அம்மா தன் தோளில் சாய்த்த படி கொஞ்சம் கொஞ்சமாக பாலை குடுக்க தமிழ் தூங்கிய படியே பாலை குடித்து முடிக்க திரும்பவும் மெதுவாக தூக்கி தமிழை படுக்க வைத்தாள் நிலா.
‘ஆன்டி, அங்கிள் நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க. தமிழ் தூங்கிட்டு தான இருக்காரு. நான் பாத்துக்கறேன்’, என நிலா சொல்ல,
‘சரி நிலா நீயும் தூங்கு. முழிச்சு கிட்டு இருக்காத. ராஜி வா போலாம்’, என தமிழ் அப்பா கூப்பிட,
‘நிலா அவரு சொன்ன மாதிரி நீயும் தூங்கு. அவன் கூப்டா எழுந்துக்கலாம்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ம் சரி ஆன்டி’, என நிலா சொல்ல இருவரும் அவர்கள் அறைக்கு சென்றனர்.
அப்போது பாரதியிடம் இருந்து நிலாவுக்கு போன் வர அவள் அதை அட்டண்ட் பண்ணி, ‘சாரி டா. நாங்க வந்து ஒன்னவர் ஆச்சு. வந்ததும் ஆன்டி, அங்கிள் தமிழ பாத்துட்டு பதட்டமா ஆயிட்டாங்க. அவங்கள சமாதான படுத்துனதுல உனக்கு போன் பண்ண மறந்துட்டேன்’, என நிலா சொல்ல,
‘பரவால்ல நிலா. மாமா எப்டி இருக்காரு. டாக்டர் என்னசொன்னாரு’, என பாரதி கேட்க மீண்டும் நடந்த அனைத்தையும் நிலா சொல்ல ,
‘நீ ஒன்னும் பயப்படாத. எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும்’, என பாரதி சமாதானப் படுத்த,
‘சரி அம்மா கிட்ட சொல்லாத அவங்க ரொம்ப கஷ்டப் படுவாங்க ‘, என நிலா சொல்ல,
‘ நீ அம்மாவ பத்தி கவலப்படாத நான் சொல்லி சமாதானம் பண்ணிக்கிறேன். நீ மாமாவ பத்திரமா பார்த்துக்க. ஆமா சாப்டியா. ‘, என பாரதி கேட்க
‘ம் ஆன்டியும், அங்கிளும் ரொம்ப கம்பல் பண்ணதால கொஞ்சமா சாப்டேன்’, என நிலா சொல்ல,
‘சரி லேட்டாச்சு அம்மாவ கூட்டிட்டு நான் கிளம்பறேன். ‘, என சொல்லி பாரதி போனை வைத்தான்.
நிலாவும் லைட்டை ஆஃப் பண்ணி விட்டு தமிழ் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவன் தலையை கோதிய படி அவனையே பார்த்து கொண்டு அப்படியே கட்டிலில் சாய்ந்த படி தூங்கிப் போனாள்.
திடீரென தமிழ் தூங்கிய படி உலறும் சத்தம் கேட்டு நிலா முழித்து கொள்ள,
‘நிலா ப்ளீஸ் எனக்கு ஊசின்னா பயம்னு உனக்கு தெரியும்ல . ப்ளீஸ் போட வேண்டாம்னு சொல்லு நிலா. எனக்கு வலிக்குது நிலா’, என மயக்கத்தில் தமிழ் அழுத படி அருகிலிருந்த நிலா கையை இறுக்கி பிடிக்க அதை பார்த்த நிலா அவளும் அழுது கொண்டே அவனை சமாதானப் படுத்தி தன் மடியில் அவன் தலையை எடுத்து வைத்து தட்டிக் குடுக்க தமிழ் அமைதியாக தூங்கினான்.
காலையில் எழுந்து வந்து தமிழ் அம்மா பார்க்க நிலாவின் கையை இறுக்கி பிடித்த படி அவள் மடியில் தமிழ் அமைதியாக தூங்க நிலா கட்டிலில் சாய்ந்த படி உட்கார்ந்து கொண்டே தூங்கி கொண்டு இருந்தாள். தமிழ் அம்மா கதவை சாத்தி விட்டு கீழே வர தமிழ் அப்பா மேலே வந்தார்.
‘நீங்க எங்க போறீங்க ‘, என தமிழ் அம்மா கேட்க,
‘இது என்ன கேள்வி. தமிழ பாக்க தான்’, என தமிழ் அப்பா சொல்ல,
‘ரெண்டும் பேரும் நல்லா தூங்கறாங்க. வாங்க அப்புறமா வந்து பாத்துக்கலாம்’ , என சொல்லி தமிழ் அம்மா அவரை கீழே கூட்டி சென்றார்.
