Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 8.

தமிழுக்கு தனது ஆசையையும் காதலையும் நிலா தெரியப்படுத்தும் தருணம்.

 

ஹரியின் பேச்சுலர் பார்ட்டிக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர்.

 



Advertisement

இனி,

 

பாட்டு டான்ஸ் என பார்ட்டி கலை கட்ட ஆரம்பித்தது. தமிழும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொண்டான்.

Advertisement

 

Advertisement

நேரம் ஆக ஆக டிரிங்ஸ் பார்ட்டியும் தொடங்கியது.

 

‘நந்தினி நான் போய் ஜீஸ் வாங்கிட்டு வரேன்’ என்று சொல்லி நிலா சென்று அங்கு வைத்திருந்த ஜீஸ் டம்ளரை எடுத்து வந்து குடிக்க,

Advertisement

 

‘நந்தினி இது புது டேஸ்டா இருக்கு. ட்ரை பண்ணி பாரேன்’ என நிலா குடுக்க,

 

‘இல்ல நிலா எனக்கு த்ரோட் சரியில்ல. நீயே குடி’ என நந்தினி கூற நிலா அதை முழுவதுமாய் குடித்து முடித்தாள்.

 

சிறிது நேரம் கழித்து நிலா கொஞ்சம் உலறிய படி பேச, நந்தினி அவள் ஜீஸ் எடுத்து வந்த இடத்தில் போய் கேட்க,  ‘சாரி மேடம் இது ஜீஸ் இல்ல. ட்ரிங்க்ஸ் ஊத்தி வச்சத தெரியாம எடுத்துட்டு போய்ட்டாங்க போல’ என சர்வ் செய்பவர் சொல்ல நந்தினிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யாரை உதவிக்கு கூப்பிடுவது என பார்த்துக் கொண்டிருக்க,

 

‘என்னாச்சு நந்தினி ஏன் பதட்டமா இருக்கீங்க. ஏதும் ஹெல்ப் வேனுமா’ என தானாக தமிழ் வந்து கேட்க,

 

நந்தினி நடந்தவற்றை எல்லாம் சொல்ல,  ‘சரி இப்போ நிலா எங்க’ என கேட்டான் தமிழ்.

 

நிலா இருக்கும் இடத்திற்கு இருவரும் செல்ல போதையில் நிலா உளறிக் கொண்டிருந்தாள்.

 

‘நந்தினி இந்த ஜீஸ்ல என்னவோ இருக்கு. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. ஆனா டேஸ்டா இருக்கு. இன்னொரு க்ளாஸ் வேனும். வாங்கிட்டு வரியா’ என நிலா உலறிய படி கீழே விழப் போக தமிழும் நந்தினியும் அவளை பிடித்துக் கொண்டனர்,

 

‘நந்தினி நல்லா போதை ஏறிடுச்சு. நான் நிலாவ அவங்க வீட்ல ட்ராப் பண்ணிறேன். யாராவது கேட்டா நிலாக்கு லைட்டா உடம்பு சரியில்ல நான் அவங்கள வீட்டுக்கு  கூட்டிட்டு போய் விடறேன்னு சொன்னதா சொல்லிடுங்க’ என சொல்லி நிலாவை கை தாங்கலாக காருக்கு கூட்டிச் சென்றான் தமிழ்.

 

‘ஆமா நாம இப்ப எங்க போறோம்’ என நிலா கேட்க,

 

‘ம் சுடுகாட்டுக்கு. ட்ரிங்க்ஸ் எது ஜீஸ் எதுன்னு கூட தெரியாம குடிச்சதும் இல்லாம டேஸ்டா இருக்கு இன்னொரு டம்ளர் வேனும்னு வேற கேக்குற. உன்னை சுயநினைவுல மட்டும் இருந்த வரக் கோபத்துக்கு கண்டபடி பேசிருவேன்’ எனத் தமிழ் திட்ட,

 

‘நீங்க யாரு எதுக்கு என்ன  திட்றிங்க’ என குழந்தை போல் அழ,

 

‘அம்மா தாயே நான் திட்டல நீ அழாத’ என தமிழ் சொல்லிக் கொண்டிருக்க நிலா அவன் மீது வாமிட் பண்ணுகிறாள். தமிழ் நிலாவை வாஷ்ரூமுக்கு கூட்டிச் சென்று அவளுக்கும் துடைத்து விட்டு தானும் துடைத்துக் கொண்டு காருக்கு கூட்டி வந்து அவளது வீட்டிற்கு செல்கிறான்.

