மொழி இரண்டு, மூன்று நாள் பார்த்திருந்தாள், அவன் போன் எப்பொழுது அடித்துக்கொண்டே இருக்கும் அவன் அந்த போனை எடுத்துப் பேசவில்லை..
அவளுக்கு கேட்கணும் என்று தோன்றும் அவன் என்ன நினைப்பான் என்று கேட்கவில்லை மொழி.
Advertisement
சில நாட்களாக இருவருக்கும் நல்ல ஊரையாடல் இருக்க, பார்வை பரிமாற்றம், இருவரும் கண்களால் காதல் பேசினார்கள், ரிஷியின் பார்வையை புரிந்து கொண்டாள் மொழி..
அவனின் மேல் உள்ள அக்கறையில்,
Advertisement
Advertisement
அவனிடம் கேட்டு விட்டாள்..
“ஏன் நீங்க போன் அடிச்சாலும் பேச மாட்டேங்கறீங்க எனி ப்ராப்ளம் நந்து” என்று அவள் கேட்க.
Advertisement
அவனுக்குமே யாரிடமாவது தன் பிரச்சனையை சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்தவன்.
“பிரச்சனை தான் அருள். என்னை பிசினஸ் பண்ண விடாம இம்சை பண்றாங்க சில பேர், நான் நேர்மையாகத் தான் பிசினஸ் பண்றேன் ஆனா என் நேர்மையை பார்த்தே,, பல பேர் என்னை பிசினஸ் செய்ய விடாமல் தடுக்குறாங்க” என்றான்.
“பல பேர் தடுக்குறாங்கன்னா? நீங்க முன்னாடி வர்றது அவங்களுக்கு பிடிக்கலைன்னு அர்த்தம் நந்து.,
நீங்க வெற்றியை நோக்கி போறீங்கன்னு அர்த்தம்,
நீங்க போற பாதை சரியா இருக்குன்னு தானே அர்த்தம்.. உங்களை பிஸ்னஸ் பண்ண விடாம தடங்கல் பண்ணாங்கன்னா அவங்களுக்கு உங்கள் வளர்ச்சியை பார்த்து பயம்.
நாம பல தடங்களை மீறி தான் நம் வாழ்க்கை ஜெயிக்க முடியும்” என்றாள்..
மொழி பேசுவதும் ரிஷிக்கு புது தெம்பு வந்தது போல் இருந்தது அப்போ நம்ம சரியான பாதையில் தான் சொல்கிறோம், நான் போற பாதை சரிதான், என்று மனதில் நினைக்க.
“சாதாரண தொழில் செய்யுறவங்கள இருந்து பல கோடி பிசினஸ் செய்யுறவங்கள இருந்து எல்லாருக்கும் ஒரே பிரச்சினை தான் நம்ம வேலைய, நம்ம சரியா செய்தோம் என்றால் அதை தடுக்க ஆயிரம் பேர் வருவாங்க.
ஏன்னா அவங்க வேலையை, அவங்க சரியா செய்ய மாட்டாங்க அதோட பலன் அவங்களுக்கு பல மடங்க வேணும்னு என்று ஆசை.
நம்ம அப்படி கிடையாது நம்ம செய்யுற தொழிலை நம்ம சரியா செய்யணும் நினைப்போம். அதோட பலன் பல மடங்கு நம்மளுக்கு தானா வந்து சேரும்.
சில பேர் அவங்க செய்ற வேலையை சரியா செய்ய மாட்டாங்க, ஆனா பல மடங்கு லாபம் வேணும்னு நினைப்பாங்க அதுக்காக நல்லா செய்றவங்களை மட்டம் தட்டி குறைபேசி வேதனைப்படுத்தி அந்த இடத்திலிருந்து துரத்த பார்ப்பாங்க, நாம பயந்து ஓட கூடாது,
நாம நின்ன இடத்தில் இருந்து நம்ம சாதிக்கணும் சாதித்து காட்டணும் என்ன செய்து விடுவார்கள் நம்மளை கொலையா செய்து விடுவாங்க.
நம்மள வேதனைப்படுத்து வாங்க, தடுப்பாங்க அசிங்கப்படுத்துவாங்க எல்லா வேலைகளிலும் இது நடக்கும்.
இதுக்காக வருத்தப்பட்டு போன் பேசாம இருப்பீங்களா உங்களை நம்பி எத்தனை பேர் இருப்பாங்க.
அவங்க உங்க மேல நம்பிக்கை வைத்து இருப்பாங்க தானே அந்த நம்பிக்கை நீங்க கெடுக்கலாமா”? என்றாள் மொழி.
மொழி அப்படி சொன்னதும்.
