Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 44.

தமிழ், நிலா இருவரும் சேர்ந்து இருக்கும் தருணம்.

 

தமிழ், நிலா இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

 



Advertisement

இனி,

 

‘நிலா நீ தூஙகு. ‘, என சொல்லி விட்டு தமிழ் போய் லேப்டாப்பை எடுத்து வந்து நிலா பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தான்.

Advertisement

 

Advertisement

நிலா எழுந்து வந்து தமிழ் மடியில் படுக்க,  ‘ஏய் என்னாச்சு நிலா’, என தமிழ் கேட்க,

 

‘உங்க மடில படுக்கனும் போல இருந்துச்சு அதான். கொஞ்ச நேரம் படுத்துகறேன் ப்ளீஸ். உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’, என நிலா சொல்ல,

Advertisement

 

‘எவ்ளோ நேரம் வேணாலும் படுத்துக்கோ. ஓகே வா’, என சொல்லி விட்டு தமிழ் நிலாவின் தலையை தடவிக் கொடுத்தான்.

 

நிலா அப்படியே தூங்கி போக தமிழ் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

 

அப்போது கவினிடம் இருந்து போன் வந்தது.

 

தமிழ் அதை அட்டண்ட் பண்ண,  ‘வீட்டுக்கு போய்ட்டா போன் பண்ண மாட்டியா’, என கவின் கேட்க,

 

‘சாரி டா வீட்டுக்கு வந்ததும் ரெண்டு பேரும் சாப்டோம். அப்புறம் நிலாவ தூங்க வச்சுட்டு ஆபிஸ் வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டேன்’, என தமிழ் சொல்ல,

 

‘என்னது நிலாவ கவனிச்சுக்காம ஆபிஸ் வேலைய பாத்துட்டு இருக்கியா. நிலா தூங்குனாலும் பரவால்ல அவள முத எழுப்பு. நான் அவ கிட்ட கொஞ்சம் பேசனும்’, என கவின் சொல்ல,

 

‘அப்டி என்ன பேச போற’, என தமிழ் கேட்க,

 

‘ம் இவனுக்காக வா நீ சாகுற வரைக்கும் போன. இவன் அந்தளவுக்கு ஒர்த் இல்லன்னு சொல்ல தான் ‘, என கவின் சொல்ல,

 

‘டேய் இப்ப என்னய என்ன தான் பண்ண சொல்ற’, என தமிழ் கேட்க,

 

‘உனக்கு மூளை பிஸ்னஸ்ல வேல செய்ற அளவுக்கு ஏன் லவ், அஃபெக்ஷன்ல செய்ய மாட்டேங்குது. இதெல்லாம் சொல்லி குடுத்து செய்றது இல்ல. அதுவா வரனும்’, என கவின் சொல்ல,

 

‘எனக்கு தான் ரொமேன்ஸே வர மாட்டேங்குதே. ‘, என தமிழ் சொல்ல,

 

‘டேய் இதுக்கு எல்லாம் க்ளாஸா எடுப்பாங்க. நிலா கிட்ட பேசும் போது, பாக்கும் போது உனக்கு என்ன மனசுக்குள்ள தோனுதோ அத செய். அவள கிஸ் பண்ணனும் தோனுதா கிஸ் பண்ணு, கட்டி பிடிக்கனும்னு தோனுதா நல்லா இறுக்கி கட்டி பிடிச்சுக்கோ. அழகா இருக்கான்னு தோனுதா அத அவ கிட்ட சொல்லு. இதுக்கு பேர் தான் ரொமேன்ஸ் பண்றது. புரியுதா’, என கவின் சொல்ல,

 

‘டேய் எப்ட்றா கவின்’, என தமிழ் கேட்க,

 

‘டேய் தமிழ், சார் இதுல மாஸ்டர் டிகிரியே வாங்கி இருக்கேன். டவுட்னா என்ன கேளு சரியா’, என கவின் சொல்ல,

 

‘சரிங்க குருவே இனிமே என்ன டவுட்னாலும் உங்களையே கூப்டறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி யாழினி கூப்டறா. நான் போய் என்னன்னு கேக்கல அவ்ளோ தான் என்னைய உண்டு இல்லன்னு பண்ணிடுவா. நான் போய் பாக்கறேன்’, என கவின் சொல்ல,

 

‘இப்ப தான் என்னவோ பெரிய இவனாட்டம் எனக்கு க்ளாஸ் எடுத்துட்டு இருந்த. அதுக்குள்ள யாழினி குரல் கேட்டதும் இப்டி பயந்து ஓடற’, என தமிழ் கிண்டல் பண்ண,

 

‘டேய் அறிவு கெட்டவனே இதுவும் ரொமேன்ஸ்ல ஒரு பார்ட் தான். இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.  அனுபவிச்சு பாத்தா தான் புரியும். நீயும் ட்ரை பண்ணி பாரு. சரி பாய்’, என சொல்லி விட்டு கவின் போனை கட் செய்தான்.

