Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

ஐந்து வருடங்கள் கழித்து.

“நாங்க ரெடி!” என்று சொன்னவாறே உள்ளே வந்தார்கள் ரேவந்தும் அவன் லிட்டில் பிரின்சஸ்  மூன்றரை வயது மஹதியும்!

பட்டுப் பாவாடை சட்டை அணிந்து குட்டி ஜிமிக்கி கழுத்தில் பெரிய டாலர் செயின் போட்டுக்கொண்டு ஒரு குட்டி தேவதையை போல தான் பிஞ்சு கால்களை வைத்து நடந்து வந்தாள் அவள்.

அவள் பின்னே பட்டு வேஷ்டி சட்டை அணிந்தவாறு ரேவந்த்!



Advertisement

“ஸ்வீட்டி, என்னடி இது! இப்படி இன்னும் நைட்டியிலேயே இருக்க? பாரு நாங்க எப்படி ரெடியாகி வந்துட்டோம்!”

“நான் என்ன பண்ணட்டும்! இன்னும் உங்க பையன் எழுந்துக்கவே இல்லை!

எனக்கு வேலை இருக்கிறப்போ, கொஞ்ச நேரம் தூங்குட்டும்ன்னு நினைச்சா, அப்ப அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துப்பான்!

Advertisement

இன்னிக்கு சீக்கிரம் கிளம்பனும். ஆனா இன்னிக்கு பார்த்து அசந்து தூங்குகிறான்.

Advertisement

நைட் அவனை அவ்வளவு தூரம் கஷ்டப் பட்டு தூங்க வச்ச எனக்கு இப்ப அவனை எழுப்பவே மனசு வரல!

அவனை குளிப்பாட்டி ரெடி பண்ணினப்புறம்  தான் நான் சாரி கட்டி ரெடியாக முடியும்!: என்றாள் மதுரா, அவர்களது பதினொரு மாத மகன் விதார்த்துக்கு பால் ஆற்றிய வண்ணம்!

தலைக்கு குளித்து விட்டு தலையில்  ஈரத் துண்டுடன் நைட்டியில் கூட அழகு தேவதையாக தெரிந்த மனைவியை ரசித்துப் பார்த்தான் ரேவந்த்!

Advertisement

கண் நிறைந்த காதல் கணவன், அருமையான உறவுகள்,  நிறைந்த செல்வம்,

அவர்கள் ஆசைப்பட்ட மாதிரியே பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக லட்டு மாதிரி இரண்டு குழந்தைகள்!

கொஞ்சமும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் குடும்ப வாழ்க்கை தந்த பூரிப்பும், இரண்டு அழகான குழந்தைகளைப் பெற்ற பூரிப்பும்,

தன் தங்கைகளுக்கு தான் ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்து விட்ட மன நிறைவும் உள்ளமெல்லாம் பொங்கி

அவள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் நீக்கமற  நிறைந்து இருக்க, அந்த பூரிப்பும்,

சந்தோசமும், மனநிறைவும் அவள் உடலெங்கும் பிரதிபலித்து பேரழகியாக அவளைக் காட்டிக் கொண்டிருக்க,

அவளையே  காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் ஊட்டி!

பிள்ளையை குளிப்பாட்டிய பிறகு உடனே தருவதற்கு தயாராக பாலை கர்ம ஸ்ரத்தையாக ஆற்றிக் கொண்டிருந்தவள், ரேவந்த்தின் பார்வையைக் கண்டு,

“அய்யோ.. சார். என்ன உங்க லுக்கே சரியில்லையே!

இன்னிக்கு உங்க லக்கி ஏஞ்சல் லக்கியோட பேபிக்கு பேர் வைக்கிற நாள்!

நாம் ஆல்ரெடி லேட்!” என்றாள் பெருமையும் கிண்டலுமாக!

“ஏய்.. சும்மா பார்த்தேன்டி உன்னை!

கொண்டா.. நான் ஆத்திட்டு இருக்கேன்.

நீ போய் அவனைத் தூக்கிட்டு வா” என்று பால் கிண்ணத்தை அவன் வாங்கிக் கொண்டான்.

“ஏங்க.. இங்க பாருங்க” என்று மதுரா மகளைக் காண்பிக்க, மஹதி குட்டியோ, தன் தம்பியின் தொட்டிலை ஆட்டிய வண்ணம் அவனைப் பார்த்து தலையை ஆட்டி ஆட்டி கொஞ்சிக் கொண்டிருந்தது!