அவனின் கண்களில் அவள் மீது உள்ள அதீத பாசம் நேசம் காதல் என்று சொல்ல முடியாத ஒரு உணர்வு மொழிக்கு தெரிய.
“எதையும் யோசிக்காதீங்க நந்து, பிசினஸ் பாருங்க” என்று மொழி கீழே சென்று விட்டாள்.
மொழிக்கு கிரிக்கெட் விளையாட ஒரு மேட்ச்க்காக அழைப்பு வந்து கொண்டிருந்தது.
ரிஷி மறுநாள் தான், தன் மாடியில் இருந்து அருள் ஜோதியை பார்த்து சிரித்து இருந்தான்.
அவளும் பதிலுக்கும் சிரிக்க.
அவன் அவளை தன் வீட்டுக்கு வந்த அருள் என்று நினைத்திருந்தான் அவளை.
மீண்டும் மறுநாள் அவளை பார்த்து சிரிக்க,
அடுத்த நாள் திருவிழாவில் அவளிடம் வந்து காத்திரு என்று சொல்லி விட்டு வளையல் வாங்கி கொடுத்து விட்டு டெல்லி சென்றிருந்தான்.
அருள்மொழி அக்காவிடம் ரிஷியை பற்றி சொல்லி இருக்க.
அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் செல்லம்மா பாட்டி வீட்டைபார்த்து கொண்டே நடந்து வந்தாள் அருள்ஜோதி.
ரிஷி அவளை பார்த்து சிரிக்கவும்.. அருள் ஜோதிக்கு ரிஷியை பார்த்ததும் மனது காதல் வயப்பட்டது.
ரிஷி தன் வீட்டுக்கு வந்த பெண் அருள் என்று ஜோதியை பார்க்க.
அவளுக்கு தங்கை சொன்ன ஆடவன் என்று ரிஷயை பார்த்திருந்தாள்.
இருவரும் பழைய நினைவுகளில் இருந்து நிகழ் காலத்துக்கு வந்தனர்.
இருவரிடம் மௌனம் மட்டுமே.
மொழிக்கு மசாஜ் செய்து முடித்தவன் “மொழி தூங்கு” என்று அவளை தூங்கச் சொல்ல .
“தூக்கம் வரல ரிஷி” என்றால் மொழி.
அவளை அணைத்த படியே தூங்க வைத்திருந்தான் ரிஷி.
நாட்கள் அதன் போக்கில் செல்ல. இரு வாரங்கள் முடிந்திருந்தது மொழி யார் உதவி இல்லாமல் ஒரு அளவுக்கு நடக்க பழகியிருந்தாள்.
குகனும் தன் மனைவியை அழைத்துக்கொண்டு ரிஷி வீட்டிற்க்கு விருந்துக்கு வர.
ஐயப்பனின் தேவகியும் தன் வீட்டுக்கு அழைத்து இருந்தான் ரிஷி..
“நாங்கள் எதுக்கு” என்று கேட்டபோது..
‘வாங்க கோயிலில் கல்யாணம் வச்சிருக்கேன்’ என்று வட பழனி கோயிலில் முருகருக்கு கல்யாணம் ஏற்பாடு செய்தவன் அன்றே மொழியை எழியமுறையில் கல்யாணம் செய்து கொண்டான்.
அவனுக்கு பெரியதாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை..
ஜோதியை அவனால் மறக்கவும் முடியவில்லை..
அவளுடைய வாழ்ந்த வாழ்க்கை கனவு போல இருந்தது அவனுக்கு..
அவள் இருந்திருந்தால் கண்டிப்பாக அவளோடு வாழ்ந்திருப்பான்..
அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளை மறப்பதற்கும், அருள்மொழியோடு வாழ்வதற்கும் தான் இவ்வளவு வருஷம் அவன் காத்திருந்தான்…
அவனுக்கு நடந்த துக்கத்திலிருந்து மீண்டு வர இவ்வளவு வருஷம் தேவைப்பட்டது.
மொழியும் அக்காவின் இறந்த நினைவுகளை மறந்திருந்தாள் பல வருடங்களாகியதால் துக்கங்களின் தாக்கம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது, இருந்தாலும் அக்காவை மறக்க முடியவில்லை…
அவள் இல்லாததை இன்னும் ஏற்க முடியாமல் தான் அவளும்இருந்தால்..
அதாவது பிள்ளைகளை பார்க்க வேண்டும் தன் வாழ்க்கையும் பார்க்க வேண்டும் ரிஷியை மனதில் நினைத்துக் கொண்டே அனைத்தையும் மறந்து கல்யாணத்துக்கு தயார் ஆனால் மொழி.