 

தமிழ் கவின் சொன்னதை நினைத்துக் கொண்டு மடியில் படுத்திருக்கும் நிலாவை பார்த்தான்.

 

நிலா அழகாக தூங்கி கொண்டிருக்க அவள் முகத்தில் முடி வந்து உரச அதை பார்த்த தமிழ் அதை மெதுவாக எடுத்து விட்டு அவளை ரசித்து கொண்டிருந்தான்.

 

சாயந்தரம் ஆனதும் நிலா கண் முழித்தாள். அதை பார்த்த தமிழ், ‘நிலா எதாவது வேனுமா’, என கேட்க,

 

‘இல்ல தமிழ் வாஷ்ரூம் போகனும்’, என நிலா சொல்ல,

 

‘சரி பாத்து போய்ட்டு. வா. கைல தண்ணி படாம பாத்துக்க’, என தமிழ் சொல்ல,

 

‘ம் ஓகே’, என சொல்லி விட்டு நிலா எழுந்து போனாள்.

 

‘நிலா நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்’, என தமிழ் சொல்ல,

 

‘தமிழ் உங்களுக்கு போட தெரியுமா’, என நிலா கேட்க,

 

‘தெரியும். சரி நீ வந்ததுக்கு பின்னாடி நாம ரெண்டு பேரும் போலாம்’, என தமிழ் சொல்ல நிலா வாஷ்ரூம் சென்று திரும்பி வந்தாள்.

 

‘ம் வாங்க போலாம்’, என நிலா சொல்ல இருவரும் கீழே இறங்கி சமையலறைக்கு சென்றனர.

 

நிலா சொல்ல சொல்ல தமிழ் டீ போட்டான். பிறகு இருவரும் சேர்ந்து டீ குடித்தனர்.

 

‘டீ சூப்பரா இருக்குல்ல தமிழ்’, என நிலா கேட்க,

 

‘ஆமா யார் போட்டது. அய்யா போட்டதில்ல அதான் இவ்ளோ சூப்பரா இருக்கு’, என தமிழ் பீத்தி கொள்ள நிலா சிரித்தாள்,

 

‘இப்ப ஏன் சிரிக்கற. நான் சொன்னது கரெக்ட் தான’, என தமிழ் கேட்க,

 

‘ஆமா ஆமா நீங்க போட்டனால தான் டீ இவ்ளோ சூப்பரா இருக்கு.’, என நிலா சொன்னாள்.

 

அப்போது தமிழ் அம்மாவிடம் இருந்து தமிழுக்கு போன் வந்தது.

 

தமிழ் அதை அட்டண்ட் பண்ண, ‘தமிழ் வீட்டுக்கு வந்துட்டீங்களா. டீ போட்டு குடிச்சீங்களா’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘அத ஏன் கேக்குற ராஜி’, என தமிழ் நடந்ததை சொல்ல வர நிலா அதை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என சைகை காட்டினாள்.

 

‘தமிழ் என்ன டா நடந்துச்சு’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘அது ஒன்னுமில்ல ராஜி. இன்னிக்கு நாங்க சீக்கிரமே வேலைய முடிச்சிட்டு வந்துட்டோம். ‘, என தமிழ் சமாளிக்க,

 

‘சரி டீ போட்டு குடிச்சீங்களா’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ஓ நான் தான் இன்னிக்கு நிலா சொல்ல சொல்ல டீ போட்டேன். டீ சூப்பரா இருந்துச்சு தெரியுமா’, என தமிழ் சொல்ல நிலா தன் தலையில் அடித்துக் கொண்டாள்,

 

‘நீ டீ போட்டியா. ஏன் நிலா போடல’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘இல்ல ராஜி அவளுக்கு தான் கைல கட்டு போட்ருக்குல்ல. அதான் நான் போட்டேன்’, என தமிழ் சொல்ல நிலா அவனை முறைத்தாள்.

