நீ எனக்கு தந்த காதல் – 39.
பாரதிக்கான பெண் அவனுக்கு அமையும் தருணம்.
பாரதிக்கு பொண்ணு பார்க்க அவர்கள் வீட்டுக்கு அனைவரும் போய் சேர்ந்தனர்.
Advertisement
இனி,
பெண் வீட்டார் வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்று உட்கார வைத்து உபசரித்தனர்.
Advertisement
Advertisement
‘நிலா இத அவங்க கிட்ட குடுத்துட்டு போய் பொண்ணுக்கு நம்ம கொண்டு வந்த பூவ வச்சுவிட்டுட்டு வா’, என நிலா அம்மா சொல்ல நிலாவும் பொண்ணு எங்க இருக்காங்க ன்னு கேட்டுட்டு போய் பார்க்க தன் தோழிகள் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தைகள் சூழ கொஞ்சம் பயத்துடன் அந்த பெண் உட்கார்ந்திருக்க,
”என் பேரு நிலா. என் தம்பி பாரதிக்கு தான் உங்கள பாக்க வந்துருக்கோம். உங்க பேரு’, என நிலா ஒவ்வொன்றாய் சகஜமாக பேசி அனைத்தையும் விசாரித்து விட்டு அங்கிருந்து வந்து ஹாலில் உட்கார அதற்குள் பொண்ணு வீட்டாருடன் அவர்களை பற்றி தமிழ், பாரதி, நிலா அம்மா எல்லோரும் பேசி தெரிந்து கொண்டு தங்களை பற்றி அவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
Advertisement
இடையில் பெண்ணை காபி கொண்ட வர சொல்லி மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டினர்.
எல்லாம் முடிந்ததும் நிலா அம்மா, ‘எங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கு . உங்க சைடு எல்லார் கிட்டயும் கேட்டுட்டு போன் பண்ணுங்க. சரிங்க அப்ப நாங்க கிளம்பறோம். ‘, என சொல்லி விட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினர்.
‘டேய் பாரதி பொண்ணு அழகா இருக்கா டா. ஆனா பாவம் டுவல்த் வரைக்கும் தான் படிச்சிருக்கா. மிடில் கிளாஸ் பேமிலி தான். பாக்க அமைதியான பொண்ணு மாதிரி தான் தெரியுது. உனக்கு ஓகே தான ‘, என நிலா கேட்க,
‘ம் ஓகே தான். நானும் அம்மாவும் முன்னாடியே எல்லாத்தையும் விசாரிச்சிட்டோம். நான் ஓகே சொன்னதுக்கு பிறகு தான் பொண்ணே பாக்க போனோம்.’, என பாரதி சொல்ல,
‘ஆமா நிலா அவன் கிட்ட முத சம்மதத்த கேட்டுட்டு தான் நான் இந்த முடிவ எடுத்தேன். அது மட்டும் இல்ல வந்த நாலஞ்சு சம்பந்தத்தில இருந்து இந்த பொண்ண ஓகே பண்ணதே அவன் தான்’, என நிலா அம்மா சொல்ல,
”சூப்பர் பாரதி. பொண்ணு கம்மியா படிச்சிருக்குன்னு தெரிஞ்சும் ஓகே சொல்லி இருக்க ‘, என தமிழ் கேட்க,
‘மாமா நீங்க வேற எனக்கு வர பொண்ணுங்க எல்லாம் என்னை விட அதிகமா படிச்சிட்டு வெளிநாட்ல நெறைய சம்பாதிக்கறாங்க. அந்த மாதிரி பொண்ணுங்கள கட்டி கிட்டா அப்புறம் நான் அவங்க சொல்ற வேலைய கேட்டு கிட்டு வீட்ல அவங்களுக்கு ஹஸ்பன்டா வேல பாக்க வேண்டி இருக்கும். ஏதோ என் அதிர்ஷ்டம் இந்த பொண்ணு எனக்கு கிடைச்சா. இந்த பொண்ண கல்யாணம் பண்ணி கிட்டா அவ நம்மள பாத்துக்குவா. அப்டியே என் பிஸ்னஸ்க்கும் எனக்கு ஹெல்ப் பண்ணுவா நிலா உங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி. இது எல்லாத்தையும் விட இந்த பொண்ணு போட்டோவ பாத்த வுடனே என் மனசுல இவ தான் எனக்கானவன்னு தோனுச்சு. அதனால தான் நான் ஓகே ன்னு சொல்லிட்டேன்’, என பாரதி சொல்ல,
‘பரவால்ல பாரதி நல்லா யோசிச்சு நல்ல முடிவா தான் எடுத்திருக்க. ஏய் நிலா பாரு நீ தான் என் தம்பிக்கு வெளி உலகம் தெரியாது அவன் இன்னும் சின்ன பையனாவே நடந்துக்குறான்னு அடிக்கடி ஃபீல் பண்ணுவ. ஆனா உன் தம்பி நல்லா வளந்துட்டான்னு உனக்கு இப்ப தெரியுதா’, என தமிழ் கேட்க,
‘ஆமா தமிழ் எனக்கே ஆச்சர்யமா இருக்கு. என் தம்பியா இது இவ்ளோ அறிவா, பொறுப்பா ஆயிட்டானேன்னு’, என நிலா கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க பாரதி அவளை முறைத்தான்.