வடபழனி கோயிலில் ரிஷி, மொழியை சிம்பிளாக திருமணம் முடிந்திருக்க. ஐயப்பனுக்கும் தேவகிக்கும் மொழியின் வாழ்க்கையை பற்றி கவலை நீங்கி இருந்தது..
ரிஷிக்கு ஜப்பானில் வேலை முடியாததால். தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஜப்பான் சென்று இருந்தான்.
சுதாவையும், ராமமூர்த்தியை கூட அவன் ஜப்பான் அழைக்க..
அவர்கள் மறுத்துவிட்டனர் குழந்தையை கூட தங்களிடம் விட்டு விட்டு நீயும் மொழியை மட்டும் ஜப்பான் சென்று வாருங்கள் என்று சுதா சொல்ல.
மொழி தன் பிள்ளைகளை விட மாட்டேன் என்று அழைத்துக் கொண்டு ஜப்பான் சென்றிருந்தாள் ரிஷியோடு.
ரிஷி ஜப்பானில் பார்த்துக் கொண்டிருந்த வேலைகள் கொஞ்சம் பெண்டிங் இருந்தது குகன் கல்யாணம் என்பதால் வேகமாக வந்திருந்தான்
பிள்ளைகளுக்கும் லீவு இருப்பதால் மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஜப்பான் வந்திருந்தான்..
தன் வாழ்வு இவ்வளவு அழகாய் இருக்குமா என்று ரிஷி நினைத்திருக்க வில்லை.
அவ்வளவு அழகாய் மாற்றியிருந்தனர் அவனின் பிள்ளைகளும், அவன் மொழியும், காலையில் அவன் மகன்களின் பேச்சு சத்ததில் தான் கண் முளிப்பான் ரிஷி ..
இரவு அப்படித்தான், அவர்களோடு விளையாடி விட்டே, தூங்க செல்வான்..
மொழிக்கு ரிஷி தன்னுடன் இருப்பதே போதும் என்று இருந்தாள்.
அவன் திருமணத்திற்கு முன் காட்டிய நெருக்கத்தை,, மொழியை திருமணம் முடித்து பிறகு காட்ட வில்லை, பல சமயங்ககள் தனிமை கிடைத்தும் மொழியை அவன் நெருங்க தவிர்ப்பதை உணர்ந்தாள் மொழி..
மனதில் ஏன் என்று கேள்வி வர.
அவளுக்கு பிள்ளைகள் இருப்பதால், தன்னிடம் நெருங்க வில்லை என்று அவள் நினைத்திருக்க..
ரிஷிக்கு அருள் ஜோதியின் நினைவு பாடாய் படுத்தியது, அவளோடு வாழ்ந்தா ஒரு வார வாழ்க்கை அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது,..
அதிலிருந்து அவனால் மீண்டும் வர முடியவில்லை, மொழியை நெருங்க முடியாமல் தவித்தான்,.
தினமும் தன் முகத்தை மொழி ஆர்வமாக பார்ப்பதை பார்த்து தவித்தான்,.
அவனுக்கு புரிந்தது, திருமணம் முன்பு அவளை அணைத்து முத்தமிட்டு அவளோடு தூங்கியவன், இப்போது விலகி இருப்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று,
இருந்தும் அவளை விலக்கி வைத்திருந்தான்..
மொழிக்கு அவன் விலகல் கஷ்டமாக இருந்தது,,.
அவனோடு இப்பவே வாழ்ந்த விட ஆசையில்லை அவளுக்கு,, ஆனாலும் ரிஷியோடு ஒரு அழகான வாழ்க்கை, வாழ வேண்டும் என்று ஆசையிருந்தது,.
அன்று அதேபோல் ஒரு தனிமை கிடைக்க அவனின் கைகளை பிடித்துக் கொண்டாள் மொழி..
மொழி ரிஷியின் கையை பிடித்து
அவன் முகத்தை பார்க்க,.
ரிஷியால் அவளை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை,.
அவளின் தவிப்பான முகத்தையும், தன்னை ஆசையாக பார்க்கும் பெண்ணையும் சமாளிக்க முடியவில்லை அவனால்.
ரிஷி அவளை நிமிர்ந்து பார்க்காமல் நின்றிருப்பதை தாங்க முடியாத மொழி, கலங்கி கண்ணை அவனுக்கு காட்டாத மொழி.
அவனின் கையை விட்டு, அறை நோக்கி செல்ல.
ரிஷிக்கு இதற்கு மேல் அவளை தவிக்க விட கூடாது என்று நினைத்தவன்.
அவளை பின்னிருந்து அணைத்த படியே தூக்கி இருந்தான் ரிஷி..