Post Views: 9,639
கதாபாத்திரங்கள் அறிமுகம்.
கதையின் நாயகன் – தமிழ்.
பெரிய நறுமண திரவியம் தயாரிக்கும் கம்பெனியின் முதலாளி. அழகான, திறமையான, அறிவான இளைஞன். வேலையில் கறாராக இருப்பான்.
நாயகி – நிலா
Advertisement
நடுத்தர குடும்பத்தில் பிறந்த அழகான, அன்பான, குணமான, திறமையான, அறிவான பெண்.
கதாநாயகனின் நண்பர்கள் – கவின், யாழினி. சிறுவயது முதல் தமிழ், கவின், யாழினி மூவரும் பள்ளி, கல்லூரி என அனைத்திலும் ஒன்றாகவே வளர்ந்த சிறந்த நண்பர்கள். இவர்களது பெற்றோர்களும் இவர்களால் சிறந்த நண்பர்களாயினர்
கதை தொடக்கம்.
Advertisement
Advertisement
‘தமிழ் சீக்கிரம் சாப்பிடவா அப்புறம் லேட்டாச்சுன்னு சாப்பிடாம கிளம்பிடுவ’ என அவனது அம்மா கூப்பிட,
‘இதோ வந்துட்டேன் ராஜி’ என்று கிளம்பி வந்தான் தமிழ்.
Advertisement
அம்மா பரிமாற சாப்பிட்டு கொண்டிருந்த தமிழுக்கு அவனது கம்பெனியில் வேலை செய்யும் நந்தினியிடமிருந்து போன் வர அதை அட்டென்ட் பண்ணி ‘சொல்லுங்க நந்தினி’ என்றான்.
‘சார் இன்டர்வ்யூக்கு வர சொன்னதா நிலான்னு ஒருத்தர் வந்திருக்காங்க ‘ என்ற நந்தினிக்கு,
‘இதோ கிளம்பிட்டேன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க வந்துருவேன் அவங்கள கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க ‘ என்று சொல்லி விட்டு பாதி சாப்பிட்டில் எழுந்து கிளம்பிய தமிழை கோபமாக பார்த்த அம்மாவிடம், ‘சாரி ராஜி’ என்று சொல்லிவிட்டு கம்பெனிக்கு சென்றான்.
ஆபீஸ்க்கு வந்ததும் நந்தினியிடம் நிலாவை அவனது ரூமுக்கு அழைத்து வரச் சொல்கிறான்.
‘உங்க சர்டிபிக்கேட்ஸ் பாத்தேன். வொர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னாலும் தேவையான க்வாளிபிக்கேஷன் இருக்கு. அதனால வேலைக்கு சேத்துக்குறேன். சேலரி, மத்த டீடைல்ஸ் நந்தினி சொல்லுவாங்க. நான் வேலைல பெர்பெக்ட் எதிர்பாப்பேன். வேற எதுவும் உங்களுக்கு டவுட் இருந்தா நந்தினிக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குஙக’ என்று சொல்லி விட்டு நந்தினிக்கு போன் பண்ணி ‘இவங்கள எல்லாருக்கும் இன்ட்ரடியூஸ் பண்ணிட்டு மத்த டீடெய்ல்ஸ் சொல்லிடுங்க’ என்று சொல்லி விட்டு ‘நீங்க போய் நந்தினியை பாருங்க. ஆல் த பெஸ்ட்’ என்று சொல்லி நிலாவை அனுப்பி வைத்தான் தமிழ்.
நிலாவை அனைவரிடமும் அறிமுகம் செய்து விட்டு சம்பளம், விடுமுறை என அனைத்து விவரங்களையும் சொல்லி விட்டு, ‘வேறு எதுவும் டவுட் இருக்கா’ என நந்தினி கேட்க,
‘மேம் வேலைய பத்தி எல்லா சொல்லிட்டீங்க தமிழ் சார் பத்தியும் இதுக்கு முன்னாடி இருந்தவங்க எப்டி வேலை செஞ்சாங்கன்னும் கொஞ்சம் சொன்னா அவருக்கு பி.ஏ. வா வேலை செய்ய ஈசியா இருக்கும். ஏனா இங்க தான் முதல்ல வேலைக்கு வரேன்’ என்றாள் நிலா.