இப்படியே அனைவரும் பேசிக் கொண்டே வந்தனர். நிலா வீடு வந்ததும் பாரதியும், நிலா அம்மாவும் இறங்கி விட்டு தமிழையும் நிலாவையும் உள்ளே வர சொல்லி கூப்பிட,
‘நிலாம்மா டயர்டா இருப்பீங்க நீங்க போய் ஃபர்ஸ்ட் ரெஸ்ட் எடுங்க. நாங்களும் கிளம்பறோம். இன்னொரு நாள் வறோம்’, என தமிழ் சொல்ல வேறு வழி இல்லாமல் பாரதியும், நிலா அம்மாவும் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
நிலா தனக்கு டயர்டாக இருக்க, காற்று இதமாக வீசியதால் அப்படியே சீட்டில் சாய்ந்த படி தூங்கி கொண்டு வர வீடு வந்ததும் காரை நிறுத்தி விட்டு நிலாவை பார்த்த தமிழ்,
‘தூங்கும் போது கூட எப்டி டி நீ இவ்ளோ அழகா இருக்க. நிலா ஒரு வேல நீ என் வாழ்க்கைல வராம இருந்திருந்தா காதல் மேல எனக்கு நம்பிக்கையே வந்து இருக்காது. உன்ன பாக்கற வரைக்கும் எனக்கு காதல் மேல நம்பிக்கையே இல்ல. என்னை பொறுத்த வரைக்கும் காதல்னா ஜஸ்ட் ஒருத்தர் மேல ஒருத்தர்க்கு வர ஒரு வித ஈர்ப்பு அவ்னோ தான்னு நான் நினச்சு கிட்டு இருந்தேன். ஆனா காதல்ங்கறது ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அளவு கடந்த அன்பு, அசைக்க முடியாத நம்பிக்கை, பிரிக்க முடியாத உறவு, சொல்ல தெரியாத உணர்வு, அடக்க முடியாத இன்பம், என இத்தனையும் கலந்ததுன்னு எனக்கு உன்னை பாத்ததுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது. உன் கூட நான் சேர்ந்து வாழ்ந்த நாட்கள நினச்சு கிட்டே என்னோட மீதி வாழ்க்கைய ஓட்டிருவேன்.’, என தனக்குள் நினைத்த படி மெதுவாக நிலா அருகில் சென்று அவள் நெற்றியில் தமிழ் முத்தமிட்டான்.
அந்த நேரம் பார்த்து நிலா முழித்து கொள்ள தமிழ் வேகமாக தன் சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.
‘தமிழ் நம்ம வீடு வந்துருச்சா. ஏன் என்னை எழுப்பல’ என நிலா கேட்க,
‘ம் நீ தூக்கத்துல இருந்த, நான் உன் மேல மயக்கத்துல இருந்தேன் அதான் எழுப்ப முடில’, என தமிழ் தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பல’ என சொல்ல,
‘ஆமா தமிழ் ரொம்ப டயர்டா இருந்துச்சு பத்தாததுக்கு காத்து வேற இதமா இருந்துச்சா அதான் தூங்கிட்டேன்’, என நிலா சொல்ல,
‘சரி வா உள்ள போலாம்’, என தமிழ் சொல்ல இருவரும் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றனர்.
‘தமிழ், நிலா ரெண்டு பேரும் பிரஷப் ஆகிட்டு வாங்க சாப்டலாம்’, என தமிழ் அம்மா சொல்ல இருவரும் மேலே சென்று பிரஷப் ஆகி விட்டு வந்தனர். அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டே பாரதிக்கு பொண்ணு பாக்க சென்ற இடத்தில் நடந்த விசயங்களை பற்றியும் அந்த பொண்ணை பற்றியும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் நிலாவும், தமிழும் தமிழ் பெற்றோரிடம் சொல்லி முடித்தனர்.