 

‘நீங்க நெஜமாவே தமிழா’, என நிலா போதையிலேயே தமிழிடம் பேசிக் கொண்டு வந்தாள்

 

‘ம் இல்ல போலி தமிழ்’ என பதிலுக்கு தமிழ் கூற,

 

‘இல்ல நீ தமிழ் தான்னு எனக்கு நல்லா தெரியும்’ என நிலா சொல்ல,

 

‘என்னது நீயா. மரியாதை குறையுதே ‘  என தமிழ் கேட்க,

 

‘ஆமா உன்ன நான் அப்டி தான் கூப்டுவேன்டா’ என நிலா சொல்ல,

 

‘அடிப்பாவி டான்னு கூப்டற’ என்றான் தமிழ்.

 

பிறகு அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டு, ‘உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும். எங்க எப்டி எதனாலன்னு கேட்டா எனக்கே தெரியல. உன்னோட அறிவா, இல்ல உன்ன சேர்ந்தவங்கள நீ அக்கறையா பாத்துக்கற விதமா, உன்ன மாதிரி எனக்கு ஒரு ப்ரெண்ட் வேனும்ற ஏக்கமா, செஞ்சது தப்புன்னு  தெரிஞ்சதும் உனக்கு கீழ வேல பாக்குறவங்கன்னு கூட பாக்காம மன்னிப்பு கேட்டியே அதுவா, உங்கூட இருக்கவங்களுக்கு தேவை அறிஞ்சு உதவி செய்ற குணமா எதுல நான் விழுந்தேன்னு எனக்கே தெரியலடா. ஆனா இதுக்கு பேர் தான் லவ்வான்னு கூட எனக்கு தெரியல. நான் உனக்கு எந்த விதத்திலயும்  ஏத்தவ இல்லைன்னு என் அறிவு எனக்கு சொல்லுது. என் மனசு அத கேக்காம நீ எனக்கானவன்னும்  உன்னைய மிஸ் பண்ணிட கூடாதுன்னும் சொல்லுது. எனக்கே தெரியாம என்னை நீ உன் பக்கமா சாய்க்கிற. நான் என்ன பண்றேன் என்ன பண்ணனும்னு எனக்கு புரியல. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்றீயா’ என போதையில் அழுது கொண்டே தமிழ் மேல் தனக்கு இருந்த உணர்வை நிலா சொல்ல,

 

தமிழ் அவளது கண்ணை துடைத்து விட்டு, ‘நீ போதைல ஏதேதோ உலருற. போதை தெளிஞ்சா எல்லாம் சரியாகிடும்’ என கூற,

 

‘போதைல தான மனசுல இருக்கறத சொல்லுவாங்க. அப்டி பாத்தா நான் இப்ப சொன்னது தான் என் மனசுல இருக்கு. ஆமா என்ன பத்தி நீ என்ன நினக்குற. உனக்கு என்ன புடிக்குமா’ என நிலா கேட்க,

 

‘நானும் கிட்ட தட்ட உன்ன மாதிரி தான். அவ்ளோ சீக்கிரம் நான் யார்கிட்டயும் அட்டாச் ஆக மாட்டேன். ஆனா உங்கிட்ட எனக்கு செட்டாக டைமே எடுத்துக்கல. எங்க அம்மா அப்பா கிட்ட நீ பாசமா இருக்கதாலயா, எனக்கு உடம்பு சரியில்லாம போனப்ப நீ காட்ன அக்கறையா,  எல்லார் கிட்டயும் அன்பா பழகுற குணமா,  எல்லா விசயத்துலயும் பொறுமையா இருக்கறயே அதுவா, இல்ல கவின் சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதும் விட்ட குறை தொட்ட குறையா எதனால உன்னை எனக்கு பிடிச்சதுன்னு தெரியல’ என தன் மனதில் உள்ளதை சொல்லி தமிழ் திரும்பி பார்க்க நிலா அவன் சொன்னதை எதையும் கேட்காமலேயே அவன் தோளில் சாய்ந்த படி உறங்கிப் போனாள்.