சிறிது நேரம் கழித்து நிலா எழுந்து தமிழ் நன்றாக தூங்குவதை பார்த்து விட்டு மெதுவாக தன் மடியிலிருந்து தமிழை பெட்டில் படுக்க வைத்து விட்டு அவன் இறுக்கி பிடித்திருந்த தன் கையை மெதுவாக விடுவித்து விட்டு சத்தம் போடாமல் கீழே போய் முகம் கழுவி பல் துலக்கி விட்டு கிச்சனுக்கு போக,
‘வா நிலா கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு காபி போட்டு தறேன்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ஆன்டி சீக்கிரமே வந்து என்ன எழுப்பி இருக்கலாம்ல.’, என நிலா சொல்ல,
‘நல்லா தூங்கிட்டு இருந்த. எப்டியும் தமிழ் உன்ன கண்டிப்பா தூங்க விட்ருக்க மாட்டான். அதான் எழுப்பல’, என சொல்லி கொண்டே தமிழ் அம்மா காபி போட்டு நிலாக்கு குடுக்க அதை வாங்கி குடித்துக் கொண்டே,
‘ஆமா ஆன்டி நல்லா தூங்கிட்டு இருந்தவரு திடீர்னு நிலா எனக்கு ஊசின்னா பயம்னு உனக்கு தெரியும்ல. ப்ளீஸ் போடா வேண்டாம்னு சொல்லு. எனக்கு வலிக்குது ன்னு சொல்லி தூக்கத்துலயே அழ ஆரம்பிச்சிட்டாரு. சமாளிச்சு அவரு தூங்க வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ஆனா எனக்கே அவர ரொம்ப கஷ்ட படுத்தரேன்னு அழுக வந்துருச்சு’, என நிலா சொல்ல,
‘நிலா நீ ஏன் அப்டி நினக்கற. உன்னால தான் அவன சமாளிக்க முடியுது. எங்க எல்லாரையும் ஏமாத்திருவான். யாரு சொன்னாலும் இந்த விசயத்துல கேக்கவே மாட்டான். உடம்பு சரியில்லைன்னா வெளியவே சொல்ல மாட்டான். கடைசி நேரத்துல மயக்கத்துல கூட்டிட்டு போய் தான் சரியாகும். ஆனா நீ சொன்னா முதல்ல அடம்பிடிச்சா கூட அப்புறம் கேக்கறான். அதனால அவனுக்கு நீ தான் சரியான ஆளு. சரி வா சாப்டலாம். என்னங்க வாங்க சாப்டலாம்’, என தமிழ் அம்மா கூப்பிட எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
‘நிலா தமிழ் நல்லா தூங்குனானா.’, என தமிழ் அப்பா கேட்க,
‘ம் அவன் நல்லா தான் தூங்கிருக்கான். நிலாவ தான் தூங்க விடல. அவன பத்தி உங்களுக்கு தெரியாதா’, என தமிழ் அம்மா கேட்க,
‘பரவால்ல அங்கிள் கொஞ்ச நேரம் தூக்கத்துல பயந்து அழுதாரு அப்புறம் நல்லா தூங்கிட்டாரு’, என நிலா சொல்ல,
‘சரி சாப்ட்டு நீயும் போய் ரெஸ்டு எடு. ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் ரெண்டு நாளைக்கு லீவு நான் வரேன்னு சொல்லிட்டேன். ராஜி அப்ப நான் கிளம்பட்டுமா’, என தமிழ் அப்பா சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
‘ஆன்டி தமிழுக்கு பால் குடுக்கலாமா’, என நிலா கேட்க,
‘வேண்டாம் நிலா அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிருவான்ல சாப்பாடே ஊட்டி விட்டுக்கலாம்’, என தமிழ் அம்மா சொல்ல இருவரும் சேர்ந்து மேலே சென்றனர்.
இருவரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து தமிழை பார்த்துக் கொண்டனர்.
‘ஆன்டி நீங்க மாத்திரை போட்டீங்களா’, என நிலா கேட்க,
‘இல்ல நிலா நீ கேக்கவும் தான் ஞாபகம் வருது. இவன பாக்க இங்க வந்துட்டனா அதுல மறந்துட்டேன்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘என்ன ஆன்டி நீங்க. இருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்’, என சொல்லி விட்டு நிலா கீழே சென்று மாத்திரையை எடுத்து கொண்டு வந்து தமிழ் அம்மா விடம் கொடுக்க அவர் அதை போட்டு கொள்ள மீண்டும் வந்து தமிழ் அருகில் உட்கார்ந்த படி இருவரும் அவனை பார்த்துக் கொண்டனர்.
தமிழ் சீக்கிரம் குணமாவானா?
பழையவைகள் அவனுக்கு ஞாபகம் வருமா?
தொடரும்…