‘எப்டியோ பாரதிக்கு இந்த சம்பந்தம் நல்ல படியா முடிஞ்சா நிலா வோட அம்மாக்கு கடமை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருக்கும். இல்ல டா தமிழ்’, என தமிழ் அம்மா கேட்க நிலா தமிழை பார்க்க,
தமிழ் என்ன சொல்வது என்று தெரியாமல், ‘ஆமா ராஜி’, என சொல்லி விட்டு மேலே சென்று விட,
‘நிலா நான் கதவ சாத்திக்கறேன் நீ போய் படும்மா’, என தமிழ் அப்பா சொல்ல நிலாவும் மேலே சென்றாள்.
தமிழ் அப்பா கதவை சாத்தி விட்டு வர தமிழ் அம்மாவும் அவரும் தங்கள் ரூமுக்கு படுக்க சென்றனர்.
தமிழ் தன் லேப் டாப்பில் எதோ வேலை செய்து கொண்டிருக்க
‘தமிழ் தூங்கல’, என நிலா கேட்க,
‘இல்ல நிலா எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு. அத முடிச்சிட்டு நான் தூங்கிக்கறேன். நீ தூங்கு’, என தமிழ் சொல்ல,
‘நான் எதுவும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வா’, என நிலா கேட்க,
‘இல்ல வேணாம். அரை மணி நேர வேல தான் நானே பாத்துக்கறேன்’, என தமிழ் சொல்ல நிலா தூங்க சென்றாள்.
காரில் வர வர தூங்கிக் கொண்டு வந்ததால் நிலாவுக்கு இப்போது தூக்கம் வரவில்லை.
அப்படியே வேலை பார்க்கும் தமிழை பார்த்த படி படுத்துக் கொண்டு, ‘தமிழ் எனக்கு உங்கள பத்தி எல்லாம் தெரியும்னு கர்வத்தோட இருந்தேன். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு உங்கள பத்தி எதுவுமே தெரியலைன்னு. என் வாழ்க்கைல முதல்ல நீங்க முதலாளியா வந்தீங்க, அப்புறம் உங்க கேர்ள் ஃபிரண்டா நடிக்க கான்ட்ராக்ட் போட்டீங்க, ஒரு வெல் விஷ்ஷரா எனக்கு ஹெல்ப் பண்ணீங்க, ஒரு லவ்வரா என் ஆசைய நிறைவேத்த பக்க பலமா இருந்தீங்க, என்னைய விட்டு பிரியாம கல்யாணம் பண்ணி கிட்டீங்க, எல்லா மறந்து போனப்ப கூட என்னைய கஷ்டபடுத்தல, திரும்ப கொஞ்சம் கொஞ்சமா என் சந்சோஷத்த எனக்கு திருப்பி குடுத்தீங்க. ஆனா இப்ப கடைசில யாரோ மாதிரி என்னை உங்கள விட்டு பிரிஞ்சு போக சொல்றீங்க. உங்க மனசுல என்ன நினக்கறீங்கன்னு எனக்கு தெரியல. என் மனசுல உங்கள மட்டும் தான் நான் நினச்சு கிட்டு இருக்கேன். எது எப்டி இருந்தாலும் இந்த ஜென்மத்துக்கு நீங்க தான் என் புருஷன், நான் தான் உங்க பொண்டாட்டி. இத மாத்த உங்களால மட்டும் இல்ல யாராலயும் முடியாது. மாத்தவும் நான் விட மாட்டேன்’, என நிலா தனக்குள் தமிழை பற்றி நினைத்து கொண்டே அப்படியே தூங்கி போனாள்.
தமிழ் அந்த ஆஸ்ட்ரேலியா கம்பெனிக்கு வேலையில் சேருவதற்காக மெயில் அனுப்பி விட்டு லைட்டை ஆஃப் பண்ணி விட்டு வந்து நிலாவுக்கு போர்வையை எடுத்து போர்த்தி விட்டு,
‘சாரி நிலா. நான் செய்யறது தப்பா, ரைட்டான்னு கூட எனக்கு தெரியல. ஒன்னே ஒன்னு எப்பவும் உனக்கு எந்த கஷ்டமும் வர கூடாது அதுவும் முக்கியமா என்னால உனக்கு கஷ்டம் வரவே கூடாது. இப்ப நான் செய்றது உன்ன கஷ்ட படுத்துனா கூட பின்னாடி நீ நிம்மதியா இருப்ப. காலம் சிறந்து மருந்து ன்னு சொல்லு வாங்க. நானும் அத நம்பி தான் இத செய்றேன். பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு.’, என தமிழ் தனக்குள் நினைத்து கொண்டு அவனும் தூங்கினான்.
காலையில் இருவரும் எழுந்து எப்போதும் போல் ஆபிஸ்க்கு கிளம்பி கீழே வர அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர்.
தமிழ் நிலாவை விட்டு தூரமாக செல்வானா?
தொடரும்…
