அரைக்கண்ணை திறந்தவன் மாத்திரை விழுங்கி, கஞ்சியை வாங்கி ஒரு டம்ளர் குடித்துவிட்டு படுத்து விட்டான்.
அவளுக்கு நன்றி என்று சொல்லக்கூட அவனுக்கு தெம்பு இல்லை.
Advertisement
மொழிக்கு ரிஷியை பார்க்க பாவமாக இருந்தது.
Advertisement
மொழி அவள் வீட்டில் சென்று செல்லமா பாட்டி வீட்டில் தங்கி கொள்வதாக சொல்லிவிட்டு வந்தாள்.
Advertisement
செல்லம்மா பாட்டியோட தங்கி கொண்டு இருந்தாலும் அவ்வப்போது அவனை பார்த்து விட்டு வந்தாள்.
Advertisement
ரிஷி நன்றாக தூங்கி இருந்தான் ஆனால் ஃபீவர் விட்ட பாடுடில்லை.
விடியற்காலையில் ரிஷிக்கு காய்ச்சல் அதிகமாக இருக்க.
மொழி ரிஷிக்கு சுடுதண்ணி குடிக்க வைத்து பீவர் மாத்திரையும் மறுபடி கொடுத்துவிட்டு வந்தாள் .
மறுநாள் விடிந்தும் ஃபீவர் குறையவில்லை அவனுக்கு..
பயந்து போனவள் காலை 8 மணிக்கு தங்கள் காரை எடுத்துக் கொண்டு வந்து அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தாள்.
ரிஷிக்கு ஏதோ மயக்கத்தில் இருந்தது போல இருந்தது தன்னை கைத்தாங்களாக அழைத்து வந்த மொழியைத்தான் நிமிர்ந்து பார்த்தான்.
அவனுக்கு பேச கூட தெம்பில்லை அமைதியாக காரின் சீட்டில் சாய்ந்து கொண்டு மருத்துவமனை வந்தான்
டாக்டர் பார்த்துவிட்டு “வைரல் ஃபீவர் தான் ஐந்து நாள் மாத்திரை சாப்பிட்டால் சரியாக போகும்” என்று மாத்திரை கொடுத்து விட்டு அனுப்பிவிட.
வீடு வந்து சேர்ந்ததும் இட்லியும் மாத்திரையும் அவன் கையில் கொடுத்தாள்.
அவள் கொடுத்ததை உண்டு விட்டு படுத்து விட்டான் ரிஷி.
இரண்டு நாள் கழித்தும் அவனுக்கு காய்ச்சல் விடவில்லை முகத்தில் வேறு சிகப்பு சிவப்பாக தடித்தது போல் தெரிய.
பதறி விட்டால் மொழி கீழே சென்று செல்லமா பாட்டியை அழைத்து மேலே வர.
பேரனின் முகத்தைப் பார்த்தவதருக்கு பயமாக இருந்தது.
“நந்து, நந்து கண்ணா” என்று பேரனை எழுப்பியவர் “சட்டையை கலட்டுறா ராஜா” என்றார்..
அவனும் மெல்ல சட்டையை கழட்டி விட முதுகிலும் தோளிலும் குண்டு குண்டாக அம்மம் போட்டிருந்தது அவனுக்கு.
ஐயோ ஆத்தா நான் என்ன தவறு செய்தேன் முளைப்பாரி போட்ட நேரத்தில் என் பேரனுக்கு அம்மம் போட்டு இருக்கே, என்று செல்லம்மா பாட்டி கண் கலங்க.
ரிஷி அப்போது தான் தன் உடம்பை பார்த்தான் அங்கங்கே தடித்து உருண்டையாக இருந்தது போல் தெரிய, அவனுக்கே அவன் உடம்பை பார்க்க கஷ்டமாக இருந்தது.
செல்லம்மா பாட்டி அழுததும்.
மொழிக்கு கோபம் வந்துவிட்டது..
“பாட்டி இது அம்மமும் இல்ல ஒன்னும் இல்ல ஹீட்டுக்கு இப்படி வந்திருக்கு மெடிசன் சாப்பிட்டால் சரியாகும்” என்றாள்.
“போடி கோட்டிகாரி அம்மன் தாண்டி போட்டு இருக்கு நான் எதுவும் தப்பு பண்ணிட்டேன் டி அம்மனுக்கு என்னடி குறை வச்சேன்” என்று பாட்டி மீண்டும் அழுக.
“ஏய் கிழவி என்னைய கொட்டிகாரின்னு சொல்லுற.
எந்த காலத்துல இருக்க பாட்டி ஹீட்னால தான் இப்படி வருது நான் புக்குல படிச்சிருக்கேன்”.
“என்னவோ சொல்லுறடி முளைப்பாரி போட்ட நேரத்துல இந்த மாதிரி அம்மன் போட்டுருந்த தெய்வ குத்தம் ஆகிவிடும் முளைப்பாரியை யாருமே தூக்க கூட வர மாட்டாங்க” என்று பாட்டி அழுக..
“பாட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல சாமி நம்மள ஒன்னும் சொல்லாது நீ எதையும் நினைச்சு கவலைப்படாத நீ முளைப்பாரி தூக்குற வேலையை பாரு..
நான் உன் பேரனை பார்த்துக்கொள்கிறேன்” என்றால் மொழி.
“தெய்வ குத்தம் எல்லாம் இல்ல தானடி” என்று செல்லம்மா பாட்டி புலம்ப.
“கிழவி” என்று சொல்லம்மா பாட்டியை முறைக்க.