‘பர்ஸ்ட் என்னை நந்தினின்னே கூப்டலாம். அப்புறம் இந்த வேலை எப்டி உனக்கு ஃபர்ஸ்டோ அதுமாதிரி இந்த வேலைக்கும் நீ தான் ஃபர்ஸ்ட். இதுவரைக்கும் தமிழ் சார் அவரு வேலை எல்லாத்தையும் அவரே பாத்துகிட்டாரு. இப்ப அவருக்கு கொஞ்சம் வேலை அதிகமானதால ஒரு பி.ஏ. தேவைப்படுது. அப்புறம் வேலைல கரெக்டா பெர்பெக்டா இருக்கனும்னு நினைப்பாரு. மிஸ்டேக் பண்ணா ஃபர்ஸ்ட் கொஞ்சம் கோபபடுவாரு அப்புறம் அவரே அதுக்கு சொல்யூசன் சொல்லிருவாரு. மத்தபடி ரொம்ப நல்லவர். என்ன உதவி வேணும்னாலும் தன்னை சேர்ந்தவங்களுக்காக செய்வாரு’ என்று சொல்லி முடித்தாள் நந்தினி.
நிலா தனது வேலைகளை கற்றுக் கொள்கிறாள். முதலில் கொஞ்சம் சொதப்பினாலும் பிறகு நன்கு பழகிக்கொள்கிறாள். ஆபீசிலும் அனைவரிடமும் நன்கு நட்பாகிறாள். அனைவருக்கும் அவளை பிடித்து போகிறது. தமிழுக்கும் முதலில் அவள் தவறுகள் செய்தாலும் பிறகு அவளே சரிசெய்து கொள்வதால் அவளது வேலை பிடித்து போகிறது.
ஒருநாள் இரவு வீட்டில் தமிழ் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்க அவனது அம்மா அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘டேய் யாழினி எப்டி இருக்கா போன் ஏதும் பண்ணாளா’ என கேட்க,
‘என்ன ராஜி திடீர்னு யாழினி மேல பாசம்’ என தமிழ் நக்கலாய் கேட்க,
‘சரி நேரா நான் விசயத்துக்கு வரேன். யாழினி அம்மாவும் நானும் இன்னிக்கு போன்ல உங்க கல்யாணத்த பத்தி பேசுனோம். எங்க எல்லாருக்கும் சம்மதம். நீங்க ரெண்டு பேரும் ஓகே சொன்னா கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம்’ என அம்மா கேட்க,
‘உனக்கு எத்தன தடவ சொல்றது ராஜி நானும், யாழினியும் நல்ல ப்ரெண்ட்ஸ் அத தாண்டி வேற எதுவும் எங்களுக்கு இடைல கிடையாது’ என கோபமாய் கத்த,
‘அது தான் உண்மையான காரணமா, இல்ல வேற யாராவது லவ் பண்றியா. எதா இருந்தாலும் யாழினி தான் என் மருமக பாத்துக்கோ’ என தமிழ் அம்மா சொன்னார்.
தமிழும் இதுதான் சரி என தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஆமா ராஜி நான் ஒரு பொண்ண நிஜமாவே லவ் பண்றேன். அதான் யாழினிய வேணாம்னு சொல்றேன். ப்ளீஸ் இனிமே அத பத்தி பேசாத’ என கூற,
‘என்னடா யாருடா அந்த பொண்ணு. பொய் சொல்லாத நான் நம்ப மாட்டேன். என்னங்க இவன் சொல்றத கேட்டீங்களா’ என தன் கணவரிடம் ராஜி கேட்க,
‘ம் கேட்டுட்டு தான் இருக்கேன். கல்யாணம் அவனுக்கு அப்ப அவன் விருப்பம் தான முக்கியம்’ என அவர் சொல்ல,
‘உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க. நீங்க உங்க பேப்பர் படிக்கிற வேலைய பாருங்க’ என அவரிடம் கூறிவிட்டு,
‘சரி நீ சொல்றது உண்மைனா அந்த பொண்ண புதன் கிழம வீட்டுக்கு கூட்டிட்டு வா. அப்டி இல்ல வியாழக்கிழம உனக்கும் யாழினிக்கும் உறுதி பேசிறுவேன்’ என்றார் தன் மகனிடம்.