 

நிலா வீடு வந்ததும் அவளை கை தாங்கலாக இறக்கி உள்ளே தமிழ் கூட்டிச் செல்ல,

 

‘என்னாச்சுப்பா’ என நிலா அம்மா பதற்றமாய் கேட்க,

 

‘ஒன்னுமில்ல அம்மா பார்டில சாப்டது ஒத்துக்கல வாமிட் பண்ணிட்டாங்க. தூங்கி எந்திருச்சா சரியாகிடும்’ என  தமிழ் சொல்ல,

 

‘வீடு வரைக்கும் கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி’ என நிலா அம்மா கூற,

 

‘சரிம்மா பாத்துக்கங்க லேட்டாச்சு நான் கிளம்புறேன்’ என சொல்லி அங்கிருந்து கிளம்பினான் தமிழ்.

 

வீட்டிற்கு செல்லும் வழியில் நிலா சொன்னதை எல்லாம் நினைத்துக் கொண்டே சென்றான் தமிழ். வீட்டிற்கு சென்று படுத்திருக்கும் போதும் அதையே நினைத்துக் கொண்டு  சந்தோஷமாய் உறங்கினான்.

 

காலையில் நிலா ஆபீஸ்கு வந்து நந்தினிக்கு குட்மார்னிங் சொல்ல,

 

‘இப்ப பரவால்லயா நிலா’ என நந்தினி கேட்க,

 

‘ஏன் நேத்து எனக்கு என்னாச்சு. நடந்தது எதுவும் எனக்கு சுத்தமா ஞாபகமில்ல. நான் எப்டி வீட்டுக்கு போனேன்’ என நிலா கேட்க,

 

‘ம் ஜீஸ்னு நினைச்சு தண்ணியடிச்சிட்டு போதைல இருந்த. தமிழ் சார் தான் உன்னை வீட்ல கொண்டு போய் விட்டாரு. பாவம் வழில அவர என்ன பாடு படுத்தினயோ யாருக்கு தெரியும்’ என நந்தினி சொன்னாள்.

 

‘அச்சச்சோ என்ன சொல்ற நந்தினி. போச்சு இப்ப எப்டி நான் அவற ஃபேஸ் பண்ண போறேன்னு தெரியல. அவரு என்ன நினைச்சிருப்பாரு’ என நிலா கேட்க,

 

‘ம் குடிகாரின்னு நினைச்சிருப்பாரு’ என நந்தினி சிரிக்க தமிழும் உள்ளே வந்து தன் அறைக்கு சென்றான்.

 

நிலா அனுமதி பெற்று தமிழ் அறைக்குள் சென்று, ‘சார் நேத்து ஜீஸ்னு நினைச்சு ட்ரிங்க்ஸ் எடுத்து குடிச்சுட்டேன் போல. எனக்கு நடந்தது எதுவும் சுத்தமா ஞாபகமில்ல. என்னை வீட்ல கொண்டு போய் விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். போதைல உங்களுக்கு எதுவும் தொந்தரவு குடுத்திருந்தா மன்னிச்சிடுங்க சார்’ என நிலா கேட்க,

 

அடிப்பாவி நேத்து வாடா போடான்னு பேசிட்டு இப்ப வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு சொல்ற. அது கூட பரவால்ல என்னை லவ் பண்றேன்னு ஆசையா பேசிட்டு இப்ப எதுவும் ஞாபகமில்லன்னு சொல்ற. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்றது உன் விசயத்துல சரியாதான்டி இருக்கு என தனக்குள் நினைத்துக் கொண்டு , ‘அதெல்லாம் பரவால்ல. உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லயே. நீங்க ஓகே தான ‘ என கேட்டான் தமிழ்.

