Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 16 3

  ரிஷியின்  உணர்வுகளை  புரிந்து கொண்டவள்,  “நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க ரிஷி, எல்லாம் விதி, நீங்க என் பெயர் கேட்டப்போ, நான் என் பெயர் அருள் மொழியின்னு சொல்லி இருந்தா, இந்த பிரச்சனையே வந்து இருக்காது, நான் அருளுன்னு சொல்ல போயித்தானே இவ்வளவு பிரச்சனை, விடுங்க நடந்தது நடந்து போச்சு, யாருமேலயும் நாம குத்தம் சொல்ல முடியாது, இதெல்லாம் அனுபவிக்கனும் என்பது விதி”  என்று அவனை அணைத்து கொள்ள.



Advertisement

 அவளை இறுக்கமாக  அணைத்து கொண்டான் ரிஷி..

இருவரும்  தங்கள் மனம் திறந்து  பேசியதால்  மனதில் உள்ள பாரம் குறைந்தது போல இருந்தது,..

Advertisement

Advertisement

நீண்ட நேரம் அணைப்புக்கு பின் மொழியை விட்டவன்,.

அவள் கண்ணோடு தன் கண்ணை கலந்தவன்,  நெத்தி முட்டி, அவள் முகத்தை பார்க்க.

Advertisement

மொழிக்கு அவனின் பார்வை வீச்சை தாங்க முடியவில்லை, அவனை பார்க்க முடியாமல் தலை குனிய போனவளை.

 “ஏய் தலை குனிஞ்ச  கொன்னுடுவேன் என்னை பாருடி” என்றான்,

அவளுக்கு ரிஷியை பார்க்க முடியவில்லை, மீண்டும்  தலை குனிய போனவளை.

இழுத்து பிடித்தவன், “என் கண்ணை மட்டும் நீ பாக்குற, முகத்தை திருப்புனா கொன்னுடுவேன் உன்னை” என்று அவளை தன் கண்ணை பார்க்க சொல்ல.

அவன் கண்ணை அவளால் பார்க்க முடியவில்லை, அவளை தின்பது போல் பார்த்தான் ரிஷி,..

“ரிஷி” என்று அவள் சினுங்க,.

“ஏய் என் முகத்தை தவிற நீ எங்கேயும்  பார்க்க கூடாது, நீ சொன்ன தானா, ஏன் ரிஷி என் முகத்தை பார்க்கலன்னு,  இப்போ பாக்குறேன்டி உன்னை..

நீ என் முகத்தை மட்டும் தான்  பார்க்கனும்” என்றவன்,

அவள் அவன் முகத்தை பார்க்காமல்  வெக்கபட்டு  கொண்டிருந்தவளை. தன் முகத்தருகே, அவள் முகத்தை கொண்டு வர, மொழியின்  முகத்தில் வெக்க புன்னகை.

அவள் புன்னகையை ரசித்தவன். அவளின்  தாடையை பிடித்து நிமிர்த்தி, அவள் கண்ணோடு தன் கண்ணை வைத்தவன், அவள் முக்கோடு மூக்குரசி, இதழை நெருங்க.

மொழி  இன்ப அவஸ்தையில் இருந்தாள், ஒரு நிமிடம் தயங்கிய ரிஷி,மொழி அவனின் தோளை பிடித்து அழுத்த,. அதை அவள் சம்மதமாக, எடுத்துக்கொண்டவன்..

சூரா வழியாக  மாறி, அவளை சுருட்டியவன். அவளின் இதழோடு இதழ் உரச.

ரிஷி என்று சொல்லவந்தவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடியவன்..

அவளோடு இதழ் யுத்தம் செய்ய.

மொழி அவன் கையில் தோய்ந்திருந்தாள், அவன் என்ன செய்தாலும், மறுப்பதற்கு ஒன்றுமில்லை, நீண்ட இதழ் முத்ததில் இருந்து மீண்டவன், அவளை பார்க்க அவளோ மயக்கத்தில் இருப்பது  பல அவன் கைகளில் மயங்கி இருக்க.

“மொழி” என்று அவளை தன் இதழ் கொண்டு முத்தமிட்ட படியே பேச.

அவன் மொழி  என்று  அழைத்ததும் கண் திறந்து பார்த்தவளை..

கல்ல புன்னகையோடு “இன்னைக்கு இது  போதும் நீ கிளம்பு” என்றான்..

அவளோ என்ன சொல்கிறான் இவன் என்று காது கேட்கதாது போது ஆன் என்று கேட்க.

அவளின் காது மடலில் முத்தமிட்ட படியே, ‘இன்னைக்கு இது போது நீ கிளம்பு” என்றான்.

அவன் சொல்வதை புரிந்து கொண்டவள், எழ பார்க்க.

“அடிங்க நான் சொன்ன போவீயா” என்றவன்,..

 “சும்மா உன்னை சீண்டுனேன்” என்றவன், .

அவளின் இடுப்பை பிடித்து தூக்கியவன், “அப்பா, அம்மா விளையாட்டு விளையாடலாமா, செல்லம், என் செல்லாம்” என்ற பாடலை  ரிஷி பாட,.

அவன் பாடியதை  கேட்டு சிரித்து விட்டாள் மொழி,…

“என்னடி சிரிப்பு”,, என்ற ரிஷி.

சிரித்து அவள் இதழை கொய்ய ஆரம்பித்தான்.

மொழி ரிஷியின் தொடுகையில் உருகி நின்றாள்.

