Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 16 2

 அவள் மனதில் ஏதோ இருக்கிறது அனைத்தும் வரட்டும் என்று அவன் அமைதியாக காத்திருக்க.

மொழி  அவன் மேல் வைத்துள்ள ஆசை, ஏக்கம்,காதல் என்று ஒவ்வொன்றையும் அவள் புலம்புவது போல் புலம்பி கொண்டு இருக்க அதை அவ்வளவு ஆசையாக பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.



Advertisement

 மொழிக்கு ரிஷி கல்யாணத்துக்கு பிறகு  தன் பக்கத்தில் வராது அவ்வளவு ஒரு வேதனையை கொடுத்தது.

Advertisement

 மனதில் ஏன் என்று ஆயிரம் கேள்விகள்.

Advertisement

 ஒருவேளை அக்காவை அவரால் மறக்க முடியலையோ.

 நான் தவறு செய்து விட்டேனா.

Advertisement

 வேற யாரையாவது ரிஷிக்கு கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாமோ என்று பல மாதிரியாக யோசித்திருந்தாள்.

 மனது அவளுக்கு ஆறவே இல்லை அதுவும் அவள் ரிஷியின்  பக்கத்திலே வர,  அவன் அவள்  முகத்தையும் பார்த்தும்,  பார்க்காமல் போனது அவ்வளவு ஒரு வேதனை கொடுத்தது

மொழிக்கு.

 மொழியின் முகம், மூக்கு எல்லாம்  சிவந்து இருந்தது.

 தன் முன் மூக்கு விடைக்க கோபத்தில் பேசும் தன் அழகியே ரட்சசியை ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி.

 “உங்களை முதலில் நான் மிஸ் பண்ணப்போ எவ்வளவு வேதனையோடு அந்த திருநெல்வேலி பைபாஸ் வழியா போனேன்னு உங்களுக்கு தெரியுமா, அந்த பொக்கைல சாரி, வாழ்த்துக்கள்னு எழுதறப்போ என் கை எவ்வளவு நடுங்குச்சு, நான் எவ்வளவு வேதனையோடு போனேன் உங்களுக்கு தெரியுமா,..

 என் நெஞ்செல்லாம் வலிச்சது, என் ரிஷியை   விட்டுக் கொடுத்துட்டேனே,  எனக்கு என் ரிஷி இல்லையே அவர் கூட வாழ முடியாமல் போச்சே என்று, நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா, என் மனசு எவ்வளவு ஏங்குச்சு உங்களை விட்டு கொடுத்தத நெனச்சு.

 ஆனா நீங்க நம்ம ரெண்டு பேரும் வாழ்கிற சூழ்நிலை அமைஞ்சும் என்னை தள்ளி வச்சிருக்கீங்க,  என்ன கல்யாணம் பண்ண அன்னைக்கு உங்க கூட வாழனும்னு ஆசைப்பட்டேனா, எனக்கும் எல்லாம் புரியும், ஆனா நீங்க ஏன் மூஞ்சிய  கூட பாக்கல ஒதுங்கி ஒதுங்கி போறீங்க என் முகத்தைக் கூட பாக்காம இருக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணினேன் உங்களை,.

 உங்க சூழ்நிலை எடுத்து சொல்லி இருந்தா என்னால புரிஞ்சிருக்க முடியாதா,

 ஏன் என்னை விட்டு விலகி போனீங்க ஏன் என்னை பார்க்கலை சொல்லுங்க” என்று அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்டிருந்தாள்.

 ரிஷிக்கு ஐயோ என்று ஆனது, தன் பக்கத்தை மட்டும் நினைத்து,அவள் உணர்வுகளை    நினைக்க மறந்து விட்டேனே.

 “சாரிடி நீ கேக்குறது எல்லாம் சரிதான், நீ என்னை இவ்வளவு எதிர் பார்ப்பன்னு நான் நினைக்கல.

 என்னைய நீ புரிஞ்சுக்கணும் நீயின்னு நினைச்சு நான்” என்றவன்.. ஜோதியின் பெயர் சொன்னால் மொழி  வருத்தப்படுவாளோ என்று அவன் அமைதியாக இருக்க.

 “சொல்லுங்க” என்றாள்,…

 அவள்  சொல்லுங்க என்று சொன்னவுடனே தான் எது சொன்னாலும் அவள் புரிந்து கொள்வாள் என்று நினைத்தவன் சொல்ல ஆரம்பித்தான்.

 “நான் சொல்வதை பொறுமையாக கேளு தப்பா நினைச்சுக்காத என் மனசுல இருந்து தான் நான் சொல்றேன்”.

 என்றவன் சொல்ல ஆரம்பித்தான்.

 “எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு மொழி” என்றான்,.

 அவளின் கையைப் பிடித்துக் கொண்டேன்.

 “என்ன கில்டி” என்றாள்.

 “ஜோ என்னை விட்டு  போனத என்னால   நம்ப முடியவில்லை  மொழி.

