மொழிக்கு ரிஷி! யா பிள்ளைகளை வச்சுக்கோ என்று பேசியது என்பது போல் அவனை பார்த்தாள்…
Advertisement
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர்..
Advertisement
மொழிக்கு ரிஷி தன்னிடம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விசயத்துக்கு சண்டை போடுவான் என்று அவள் எதிர் பார்த்தாள்
Advertisement
அவனுக்கு நான் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பது தெரிந்தால், கண்ட படி தன்னை திட்டுவான் என்று எதிர் பார்த்தாள், நீ எதுக்கு என் பிள்ளைகளுக்கு பால் கொடுத்த? என்று குதிப்பான், நீ யாரடி என் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க என்று தன்னிடம் சண்டை போடுவான் என்று எதிர் பார்த்தவளுக்கு..
அவனோ ரொம்ப நல்லவன் மாதிரி பிள்ளைகளை வச்சுக்கோ என்று சொல்லுகிறானே, இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ, என்று மொழி யோசிக்க..
அப்படி ஒன்றும் இருப்பது போல அவன் முகத்தில் தெரியவில்லை.
ராமமூர்த்தியும், குகனும் மொழியை தேடிக்கொண்டு வந்தனர்.
அவர் “மொழி, மொழிமா” என்று அழைக்க.
குகனும் “அக்கா, அக்கா எங்கே இருக்க நீ”, என்று கத்திக்கொண்டே வந்தான்.
இவர்கள் இருவரும் அந்த பெரிய புளிய மரத்தின் பின்னாடி அமர்ந்திருந்தது இவர்களுக்கு தெரியவில்லை.
ரிஷி அவர்களின் சத்தம் கேட்டு எழுந்து நின்றவன் “இங்கே தான் இருக்கோம்” என்று கத்த.
ரிஷியின் சத்தம் கேட்டு, அவர்கள் அருகில் வந்தனர்,..
ராமமூர்த்தியும் குகனும்.
மொழியின் அழுத முகத்தைப் பார்த்து ராமமூர்த்தி “நீ எதுக்குமா அழுகிற உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா” என்றார்.
குகனும் மொழியிடம் “எதுக்கு நீ இப்படி ஃபீல் பண்ற உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா அக்கா, நீ பண்ணது ரொம்ப பெரிய விஷயம் இதை யாரும் பண்ண மாட்டாங்க கா, பிள்ளைங்க கொடுத்து வச்சவங்க உன்ன மாதிரி ஒரு அம்மா யாருக்கு கிடைப்பாங்களா சொல்லு” என்றான் கண் கலங்கிய படியே..
ராமமூர்த்தி மொழியின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையை தூக்கி தொளில் போட்டவர் “வாங்க போலாம் கோயிலுக்கு” என்று அழைக்க.
குகன் இன்னொரு பிள்ளையை தூக்கிக்கொள்ள, குகன் தூக்கிய பிள்ளையை ரிஷி வாங்கிக் கொண்டவன்.
“உங்க அக்காவை மெதுவா கூட்டிட்டு வா” என்றான்.
மொழிக்கு எழுந்து கொள்ளவே கஷ்டமாக இருந்தது பிள்ளைகள் இருவரையும் மடியில் வைத்திருந்தது கால் வலிக்க குகன் மெதுவாக அக்காவை எழுப்பி கோயிலுக்கு கூட்டி வந்தான்.
அங்கே உள்ளவர்கள் அனைவரும் தேவகியை பேசி சமாதானம் பண்ணி இருந்தனர்.
ராதாவை சரவணன் கண்ட படி திட்டி இருந்தான் “எப்படி நீங்க மொழியை இப்படி தப்பாக பேசலாம்” என்று.
அவன் ராதாவின் சந்தேகம் தீர, கூகுளில் டைப் செய்து பல வீடியோக்களை ராதாவிடம் காட்டி இருந்தான் குழந்தை பெத்த தான் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கணும் என்று அவசியமில்லை,, குழந்தை பிறக்காமலே ஒருவர் குழந்தைங்களுக்கு பால் கொடுக்கலாம் என்ற வீடியோவை காட்ட,..
அதைப் பார்த்து ராதாவுக்கு அப்படி ஒரு ஆச்சரியம் இப்படி எல்லாம் இருக்கா என்று கூற.. ஆமாம் தத்தெடுத்த பிள்ளைகளுக்கு தன் பிள்ளையாக வளர்க்க சிலர் இதை செய்றாங்க. முதலில் இது வெளிநாட்டில் இருந்தவர்கள் தான் செஞ்சாங்க, இப்பதான் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது இது ரொம்ப கஷ்டமான சிகிச்சை என்றான்.
ராதாவுக்கு கஷ்டமாக இருந்தது மொழியை தப்பாக பேசி விட்டோமே கல்யாணம் ஆகாத பிள்ள இப்படி செய்து இருக்கிறாளே தன் அக்கா பிள்ளைகளுக்காகவா என்றவருக்கு வருத்தமாக இருக்க.