அதன் உடல்மொழியில் இப்போதே அப்படி ஒரு தாய்மை உணர்வு!

ரொம்ப பொறுப்பாக தன் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தது அது!

உள்ளே அவள் தம்பியும் அக்காவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்!

“அப்படியே உன்னை மாதிரிடி அவ!

எவ்வளவோ பொறுப்பா இருக்கா பாரேன் இப்பவே!” ரேவந்த் மகளைப் பார்த்து சிலாகித்தான்!

“அய்யோ.. சாமி போதும்.. நீங்க உங்க பொண்ணோட பெருமையை ஆரம்பிச்சா இன்னிக்கு நிறுத்த மாட்டீங்க.

அங்க சூர்யா சித்தி நம்மளை இன்னும் காணோம்னு திட்டிக்கிட்டு இருக்கப் போறாங்க!

நானும் உங்க பொண்ணும் தம்பியை ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றோம்!

நீங்க போய் காரை ரெடி பண்ணுங்க” என்றாள் மதுராவும் பெருமையாகவே!

சூர்யா சித்தி?

இது எப்போ?

எல்லாம் காலம் செய்த மாயம் தான்!

அன்று மதுராவின் கல்யாணத்தையே நிறுத்தும் அளவு துவேஷம் கொண்டிருந்த அவரை, காலமும் சூழ்நிலையும் மாற்ற தான் செய்து விட்டன!

அவரை மட்டுமில்ல ஜெய்ந்ந்தையும் அவன் அம்மாவையும் கூட தான்!

இந்த ஐந்து வருடங்களில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் அனைவர் வாழ்க்கையிலும்!

ரேவந்த் அவர்களை விட்டு வெளியில் வந்தவன், பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே கார் சாவியை எடுக்க சென்றான்.

முதலில் லக்கி நவீன் காதல்!

இது எப்படி நடந்தது?

இந்த லக்கி இருக்காளே.. அவளை ஒரு புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் ரேவந்த்!

அடிக்கடி நவீன் தன் வேலை சம்பந்தமாக ரேவந்துடன் பேசும் போதெல்லாம் லக்கி, நவீன் பேசுவதை கார் ஸ்பீக்கரில் கேட்டு கேட்டு அவன் மேல் சின்ன மரியாதை இருந்து வந்திருக்க,

ஒரு நாள் ரேவந்த் போனை வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்று இருந்த வேளை நவீனின் போனை அட்டென்ட் செய்தாள் லக்கி!

ஆரம்பத்தில் சாதாரண பேச்சாக தொடங்கி பின் நாளடைவில் நட்பாகி போனில் வீடியோ காலில் வளர்ந்து விருட்சமாகி,

ஒரு நாள் நவீன் துணிந்து அவளிடம் காதலை சொல்லியே விட்டான்!

“இருடா.. இன்னும் எங்க அக்கா உங்க பாஸோட கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் கன்சிடர் பண்றேன்” என்று லக்கி கெத்தாக சொல்லி இருக்க,

நவீனோ மிகவும் துணிச்சலாக  நேராக ரேவந்திடமே சொல்லி விட்டான் தன் காதலை!

அந்த சமயம் பார்த்து தான் மதுரா, சூர்யாவின் தகிடு தத்தத்தால்  அழிச்சாட்டியம் செய்ய நவீனின் உதவியை நாடினான் ரேவந்த்!

நவீன் வீட்டினருக்கும் லக்கியை பிடித்துப் போய் விட, அந்த அவசர நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது!

எல்லாம் சரியான பின், ரேவந்த் மதுராவின் கல்யாணம் குறித்த தேதியில் நல்லபடியாகவே நடந்தது!

ரேவந்த் மதுராவின் உறவுகளும் கட்டாயம் கல்யாணத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று விரும்பி, செந்தில் குடும்பத்திற்கும் சதீஸ் குடும்பத்திற்கும் பத்திரிக்கையோடு செந்தில் குடும்பத்திற்கு  ஃபிளைட் டிக்கெட்டும் கூட அனுப்பி வைத்தான்!

அதோடு உள்ளூரில் இருக்கும் சூர்யாவின் அம்மா வீட்டிற்கும்!

செந்திலுக்கும் கூட அப்போது அவன் குடும்பத்தில் ஒரு சின்ன சலிப்பு அலுப்பு தட்டிப் போய் இருந்தது!