யார் கொடுப்பது, யார் எடுப்பது என்ற போட்டி எல்லாம் இல்லை, இருவரும் அப்படி ஒரு இணக்கம்,  ரிஷியின் ஆட்டத்தில் முதலில் மிரண்டவள்,.. பின்பு அவன் ஆட்டத்துக்கு  இணையாக நடந்து கொள்ள.

ரிஷிக்கு மொழியை விட மனமே இல்லை, மீண்டும், மீண்டும் அனுகினான் அவளை.

“ரிஷி போதும்” என்று மொழி சொன்ன போதும், அவளை விட வில்லை அவன்.

விடிந்தும் அவன் தேடல் தொடற, ரிஷி என்று அவனை தள்ளி விட்டவள், அவன் முதுகில் இரண்டு அடி போட்டவள்,  அவன் கன்னத்தை பிடித்து செல்ல கடி, கடித்து விட்டவள் “பிள்ளைகள் முழிச்சுப்பாங்க நந்து கண்ணா” என்று அவனை கொஞ்சி எழுந்து கொள்ள பார்க்க.

“ஏய் மல்கோவா” என்று அவளை கொஞ்சியவன், “ஒரு பத்து நிமிசம் டி” என்று அவளை மீண்டும் இழுத்து கொண்டான்..

பத்து நிமிஷம் என்றவன், அவளை ஒரு மணி நேரம்  விடமால், பல பத்து நிமிஷங்கள் கடந்து போக..

இவன்  இப்போது விடமாட்டான் என்னை  என்றவள், அவன் அசந்த நேரம்  அவனிடமிருந்து  பிரிந்து ஓடி வந்தவள்

 குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவள் ஓடியதை பார்த்து சிரித்தான் ரிஷி..

மொழி குளித்து வர ரிஷி அந்த அறையில் இல்லை பிள்ளைகள் இருக்கும் அறையில் இருந்தான்.

 பிள்ளைகள் அப்போதுதான் முழித்திருந்தார்கள்.

 தந்தையை பார்த்ததும் அவனிடம் பேசிக் கொண்டிருக்க.

 மொழி குளித்து வந்ததை பார்த்த ரிஷி “ஒரு கப் காபி போடு மொழி,  என்றவன்,  ஆத்விக்கையும்,  சாத்வீக்கையும்  “ரெஸ்ட் ரூம் போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க பால் குடிக்கலாம்” என்றவன்.

மொழியின் பின் செல்ல.

மொழி கிச்சன் நோக்கி செல்ல போனவளை  அப்படியே கிச்சனுக்கு தூக்கி சென்றவன்.

அவளை கிச்சன் மேடையில் அமர வைத்தவன் அவளை இடையோடு கட்டி கொண்டவன்,..

“என்ன பொண்டாட்டி, காலையில புடவையில்  கலக்குறடி,” என்றவன்.

 அவள் இடுப்பில் கிச்சு, கிச்சு மூட்ட, “ரிஷி! என்று குழங்கி சிரித்தாள் மொழி.

 “ஏய் சத்தமா சிரிக்காதடி பிள்ளைங்க வந்திருப்போறாங்க” என்றவன் டக்கென்று அவள்  இதழில் அழுத்த முத்தமிட்டு விலக..

“ஆ” என்று பார்த்தவளை..

  “இன்னும் ஒன்னு வேணுமா”? என்றான்  கண்ணடித்து.

 அவளோ  தன் கையை  வாயை மேல் வைத்து  மூடி வேண்டாம் என்று தலையாட்ட.

” உனக்கு காபி வேணுமா?  குலாப் ஜாமுன் வேணுமா”? என்றான்..

 “காபி” என்றாள்  மொழி..

 “உனக்கு காபி எனக்கு குலோப்ஜாம் இப்பதான் சாப்பிட்டேன் ரொம்ப ஸ்வீட்டா இருந்துச்சு இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுகிறேன்”‘ என்றவன்..

மொழிக்கு காபி போட.

பிள்ளைகள் வந்தனர்..

 பிள்ளைகளுக்கு பால்  ஆற்றி கொடுத்தவன்,  மொழி தன்னை பார்த்து வாய் மேல்  கை வைத்து அமர்ந்திருப்பதை பார்த்து சிரித்தவன்.

 “ஏண்டி என்ன பார்த்து பயமா”? என்றான் கண்ணடித்து.

 அவள் “ஆமாம்” என்று தலையாட்ட.

“இந்த காபி குடி “என்றான்.

 “நம்பி குடிக்கலாமா என்றாள் மொழி குடி டி  நல்லா தான் போடுவேன் என்றவன்.

 காபி டம்பளரை  மொழி கையில் கொடுக்க.

 மொழி  ரிஷி போட்ட  காபியை  ரசித்து குடித்தாள்.

 “ரொம்ப நல்லா இருக்கு ரிஷி” என்றவள் குடித்து முடிக்க.

 “எனக்கு காபி சாப்பிடணும் போல இருக்கு மொழி” என்றான் ரிஷி.

  “இருங்க நான் போட்டு தரேன்” என்று சொல்ல.

 “எனக்கு போட்டு குடிக்கிற ஐடியா எல்லாம் இல்லை”என்றவன் அவள் என்னவென்று உணர்வதற்கு முன் அவள் வாயோடு வைத்து அவள்  குடித்த காபியை அவன் குடிக்க தொடங்கினான்.

 மொழிக்கு   ரிஷியின் செய்கையை தாங்கவே முடியவில்லை அவன் மீதே சாய்ந்து இருந்தவளின்..

கன்னத்தை தட்டி எழுப்பியவன்.

 “இனி டெய்லி நீ காபி குடிச்சிட்டு என்கிட்ட வந்து எனக்கு  இப்படி தான் நீ  காபி கொடுக்கிற”என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!