தமிழோ எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் தன் அறைக்கு சென்றான். இரவு முழுக்க உறங்காமல் அதைபற்றியே யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
காலையில் எழுந்து கிளம்பி ஆபீசுக்கு சென்று தன் வேலைகளை பிசியாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாழினி போன் செய்ய பிசி என்று வர அவள் லேன்லைனுக்கு போன் செய்ய அதை நிலா எடுக்கிறாள்.
‘ஹலோ தமிழ் இருக்காரா அவர்கிட்ட கொஞ்சம் பேசனும் அவருக்கு லைன் கனெகட். பண்ண முடியுமா’ என யாழினி கேட்க,
‘மேம் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா’ என்றாள் நிலா.
‘நான் அவரு பிரெண்ட் யாழினி, நீங்க’ என யாழினி கேட்க,
‘மேம் நான் அவரு பி.ஏ. நிலா. ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க ‘ என்று சொல்லி தமிழுக்கு கனெக்ட் செய்தாள் நிலா.
‘ஹாய் தமிழ் எப்டிடா இருக்க. சார் ரொம்ப பிசியோ போன் பண்ணா எடுக்க மாட்டேங்குற. நீயும் போன் பண்ண மாட்டேங்குற. பி.ஏ.லாம் அப்பாய்ன்ட் பண்ணிட்ட சார் நெஜமாவே பிசியாட்ருக்கே ‘ என யாழினி கிண்டல் செய்ய,
‘அதெல்லாம் ஒன்னுமில்லடி பி.ஏ. தேவைப்பட்டது அதான். அப்புறம் நானே உனக்கு கூப்டனும்னு இருந்தேன். நம்ம கல்யாணத்த பத்தி பேசுனாங்களா. யாராவது கேட்டா உனக்கு அதுல விருப்பம் இல்லைன்னு சொல்லிரு ப்ளீஸ்டீ’ என தமிழ் கூற,
‘ஆமா எங்க அம்மா எங்கிட்ட கேட்டாங்க. ஒரு நல்ல பிரெண்ட் நல்ல கணவனாவும் இருப்பான். உனக்கு ஓகேவான்னு. நானும் அவங்க சொன்னத யோசிச்சு பாத்தேன் ஓகேன்னு தோனுச்சு. அப்புறம் காலைல ஆன்டி பேசுனாங்க நீ சொன்னத எல்லாம் சொன்னாங்க. எனக்கு நீ எடுக்குற முடிவுதான். ஆனா சார் லவ் பண்றீங்கன்னு சொன்னத மட்டும் நம்பமுடியல. நானும் அந்த பொண்ண பாக்கனும் ஒருநாள் இண்ட்ரடியூஸ் பண்ணி வை பாக்கலாம் யாரந்த லக்கி கேர்ள்னு. ஆமா கவின் கால் பண்ணினா நான் போன் பண்ணா போகமாட்டேங்குது’ என யாழினி கேட்க,
‘தேங்க்ஸ்டி எங்க அம்மா மாதிரி நீயும் என்னை புரிஞ்சுக்க மாட்டியோன்னு நினைச்சேன். உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் ஒரு நல்ல ப்ரெண்டா எப்பவும் உனக்கு நான் துணையா நிப்பேன். அப்புறம் கவின்க்கு டவர் கிடைக்கல . பிஸ்னஸ்க்கு போனதுக்கு பிறகு நானே ரெண்டு மூனு தடவைதான் பேசிருக்கேன். உங்கிட்ட கூட ரெண்டு தடவ பேசுனதா சொன்னானே.’ என்று தமிழ் கூற,
‘ம் ஆமா ரெண்டு டைம் பேசுனோம்,. பேசி ரொம்ப நாளாச்சு அதான் பேசலாம்னு கேட்டேன். நீ பேசுனா எனக்கு கண்டிப்பா கால் பண்ண சொல்லு. சரி நீ பிசியா இருப்ப நான் அப்புறம் கூப்டரேன். பாய் ‘ என்று சொல்லி போனை கட் செய்கிறாள்.