 

‘என்னது நிலா கைல கட்டு போட்ருக்கா எதுக்கு’, என தமிழ் அம்மா கேட்க

 

‘அது வந்து இரு நிலா எதோ உன் கிட்ட பேசனுமா’, என சொல்லி விட்டு தமிழ் நிலாவிடம் போனை குடுக்க,

 

‘ஆன்டி ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா. மேரேஜ் நல்ல படியா முடிஞ்சுதா ஆன்டி. ‘, என நிலா கேட்க,

 

‘ம் எல்லா நல்லா இருக்காங்க. கல்யாணமும் நல்ல படியா முடிஞ்சுது. அது இருக்கட்டும் உனக்கு ஏதோ கைல கட்டு போட்ருக்குன்னு தமிழ் சொன்னான். என்ன ஆச்சு’, என தமிழ் அம்மா பதட்டமாக கேட்க,

 

‘அது வந்து ஆன்டி காலைல பால் பாக்கெட் கட் பண்ணலாம்னு கத்தி எடுத்தேன். தெரியாம என் கைல விழுந்து மணிகட்ல அடிபட்ருச்சு. அதான் கட்டு போட்ருக்கேன்’, என நிலா சொல்ல,

 

‘ஏம்மா பாத்து கட் பண்ண கூடாதா. ஹாஸ்பிடல் போனீங்களா’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ம் தமிழ் தான் கூட்டிட்டு போனாரு. ஆன்டி’, என நிலா சொல்ல,

 

‘சரி நீ எதுவும் செய்யாத. தமிழ செய்ய சொல்லு. நாளைக்கு நாங்க வந்துருவோம். தமிழ் கிட்ட குடு’, என தமிழ் அம்மா சொல்ல நிலா தமிழிடம் போனை குடுத்தாள்.

 

‘சொல்லு ராஜி’, என தமிழ் கேட்க,

 

‘டேய் நிலாவ வேல செய்ய விடாத. நீயே எல்லா வேலயும் செய். புரிஞ்சுதா. நாளைக்கு காலைல இங்கிருந்து கிளம்பறோம். அங்க வந்ததும் உனக்கு போன் பண்றோம். நீ வந்துரு. அது வரைக்கும் என் மருமகள பத்திரமா பாத்துக்க சரியா’,  என தமிழ் அம்மா சொல்ல,

 

‘சரிம்மா தாயே. நீ சொன்ன மாதிரியே நடந்துக்கறேன். ஆமா டாடி எங்க ‘, என தமிழ் கேட்க,

 

‘அவரு ஆளுங்கள பாத்துட்டா போதும் அவர கைலயே பிடிக்க முடியாது. அவங்க சொந்த பந்தங்களோட உட்கார்ந்து பேசி கிட்டு இருக்காரு’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘விடு ராஜி டாடி பாவம். எத்தன நாள் தான் உன் கூட ஜெய்ல இருக்கறது. இந்த மாதிரி டைம்ல தான் ஃப்ரீயா, ஜாலியா அவரால இருக்க முடியும்’, என தமிழ் சொல்ல,

 

‘ஏன்டா சொல்ல மாட்ட. நாளைக்கு உன் பொண்டாட்டி உன்ன எப்டி வச்சிகிறான்னு நானும் பாக்க தான போறேன்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ச்சே ச்சே என் பொண்டாட்டி எல்லாம் என் இஷ்ட படி தான் நடந்துக்குவா. உன்ன மாதிரி ஸ்டிரிட் வைஃபா நடந்துக்க மாட்டா’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா அவ கட்டி கிட்டது உன்னையல்ல. அப்ப அப்டி தான் இருக்க முடியும்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ராஜி நீ வா உன்ன வச்சுக்கறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘கவலையே படாத. நாளைக்கு வந்துருவேன். சரி நான் போன வக்கறேன்’, என சொல்லி விட்டு தமிழ் அம்மா போனை கட் செய்தாள்.

 

‘தமிழ் சொல்ல வேண்டாம்னு சொன்னா கேக்காம இப்டி என்ன மாட்டி விட்டுட்டீங்க’, என நிலா கேட்க,

 

‘எப்டியும் அவங்க நாளைக்கு நேர்ல வந்து பாக்க தான போறாங்க. அப்ப எதாவது சொல்லி தான ஆகனும் நிலா’, என தமிழ் சொல்ல,

 

‘சரி ஆனா உண்மையான ரீசன யார் கிட்டயும் சொல்ல கூடாது . ஆன்டி, அங்கிள், எங்க அம்மா, தம்பி ன்னு யாருக்கும் தெரியக் கூடாது. ஓகே வா’ என நிலா கேட்க,

 

‘இப்டி கேட்டாலாம் ஒத்துக்க முடியாது. ரெக்வஸ்டா கேளு’, என தமிழ் சொல்ல,

 

‘தமிழ் சார் கொஞ்சம் தயவு செஞ்சு இத பத்தி யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்’, என நிலா சொல்ல,

 

‘சரி ஓகே ட்ரை பண்றேன்’, என தமிழ் சொல்ல நிலா அவனை அடிக்க வர தமிழ் அங்கிருந்து எழுந்து ஓடினான்.

 

தமிழ், நிலாவின் இந்த மகிழ்ச்சி தொடருமா?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!