சுற்றி சுற்றி அவன் மனைவி வகையறா உறவுகளே இருக்க, தான் தன் சொந்த குடும்பத்திலேயே தனது தனித்துவம்,  அடையாளம் ஏதுமின்றி தனித்து இருப்பதாக அடிக்கடி தோன்ற ஆரம்பித்து இருந்தது!

வயது ஆக ஆக, அவரே அடிக்கடி தன் தம்பிக்கு போன் செய்து பேச தொடங்கி இருந்தார்!

மதுராவிடம் பேச மட்டும் கொஞ்சம் தயக்கம் இருந்து வந்திருக்க, ரேவந்த்தின் செயல் அதை உடைத்து விட்டிருந்தது!

அவரும் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு கிளம்பி விட்டார்!

“உங்கம்மா வர மாட்டா. அவ எல்லாம் வராம இருக்கிறதே நல்லது!” என்று சதீஸ் தன் மகன் சுதர்சனுடன் கிளம்ப,

“இல்ல நானும் வர்றேன். உங்க அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கு இல்ல!

அடிப்பட்டிருக்கிற எங்க அம்மாவை பார்க்க” என்று சொல்லி தானும் காரில் ஏறிக் கொண்டார்.

அவர்கள் அப்போது திண்டுக்கல்லில் சதீஷ் ஆசைப்படி பழத் தோட்டங்கள் வாங்கி கொண்டு திண்டுக்கல் வத்தலக்குண்டு செல்லும் திசையில் வீடு வாங்கி செட்டில் ஆகி இருந்தார்கள்!

“உங்களுக்கு ஏம்மா, அக்கா மேல இவ்வளவு வெஞ்சன்ஸ்?

அவங்க அப்படி என்ன தப்பு பண்ணினாங்க?

 நீங்க அவங்களோட சொத்தையும் ஆட்டைய போட நினைச்சீங்க!

அவங்க உஷாரா இருந்து அத காப்பாத்திகிட்டாங்க அவ்வளவு தானே!

என்னமோ அவங்க உங்கள ஏமாத்திட்ட மாதிரி இல்ல இருக்கு நீங்க நடந்துக்கிறது எல்லாம்!

 இது தப்பும்மா” என்றான் சுதர்சன், அவன் அப்பாவைப் போல நியாயவாதி தான் அவனும்!

“உங்கம்மா எல்லாம் திருந்தாத ஜென்மம்! நீ வாடா நாம போகலாம்” என்று திட்டிக் கொண்டே அவரை அழைத்து சென்றார் சதீஷ்!

“சொன்னா கேளுடி..” என்று அவர் அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும், கூடவே அந்த சாமியாடி பெண் கூட சைகையில் சொன்னாலும் கேட்கவே இல்லை அவர்!

திருடர்கள் கத்தியால் குத்தியதில் அந்த பெண்ணுக்கு பேசும் சக்தியே சுத்தமாக போய் விட்டது!

இனிமேல் அவள் எங்கே போய் குறி சொல்லுவது!

 கடவுளின் தண்டனை!

அங்கே ரேவந்த் மதுரா திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்து இருக்க,

ரிட்டர்ன் கிஃப்ட் ஆக அவர்களுக்கு வெள்ளித் தட்டு ஒன்றை வைத்துக் கொடுத்தாள் ரேஷ்மா!

ஊருக்கு செல்லும் போது அதை மட்டும் மறக்காமல் தன் அம்மாவுடன் கேட்டு வாங்கி சென்றார் சூர்யா!

ஆனால் ஊர் திரும்பிய பின் தான் அவருக்கு விதி அவருக்கான வலையை விரித்து வைத்திருந்தது!

சதீஸ்க்கு தெரியாமல் சூர்யா, ஒரு போலி ரியல் எஸ்டேட் நிறுவன ஆட்களின் இனிப்பான பேச்சில் மயங்கி, இரண்டு பிளாட்களை வாங்கி இருந்தார்!

அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று தான் சதீஸ் பணம் தர மறுத்து இருக்க,

அவருக்கு தெரியாமல் தன் நகைகளை விற்று சூர்யா அதை வாங்கி இருந்தததோடு,

வேறு சிலரையும் தவணை முறையில் வாங்க ஆள் சேர்த்து விட்டும்

கமிசனாக சிறு தொகை பெற்று இருக்க, பிரச்சினை வெடித்ததில்

சூர்யா நன்றாக சிக்கிக் கொண்டு கணவனின் பெருங்கோபத்திற்கு ஆளாகினார்.

