Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 45 (Final Episode).

தமிழ், நிலா இருவரும் தங்கள் காதலில் அடுத்த கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைக்கின்றனர்.

 

தமிழ், நிலா இருவரும் மட்டும் தனியாக இருந்தனர்.

 



Advertisement

இனி,

 

இருவரும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

 

Advertisement

அதில் ஓடிய படத்தில் ரொமேன்ஸ் காட்சி வர தமிழ், நிலாவை பார்த்து,

 

‘ஏன் நிலா காதல், ரொமேன்ஸ், செக்ஸ் இத பத்தி எல்லாம் நீ என்ன நினக்கற.’, என கேட்க,

Advertisement

 

‘அதான் நீங்களே வரிசையா சொல்லிட்டீங்களே. அதாவது முதல வரது காதல். யாரோ ஒருத்தர மட்டும் பாத்த உடனே மனசுக்குள்ள தோனும் இவங்க தான் நம்ம லைஃப் பார்ட்னர் ன்னு. சிலருக்கு அது பர்ஸ்ட் மீட்ல வரலாம், சிலருக்கு பழக பழக வரலாம். செகண்ட் ஒன் ரொமேன்ஸ் அதாவது ஆசை. காதல் கொஞ்சம் வளர்ந்து ஒருத்தர பத்தி ஒருத்தர் தெரிஞ்சதுக்கு பிறகும் இவங்க தான் நம்ம லைஃப் பார்ட்னர் ன்னு ஸ்ட்ராங்கா தோனும். அப்ப ஆரம்பிக்கற அந்த ஆசைக்கு பேரு தான் ரொமேன்ஸ். இதுல ரெண்டு வகை. ஒன்னு பிசிக்கல் டச். தங்களோட காதல தொட்டு, கட்டி பிடிச்சு,  கிஸ் பண்ணி இப்டி எல்லாம் காட்றது. இன்னொன்னு தொடாம கண்ணால, சைகையால, மனசால அன்ப பரிமாறிக்கறது. ஆக்சுவலா பர்ஸ்ட் ஒன்ன விட செகண்ட் ஒன் தான் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அப்புறம் லாஸ்ட் செக்ஸ். காதலோட முதிர்ச்சி தான் இந்த செக்ஸ். அதாவது எப்ப நமக்கு இவங்க நம்மளோடவுங்கன்ற எண்ணம் ஸ்ட்ராங்க் ஆகுதா அப்ப தானாவே நீங்க அவங்க மேல உரிமை எடுத்துக்கறது. ‘, என நிலா சொல்ல,

 

‘நைஸ் எக்ஸ்ப்ளனேசன் நிலா. சரி இப்ப நாம ரெண்டு பேரும் எதுல இருக்கோம்.’, என தமிழ் கேட்க,

 

‘ம் அப்பைல இருந்து இப்ப வரைக்கும் நாம பர்ஸ்ட் ஸ்டெப்ல தான் இருக்கோம். ‘, என நிலா சொல்ல,

 

‘சரி நான் உனக்கானவன்னு உனக்கு எப்ப தோனுச்சு’, என தமிழ் கேட்க,

 

‘பர்ஸ்ட் மீட்ல எல்லாம் இல்ல. கொஞ்சம் கொஞ்சமா உங்கள புரிஞ்சுக்க ஆரம்பிக்கும் போது தான் தோனுச்சு. ஆனா கரெக்டா எப்பன்னு தெரியல.’, என நிலா சொல்ல,

 

‘என்னை பொறுத்த வரைக்கும் லவ்ல பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. கல்யாணத்துக்கு பின்னாடி பொண்டாட்டிய லவ் பண்ணிக்கலாம்னு யோசிச்சவன் நான். ஆனா எப்டி எனக்கு லவ் மேரேஜ்ன்னு அடிக்கடி எனக்கு டவுட் வரும். இப்ப நீ சொன்னல காதல்னா ஒருத்தர பாக்கும் போது இவங்க நமக்கானவங்க ன்னு தோனும்னு. அது மாதிரி தான் எனக்கு உன்ன பாக்கும் போது முன் ஜென்ம பந்தமா என்னமோ தெரியல நீ எனக்கானவன்னு தோனும். அப்புறம் நீ பழகுற விதத்தை வச்சு புரிஞ்சு கிட்டேன் லவ்ல இன்ட்ரஸ்டே இல்லாத என்னை கூட லவ் பண்ண வச்சிருக்கன்னு’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இப்ப திடீர்னு ஏன் இந்த டாப்பிக் வந்துச்சு. ‘, என நிலா கேட்க,

 

‘ம் இந்த படத்துனால தான். டாப்பிக் சேஞ்ச் நைட் டின்னர் ரெடி பண்ணலாமா.’, என தமிழ் சொல்ல,

 

”ஓகே ஃப்ரிட்ஜ்ல இருந்து தோசை மாவையும், தக்காளி தொக்கயும் வெளிய எடுத்து வச்சிருங்க. கொஞ்ச நேரம் கழிச்சு தோசை ஊத்தி சாப்டலாம்’, என நிலா சொல்ல,

 

‘சரி நான் போய் எடுத்து வச்சிட்டு வரேன்’, என தமிழ் சொல்லி விட்டு போய் எடுத்து வைத்து விட்டு வந்தான்.

 

இருவரும் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு பின்னர் போய் தோசை ஊற்ற சென்றனர்.