 

‘ம் சார் நோ ப்ராப்ளம். ஐ அம் ஆல்ரைட். சரி நான் போய் வேலய பாக்கறேன்’ என சொல்லி விட்டு சென்றாள் நிலா.

 

‘என்னடி ஆச்சு’ என நந்தினி கேட்க,

 

‘ச்சே ச்சே நான் எதுவும் பண்ணலைன்னு சாரே சொன்னாரு’ என்று சொல்லி நிலா செல்ல,

 

‘சரி இல்லயே கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு தமிழ் சார் மறைக்கிறாரு’,  என நந்தினி தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

 

தமிழ் கவினுக்கு போன் செய்து நடந்தவற்றை எல்லாம் சொல்லி, ‘அவ மட்டும் எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டு நான் சொல்றப்ப மயங்கிட்டா.  இப்ப நான் என்னடா பண்ணட்டும்’ என கேட்க,

 

‘சூப்பர்டா அப்டினா நீ உன் காதல அவகிட்ட நேர்லயே சொல்லிரு’ என கவின் சொல்ல,

 

‘போடா எதாவது ரீஸன் சொல்லி என்ன ரிஜக்ட் பண்ணிட்டானா’ என தமிழ் கேட்க,

 

‘அதெல்லாம் எதுவும் பண்ணமாட்டா. நீ தைரியமா போய் அவகிட்ட சொல்லு’ என்றான் கவின்.

 

‘சரி எப்டி ப்ரபோஸ் பண்றதுன்னு ஒரு ஐடியா குடு’ என தமிழ் கேட்க,

 

‘இப்ப  தெரியுதா என்னை மட்டும் லவ்வ சொல்ல மாட்டேங்குறேன்னு திட்டுவ. அவனவனுக்கு வந்தா தான் தெரியும் வாந்தியும் பேதியும்’ என கவின் சொல்ல,

 

‘டேய் ஒழுங்கா ஐடியா குடு. இல்ல யாழினிய நீ லவ் பண்றேன்னு அவகிட்ட நானே சொல்லிருவேன்’ என்றான் தமிழ்.

 

‘என்னடா நான் உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணா நீ எனக்கு ஆப்பு வைக்க பாக்குற. ம் ஆமா அவங்க பர்த்டே என்னைக்கு’ என கவின் கேட்க,

 

‘ம் ஒரு நிமிஷம்’ என்று சொல்லி அவளது பயோ டேட்டாவை பார்த்து விட்டு, ‘அடுத்த மாசம் அஞ்சாம் தேதி. ஓ எனக்கு புரிஞ்சுருச்சு. அவ பர்த்டே கிஃப்ட்டா என்னை ப்ரபோஸ் பண்ண சொல்ற அப்டி தான’ என தமிழ் கேட்க,

 

‘வெரிகுட் டா தமிழ். நீ ரொம்ப சார்ப்டா’ என கவின் புகழ,

 

‘அதெல்லாம் ஓகே . மரியாதையா நீ சீக்கிரம் யாழினி கிட்ட உன் லவ்வ சொல்லிரு. ப்ளீஸ்டா நீ சொன்னா தான் நான் அக்ரிமெண்ட ரிட்டன் பண்ண முடியும்’ என தமிழ் சொல்ல,

 

‘புரியுதுடா நான் கண்டிப்பா சீக்கிரம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்றேன்’ என சொல்லி போனை கவின் கட் செய்ய நிலாவுக்கு என்ன கிஃப்ட் வாங்கலாம் என தமிழ் யோசிக்கத் தொடங்கினான்.

 

தமிழ் தனது காதலை நிலாவிடம் சொல்வானா?

 

அதை நிலா ஏற்றுக் கொள்வாளா?

 

தொடரும்..

 

 

 

 

 

 

 

,

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!