திட்டிக் கொண்டே எல்லாவற்றையும் சரி செய்த சதீஸ் அதன் பின் சூர்யாவிற்கு கொடுத்த தண்டனை,

அவர் புதியதாக ஆரம்பித்து இருந்த சிறிய மண் புழு உரம் தயாரிக்கும் இடத்திற்கு வேலைக்கு அனுப்பியது தான்!

வெறும் வாசல் தெளிக்க கூட சாணியை தொட மாட்டேன் என்றவருக்கு முழுக்க முழுக்க அதிலேயே புழங்கும் வேலை!

ஆரம்பத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவருக்கு!

கூடவே ஆச்சரியமும்!

அங்கு வேலை செய்யும் வாசுகி அந்த மண் புழுக்களை எல்லாம் கையில் க்ளவுஸ் கூட போட்டுக் கொள்ளாமல் கையில் எடுத்து, “இவங்க என்னோட பிள்ளைங்க!” என்று சொல்லும் போது!

ஆனால் போக போக மண்ணின் மகத்துவமும், மண் புழுக்களின் மகத்துவமும் அவருக்கு புரிய ஆரம்பித்தது அவர் வாழ்வில் நல்லதொரு திருப்புமுனை!

அந்த புரிதல், இன்னொன்றையும் சொல்லிக் தந்தது!

அது அருள்மொழியின் உழைப்பின் அருமையை!

அவர் சிந்திய வேர்வையை!

அதன் பலனை, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத தான் சொந்தம் கொண்டாடிய தவறை,

கூடவே மதுராவின் கோபமும் அதில் இருந்த நியாயமும் கூட புரிய ஆரம்பித்தது அவரின் நல்ல நேரம்!

காலமும் முதுமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வயதும் அவருள் நல்ல மன முதிர்ச்சியை கொண்டு வந்து விட்டது,

குடும்பத்தினரின் அதிர்ஷ்டமே!

அதன் பின், அவர் மதுராவின் மேல் கொண்ட துவேஷம் படிப்படியாக குறைந்து, சதீஸ் அவளைக் காண செல்லும் போது தானும் செல்ல ஆரம்பித்தார்!

மதுராவின் முதல் பிரசவ நேரத்தில் கூட பட்டும் படாமல் உதவிகள் செய்ய கூட செய்தார்.

அவரின் முழுமையான மன மாற்றம், இனியா மதுரா குழந்தைகளின் காது குத்து விழா ஒரு சேர நடந்த போது வெளியானது!

இருவருக்கும் தாய் மாமன் என்ற முறையில் சுதர்சன் மடியில் வைத்தே அதனை செய்தார்கள்!

அப்போது தாய்மாமன் சீராக சதீஷ் செய்ய நினைத்ததை விட கூட செய்ய அவர் வலியுறுத்திய போது சதீஷுக்கும் சுதர்சனுக்கும் கடையிலேயே மயக்கம் வராத குறை தான்!

ஆனால் மதுராவின் இரண்டாவது பிரசவத்திற்கு அவரே கூட  இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார்!

இதோ இப்போது லக்கியின் பிரசவம் கூட அவர் பார்த்து விட்டு, இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்.

நீண்ட யோசனையில் இருந்த ரேவந்த்,

“அப்பா” என்ற மஹதியின் குரல் கேட்டு,

“டேய்.. வாடா.. என்ன உன் அம்மா ரெடி ஆகிட்டாளா?” என்றான்.

“இல்லப்பா.. உங்கள அம்மா உள்ளே கூப்பிடறாங்க” என்றாள்.

“சரி” என்று உள்ளே சென்றவனிடம்,

“ஏங்க, இந்த ஃப்ளீட்டை சரி பண்ணி விடுங்க” என்று பட்டுப்புடவையின் கொசுவத்தை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மதுரா.

“இரு. வர்றேன்” என்று அவள் கால் அருகே முழங்காலை ஊன்றி அமர்ந்து அவள் புடவையின் முன் பக்க கொசுவத்தை அடுக்கி நீவி விட்டான் ரேவந்த்.

“போதும்..போதும். நீங்க போய் வித்தியோட டயப்பர் பேக், மஹாவோட திங்க்சை எல்லாம் காரில் எடுத்து வைங்க. இதோ நான் தலைப் பின்னிட்டு வந்திடறேன்.. டூ மினிட்ஸ்” என்றாள்.