 

தமிழ் நிலாவை தோசை ஊற்ற விடாமல் தான் ஊற்ற அது சரியாக எடுக்க வராததால்,

 

‘ஒரு தோசை ஊத்த தெரியல உங்கள கட்டி கிட்டு நான் என்ன அவஸ்தை பட போறேனோ’, என நிலா கிண்டல் செய்து விட்டு ஒரு கையால் தோசையை ஊற்ற,

 

‘நிலா சூப்பர் டி. தோசைய பாத்ததும் எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுச்சு’, என தமிழ் சொல்ல நிலா தோசை ஊற்றி தப்டில் வைத்து குடுக்க தமிழ் அவனும் சாப்பிட்டு நிலாவுக்கும் ஊட்டி விட இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

 

பிறகு கதவை சாத்தி விட்டு இருவரும் தங்கள் ரூமிற்கு சென்றனர்.

 

‘நிலா வலிக்குதா.’, என தமிழ் நிலா கையை பிடித்துக் கொண்டு கேட்க,

 

‘ரொம்ப இல்ல ஆனா லைட்டா வலிக்குது’, என நிலா சொல்ல,

 

‘என்னால தான எல்லாம். நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டனா’, என தமிழ் கேட்க,

 

‘தமிழ் அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் தான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்.’, என நிலா சொல்ல,

 

‘சரி இப்ப அத பத்தி எதுக்கு. வா நம்ம தூங்கலாம்’, என தமிழ் சொல்லி விட்டு லைட் ஆஃப் பண்ண,

 

‘என்னது ரெண்டு பேரும் ஒன்னா தூங்கலாமா. எனக்கு ஓகே தான்’, என நிலா சொல்ல,

 

‘ம் ஆசை தான். எதா இருந்தாலும் கை சரியாகட்டும். அப்புறம் பாத்துக்கலாம். அது வரைக்கும் நீ சொன்னியே தொடாம மனசுக்குள்ளயே நினச்சுக்கறது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு அத பண்ணு. ஓகே வா குட் நைட்’, என தமிழ் சொல்ல,

 

‘அப்ப கை சரியானதும் ரொமேன்ஸ் பண்ணலான்னு சொல்றீங்க. ‘, என நிலா சொல்ல,

 

‘விளையாடாமா படு’, என தமிழ் சொல்ல,

 

‘சரி எனக்கு தான கைல அடி பட்ருக்கு. நீங்க என்னய தொடலாமே’, என நிலா சொல்ல,

 

அருகில் வந்து நிலாவை கட்டி பிடித்து கொண்டு, ‘இப்ப ஓகே வா.’, என தமிழ் கேட்க,

 

‘ம் தேங்க் யூ’, என சொல்லி விட்டு நிலா சந்தோஷமாக தூங்க தமிழும் சந்தோஷமாக தூங்கினான்.

 

காலையில் தமிழ் எழுந்து ஆபீஸ்க்கு கிளம்ப,

 

‘தமிழ் நானும் ஆபீஸ்க்கு வரேன். ப்ளீஸ் இங்க தனியா இருந்தா போரடிக்கும். ஆன்டி, அங்கிள் வந்ததும் நான் வந்தரேன்’, என நிலா சொல்ல,

 

‘அதுவும் கரெக்ட் தான். சரி கிளம்பு. ஒரு நிமிஷம் இரு’, என சொல்லி தமிழ் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து பழைய கட்டை பிரித்து காயத்தை சுத்தம் செய்து புது கட்டு போட்டு அதன் மேல் குளிக்கும் போது தண்ணீர் படாமல் இருக்க பிளாஸ்டிக் கவரை கட்டிவிட்டான்.

 

‘தேங்க்ஸ் மை டியர்’, என சொல்லி விட்டு போய் நிலா குளித்து கிளம்ப இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு ஆபீஸ்க்கு கிளம்பினர்.

 

ஆபீஸில் நந்தினி நிலா கையில் கட்டை பார்த்து விட்டு பதறி போய் என்ன என்று கேட்க நிலா நடந்ததை சொல்ல நந்தினி அவளது முட்டாள் தனமான முடிவை கேட்டு அவளை திட்டி தீர்த்துவிட்டு பின் சமாதானப்படுத்தினாள்.

 

தமிழ் அம்மா போன் செய்ய தமிழும், நிலாவும் சேர்ந்து சென்று அவர்களை வீட்டுக்கு கூட்டி வந்தனர்.

 

தமிழ் நிலாவை விட்டுவிட்டு அவன் மட்டும் ஆபீஸ்க்கு சென்றான்.

 

தமிழ் கவினுக்கு போன் பண்ணி, ‘கவின் எனக்கு ஒரு ஹெல்ப். நானும், நிலாவும்  ஹனிமூன் ட்ரிப் எங்க போலாம்னு ப்ளான் பண்ணம்மோ அதே இடத்துக்கு இப்ப ரெடி பண்றியா. ஏன்னா எனக்கு தான் ஞாபகம் இல்லயே’, என கேட்க,

 

‘கண்டிப்பாடா இதுக்காக தான் இத்தன நாள் நாங்க குத்திட்டு இருந்தோம். உடனே ரெடி பண்றேன்’, என சொல்லி வைத்தான் கவின்.

 

சாயங்காலம் வீட்டுக்கு வந்து தமிழ் தன் முடிவை எல்லார் மத்தியிலும் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்ல நிலா அவள் பங்குக்கு வெட்கப்பட்டு  அளவில்லா மகிழ்ச்சியுடன் தங்கள் ரூமுக்கு ஓடினாள்.

 

தமிழ், நிலா, கவின், யாழினி என எல்லா வீட்டு ஆட்களிடமும் மற்றும் ஃபிரண்ட்ஸ்களிடமும் இந்த விசயத்தை இருவரும் சொல்ல அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக அவர்களை ஹனிமூனுக்கு அனுப்பி வைத்தனர்.

 

தமிழ், நிலா காதல் தொடரும்…

 

கதை முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!