‘நல்ல வேளை எங்கடா யாழினியையும் சமாளிக்க வேண்டியிருக்குமோன்னு பயந்தேன். எப்டியோ ஒரு பிரச்சினை முடிஞ்சுது. டேய் கவின் உன்னால நான் பட்ற கஷ்டமிருக்கே. நீ மட்டும் கைல கிடைச்ச அவ்ளோ தான். சரி இப்ப அம்மாவ சமாளிக்க நம்ம போட்ட திட்டப்படி யார்கிட்ட போய் ஹெல்ப் கேக்கறது. நமக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸ் கம்மி. அவங்க கிட்ட இந்த ஹெல்ப்ப கேக்கவும் முடியாது. ஆபிஸ்ல நந்தினி மட்டும் தான் அவங்களுக்கும் மேரேஜ் ஆயிடுச்சு. அப்ப என்ன பண்றது’ என தமிழ் யோசித்து கொண்டிருக்க ,
‘சார் மே ஐ கமின்’ என்று நிலாவின் சத்தம் கேட்க,
‘எஸ் கமின்’, என்றான் தமிழ்.
”சார் நீங்க சொன்ன மாதிரி பைல் ரெடி பண்ணிட்டேன். ஒரு தடவ செக் பண்ணிட்டு சைன் பண்ணிருங்க’, என நிலா சொல்ல,
‘ம் ஓகே நான் பாத்துக்கறேன்’ என தமிழ் எதையோ யோசித்தவாறு சொல்ல நிலா அங்கிருந்து சென்றாள்.
‘நிலா ஒரு நிமிஷம் உள்ள வர்றிங்களா’ என தமிழ் போன் பண்ண நிலாவும் உள்ளே வருகிறாள்.
‘எனக்கு எப்டி கேக்கறதுன்னு தெரியல. ஒரு ப்ராப்ளம் நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா’, என தமிழ் தயங்கியவாறு கேட்க,
‘சொல்லுங்க சார் என்னால முடிஞ்சா கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்’, என்றாள் நிலா.
‘கொஞ்ச நாள் என்னோட காண்ட்ராக்ட் கேர்ள் ப்ரெண்டா என் பேரன்ட்ஸ் கிட்ட நடிக்க முடியுமா. அதுக்கு நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தறேன்’, என தமிழ் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளார் என ஒரு அறைந்தாள் நிலா.
‘என்ன பணத்திமிர எங்கிட்ட காட்றியா. உன்கிட்ட வேலைக்கு வந்தா என்ன வேணா செய்ய சொல்லுவியா. பணம் இருந்தா அத உன்னோட வச்சுக்கோ.’ என சொல்லி விட்டு ராட்சசியாய் செல்வது போல் நிலாவை யோசித்து பார்த்து விட்டு,
‘நிலாகிட்ட இல்ல யார்கிட்ட கேட்டாலும் கண்டிப்பா இதுதான் நடக்கும். ஆனா வேற வழி இல்லயே கேட்டு பாப்போம். ஆனா அடிச்சத நினச்சாதான் பயமா இருக்கு. என்ன அடி’ என்று சொல்லி தான் நினைத்து பார்த்தது போல மீண்டும் நிலாக்கு போன் செய்து வர சொல்கிறான்.
நிலா இதற்கு ஒப்புக் கொள்வாளா இல்லை தமிழ் நினைத்தது போல ராட்சசியாய் மாறி கன்னத்தில் அறைவாளா?
யாழினியை மணந்து கொள்ள தமிழ் மறுப்பது ஏன், தோழியாய் மட்டும் பார்ப்பதாலா, இல்லை வேறு ஏதும் காரணம் உண்டா?
தொடரும்…