“சீக்கிரம்டி” என்றவனுக்கு அடுத்தடுத்த போன் அழைப்புகள்!

முதலில் ரேஷ்மா, அப்புறம் இனியாவிடமிருந்தும்!

கடைசியாக ஜெயந்திடம் இருந்து கூட!

அவனும் அவன் மனைவி சந்தியாவோடு வந்திருந்தான்!

அவனுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம் ஆனது ஒரு தனிக்கதை!

காதலுக்கு கண் இல்லை என்பது போல மதுரைப் பக்கம் கிராமத்து பின்னணியில் பக்கா விவசாய குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் ஐடி வேலை பார்க்கும் அவளுக்கு ஜெயந்தின் மேல் எப்படியோ காதல் வந்து விட்டிருக்க,

அவள் வீட்டினரை என்னவெல்லாமோ செய்து சம்மதிக்க வைத்து அவர்கள் ராமனாதனிடம் வந்து கல்யாணம் பேச,

பார்வதி ஆண்ட்டிக்கு அவர்கள் சொத்து விவரம் தெரிய வந்தவுடன் திரிஷா இல்லைனா திவ்யா என்று அவர் மனம் ரேஷ்மாவை விட்டுவிட்டு சந்தியாவை பற்றிக் கொண்டு ஜெயந்த்தையும் சம்மதிக்க வைத்து விட்டார்!

ஆனால் ஏதோ அதிசயம் போல அவனுள் நல்ல மாற்றங்கள்!

நடவடிக்கை மாற்றம்!

அது மாமனார் வீட்டினரைப் பற்றி அவனுள் ராமநாதன் பார்வதி இருவரும் ஏற்படுத்தி இருந்த பயமோ, இல்லை உண்மையாகவே மனம் திருந்தி தான் விட்டானோ தெரியவில்லை!

அவன் தன் மனைவிக்கு உண்மையாகவே இருக்க தொடங்கி விட்டிருந்தான்!

அதிலும் அவனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்த பின் ஆளே சுத்தமாக மாறி சந்தியாவுக்கு ஏற்ற சத்திய சந்தனாகவே மாறி விட்டான் இப்போது!

“ஏய்.. ஸ்வீட்டி.. பாரு வெளியூர்ல இருக்கிறவங்க கூட வந்துட்டாங்க.

இங்க பக்கத்துல பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்துகிட்டு நாம தான் லேட்!

போச்சு லக்கி உன் மேல பாயப் போறா!” என்றான் ரேவந்த்!

“இதோ வந்துட்டேன்” என்று தயாராகி  வெளியே வந்தாள் மதுரா!

ரேவந்தின் ஃபேக்டரியில் வேலை செய்த நவீனின் குடும்பம் பயங்கர படிப்ஸ் குடும்பம்!

அவன் அப்பாவின் தாத்தா ஆரம்பித்து அவன் அப்பா வரை பச்சை இங்கில் கையெழுத்துப் போடும் ஆஃபிசர் குடும்பம்!

அவனின் பாட்டி கூட பொதுப்பணித்துறையில் அதிகாரியாக இருந்து ரிட்டயர்ட் ஆனவர்!

 அவன் குடும்பத்துக்கும் பிசினெஸ்க்கும் ஒத்து வராது என்று அவன் ஆசைப்பட்ட படி தனியே டெக்ஸ்டைல் நிறுவனம் ஆரம்பிக்க முதலீடு செய்ய மறுத்து விட்டனர் குடும்பத்தினர்!

அதனால் தான் அவன் ரேவந்தின் கம்பெனியில் பொறுப்பேற்றான்!

அவன் திறமையை ரேவந்த் சரியாக மதிப்பீடு செய்திருக்க, கொஞ்சம் தாமதமாக தான்,

 அதாவது, அவனின் முதலாளியே அவரது மைத்துனிக்கு சம்பந்தம் பேச வந்த போது அறிந்து கொண்ட அவர்கள் பின் அவனுக்கு முதலீடு பண்ண சம்மதித்தனர்.

நவீன் அவன் ஆசைப்படி, ஹோம் ஃபர்னிஷிங் எனப்படும் திரைச்சீலைகள், மிதியடிகள், போர்வை மெத்தை விரிப்புகள் என பலவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி விட்டான்!

அவனது பெரும்பான்மை வாடிக்கையாளர்கள், உள்ளூரிலும் சரி. வெளிநாட்டிலும் சரி. ஹாஸ்பிட்டல்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற வர்த்தக நிறுவனங்கள் தாம்!