“நீ எது சொன்னாலும் சரியா தான் இருக்கும் இருந்தாலும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு” என்று பாட்டி புலம்ப.
“நீ கீழ போ மேல வராத, வயசாயிடுச்சு உனக்கு இன்பெக்சன் ஆகி உனக்கு ஏதாவது வந்துட போகுது நான் பார்த்திருக்கிறேன்” என்றால் மொழி.
ரிஷிக்கு உடல் சோர்வாக இருந்தது படுத்துக்கொண்டான், அவர்கள் பேசுவதெல்லாம் காதில் கேட்டது இருந்தாலும் அவனுக்கு உடலும், மனதும் சோர்ந்து இருந்தது, அதைவிட ஒருவிதமான எரிச்சல் உடம்பில் உண்டாகியிருந்தது..
மொழி உடனே ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்றாள்..
அவளுக்கு தெரிந்த டாக்டரிடம் சென்று விஷயத்தை சொல்ல அவரோ “இது ஹீட்டுக்குதாமா வந்திருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவர்,
மாத்திரைகளை கொடுக்க “என்ன டாக்டர்” என்றால் ஒருவேளைக்கு எட்டு மாத்திரை முழுங்க அவர் கொடுத்திருந்தார்,
“இளநீர், தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்று அவர் சொல்ல.
“சரி டாக்டர்” என்று மாத்திரை வாங்கிக் கொண்டு இளநீர் கரும்பு ஜூஸ் என்று அனைத்தும் வாங்கிக் கொண்டு செல்லம்மா பாட்டி வீடு வந்தாள் மொழி.
செல்லமா பாட்டி வீடு பெரிய வீடு மாடியில் யாரும் செல்ல மாட்டார்கள்.
வீட்டில் ஒரே ஒரு வேலைக்காரி இருக்க அவரும் வயதான பெண்மணி அவரும் மேலே செல்வதில்லை அதே மொழிக்கு வசதியாக போனது.
வேலை வேலைக்கு மாத்திரையும் இளநீரும், கஞ்சி,குடிக்க மொழி கொடுக்க நான்கு நாட்களிலே எழுந்து அமர்ந்து விட்டான் ரிஷி.
முளைப்பாரி வைபவம் முடிந்து விட்டு தீமிதி திருவிழா உறியடிக்கும் திருவிழா, அன்னதானம் என்று ஒன்றன் பின்னாக ஒன்றாக கோயில் திருவிழாவில் நடக்க.
ஊரே களைகட்டி இருந்தது.
ரிஷிக்கு மொழியின் மேல் இருந்த பார்வையை திருப்பவே முடியவில்லை.
இவ்ளோ அழகான பெண் ஒரு வாரமா என் பக்கத்தில் இருந்திருக்கிறாளா. என்றே பார்த்தான் அவளை.
அவன் பார்வையை பார்த்தவள் “என்ன என்னை சைட் அடிக்கிறீயா”? என்று மீண்டும் அதையே கேட்க சிரித்திருந்தாள் மொழி.
“அழகா இருந்தா பாக்க தான் செய்வாங்க அதுக்கு என்ன பண்ண சொல்ற” என்றான் அவளை பார்த்தவாறே..
” ஓ அழகா இருந்தா பாப்பீங்களா என்றாள் மொழி,.
“பார்ப்பேனே தப்பில்லையே”என்றான் ரிஷி.
“இனிமே இப்படி பார்த்தீங்க கண்னை நோண்டி விடுவேன்” என்றவள் கீழே சென்றுவிட.
அவள் சொன்ன பாவனையில் சிரித்து விட்டான் ரிஷி…
மொழியை அவனுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது.
தனக்கு உடம்பு சரியில்லப்போ, பார்த்ததாலா என்னவோ சொல்ல தெரியவில்லை ஏதோ அவளோடு இருந்த ஒரு வாரம் கழித்தது அவனுக்கு அவ்வளவு இதமாக இருந்தது மனதில்.
உடல் நலம் தேறி எழுந்து நடக்க ஆரம்பித்து இருந்தான்.
ரிஷி மன வேதனையோடு தான் இங்கே வந்திருந்தான்.
அவன் பிசினஸில் பல பேர் அவனை பிசினஸ் செய்ய விடாமல் தடுக்க,.
சின்னப் பையன் வளர்ந்து வருவதை சிலருக்கு பிடிக்கவில்லை பல பேர் அவனுக்கு எதிராக இருந்து அவனை பிசினஸ் செய்ய விடாமல் பல தடுங்கல் பண்ண..
அவனால் முடிந்த வரை போராடி பார்த்து விட்டான்.
அவர்கள் அவனை மீண்டும், மீண்டும் தொல்லை செய்ய போடா என்று அனைத்தையும் விட்டு, விட்டு பாட்டி வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு செல்லலாம் என்று வந்தான்,, வந்த மறுநாளே ஃபீவர் வந்துவிட்டது..
ரிஷிக்கு அம்மம் போட்டது சரியாகி மூன்று தண்ணி ஊத்தி இருந்தார்கள்.
மொழியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தனக்கு உணவு கொண்டு வந்தவளை பார்த்தவன் “உன் பெயர் என்ன”? என்றான். “இவ்வளவு நாளாகி இப்ப தான் என் பெயர் கேட்க தோணுச்சா”? என்றாள்..
ரிஷி சிரித்த படியே “சொல்லு” என்றதும்
“அருள்” என்றால் மொழி.
” நல்ல பெயர்” என்று மனதில் குறித்துக் கொண்டான்.
ரிஷியின் போன் அடித்துக் கொண்டே இருக்க ரிஷி போனை எடுக்கவில்லை..