 நீயின்னு  நெனச்சு தான் அவ கூட நான்  வாழ்ந்தேன்,

நான் இல்லைன்னு சொல்லல அவ கூட வாழ்ந்த வாழ்க்கையை என்னால் மறக்க முடியவில்லை சந்தோஷமா தான் வாழ்ந்தேன் அனுபவிச்சு வாழ்ந்தேன் அவளும் என் கூட நல்லாதான் இருந்தா,

 அவள நான் தப்பு சொல்ல மாட்டேன் அவளை  நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன், அவளை விட்டு பிரிஞ்சுபோயி  பெரிய கஷ்டத்தை கொடுத்தும்,அவ என் மேல்  கோபப்படல, என்னை திட்டல, எனக்காக பொறுமையா காத்திருந்தா..

 நான் அவளை மதிக்கவே இல்லை, அவ பாசத்தை புரிஞ்சிக்கவே இல்லை அவள் மாசமாயிருப்பதை தெரிஞ்சும், அவளை நான் வந்து பார்க்கல பார்த்தப்ப கோவப்பட்டு போயிட்டேன்,.

 அதற்கும் அவ என் மேல் கோபப்பட்டு என்னை திட்டலை என்னை விட்டு போகல என் கூட வாழ்வேன் என்று முடிவு எடுத்தாள், என்னை தேடி வந்தா..

 என்னைத் தேடி வந்தவளை நான் தொலைச்சிட்டேன் அவ உயிரை எடுத்துட்டேன், அதுக்கு  நான் தானே காரணம்.

 நான் பண்ண ஒரே ஒரு முட்டாள் தனத்தால ஒரு பொண்ணு உயிர் போயிருக்கு அவ வாழ்க்கையை அழிச்சு  இருக்கிறேன்,.

 என் பிள்ளைகள் அம்மா இல்லாம இருக்காங்க, நீ மட்டும் இல்லன்னா அவங்க என்ன ஆகி இருப்பாங்க? ஏதோ என் மேல கோபம், சுயநலமா இருக்கேன்னு,  மறுபடியும் உன்னை கல்யாணம் பண்ணி, நான் சுயநலமாக வாழ்கிறேனோ என்று எனக்கு என் மேல்  கோபம்.

 ஜோதி என் மேல  வச்ச பாசத்துக்கு  நான் என்ன செய்வேன்,. அவ  உயிர் போயிடுச்சு,  அவ உயிர் போறப்ப கூட சிரிச்சுக்கிட்டே தானே போனா,  என்ன அப்பக்கூட அவ திட்டலையே? அது என்ன ரொம்ப நாளா  தூங்கவிடாமல் தொல்லை பண்ணுச்சு மொழி.

 யாரை குத்தம் சொல்ல, யாரை  நியாயப்படுத்த யாரு மேல என்ன சொல்வது எனக்கு புரியல பண்ணதுக்கு எல்லாம் காரணம் நான் தான்..

 உனக்கும் ஜோதிக்கும் வித்தியாசம் கண்டுபிடிச்சுருந்தேனா இந்த பிரச்சனையை வந்து இருக்காது உன் கிட்ட, நான் காதலை சொல்லல.

 நீயின்னு  நெனச்சி உங்க அக்கா கிட்ட போய் என் காதலை சொல்லிட்டு போயிருக்கேன்.

 அவள் என்னை நினைத்துக்கொண்டு கல்யாணத்தை தள்ளிப் போட்டு என்னை கல்யாணம் பண்ணி இருக்கா,  அவளுக்கும் நான் நியாயம் செய்யல,  உன்னையும் விட்டுட்டேன் என்னால எல்லாருக்கும் தான் வருத்தம்,..

 என்  அஜாக்கிறதையால,  அருள் ஜோதி உயிர் போனது என்னால தாங்கவே முடியவில்லை, அதுவும் என் பிள்ளைகள் சுமந்துட்டு இருக்கிறவளை நான் மதிக்கலையே,  அவ உணர்வுகளை நான் புரிஞ்சுக்கலையே என்று பல நாள் நான் தூங்காமல் அழுதிருக்கிறேன் மொழி” என்றான்.

 மொழி இப்பொழுது தான் அவன் பக்கத்தில் உள்ள  நியாயங்களையும் அவன் பட்ட வேதனைகளும் புரிந்து கொண்டாள்.

 இவ்வளவு நேரம் தன் உணர்வுகளை பற்றி அவள் நினைத்திருக்க,,ரிஷியின்  உணர்வுகளை அவள் புரிந்து கொள்ள மறந்திருந்தாள், இப்பொழுது அவன் உணர்வுகளை அவன் ஒவ்வொன்றாக சொல்ல “ரிஷி” என்று அவனின் கையை பிடித்துக் கொண்டாள்.

 “சாரி மொழி நான் உனக்கும் நியாயமாக இல்லை, உன் அக்காளுக்கு நியாயம் செய்யவில்லை..

 எல்லாத்தையும் மறந்துட்டு உன்னோட  சந்தோஷம் ஒரு  வாழ்க்கை வாழ வேண்டும்  என்று எனக்கு ஆசை இருக்குடா,  அதுக்கு சிறு தயக்கம் இருந்துச்சு அது இப்போது என்கிட்ட இல்லடா மொழி” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!