அதாவது பி2பி எனப்படும் பிசினெஸ் டு பிசினெஸ் (B2B – Business to Business) வகையை சார்ந்தது அவனது தொழில்!

வர்த்தக நிறுவனங்களுக்கான சப்ளை மட்டுமே!

ஆனால் ரேவந்தின் தொழில் அப்படியல்ல! அது B2C(Business To Consumer) வகையை சார்ந்தது.

நுகர்வோருக்கான பொருள்கள் என்பதால் அவர்களுக்குள் தொழில் போட்டி எல்லாம் வருவதற்கு வாய்ப்பே இல்லை!

அதையெல்லாம் யோசித்து தான் இப்படி ஒரு நிறுவனம் தொடங்கி இருந்தான் நவீன்!

லக்கியின் அதிர்ஷ்டம் அவள் கணவனுக்கும் உதவவே செய்தது!

அவளை நிச்சயம் செய்து விட்டு உடனே கல்யாணம் செய்து கொள்ளவில்லை அவன்!

சில வருடங்கள் கழித்தே நடந்தது அது!

மதுராவுக்காக நடந்த அவசர நிச்சயம் தானே அது!

எனவே லக்கியின் படிப்பு முடியவும் அவன் தான் தொழிலில் நிலை நிறுத்திக் கொள்ளவும் அவன் அந்த கால இடைவெளியைப் பயன் படுத்திக் கொண்டான்!

இதோ இப்போது லக்கிக்கும் குழந்தை பிறந்து விட்டது!

ஆண் குழந்தை தான்!

மதுராவும் ரேவந்தும் காரில் போய் இறங்கிய போது, வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட முயன்று கொண்டிருந்தார் சூர்யா!

இவர்களை கண்டதும், “என்ன ஸ்வீட்டி இவ்வளவு லேட்டாவா வர்றது?” என்று சொல்லி விட்டு,

“வாங்க மாப்பிள்ளை” என்று ரேவந்த்தை வரவேற்று,

“மஹா வாடி வா” என்று அவளை அழைக்க அவளோ,

அவர்கள் கார் பின்னாடியே பைக்கில் கடைக்கு சென்று வந்த சுதர்சனிடம் “மாமா” என்றவாறு ஓடினாள்.

“ம்ம். அவ்வளவு தான் இனி நம்மளை எங்க கண்டுக்க போறா” என்று பேரனைக் கையில் வாங்கி கொண்டு,

“இந்த தோரணத்தைக் கட்டுங்க மாப்பிள்ளை எனக்கு எட்ட மாட்டேங்குது” என்று ரேவந்திடன் அதைக் கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.

உள்ளே ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரேஷ்மா, இனியா அனைவரும் மதுராவைக் கண்டதும் வரவேற்று பேச, லக்கி மட்டும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

 பின்னாலயே ஓடினாள் மதுரா.

“ஏய்.. தம்பி தூங்கிட்டு இருந்தாண்டி அதான் லேட்டாகிடுச்சு” என்று கத்திக் கொண்டே!

உள்ளே போய் உம்மென்று கட்டிலில் அமர்ந்து இருந்த லக்கியின் அருகே உட்கார, சட்டென்று அவள் மடியில் படுத்துக் கொண்டாள் லக்கி!

அறைக்கு வெளியே தூர இருந்து இதைப் பார்த்து விட்ட நவீன்,

“போச்சு.. இனி அக்கா தங்கச்சி கொஞ்சி முடிக்க நேரம் ஆகும்!

வாங்க நாம நம்ம வேலையைப் பார்ப்போம்” என்று கிண்டல் அடித்தான்!

அறைக்குள் இருந்து வேகமாக வந்து விழுந்தது ஒரு தலையணை அவன் மீது!

சிரித்துக் கொண்டே அங்கு இருந்து சென்றான் அவன்.

அய்யர் வந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு நல்லபடியே முடிந்தது!

பின் எல்லோரும் விருந்து சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்கையில்,

சூர்யாவின் அம்மா சுதர்சனிடம்

“டேய் சுதா. எல்லோரையும்சேர்த்து ஒரு போட்டோ எடுடா” என்று சொல்ல,

“இது தான் என்னோட அம்மாச்சி வேணும்கிறது!” என்று சொல்லி அனைவரையும் நெருக்கி நிற்க வைத்து தான் போனில் செல்பி எடுத்தான் சுதர்சன்!

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!”

நிறைந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!