தேவகியை பார்த்தவர் “மன்னிச்சிரு தேவகி உன் பொண்ண தப்பா பேசிட்டேன், எனக்கு அவ்வளவு விவரம் தெரியவில்லை இதைப்பற்றி” என்றார்.
ராதா அப்படித்தான் படபடவென பேசுவார், மனதில் எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார், தன் மேல தப்பு என்றால் உடனே மன்னிப்பும் கேட்டு விடுவார்.
“நீங்க மன்னிப்புன்னு ஒரு வார்த்தை கேட்டா என் பொண்ணை பேசுனது எல்லாம் திரும்ப வந்துடுமா, பேசினா வார்த்தை பேசினது தானே” என்றார் வருத்தமாக.
“உன் பொண்ணு மொழி மாதிரி யாரு இருப்பாங்க சொல்லு,, அக்கா பிள்ளைக்காக இப்படி எல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க.
நான் புத்தி கெட்டு போய் கோவத்துல அப்படி பேசிட்டேன் என்னை மன்னிச்சிரு தேவகி, இப்ப கூட மொழியை சரவணக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க எனக்கு சம்மதம் தான். உனக்கு சம்மதமா சொல்லு உன் மகளை என் வீட்டு மருமகளா ஆக்கிக்கிறேன் “என்றார்.
தேவகிக்கு மனதில் இவ்வளவு பேசி விட்டு, உங்க வீட்டு மருமகளாக்கிப்பீங்களா, என் மொழி என்ன அவளோ சீப்பா போயிட்டாளா, ..
தேவகிக்கு ஒரே எண்ணம் தான், மொழி வாழ்க்கை என்னவாகுமோ. அவள் அக்கா பிள்ளைகளுக்கு பால் கொடுத்து வளர்த்தை தெரிந்து, யார் அவளை கல்யாணம் பண்ணிப்பார், ரிஷி மாப்பிள்ளையே அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாமா?
மொழி பிள்ளைகள் மேல் உயிராக இருக்கிறாள், வேற நல்ல மாப்பிள்ளையை பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் இவள் பிள்ளைகளை விட்டு இருப்பாளா? என்பது சந்தேகம் இதற்கு ஒரே வழி ரிஷியை அவளுக்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்.
சுதாவை பார்த்து.
ரிஷிக்கும் மொழிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரலாமா, என்று கேட்க.
சுதா “உங்க இஷ்டம் நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் கேட்கிறேன்” என்றார்.
ஐயப்பனுக்கு இது பிடிக்கவில்லை, தேவகியை பார்த்தும் முறைத்து “அதெல்லாம் வேண்டாம்” என்றார்.
‘ என்ன? என்ன வேண்டாம்? உங்க பொண்ணு பண்ண விசயம் தெரிஞ்ச அவள யாரு கல்யாணம் பண்ணிப்பா அப்படி வேற இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் உங்க பொண்ணு சும்மா இருப்பாளா ரெண்டு பிள்ளைகளை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பா?.
“ஒரு பொண்ணு செத்தது போதாதா இந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணி கொடுத்து அவ வாழ்க்கை கெடுக்க சொல்றியா” என்றார் ஐய்யப்பன்.
“உங்க மூத்த பொண்ணு என்னைக்காவது உங்க மாப்பிள்ளை கொடுமை படுத்துறன்னு உங்க கிட்ட வந்து சொல்லி இருக்காளா, நம்ம வீட்டுக்கு அழுது கொண்டு வந்து இருக்காளா சொல்லுங்க பாப்போம்..
ஏதோ போதாத காலம் மாப்பிள்ளைக்கு அவளுக்கும் ஏதோ பிரச்சனை அதை வெளியில கூட சொல்லல, அவளே ஆக்சிடண்டுல மாட்டி செத்தும் போயிட்டா அதையே பேசி இருக்கிற பிள்ளைகள் வாழ்க்கையை பிரச்சனை பண்ணிக்க வேண்டாம்.
உங்க சின்ன பொண்ணு பிள்ளைகளை விட மாட்டாள்.
இவளை வேற ஒருவனுக்கு எப்படி கட்டி கொடுக்க முடியும்.
அவ கல்யாணம் ஆகாம இவ்வளவு நாள் மாப்பிள்ள வீட்டிலிருந்து பெரிய விஷயம், இன்னும் ஊரு வாயில் விழப்போகிறோமா யோசிங்க” என்றார் தேவகி.
“இப்ப என்னதான் சொல்லுற” என்று ஐயப்பன் கோவமாக..
“எல்லாம் தப்பா நடக்குது அத சரி பண்ண தான் நான் பேசிகிட்டு இருக்கேன்”.
“என்னவோ பண்ணு நாளைக்கு மொழிக்கு ஏதாவது ஆச்சு?உன்ன சும்மா விடமாட்டேன் நான்” என்றார் மனைவியை முறைத்து…
அனைவரும் பேசி மொழிக்கும், ரிஷிக்கும் கல்யாணம் பண்ணலாம் என்று பேச இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு குலதெய்வம் கோயில்ல இருக்கோம், இப்பவே இங்கேயே கல்யாணம் முடிச்சிடலாம் என்று சுதா பேசினார்.